Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர பிரகடனத்துக்கு தயாராகிறது கொசோவோ - * எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர பிரகடனத்துக்கு தயாராகிறது கொசோவோ

[16 - February - 2008]

* எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை

-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

அல்பேனிய இன மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கொசோவோ இன்னும் சில நாட்களுக்குள் சேர்பியாவிலிருந்து பிரிந்து செல்வதற்கான பிரகடனத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனை ஒருபோதும் இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்கப்போவதில்லையென திட்டவட்டமாக நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, கொசோவோவின் உத்தேச சுதந்திரப் பிரகடனத்தை எதிர்க்குமாறு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையை சேர்பியாவின் வெளிவிவகார அமைச்சர் வுக்ஜெரமிக் வலியுறுத்தியுள்ளார்.

கொசோவோவின் அல்பேனிய இனத் தலைவர்கள் அடுத்துவரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ள சுதந்திரப் பிரகடனத்திற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவு அளித்துவருகின்றன.

ஆனால், ரஷ்யா கொசோவோவின் இந்த நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து வருவதுடன் தனிநாட்டுப் பிரகடனத்துக்கு ஆதரவளிப்பது ஏனைய பிரிவினைவாத அமைப்புகளுக்கு பச்சை விளக்கு காட்டுவதாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கை செய்திருக்கின்றது.

கொசோவோவாவின் சுதந்திரத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் இப்போது இலங்கையும் சேர்ந்துள்ளது.

இது குறித்து வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித ஹோகண தினக்குரலுக்கு நேற்று கருத்துத் தெரிவிக்கையில்;

கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை ஒருபோதும் இலங்கை ஆதரிக்கப்போவதில்லை. அதற்கான எந்தவொரு தேவையும் எமக்கு இல்லை. இலங்கை ஆதரவளிக்குமா என்பது கேட்கப்படவேண்டிய பெறுமதியான கேள்வியும் அல்ல என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், கொசோவோவின் உத்தேச தனிநாட்டுப் பிரகடனத்திற்கு அமெரிக்கா உறுதியான ஆதரவை தெரிவித்துவரும் நிலையில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிளேக்குடன் இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம அண்மையில் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

கொசோவோவின் இந்த நகர்வினால் இலங்கை அடைந்துள்ள கவலை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டதாகவும் அறியவருகிறது.

தமது தனிநாட்டுப் பிரகடனத்துக்கு 100 நாடுகள் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக கொசோவோ மாகாணத்தின் (தற்போது சேர்பியாவின் மாகாணம்) முதல் அமைச்சர் அண்மையில் உறுதிப்படத் தெரிவித்திருந்தார்.

இது இவ்வாறிருக்க கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடன நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்குமாறு நேற்று வலியுறுத்தியிருக்கும் சேர்பிய வெளிவிவகார அமைச்சர் ஜெரமிக், கொசோவோவின் ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனத்தை தடுத்துநிறுத்துவதற்கு இன்னமும் காலம் கடந்துவிடவில்லையெனவும் பாதுகாப்புச் சபை இது தொடர்பாக தொடர்ந்தும் பேச்சு நடத்த வேண்டுமெனவும் அழைப்பு விடுத்திருக்கிறார். அத்துடன், இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான முயற்சியை ஐ.நா. பாதுகாப்பு சபையின் உறுப்பு நாடுகள் தொடர வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகியன கொசோவோ தனது விதியை தானே தீர்மானிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக ஐ.நா. தலைமையகத்திலுள்ள பி.பி.சி. நிருபர் மாட்வெல்ஸ் கூறியுள்ளார். சுதந்திர நாடாக கொசோவோ பிரகடனம் செய்தால் அதனை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து உறுப்பு நாடுகள் தனித்தனியாக முடிவுசெய்ய வேண்டும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் கருதுகின்றன.

கொசோவோவின் விடயத்தில் ஐ.நா. இனிமேல் பங்களிப்பு வழங்குவதற்கு எதுவும் இல்லையெனவும் ஏற்கனவே ஐ.நா. தூதுக்குழு அங்கு கொசோவோவில் நிலைகொண்டுள்ளதாகவும் அதன் எதிர்கால நிகழ்வுகளை பார்ப்பதற்காகவே அங்கு அதாவது ஐ.நா. தூதுக்குழு நிலை கொண்டிருப்பதாகவும் இந்த நாடுகள் கருதுகின்றன.

1999 இல் நேட்டோவின் தாக்குதலையடுத்து சேர்பியப் படைகள் அங்கிருந்து வெளியேறிய பின் ஐ.நா.வே கொசோவோவை நிர்வகித்து வருகிறது.

கொசோவோ மாகாணத்தில் அல்பேனிய பெரும்பான்மை இனம் மீது சேர்பிய படைகள் மேற்கொண்டு வந்த அடக்குமுறைகள், கொடுமைகளையடுத்தே இந்த நடவடிக்கையை நேட்டோ மேற்கொண்டது.

இதேவேளை, இவ்வார இறுதியில் கொசோவோவிற்கான சிவிலியன் பொலிஸ் மற்றும் நீதித்துறையை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஏற்படுத்திக் கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் முற்பகுதியில் விசேட கலகத்தடுப்புப் பிரிவினர் உட்பட 1500 பொலிஸாரும் 250 நீதிவான்கள், சட்டத்தரணிகள் , சுங்க அதிகாரிகளும் அங்கு நிலை நிறுத்தப்படுவார்களெனவும் சுதந்திரப் பிரகடனம் செய்யவுள்ள கொசோவோவில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய ஜனாதிபதி கருத்து

கொசோவோவின் உத்தேசப் பிரகடனம் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அவ்வாறு பிரகடனம் செய்வது சட்ட ரீதியற்றதும் தார்மீக நெறிப் பிறழ்வானதும் என்று சாடியுள்ளார்.

அத்துடன் சேர்பியாவிலிருந்து கொசோவோ பிரிந்து செல்வதை ஆதரிக்கும் ஐரோப்பிய நாடுகள் இந்த நடவடிக்கைக்காக அதாவது இரட்டைத்தன்மையான செயற்பாட்டுக்காக வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கிரெம்ளினில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் 40 வருடங்களாக வட சைப்பிரஸ் நடைமுறையில் சுதந்திரமான நாடாக உள்ளது. அதனை ஏன் அங்கீகரிக்கவில்லை? இதற்காக நீங்கள் வெட்கப்படவில்லையா? ஐரோப்பியர்கள் இரட்டைத் தன்மையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதற்காக வெட்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.thinakkural.com/news/2008/2/16/...s_page46015.htm

இந்தா அந்தா எண்டில்லாம பிரகணத்தை செய்து முடிக்கவேணும், அப்பத்தான் எங்கட விடுதலையும் சூடு பிடிக்கும்....

இலங்கை எதிர்த்தா என்ன விட்டா என்ன...

  • கருத்துக்கள உறவுகள்

kosovo_albanians_map416_a.gif

கொசொவோ அல்பேனிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு தேசம். தமிழர்களின் தமிழீழமும் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. கொசொவோவிலும் சேர்பியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இடங்கள் உள்ளன. தமிழீழத்திலும் சில மாவட்டங்களில் முஸ்லீம்களும் சிங்களவர்களும் பெரும்பான்மையாக்கப் பட்டிருகின்றனர். முஸ்லீம்கள் பூர்வீகமாக பெரும்பான்மையாக உள்ள சிற்றூர்களும் உண்டு.

கொசொவோ விடுதலை என்பது தமிழீழ விடுதலைக்குரிய தன்மையைப் பெரிதும் ஒத்தது. கொசொவோவிலும் ஆயுதப் போராட்டம் சேர்பிர்ய அரசுக்கு எதிராக நிகழ்ந்தது. சேர்பிய அரசு மனித உரிமை மீறல்களை மனிதப் புதைகுழிகளை அல்பேனிய மக்களின் விடுதலை உணர்வை அடக்க செய்தது.

ஆனால் சர்வதேச சமூகம் அங்கு காட்டிய அக்கறை என்பது வேறு தமிழீழத்தில் காட்டும் அக்கறை என்பது வேறு.

சேர்பியா கொசொவோ என்பன எல்லாம் முன்னால் வோர்சோ நாடான சோவியத் சார்பு யூக்கோசுலோவாக்கியாவுக்கு உரியன. சோவியத் சிதறலுடன் சிதறிப்போன நாடுகள் அவை. சர்வதேச சமூகம் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் அமெரிக்காவும் அதன் நேட்டோ உறுப்பு நாடுகளும் சோவியத்தின் வோர்சோ நாடுகளை இயன்றவரை சின்னாபின்னமாகிச் சிதறடித்து நேட்டோ விரிவாக்கத்தை ஐரோப்பா எங்கனும் ஏற்படுத்திவிட்டால் ரஷ்சியாவை இராணுவ ரீதியில் முடக்கிவிடலாம் தமது வல்லாதிக்கத்தை உலகெங்கும் விரிவாக்குவதை இலகுபடுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் தான் கொசொவோ விடுதலைக்காக இன்று குரல் எழுப்புகின்றனவே தவிர.. அல்பேனிய மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்ற அக்கறையில் அல்ல என்பதையும் கருத்தில் எடுக்க வேண்டும். ஆனால் இந்த சர்வதேச சமூக எண்ணப்பாட்டை அல்பேனிய மக்கள் தங்கள் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பது நல்ல இராஜதந்திர நகர்வு.

தமிழீழ தமிழ் மக்களும் தெற்காசியாவில் எழும் வல்லாதிக்க, பிராந்திய ஆதிக்க சக்திகளின் போட்டா போட்டியை தமக்குச் சாதமாக்கிக் கொண்டு தமது விடுதலைக்கான இராஜதந்திர செயற்பாடுகளை செய்ய வேண்டுமே தவிர.. கொசொவோ போல எமக்கும் சர்வதேசம் விடுதலை பெற்றுத் தரும் என்று இலகுவாக கனவு காண்பது எந்த வகையிலும் எமது விடுதலைக்குப் பொருந்தாது. ஆனால் தமிழ் மக்களுக்கு கொசோவோ விடுதலை என்பது நல்ல முன்னுதாரணமாக அமையும்..! அதன் வழியில் எமது விடுதலையை வேண்டி.. சர்வதேச சமூகத்தை எம்மை நோக்கிக் கொண்டு வர அதற்கேற்ப நகர்வுகளை தமிழ் மக்கள் தீட்டிச் செயற்பட வேண்டும்..! தொடர்ந்து சர்வதேசத்தோடு முரண்டு போகும் தன்மை.. எமது கனவுகளுக்கு நிஜத்தை அளிக்காது. அதேபோல் சர்வதேச அச்சுறுத்தலுக்கு அடிபணிவதும் எமது விடுதலையை உணர்வை அவை மலினப்படுத்திவிட்டுப் போக வாய்ப்பாகிவிடும். :o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொசோவோ மக்களும் விடுதலைப்புலிகளையும் அறிந்து வைத்துள்ளார்கள்....ஆதரவு அளிக்கின்றார்கள்.... எமது விடுதலையை அவர்களது தனிநாட்டு பிரகடனம் துரிதப்படுத்தும்.

2000 ம் ஆண்டின் 2வது சுதந்திர நாடாக தமிழீழம் இருக்கட்டும்.

விடுதலைப் புலிகளிற்கும் அவர்களிற்கும் இரகசிய உடன்பாடு கூட இருக்கு என்று விடையமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. கொசவோ படைகளிற்கு இராணுவரீதியில் புலிகள் உதவுவதாகவும் கைமாறாக புலிகள் இயங்குவதற்கு ஐரோப்பாவிற்கு அருகில் பாதுகாப்பான தளம் மற்று சுதந்திரமடைந்த பின்னரான இராஜதந்திர உதவிகள் அங்கீகாரம் போன்றவற்றில் என்று ஆழமான தொப்புள் கொடி உறவு ஒண்டு இருக்காம்.

என்ன குருக்கர் இதை சொல்லும் போது றொம்ப தொஞ்சு போய் சொல்லுகிறார்.... விடுதலை கிடைச்சா பிறகு கொசோவும் ஒரு தனிநாடு ஆயிடும்.

ஆறு கடக்கும் வரைதான் அண்ணன் தம்பி.....

எங்கட விடுதலையை நாங்கள் தான் அடையவேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

கொசவோ ,நாளை, ஞாயிற்று கிழமை தனது நாட்டை தனி நாடாக பிரகடனபடுத்துகிறது.

CNN) -- Kosovo will declare independence from Serbia on Sunday, Kosovar prime minister Hashim Thaci has said, according to agency reports.

Kosovo Albanians parade an Albanian flag as they celebrate forthcoming independence in Pristina Friday.

1 of 4 Thaci said that on Sunday the "will of the citizens of Kosovo" would come into force, according to reports carried by the AFP agency following his meeting with religious leaders.

The agency added that newspapers in the Kosovar capital Pristina said the official declaration would be at 1400 GMT, although the newspapers did not reveal their sources.

"Tomorrow will be a day of calm, of understanding and of state engagements for the implementation of the will of the citizens of Kosovo," Thaci is reported to have said to journalists, adding that it would be a "a day of thanksgiving for a sovereign and independent Kosovo."

Kosovo, a province of Serbia, is currently under U.N. control, with a majority ethnic Albanian population that wants independence; the minority Serbs generally want to stay part of Serbia. Serbia's government also opposes independence.

Earlier Saturday the European Union finally agreed on a security, administrative and legal taskforce to aid Kosovo once it makes its much anticipated declaration.

The EU force will be fully operational by early summer and may eventually grow to more than 2,000 people, including judges and law specialists as well as police and security experts. The hope is that it will help boost and build the necessary security, administrative and legal infrastructure for the new nation.

Foreign ministers from EU states will discuss Kosovo Monday and try to adopt a common position; several member states such as Spain and Greece, which have regions within their own borders pushing for independence, have indicated they will not recognize Kosovo. The United States has fully backed independence,

Thaci vowed Friday that the rights of minorities will be protected after the province declares independence. Thaci assured minority groups -- especially Serbs -- that they would have a role in society and government in a future Kosovo.

விடுதலைப் புலிகளிற்கும் அவர்களிற்கும் இரகசிய உடன்பாடு கூட இருக்கு என்று விடையமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. கொசவோ படைகளிற்கு இராணுவரீதியில் புலிகள் உதவுவதாகவும் கைமாறாக புலிகள் இயங்குவதற்கு ஐரோப்பாவிற்கு அருகில் பாதுகாப்பான தளம் மற்று சுதந்திரமடைந்த பின்னரான இராஜதந்திர உதவிகள் அங்கீகாரம் போன்றவற்றில் என்று ஆழமான தொப்புள் கொடி உறவு ஒண்டு இருக்காம்.

ஹீ.... ஹீ.... நக்கலு <_<

  • கருத்துக்கள உறவுகள்

கொசோவோவாவின் சுதந்திரத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் இப்போது இலங்கையும் சேர்ந்துள்ளது.

சரியான பக்கத்தில தானே இலங்கை நிக்குது

இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கு???

கொசோவோ தனி நாடாக சென்றால் அடுத்தது ஈழத்தமிழர்களின் தமிழீழம் ஆகத்தான் இருக்கும்..

வேறு ஒரு நாட்டிலும் பிரிந்து செல்வதற்கான பலம் கொண்டு போர்கள் நடக்கவில்லை.

குர்திஸ்தான் விடுதலையும் ஈழமும் தான் அடுத்த வாசலில் நிற்கின்றன. அதிலும் குர்திஸ்தான் ஈராக் யுத்தத்தின் பின் ஒரு ஒன்றினைந்த ஈராக் கட்டமைப்புக்குள் அரசியலில் கலக்க வந்து விட்டது.

கொசோவா சண்டை பிடித்தா பிரிந்த்து?

கொசோவாகாரர் சேர்பியாவுடன் இனைந்து வாழவிரும்பினாலும் அமெரிக்கா ஜரோப்பா விட மாட்டினம் அவை 10 வருசத்துக்கு முன்னமே தீர்மானித்து விட்டினம் கொசோவா தனிநாடாக வரவேண்டும் என்று.........

இதில் ஒன்று தெரிகிறது மலம் கொண்ட நாடுகள் திர்மானித்தால் நாளைக்கு சண்டை இல்லாமலே ஒரு நாடு உருவாகலாம்.............

  • கருத்துக்கள உறவுகள்

கொசோவொ நாட்டு மக்களுக்கு சுதந்திர வாழ்த்துக்கள் !

இங்கு பலர் குறிப்பிட்டது போல, கொசோவோ மக்களின் போராட்டத்திலும் பார்க்க மேற்குலகின் அழுத்தம்தான் கொசோவோ விடுதலைக்கு வித்திட்டது. அதில் மேற்குலகின் "படிப்படியாக கிழக்கு ஐரோப்பாவை கம்மியூனச்த்திலிருந்து விடுவித்தல்" என்ற உள் நோக்கும் அடங்கியிருக்கு.

ஆனால் எமது பிரச்சனையில் அப்படி மேற்குலகம் விரும்பும் எந்த நோக்கங்களும் இல்லை( இந்தியாவின் "தமிழீழம் மலர்வதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும்" என்ற வெளிநோக்கத்தை விட). நாமேதான் விடுதலையை முன்னெடுக்க வேண்டும். புதிதாக மலரும் நாடுகளின் ஆதரவு கிடைத்தால் நல்லதுதான். இதைச் சிலர் இங்கு நக்கலாகக் கூறினாலும் கூட நாம் அதை வரவேற்பதில் தவறில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.