Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருவருக்கு பதில் எழுதாது / பதில் சொல்லாது அவரை காக்க வைக்கிறது ஒரு தனிப்பட்ட திறமையா?

14 members have voted

  1. 1. ஒருவருக்கு பதில் எழுதாது / பதில் சொல்லாது அவரை காக்க வைக்கிறது ஒரு தனிப்பட்ட திறமை எண்டு நீங்கள் நினைக்கிறீங்களா?

    • ஆம்
      2
    • இல்லை
      10
    • தெரியாது
      1
    • வேறு பதில்
      1

Please sign in or register to vote in this poll.

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்,

பள்ளிக்கூடத்தில ஒருபக்கத்தால சோதின புரஜக்டுகள்.. ஆனா யாழுக்க வந்து ஏதாவது சும்மா எழுதிக்கொண்டு இருக்காட்டி அங்க படிப்பில கவனம் செலுத்த ஏலாம இருக்கிது. அதான் காலங்கெட்ட நேரத்தில திடீரெண்டு இன்னொரு கலந்துரையாடல். :wub::(

நான் அண்மையில ஒருத்தரோட கதைச்சன். அது என்ன எண்டால் எம்.எஸ்.என் உரையாடல் பற்றினது. அவர் என்ன செய்துகொண்டு இருந்தார் எண்டால் எம்.எஸ்.என் இல ஒன்லைனில நிக்கிறதாய் சைகையை போட்டுவிட்டு... [ஸ்டேடஸ்] ஆக்கள் பலர் வந்து ஹாய், ஹலோ, எண்டு கேட்டு கேள்விகள் கேட்க, கேட்க பதில் ஒண்டும் சொல்லாமல் பேசாமல் இருந்தார். நீண்ட நேரத்துக்கு ஒரு தடவை தான் ஒருவருக்கு பதில் எழுதினார்.

எனக்கு விளங்க இல்ல இவர் ஏன் இப்பிடி செய்யுறார் எண்டு. விருப்பம் இல்லை இல்லாட்டி பிசி எண்டால் எம்.எஸ்.என்னுக்கு போகாமல் இருக்கலாம் தானே? பிறகு ஏன் அதுக்கபோய் ஒன்லைனில நிக்கிறதாயும் காட்டியும் கொண்டு பதில் எழுதாமலும் இருக்கிறார் எண்டும் எனக்கு விளங்க இல்லை. அப்ப நான் அவரிட்ட கேட்டன் ஏன் இப்பிடி செய்யுறீங்கள் எண்டு. சும்மா நிக்கிறீங்கள். பதில எழுதலாம் தானே இல்லாட்டி Sign Out பண்ணி ஓவ்லைனுக்கு போகலாம் தானே எண்டு.

அவர் சொன்னார் அவேள் எல்லாம் தண்ட பிரண்ட்ஸாம். ஆனா தான் உடன உடன பதில எழுதாமல் அவேள நல்லா காக்க வச்சு பதில் எழுதுறதுக்கான காரணம் - அப்பத்தான் தான் பொப்பியூலரா (POPULAR) - பிரபலமா வரலாமாம்!

ஆ.. ஐயோ.. அப்பிடியோ? :wub: இப்பிடியும் ஒரு விசயம் இருக்கிதோ? அதாவது மற்றவர்களை காக்கவைப்பதன் மூலம் பிரபலமான ஆளாக வருவது?

பிறகு அவர் அப்பிடி சொன்னாப்பிறகு நானும் பல விசயங்களப்பற்றி யோசிச்சுப் பார்த்தன். அட உலகத்தில எத்தின எத்தின விதமான மனுசர்! எத்தின விநோதமான பிறப்புக்கள்!

என்னைப் பொறுத்தவரை நான் ஒருவரையும் காக்க வைப்பதில்லை.

அது எம்.எஸ்.என் ஆக இருந்தாலும் சரி, தனிமடல்கள், மின்னஞ்சல்களாக இருந்தாலும் சரி, அல்லது கடிதங்களாக இருந்தாலும் சரி.

நான் உடன உடன பதிலை போட்டுவிடுவேன். நான் பதில் போடுவதற்கு பிந்துகின்றது என்றால் அதன்பின்னால் உண்மையில் ஏதாவது முக்கிய காரணம் // தடங்கல் இருக்கும்.

ஆக தொலைபேசி மணி அடிக்கும்போது மட்டும்தான் மூண்டு தரம் மணியை அடிக்கவிட்டு பிறகு ரிசீவரை தூக்குவது. ஏன் என்றால் பலர் பிழையான நம்பருக்கு அடிக்ககூடும் அல்லது எடுத்த எடுப்பில் ஏதாவது குழப்பமான உணர்வுகளுடன் இருக்கக்கூடும். எண்டபடியால் போனை சிறிது மணி அடிக்கவிட்டு எடுக்கேக்க பல நன்மைகள் இருக்கிது. இந்த ஒரு விசயத்திலதான் அதுவும் சில செக்கன்கள் மற்றவர்களை நான் காக்க வைக்கிறது. மற்றும்படி நான் ஒருபோதும் ஆக்களை காக்க வைப்பதில்லை.

அடிப்படையில் நான் இப்படியான பொலிசியை வைத்து இருப்பதற்கான காரணம் நான் இந்த உலக வாழ்வை வியாபாரம் - பிஸ்னஸ் நோக்கில் தரிசனம் செய்யாமல் - மனித வாழ்வு - உயிர்வாழ்க்கை எண்ட அளவில அணுகுவது.

இண்டைக்கு நாங்கள் உயிரோட இருக்கிறம். நாளைக்கு உயிரோட இருப்பமோ எண்டுறதே தெரியாது. நாளைக்கு எங்களுக்கு என்ன நடக்கும் எண்டு ஒருவருக்கும் தெரியாது. நீர்க்குமிழி போல நிலையற்றது இந்த வாழ்வு!

எனது பதிலை எதிர்பார்க்கும் ஒருவர் சிலவேளைகளில எனது பதில் அவரை அடையும் முன்னர் இந்த உலகைவிட்டே போய்விடலாம். மேலும்...

இதில முக்கியமானது அன்பு எண்டுற விசயம்.

எங்கட அன்பை செலுத்துவதற்கு அல்லது வெளிக்காட்டுவதற்கு நாங்கள் ஒருவரை காக்க வைக்ககூடாது. பிடிக்காத விசயங்களை நாங்கள் தவிர்க்கலாம். ஆனால்..

இப்பிடி மேல நான் சொன்னமாதிரி.. தான் பிரபலமா வாறதுக்கு - POPULAR ஆகிறதுக்கு மற்ற ஆக்கள காக்க வைக்கிறது எண்டுறது என்னைப் பொறுத்தவரை ஒரு கூடாத பழக்கம்.

உண்மையில நான் இப்படி எல்லாம் சிந்திப்பது இல்லை. நான் யாழில் அனோனிமஸ் ஆக வராமல் பெரும்பாலும் நேரடியாகவே கலைஞன் என்ற பெயரில் ஒன்லைனில் தோன்றுவதற்கான காரணமும் இதுதான்.

இன்று இருப்பவன் நாளை இல்லாது போகக்கூடும். இதேபோல் ஏன் நான் கூட நாளை இல்லாது போககூடும்!

நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும்

பெருமை உடைத்திவ் வுலகு!

எண்டு வள்ளுவர் சொல்லிறார். நாங்கள் போலியான பெருமைக்காக அல்லது புகழுக்காக மற்றவர்களை காக்க வைக்கலாமா? வியாபார உத்தியுடன் வாழ்க்கையை அணுகுவது தவறுதானே?

நான் மற்றவர்களை காக்க வைப்பதை ஒரு திறமையாக நினைக்கவில்லை. உலகத்தில இஞ்ச ஒருத்தருமே வெட்டிப்புடுங்கிகொண்டு இல்லை. எல்லாருக்கும் தாராளமா நேரம் இருக்கிது. ஆனா பலர் திட்டமிட்ட முறையில அல்லது செயற்கைத்தனமாக வியாபார பாணியில தங்கட வாழ்க்கைய அமைச்சுக் கொள்ளுறீனம்.

சரி... எப்பிடி வாழவேணும் எண்டுறது அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். மற்றவனப்பார்த்து நீ செய்யுறது பிழை எண்டு சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால்.. இப்படியான ஆக்களை நான் எனது வாழ்க்கையில் கண்டுபிடித்தேன் எண்டால் - அதாவது என்னுடன் யாராவது அப்படி பழகினால் நிச்சயம் அவர்களை விலத்திவிடுவேன். அவர்கள் மூஞ்சையிலும் முழிக்க மாட்டேன்! உறவுகளை வியாபார பாணியில் அமைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

சிலர் ஏதோ மற்றவர்களை ஒரு விசுக்கோத்து // வெங்காயம் எண்டு நினைச்சு இப்பிடி காக்க வைக்கிற பழக்கத்த கடைப்பிடிக்கிறீனமோ தெரியாது.

ஒண்டில் அல்லது ஒருவரில் விருப்பம் இல்லை எண்டால் விலகிப்போகலாம். ஆனால் தான் பிரபலம் அடைவதற்காக ஆக்களை காக்க வைக்கலாமோ? முக்கியமாக நான் இங்கு கதைப்பது யாரும் தெரியாத ஆக்களுடன் வெளியாருடன் - அந்நியர்களுடன் எப்பிடி பழகுறீங்கள் எண்டு இல்லை. தெரிந்தவர்களுடன் எப்பிடி பழகுறீங்கள் என்பது பற்றியது. தெரிந்தவர்களை திட்டமிட்டு காக்க வைக்கலாமா?

இதப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ.

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி! :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆ இதுக்கு தான்சுண்டல் வரனும்

இப்போ என்னான்ன சுண்டலுக்கு எம் எஸ் என் ல நிறைய பிகருங்க இருக்கு எல்லாறோடையும் கதைக்கு முடியுமோ? ஆடியாது சோ சுண்டலும் அப்பிடி தான் செய்யிறது ஒராலுக்கு பதில் போட நேரம் எடுக்கும் இதுக்குள்ள திட்டிட்டு போறவையும்கோபிச்சு கொண்டுபோறவையும் என்டு செம காமடியா இருக்கும் ஆனாலும் என்ன உங்கள் நண்பர் சொன்னமாதிரி லேட்ட பதில்போட்டாலும் கோபிச்சு கொண்டு போனாலும் அடுத்த நாள் வந்து கதைப்பினம் சோ உங்க நணபர் சொன்னது கொன்ஞம் கொன்ஞம் சரி தான. :wub::wub:

இந்த பிரச்சனைக்கு சுண்டல் ஒரு ஜடியாவும் வைச்சிருக்கு நான் ஒவ்வொருநாளும் நேர அட்டவனை போட்டு தான் கடலைபோடுறது சோ ஈஸியா msn figureungala maintain பன்னலாம் பா... :(:(

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

எம் எஸ் என் சாட் போன்ற சப்ப மற்றருக்கும் ஒரு ரைரிலா.. போல்ஸா... முடியல்ல..! :wub::wub:

Edited by nedukkalapoovan

இண்டைக்கு நாங்கள் உயிரோட இருக்கிறம். நாளைக்கு உயிரோட இருப்பமோ எண்டுறதே தெரியாது. நாளைக்கு எங்களுக்கு என்ன நடக்கும் எண்டு ஒருவருக்கும் தெரியாது. நீர்க்குமிழி போல நிலையற்றது இந்த வாழ்வு!

எனது பதிலை எதிர்பார்க்கும் ஒருவர் சிலவேளைகளில எனது பதில் அவரை அடையும் முன்னர் இந்த உலகைவிட்டே போய்விடலாம். மேலும்...

ஆகா கலைஞன் என்ன நடந்தது? :)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நைனா இப்படி சொல்லிட்டிக....

சாட்ல லவ் பன்னி ஜரோப்பாவில இருந்துமு ஒரு தமிழ் பொண்ணு அவுஸ்திரேலியாவுக்கு ஒடி வந்திருக்கு இந்த மாட்டர் தெரியுமோ... :):D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நைனா இப்படி சொல்லிட்டிக....

சாட்ல லவ் பன்னி ஜரோப்பாவில இருந்துமு ஒரு தமிழ் பொண்ணு அவுஸ்திரேலியாவுக்கு ஒடி வந்திருக்கு இந்த மாட்டர் தெரியுமோ... :D:huh:

என்னா நைனா.. அவுஸ்திரேலியாவுக்கு வர அந்தப் பொண்ணுக்கு வேற மார்க்கம் இல்லப் போல. பின்ன உடன எம் எஸ் என்னை நாடினா.. அழகிய மொழிகளைப் பேசினா.. எம் எஸ் என்னே தவமென்று கிடக்கும் அலையும் விழிகளைக் கவர்ந்தா.. அதில ஒன்றைக் கட்டிக்கிட்டா. பின்னாடி.....??! நடக்கிறது எல்லாம் ஒன்றுதாங்க...!

ஒரு குழந்தையோ குட்டியோ போடப் போறா...! சேம் ஆஸ் டோக். இதை சப்ப மாற்றர் எண்டா.. சுப்பர் எண்டுவியளாக்கும். :lol::)

Edited by nedukkalapoovan

இங்கை எம் எஸ் என் ல கடலை போடுறது நடக்குதா இல்லை ஒருவரை காக்க வைப்பதால் பிரபல்யம் அடையலாம் / இல்லை என்பது நடக்குதோ :):D

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொன்னார் அவேள் எல்லாம் தண்ட பிரண்ட்ஸாம். ஆனா தான் உடன உடன பதில எழுதாமல் அவேள நல்லா காக்க வச்சு பதில் எழுதுறதுக்கான காரணம் - அப்பத்தான் தான் பொப்பியூலரா (POPULAR) - பிரபலமா வரலாமாம்!

நல்லதொரு கொன்செப்ற்.வாழ்க வளர்க. :):D

  • தொடங்கியவர்

அட எதுக்கு எடுத்தாலும் நையாண்டியா? நானும் சீரியசா ஒரு விசயத்த பற்றி கேக்கிறன். நீங்கள் எல்லாரும் ஏதோ கடலை போடுறது எண்டு சொல்லிக்கொண்டு இருக்கிறீங்கள்? :D

நான் எம்.எஸ்.என் ஐ பற்றி மட்டும் கதைக்க இல்ல. எல்லா கொமியூனிகேசன் சனலுகளப் பற்றியும்தான் கதைக்கிறன். :)

நீங்கள் எப்படியான அணுகுமுறைகளை பின்பற்றுறீங்கள் எண்டு சொல்லுங்கோ. கடலையை பிறகு ஆறுதலா போடுங்கோ. :huh:

:D எல்லா கொமியூனிகேசன் சனல்ஸ் பற்ரித்தான் கதைக்கிறம்.

ஓகே

அவர் ரெலிபோனில் கதைக்கும் போதும் காக்க வைத்து தான் பதில் அளிப்பாராமோ? :)

  • கருத்துக்கள உறவுகள்

:D எல்லா கொமியூனிகேசன் சனல்ஸ் பற்ரித்தான் கதைக்கிறம்.

ஓகே

அவர் ரெலிபோனில் கதைக்கும் போதும் காக்க வைத்து தான் பதில் அளிப்பாராமோ? :)

"என்ன செய்கின்றீர்கள்", "அப்புறம்", "வேற", "சொல்லுங்கோ", "சாப்பிட்டியா" என்ற அரும்பெரும் சொற்களைத் திருப்பித் திருப்பி பல தடவைகள் சொல்வதற்கு ஏன் காக்க வைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் சப்ப மாட்டர்னு சொல்லிபோட்டிங்க சப்ப பிகருங்கன்னு சொல்லேல்ல நைனா

  • தொடங்கியவர்

அவர் ரெலிபோனில் கதைக்கும் போதும் காக்க வைத்து தான் பதில் அளிப்பாராமோ? :)

டெலிபோனில அவர் என்ன செய்யுறார் எண்டு தெரியாது. ஆனா ஆக்கள் போனில என்ன விளையாட்டு காட்டுறவேள் எண்டால் மணி அடிக்கேக்க ரிசீவரை தூக்காமல் மெசேஜுக்கு போக விடுறவேள்.

நானும் இப்பிடி செய்யுறதுதான். ஏன் எண்டால் சில பிஸ்னஸ் கோலுகள், மற்றது ஏதாவது வேறு பிரச்சனையான நேரங்களில நேரடியா கதைக்காம மெசேஜுக்கு விடுறது நல்லது.

ஆனா இப்ப என்ன யோசிக்கிறன் எண்டால்..

ஆக்கள் தாங்கள் பொப்பியூலரா வாறதுக்கு இல்லாட்டி பிசி எண்டு காட்டிக்கொள்ளுறதுக்கு மெசேஜுக்கு விடுறீனமோ தெரியாது.

ஏதோ அவரவர் விருப்பம். நான் எனக்கு பிடிச்சமாதிரி வாழ்ந்திட்டு போறன். மற்ற ஆக்கள் தங்களுக்கு பிடிச்சமாதிரி வாழ்ந்திட்டு போகட்டும்.

இதான் இப்பிடி ஒருத்தன் பாடி இருந்தானோ... ??

யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க!! :D

ம்ம்ம்...வணக்கம் குருவே..(என்னை ஆசிர்வதியுங்கள் உது எப்படி இருக்கு :D )...அட நேக்கும் தான் யாழிற்கு வந்து ஒரு கருத்து எழுதினா தான் ஒழுங்கா படிக்க ஏலுமா இருக்கு..(என்னால முடியல :lol: )...குருவே சோதனைய ஒழுங்கா பாஸ் பண்ணி போடுங்கோ என்ன..(பிறகு சிஷ்யனுக்கு தான் அவமானமாக்கும் :huh: )...விஸ் யூ ஓல் ட பெஸ்ட்...சரி எனி மாட்டருக்கு வருவோம்...

நெவர் குருவே பதில் சொல்லாம காக்க வைக்கிறது எல்லாம் தனிபட்ட திறமை இல்லை சுத்த வேஸ்ட் பாருங்கோ...பட் பொண்ணுக கூட உடனே போய் கதைத்தா ஓவரா பில்டல் காட்டுவாங்க குருவே சோ கொஞ்சம் காக்க வைத்து கதைக்கிறதில தப்பில்லையாக்கும் என்று உந்த சுண்டல் அண்னா தான் சொல்லி தந்தவராக்கும் பாருங்கோ :lol: ...(நேக்கு தெரியாது நான் நல்ல பிள்ளையாக்கும்)..ஆனா இப்படி பொறுக்க வைத்து பதில் எழுதினா பொப்புயூலரா வரலாம் என்று நேக்கு நீங்க சொல்லி தான் தெரியும் குருவே...(ரொம்ப கொடுமையாக்கும் :D )...

ஆனா குருவிற்கு என்னவோ ஆகி போச்சு..(எக்சாமிற்கு படித்து தான் என்றோ தெரியல)...ஆனா என்னோவெல்லாம் கதைக்கிறார் தத்துவம் எல்லாம் சொல்லுறார் :) ...ஆர் யூ ஓல் ரைட் குருவே..குருவே தெரிந்தவர்களை திட்டமிட்டு காக்க வைக்கிறது எனக்கு பிடிகாது அப்படி யாரும் செய்தாலும் பிடிகாது அப்படி யாரும் எனக்கு செய்தா கண்டிப்பா அவைக்கு நான் அப்படி தான் செய்வேன் இல்லாட்டி மற்றவைய காக்க வைக்கிறது எல்லாம் ஸ்டுபிட் திங்..

சோ குருவே என்ட கொன்குலூசன் வந்து என்னை பொறுத்தவரை யாருடைய மெயிலிற்கு அல்லது கோலிற்கும் உடனே ஆன்சர் பண்ணுவேன்..(சில தவிர்க்க முடியாத சந்தர்பங்கள் ஏற்பட்டால் மட்டும் அந்த தவிர்க்க முடியாத சந்தர்ப்பதையும் கூறி லேட்டா பதில் அளிப்பேன் :lol: )...இல்லாட்டி உடனே பதில் அளிப்பது தான் விருப்பம்..சில நேரம் கான்போனை யூனியில இருக்கும் போது ஓவ் பண்ணி வைப்பன் இல்லாட்டி அங்கையும் அடித்து கொண்டு இருப்பாங்க...(யூனியில இருக்கிறேன் என்று சொன்னாலும் வாடா ஊர் சுத்துவோம் என்று என்ட மனதை சேஞ் பண்ணிடுவாங்க சோ இப்ப எல்லாம் கான் போனை சுவிச் ஒவில வைத்து கொள்ளுறனான் குருவே நீங்க எப்படியாக்கும் :D )...இல்லாட்டி யூனியை கட் பண்ணிபோட்டு ஊர்சுத்தி போட்டு அச்சா பிள்ளையாட்டம் வீட்ட போறனான் என்றா பாருங்கோ..(என்னால முடியல)....

அத்தோட சில பேர் இருப்பீனம் மெயிலில கதைத்து கொண்டு அவைக்கு அவசர வேலை என்றவுடனே சொல்லாம கொள்ளாம போயிடூவீனம்...(நாங்க லூசுகள் மாதிரி இருக்க வேண்டும்)..இதுவும் எனக்கும் பிடிக்கவே பிடிகாது நான் போறேன் சொறி என்று சொல்லி போட்டு தான் போவன் நீங்க எப்படி குருவே...

பிறகு பாருங்கோ சில பேர் போனை எடுத்து போட்டு என்ன செய்து கொண்டு இருக்கிறியள் என்று ஸ்டுப்பினா கேள்வி எல்லாம் கேட்பீனம்...(அவைக்கு நான் சொல்லுற ஆன்சர் உங்க கூட கதைத்து கொண்டு இருக்கிறேன் என்று பின்னே உது ஒரு கேள்வி என்று கேட்டா)...பிறகு டெலிபோனில கத்து கத்து என்று கத்தி கதைக்கிறது..(ஏன் மெல்லமா கதைத்தா கேட்காதா என்ன)...சில பேரோட போன் கதைத்தா காது நாசம் பாருங்கோ...இப்படி பல சிக்கல்கள் கம்மினியுகேசனில... :(

சோ யாரையும் காக்க வைப்பதால் பிரபல்யம் அடைவது என்பது சுத்த முட்டாள்தனம்...ஒருவர் போடுற மெயிலிற்கு ரீபிளை போடுவது தான் நேக்கு என்றா சந்தோசம்...சோ குருவே நீங்க சொன்ன ஆளிற்கு அடுத்த முறை இந்த மெயிலை அனுப்புங்கோ..(இப்படியான ஆட்களுக்கு ஜம்மு பேபி சில மெயில்கள் வைத்திருக்கு அனுப்ப)....விழுந்தடித்து பதில் அனுப்புவீனம் பாருங்கோ...ஒருக்கா டிரை பண்ணி பாருங்கோ..(அவர் கோவித்தா எனக்கு ஏச கூடாது சொல்லிட்டன் :lol: )...

One day baby monkey asked its mother

"mom,why we so ugly"

The smiled and said

"you should thank god that we look like this,you should

see the person reading mail"

ஜம்மு பேபி பஞ் -

"வாழ்க்கையில சில மெயில்களிற்காக காத்திருக்கலாம் ஆனா காத்திருப்பே வாழ்க்கையா ஆகிட கூடாது"

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நீங்களும் கடைலை போடுறதப் பற்றிக்கதைக்காது, சீரியசான சில விசயங்களைப் பற்றிக் கதைத்தமைக்கும், உங்கள் ஆலோசனைகளிற்கும் மிக்க நன்றி! :)

அட எதுக்கு எடுத்தாலும் ஏனப்பா நான் ஏதோ சிக்கலில இருக்கிறதாய் கதை பரப்புறீங்கள். அப்படி ஏதும் சிக்கலுகள் வந்தால் உங்கட உதவியைக் கேட்டு வருவன். அதுவரை யோசிக்காதிங்கோ. :D

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குதானுங்க நான் இந்த சாட் க்கு எல்லாம் போறது இல்லை

  • தொடங்கியவர்

இதுக்குதானுங்க நான் இந்த சாட் க்கு எல்லாம் போறது இல்லை

இப்ப மட்டும் என்னவாம் செய்துகொண்டு இருக்கிறீங்கள்?

ஆஆஆஆ :lol:


அவர் சொன்னார் அவேள் எல்லாம் தண்ட பிரண்ட்ஸாம். ஆனா தான் உடன உடன பதில எழுதாமல் அவேள நல்லா காக்க வச்சு பதில் எழுதுறதுக்கான காரணம் - அப்பத்தான் தான் பொப்பியூலரா (POPULAR) - பிரபலமா வரலாமாம்!

ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

சேச்சேச்சே

நோ நோ நோ நோ நோ நோ நோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.