Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்!

Featured Replies

'ஆவீன மழைபொழிய

இல்லம் வீழ

அகத்தடியாள் மெய்நோக

அடிமை சாக

மாஈரம் போகுதென்று

விதை கொண்டோட

வழியினிலே கடன்காரர் மறித்துக்கொள்ள

கோவேந்தர் உழுதுண்ட

கடமை கேட்க

குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்க

பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க

பாவிமகன் படும்துயரம் பார்க்கொணாதே...'

- துன்பத்தின் துன்பமாக வந்து போட்டுத் தாக்குவதைப் பற்றி விவேக சிந்தாமணியில் நொந்து போய் வரும் பாடல் இது. ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் கதி இதையெல்லாம் தாண்டியே போச்சு! இலங்கைக் கடற்படைத் தாக்குதல், கண்ணி வெடி அச்சுறுத்தல், கடத்தல்காரர்கள் தொல்லை, போலீஸ் நெருக்கடி என்று திக்திக் வாழ்க்கை நடத்தும் நம் மீனவர்கள், 'எங்கள் பகுதிக்குள் மீன் பிடிக்க வராதே... வந்தால் பதிலடி கொடுப்போம்' என்கிற இலங்கை மீனவர்களின் எச்சரிக்கை நோட்டீஸால் இப்போது மேலும் கலங்கிப்போய் நிற்கிறார்கள்.

கச்சத்தீவை ஒட்டியுள்ள இலங்கைக் கடல் பகுதி மீன்பிடி மண்டலத்தை நம்பித்தான்

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமே இருக் கிறது. சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள், கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது... அவர்களை நோக்கி பிளாஸ்டிக் படகுகளில் வந்த மர்ம நபர்கள் சிலர், இந்த எச்சரிக்கை நோட்டீஸ்களை வீசிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

நோட்டீஸின் சாராம்சம் இதுதான்: 'இலங்கையின் வடக் குப் பிரதேசத்தில் வசிக்கும் கடல் தொழிலாளிகளான எங்கள் வளங்கள் இந்தியக் கடல் தொழிலாளிகளால் சுரண்டப்படுகிறது. இதை நாங்கள் பொறுத்துக்கொண்டு இருப்பதால், எங்கள் வாசற்படிக்கே வந்து மீன் வளத்தைச் சுரண்டுவதோடு பொருட்களையும் சேதப்படுத்துகிறீர்கள். இதனால் எங்கள் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. எங்கள் முன்னோர்கள் இவற்றை பொறுத்துக்கொண்டனர். ஆனால், நாங்கள் உங்களுக்கு இரக்கம் காட்ட மாட்டோம். இந்திய ரோலர்கள் (படகுகள்) இலங்கை மீனவர்களை அச்சுறுத்துவதைத் தடுக்கும்விதமாக 'கடற்பாதுகாப்புக் குழு' ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. எங்கள் பிள்ளைகளின் பட்டினியைத் தடுக்க உங்களுக்கு அவகாசம் தருகிறோம். 01.05.2008 முதல், இலங்கைக் கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது. மீறி வந்தால் தக்க பதிலடி தருவோம்' என்று சொல்லி... 'இலங்கை வடக்குப் பிரதேச பாதுகாப்பு கழகம்' என்ற பெயரும் போட்டிருக்கிறது அந்த நோட்டீஸில்.

இது குறித்து நம்மிடம் பேசிய ராமேஸ்வரம் அனைத்து மீனவர் சங்க ஆலோசகர் அந்தோணி ராஜ், ''கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு முன்பிருந்தே நமது மீனவர்கள் இலங்கைக் கடல் பகுதியில்தான் மீன் பிடித்து வருகிறார்கள். அப்போதெல்லாம் இருநாட்டு மீனவர்களுக்குமிடையே பிரச்னைகள் வந்தாலும், மீனவத் தலைவர்கள் மூலமாக அது சுமுகமாகத் தீர்க்கப்பட்டுவிடும். இந்த அணுகுமுறை இருந்ததால்தான் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தபோதுகூட நமது மீனவர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு காட்ட வில்லை.

ஆனால், கச்சத்தீவு கைவிட்டுப் போனதிலிருந்தே இலங்கை அரசால் நமது மீனவர்களுக்குத் தொல் லைகள் அதிகம். தொடர்ந்து நமது மீனவர்களைத் தாக்கிக் கொண்டிருக்கும் இலங்கை கடற்படை, கடந்த 5-ம் தேதி ஒரேநாளில் இரண்டு முறை துப் பாக்கிச் சூடு நடத்தியது. இதில் கிறிஸ்டி என்பவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுதவிர, தமிழக மீனவர்களின் உயிருக்கு உலைவைக்கும் விதமாகக் கடலில் கண்ணிவெடிகளை மிதக்கவிட்டிருக்கும் இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் தங் களைத் தாக்கிவிட்டதாக நமது அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்கள். அதனால் விசாரணை என்கிற பெயரில் நமது மீனவர்கள் கடலுக்குப் போக முடியாத சூழலும் ஏற்பட்டது'' என்று நிறுத்தியவர், தொடர்ந்து...

''இந்நிலையில்தான் இப்போது இலங்கை மீனவர்கள் பெயரில் இப்படியரு நோட்டீஸ்! நிச்சயமாய் இது இலங்கை மீனவர்களின் செய லாகத் தெரியவில்லை. தமிழர் விரோத இலங்கை அரசும் அந்நாட்டுக் கடற்படையும், இருநாட்டு மீனவர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் நோக்கில் கூட்டுச் சதி செய்து இப்படி யரு நோட்டீஸை வீசியிருப்பதாகவே நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே, மத்திய-மாநில அரசுகள் அசட்டையாக இருக்காமல் தீவிரமாகக் கவனம் செலுத்தி நமது மீனவர்கள் மீன் பிடிக்கப் போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும்'' என்றார்.

வேர்க்கோடு மீனவர் சங்கத் தலைவர் சூசை மிக்கேல் மார்ட்டின் நம்மிடம், ''நோட்டீஸில் குறிப்பிட்டிருக்கும் வட கடல் பகுதி, இலங்கையின் தலைமன்னாருக்கும் பேசாலைக்கும் இடைப்பட்ட பகுதி. இறாலுக்காக மட்டுமே நம் மீனவர்கள் அங்கு செல்வதுண்டு. மற்றபடி ரெகுலராக மீன் பிடிக்க அங்கே செல்வதில்லை. எனவே, இந்த நோட்டீசுக்கும் எங்கள் தோழர்களான இலங்கை மீனவர்களுக்கும் சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. இந்த எச்சரிக்கை குறித்து நம் அதிகாரிகளுக்கு முறையாகத் தகவல் கொடுத்துவிட்டோம். அவர்கள்தான் உண்மையைக் கண்டுபிடித்து எங்கள் நிம்மதிக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும்'' என்றார்.

நோட்டீஸ் விவகாரம் குறித்து ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குநர் வேல்பாண்டியனிடம் கேட்டபோது, ''நோட்டீஸிலிருக்கும் சொற்கள் எதுவும் இலங்கை மீனவர்கள் பயன்படுத்தக் கூடியவையாக தெரியவில்லை. கம்ப்யூட்டர் பிரின்ட்-அவுட்டாக இருக்கும் இந்த நோட்டீஸ்களை நமது பகுதியில் இருந்தேதான் தயாரித்துள்ளதுபோல தோன்றுகிறது. நோட்டீஸ் குறித்து விசாரணை நடக்கிறது'' என்றார்.

புலனாய்வுப் பிரிவு போலீஸாரோ, ''இலங்கை மீன வர்கள்தான் நோட்டீஸைப் போட்டிருக்கிறார்கள். ஆனால், நோட்டீஸ் தமிழ்நாட்டிலிருந்துதான் பிரின்ட் ஆகிப்போயிருக்கிறது. யார் மூலமாக எப்படிப் போயிருக்கும் என்று தீவிரமாக விசாரித்து வருகிறோம்'' என்கிறார்கள்.

ராமநாதபுரம் கலெக்டர் கிர்லோஷ்குமார், ''மீனவர் களிடம் எல்லை தாண்டிச் செல்லவேண்டாம் என வலியுறுத்தி சொல்லியிருக்கிறோம். நோட்டீஸ் விவகாரம் குறித்து மத்திய அரசு மூலமாக இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு உண்மை நிலை அறியப்படும். அதே சமயத்தில் நம் எல்லைக்குள் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்'' என்றார்.

vikatan.com

  • தொடங்கியவர்

அடுத்ததா புலிகள் தான் நோட்டீஸ் போட்டவை என்று

அறிக்கை வரும்...

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழ் மக்களோடு உள்ள நேச உறவை இல்லாதொழிக்க இருநாட்டு அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகளால் நன்கு திட்டமிட்டு இத்தகைய பிரசுரங்கள் வெளியிடப்படுகின்றன.

'ஆவீன மழைபொழிய

இல்லம் வீழ

அகத்தடியாள் மெய்நோக

அடிமை சாக

மாஈரம் போகுதென்று

விதை கொண்டோட

வழியினிலே கடன்காரர் மறித்துக்கொள்ள

கோவேந்தர் உழுதுண்ட

கடமை கேட்க

குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்க

பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க

பாவிமகன் படும்துயரம் பார்க்கொணாதே...

வசி அண்ணா இந்த பாட்டில என்ன சொல்லி இருக்கீனம் நேக்கு கொஞ்சம் சொல்லுங்கோ பார்போம் :unsure: ...(நிசமா நேக்கு ஒரு இலவும் விளங்கல்ல :) )..

அப்ப நான் வரட்டா!!

செய்தியை போடுறாக்கள் கொஞ்சமாச்சும் சுருக்கமா போடுங்கோ... திருக்குறள் மாதிரி இல்லாடிலும் குறைஞ்சது இரண்டு பந்திக்குமேல் இருந்தா வாகிக்க மனம் வராது...

செய்தியை போடுறாக்கள் கொஞ்சமாச்சும் சுருக்கமா போடுங்கோ... திருக்குறள் மாதிரி இல்லாடிலும் குறைஞ்சது இரண்டு பந்திக்குமேல் இருந்தா வாகிக்க மனம் வராது...

சரியா சொன்னியள்... :) (அதில இருக்கிற பாட்டு வரிகள் உங்களுக்காச்சும் தெரியுமோ :( )...தெரிந்தா நேக்கு கொஞ்சம் விளங்கபடுத்து விடுங்கோ என்ன... :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

வசி அண்ணா இந்த பாட்டில என்ன சொல்லி இருக்கீனம் நேக்கு கொஞ்சம் சொல்லுங்கோ பார்போம் :) ...(நிசமா நேக்கு ஒரு இலவும் விளங்கல்ல :( )..

அப்ப நான் வரட்டா!!

இணையத்தில் தேடியபோது கிடைத்தது.....

தன் பசு கன்றுபோட அதற்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அதற்கு இடையூறாக விடாது மழைபொழிய, அம்மழையால் தான் குடியிருக்கும் வீடு இடிந்து விழுகிறது.

அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தன் கருத்தரித்த மனைவி, பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருக்கிறாள். இதற்கு என்ன செய்யலாம் என்று கலங்கித் தவிக்கும் நேரத்திலே, தன் (அடிமை) வேலைக்காரப் பெண் இறந்துபோக, அது விதை விதைக்கும் பருவமாதலின் நிலத்தில் ஈரம் காய்துவிடுமே என்று எண்ணி அடிமைப்பெண்ணின் சடலத்தை அப்படியே போட்டுவிட்டு விதையைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறான்.

அப்படிப் போகும் வழியில் கடன் கொடுத்தவன் அவனை மறித்துக் கடனைக் கொடுத்துவிட்டுப் போ என்கிறான்.

அப்போது அரசனுக்காக வரி வசூல் செய்பவன் தீர்வை செலுத்தச் சொல்லிக் கட்டாயப்படுத்த, அந்த நேரத்திலே இறைவனுக்கு பூசை செய்ததற்காகப் பணம் கேட்டு குருக்கள் நிற்கிறார்.

இக்கட்டான நிலையில், கவிஞர்கள் அவனைப்பாடிப் பரிசில் கேட்கின்றனர்.

இங்ஙனம் பல துன்பங்கள் படுகின்ற பாவியின் துன்பம் பார்த்துப் பொறுக்க இயலாது.

- துன்பத்தின் துன்பமாக வந்து போட்டுத் தாக்குவதைப் பற்றி விவேக சிந்தாமணியில் நொந்து போய் வரும் பாடல் இது.

செய்தியை போடுறாக்கள் கொஞ்சமாச்சும் சுருக்கமா போடுங்கோ... திருக்குறள் மாதிரி இல்லாடிலும் குறைஞ்சது இரண்டு பந்திக்குமேல் இருந்தா வாகிக்க மனம் வராது...

சுருக்கி போட நேரமில்லை சூறாவளி.... :unsure:

Edited by vasisutha

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: வசி, இந்த லொள்ளுத்தானே வேண்டாம் என்கிறது. இவ்வளவத்தையும் ஆறுதலா இருந்து எழுதிப்போட்டு, இதைச் சுருக்கி எழுத நேரமில்லை எண்டால் உங்களை என்னவென்று சொல்ல ?!!!!!
  • தொடங்கியவர்

Copy Paste பண்ண ஒரு நிமிசம் காணும்தானே ரகுநாதன்... :D

எல்லாருக்கும் என்ன பிரச்சனை என்று எனக்கு விளங்கவில்லை... :)

இணையத்தில் தேடியபோது கிடைத்தது.....

தன் பசு கன்றுபோட அதற்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அதற்கு இடையூறாக விடாது மழைபொழிய, அம்மழையால் தான் குடியிருக்கும் வீடு இடிந்து விழுகிறது.

அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தன் கருத்தரித்த மனைவி, பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருக்கிறாள். இதற்கு என்ன செய்யலாம் என்று கலங்கித் தவிக்கும் நேரத்திலே, தன் (அடிமை) வேலைக்காரப் பெண் இறந்துபோக, அது விதை விதைக்கும் பருவமாதலின் நிலத்தில் ஈரம் காய்துவிடுமே என்று எண்ணி அடிமைப்பெண்ணின் சடலத்தை அப்படியே போட்டுவிட்டு விதையைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறான்.

அப்படிப் போகும் வழியில் கடன் கொடுத்தவன் அவனை மறித்துக் கடனைக் கொடுத்துவிட்டுப் போ என்கிறான்.

அப்போது அரசனுக்காக வரி வசூல் செய்பவன் தீர்வை செலுத்தச் சொல்லிக் கட்டாயப்படுத்த, அந்த நேரத்திலே இறைவனுக்கு பூசை செய்ததற்காகப் பணம் கேட்டு குருக்கள் நிற்கிறார்.

இக்கட்டான நிலையில், கவிஞர்கள் அவனைப்பாடிப் பரிசில் கேட்கின்றனர்.

இங்ஙனம் பல துன்பங்கள் படுகின்ற பாவியின் துன்பம் பார்த்துப் பொறுக்க இயலாது.

- துன்பத்தின் துன்பமாக வந்து போட்டுத் தாக்குவதைப் பற்றி விவேக சிந்தாமணியில் நொந்து போய் வரும் பாடல் இது.

தாங்ஸ் வசி அண்ணா :) ...(ரொம்ப கஷ்டபடுத்திட்டனோ :( )...ஆனாலும் உது ரொம்ப ஓவராக்கும்... :D (எனக்கு என்னவோ பிலிம் காட்டுற மாதிரி இருக்கு அட நான் உங்களை சொல்லல்ல கதையை சொன்ன்னாக்கும் :lol: )..இதை தான் நம்ம பாசையில..(அதாவது இன்டநஷனல் பேபிகளின் லாங்வேஜில சொல்லுறது என்றா மனிசன் நொந்து நூலாகிட்டார் என்று :D )..என்ன கொடுமை வசி அண்ணா இது.. :(

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.