Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலி சாட்டிங்கில் திட்டி அப்பாவி மாணவன் பலி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 20 வயது மாணவர் வி.எஸ்.கார்த்திக் என்பவர், தனது காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் டெல்லியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தான் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்வதை தனது காதலிக்கு வெப்காம் மூலம் நேரடியாக அவர் காட்டியதால் அவரது காதலி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

இணையதள வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

கார்த்திக், டெல்லியில் தங்கிப் படித்து வருகிறார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம். டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார் கார்த்திக். சமீப காலமாக அவர்கள் இருவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு அதிகரித்து வந்தது.

இந்த நிலையில், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார் கார்த்திக். இதை தனது காதலி நேரில் பார்த்து வேதனைப்பட வேண்டும் என முடிவு செய்த அவர், தனது ஹாஸ்டல் அறையிலிருந்து வெப்காம் மூலம் காதலியுடன் சாட்டிங்கில் ஈடுபட்டார்.

வழக்கம்போல கார்த்திக்கின் காதலி கடுமையான வார்த்தைகளால் திட்டியபடி இருந்தார். இந்த நிலையில், நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று செய்தி அனுப்பினார் கார்த்திக். இதைப் பார்த்து காதலி அதிர்ச்சி அடைந்தார்.

அவரை சமாதானப்படுத்துவது போல செய்திகளை சரமாரியாக அனுப்பினார். ஆனால் அதைப் பொருட்படுத்தாத கார்த்திக், வெப்காமை மின்விசிறியை நோக்கித் திருப்பினார். இதைப் பார்த்து காதலி மேலும் அதிர்ச்சி அடைந்தார். அலறித் துடித்தார்.

பின்னர் மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் கார்த்திக். இந்த பயங்கர சம்பவத்தை நேரில் பார்த்தும், கார்த்திக்கைக் காப்பாற்ற முடியாத அவரது காதலி கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.

அடுத்த நாள் காலையில், கார்த்திக்கின் சக நண்பர்கள் அறைக்கு வந்தபோதுதான் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. வெப்காம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது.

கார்த்திக்குடன் படிக்கும் சக மாணவர்கள் கூறுகையில், கார்த்திக் எப்போதும் யாருடனும் அதிகமாக பேச மாட்டார். எதையுமே மனதுக்குள் வைத்துப் பூட்டிக் கொள்வார். அவருக்கும், அவரது காதலிக்கும் இடையே உறவு சரியில்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு முழுமையாகத் தெரியாது என்றார் அவர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2008/03...ing-webcam.html

------------

இந்தப் பெண்களுக்கு ஈவு இரக்கமே கிடையாதா..??! கொஞ்சம் என்றாலும் மனிதாபிமானத்தோட நடக்க முயற்சிக்கலாமே..!

ஆழ்ந்த அனுதாபங்கள். :lol::huh:

Edited by nedukkalapoovan

  • Replies 65
  • Views 7.3k
  • Created
  • Last Reply

ஆண்கள் இவ்வளவு முட்டாள்களாக இருப்பார்கள் நினைக்கேல்லை :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் இவ்வளவு முட்டாள்களாக இருப்பார்கள் நினைக்கேல்லை :lol:

ஆண்கள் முட்டாள்கள் அல்ல. காதல் என்ற பெயரில் சில அப்பாவி ஆண்களை பெண்கள் முட்டாளாக்கி மகிழ்கின்றனர். கில்லாடி ஆண்கள் பெண்களை முட்டாளாக்கி.. முடிக்க வேண்டிய காரியங்களை முடிச்சுக்கிறார்கள்..! :unsure::huh:

சரியான மறை கழண்ட கேஸ் இது

காதலுக்காக உயிரையே விடுகிற ஆண்கள் முட்டாளில்லாமல் வேற என்ன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலுக்காக உயிரையே விடுகிற ஆண்கள் முட்டாளில்லாமல் வேற என்ன.

ஜஸ்ட் திங் பண்ணுங்க. ஒருவரின் மனநிலை அறிஞ்சு கதைக்கப் பேசக் கூட முடியாதா பெண்களால. காதல் கிடக்கட்டும்.

ஒருவனின் மனநிலையை சக மனிதனாக உணர்ந்து செயற்பட்டிருந்தா இந்த மரணத்தைத் தவிர்த்திருக்கலாம்.

பெண்களிடம் உள்ள சில மனிதாபிமானமற்ற நடவடிக்கைதான் இதற்குக் காரணம்.

எனிவே பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. குறித்த பெண்ணுக்கு சரியான தண்டனை வழங்கப்படும்.

சட்டிங் என்று போய் காதலிக்கிறவைக்கு இது ஒரு நல்ல பாடம்..! இப்ப பிரிட்டன் போன்ற நாடுகளில் கூட பாடசாலைகளில் சட்டிங் தடை செய்யப்பட்டிருக்குது. அதுமட்டுமன்றி பிள்ளைகளை சட்டிங்கில விடுறது பற்றி எச்சரிக்கிறாங்க பெற்றோருக்கு..! :huh:

சரியான மறை கழண்ட கேஸ் இது..

யாரைச் சொல்லுறீங்க. அந்தந்த நிலையில இருந்தாத்தான் சார் அந்தந்த வலியை உணர முடியும். தற்கொலை செய்யுற அளவுக்கு அவன் தூண்டப்பட்டிருக்கான் என்றால்.. அதைப் பற்றித்தான் ஆராயனுமே தவிர கேணத்தனமா எழுதப்படாது..! :lol:

Edited by nedukkalapoovan

மறை கழண்டதுகளுக்கு எல்லாம் இதுதான் முடிவு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறை கழண்டதுகளுக்கு எல்லாம் இதுதான் முடிவு..

இப்படிச் சொல்லுறதும் அந்த நிலைதான்.

ஒரு மனிதனின் அழிவுக்கான காரணத்தை அறிவியல் பூர்வமா அறிய நிற்கிற உலகுக்கும் உங்களுக்கும் இடையில உள்ள இடைவெளி.. அதை தெளிவாச் சொல்லுதே..! :lol::huh:

எனக்கு காதலில் அனுபவம் இல்லை காதலித்துப்போட்டு சொல்லுறன் :huh:

கேள்பிறண்ட் பேசினாள் எண்டு அவள் பார்க்கவேண்டுமென்று தூக்கு போட்டு என்னத்தை கண்டார். நிதானமாய் யோசித்திருந்தால் சாவை அவர் தடுத்திருக்கலாம், நிறைய சாதித்திருக்கலாம். அவர்கள் உறவு விரிசலுக்கு அவனும் காரணமாஇருக்கலாம். பெண்களையே குறைசொல்லிக்கொண்டிருந்து ஒரு பிரயோசனமும் இல்லை

காதலுக்காக உயிரை இழப்பதா??? :huh:

இவர்களிற்கு வேறு வேலை இல்லையா???

இப்படியான முட்டாள் ஆண்கள் இருப்பதால்தான் சில பொண்ணுங்க

தலையில மிளகாய் அரைக்குது..

கொஞ்சமாவது பெற்றவர்களை அல்லது மற்றவர்களை நினைத்து

பார்த்தால் இப்படி செய்திருப்பாரா? போயும் போயும் ஒரு பெண்ணுக்காக

இப்படி பொட்டுன்னு போயிட்டாரே..

இங்கே தண்டிக்கப்பட்டது பெண்தான். ஒரு தற்கொலையை நேரில் பார்க்கச் செய்வது என்பது மிகக் கொடுமை. அதுவும் அந்த தற்கொலையை தடுக்க முடியாத தூரத்தில் ஒரு பெண் இருக்கும் போது அவளை அதைப் பார்க்கச் செய்வது குரூரமானது.

அந்த ஆணுக்கு நிச்சயமாக மன நோய். இல்லையென்றால் இப்படிச் செய்திருக்க மாட்டான்.

காதலில் பிரச்சனை வருவது சகஜம். சரி வரவில்லை என்றால் அடுத்த வழியை பார்க்க வேண்டியதுதான்.

தற்கொலை செய்வது முட்டாள்தனமானது. அதை காதலியைப் பார்க்கச் செய்வது கொடுரமானது.

இப்படி ஒரு ஆணைக் காதலித்த அந்தப் பெண் பரிதாபத்திற்கு உரியவள்.

எல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சியால வந்தது..

சைக்கோ கேசு....

நெடுக்ச் இந்த தலைப்பு சரியானது அல்ல உப்பு சப்பில்லாத விடயத்துக்கு தனது பெற்றோர் குடும்பத்தார் அந்த மாணவன் மேல் வைத்திருந்த நம்பிக்கையை பாழடித்து அதை கணக்கெடுக்காமல் தற்கொலை செய்து கொண்ட கோழை இந்த மாணவன்

அப்பாவி என்பதை பைத்தியக்கார மாணவன் என மாற்றிவிடுங்கள் அதுவே சரியாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

தொங்கிறது என முடிவெடுத்து எல்லா ஏற்பாடும் செய்துவிட்டுத்தான் சாட்டிங்கில் ஈடுபட்டிருக்கிறார் எனத்தெரிகிறது.

இது அவரது மனவக்கிரத்தைத்தான் காட்டுகிறது என்றபோதும் ரொம்ப அநியாயம்!!! :rolleyes::lol:

மறை கழண்டதுகளுக்கு எல்லாம் இதுதான் முடிவு..

:rolleyes::lol::D :D :D :D

மறைகழண்டது தற்கொலை செய்யாமல் வேறை என்ன தான் செய்யும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே தண்டிக்கப்பட்டது பெண்தான். ஒரு தற்கொலையை நேரில் பார்க்கச் செய்வது என்பது மிகக் கொடுமை. அதுவும் அந்த தற்கொலையை தடுக்க முடியாத தூரத்தில் ஒரு பெண் இருக்கும் போது அவளை அதைப் பார்க்கச் செய்வது குரூரமானது.

அந்த ஆணுக்கு நிச்சயமாக மன நோய். இல்லையென்றால் இப்படிச் செய்திருக்க மாட்டான்.

காதலில் பிரச்சனை வருவது சகஜம். சரி வரவில்லை என்றால் அடுத்த வழியை பார்க்க வேண்டியதுதான்.

தற்கொலை செய்வது முட்டாள்தனமானது. அதை காதலியைப் பார்க்கச் செய்வது கொடுரமானது.

இப்படி ஒரு ஆணைக் காதலித்த அந்தப் பெண் பரிதாபத்திற்கு உரியவள்.

எனக்கு ஒரு டவுட்டு சபேசன் பெண்ணா :lol: . இந்த சபேசன் என்ற பெயரில் வரும் ஆக்கங்களில் பெண்மை வாடை அடிக்கின்றது :D . அனேகமாக மதம் மாறிய பெண் போல் உள்ளது :rolleyes:

வழக்கம்போல கார்த்திக்கின் காதலி கடுமையான வார்த்தைகளால் திட்டியபடி இருந்தார்.

அவரை சமாதானப்படுத்துவது போல செய்திகளை சரமாரியாக அனுப்பினார். ஆனால் அதைப் பொருட்படுத்தாத கார்த்திக், வெப்காமை மின்விசிறியை நோக்கித் திருப்பினார். இதைப் பார்த்து காதலி மேலும் அதிர்ச்சி அடைந்தார். அலறித் துடித்தார்.

பின்னர் மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் கார்த்திக். இந்த பயங்கர சம்பவத்தை நேரில் பார்த்தும், கார்த்திக்கைக் காப்பாற்ற முடியாத அவரது காதலி கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.

வழக்கம் போலவே திட்டுற காதலி..................

அப்புறம் அவன் தற்கொலை செய்தபோது கதறி அழுதாவாம்.

பாவம் அவன் எடுத்தது நல்ல முடிவு.

காதலை புனிதமாக நினைச்சிருப்பான். அவளையே கைப்பிடிக்கணும் என நினைச்சிருப்பான். ஆனால் காதலியோ தினமும் அவனை திட்டுவதால் அவன் நினைச்சிருப்பான் இவளைக் கைப்பிடித்தால் தினமும் திட்டுவாள். இதைவிட இப்பவே செத்துடலாம் என நினைச்சு தற்கொலை செய்திருப்பான்.

அன்பின் மறுவடிவமான பொண்ணு தன் காதலனை தினமும் திட்டுகிறாள் என்றால் அவளோடு வாழ்வதை விட அவன் எடுத்த முடிவு தப்பல்ல

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சாட்டிங்கால வாற வில்லங்கம்

என்னால முடியல்ல..பின்னே சாட்டிங்கில காதலி திட்டினதிற்கு கூடவா யாரும் தூக்கு போடுவீனம் இது என்னடப்பா கொடுமை சுத்த வேஸ்ட் தாத்த அந்த மாணவன் :D ..ஆனாலும் அங்கயும் நாம ஒரு மாட்டரை கவனிக்க வேண்டியதாக இருக்கிறது..(காதலி எப்படி திட்டினா என்று :rolleyes: )..

ஒரு வேளை காதலி அவனை வெறுபேற்றுவதற்காக அவனை என்ன சொல்லுறது..(மறந்துட்டன்)..ம்ம் அதாவது மற்றவர்களுடன் ஓப்பனை செய்து அவனை திட்டி இருக்கலாம் இதனால் அந்த இளைஞன் மன அளவில் பாதிக்கபட்டிருக்கலாம்... :lol: (அதனால் அவன் என்ன செய்வது என்று தெரியாம தூக்கில் தொங்கி இருக்கலாம் :( )..ஏனேன்றா அந்த இளைஞன் எதையும் ஓபினா கதைக்கிற இளைஞன் இல்லை என்று அவனின் நண்பன் கூறி இருக்கிறான் சோ அந்த இளைஞன் மன உளைச்சலிற்கு ஆளாக்கபட்டு தான் தூக்கில் தொங்கி இருக்கிறான்...(இது கிரிமனல் லோயர் ஜம்மு பேபியின் விவாதம் :D )...

ஆகவே இந்த அடிபடையில் பார்க்கும் போது காதலி தான் முழு பலியையும் ஏற்று கொள்ள வேண்டும் ஆனா என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியாது..(பட் இது தான் நடந்திருக்கும் என்பது என்னை மாதிரி கொஞ்சம் அறிவாளிகளுக்கு தெரிந்திருக்கும்)...என்ன பார்கிறியள் ஒரு பேச்சிற்கு சொன்னா விடமாட்டியளே.. :D

பட் ஒரு இளைஞன் அதுவும் சாட்டில ஒருவாவை பிடித்திருக்கிறான் என்றா அவா ஏதாச்சும் சொன்னா என்று தூக்குபோடுவது என்னால் ஏற்று கொள்ள முடியாது...(ஆனால் அந்த இளைஞன் எதையும் தன் மனசில் பூட்டி வைத்திருந்தால் தான் இந்த வெளிபாட்டிற்கு சென்றான் என்பதில் எந்த வித டவுட்டும் இல்லை பாருங்கோ)..ஆனாலும் இளைஞனின் நிலையில் நாமிருந்தா...(அதாவது அவனுடைய குணத்தை ஒத்து நாமிருந்தா நாம் என்ன செய்திருப்போம்)...என்று நிசமா நேக்கு தெரியா.. :(

எனிவே அந்த பெண் குற்றவாளி என்று கணம் நீதிபதி அவர்களை கேட்டு கொண்டு உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன்.. :D (இப்படிக்கு கிரிமனல் லோயர் ஜம்மு பேபி)...போறதிற்கு முன்னம் ஒன்று சொல்லிட்டு போறன் என்ன..சாட் பண்ணுங்கோ காதல் பண்ணுங்கோ ஆனா அதற்காக உயிரை கொடுக்காதையுங்கோ.. :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா சாட்டில சாட் பண்ணுறவா போனா இன்னொன்று ஆனா உயிர் போனா" :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி

கிரிமனல் லோயர்!!

காதலை புனிதமாக நினைச்சிருப்பான். அவளையே கைப்பிடிக்கணும் என நினைச்சிருப்பான். ஆனால் காதலியோ தினமும் அவனை திட்டுவதால் அவன் நினைச்சிருப்பான் இவளைக் கைப்பிடித்தால் தினமும் திட்டுவாள். இதைவிட இப்பவே செத்துடலாம் என நினைச்சு தற்கொலை செய்திருப்பான்.

ஆகா எப்படிம்மா இப்படியெல்லாம்.. முடியேல்ல :rolleyes:

எனக்கு காதலில் அனுபவம் இல்லை காதலித்துப்போட்டு சொல்லுறன்

அட....அட கவி அக்கா உண்மையாவே யாரை காதலிக்க போறியள் சொல்லவே இல்லை.. :rolleyes: (எனி கெல்ப் வோ கவி அக்கா :D )...ஆத்துகாரர் ரொம்பவே பாவம் ஆக்கும் :D ...அது சரி எனக்கு செத்த அநுபவம் இல்லை அதற்காக நான் செத்து பார்க்கலாமா என்ன.. :D (ரொம்ப கொடுமையாக்கும்)..

"காதலிக்க நேரமில்லை காதலிக்க யாருமில்லை" :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு தான் சொல்லுறது நம்மள போல இருக்கனும் என்று.

ஒரே நேரத்தில்

டெஸ்டொப்பில் ஜரோப்பாவுடன் அரட்டை

லப்டொப்பில் வட அமெரிக்காவுடன் அரட்டை

காலை ஜப்பானில் காப்பி

மாலை நியுயோர்க்கில் டின்னர் என்று :rolleyes:

இணையத்தில் எப்போ உங்கள் கணனியை OFF பண்ணுறிங்களோ அப்போ இந்த இணைய கவர்ச்சியான காதலை மறந்திடனும்.

இதுக்கு தான் சொல்லுறது நம்மள போல இருக்கனும் என்று.

ஒரே நேரத்தில்

டெஸ்டொப்பில் ஜரோப்பாவுடன் அரட்டை

லப்டொப்பில் வட அமெரிக்காவுடன் அரட்டை

காலை ஜப்பானில் காப்பி

மாலை நியுயோர்க்கில் டின்னர் என்று :D

இணையத்தில் எப்போ உங்கள் கணனியை OFF பண்ணுறிங்களோ அப்போ இந்த இணைய கவர்ச்சியான காதலை மறந்திடனும்.

நிசமா என்னால முடியல்ல..அப்ப தமிழ்நக்ஸ் அண்ணா எங்க தூங்குவியள் அது தான் அமெரிக்காவிலையா அல்லது பிரிட்டனிலையா அல்லது கட்டிலிலையா.. :D (நேக்கு டவுட்டா இருக்கு :rolleyes: )..அப்ப கணணியை ஓவ் ஆக்கினவுடன காதலையும் ஓவ் ஆக்கிட வேண்டும் என்று சொல்லுறியள்.. :D (அதை எல்லாம் கரக்டா பண்ணுவோமல :lol: )..

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிசமா என்னால முடியல்ல..அப்ப தமிழ்நக்ஸ் அண்ணா எங்க தூங்குவியள் அது தான் அமெரிக்காவிலையா அல்லது பிரிட்டனிலையா அல்லது கட்டிலிலையா.. :D (நேக்கு டவுட்டா இருக்கு :rolleyes: )..அப்ப கணணியை ஓவ் ஆக்கினவுடன காதலையும் ஓவ் ஆக்கிட வேண்டும் என்று சொல்லுறியள்.. :D (அதை எல்லாம் கரக்டா பண்ணுவோமல :lol: )..

அப்ப நான் வரட்டா!!

பட் எங்க போனாலும் கரெக்டா வன்னி மாடு போல பட்டிக்கு(வீட்டுக்கு) வந்திடுவேன் நித்தா கொள்ள :D

நான் சொல்லுறது இந்த இணைய கவர்சி காதலை தான் ஓவ் பண்ண வேண்டும் என்று.

நேரில் வரும் நிஜ காதலை அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.