Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையம் தொடர்பான ஒரு பேப்பரின் செய்தி

Featured Replies

கடைசியாக வெளிவந்துள்ள ஒரு பேப்பரில் பிரசுரிக்கப்பட்ட செய்தி இது

பத்தாவது ஆண்டில் யாழ் இணையம்

இணையத்திலை தமிழ் விடயங்கள் பற்றிய செய்திகளை, தகவல்களை பார்ப்பது எனில் ஆயிரம் இணைதளங்கள் இருக்கிறது. செய்தியளும் தளத்துக்கு தளம் வேறுபடும். சில தளங்களுக்கு ஒரு முறைபோனால் திரும்பிப் போகப் பிடிக்காது. சில தளங்கள் ஒரு சிலவிடயங்களையே பிரசுரிக்கும். முழுமையாக விடயங்களை அறிய வேண்டுமெனில் பல தளங்களை மேய வேண்டும். ஆனால் ஒரே கூரையின்கீழ் பல சேவைகளைப் புரியும் நிறுவனம் போல் புலத்திலும் தாயகத்திலும் வாழும் தமிழ் உறவுகளின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது யாழ் இணையம்.

இம்மாதம் 10 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவ் இணையதளம்

தமிழ் தேசியத்திற்கும் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும் உரமூட்டும் படைப்புகள், விவாதங்கள், கருத்துப் படங்கள் என்பவற்றைத் வெளியிட்டு அசத்தி வருகிறது. யாழ் தளத்தை பார்க்காவிட்டால் அன்றய நாள் விடியாது என்கிற மாதிரி இப்போது ஆகிவிட்டது.

ஆக்க இலக்கியத் துறையில் உள்ளவர்கள் தங்களுடைய ஆக்கங்களை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் ஆக்கங்கள் தொடர்பான கருத்துக்கள் விமர்சனங்கள் என்பவற்றைப் படைப்பாளிகள் உடனுக்குடன் பெற்றுக் கொள்ளவும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவதற்கும் மிகச் சிறந்த ஊடகமாக அது விளங்கி வருகிறது.

அதுமட்டுமன்றி தமிழ் தொடர்பான பல்வேறு விடயங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஏனைய இணையத்தளங்களுக்கான இணைப்பையும் யாழ் இணையம் தன்னகத்தே கொண்டிருப்பதும் இன்னொரு சிறப்பம்சமாகும்.

பெரும்பாலான அங்கத்தவர்களின் தரமான படைப்புகளையும் ஆரோக்கியமான கருத்தாடல்களையும் தகவல் பரிமாற்றங்களையும் கொண்டிருப்பினும் ஒரு சில விதண்டாவாதிகளினது செயற்பாடுகளையும் பொறுத்து அல்லது புறந்தள்ளிச் செய்ற்படும் வரும் இணையத்தளத்தின் பொறுப்பாளர், மட்டுறுத்தினர்கள் ஆகியோர் பாராட்டப்படவேண்டியவர்கள்.

தற்போது இந்த இணையத் தளத்தில் நான்காயிரத்திற்கு மேற்பட்டோர் பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களாக இருக்கின்றனர். பலவழிகளிலும் திறம்படச் செயற்பட்டு வரும் யாழ் இணையம் என்ற தகவல் களஞ்சியத்திற்கு ஒரு பேப்பரும் தன்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

  • Replies 112
  • Views 11k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தற்போது இந்த இணையத் தளத்தில் நான்காயிரத்திற்கு மேற்பட்டோர் பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களாக இருக்கின்றனர்.

அடப்பாவிகளா இப்படியெல்லாம் எழுதி அப்பாவி பொதுசனத்தை ஏமாத்திறியளா.

அன்பார்ந்த வாசகர்களே.. 4000 பேர் என்னவோ இஞ்ச பதிச்சிருக்கிறதா காட்டிறது உண்மைதான். ஒரு 40 பேர் கூட கருத்துக்களத்தில கருத்தாடலில பங்கெடுக்கிறதில்ல..! 4000 பேரிலும் பல டூப்பிளிக்கற்.. பெயர்கள்.. அதாவது.. சிலர் பல தடவை பதிஞ்சதுகள். இராவணனுக்குப் பத்துத்தலை போல இங்க உள்ளவைக்கு 100 முகம். அப்படி இருக்குது நிலைமை...! :D:lol:

Edited by nedukkalapoovan

அதானே நெடுக்காலபோவானுக்கே பத்து இருவது தலை இருக்கிது. எனக்கு ரெண்டு தலை.. இப்பிடி கணக்கு பார்த்தால் மொத்தம் ஒரு நூறு இருநூறுதான் தேறும்..

ஆனானப்பட்ட அந்தக்கடவுள் பிரம்மாவுக்கே நாலு தலை இருக்கிது. இதில இருந்து என்ன தெரியுது?

இதுகள நினைக்க ஒருமுகம், இருமுகம், திருமுகம் எண்டு ஒரு தேவாரம் நினைவுக்கு வருகிது. எழுத ஏலாமல் இருக்கிது.

  • கருத்துக்கள உறவுகள்

அதானே நெடுக்காலபோவானுக்கே பத்து இருவது தலை இருக்கிது. எனக்கு ரெண்டு தலை.. இப்பிடி கணக்கு பார்த்தால் மொத்தம் ஒரு நூறு இருநூறுதான் தேறும்..

மோகனிடமே ஆங்கிலத்தில ஒன்று.. தமிழில ஒன்று என்று இரண்டு இருக்குது. :D:lol:

கடைசியில ஒரு பேப்பரும் அவைட நிர்வாகத்துக்குள்ள ஒட்டி இருக்கிற ஒரு சில தனிநபர்களின் விருப்பங்களை கொட்டிற குப்பத்தொட்டியாகிட்டுதா..??! :D

ஏன்னா மோகன் தற்போதைய நிலையில்.. புதினம்.. தட்ஸ்தமிழ்.. விகடன்.. குமுதம்.. பதிவு.. இவற்றை நம்பித்தான் இவ்விணையத்தையே நடத்திட்டு இருக்கிறார்.

அவராப் போடுறது.. இரண்டு.. ஒன்று.. தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் சில காணொளிகள்..

இரண்டு.. சில காட்டூண்கள்.

இதுதான் உண்மை இங்கு. மோகன் இதை இங்கு பகிரங்கமாக மறுதலிப்பாரா..!

மக்களுக்கு தவறான செய்திகளை.. மிகைப்படுத்தல்களை வழங்குவதை ஒரு பேப்பரில் உள்ள யாழ் விசுவாசிகள் தவிர்த்துக் கொள்வது அப்பேப்பருக்கும் யாழுக்கும் நல்லது..!

உண்மையை உள்ள படி சொல்லப் பழகுங்க. அப்பதான் உயர்வுக்கு உழைக்க மனிசர் முன் வருவினம்..! ஏலவே பிற இணையங்களில் திருடி.. சிறிய மாற்றங்களோடு செய்திகளை போட்டிட்டு.. மூலத்தை மறைக்கிறது போல... யாழுக்குப் போலிப் புகழாரம் அவசியமா...???! :D

Edited by nedukkalapoovan

நானும் சுயமா ஏதாவது எழுதி ஆக்களிட்ட பட்டப்பெயருகள் வாங்காமல் சும்மா அங்கையும், இஞ்சையும் எண்டு துணுக்குகள தேடி எடுத்து யாழுக்க கொண்டுவந்து ஒட்டி பொழுதுபோக்கலாமோ எண்டு பார்க்கிறன். சுயமா ஏதாவது செய்தால் வரக்க்கூடிய ஆபத்து அறிஞ்சுதான் ஆக்கள் எல்லாரும் கொப்பி பேஸ்ட் செய்துகொண்டு இருக்கிறீனம் நெடுக்காலபோவான். இது விளங்காமல் மணிவாசகனையும், மோகனையும் கிண்டலடித்து பிரயோசனம் இல்லை. இங்கு சுயமாக எழுதப்படும் செய்திகளுக்கு கைதட்டல் கொடுக்கும் கூட்டத்தை விட வெட்டி ஒட்டப்படும் பரபரப்பான மற்றும் செக்ஸியான செய்திகளிற்கு அரோகரா சொல்லும் கூட்டமே அதிகமாக இருக்கின்றது. இந்த வகையில் இப்படி பொறுப்பு இல்லாமல் யாழை நையாண்டி செய்தமைக்காகவும், உண்மைக்கு புறம்பாக கருத்துக்களை திரிவுபடுத்தி எழுதுவதாலும் என்னால் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை (warn 10%) தரப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சுயமாக எழுதப்படும் செய்திகளுக்கு கைதட்டல் கொடுக்கும் கூட்டத்தை விட வெட்டி ஒட்டப்படும் பரபரப்பான மற்றும் செக்ஸியான செய்திகளிற்கு அரோகரா சொல்லும் கூட்டமே அதிகமாக இருக்கின்றது.

இதிலும் கூட பாருங்க.. நீங்கள் குறிப்பிட்ட தலைப்புகளில் அதிக கவனம் செலுத்தி இருக்கிற படியால் தான்.. வாறவை எத்தனை போறவை எத்தனை என்று அறிஞ்சிருக்கிறீங்க... அல்லது அறிய முற்பட்டிருக்கிறீங்க.

சோ.. நீங்கள் உங்கள் ஆக்கத்தினை நம்பி இல்ல. எவன் வந்து எத்தனை கருத்தெழுதிறான் என்ற கணக்கு அடிப்படையிலதான் ஆக்கத்தை தரம் என்று கருதுறீங்க.

முடியல்ல. ஒரு செய்திக்கும் சுய ஆக்கம் அல்லது படைப்புக்கும் இடையில நிறைய இடைவெளி உண்டு. செய்தியை மக்கள் அனைவரும் அறிய எழுதுவினம். படைப்புக்களை படைப்பை விரும்பிப் படிக்கிறவன்.. அல்லது படிக்க வேண்டியவனுக்கு என்று ஆக்குவினம். அது மக்கள் எல்லாராலும் விரும்பப்படனும் என்ற அவசியமில்லை..! அப்படி எதிர்பார்த்துப் படைப்பது.. புகழ் தேட என்று நினைக்கிற ஒரு செயல் என்றே நோக்க வேண்டும்.

ஒரு பேப்பருக்கு யாழைப் பற்றி யாழுக்கு வெளில இருந்து ஒருத்தன் அல்லது ஒருத்தி எழுதி அனுப்பி இதைப் போட்டிருந்தா நிச்சயம் அறியாமைகளின் பால் எழுந்த போலிப் புகழாரங்கள் என்று மன்னித்து ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் யாழுக்கேயே தவண்டிட்டு.. நல்ல விவாதமும் நடக்குது விதண்டாவாதம் செய்யிறதும் இருக்குது என்றிட்டு.. யாழ் தமிழ் தேசிய வளர்ப்பூடகம்.. 4000 உறுப்பினர்களை தன்னக்கே கொண்ட மாபெரும் இணையத் தளம் இப்படியான போலித்தோற்றப்பாடுகளையும் கூடச் சேர்ப்பது.. அவசியமில்லை என்றே நினைக்கின்றேன்.

யாழ் தமிழ் தேசியத்துக்கு எதிரான ஊடகம் அல்ல என்பதைச் சொல்லுங்க ஏற்கலாம். அதற்காக தமிழ் தேசியம் யாழின் ஊடுதான் வளருது.. அதற்காகத்தான் மோகன் 24 மணி நேரமும் யாழை நடத்திறார் என்றால் வெறும் செய்தித் தளங்களில் இருந்து செய்தியை ஒட்டுறதும்.. கவிதை படிக்கிறதும்.. காட்டூண் வரையிறதும் அதற்குப் போதுமானதல்ல..! :D:D

4000 பேரை அங்கத்தவராகக் கொண்ட பெரும் தளம்.. சமூகத்துக்கு படைக்கக் கூடிய படைப்புக்கள் 40,000 ஆ எல்லோ இருக்க வேணும். ஆனால்.. அப்படி இருக்கா..??! இல்லையே. அப்புறம் எதற்கு 4000 என்ற தேவையற்ற ஒரு விளம்பரம் யாழுக்கு. யாழ் 4000 பேரைக் கவர்ந்து வச்சிருக்கு அப்படின்னு காட்டவா..???!

உண்மையைச் சொல்லவா.. யாழின் முகப்பில் ஆக்கங்கள் எழுதிய பல புலம்பெயர் படைப்பாளிகள்... இன்று ஆக்கம் எழுதுவதில்லை. தாங்களா தனித்து இணையங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றனர். 4000 பேரினை தன்னக்கதே கொண்டிருக்கிற யாழின் முகப்பில்.. நாளுக்கு எத்தனை புதிய ஆக்கங்கள் சேர்க்கப்படுகுது..??! அதுமட்டுமன்றி இப்படியான மிகைப்படுத்தல்களால்..

நாலு பேர் இருந்து செய்யக் கூடியதை 4000 பேர் இருந்தும் செய்யமுடியல்ல.. என்று கருத வைப்பது.. யாழுக்குத்தான் இழுக்கு..!

விரும்பினா தங்கு இல்ல விட்டிட்டுப் போ என்று சொல்லத்தக்க நிர்வாகிகளையும் நிர்வாகத்துக்கு ஜால்ரா போடுபவர்களையும் வைத்துக் கொண்டு எப்படி ஒரு ஆர்வமிக்க எழுத்தாளர் வட்டத்தை யாழ் தன்னகத்தே தக்க வைக்க முடியும்..???!

ஒரு பேப்பரில் இடம் இருக்கு என்றதுக்காக இப்படி மிகைப்படுத்தல்களை சமூகத்துக்கு காட்டக் கூடாது. யாழ் செய்த சாதனைகள் பல. அதிலும் குறிப்பா சுரதா யாழ் வாணன் இங்கிருந்து அறிமுகம் செய்த சாதனைகள் பல. அவர் ஒரு பேப்பருக்கு கூட தனது பங்களிப்பை ஆற்றி வருகிறார். அப்படியான யாழுக்கு ஏன் போலி அடையாளங்களால்.. சமூகத்தில் அநாவசிய மதிப்பிழப்பைச் செய்கிறீர்கள்.

ஒரு பேப்பர் மீது எனக்கு அவ்வளவு நல்லபிப்பிராயம் இல்லை. அதுவும் சிலரின் பகடைக் காய் பேப்பராகி வருகிறது. நான் இங்கு சுட்டிக்காட்டியது போல திருட்டுச் செய்தி போடும் அளவுக்கு அதன் தரம் மோசமாக உள்ளது. நான் இங்கு குறிப்பிட்டு சிலவற்றை காட்டிய பின்னரும் கூட அதே தவறுகளை ஒரு பேப்பர் தொடர்ந்தது. அப்படிப்பட்ட அந்தப் பேப்பர்.. உண்மையில் சமூகத்துக்கு சொல்வது நேர்மையான தகவலையா என்ற வினாவை.. யாழைப் பற்றிய மிகைப்படுத்தல்களும் ஏற்படுத்தும் என்பது எனது அபிப்பிராயம். இது விதண்டாவாதமல்ல..!

மணிவாசகனை எனக்கு யாரென்றும் தெரியாது. இங்கு தான் உங்களைப் போல அவரும் ஒரு கள உறவு. மோகனையும் எனக்கு யாரென்று தெரியாது. இவ் இணையத்தளத்தில் பெயரைக் கண்டு அதன்படிதான் தெரியும். இவை இருவரையும் இதற்குமேல் தெரிய வேண்டிய அவசியமும் இல்ல. அப்படி இருக்க இவை இருவருக்கும் எதிரா காண்டா இருக்க நமக்கு என்னை தேவை..??! :D:lol:

பிரச்சனை நமது ஊடகங்கள் போலிப் புகழுக்காக சமூகத்தை நோக்கிச் செய்யும் மிகைப்படுத்தல் தான். இது செய்திகளில் மட்டுமல்ல நம்மவர் குணமும் கூட. ஒரு சின்ன வேலை செய்யுறது என்ற நேர்மையைச் சொல்லார்கள்.. ஆனால் நான் அந்தக் கம்பனியில அவருக்கு கீழ வேலை செய்யுறன் என்பார்கள். ஆனால் அவர் செய்யிற வேலையை சொல்வதில்லை. இது தமிழர்களின் பிறவிக் குணமோ தெரியல்ல..! இதை ஒத்ததுதான் மேலுள்ள யாழ் பற்றிய கட்டுரை. யாழில் சிலரை சாந்தப்படுத்த எழுதப்பட்ட மிகைப்படுத்தல்கள் அடங்கிய ஒரு நிலை. யாழ் தன் தனித்துவத்தை இதனால் இழந்து நிற்கிறது என்றால் அது மிகையல்ல. அதைச் சுட்டிக்காட்டுவதுதான் எனது நோக்கம்.

ஒரு பேப்பர் தவறுகளை திருத்த முனையிறதிலும் கொஞ்சம் தாமதாவே இயங்கிட்டு இருக்கிறது. அதனால் அவர்கள் தங்களை தாங்களே தரந்தாழ்த்திக் கொண்டு விட்டனர். ஆரம்பத்தில் அவைக்கு மக்களிடமிருந்த வரவேற்பு இப்ப குறைஞ்சிட்டு வருகுது என்றது அவைக்கே தெரியும்..! அது ஏன் என்றும் தெரியும். அதில ஒன்று பகடக்காயாய் செயற்படக் கூடிய சிலரை உள்வாங்கி வைத்திருத்தல். அது வாசகர் பலருக்கும் தெரியும்..! :D:D

Edited by nedukkalapoovan

ஒரு பேப்பருக்கு யாழைப் பற்றி யாழுக்கு வெளில இருந்து ஒருத்தன் அல்லது ஒருத்தி எழுதி அனுப்பி இதைப் போட்டிருந்தா நிச்சயம் அறியாமைகளின் பால் எழுந்த போலிப் புகழாரங்கள் என்று மன்னித்து ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் யாழுக்கேயே தவண்டிட்டு.. நல்ல விவாதமும் நடக்குது விதண்டாவாதம் செய்யிறதும் இருக்குது என்றிட்டு.. யாழ் தமிழ் தேசிய வளர்ப்பூடகம்.. 4000 உறுப்பினர்களை தன்னக்கே கொண்ட மாபெரும் இணையத் தளம் இப்படியான போலித்தோற்றப்பாடுகளையும் கூடச் சேர்ப்பது.. அவசியமில்லை என்றே நினைக்கின்றேன்.

:lol:

எனக்கு புரியாத விடயம் இதுதான்.

எதற்குமே லாயக்கற்ற எந்தப் பிரயோசனமும் இல்லாத தமிழ் தேசியத்துக்கும் எதுவுமே செய்யாத படைப்பாளிகளுக்கும் எந்தப் பிரயோசனமும் அற்ற ஒரு வீணான இணையத்தளத்திற்குள் உங்களைப் போன்ற ஒரு புத்திசீவி எதற்காக மினக்கெடுகிறீர்கள்.

இதை விடப் பிரயோசனமாக சரியான வழியில் இயங்கிக் கொண்டிருக்கும் இணையத்தளங்களில் உங்கள் நேரத்தைச் செலவிடலாமே

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரியாத விடயம் இதுதான்.

எதற்குமே லாயக்கற்ற எந்தப் பிரயோசனமும் இல்லாத தமிழ் தேசியத்துக்கும் எதுவுமே செய்யாத படைப்பாளிகளுக்கும் எந்தப் பிரயோசனமும் அற்ற ஒரு வீணான இணையத்தளத்திற்குள் உங்களைப் போன்ற ஒரு புத்திசீவி எதற்காக மினக்கெடுகிறீர்கள்.

இதை விடப் பிரயோசனமாக சரியான வழியில் இயங்கிக் கொண்டிருக்கும் இணையத்தளங்களில் உங்கள் நேரத்தைச் செலவிடலாமே.

எப்படி இருந்த தளம் இப்படி ஆச்சே (இப்படியான சீப்பான நோக்களால்) என்ற ஒரு ஆதங்கம் தான். மற்றும்படி.. நாங்க எங்க முயற்சிகளை இங்க இட்டு வீணடிக்கல்ல. எமக்கான தளங்களில் செய்திட்டுத்தான் இருக்கிறம்..! :lol:

ஏன் இந்த வயித்தெரிச்சல் நெடுக்காலபோவான்... :lol:

எப்படி இருந்த தளம் இப்படி ஆச்சே (இப்படியான சீப்பான நோக்களால்) என்ற ஒரு ஆதங்கம் தான். மற்றும்படி.. நாங்க எங்க முயற்சிகளை இங்க இட்டு வீணடிக்கல்ல. எமக்கான தளங்களில் செய்திட்டுத்தான் இருக்கிறம்..! :D

இருந்தாலும் உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் இதுபோன்ற தரங்கெட்ட தளங்களுக்கு வருவதே உங்களுடைய நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தப் போகிறது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவிகளா இப்படியெல்லாம் எழுதி அப்பாவி பொதுசனத்தை ஏமாத்திறியளா.

அன்பார்ந்த வாசகர்களே.. 4000 பேர் என்னவோ இஞ்ச பதிச்சிருக்கிறதா காட்டிறது உண்மைதான். ஒரு 40 பேர் கூட கருத்துக்களத்தில கருத்தாடலில பங்கெடுக்கிறதில்ல..! 4000 பேரிலும் பல டூப்பிளிக்கற்.. பெயர்கள்.. அதாவது.. சிலர் பல தடவை பதிஞ்சதுகள். இராவணனுக்குப் பத்துத்தலை போல இங்க உள்ளவைக்கு 100 முகம். அப்படி இருக்குது நிலைமை...! :D:D

நெடுக்கண்ணே ஒரு பேப்பரில உப்படித்தான் போட்டிருக்கு.

"நான்காயிரத்திற்கு மேற்பட்டோர் பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களாக இருக்கிறார்கள்" என்று. நான்காயிரம் பேரும் ஒவ்வொரு நாளும் வந்து இருந்து எழும்பி எழுதுறாக எண்டே போட்டிருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த வயித்தெரிச்சல் நெடுக்காலபோவான்... :D

வயிற்றெரிச்சல் இல்லைப்பா.

ஒரு பெரியவர் சொன்னார் யதார்த்தவாதி பொதுசன எதிரி என்று. உங்களின் பதில் அதற்கு சான்று..! :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணே ஒரு பேப்பரில உப்படித்தான் போட்டிருக்கு.

"நான்காயிரத்திற்கு மேற்பட்டோர் பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களாக இருக்கிறார்கள்" என்று. நான்காயிரம் பேரும் ஒவ்வொரு நாளும் வந்து இருந்து எழும்பி எழுதுறாக எண்டே போட்டிருக்கு?

4200 க்கு மேல இருக்கே. அப்படியே போட்டிருக்கலாமே. யாழ் இணையம் பற்றி எழுதும் போது இது அவசியமில்லாத ஒன்று. யாழ் இணையத்தில் 4000 அங்கத்துவர்கள் என்பது யாழைப் பற்றி தவறாகக் காட்டப்பட்ட ஒரு மாயைக் காட்சி அதை உணர்த்துவதுதான் என் நோக்கம். இங்கு 4000 பேர் எப்போதுமே கருத்தெழுதியதில்லை. ஆகக் கூடியது ஒரு 100 பேர் இருக்கலாம்..! பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு இணையத்தளங்களுக்கு விளம்பரம் தேடுவது யார்.. தமது இணையத்தளத்துக்கு பெறுமதி தேடுபவர்கள் தான். ஒரு காத்திரமான இணையத்தளம் இப்படியான சீப்பான விளம்பரத்தை மாயைத்தனமான விளம்பரத்தை மக்களிடம் செய்ய முனையாது. அது பொய் என்பது இலகுவாகவே மக்களால் இனங்காணப்படக் கூடியது.

ஏதோ சினிமா போறங்கள் போல 4000 பேர் அங்கத்தவர்களாக உள்ளனர். நீங்களும் இணைந்து திரைப்படங்களை சுடுங்கள் என்பது போல இருக்கிறது யாழுக்கான விளம்பரம். அந்தளவு தரக்குறைவாவா யாழ் போயிட்டுது..! :D:D

  • தொடங்கியவர்

யாழ் இணையத்தைக் கடுமையாக விமர்சிக்கும் பலர் கூடக் காலையில் எழுந்ததும் யாழ் இணையத்திற்கள் நுழைந்து விட்டுத் தான் செல்கிறார்கள். எதுவுமே இல்லாத ஒரு தளமாக இருந்தால் இப்படி வந்து போவதற்கு அவசியம் இருந்திருக்காது.

ஒரு குறிப்பிட்ட சங்கத்திற்குரிய அங்கத்துவப் பத்திரத்தைப் பூர்த்தி செய்து சந்தாப் பணத்தைச் செலுத்திய அனைவரும் அந்தக் கழகத்தின் அங்கத்தவர்களே. அதற்காக அத்தனை அங்கத்தவர்களும் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் கலந்து கொள்ள வேண்டும் என்பதோ அல்லது சகல நடவடிக்கைகளிலும் பங்கு கொள்ள வேண்டும் என்பதோ கட்டாயமில்லை.

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட அங்கத்துவத்தை வைத்திருப்பதற்கு ஒரு சங்கத்தின் நிர்வாகத்தால் என்ன செய்ய முடியும். அவர்கள் வெறு பெயரில் விண்ணப்பப் படிவத்தைப் ப+ர்த்தி செய்து சந்தாவைச் செலுத்தியிருந்தால் கழக யாப்பிற்கமைய அதில் தவறில்லையென்றால் அவர்களும் அங்கத்தவர்களே.

பல்வேறு விடயங்களை தன்னகத்தே கொண்ட யாழ் களத்தை மேலும் பலருக்கு அறிமுகம் செய்யும் நடவடிக்கையாக இந்தச் செய்தி பிரசுரிக்கப்பட்டதே தவிர யாழ்கள நிர்வாகமோ அல்லது வேறு யாராவதோ ஐயா எங்களை விளம்பரப்படுத்துங்கள் என்று கேட்டு அதற்கிணங்க பிரசுரிக்கப்பட்ட செய்தியல்ல இது.

Edited by Manivasahan

கிஐ

எழுதி இருக்கிறேன்.

Edited by முரளி

  • தொடங்கியவர்

பல படைப்பாளிகளுக்கு தங்கள் படைப்புகளை அறிமுகம் செய்யும் இடமாக யாழ் இணையம் இருந்திருக்கிறது. இருந்து கொண்டு இருக்கிறது.

என்னுடைய கவிதைகள் பலவற்றிற்கு பல ஆக்கபூர்வமான விமர்சனங்கள் தனிமடல் மூலம் கிடைத்தன. அவை எனக்கப் பெரும் உதவியாக இருந்தன. ஏனைய படைப்பாளிகளுக்கும் இது போன்ற அநுபவம் இருந்திருக்கும்.

Edited by Manivasahan

ஒரு பேப்பர் தவறுகளை திருத்த முனையிறதிலும் கொஞ்சம் தாமதாவே இயங்கிட்டு இருக்கிறது. அதனால் அவர்கள் தங்களை தாங்களே தரந்தாழ்த்திக் கொண்டு விட்டனர். ஆரம்பத்தில் அவைக்கு மக்களிடமிருந்த வரவேற்பு இப்ப குறைஞ்சிட்டு வருகுது என்றது அவைக்கே தெரியும்..! அது ஏன் என்றும் தெரியும். அதில ஒன்று பகடக்காயாய் செயற்படக் கூடிய சிலரை உள்வாங்கி வைத்திருத்தல். அது வாசகர் பலருக்கும் தெரியும்..! :D:D

ஒரு பேப்பரின் செய்திகள் குறித்த கருத்துப் பகிர்வு அண்மைக் காலமாக புலிகளின் குரல் வானொலியில் கூட இடம்பெற்று வருகிறது. இன்றைய புலிகளின் குரல் நாளிதழ் நாடி நிகழ்சசியில் கூட ஒரு பேப்பர் செய்திகள் சேர்க்கப்பட்டிருந்தன. புலத்திலிருந்து எத்தனையோ பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் புலிகளின் குரல் நாளிதழ் நாடி நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரேயொரு புலத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை (நானறிந்த வரையில்) ஒரு பேப்பர் தான்.

அது மட்டுமன்றி அண்மையில் ஒரு தனியார் நிறுவனமொன்று நடத்திய கருத்துக் கணிப்பில் கூட பெரும்பான்மையான மக்கள் வாசிக்கின்ற பத்திரிகையாக ஒரு பேப்பர் இருப்பதை அறிந்தேன். எந்த அடிப்படையில் நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.

http://www.iomlondon.org/doc/mapping/Sri%2...al%20Report.pdf

11ம் பக்கத்தில் இங்கிலாந்துப் பத்திரிகைகள் தொடர்பான விபரங்கள் இருக்கின்றன.

Edited by oviyan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரியவர் சொன்னார் யதார்த்தவாதி பொதுசன எதிரி என்று. உங்களின் பதில் அதற்கு சான்று..! :D

அதற்காக தங்களைத் தாங்களே யதார்த்தவாதி என்று செப்புவது கொஞ்சம் ஓவர்¬ :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேப்பரின் செய்திகள் குறித்த கருத்துப் பகிர்வு அண்மைக் காலமாக புலிகளின் குரல் வானொலியில் கூட இடம்பெற்று வருகிறது. இன்றைய புலிகளின் குரல் நாளிதழ் நாடி நிகழ்சசியில் கூட ஒரு பேப்பர் செய்திகள் சேர்க்கப்பட்டிருந்தன. புலத்திலிருந்து எத்தனையோ பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் புலிகளின் குரல் நாளிதழ் நாடி நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரேயொரு புலத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை (நானறிந்த வரையில்) ஒரு பேப்பர் தான்.

அது மட்டுமன்றி அண்மையில் ஒரு தனியார் நிறுவனமொன்று நடத்திய கருத்துக் கணிப்பில் கூட பெரும்பான்மையான மக்கள் வாசிக்கின்ற பத்திரிகையாக ஒரு பேப்பர் இருப்பதை அறிந்தேன். எந்த அடிப்படையில் நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.

குறித்த தனியார் நிறுவனம் பற்றிய தகவல்களையும் கருத்துக்கணிப்பு முடிவையும் இங்கு வெளியிட முடியுமா..??!

புலிகளின் குரல் செய்தி அறிக்கையே புதினம் இணையத்தளத்தில் இருந்துதான் புகலிடம் சார்ந்த பல செய்திகளை வாசிக்கிறது. அப்படி இருக்க இணையத்தில் கிடைக்கக் கூடிய ஒரு பேப்பர்.. புலிகளின் குரலின் பார்வைக்கு இலக்காவது ஒன்றும் அதிசயமான காரியமல்ல.

ஒரு பேப்பர் என்பது ஒரு பத்திரிகையையே அல்ல. குறைந்தது 50% ஆக்கங்கள் விளம்பரம். 25% இணையத்தில் சுட்டவை. மிகுதி 25% ஒரு சிலரை வைத்து குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டல் நடக்கிறது..?! ஆங்கில மெற்றோ பத்திரிகையோடு ஒப்பிடும் போது ஒரு பேப்பரின் நிலை..???! :D

நான் நினைக்கிறேன்.. ஈழமுரசு ஒரு பேப்பரை விட அதிக எண்ணிக்கையில் வாசிக்கப்படுகிறது என்று. ஏனெனில் ஒரு பேப்பர் கிடைக்காத இடங்களிலும் ஈழமுரசு கிடைக்கிறது. எப்பத்திரிகை சுற்றில் அதிகம் இருக்கிறதோ அதற்கு வாசகர் வட்டமும் அதிகம் இருக்கும்..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பல படைப்பாளிகளுக்கு தங்கள் படைப்புகளை அறிமுகம் செய்யும் இடமாக யாழ் இணையம் இருந்திருக்கிறது. இருந்து கொண்டு இருக்கிறது.

என்னுடைய கவிதைகள் பலவற்றிற்கு பல ஆக்கபூர்வமான விமர்சனங்கள் தனிமடல் மூலம் கிடைத்தன. அவை எனக்கப் பெரும் உதவியாக இருந்தன. ஏனைய படைப்பாளிகளுக்கும் இது போன்ற அநுபவம் இருந்திருக்கும்.

யாழுக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது. அதற்கு என்று ஒரு தனி இடமிருக்கிறது. அப்படி இருக்க... ஒரு பேப்பரில் யாழைப் பற்றி தேவையற்ற வகையில் 4000 அங்கத்தவர்களை தன்னகத்தே கொண்டு விறுவிறுப்பாக இயங்குகிறது என்ற மாயைத் தோற்றம் அவசியமில்லை என்பதே என் கருத்து.

ஒரு பேப்பர் யாழில் இருந்து பல ஆக்கங்களைத் திருடிப் போட்டு.. அதன் மூலத்தைக் கூட போட மறந்திருந்த காலமும் உண்டு. ஆக்கியோரின் பெயரைக் கூட மாற்றிப் போட்டு.. செய்த கூத்துகளுக்கு இப்போ யாழுக்கு மரியாதை செய்வதாக.. அதனை தரம் தாழ்த்தும் வகையில் சில மிகைப்படுத்தல்களை குறித்த செய்தியில் இட்டதையே நான் இங்கு தவறென்று சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

ஒருவேளை இவ்வாக்கத்தில் ஒரு பேப்பர் தான் விட்ட தவறுகளுக்காக யாழிடம் மன்னிப்புக் கேட்டிருப்பின் அது வாசகர்களுக்கு யாழின் தரத்தை இன்னொரு படி உயர்த்திக் காட்டி இருக்கும்..!

அதுமட்டுமன்றி யாழ் தமிழ் தேசிய வளர்ப்பூடகம் என்ற பிரகடனம்... அதற்கு அவசியமா என்பதும்.. அதற்கான தகுதிநிலை யாழுக்கு இப்போ இருக்கா என்பதும் வினாக்குறி.

மற்றும் படி யாழ் படைப்பாளிகளை உருவாக்கினது.. இணைய வழி தமிழ் மொழியாற்றலை ஊக்குவிக்கிறது.. இவற்றை யாரும் மறுக்கவில்லை..! யாழைப் பற்றிய ஒரு மாயை சமூகத்தில் விதைத்து எதிர்பார்ப்புக்களை அதிகரித்து அதை அது வழங்காத போது அல்லது பூர்த்தி செய்யாத போது ஏற்படும் ஏமாற்றம் யாழுக்குத்தான் இழுக்காகுமே தவிர.. யாழைப் பற்றி ஒரு பேப்பரில் எழுதியவருக்கோ.. அதை வெளியிட்டவைக்கோ அதிகம் இழுக்கு வராது. காரணம் அவை இப்படிப் பலதை எழுதி நாறிக் கிடக்கினம் என்பதால்..! :D

Edited by nedukkalapoovan

யாழின் வளர்ச்சியைச் சொல்லும் தரவுகள்.

தமிழ்மணத்தோடு ஒப்பு நோக்கிய வரைபு.

2003 ஆம் ஆண்டில் இருந்து 2008 வரை.

yarlvsthamizmanamln0.jpg

rankyarlvsthamizmanamha9.jpg

Yarl.com users come from these countries:

Switzerland14.3%

United Kingdom12.4%

Germany12.2%

Canada8.0%

Norway7.6%

Singapore5.8%

Sri Lanka5.8%

United States5.2%

France4.9%

India3.9%

Bahrain3.4%

Finland2.7%

Qatar2.7%

Netherlands2.4%

Malaysia1.7%

Kuwait1.4%

United Arab Emirates1.2%

Australia1.0%

South Korea0.8%

Hong Kong0.8%

Denmark0.3%

Belarus0.2%

Iraq0.2%

Thailand0.2%

Other countries0.8%

Yarl.com traffic rank in other countries:

Sri Lanka663

Switzerland665

Norway1,072

Bahrain3,14161

Iraq3,348

Finland323903,97716

United Kingdom4,7005299

Qatar4,18591

Singapore5,012

South Korea7,555

Canada8,4929055

Germany8,4484173

Kuwait1367,267

Denmark17,400

UnitedArabmirates18,33460

India5319,257

Malaysia240339314613041645,952

Netherlands21,070

Belarus22,483

Australia85722557,9575365827152

France33,472381714

Hong Kong4031,19922

United States72482,228

Thailand193,139

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில மாதங்களில் யாழ் மற்றும் தமிழ்நாதம் ( தமிழ் தேசியத்துக்காக பல தரப்பட்டவர்களின் ஆக்கங்களையும் தாங்கி வரும் இணையத்தளம். எண்ணிக்கை காட்டும் அளவுக்கு கருத்துக்களம்.. அல்லது கருத்தாளர்களை கொண்டிராதது. ஒரு சிலரின் முயற்சியில் இயங்குவது) இடையே உள்ள போக்கு..!

yarl1dr2.jpg

யாழுக்கு வயது 10 தமிழ்மணத்துக்கு 4 அல்லது 5. ஆனால் தமிழ்நாதம் மற்றும் யாழுக்கு வயது கிட்டத்தட்ட ஓரேயளவு. யாழ் கருத்துக்களத்தை வைத்திருக்கிறது. தமிழ்நாதம் அப்படியன்று. :D

Edited by nedukkalapoovan

alexa வின் இணையத் தமிழ்த் தளங்களுக்கான தரவரிசயில் யாழ்க் களம் 13 ஆவது இடத்தில் இருக்கிறது.

(இதில் வீரகேசரி,தினமலர்,ஆனந்தவிகடன் என்பனவற்றோடு)

2001 ஆம் ஆண்டில் இருந்து யாழின் வளர்ச்சி.

from2001yarlvstamizmanamd6.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.