Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணை மடுவில் விமானத் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பயன்படுத்தும் கட்டடத் தொகுதி மீது இன்று காலை விமானத் தாக்குதல்

Monday, 28 April 2008

இரணமடு பகுதியில் புலிகளின் விமான ஓடுபாதைக்கு அருகில் காட்டுப் பிரதேசத்தில் புலிகளால் பயன்படுத்தப்பட்டுவந்த கட்டத் தொகுதியொன்றின் மீது இன்று காலை விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் என்றூ விஜேசூரிய தெரிவித்தார்.

இன்று காலை; 9.15 மணியளவில் விமானப்படையின் ஜெட் விமானங்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளன. இதன் காரணமாக கட்டடத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் புலிகள் தரப்பில் ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி அறிய முடியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ajeevan.ch/content/view/2252/1/

Edited by கறுப்பி

இப்படியான செய்திகள் நமக்கு தேவையா? சிறீ லங்கா அரசின் பொய் பிரச்சாரம் செய்ய ஆயிரக்கணக்கில் இணையங்கள் இருக்கையில் நாமும் அவற்றை மீட்பது அவர்களின் பிரச்சார உத்திக்கு பலம் கொடுப்பதே!

அவர்கள் நமது செய்திகளை இருட்டடிப்பு செய்கையில் நாம் அவர்கள் கொடுக்கும் பிரச்சார செய்திகளுக்க முன்னுரிமைகொடுப்பது முட்டாள்தனம்.

நம் பலத்தை நமது செய்திகளை பலமொழிகளில பல்வேறு ஊடகங்களில் மீள மீள கொண்டு வருவதே நம்மை பலப்படுத்தும்!

அண்ணை பொண்ட்

ஏன் இந்தச் செய்தியில் என்ன தவறு?

ஏன் முட்டையில் மயிர் புடுங்குகிறீர்கள். இந்தச் செய்தி முழுமையாக வான்படைப் பேச்சாளரை மேற்கோள் காட்டித்தானே எழுதப்பட்டிருக்கிறது.

எந்த செய்தியானாலும் அதை வாசிப்பவர்கள் அதை சரியாக புரிந்து கொள்ளவேண்டும். இருட்டடிப்பு செய்வது சரியாகாது. அதைவிடுத்து அந்த செய்தியைப்போடக்கூடாது, இந்த செய்தியைப்போடக்கூடாது என்று சொல்வதெல்லாம் பூனை தன் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டது என்று அர்த்தமாகாதது போல் தான்.

இங்கே எவர் எந்த புருடா விட்டாலும் வாசிப்பவர்கள் தெளிவாகவே உள்ளார்கள். இரு பக்கச் செய்திகளையும் பார்க்கும் போதுதான் எமது பலம், பலவீனம் என்பவற்றை நாம் சரியாக புரிந்து கொள்ள உதவும். ஒரு செய்தியை மக்களிடமிருந்து மறைக்க முயன்றால் தான்; அது பற்றிய சந்தேகங்கள் மக்களுக்கு உண்டாகும். சிலசெய்திகளை நாம் இங்கே இருட்டடிப்புச் செய்து விட்டால்; மக்கள் மற்றைய இணையத்தளங்களை பார்க்க மாட்டார்கள் என்றாகிவிடுமா???

அரிவாளை நல்லா மாத்தி மாத்தி போடுங்கையா....

ஒரே பக்கமா போட்டா கூர் மங்கீடும்.

:lol:அரிவாளை ஒரு பக்கம் மாத்திரம் தான் பாவிக்க முடியும். வேண்டுமானால் தீட்டிக் கொள்ளலாம். :)
  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் முந்தி சந்திரிக்கா அம்மையார்.. இஸ்ரேல் குடுத்த லேசர் வழிநடத்திற மிசைல்ஸை வன்னிக்க அடிச்சிட்டு.. அங்க எரியுது.. இங்க எரியுது.. என்று பிலிம்மு காட்டினவா. இப்ப இவர்.

எங்களுக்க ஒருதரப்பு.. எப்பவும் இருக்குது. நியாயம் அநியாயம் சொல்ல. ஆனால் சிங்களவன் செய்யுற அநியாயங்களை வெளில சொல்லாயினம்.

அங்க என்னடான்னா.. தலைவர் போராட ஆரம்பிச்சாப் பிறகு அதை வைச்சு அசைலம் அடிச்ச பொண்டுகள்.. தேசிய தலைவரைப் பற்றி புலம்பெயர்ந்து இருக்கிற திண்ணையில இருந்து பறையினம்.. இஞ்ச என்னடான்னா.. எவனோ களத்தில நின்று சவால்களை சமாளிச்சு.. எதிரியை தடுத்து நிறுத்தப் பாடுபடுறான்.. நாங்க இப்பதான்.. சம்பவங்களை செய்தியாக்கி.. அதில சந்தோசப்படுறது.. துக்கப்படுறதும்.. நியாய அநியாயம் என்றும் பேசுறம்..! இத்தளவுக்குத்தான் எங்க இன உணர்வு.. தாயக விடுதலை உணர்வு..!

புலிகளின் குரலே இப்ப செய்திகளை சொல்லுறதில்ல. அதுவே.. இணையத்தளங்களில வாற செய்தியைத்தான் சொல்லுது. புலியே.. அப்படி செய்யுது. அது சும்மா செய்யல்ல... என்றதை மட்டும் புரிஞ்சு கொள்ளுங்கோ.

அஜீவன்.. யு என் பி சார்பு.. லங்காஈ நியூஸ் அரசுக்கு எதிராக முக்கியப்படுத்தும் செய்திகளை அடிப்படையா வைச்சு தமிழ் மக்கள் மகிழ்ச்சிக்கடலில் குளிக்க செய்தி தருகிறார். இதே ஆட்சி மாறும் போது அஜீவன் மாறுராரோ தெரியாது.. லங்கா ஈ நியூஸின் சுருதி மாறும்..! :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன்.. யு என் பி சார்பு.. லங்காஈ நியூஸ் அரசுக்கு எதிராக முக்கியப்படுத்தும் செய்திகளை அடிப்படையா வைச்சு தமிழ் மக்கள் மகிழ்ச்சிக்கடலில் குளிக்க செய்தி தருகிறார். இதே ஆட்சி மாறும் போது அஜீவன் மாறுராரோ தெரியாது.. லங்கா ஈ நியூஸின் சுருதி மாறும்..! :D:lol:

:):):D அரசியலில் இது எல்லாம் சகயம்

இப்படியான செய்திகள் நமக்கு தேவையா? சிறீ லங்கா அரசின் பொய் பிரச்சாரம் செய்ய ஆயிரக்கணக்கில் இணையங்கள் இருக்கையில் நாமும் அவற்றை மீட்பது அவர்களின் பிரச்சார உத்திக்கு பலம் கொடுப்பதே!

அவர்கள் நமது செய்திகளை இருட்டடிப்பு செய்கையில் நாம் அவர்கள் கொடுக்கும் பிரச்சார செய்திகளுக்க முன்னுரிமைகொடுப்பது முட்டாள்தனம்.

நம் பலத்தை நமது செய்திகளை பலமொழிகளில பல்வேறு ஊடகங்களில் மீள மீள கொண்டு வருவதே நம்மை பலப்படுத்தும்!

செய்திகளை செய்திகளாக தர வேண்டியது ஊடகமொன்றின் பொறுப்பு.

அது யார் சொல்கிறார்களோ அதை அப்படி சொல்லும் போது

மக்கள் அது உண்மையா பொய்யா என்று புரிந்து கொள்கிறார்கள்.

புரிந்து கொள்வார்கள்!

அதற்காக அதை மறைக்க புரட்ட அவசியமில்லை.

அது அவர்களது கருத்து.

எமது கருத்து அல்ல!

ஆரம்பத்தில் நம்பகம் இல்லாவிட்டாலும்

காலப் போக்கில் அது சாத்தியமாகும்.

இன்றைய பிசுபிசுப்பை விட

நாளைய நிலைதான் முக்கியமானது.

துரோகியை விட எதிரி நம்பகமானவன்!

ஒரு சிலர் மக்களை மடையர்களாக நினைக்கிறார்கள் போலும்?

ஒருவர் தொடர்ந்து பொய் சொன்னால்

அதை ஏற்றுக் கொள்வார்கள் என்றும் நம்புகிறார்கள் போலும்?

உங்கள் ஆத்திரம் எமக்கு புரிகிறது.

அரசோடு கைகுலுக்கி புலியாக பவனி வந்து

முடக்கப்பட்டால் ஆத்திரம் ஏன் வராது? :lol:

நீங்கள் பாவம்?

007 முன்னைய செய்தியின் படம் குறித்து கருத்துகளை முன் வைத்தீர்கள்.

அது மிக அபத்தமான ஒரு கருத்து.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry404714

தயவு செய்து ஆபிரிக்காவில் எடுத்த புகைப்படங்களை எமது செய்திகளுடன் இணைத்து நமது போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்..............இந்தப் படத்தின் பின்புல அரசியலை தயவு செய்து கவனத்தில் எடுங்கள்!

என்று எழுதினீர்கள்.....

படத்தில் இருப்பது தமிழீழ தேசியத் துணைப் படை வீரர்கள்.

ஒரு சில ஆண்டுகளிற்கு முன்னர் இப்படம் பன்னாட்டு முகவர் செய்தி நிறுவனம் ஒன்றினால் எடுக்கப்பட்டது.

தேசியத் துணைப்படை வீரர்களின் மேலதிக படங்களிற்கு:

http://aruchuna.net/categories.php?cat_id=63

மின்னல் எழுதிய தெளிவான பதிலுக்கு பின்னர் மீண்டும் இப்படி எழுதினீர்கள்.

இங்கு மின்னலுக்கு என் நன்றிகள். ஏனைய நியாயமாக கருத்துகளை எழுதும் நண்பர்களுக்கும்.

சரி! அப்ப செய்தி சொல்லுது புலிகள் இராணுவம் மோதல் என்று! அனால் இந்தப் படம் யாரை குறிப்பிடுகிறது!

மன்னாரில் கருணா குழு இல்லை! துணை இராணுவப்படையும் இல்லை!

புலிகள் எதிர் தாக்குதல் நடாத்துகிறார்கள் என்ற செய்தியே இந்த செய்தியின் முக்கிய செய்தி! அப்ப படம்???

தங்கள் உள்நோக்கம் என்ன என்பது நன்கே புரிகிறது திரு அஜீவன் அவர்களே! வாழ்க உங்கள் பணி!!!!

உண்மையைக் கூட ஏற்றுக் கொள்கிற மனப் பக்குவம் இல்லாமல்

புழுங்கி தாங்கள் மேலும் உங்கள் பாண்டியத்தை காட்டி எழுதப் போய்

உங்கள் தேசியவாத அறிவை சூன்யமாக்கி காட்டினீர்கள்?

"தமிழீழ தேசியத் துணைப் படை வீரர்கள் படம்" என்று மின்னல் எழுத

"மன்னாரில் கருணா குழு இல்லை! துணை இராணுவப்படையும் இல்லை!" என்று 007 எழுதியதிலிருந்து

தமிழீழ தேசியத் துணைப் படை வீரர்கள் குறித்து மட்டுமல்ல

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்தும் உங்கள்(007) அறிவு எவ்வளவு விசாலமானது என்பது யாருக்குத்தான் புரியாது? :)

நான் அது குறித்து அப்போது விவாதிக்காமல் விட்டு விட்டேன்.

ஐயா 007

தமிழீழ தேசியத் துணைப் படை வீரர்கள் என்பது அங்குள்ள மக்கள்,

விடுதலைப் புலிகளுக்கு உதவியாக பல வழிகளில் கரம் கொடுக்கும் சொத்துக்கள்.

விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்புகளை நல்க பயிற்சி பெற்று வாழும் தமிழீழத்தின் சாதாரண மக்கள்.

தமிழர் என்றால் விடுதலைப் புலிகள்

விடுதலைப் புலிகள் என்றால் தமிழர் என்று சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்ல

புலம் பெயர் நாடுகளில் வேற்று நாட்டவர் கூட

தமிழரை பார்த்து "டமில் டைகர்" என அழைக்கிறார்கள்.

தங்களைப் போன்றவர்கள் இன்னும் விளங்காமல் இருக்கிறீர்கள்?

தங்களுக்கு தாயகத்தில் உள்ள ஒரு அங்கம் குறித்துக் கூட

தெளிவு இல்லாமல் இருக்கிறது?

இதற்குள் உங்கள் வியாக்கியானம் வேறு?

007 உங்களுக்கு எது (தவறாகத்தான் படும்) சரியாக படுகிறதோ எழுதிக் கொள்ளவும்.

நீங்கள் தெரிந்து கொள்ள இன்னும் அதிகம் இருக்கிறது.

உங்களுக்காக பசுத் தோல் போர்த்த வேண்டிய அவசியம் எமக்கில்லை.

புலிகள் தெளிவாக இருக்கிறார்கள்.

இந்த எலிகளால் பெரும் தொல்லையப்பா! :)

Edited by AJeevan

சரி எல்லாரும் நல்லா விளாசி தள்ளுங்கோ! பத்திரிகை தர்மம், ஊடக சுதந்திரம் மொட்டை, மயிர் எண்டு எழுதிற நீங்கள், நமது எத்தனை செய்திகள் திரிக்கப்பட்ட திருநீறாக்கப்பட்டு எழுதுகிறார்கள். அதை பற்றி யாரும் கதைக்க வேண்டாம்.

இன்று நமது போராட்டத்தை நசுக்கவும் மக்கள் மத்தியல் குளப்பத்தை ஏந்படுத்தவுமே சிறீ லங்கா அரச சார்பு ஊடகங்கள் தமது செய்திகளை திரித்து திருநீறாக்கி நமக்கு தருகிறார்கள். அதை நாம் நமது செலவில் ஊர் முழுக்க தம்பட்டம் அடிப்பம்.

தமிழ் நெற் செய்திகளை மேல் கோள் காட்டி சிறீ லங்hகவில் இருந்து எத்தனை அரசு சார் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன? சிங்கள இனவாதிகள் தமிழ் நெற்றை அங்கு தடைசெய்துள்ளார்கள்.

நாம் அரச சார்பற்ற செய்திகளை திரும்ப போடுவது பத்திரிகை தர்மம்! இனவாதிகளால் பூசி மெழுகிய செய்திகளை போடுவது என்ன தர்மம்?

அரச சார்பு ஊடக கவிகளாக தேனி, இலையான், செருப்பு, நெருப்பு, பருப்பு, அதிரடி, செருப்படி, தூ, சூ, போ, வா, புளட், குளட், நம்நாடு, பும்நாடு, ஈபீஈஆர் எர்.எப், ஈஅடிச்ச எல்உப், பிள்ளiயான் பிரதி, தினமுரசு, பனைஉரசு, ஆனந்தசங்கரி, ஆனந்தமில்லாசொங்கரி, இப்பிடி மூச்சுமுட்ட இருக்கிற இணையங்கள் இந்த செய்தியை நல்லா போடட்டும். நாங்கள் எங்கடை செய்தியை , ஊர்ஜிதம் செய்த செய்திகளை போடுவம்.

சரி நீங்கள் அழியிறன் பந்தயம் படி என்டா ஒவ்வரு நாளும் டிபன்ஸ் டொட் எல்கேயை நல்லா மொழிபெயரந்து போடுங்கோ1 அதுவும் பத்திரிகை சுதந்திரம் தானே!

மறக்காமால் அந்த இணையத்திற்கு கோமாளி டொட் கொம் என்டு பெயரும் வையுங்கோ சிறப்பாக இருக்கும்!!

தமிழீழ தேசியத் துணைப் படை வீரர்கள் படம் நல்லா தான் காட்டிறியள்!

மற்றது உங்கடை விளக்கங்களுக்கும் நன்றி!

உங்களை விடவா? :D

இத்தனை தளங்களும் இருப்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும்!

எல்லாத்தையும் வாசித்ததால் வந்த வினை!

எந்த தளத்தின் செய்தி சரி என்று நீங்கள் சொல்லவில்லையே?

அதை ஒருக்கா சொல்லுங்கோ?

நல்லதை சொல்லுங்கோ

அதை விட்டுட்டீங்கள் :lol:

நன்றி!

ஐயா! நான் யாருடனும் கோவிக்கவில்லை அனால் யதார்த்தததை தான் கூறினேன்! நாம் அவர்கள் விடும் செய்திகளை தணிக்கை செய்ய வேண்டும்! அவர்கள் செய்திகளை வெளியிடுவது நமது போராட்டத்தை நசுக்கவே! தொடர்ச்சியான பொய்கள் உண்மையாகும்! நம்மை பலரும் பயங்கரவாதிகள் என்றுதான் படடியல் போடுகிறார்கள். நாம் ஜனநாயகம், ஊடக சுதந'திரம் பற்றி பேசினால் நமது போராட்டம் பயங்கரவாதமாகவே தெரியும்! ஒரு விடுதலைப் போராட்டத்தில் ஒரு வித சர்வாதிகாரம் இருக்கத்தான் வேண்டும்! தொழிலாளர்கள் புரட்சியை எப்படி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று இடது சாரிகள் கூறுகிறார்களோ அது போல நமது போராட்டதிலும் தேசிய விடுதலைச் சர்வாதிகாரம் இருக்கவேண்டும்! நன்றி வணக்கம்!

அரிவாளை அப்படியே மாத்தி மாத்தி பொடுங்கோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரிவாளை அப்படியே மாத்தி மாத்தி பொடுங்கோ...

என்னாச்சு உங்களுக்கு அரிவாள்ளயே நிக்கிறிங்க...

அதுக்கு மேல போக மாட்டேன்கிறிங்க...

சாதரணமா நீங்கதான் கலக்குவீங்க...

என்னாச்சு....சூறாவளி???

ஒருத்தன் போடுறான் மத்தவன் ஏசுறான்

மத்தவனை ஏசுறா எண்டு இன்னொருத்தன் ஏசுறான்...

ஆனா எல்லாரும் ஒற்றுமையா விடுதலையை புடுங்குங்கோ எண்டும் சொல்லுறாங்கள்...

உவங்களுக்கு வேறென்ன சொல்ல சொல்லுறியழ்?

ஐயா! நான் யாருடனும் கோவிக்கவில்லை அனால் யதார்த்தததை தான் கூறினேன்! நாம் அவர்கள் விடும் செய்திகளை தணிக்கை செய்ய வேண்டும்! அவர்கள் செய்திகளை வெளியிடுவது நமது போராட்டத்தை நசுக்கவே! தொடர்ச்சியான பொய்கள் உண்மையாகும்! நம்மை பலரும் பயங்கரவாதிகள் என்றுதான் படடியல் போடுகிறார்கள். நாம் ஜனநாயகம், ஊடக சுதந'திரம் பற்றி பேசினால் நமது போராட்டம் பயங்கரவாதமாகவே தெரியும்! ஒரு விடுதலைப் போராட்டத்தில் ஒரு வித சர்வாதிகாரம் இருக்கத்தான் வேண்டும்! தொழிலாளர்கள் புரட்சியை எப்படி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று இடது சாரிகள் கூறுகிறார்களோ அது போல நமது போராட்டதிலும் தேசிய விடுதலைச் சர்வாதிகாரம் இருக்கவேண்டும்! நன்றி வணக்கம்!

நீங்கள் கோப்பட்டால் கூட எமக்கு பிரச்சனையில்லை.

அதனால் பாதிப்படைவது நீங்கள்தான் ஐயா! :D

நாம் அவர்கள் விடும் செய்திகளை தணிக்கை செய்ய வேண்டும்! என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

அரசு

ஊடகங்களை பேச விடாமல் தணிக்கை செய்கிறது என குரல் கொடுக்கிறோம்.

அது இப்போது அங்கே நடக்கிறது.

அப்படியானால் நாம் நினைப்பது போல் அவர்கள் நினைப்பதும் சரி என ஏற்றுக் கொள்ள நேரிடும்?

அது சரியா?

இது சரி என்றால் அதுவும் சரி?

ஊடகங்கள் நீதிமன்றம் போன்றது.

வாதியும் பிரதிவாதியும் தமது நிலைகளை விளக்கலாம்.

அதை கேட்டு நீதி வழங்குவது நீதிபதியின் கடமை!

ஊடகங்கள் என்பது

நடப்பதை மக்கள் முன் படைக்கும் ஒன்று.

சரியா தப்பா என

தீர்ப்பு வழங்குவது மக்கள்.

மக்கள்தான் நீதிபதி!

அல்லது வாசகர் என்று சொல்லலாம்.

இரு பக்க செய்திகளையும் முன் வைக்்காத

அப்படி இல்லாத ஊடகங்கள்

கட்சி பத்திரிகை அல்லது அவர்களது கொள்கை விளக்க தளம்.(இணையம்)

நாம் வெல்வதை மட்டுமே சொல்கிறோம் எழுதுகிறோம் என்றால்

நாம் ஏன் தொடர்ந்து அஞ்ச வேண்டும்.

அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள் என்று எழுத வேண்டும்.

நமது வெற்றிகளை மட்டுமே பிரசுரிக்கலாமே!

அப்போ

நாம்தானே நிலையாக நிற்கிறோம் என்று உலகம் நம்பும்.

உதாரணத்துக்கு கெகெலிய ரம்புக்வேல :lol: ?

பொது ஊடகத்துக்கும்

ஒரு பிரசார ஊடகத்துக்கும் பெரும் வித்தியாசங்கள் உண்டு.

அது சரி

நான் கேட்ட இந்தக் கேள்விக்கு பதில் என்ன?

எந்த தளத்தின் செய்தி

சரி என்று நீங்கள் சொல்லவில்லையே?

அதை ஒருக்கா சொல்லுங்கோ?

இதற்கு பதில் தராவிட்டால்

உங்கள் எண்ணப்படி ஒரு ஊடகமும் இல்லை

என்றே நினைக்க தோன்றும்?

Edited by AJeevan

எல்லாரும் சொல்லுங்கோ

எல்லாரும் எழுதுங்கோ

ஆனா ஒண்டு கேக்கிறவன் கேனையனா இருந்தா

எலிகூட ஏரோபிளேன் ஓட்டுமாம்..

ஆண்ணோய்.. !! ஞாயத்துக்கும் அனியாயத்துக்கும் இடையில நடு நிலை எண்டு ஒண்டுமில்லை...

எல்லாரும் சொல்லுங்கோ

எல்லாரும் எழுதுங்கோ

ஆனா ஒண்டு கேக்கிறவன் கேனையனா இருந்தா

எலிகூட ஏரோபிளேன் ஓட்டுமாம்..

ஆண்ணோய்.. !! ஞாயத்துக்கும் அனியாயத்துக்கும் இடையில நடு நிலை எண்டு ஒண்டுமில்லை...

007

நான் கேட்ட இந்தக் கேள்விக்கு பதில் என்ன?

எந்த தளத்தின் செய்தி

சரி என்று நீங்கள் சொல்லவில்லையே?

அதை ஒருக்கா சொல்லுங்கோ?

Rajapaksa strengthens ties with Iran

[TamilNet, Tuesday, 29 April 2008, 10:24 GMT]

Iranian President Dr. Mahmoud Ahmadinejad who arrived in Colombo Monday night on a two-day visit to Sri Lanka, after his 4-hour mission to Pakistan, was scheduled to inaugurate two major projects, a hydro power plant in Moneragala and an aviation oil refinery, in Sri Lanka with USD 2 billion funding from his country. Ahmadinejad is scheduled to meet Indian Prime Minister Manmohan Singh during a brief five-hour visit en route from Colombo back to Tehran, on Tuesday, as media reports in India said that the Iran issue has cast a shadow over Indo-U.S. relations.

மேலும் :

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=25467

இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

Edited by AJeevan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.