Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நெறித் திருமணம்

Featured Replies

(ஒரு பேப்பரில் திரு. இரவி அருணாச்சலம் எழுதிய கட்டுரை)

அபூர்வமான அனுபவம் அடைந்தேன்.

நெஞ்சார ஒன்று சொல்கிறேன். சென்ற ஞாயிறு (4-5-08) நடந்த ஒரு நிகழ்வு, என்வாழ்வில் நேர்ந்த மிக அபூர்வமான தருணங்களில் ஒன்று. நெஞ்சு இனிக்க அந்த நாள் என்னில் பதிந்தது. “ஒரு பேப்பர்” இல் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிற வி.சபேசன் (ஜேர்மனி) அவர்கள் கலைநிதியை வதுவை புரிந்த அந்தத் தருணத்தையே மிக்க அபூர்வமான தருணம் என நான் குறிப்பிட்டேன்.

சனிக்கிழமை (3-5-08) காலையில் இராம.கே.நாதன் அவர்களின் மகிழ்வுந்தில், கோபி, பார்த்தி, இளங்கோ, இராம.கே.நாதன் என ஒருபேப்பர்காரன்கள் புறப்பட்டோம். மணிவாசகனை விட்டுப் போவது வருத்தமாக இருந்தது.

பிரகாசமான காலை வெய்யிலில் தெளிவான தார்ப் பாதையில் பயணம் குதுகலத்துடன் அமைந்தது. அரசியல், சினிமா என்று அளவளாவியதில் எட்டுமணிப் பயணம் சோர்வைத் தரவில்லை என்று சொல்லக் கூடாது. இன்பகரமாய் இருந்தது. அப்படித்தான் சொல்ல வேண்டும்.

டோற்முண்டில் சின்ன ஆச்சரியம் ஒன்று. ஒருபேப்பர் இல் அச்சுப் பகுதிக்குப் பொறுப்பாக இருக்கும் குமார் அவர்களை அவர் நடாத்தும் தமிழ்ப்பாடசாலையில் சந்தித்தோம்;;;;. மஞ்சள் வெய்யில் எறிக்கிற மாலைப் பொழுதுக்கு குதூகலமாக இருந்தார் குமார். ஒரு அப்பாவியாக இருப்பார் என நான் எண்ணினால் “அட பாவி” என்று சொல்ல வைத்தார். ஒரு சின்ன எளிமையான நூலகம், கரும்பலகைகளுடன் கூடிய வகுப்பறைகள், மேலாக ஈழத்துத் தமிழ் அறிஞர்களின் புகைப்படங்கள் அவர்கள் பற்றிய விபரங்களுடன் சுவர் நீள இருந்தன. அதுவே எனக்கு மெச்சத்தக்க ஒரு விசயம் என்றாயிற்று. அவர் கைபற்றி முகமன் கூறிப் புறப்பட்டு “ஒபகவுசன்” வந்தோம்.

அதுதான் சபேசனின் வதிவிடம். அங்குதான் அடுத்தநாள் ஞாயிறு சபேசனின் திருமணம் நடந்தது. அதுதான் ஜேர்மனியில் நடைபெறுகின்ற முதலாவது தமிழ் நெறியில் அமைந்த மணவிழா. அதில் அடியேனும் பங்கேற்றேன் என்பது போக மணவிழாவை ஒருங்கிணைந்து நடாத்துபவர்களில் ஒருவனாக இருந்தேன் என்பதுதான் மெத்த மகிழ்ச்சிக்குரிய விசயம். அதாவது, ஒருவிதத்தில் அய்யராயும் அங்கு நான் இருந்தேன்.

இம்மணவிழா இவ்வாறுதான் நிகழ்ந்தது. மணமகன் வந்து ஐந்து நிமிடத்தில் மணமகள் வருகிறார். இல்லத்தரசிகள் இருவர் குத்துவிளக்கு ஏற்றிய பின் மணமக்கள் திருமண உறுதிமொழி எடுக்கின்றனர். பின் மாலை மாற்றப்படுகின்றது. மங்கலநாண் வாழ்த்திற்காக அவையோரிடம் அனுப்பப்படுகிறது. மங்கலநாண் வந்து சேர்ந்த பின் இருவரும் ஒருவர் கழுத்தில் ஒருவர் மங்கலநாண் அணிவிக்கின்றனர். அவ்வமயம் அவையோர் மலர்தூவி வாழ்த்துகின்றனர். பின் மணமக்கள் தம் பெற்றோரிடம் வாழ்த்து வாங்கி நற்கருமம் ஆற்றுகின்றனர். பொதுவான வாழ்த்துரைகள் முடிய மச்சச்சாப்பாடும் உள்ள மதிய விருந்து காத்திருந்தது. மணவிழா இனிது நிறைவேற நாம் மகிழ்வுந்தில் ஏறினோம். மதியவெய்யிலில் இலண்டனை நோக்கிய எமது பயணம் தொடங்கிற்று….

மணவிழா பற்றிய சுருக்கக் குறிப்பு வரைக என்றால், இவ்வாறுதான் எழுத முடியும். ஆனால், அந்த மணவிழா பற்றிச் சொல்ல ஆயிரம் உண்டு. குறிப்பாக சபேசன் அவர்களின் துணிச்சலின் தொடர்வை முன்னெடுக்கும் முனைப்பை வாழ்த்த வேண்டும், வணங்க வேண்டும், போற்ற வேண்டும், புகழ வேண்டும்.

எதற்கும் ஓம் என்று ஒத்துழைத்த ஆரணங்கு கலைநிதியை சபேசனிலும் ஒருபடி மேலே போய்ப் போற்ற வேண்டும். சபேசனுக்கு இதில் ஓர் அன்பு கூறல், ஆணாதிக்கத்தின் சிறு அடையாளமும் இதில் படர்ந்து விடாமல் மிக்க கவனமாகப் பார்க்க வேண்டும.;

தமிழ் மறையான திருக்குறளினாலேயே இம்மணவிழா நிகழ்ந்தது. திருக்குறளில் எத்துணை ஆற்றல் வாய்ந்த வரிகள் உள்ளன என்பது மணவிழாவின் முழுமையில் தெரிந்தது. இம்மணவிழாவில் எந்தவொரு நிகழ்வுக்கும் ஏதோ ஒரு குறள் பொருந்திப் போய்;க் கொண்டிருந்தது. வள்ளுவர் வல்லமை வாய்ந்தவரா? அல்லது நம் தமிழ்மொழி அத்தனை தரம் மிக்கதா?

இரண்டும் தான். இரண்டுமே அல்லத்தான். ஏன் சொல்லுகிறேன் என்றால், பண்பாடு மிக்க நம் தமிழினம் தான் மொழியை இவ்வளவு வளம் பெறச்செய்தது. வள்ளுவரைத் தோன்றச் செய்தது. சிந்தனாவாதியாக்கியது. அற்புதமான பண்பாடு மிகுந்த தமிழ்ச் சமூகம் தான்

வள்ளுவரை உருவாக்கியது. அதனால்தான் அப்படிச் சொன்னேன்.

இம்மணவிழாவில் இன்னொன்று குறிப்பிடத்தகுந்தது. திருமண உறுதிமொழி எடுத்தலிலும், மங்கலநாண்கள் பற்றிய பிரகடனத்திலும் “சரிநிகர் சமானமாக” மணமகன், மணமகள் இருந்தனர். கூர்ந்து கவனித்துச் செய்த நற்காரியம் இது. வாழ்விலும் அது வழிவரும். நம்புகிறேன் நான்.

மணவிழா நிறைவுறுகிற தருணம் இன்னொரு காரியம் இருக்கிறது. சாதாரண கலியாணச்சடங்குகளில் அது, பிராமணர்களுக்கு வழங்குகிற தானமாக நிறைவு பெற்று விடும். ஆனால், இங்கு அது அவ்வாறு நிறைவடைந்ததல்ல. மணமகனும், மணமகளும் மணம் முடிந்ததும் செய்யும் நற்பணி, இவ்வாறு அமைந்தது. தாயகம் காப்போரின் தாள் பணிந்து தாயகவிடுதலைக்கு உதவியாக பொற்குவை ஒன்றைக் கொடுத்தார்கள்.

தமிழ்நெறி முறையில் அமைந்த இத்தகைய மணவிழாக்கள் பெரியாரின் மீள் உருவாக்கத்துடன் 1950 களில் தமிழ்நாட்டில் நடைபெற்றது. 1967 இல் தி.மு.க தமிழ் நாட்டை ஆளத்தொடங்கிய போது பெரியாரின் வழிகாட்டலுடன் அறிஞர் அண்ணா சட்டபூர்வமாகவே இதனை அங்கீகரித்தார். அதுமாத்திரமன்றி, இவ்வாறான சீர்திருத்தத் திருமணங்களுக்கு தமிழ்நாடு அரசு நிதியுதவியும் வழங்கியது.

தமிழீழத்தில் போராளிகளுக்கிடையிலான மணவிழாக்கள் இந்நெறிமுறையிலேயே அமைந்தன. இப்போது புலம்பெயர் நாடுகளில் இது தொடர்வதற்கு கலைநிதி, சபேசன் இருவரும் முன்முனைப்பாளர்கள் ஆகினர் என்பது கூடுதல் மகிழ்வு.

தோழர்களே நுமக்கு நாம் தரத்தக்கது இவையே, இவை கூட கவிஞர் வில்வரத்தினத்திடம்

உவந்து பெற்றது.

“வீறு கொள்

ஓர்மமும் மூச்சும் உமக்குள்ளும் எழுக

விடுதலைப் பறவையின் தொலைநோக்கும்

வீச்சும் உள்வாங்குக விறலோய்”.

Edited by kaviya

  • Replies 180
  • Views 42.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:rolleyes: சபேசன் அவர்களின் திருமண புகைப்படங்களை பார்த்து பொழுதே அறிய முடிந்தது. உணரமுடிந்தது. வாழ்த்துக்கள் சபேசன்.
  • கருத்துக்கள உறவுகள்

*** மங்கலநாண் எனப்படும் தாலி கட்டுவது இவர்களது திராவிடக் கொள்கையா எனக் கேட்டால் அதற்கு ஏன் கோவிக்க வேண்டும்?

****

Edited by வலைஞன்
*** நீக்கப்பட்டுள்ளது - மோகன் | *** நீக்கப்பட்டுள்ளது - வலைஞன்

தூயவனின் கேள்வி நியாயமானது. தாலி திருமணத்திற்கு தேவையில்லை என்ற கருத்தைக் கொண்டிருக்கின்ற நான் என்னுடைய திருமணத்தில் தாலி கட்டினேன் என்று அறிகின்ற போது யாருக்கும் அது பற்றி கேள்வி எழத்தான் செய்யும்.

என்னுடைய திருமணம் பற்றி எழுத விரும்புகிறேன். அதற்கு முன் கள உறவுகளிடம் ஒரு அன்பான வேண்டுகோள்.

உங்களுடைய கேள்விகளையும் கருத்துக்களையும் தயவு செய்து நாகரீகமான முறையில் வையுங்கள். திருமண நிகழ்வு என்பது நான் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. அதை புரிந்து கொண்டு உங்களுடைய சொல்லாடல்கள் அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.

முதலில் என்னுடைய திருமணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த அனைத்து கள உறவுகளுக்கும் என்னுடைய அன்பான நன்றிகள்.

இனி என்னுடைய திருமணம் எப்படி நடந்தது என்று எழுதுகிறேன். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். என்னுடைய திருமணத்தில் தாலி இருந்தது. அது மட்டுமா? பக்திப் பாசுரங்களும் இருந்தன.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனின் கேள்வி நியாயமானது. தாலி திருமணத்திற்கு தேவையில்லை என்ற கருத்தைக் கொண்டிருக்கின்ற நான் என்னுடைய திருமணத்தில் தாலி கட்டினேன் என்று அறிகின்ற போது யாருக்கும் அது பற்றி கேள்வி எழத்தான் செய்யும்.

என்னுடைய திருமணம் பற்றி எழுத விரும்புகிறேன். அதற்கு முன் கள உறவுகளிடம் ஒரு அன்பான வேண்டுகோள்.

உங்களுடைய கேள்விகளையும் கருத்துக்களையும் தயவு செய்து நாகரீகமான முறையில் வையுங்கள். திருமண நிகழ்வு என்பது நான் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. அதை புரிந்து கொண்டு உங்களுடைய சொல்லாடல்கள் அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.

முதலில் என்னுடைய திருமணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த அனைத்து கள உறவுகளுக்கும் என்னுடைய அன்பான நன்றிகள்.

இனி என்னுடைய திருமணம் எப்படி நடந்தது என்று எழுதுகிறேன். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். என்னுடைய திருமணத்தில் தாலி இருந்தது. அது மட்டுமா? பக்திப் பாசுரங்களும் இருந்தன.

இந்தியாவில் என் சகோதரர் திருமணம் செய்தபோது மந்திரங்களு;ககுப் பதிலாகத் தேவாரம் ஓதி சிவவழிபாட்டு முறையினால் திருமணம் செய்தார். ஆனால் அவர் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவரல்ல. கடவுளைத் தூசித்து விட்டு அதே முறையால் திருமணம் செய்கின்ற அளவுக்கு குறைந்தும் போகவில்லை.

அக்னி, நீருக்கள் மோதிரம் தேடுதல் உள்ளட்ட அனைத்து விடயங்களும் இருந்தன. மந்திரங்கள் தவிர்க்கப்பட்டிருந்தன. அவ்வளவு தான். தமிழில் நாளை மந்திரங்கள் இசைநயத்தோடு வந்தால் அதை உள்வாங்கலாம் என்பது தான் என் கருத்து.

அக்னி, நீருக்கள் மோதிரம் தேடுதல் உள்ளட்ட அனைத்து விடயங்களும் இருந்தன. மந்திரங்கள் தவிர்க்கப்பட்டிருந்தன. அவ்வளவு தான். தமிழில் நாளை மந்திரங்கள் இசைநயத்தோடு வந்தால் அதை உள்வாங்கலாம் என்பது தான் என் கருத்து.

தமிழ்த் தேவாரங்கள் திருவாசகங்கள் உள்ளிட்ட பக்திப் பாசுரங்களில் காணாத இசை நயத்தையா சமஸ்கிருத மந்திரங்களில் கண்டுவிட்டீர்கள் தூயவன்.

தமிழ் மறையை நல்ல முறையில் இசைநயத்தோடு சொல்ல முடியும். நாம்எமது தாய்மொழி குறித்த எமது தாழ்வுமனப்பான்மையை நீக்கினால் போதும். அப்பொழுது உங்கள் காதினில் தமிழ் தேனெனப் பாயும்.

தூயவன்!

உங்கள் சகோதரர் தமிழ் நெறித் திருமணம் செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டேன். அவருக்கு என்னுடைய அன்பை தெரிவியுங்கள்.

இப்பொழுது என்னுடைய திருமணம் பற்றிய விடயத்திற்கு வருகிறேன்.

உண்மையில் எனக்கு எந்தச் சடங்குகளின் மீதும் நம்பிக்கை இல்லை. திருமணம் என்ற ஒரு சடங்கைச் செய்யாமலேயே ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ முடியும் என்பது என்னுடைய கருத்து.

அப்படித்தான் என்னுடைய துணைவியாரோடு நான் கடந்த சில வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். (நாங்கள் ஒன்றும் புதுமணத் தம்பதிகள் அல்ல)

ஆயினும் திருமணம் செய்து வாழ விரும்புகின்ற தமிழர்கள் தங்களுடைய திருமணத்தை தமிழ்நெறியில் செய்ய வேண்டும் என்பது என்னுடைய போராட்டங்களில் ஒன்று.

மற்றவர்களை செய்யச் சொல்லிக் கேட்பதை விட அதை நானே முதலில்செய்வதுதான் சரியானது என்று முடிவெடுத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேவாரங்கள் திருவாசகங்கள் உள்ளிட்ட பக்திப் பாசுரங்களில் காணாத இசை நயத்தையா சமஸ்கிருத மந்திரங்களில் கண்டுவிட்டீர்கள் தூயவன்.

தேவாரங்கள் ஆலயங்களில் ஓதலாம் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. ஆயினும் எல்லாக் கடவுளுக்கும் அது பொருத்தமாக இல்லையே. பிள்ளையாரை வழிபடுகின்றவனால் அதை பிள்ளையார் மீது பாடமுடியாதே. தேவாரங்கள் சிவனை வைத்துத் தானே தமிழை வளப்படுத்துப் பாடப்பட்டவை.

எனவே பொதுவாக தேவைப்படும் மந்திரங்கள் தேவைப்படுகின்றன. அவற்றைத் தமிழில் பாடுகின்றபோது இனிமையிருக்க வேண்டும். சும்மா மொழி பெயர்த்தது போல் இருக்கக் கூடாது என்பதையே சொல்ல விளைகின்றேன்

இந்த நேரத்தில் என்னுடைய தாயாரும் ஈழத்தில் இருந்து வந்திருந்தார். அவர் நிற்கின்ற போது என்னுடைய திருமணத்தை கண்டால் மிகவும் சந்தோசப்படுவார் என்பதும் என்னுடைய முடிவுக்கு ஒரு காரணமாக இருந்தது.

நான் வாழும் இடத்தில் உள்ள தமிழர்களுக்கு தமிழ்நெறித் திருமணத்தை அறிமுகம் செய்ய வேண்டும்என்பதே எல்லாவற்றிற்கும் மேலான காரணமாக இருந்தது.

இப்பொழுது தமிழ்நெறித் திருமணம் என்கின்ற போது, அதை எப்படிச் செய்வது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. செய்வது என்று முடிவெடுத்து விட்டேனே தவிர அதை செய்வதற்கான சரியான வழிகாட்டல் உடனடியாக எனக்குக் கிடைக்கவில்லை.

தேடல்களின் மூலம் இரண்டு விதமான தமிழ்நெறித் திருமண முறைகள் எனக்குக் கிடைத்தன.

ஒன்று பக்தி பாசுரங்கள் ஓதிச் செய்வது

மற்றது குறள் ஓதிச் செய்வது

இவற்றை விட பக்திப்பாசுரங்கள், குறள்என்று எதுவும்இல்லாமல்திருமண உறுதிமொழியை மட்டும்எடுத்து செய்கின்ற முறையும் இருக்கிறது.

இவற்றில் எந்த முறையில் என்னுடைய திருமணத்தை செய்வது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது

மங்கலநாண் வந்து சேர்ந்த பின் இருவரும் ஒருவர் கழுத்தில் ஒருவர் மங்கலநாண் அணிவிக்கின்றனர் என்றால் என்ன அர்த்தம்....அப்ப இரண்டுபேரும் இப்ப மங்கலநாண் போட்டுக்கொண்டா இருக்கினம்

இங்கே என்னுடைய மனைவியைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவரை நான் சந்திக்கின்ற போது சகலவிதமான மூடநம்பிக்கைகளை கொண்டவராகவும், ஒரு பக்திப் பழமாகவும் விளங்கினார்.

டென்மார்க் லலிதா (அபிராமி), சாய்பாபா போன்றவர்களின் படங்களையும் தன்னுடைய கைப் பைக்குள் வைத்திருந்தார்.

பொதுவாக பகுத்தறிவு பேசுபவர்களின் வீட்டில் உள்ள பெண்கள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. எனக்கும் அப்படித்தான் அமைந்தது.

ஆயினும் என்னுடைய விளக்கவுரைகள் என் மனைவியின் பல மூடநம்பிக்கைகளை இல்லாமல் செய்தன. மனிதர்களை கடவுளாக வணங்குவதை அவர் நிறுத்தியது அதில் முக்கியமானது.

அதே வேளை பெரும்பாலான பெண்கள் போன்று கடவுள்கள் (சிவபெருமான், பிள்ளையார் இன்ன பிற) உண்டு என்று அவர் இன்று வரை நம்புகிறார். இந்தத் தெய்வங்கள் பற்றிய நம்பிக்கையும் அச்சமும் அவரிடம் இருந்து இல்லாமல் போவதற்கு நாளாகலாம். (அதுவரை மக்களுக்கு சொல்வது போன்று அவருக்கும் என்னுடைய விளக்கவுரைகளை சொல்லிக் கொண்டிருப்பேன்)

இப்படி கடவுள் நம்பிக்கையுள்ள அவர் பக்திப் பாசுரங்கள் சொல்லி திருமணம் செய்வதையே மிகவும் விரும்பினார்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் பகிரங்க பிரச்சாரங்கள்:

* ஆணும் பெண்ணும் அவரவர் உணர்ச்சிக்கு திருப்தி ஏற்படும் வகையில் எப்படியும் எவ்வகையிலும் வாழலாம்.

* தாலி என்பது அடிமைச் சின்னம்... தமிழர் பாரம்பரியமல்ல. (அது யார் அணிந்தாலும் சரி)

* சடங்குகள் சம்பிரதாயங்கள் மூடநம்பிக்கையின் பிரதிபலிப்புக்கள்.

* பக்தி என்பது பகுத்தறிவுக்கு எதிரானது.

* பெண் ஆணைச் சார்ந்தவள் அல்ல.

சபேசனின் நிஜ நடைமுறை:

* ஒருவனுக்கு ஒருத்தி என்பதை ஏற்றுக் கொண்டு ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொண்டமை.

* தாலி அல்லது மங்கள நாணை தவிர்க்காமல் அணிந்து கொண்டதன் மூலம் அடிமைச் சின்னத்தை மறுதலிக்காமல் விரிவுபடுத்தியமை.

* தாலியை தமிழர் பாரம்பரியமாகக் காட்டிக் கொண்டமை.

* சடங்குகள் சம்பிரதாயங்களை அம்மாவைக் காட்டி ஏற்றுக் கொண்டமை.

* பக்திக்கு இடமளித்தமை.

* இவ்விடயங்கள் தொடர்பில் தனது துணைவியின் சுதந்திர கருத்துப் பகிர்வுக்கு துளி கூட வகை செய்யாமை.

இவ்வளவு சுய முரண்பாட்டோடு.. நான் தமிழுக்காக தமிழர் பாரபரியத்துக்காகப் போராடுகிறேன்.. என்றால்.. அதன் அர்த்தம் தான் என்ன...???! :wub::rolleyes:

தமிழ் நெறித் திருமணம் செய்வது என்பதில் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் எந்த வித கருத்து வேறுபாடும் வரவில்லை. காரணம் என்னைப் போன்று என்னுடைய மனைவியும் தமிழர்தான். எங்களுடைய தாய் மொழி தமிழ். ஆகவே தமிழர்களாகிய நாங்கள் எங்களுடைய திருமணத்தை தமிழில் செய்வது என்பது வெகு வெகு இயல்பான ஒரு விடயம். வேறு மொழியில் செய்வதுதான் ஒரு "புதுமையான" விடயம்.

ஆனால் எப்படி செய்வது என்பதில் அவருக்கு ஒரு கருத்தும் எனக்கு ஒரு கருத்தும் இருந்தன.

அவர் பக்தி முறையில் செய்ய விரும்பினார். நான் குறள் நெறித் திருமணத்தை விரும்பினேன்.

கடைசியில் இரண்டையும் கலந்து செய்வது என்ற முடிவுக்கு வந்தோம். திருமணம் என்பது இருவர் இணைந்து செய்கின்ற ஒரு நிகழ்வு. அதில் என்னுடைய கருத்தை மட்டும் திணிப்பது எனக்குச் சரியாகப்படவில்லை.

அடுத்ததாக "தாலி" என்கின்ற பிரச்சனை வந்தது

என்னுடைய எந்தக் கொள்கையையும் காற்றில் பறக்க நான் விடவில்லை. அப்படித்தான் எங்களுடைய திருமணம் நடந்தது.

பக்தி நெறித் திருமணத்தில் உள்ள பாடல்களை நான் தேர்ந்தெடுத்தேன். அதில் சிவபெருமானை நேரடியாக குறிப்பிடுகின்ற பாடல்களை நீக்கினேன். அதைப் பற்றி பின்பு சொல்கிறேன்.

இப்பொழுது தாலி விடயத்திற்கு வருகிறேன்.

தாலி கட்ட வேண்டும் என்று என்னுடைய மனைவி விரும்பினாலும், தாலி கட்டுவது இல்லை என்ற முடிவில்தான் நான் இருந்தேன். ஆனால் என்னுடைய முடிவை இரண்டு சம்பவங்கள் மாற்றின.

ஏற்கனவே ஐரோப்பாவில் நடந்த "வடமொழி மறுப்புத் திருமணம" ஒன்றில் கலந்து கொண்ட ஒருவர் அது பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்தத் திருமணம் தாலி இன்றி திருக்குறள் இன்றி திருமண உறுதிமொழியோடு மட்டும் நடந்திருந்தது. அந்தத் திருமணம் பற்றி அவர் சொல்கின்ற போது, அது ஒரு "றிசப்சன்" போல் இருந்தது, திருமணம் போன்று இருக்கவில்லை என்றார்.

அங்கே தாலி கட்டப்படவில்லை என்பதால், அது திருமணம் போன்ற உணர்வை அவருக்குத் தரவில்லை.

இப்பொழுது எனக்குள் சில சிந்தனைகள் எழுந்தன.

எந்தச் சடங்கின் மீதும் நம்பிக்கை இல்லாத நான், எமது மக்கள் தமது திருமணத்தை தமிழில் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் நான் என்னுடைய திருமணத்தை செய்கிறேன். என்னுடைய திருமணத்தில் கலந்து கொள்பவர்கள், என்னுடைய திருமணத்தை ஒரு திருமணமாக உணர்ந்தால்தான் அதைப் பின்பற்ற முன்வருவார்கள். அந்த உணர்வு வராது விட்டால் பின்பற்றுவது பற்றி பரிசீலிக்கக் கூட மாட்டார்கள். என்னுடைய முயற்சி வீணாகி விடும்.

ஆகவே தாலியை கட்டுவோமா என்ற யோசனையில் ஆழ்ந்தேன்.

இந்த நேரத்தில் இரண்டாவது சம்பவமும் நடந்தது.

என்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார். நான் தாலி கட்டாது திருமணம் செய்ய இருப்பதை என்னுடைய நண்பர் ஒருவரிடம் சொன்ன போது அவர் சொன்னார் "அதுதான் சரி, கர்ப்பமாக இருக்கும் போது தாலி கட்டக் கூடாது"

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

அவரோடு நின்றிருந்தால் பறவாயில்லை. ஒரு நேரத்தில் தாலி கட்டக்கூடாது என்ற சமூகத்தின் நச்சரிப்பு அதிகரித்து விட்டது. எம்முடன் திருமணம் பற்றி பேசுபவர்களில் பெரும்பாலனவர்கள் "தெரியும்தானே! தாலி கட்டக் கூடாது" என்று முடித்துக் கொண்டார்கள்.

ஆரம்பத்தில் நாம் இருவரும் தாலி கட்டாது இணைந்து வாழ்வதை கேலி செய்த அதே சமூகம் இப்பொழுது திருமணம் செய்யப் போகும் நேரத்தில் "தாலி கட்டாதே" என்று அடம்பிடித்தது.

எனக்கு இப்பொழுது தாலி கட்டுவதை விட, தாலி கட்டாது இருப்பதுதான் மூடநம்பிக்கைக்கு துணைபோவதாகப் பட்டது.

தாலி பற்றி என்னுடைய கருத்தை நான் பலமுறை இங்கே தெளிவாகக் கூறியிருக்கிறேன்.

தாலி என்பது உலோகத்தால் ஆன ஒரு பொருள். அதை ஒரு அன்புச் சின்னமாக நாம் கொள்ளலாம். அதற்கு மேல் வேறொரு அர்த்தமும் தாலிக்கு இல்லை. தாலிக்கு உயிரே, சக்தியோ, தெய்வீகமோ எதுவும் இல்லை.

என்னுடைய அன்றைய கருத்தும் இதுதான். இன்றைய கருத்தும் இதுதான். அதனால் தாலிக்கு சக்தி, உயிர், தெய்வீகம் போன்றன இருப்பதாக நம்பி சமூகம் எழுப்பிய கூக்குரலுக்கு செவிசாய்ப்பது எனக்கு சரியாகப்படவில்லை.

திருமணத்திற்கு வருபவர்கள் அங்கே ஒரு திருமணம் நடக்கின்றது என்ற உணர்வினைப் பெற வேண்டும் என்பதற்காகவும், தாலி பற்றிய சமூகத்தின் தவறான கற்பிதங்கள் அர்த்தமற்றவை ஆக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தாலியை ஒரு அன்புச் சின்னமாக என்னுடைய மனைவிக்கு அணிவிப்பது என்று முடிவெடுத்தேன்.

எந்தத் திருமணத்திலும் இல்லாதபடி ஒரு விடயத்தை என்னுடைய திருமணத்தில் சேர்த்திருந்தேன்.

அதுதான் தாலி பற்றிய பிரகடனம். அந்தப் பிரகடனம் தாலி பற்றி சமூகம் கொண்டிருந்த அனைத்துக் கற்பிதங்களையும் மறுப்பதாக இருந்தது.

அத்துடன் நான் என்னுடைய மனைவிக்கு தாலி அணிவிப்பது போன்று, அவரும் எனக்கு ஏதாவது ஒன்றை அன்புச் சின்னமாக அணிவிக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர் எனக்கு ஒரு தங்கச் சங்கிலியை மங்கலநாணாக அணிவிப்பது என்று முடிவாகியது.

இப்பொழுது தாலி வாங்கக் கடைக்குப் போனால் இன்னொரு பிரச்சனை. தாலியின் இரண்டு பக்கத்திலும் காசுகளை சேர்ப்பார்கள் அல்லவா? அவற்றைப் பார்த்த போது நான் அதிர்ந்து விட்டேன்.

அந்தக் காசுகளில் இங்கிலாந்து நாட்டு மன்னர்களின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் எனக்கு அன்றுதான் தெரியும். அதனால்தான் எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. தமிழர்களின் திருமணத்தில் எதற்கு இங்கிலாந்து நாட்டு அரசர்கள் வரவேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை.

எமது தாயகத்தில் இருந்து ஆங்கிலேயர்களை வெளியேற்றி, இப்பொழுது சிங்களவர்களை வெளியேற்றப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இப்பொழுதும் ஆங்கிலேய ஆட்சி அதிகாரத்தை ஏற்பது போன்று தாலிகளை அணிய வேண்டுமா?

ஒரு புறம் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லி ஆரியர்களுக்கு நாம் அடிமை என்று சொல்லாமல் சொல்கிறோம். இதில் ஆங்கிலேயர்களுக்கும் அடிமை என்றும் சொல்ல வேண்டுமா?

அந்தக் காசுகளை மறுத்து விட்டு, வேறு தேடினால் அங்கே இந்துக் கடவுள்களின் உருவங்கள் பொறித்தவைதான் இருந்தன.

கடைசியில் பிரத்தியேகமாக "அ" என்றும் "ஃ" என்றும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட காசுகளை செய்யும்படி கடையில் சொல்லிவிட்டு வந்தேன்.

இப்படியான அனுபங்களை சந்தித்து என்னுடைய திருமணம் நடந்து முடிந்தது. இனி திருமணத்தின் நிகழ்ச்சி நிரலை தருகிறேன். தமிழ் நெறித் திருமணங்கள் செய்ய விரும்புபவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

எங்களுடைய திருமணத்தை ஒருங்கிணைத்து நடத்துவதோடு குறள்களை படிக்கின்ற படிக்கின்ற பணியினை திரு இரவி அருணாச்சலம் அவர்கள் செய்தார். குறளுக்கு பொருள் சொல்லும் பணியை உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளராக இருக்கின்ற திரு கணேசலிங்கம் அவர்கள் செய்தார்கள். பக்தி இலக்கியம் சார்ந்த பாசுரங்களை எழுத்தாளரும் நாடகக் கலைஞருமாகிய கதிர்ச்செல்வம் அவர்கள் படித்தார். திருமண உறுதிமொழியை ஈழத்தில் இருந்து வந்திருந்த என்னுடைய மாமனார் (இளைப்பாறிய அதிபர்) வாசித்தார்.

இப்படி நான்கு பேர் "ஐயர்களாக" இருந்தார்கள்.

திருமணம் இப்படி நடந்தது:

1. மணமகன் வருகை

2. மணமகள் வருகை

மணமகள் மேடையில் வந்து சேர்ந்ததும் ஓதுவது:

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை

கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

3. இல்லத்தரசிகள் இருவர் குத்து விளக்கு ஏற்றல்

4. மணமக்களை நோக்கி சொல்லப்படும் மணிமொழி: (மும்முறை சொல்லல்)

மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற

(ஒருவர் தன்னுடைய மனதில் தூய்மையானவராக இருப்பதே அறம். மற்றவையெல்லாம் வெறும் ஆரவாரங்களே)

சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ

நன்றின்பால் உய்ப்பது அறிவு

(மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல் தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்)

5. திருமண உறுதி மொழி எடுத்தல்

இந்தத் திருமண உறுதி மொழியில் மணமகனும் மணமகளும் ஒருவரை ஒருவர் கணவராக ஏற்றுக் கொண்டோம் என்று உறுதி மொழி எடுத்தல் வேண்டும். உயர்விலும் தாழ்விலும் இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்திருப்போம் என்றும் உறுதிமொழி எடுத்தல் வேண்டும்.

நாம் ஏற்கனவே இணைந்து வாழ்வதால், நாம் ஒருவரை ஒருவர் கணவன் மனைவியாக வரித்துக் கொண்டோம் என்று அவையோர் முன்பு பிரகடனம் செய்வதாகக் குறிப்பிட்டோம். திருமணம் செய்பவர்கள் இந்த உறுதிமொழியினை தமக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளலாம்.

மிகுதியை நாளை வந்து எழுதுகிறேன்.

அடடா இதுகள பார்த்தால் வாழ்கையில திருமணமே செய்யாமல் இருக்கலாம் போல இருக்கிதே? தமிழ் திருமணங்களில பாயாசம் வடை எல்லாம் இருக்கிதோ? இல்லாட்டி சிரட்டையில ஒடியல் கூழ் தான் ஊத்துவீங்களோ? அதையாவது கொஞ்சம் சொல்லுங்கோ.

எனக்கு என்னமோ எண்ட பகுத்தறிவை பாவிச்சு பார்த்தால் திருமணம் செய்வதே சரியாக தெரிய இல்ல.

குத்துவிளக்கு வேற ஏத்துறீங்கள் சூழல் மாசுபடாதா? சோலார் பவர் பாவிக்கலாமே? நெடுக்காலபோவான் பகுத்தறிவாளர்களின் தமிழ் திருமணங்களில சூழல் மாசுபடாது இருக்கிறதுக்கு கொஞ்சம் வழிமுறைகள் இருந்தால் சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

தாலி பற்றி என்னுடைய கருத்தை நான் பலமுறை இங்கே தெளிவாகக் கூறியிருக்கிறேன்.

தாலி என்பது உலோகத்தால் ஆன ஒரு பொருள். அதை ஒரு அன்புச் சின்னமாக நாம் கொள்ளலாம். அதற்கு மேல் வேறொரு அர்த்தமும் தாலிக்கு இல்லை. தாலிக்கு உயிரே, சக்தியோ, தெய்வீகமோ எதுவும் இல்லை.

என்னுடைய அன்றைய கருத்தும் இதுதான். இன்றைய கருத்தும் இதுதான். அதனால் தாலிக்கு சக்தி, உயிர், தெய்வீகம் போன்றன இருப்பதாக நம்பி சமூகம் எழுப்பிய கூக்குரலுக்கு செவிசாய்ப்பது எனக்கு சரியாகப்படவில்லை.

தாலி பற்றிய விவாதங்களில் தாங்கள் கூறியவை அது ஒரு உலோகம் என்பது மட்டுமேயா..???! அது உயிரும் அல்ல.. உணர்வும் அல்ல.. தெய்வீகமும் அல்ல.

தாலியை ஓர் அன்புப்பரிசாக ஏன் கருதக் கூடாது என்று கேட்டவர்கள் நாங்கள். நீங்கள் அல்ல...??! எமது வழியில் சென்று தாலியை வாங்கிவிட்டு.. ( ஏன் வெறும் கறுத்தக் கயிறைக் கட்டி இருக்கலாமே..???! ஏன் தங்கத்தில் அல்லது உலோகத்தில் செய்தீர்கள்.)

சபேசன் நீங்கள் எழுதியவற்றை நீங்களே வாசியுங்கள். தாலி தமிழரின் பாரம்பரியமல்ல.. எந்த தொல்காப்பியத்திலும் அதற்குக் குறிப்புக்கிடையாது என்று சொன்னவர் நீங்கள். தாலி அடிமைச்சின்னம் என்று அடித்துச் சொன்னவர் தாங்கள்... ஆனால் இன்று அது ஒரு உலோகம் கடவுள் இல்லை என்று சமாளிக்கிறீர்கள்..!

---------

அடுத்து மணமகன் வருகை.. அதன் பின் மணமகள் வருகை. இதுதான் ஆண்டாண்டு கால நடைமுறை. ஆணைத் தொடர்பவள் பெண் என்ற தோற்றத்தின் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்று கொள்ளத்தக்க ஒன்று.. உங்கள் பார்வையில்.

ஏன் நீங்கள் இருவரும் ஒரு பொது அறையில் இருந்து கைகோர்த்துக் கொண்டு மேடைக்கு வந்திருக்கலாமே ஒரு சேர..???! ஏன் செய்யவில்லை. இங்கு சமத்துவம் என்பது பேணப்படவில்லையே..???!

----------

ஒரு பெண்ணின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்காமல் அவளிடம் உங்கள் கருத்தைத் திணிப்பேன் காலப்போக்கில் என்று சொல்கிறீர்களே வெட்கமாக இல்லை. இதையே அந்தப் பெண் தான் கொண்டிருக்கும் கடவுள் பற்றிய எண்ணத்தை ஏற்படுத்த முயலின் ஏற்றுக் கொள்வீர்களா..???!

ஆனால் நீங்கள் ஊருக்குச் செய்யும் உபதேசம் என்னவென்றால் 100% மனமொருமித்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்ய வேண்டும் என்ற கோசம். ஆனால் நீங்களோ திருமணத்தின் பின் கூட ஏன் கருவுற்ற பின் கூட அந்தப் பெண்ணிடம் அவளின் சுதந்திர உணர்வை மதிக்கனும் என்று நினைக்கவில்லை. மாறாக கருத்துத் திணிப்பை செய்து அவளின் மனவோட்டத்தை மாற்றலாம் என்று நினைக்கிறீர்கள். இதையே அவளுக்கு நீங்கள் அளிப்பீர்களா. கேட்டால் அவள் மூடநம்பிக்கையில் மிதப்பவள் அதை என்னால் ஏற்க முடியாது என்று உங்களின் நிலைப்பாட்டுக்கு நியாயம் கற்பிப்பதோடு அந்தப் பெண்ணின் உணர்வுகளை மிதித்துக் கொண்டு.. பெண்ணிற்கு மண்டப்பத்தில் இருக்க சம தளம் கொடுத்தேன் என்று பிரச்சாரம் செய்கிறீர்கள்...!

ஒரு போதும் சமூகத்தை தவறாக வழிநடத்தும் கருத்துக்களை விதைத்துக் கொண்டு.. நீங்கள் இன்னொன்றைச் செய்யாதீர்கள். உங்கள் கருத்துக்களைப் பகுத்தறிவு என்று நம்பி சீரழிஞ்ச அத்தனை பேரும்.. உங்களின் இந்த நிலையற்ற மனநிலையைக் கண்டு வேதனைப்படுவார்களே தவிர உங்களின் காரண காரியங்களை விளக்கங்களை ஏற்கத் தயாராக இருக்க மாட்டார்கள்..!

எந்தச் சூழ்நிலையிலும் கொள்கை தவறாதவன் இலட்சியவாதி. எந்தச் சூழலிம் அறிவைப் பயன்படுத்துபவன் அறிவாளி. எந்த சூழலிலும் பகுத்தறிந்து அறிவின் வழி செல்பவன் பகுத்தறிவுவாதி. அவன் ஒரு போதும் தெரிந்து ஒரு தவறிழைக்கமாட்டான்.

ஆனால் நீங்கள் சமூகத்துக்குச் சொல்வது ஒன்று செய்துவிட்டு சமூகத்துக்கு அளிக்கும் விளக்கம் இன்னொன்று. ஏனிந்த பொய் முகங்கள்..??! :wub::wub::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர் சபேசனின் திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததையிட்டு எனக்கும் மகிழ்சி. இரவி அருணாச்சலம் அவர்கள் எழுதியதைப்போல்தோழர் சபேசனின் முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியதே. ***

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

தாலியை இழிவுபடுத்தும் நோக்குடன் "தாலி" என்ற குறுங்கதையை இணைத்துவிட்டு சபேசன் எழுதியவை...

"தாலி எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் தாலி பற்றி பெரிதான குறிப்புக்கள் எதுவும். மற்றைய ஆபரணங்களைப் போல் ஒரு சாதரணமான ஆபரணமாகவே தாலியும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

சிலப்பதிகாரத்தில் கூட தாலியைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. (இப்பொழுது சிலப்பதிகாரத்தை திரைப்படமாகவோ, தொடர் நாடகமாகவோ தயாரித்தால் அதில் தாலி எத்தனை முக்கியத்துவம் பெறும் என்று சிந்தித்துப் பாருங்கள்) கோவலன் கண்ணகி திருமணத்தை ஒரு அந்தணர் நடத்தி வைப்பதாகவே சொல்லப்படுகிறது. ஆனால் தாலி பற்றி ஒரு பேச்சும் இல்லை.

பின்பு உருவான பக்தி இலக்கியங்கள் கூட தாலியைப் பற்றி எதுவும் பேசவில்லை.

அதே வேளை வடமொழி இலக்கியங்களில் தாலி ஓரளவு இடம்பிடிக்கிறது. உதாரணம்: அரிச்சந்திரன் நாடகம்

இன்று இருப்பது போல் தமிழர்கள் மத்தியில் தாலி எப்பொழுது முக்கியத்துவம் பெற்றது என்பது சரியாக சொல்ல முடியவில்லை.

பாரதத்தின் பெரும்பகுதிகளை 10ஆம் நு}ற்றாண்டில் இருந்து 17ஆம் நு}ற்றாண்டின் இறுதி வரை மொகலாயர்கள் ஆண்ட பொழுது தாலி முக்கியத்துவம் அடைந்ததாக ஒரு கருத்து உண்டு. மொகலாயர்களின் ஆட்சிக்காலம் தமிழகத்தில் சற்றுப் பிந்தியே ஆரம்பிக்கிறது.

நான் 17ஆம் நு}ற்றாண்டு என்று எழுதியதை 15ஆம் நு}ற்றாண்டு என்று கூட மாற்றலாம். காரணம் இந்த இன்றைய தாலி நடைமுறைக்கு வந்தது எப்பொழுது என்று சரியான ஆண்டுக் குறிப்பு எதுவும் இல்லை.

ஒரு வேளை மொகலாயர்களிடம் இருந்து காத்துக் கொள்வதற்காகத்தான் எமது முதாதையர்கள் இந்த தாலியை நடைமுறைப்படுத்தினார்கள் என்றால், தாலி என்பது கையாலாகத்தனத்தின் ஒரு அடையாளம்தானே?

நெடுக்காலபோவான் வந்து "தாலி அன்பின் அடையாளம்" என்று சொல்வார். இருக்கலாம்.

இன்று தாலி சில இடங்களில் அடிமைச் சின்னமாகவும், அன்புச் சின்னமாகவும் இருக்கிறது."

http://www.yarl.com/forum3/index.php?showt...=15137&st=0

வணக்கம் இளங்கோ...

வலைஞன் திருத்தம் செய்ததன் முன் நீங்கள் எழுதியதை நான் வாசித்து இருந்தேன்.

இங்கு சபேசனின் திருமணத்தை கொச்சைப்படுத்துவது அல்ல எமது நோக்கம். அவரது கொள்கைகள் அவருக்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் அதை எல்லாரும் கேட்கவேண்டும் என்று இல்லை.

அவர் மதங்களை பற்றி எவ்வளவு நையாண்டி செய்து இருக்கிறார். நாம் இங்கு அவரை நையாண்டி செய்யவில்லை. நாம் மனதார - உளமார அவரது திருமணத்தை வாழ்த்தி இருந்தோம்.

ஆனால்..

பகுத்தறிவு எண்டுற பெயரில எல்லாவிதமான கூத்துகளுக்கும் நாங்கள் தாளம் போடவேண்டும் என்ற தேவை இல்லை. பகுத்தறிவாளன் மட்டும் மனுசன் மிச்சம் எல்லாரும் குரங்குகளா?

எனவே தான் நாமும் அவரது கொள்கைகளை நையாண்டி செய்தோம்! செய்கின்றோம்! செய்வோம்!

Edited by முரளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசனின் திருமணம் பற்றிய செய்தியையும் அவரது விளக்கத்தையும் படித்தபோது விளம்பர திருமணம் என்பதாகத்தான் பட்டது. திருமணத்தில் என்ன விளம்பரம். பெரியாரியத்தை வாழ்வியலாக கொள்பவர்கள் சபேசன் போன்ற விளம்பர பிரியர்களாக இருக்க மாட்டார்கள்.

மங்கல நாண் பூட்டாமலே பலர் இங்கு புரட்சிகரமாக வாழ்வது தெரியாத அற்பர்கள்தான் இப்படி பீற்றிக்கொள்வார்கள்.

இதற்கு ,வேலிக்கு ஓணான் சாட்சிகள் என்பதுபோல் இரவி அருணாசலம் என்ற பிரகிருதிகளும் சாட்சி.

இரவி அருணாசலம் தனது திருமணத்தை எப்படி நடத்திக்கொண்டார். ஏதாவது அவர் அதைப்பற்றி சொன்னாரா?

சபேசன்கள் போன்றோர் பெரியாரை, சுயமரியாதையை, கொச்சைப்படுத்தாமல் இருத்தல் நல்லது.

சபேசன்கள் போன்றோர் பெரியாரியல் பற்றி எழுதுவது என்பதே வெட்ககேடானது.

நம்ம சாதியோட கலியாணம் முடித்தமா, நடைமுறைகளை மீறாமல் இருந்தமா, சினிமாத்தன கொண்டாட்டங்களை நடத்தினமா, என்று ஒதுங்கிவிடுதல் என்பதே நியாமானது.

தங்கள் சாதிக்குள், தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக பெரியாரை, சுயமரியாதையாதை இப்படி கொச்சைப்படுத்த வேண்டாம்.

ஏனெனில் சுயமரியாதை திருமணம் என்பதே சாதிகடந்த திருமணம்தான்.

சபேசன் உங்களுடையது அப்படித்தானா?

ஆபிரகாம்,

உங்கள் உள்நோக்கம் எனக்குப் புரியவில்லை.

யதார்த்த நிலை என்று ஒன்று இருக்கிறது. நாம் தமிழர்களிடம் தமிழ்நெறித் திருமணத்தை விளம்பரம் செய்ய வேண்டிய ஒரு வெட்கக் கேடான நிலையில்தான் இருக்கிறோம். இதுதான் உண்மையான நிலை.

இந்த நிலைக்கு நாம் காரணம் அல்ல.

என்னுடைய திருமண அழைப்பிதழையும் ஒரு விளம்பரமாகத்தான் செய்தேன். என்னுடைய திருமணத்தையும் ஒரு விளம்பரமாகத்தான் செய்தேன். இன்றைக்கு அதைப் பற்றி எழுதுவதும் ஒரு விளம்பரம்தான்.

தமிழ்நெறித் திருமணம் நடந்தது என்பதை தமிழர்கள் அறிய வேண்டும். ஒவ்வொருவராக தமது தாய் மொழியில் திருமணம் செய்ய முன் வர வேண்டும்.

ஒரு இனத்தை அதனுடைய தாய் மொழியில் திருமணம் செய்யச் சொல்லி அறைகூவல் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பது குறித்து எனக்கு மிகுந்த வெட்கமும் வேதனையும் உண்டு.

அன்றைக்கு தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணங்கள் செய்தவர்கள் மிகப் பெரும் விளம்பரங்களோடு செய்தார்கள். அப்படித்தான் அது மக்கள் மத்தியில் பரவியது.

நானும் விளம்பரத்தோடு செய்கிறேன். மக்களிடம் பரவட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.