Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவில் பயங்கர நில நடுக்கம்: 5,000க்கும் மேற்பட்டோர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் பயங்கர பூகம்பம்-நூற்றுக்கணக்கானோர் பலி?

திங்கள்கிழமை, மே 12, 2008

பெய்ஜிங்: சீனாவின் தென் மேற்கு மத்திய பகுதியில் இன்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவானது. இதில் பள்ளிக் கூடங்கள் உள்பட பல கட்டடங்கள் இடிந்துள்ளன. பள்ளிக் கட்டடத்தில் 900க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிக்கியுள்ளனர்.

இதுவரை 5 மாணவர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளனது.

இன்று பகல் 2.28 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வு தாய்லாந்து, வியட்நாம் வரை உணரப்பட்டது.

சீனாவின் தென் மேற்கு-மத்தியப் பகுதியான செங்க்டூ-சாங்கிங் பகுதிகளில் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது.

இதையடுத்து மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். சுமார் 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பூகம்பத்தின் தாக்கம் இருந்தது. பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதால் பலியானோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

சாங்கிங் பகுதியில் 2 பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உள்பட 5 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். 900 மாணவர்கள் இடிபாடுகளில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மியான்யாங் பகுதியில் உயர்நிலை தண்ணீர் தொட்டி விழுந்து ஒருவர் பலியானார்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சீன ராணுவம் இறக்கி விடப்பட்டுள்ளது.

டுஜியாங்ஜியான் நகரில் வீடுகள் வரிசையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. தொடர்ந்து தென் மேற்கு சீனாவில் நில அதிர்வுகள் உணரப்படுட்டு வருகின்றன. இதனால் பதற்றமும் பீதியும் நிலவுகிறது.

பூகம்பம் மையம் கொண்ட பகுதியில் இருந்து 1,528 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெய்ஜிங்கிலும் அதிர்வு உணரப்பட்டது. அங்கும் கட்டடங்கள் பலமாக ஆட்டம் கண்டுள்ளன.

சீனாவில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் நடக்க உள்ள நிலையில் இந்த பூகம்ப தாக்குதல் அந்நாட்டுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஒலிம்பிக் நடக்கும் பகுதி எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

கடந்த 1976ம் ஆண்டு வடக்கு சீனாவில் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2.55 லட்சம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2008/05...tles-china.html

பீஜிங்: சீனாவின் தென்மேற்கு பகுதியில், நேற்று பிற்பகல் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், 5,000 பேர் இறந்தனர். நில நடுக்கத்தின் தாக்கம் பல ஆயிரம் கி.மீ., தூரத்தில் உள்ள நகரங்களிலும் காணப்பட்டது.சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது சிசூவான் மாகாணம். இதன் தலைநகரான செங்டூவில் இருந்து 146 கி.மீ., தொலைவில் உள்ளது வெங்சூவான் பகுதி. இந்திய நேரப்படி காலை 11.58 மணிக்கு , இப்பகுதியில், மிகவும் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.

கட்டடங்களில் விரிசல்கள் : பல லட்சம் பேர் வசிக்கும் செங்டூ நகரிலும், 5,000 கி.மீ., தொலைவில் உள்ள பீஜிங், வர்த்தக நகரம் ஷாங்காய், ஹாங்காங், தாய்லாந்து தலைநகர் பாங்காக், வியட்நாமில் உள்ள ஹனோய் ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டது. உயரமான கட்டடங்களில் வசித்தவர்கள் உடனடியாக தெருக்களுக்கு ஓடி வந்து விட்டனர். செங்டூ நகரில், பல கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. எனினும், இந்த நகரில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இங்கிருந்து சில நூறு கி.மீ., தொலைவில் உள்ள, பிரமாண்டமான திரி ஜார்ஜியஸ் அணைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம்: ஆனால், சிசூவான் மாகாணத்தை ஒட்டி உள்ள, சோங்குயிங் பகுதியில் உள்ள இரண்டு ஆரம்ப பள்ளி கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பள்ளியில் இருந்த 900 மாணவர்கள் இடிபாடுகளில் புதைந்து விட்டனர். இதுவரை 107 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இறந்தவர்கள் எண்ணிக்கை, 5,000த்தை தாண்டியுள்ளது. இது தவிர, பல ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.மீட்பு பணியில், ராணுவ வீரர்களை ஈடுபடுத்தி, சீன அரசு உடனடி நடவடிக்கை எடுத்தது. பிரதமர் வெங் ஜியாபாவோ, பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைந்துள்ளனர்.

இது தவிர, ஹெலிகாப்டர்களும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.சிசூவான் மாகாணத்தில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்படுவது இதுவே முதல் முறை. இந்த பகுதி, திபெத் கண்ட திட்டை ஒட்டி அமைந்துள்ளது. நேற்று பிற்பகல், சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்ட பிறகு, அடுத்தடுத்து 40க்கும் மேற்பட்ட சிறு அளவிலான, நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இதனால், சீனாவில் பெரும் பதட்டம் காணப்பட்டது.

வீடியோ பார்க்க.........................

http://isooryavidz.blogspot.com/2008/05/on...uake-scene.html

வீடியோ பார்க்க.........................

http://isooryavidz.blogspot.com/2008/05/po...ikes-china.html

  • கருத்துக்கள உறவுகள்

சோகமான செய்தி மட்டுமல்லாமல், உணவுப் பொருள் தட்டுப்பாட்டால் உலகம் தொடர்ந்து பாதிக்கும் சூழ்நிலைக்கு விழு;நத மற்றுமொரு அடி. பொருள்களோ, எரிபோருளோ குறைவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் தென்படவில்லை. கடவுளின் துகள்களைக் கண்டுபிடித்தவர்கள் தான் எம்மைக் காப்பாற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சமீப காலத்தில் ஆசியக் கண்டத்தை உலுக்கும் இரண்டாவது மனிதப் பேரழிவு. இன்றைய பூகம்பத்தில் இதுவரை மதிப்பிட்ட படி 8,500 பேர் உயிரிழந்து பல ஆயிரம் பேர் காயமடைந்து.. உடமைகள் இழந்து தவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் விரைந்து நிவாரணம் பெற அனைத்துலகம் ஒத்துழைக்க வேண்டும்.

சோகமான செய்தி மட்டுமல்லாமல், உணவுப் பொருள் தட்டுப்பாட்டால் உலகம் தொடர்ந்து பாதிக்கும் சூழ்நிலைக்கு விழு;நத மற்றுமொரு அடி. பொருள்களோ, எரிபோருளோ குறைவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் தென்படவில்லை. கடவுளின் துகள்களைக் கண்டுபிடித்தவர்கள் தான் எம்மைக் காப்பாற்ற வேண்டும்.

கடவுளின் துகளைக் கண்டுபிடிக்கல்ல.. எனித்தான் கண்டறியிற பரிசோதனையை ஆரம்பிக்கப் போயினம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமிதான் நினைவுவருகின்றது................... எமது மண்ணில் என்பதால் நாம் எவ்வளவு துடித்தோம்...

அவ்வாறுதானே அங்கேயும் இன்று பல மனங்கள் துடித்துகொண்டிருக்கும்.

இதெல்லாம் ஏதோ செயற்கையின்பால் நடப்பதுபோல் எனக்கு படகின்றது!

எனக்கும் உண்மையிலேயே இது கவலையாக தெரியவில்லை... எமது மக்களின் அழிவுக்கு உவர்களும் காரணம் என்பதாலையோ என்னவோ.. எனது மனிதாபிமான உணர்வு கூட வேலை செய்யுது இல்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிசுவான் மாகாணத்தை நேற்று திங்கட்கிழமை தாக்கிய 7.8 ரிச்டர் பூமியதிர்ச்சி காரணமாக சிறுவர்கள் உட்பட 5,000 பேர் பலியானதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

மேற்படி பூமியதிர்ச்சி காரணமாக இரு பாடசாலைக் கட்டிடங்கள் இடிந்து விழுந்தமை காரணமாக அங்கிருந்த சுமார் 900 சிறுவர்கள் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இப்பூமியதிர்ச்சியையடுத்து சீனாவின் அதியுயர்ந்த கட்டிடமான ஜின்மாவோ கோபுரத்திலிருந்தும் ஏனைய உயர்ந்த கட்டிடங்களிலிருந்தும் மக்களை வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது.

சீனாவில் இடம்பெற்ற இப்பூமியதிர்ச்சி, தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக், வியட்நாமின் ஹனொய் நகர் ஆகிய இடங்களிலும் உணரப்பட்டது.

சிசுவான் மாகாண தலைநகரான செங்துவிலிருந்து 57 கிலோமீற்றர் தொலைவில் நேற்று அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 2.28 மணிக்கு தாக்கிய பூமியதிர்ச்சியால் செங்து நகரிலோ அல்லது அதற்கு அருகாமையிலுள்ள திறீ ஜோர்ஜெஸ் அணையிலோ பிரதான சேதமெதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரச தொலைக்காட்சி அறி க்கையிட்டுள்ளது.

எனினும் மேற்படி நகரக் கட்டிடங்களிலிருந்து மக்கள் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செங்துவிலிருந்து 930 மைல்கள் தொலைவிலுள்ள சீனத் தலைநகர் பீஜிங்கிலுள்ள பல கட்டிடங்கள், இப்பூமியதிர்ச்சியின் போது சுமார் இரு நிமிடங்களுக்கு நடுக்கம் கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து மக்கள் கட்டிடங்களை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.

பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இறந்தவர்களின் தொகை மேன்மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீரகேசரி நாளேடு

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் உண்மையிலேயே இது கவலையாக தெரியவில்லை... எமது மக்களின் அழிவுக்கு உவர்களும் காரணம் என்பதாலையோ என்னவோ.. எனது மனிதாபிமான உணர்வு கூட வேலை செய்யுது இல்லை...

அப்பாவி சீன மக்களுக்கு தமது ஆட்சியாளர்களின் வெளிவிவகாரக் கொள்கை பற்றித் தெரியாது. தெரிந்தாலும் அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை.

அப்படி இருக்க மனிதாபிமானத்தை முன்னுறித்திப் பார்க்க வேண்டிய இவ்விடயத்தில் சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை அணுகுமுறைகளைப் புகுத்துவது சிறந்ததல்ல..! :rolleyes:

அப்பாவி சீன மக்களுக்கு தமது ஆட்சியாளர்களின் வெளிவிவகாரக் கொள்கை பற்றித் தெரியாது. தெரிந்தாலும் அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை.

அப்படி இருக்க மனிதாபிமானத்தை முன்னுறித்திப் பார்க்க வேண்டிய இவ்விடயத்தில் சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை அணுகுமுறைகளைப் புகுத்துவது சிறந்ததல்ல..! :rolleyes:

பர்மாவில் மக்கள் அவலம் எனும் போது இருந்த மனபதை பதைப்பு... சீனாவில் பூகம்பம் ஏனும் போது வருகுது இல்லை... ஆ... அப்படியா எண்டு தான் முதலில் கேட்டேன்..

எனது அறிவுக்கு தெரிகிறது அதுதவறு எண்று.. உள்ளுண்ணர்வு வேறமாதிரி இருக்கிறது...

எனது உணர்வின் உண்மையை சொன்னேன்...

சீன பூகம்பத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,000 ஆக உயர்வு (2nd Lead)

சீனாவின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,000 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் கட்டிடங்களுக்கிடையில் புதையுண்டோ அல்லது காயமடைந்தோ இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

திங்கட்கிழமை பிற்பகல் 2.28 மணிக்கு ஏற்பட்ட இந்தப் பூகம்பம் ரிச்டர் அளவு கோலில் 7.9 என பதிவாகியுள்ளது

இந்த பூகம்பத்தின் பாதிப்பு வெகு தொலைவிலுள்ள பீஜிங் மற்றும் ஷாங்ஹாய் நகரிலும், அருகிலுள்ள தாய்லாந்து மற்றும் தாய்வானில் இருக்கும் உயர்ந்த கட்டிடங்களும் ஆட்டம் காணும்படியாக இருந்ததாக சீன செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 30 ஆண்டுகளில் அந்தப் பகுதியை தாக்கிய மிகக் கடுமையான பூகம்பம் இதுவாகும். சீசுவான் பகுதி அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கும் சீன செய்தி நிறுவனமான சின்ஹவா மேலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் பூகம்பத்தின் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

பாடசாலை ஒன்று இடிந்து விழுந்ததில் 900 சிறார்கள் புதையுண்டு போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும் சில பகுதிகளில் 80 சதவீத அளவுக்கு வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முழு அளவிலான மீட்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு சீன அதிபர் கூ ஜின்டாவோ கூறியுள்ளார். அந்தப் பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமர் வென் ஜியா போவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளார்.

சீனாவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இந்த பூகம்பம் அந்நாட்டுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஒலிம்பிக் நடக்கும் பகுதியில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 1976ம் ஆண்டு வடக்கு சீனாவில் 7.5 ரிச்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் இரண்டரை லட்சம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது

http://isoorya.blogspot.com/

space.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலியானோரின் எண்ணிக்கை 11200 ஐ தாண்டுகிறது!

வீரகேசரி இணையம் 5/13/2008 4:48:13 PM - சீனாவின் தென் மேற்கு மத்திய பகுதியில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 11200 க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கபடும் அதேவேளை,பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அச்சம் வெளியிடபட்டுள்ளது,அத்துடன் இந்த பூகம்ப அதிர்வுகள் ரிச்டர் அளவில் 7.9 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.இதில் அந்த பகுதியின் கட்டிடங்கள் பல நாசமாகியுள்ள அதேவேளை பூகம்ப மையம் சுமார்,100 கீ.மீ. சுற்றளவுக்குள் காணபட்டதாகவும்,தெரிவிக்கபடு

அப்பாவி சீன மக்களுக்கு தமது ஆட்சியாளர்களின் வெளிவிவகாரக் கொள்கை பற்றித் தெரியாது. தெரிந்தாலும் அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை.

அப்படி இருக்க மனிதாபிமானத்தை முன்னுறித்திப் பார்க்க வேண்டிய இவ்விடயத்தில் சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை அணுகுமுறைகளைப் புகுத்துவது சிறந்ததல்ல..! :lol:

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலைலாமா அவர்கள் தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.