Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் விமானம் அழிக்கப்பட்டதாம் ITN

Featured Replies

சிங்கள இணையம் ஒன்றில் இந்த தலைப்பினை பார்த்தேன் ஜடியன் செய்தியில் சொல்ல்ப்பட்டதாம் ஆனால் பாதுகாப்பு இனையத்தளத்தில் இரனைமடு ஓடுபாதையை விமானப்படைதாக்கியதாக மட்டுமே சொல்லப்பட்டிருகின்ரது.

There was a breaking news about gunning down a LTTE Aero plane by Army, at iranamadu.

BUT apart from ITN breaking news,i didnt see anything about this in anyother media.

Did anyone got more info ??

http://elakiri.com/forum/showthread.php?t=80428

அவர்களிற்கு ரொம்ப ஆசைதான்.

வன்னியில் பறந்த விடுதலைப் புலிகளின் வானூர்தி

ளுயவரசனயலஇ 17 ஆயல 2008

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் வானூர்தி வன்னியில் உள்ள இரணைமடு வானூர்தி ஓடுபாதையை அண்டிய பகுதியில் பறப்பில் ஈடுபட்டதாக சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:

வன்னி வான்பரப்பில் வான் புலிகளின் வானூர்தி மேல் எழுந்ததும்இ அது படையினரின் ராடார் திரைகளில் அவதானிக்கப்பட்டுள்ளது.

எனினும் சிறிது நேரத்தில் அது ராடார் திரைகளில் இருந்து மறைந்துவிட்டது. வானூர்தி மீண்டும் தரையிறங்கியதனால் அது ராடார் திரைகளில் இருந்து மறைந்திருக்கலாம் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் ஓசை.

  • கருத்துக்கள உறவுகள்

LTTE aircraft sighted

An LTTE air craft was detected by the air defence system yesterday evening over the LTTE built Iranamadu runway, military sources said.

A senior Air Force official told the Daily Mirror that the air defence system had detected the LTTE aircraft soon after, it was airborne. "However it immediately disappeared from the radar system, as it went down," the official said.

A few weeks ago an LTTE air craft bombed the Welioya forward defence lines injuring one soldier.

- dailymirror.lk

------------

இதைத்தான் சிங்கள இனவாதப் போர் வெறி பிடித்த பிசாசுகள்.. புலிகளின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று அறிவிச்சிட்டு.. துள்ளிக்குதிக்கினம் போல..!

as it went down என்றதை.. தங்கட ஆக்கள் shot down என்று கற்பனையில் மாத்திட்டு கும்மாளம் அடிக்கிறாங்கையோ..???! :o

விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதலுக்குள்ளாகின?

Saturday, 17 May 2008

நேற்று (16) மாலை வவுனியாவிலுள்ள ரேடார் நிலைய திரைகளில் இரு விமானங்கள் வானில் பறப்பது தெரியத் தொடங்கியதும் அவற்றை எதிர் கொண்டு தாக்குவதற்கு கட்டுநாயக்காவிலிருந்து இரண்டு எப் 7 தாக்குதல் விமானங்கள் புறப்பட்டுள்ளன.

வவுனியா இராணுவ கட்டுப்பாட்டு மையம் விடுதலைப் புலிகளது விமானங்கள் என நிச்சயிப்பதற்குள் அந்த இரு விமானங்களும் திடீரென ரேடார் திரையிலிருந்து காணாமல் போனதாகவும், அவை உடனடியாக தரையிறக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிப்பட்ட விமானப்படையினர் அவை தரையிறக்கப்பட்டிருக்கலாம் என ஊகித்த இரணமடு பிரேதசத்தை இலக்கு வைத்து தாக்குவதற்கு மேலும் மிக் மற்றும் கிபீர் விமானங்கள் இரண்டை கட்டுநாயக்காவிலிருந்து உடனடியாக அனுப்பியதாகவும் , அவை இரணமடுவை அண்மித்த பகுதிகளில் தாக்குதல்களை மேற் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இத் தாக்குதலுக்காக 12 விமானங்களை விமானப் படையினர் பயன்படுத்தியுள்ளதாக விமானப்படையின் உள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரணமடு ஓடுபாதையை அண்மித்த ஒரு இடத்தில் விடுதலைப் புலிகளது விமானம் தரையிறக்கப்பட்டிருக்கலாம் எனும் ஊகத்தோடு இலக்கு வைத்து விமானப் படையினர் தாக்கியதில் பெரியதொரு நெருப்பு சுவாலை அங்கிருந்து மேலெழுந்தாக விமானி ஒருவர் தெரிவித்தார். அது விமானமாகவோ அல்லது எரி கொள்கலன் ஒன்றாகவோ கூட இருக்கலாம் என்று அந்த விமானி மேலும் தெரிவித்தார்.

ஆனால் கிளிநொச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி குறிப்பிட்ட ஒரு இலக்கு குறித்த தாக்குதல், பெரியதொரு வெடிப்பாக இருந்தாலும் அது விமானம் ஒன்றை தாக்கி அழித்ததாக உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

http://www.ajeevan.ch/content/view/2768/1/

  • கருத்துக்கள உறவுகள்

:o ஏதோ விளையாட்டு விமானத்தில வந்து படம் காட்டுறாங்கள் எண்டு உங்கட ராணுவத் தளபதியும் அமைச்சர்களும் சொல்லிக் கொண்டு திரியினம், நீங்கள் என்னடா எண்டு பாத்தால் ஏதோ எப்- 16 ஐச் சுட்டு வீழ்த்தினமாதிரி ஆலாய்ப் பறக்கிறியள் ?!!!!!!!!!!

என்ன இருந்தாலும் உள்ளுக்க நல்லாத்தான் பயந்து போய் இருக்கிறியள் எண்டது மட்டும் தெரியுது. உந்தப் பயத்தோடயே இருங்கோ, கெதியாய் எல்லாம் சரிவரும் !

விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதலுக்குள்ளாகின?

அண்ணை இப்படியான உங்கள் தலைப்புக்களே உங்கள் மீதான விமர்சனங்களை உருவாக்கும்.

புலிகளின் விமானங்கள் தாக்கப்பட்டனவாம் - சொல்கிறது படைத்தரப்பு

புலிகளின் விமானங்கள் தாக்கப்பட்டதாகப் படைத்தரப்பு தெரிவிப்பு

தமிழ் ஊடகங்கள் மேற்கண்டவாறு தலைப்பிடுவதே சிறந்தது. அதைவிடுத்து தாக்கப்பட்டன என்று கேள்விக்குறி போடுவது எனக்கு சரியாகத் தெரியவில்லை.

Edited by மின்னல்

முதல் விமானமே இல்லை என்றார்கள்.

இப்போ அழிச்சிட்டம் என்றார்கள்.

என்ன மாயை..

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ, இப்படியாவது சொல்லி ஆறுதல் படட்டும்.

அப்பிடி ஏதாவது நடந்திருந்தால் இன்டைக்கு கொழும்பு வெடிச்சத்தில அதிர்ந்திருக்கும். நேற்று குண்டி வெடிப்பில அதிர்ந்த மாதிரி. சிங்கள வீட்டுக்கு வீடு கிரி பத் பொங்கியிருக்கும். அப்பிடி ஒன்டும் இங்க நடக்க இல்லை. இது சும்மா புறுடாவ இருக்கலாம்.

எலகிரி இணையத்தில் எருமை ஒன்டு இப்பிடி எழுதியிருக்கு.

(yanthan athi eka putu putu wak wath bima dagaththa,,,

no way back soldiers,,only forward.) :wub:

'போதும் ஒரு புடு புடுவையையாவது நிலத்தில் வீழ்த்திவிட்டார்கள்'. என்று எத்தனை நப்பாசை இந்த எருமைகளுக்கு.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

இரனைமடுவில் தான் தங்கள் ஒடு பாதை இருக்கின்றது அதை தான் தாங்க்ள பயன்படுத்துகின்றோம் என்று இராணுவத்தை குழப்புவதற்க்காக புலிகள் அப்படி செய்திருகலாம்...

இரனைமடு ஒடுதளம் இராணுவ இலக்குகளில் ஒன்று என்று புலிகளுக்கு நன்கு தெரியும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

LTTE aircrafts attacked

(Lanka-e-News, May 17, 2008, 8.45 PM)

Two F-7 aircrafts left from Katunayaka yesterday (16) evening for attacking two LTTE aircrafts that were displayed on the radars of Vavuniya radar centre.

However, the LTTE aircrafts disappeared from the radars on the way. More Mig and Kfir aircrafts left from Katunayaka to attack positions in Iranamadu area and 12

aircrafts were used in the assault.

A spokesman of the Air Force said to Lanka-e-News that the pilots reported

a massive fire near LTTE runaway in Iranamadu and speculated it could be

an LTTE aircraft or a fuel store.

Reports from Kilinochchi also verified that there was a massive blast but it

was not confirmed an aircraft.

  • கருத்துக்கள உறவுகள்

எப்போ, எதுக்கு, எங்கடி என்று எவருக்கு தெரியும்.

எதைச் சொல்லியாவது சிங்களச் சனத்தை மயக்கத்திலை வச்சிருக்க ராஜபக்ச அவை இப்பிடி எத்தனை வாணவேடிக்கையளைவிட்டு கொஞ்சநாளிலையே எல்லாம் ஊறிப்போன புஸவாணமானது தெரியும்தானே. உந்தக் கதையளையெல்லாம் எவனாவது காதிலை பு வச்சவனுக்குத்தான் சொல்லவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரியாய் சொன்னீங்க்கள் அம்பலத்தார் .

  • கருத்துக்கள உறவுகள்

:wub: இவ்வளவு காலமும் போரில் கொல்லப்பட்ட புலிகளின் எண்ணிக்கை எண்டு சிங்களம் சொல்லும் அளவு யாழ்க்குடாவிலுள்ள மொத்தத் தமிழரின் எண்ணிக்கையில் இருமடங்கு எண்டு சிங்களப் பத்தியாளர் சிலரே எள்ளி நகையாடக் கேட்டிருக்கிறேன். அதுபோலத்தான் இந்த புலிகளின் விமானங்களை அழித்த எண்ணிக்கையும். கூட்டிப் பாத்தால் இந்தியாவின் விமானப்படை விமானங்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும்.

இதைப் பற்றி நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளத்தேவையில்லை. இது கற்பனைக் கதைகளைச் சொல்லிவரும் சிங்கள அரசும் அதை உண்மை என்று நம்பும் சிங்களச் சனமும் கவலைப்பட வேண்டிய விடயம் !

அதுபோலத்தான் இந்த புலிகளின் விமானங்களை அழித்த எண்ணிக்கையும். கூட்டிப் பாத்தால் இந்தியாவின் விமானப்படை விமானங்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும்.

அப்படியா? புலிகளின் விமானத்தை அழித்ததாக முன்பு எப்ப சிறிலங்கா படைத்தரப்பு சொல்லியிருக்கு???

ஏன் இல்லாததையொல்லாம் சொல்லுறீஙகள்?

அப்படியா? புலிகளின் விமானத்தை அழித்ததாக முன்பு எப்ப சிறிலங்கா படைத்தரப்பு சொல்லியிருக்கு???

ஏன் இல்லாததையொல்லாம் சொல்லுறீஙகள்?

ஏன் சொல்லவில்லை சொல்லி இருக்கிறார்கள் குண்டு வீச்சு முலம் நான் வசித்து இருக்கேன்.....

  • கருத்துக்கள உறவுகள்

:D இரணைமடு, முல்லைத்தீவு எண்டு புலிகளின் விமான ஓடுபாதைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அங்கு பெரும் நெருப்பும், புகைமண்டலமும் கிளம்பியதாகவும், அவை அவர்களின் விமானங்களில் இருந்து வந்தவை என்றும் எத்தனை முறை சிங்கள அரசு கூறியிருக்கிறது ? இப்போதும் அப்படித்தானே கூறியிருக்கிறது ?

மின்னல் நான் ஒன்றும் இல்லாதவற்றைச் சொல்லவில்லை. அவர்கள் கூறியதைத்தான் சொன்னேன். நீங்கள் எதற்கும் பழைய செய்திகளைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

கடைசியாக இரணைமடு மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது தானே அப்படிக் கூறியிருக்கிறார்கள். அதில் கூட வானூர்தி அழிந்தது என்று அடித்துக் கூறவில்லையே! வழமையாக புலிகளின் வானூர்தி ஓடுபாதைகள் நிலைகள் மீதே தாக்குதல் நடத்தியதாகக் கூறுவார்கள்.

ஆனால் ரகுநாதன் அண்ணை இந்திய வான்படையின் வானூர்திகளைப் போன்று இரு மடங்குக்குக் கணக்குக் காட்டுவதெல்லாம் ஓவர்.

ஆனால் கடற்புலிகளின் கலங்களை அழித்தாகச் சொல்வதை இந்திய கடற்படையின் கலங்களின் எண்ணிக்கைக்கு ஒப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
:icon_idea: சரி மின்னல், நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு இதெல்லம் சின்ன வேலை. 200,000 புலிகள் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று கூறுபவர்களுக்கு விமானங்களை அழித்ததாகக் கூறுவது அவ்வளவு ஒன்றும் கஷ்ட்டமான வேலை இல்லை.
  • தொடங்கியவர்

:icon_idea: சரி மின்னல், நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு இதெல்லம் சின்ன வேலை. 200,000 புலிகள் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று கூறுபவர்களுக்கு விமானங்களை அழித்ததாகக் கூறுவது அவ்வளவு ஒன்றும் கஷ்ட்டமான வேலை இல்லை.

கஸ்டமான வேலை இல்லை என மொட்டையாக சொல்ல வேன்டாம் நண்பரே சிங்களவனை ஏமாற்றுவது கஸ்டம் இல்லை என சொல்லவும்.நம்ப சிங்களவன் தயாராகவே இருகிறான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.