Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழில் வழிபாடு,சட்டப்படியும் ஆகமப்படியும் சரியானதே -நீதியரசர் சந்துருவின் தெளிவான தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் வழிபாடு

சட்டப்படியும் ஆகமப்படியும் சரியானதே

நீதியரசர் சந்துருவின் தெளிவான தீர்ப்பு

-பூங்குழலி

chandruvw1.jpg தமிழில் வழிபாடு நடத்துவது சட்டப்படியும் ஆகமப்படியும் சரியானதே” என பல வித மேற்கோள்களின் அடிப்படையில் அண்மையில் நீதியரசர் சந்துரு தெளிவான தீர்ப்பினை அளித்துள்ளார்.

தமிழக கோயில்களில், சமஸ்கிருதத்தில் அல்லாமல் தமிழில் அர்ச்சனை செய்வது, இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 25லிஇன் கீழ் வழங்கப்படும் இந்து மத உரிமைகளை மீறுவதாகும் என இந்துக் கோயில்கள் பாதுகாப்புக் குழு என்னும் அமைப்பின் தலைவர் என கூறிக் கொள்ளும் சிவக்குமார், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரகோச மங்கை கோயிலில் பரம்பரை அர்ச்சகராக இருக்கும் பிச்சை பட்டர் எனும் இருவர் இரு தனித் தனி வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இவ்வழக்குகளின் மீது கடந்த மார்ச் 19 அன்று தீர்ப்பளித்த நீதியரசர்கள் சந்துரு மற்றும் எலிப்பி தர்மா ராவ் ஆகியோர் நீண்ட தெளிவானதொரு தீர்ப்பினை அளித்துள்ளனர். அத்தீர்ப்பின் முழு விவரம் வருமாறு:

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரத்தினை கையில் எடுப்பதற்கு முன் 'இந்து மதம்' என்பதை புரிந்து கொள்வது அவசியம்.

இந்து மதத்தை பற்றி நினைத்தால், அதனை விவரிப்பதோ போதுமான அளவு விளக்குவதோ மிகவும் கடினமானது. இந்து மதம் தனக்கென ஒரே ஒரு வழிகாட்டியை கொண்டிருக்க வில்லை. ஒரு கடவுளை வணங்குவ தில்லை. ஒரு குறிப்பிட்ட வழிமுறையை பின்பற்றுவதில்லை. ஏதோ ஒரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வில்லை. ஒரு வகையான மத சடங்குகளை பின்பற்றுவதில்லை. சொல்லப் போனால் ஒரு மதம் அல்லது குழுவிற்கான மரபு கூறுகளை அது கொண்டிருக்கவே யில்லை. அதை ஒரு வாழ்வியல் முறை என்பதைத்தாண்டி வேறு எவ்விதத்திலும் அழைக்க இயலாது.

இந்திய தத்துவயில் எனும் நூலில் டாக்டர் இராதா கிருஷ்ணன் கீழ்க்காணுமாறு உரைக்கிறார் :

'பல்வேறு இந்து சிந்தனை யாளர்கள் மற்றும் தத்துவயி யலாளர்கள் பல் வேறு விடயங்களில் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்ட போதிலும், வேறுபட்ட கருத்துக்களும், வேறுபட்ட பார்வைகளும் ஒரே அடிப்படை உண்மையை விளக்குவதாகவே உள்ளன. அவை அனைத்தும் ஒரே மரத்தின் கிளைகளாகவே உள்ளன.'

இந்த அடிப்படையில் ஆகமத் தின் அடிப்படையில் தமிழ் வழி பாடுகளை கேள்விக்குள்ளாக்குவது ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்பது ஆராயத்தக்கது. ஆகமங்கள் என்பவை வழிபாட்டு நெறிமுறை களை வகுக்கின்றன. இறைவன் மீது பக்தி கொண்டவர்களை இறைவனை அடையும் வழியை நோக்கி வழிநடத்துகின்றன.

மனுதாரர்கள் தேவநாகரி மட்டுமே வழிபாட்டிற்குரிய ஒரே மொழி எனவும் தமிழ் வழிபாடு என்பது இந்து மதத்தால் அங்கீ கரிக்கப்படாத ஒன்று எனவும் கூறு கிறார்கள். ஆனால் இந்த கருத்துக்கு எதிரான கருத்துக்கள் தமிழ்நாட்டின் வரலாறு நெடுகிலும் பல்வேறு காலக்கட்டங்களிலும் வெளிப் படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.

பத்து நூற்றாண்டுகளுக்கு முன் பக்தி மறுமலர்ச்சி இயக்கம் செயல் பட்ட காலத்திலேயே சைவத்தையும் வைணவத்தையும் பரப்புவதற்கு தமிழே பயன்படுத்தப்பட்டது. சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சைவத்தை பரப்பும் பொருட்டே தேவரமும் திருவாசகமும் எழுதப்பட்டன. தமிழ் வேதங்கள் என அறியப்பட்ட இவற்றை சைவ கோயில்களில் பாடுவதற்கு மடங்கள் தோற்று விக்கப்பட்டன. இதற்கு எந்த வகையிலும் மறுப்போ எதிர்ப்போ அக்காலக்கட்டத்தில் எழும்பவில்லை.

பாரதிதாசன் தனது கோயிலார் எனும் பாடலில் கோயில்களில் தமிழ் அனுமதிக்கப்படாதது குறித்த தனது கோபத்தை இவ்வாறு வெளிப் படுத்துகிறார்.

'உயிர் போன்ற உங்கள் தமிழ்

கடவுளுக்கே உவப்பதால் இல்லை போலும்

உயிர் போன்ற உங்கள் தமிழ்

உரைத்தக்கால் கடவுளதை ஒப்பார் போலும்

திருப்படியில் நின்றபடி செந்தமிழில்

பெரும்படியார் அருளிச் செய்த

உருப்படியை அப்படியே ஊரறியும் படி

யுரைத்தால் படியும் நெஞ்சில்'.

மனுதாரர் இதற்கு முன்பே ஒரு முறை இதே போன்ற மனு ஒன்றை தாக்கல் செய்து அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப் பட்டிருக்கிறது. இந்த உண்மையை அவர் மறைத்திருக்கிறார்.

தற்போது மனுதாரர் தன் தரப்பு வாதங்களாக கீழ்க்காணுபவற்றை முன் வைக்கிறார்.

1. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பல 3, 4 நூற்றாண்டுகள் பழமையானவை. சில 1000 ஆண்டு வரலாறு உடையவை. இக்கோயில்களில் மரபாக சில குறிப்பிட்ட குடும்பத்தினரே பூசைகளையும் விழாக்களையும் நடத்தி வந்தனர். கோயில்களை கட்டியவர்கள் கோயில்களின் நிருவாகத்திற்கும் பூசைகளுக்கும் பயன்படுமாறு பலவித மானியங்களையும் நிலங்களையும் வழங்கியிருக்கின்றனர். கோயில்களை நிருவகிப்பதற்காக இந்து அறநிலையத் துறை பாதுகாப்புச் சட்டம் இயற்றப் பட்டப் பிறகு, நிருவாகம் என்ற பெயரில் இது நாள் வரை கோயில்களில் வழங்கி வந்த நடைமுறைகள் சடங்குகள் வழிபாட்டு முறைகள் இவற்றில் தலையிடும் உரிமை அரசுக்கு இல்லை.

2. அரசு கோயில் குருக்கள்களையும் அர்ச்சகர்களை தமிழில் அர்ச்சனை செய்ய வற்புறுத்துகிறது. கும்பாபிஷேகங் களையும் தமிழில் செய்ய வலியுறுத்துகிறது. லிங்க வழிபாடு சிவன் வழிபாடாக கொள்ளப்படுகிறது. எவ்வாறு லிங்கத்தை மாற்றி வேறு வடிவத்தை வைத்து வழிபட இயலாதோ அவ்வாறே மொழியை மாற்றி வேறு மொழியில் வழிபடுவதும் அடிப்படை நம்பிக்கைகளுக்கே முரணானதாகும். தமிழ் வழிபாடு குறித்த அரசின் உத்தரவுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என வெளிப்படையாக அரசு அறிவித்த போதும், நிருவாக ரீதியாக அர்ச்சகர்களும் பூசாரிகளும் தமிழில் வழிபாடு நடத்தியே ஆக வேண்டும் என அச்சுறுத்தப்படுகின்றனர்.

3. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25, ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை தாங்கள் விரும்பியபடி பின்பற்றிக்கொள்ளும் உரிமையை அளிக்கிறது. அதனால் சம்ஸ்கிருத மந்திரங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் தாங்கள் சொந்தமாக கோயில்களை கட்டிக் கொண்டு அவற்றில் தமிழில் வழிபாடு நடத்திக் கொள்ள வேண்டும். மாறாக ஏற்கெனவே நடைமுறையில் உள்ளவற்றில் மாறுதல் ஏற்படுத்தக் கூடாது. அது பிரிவு 25 அளிக்கும் உரிமைகளை மறுப்பதாகும். ஆகமத்திற்கு எதிரானதாகும்.

மனுதாரரின் இந்த வாதங்களுக்கு பதிலாக அரசு கீழ்க்காணும் வாதங்களை முன் வைத்துள்ளது.

1. தமிழில் அர்ச்சளை செய்யவேண்டும் என அர்ச்சர்களோ பூசாரிகளோ வற்புறுத்தப்படவில்லை. மாறாக அது பக்தர்களின் விருப்பத்திற்கே விடப்பட்டுள்ளது. பக்தர்கள் எந்த மொழியில் நடத்த விரும்புகிறார்களோ அம்மொழியில் வழிபாட்டினை நடத்த வேண்டும் என்று மட்டுமே உத்தரவிடப்பட்டிருக்கிறது.

2. உச்சநீதிமன்றம் 1992லிஇல் அளித்த ஒரு தீர்ப்பில் தமிழ் வழிபாடு மரபான வழிபாட்டு முறைகளை மீறாத வண்ணமே கடைப்பிடிக்கப்படுவதாக கூறியுள்ளது. கற்றறிந்த முனிவர்களின் மொழியே கடவுளின் மொழி என தொல்காப்பியம் கூறுவதையும் அது சுட்டிக்காட்டியிருந்தது. பழந்தமிழ் இலக்கியமான திருமறை, சிவ பெருமான் தனது பக்தர்கள் தமிழில் பாடி வழிபடுவதை மிகவும் விரும்பினார் என உரைக்கிறது. ஆறுகால பூசைகளை பொருத்த வரையில் கற்றறிந்த புலவர்களை கொண்ட ஒரு குழுவின் ஆலோசனைப் படி, ஆகம விதிகளை மீறாமல் நடத்தப்படுகிறது. இதனை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது.

2. தமிழ்நாட்டில் உள்ள மதத் தலைவர்களும் மடாதிபதிகளும் தமிழில் அர்ச்சனை செய்யப்படுவதை ஒரே குரலில் வரவேற்றுள்ளனர். வைணவத்தில் அதீத புலமை யுடையவராக கருதப்படும் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தட்டாச்சாரியார், அர்ச்சனைகள் என்பவையே ஆகம விதிப்படியானவை இல்லை என்றும் அவை பக்தர்களின் திருப்திக்காகவே நடத்தப்படுகின்றன என்றும் கூறியுள்ளார். பழங்காலம் தொட்டு தேவநாகரி தமிழ் இரண்டுமே வழிபாட்டு மொழிகளாக இருந்துள்ளன.

3. பக்தர்கள் தமிழில் அர்ச்சனை செய்யக் கோரினால் அதை நிறைவேற்ற அர்ச்சகர்களுக்கும் தமிழ் வழிபாட்டு முறைகள் தெரிந்திருக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே அர்ச்சகர்கள் தமிழ் வழிபாட்டு முறைகளை அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மனுதாரர் தானே ஒரு பரம்பரை அர்ச்சகராக இருக்கும் நிலையில் சமற்கிருதத்தின் மீது இருக்கும் அதீத பிடிப்பின் காரணமாகவே தமிழ் வழிபாட்டு முறைகளை கேள்வி எழுப்பியுள்ளார்.

இரு தரப்பினரும் வைத்த வாதங்களில் எந்த ஒரு இடத்திலும் ஒரு குறிப்பிட்ட அரசாணையையோ சட்டத்தையோ கேள்விக்குள்ளாக்க வில்லை. மாறாக பொதுப்படையான கருத்துக்களையே தெரிவித்துள்ளனர்.

'கோயில்களில் பின்பற்றப்படும் ஆகம வழிபாட்டு முறை சமற்கிருதத்தில் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் தேவாரத்திலும் திருவாசகத்திலும் விலை மதிக்க இயலாத தமிழ் வழிபாட்டு இலக்கியங்கள் உள்ளன. இந்த அடிப்படையில் தமிழ் அர்ச்சனைகள் ஊக்குவிக்கப்பட தகுதியானவையே. பொதுவாக மரபான ஆகம முறையே பின்பற்றப்படும். எங்கு அர்ச்சகர்கள் தமிழ் வழிபாட்டு முறைகளிலும் தேர்ச்சிப் பெற்றுள்ளனரோ, எங்கு பக்தர்கள் தமிழ் அர்ச்சனைகளை விரும்புகின்றனரோ அங்கு அந்த முறையில் வழிபாடு நடத்தப்பட வேண்டும்.' - என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் இதே நீதிமன்றம் பிறிதொரு வழக்கில் அளித்தத் தீர்ப்பில் 'சமற்கிருதத்தில் அர்ச்சனை செய்யக் கூடாது என்று அரசாணை சொல்லவில்லை. மேலும் அரசமைப்புச் சட்டம் வழங்கும் மத உரிமைகளையும் மறுக்கவில்லை. மொழி என்பது மத உரிமையில் வராது. ஒரு குறிப்பிட்ட மொழியில் வழங்கப்பட்டால் மட்டுமே அவை மத பழக்கங்கள் ஆகும் இல்லையெனில் ஆகாது என்று எடுத்துக் கொள்ள முடியாது.

ஒரு சமூகம் தனது மதத்தின் கூறுகளாக எவற்றை ஏற்றுக் கொள்கிறதோ அவற்றின் அடிப்படை யிலேயே நீதிமன்றமும் அதனை நோக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வெறும் தத்துவங்களே மதத்தின் முக்கிய கூறாக இருக்கலாம். வேறு சிலருக்கு சடங்குகளும் சம்பிரதாயங்களும் முக்கியமாகப் படலாம். மற்றும் சிலருக்கு வாழ்வியல் முறை மட்டுமே பெரிதாகப் படலாம். ஒரே மத நம்பிக்கை உடையவர்களிடையிலேயே பல்வேறு நடைமுறைகளை இருக்கின்றன.

திருவிதாங்கூர் தேவசம் போர்டில் மலையாள பார்ப்பனர்களை தவிர பிறரை அர்ச்சகர்களாக நியமிப்பது குறித்து சிக்கல் எழுந்த போது உச்சநீதிமன்றம் அவ்வாறு பார்ப்பனர் களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. பார்ப்பனர் அல்லாதவர்கள் அர்ச்சகர் களாக ஆக இயலாததற்கு காரணம் அவர்களுக்கு வேத மந்திரங்களை கற்கவும் ஓதவுமான உரிமைகள் மறுக்கப்பட்டிந்ததேயாகும்.

மேற் கண்டவற்றின் அடிப்படையிலும், முன்பே வந்த பல தீர்ப்புகளின் அடிப்படையிலும், கோயில்களில் தமிழில் மந்திரங்கள் உரைப்பதை ஆகமங்களோ அல்லது வேறு எந்த மத நூல்களோ எதிர்க்கவில்லை என்பது தெளிவாகிறது. உண்மையில் இது ஒரு புதிய முறை அல்ல. மாறாக பழமையாக வழங்கி வந்த முறையே ஆகும்.

அத்தோடு வழிபாட்டு மொழி யினை தேர்ந்தெடுக்கும் உரிமை பக்தர்கள் வசமே உள்ளது. இது எவ்வகையிலும் பழமையான வழிபாட்டு முறைகளை மாற்றி அமைப்பது ஆகாது. அரசு பக்தர்களுக்கு அளிக்கும் கூடுதல் வசதியாகவே இது கருதப்பட வேண்டும்.

கடவுளுக்கு தேவநாகரி மட்டுமே தெரியும், தமிழ் அதற்கு தகுதியுடையது அல்ல என்ற தோற்றத்தை மனுதாரர்கள் ஏற்படுத்த முயற்சிப்பது புறந்தள்ளத் தக்கது. அந்த கருத்துக்கு மத நூல்களில் எவ்வித அடிப்படையும் இல்லை.

இத்தனைக்கும் பிறகும் மனுதாரர்களின் வேண்டுகோள் ஏற்கப்படுமானால், அது இந்து மதம் வெறுமனே நம்பிக்கைகளின் அருங்காட்சியகமாக மாறுவதற்கு மட்டுமே வழிவகுக்கும்.

-தென் செய்தி

பழங்காலம் தொட்டு தேவநாகரி தமிழ் இரண்டுமே வழிபாட்டு மொழிகளாக இருந்துள்ளன

பத்து நூற்றாண்டுகளுக்கு முன் பக்தி மறுமலர்ச்சி இயக்கம் செயல் பட்ட காலத்திலேயே சைவத்தையும் வைணவத்தையும் பரப்புவதற்கு தமிழே பயன்படுத்தப்பட்டது. சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சைவத்தை பரப்பும் பொருட்டே தேவரமும் திருவாசகமும் எழுதப்பட்டன. தமிழ் வேதங்கள் என அறியப்பட்ட இவற்றை சைவ கோயில்களில் பாடுவதற்கு மடங்கள் தோற்று விக்கப்பட்டன. இதற்கு எந்த வகையிலும் மறுப்போ எதிர்ப்போ அக்காலக்கட்டத்தில் எழும்பவில்லை.

அத்தோடு வழிபாட்டு மொழி யினை தேர்ந்தெடுக்கும் உரிமை பக்தர்கள் வசமே உள்ளது. இது எவ்வகையிலும் பழமையான வழிபாட்டு முறைகளை மாற்றி அமைப்பது ஆகாது. அரசு பக்தர்களுக்கு அளிக்கும் கூடுதல் வசதியாகவே இது கருதப்பட வேண்டும்.

கடவுளுக்கு தேவநாகரி மட்டுமே தெரியும், தமிழ் அதற்கு தகுதியுடையது அல்ல என்ற தோற்றத்தை மனுதாரர்கள் ஏற்படுத்த முயற்சிப்பது புறந்தள்ளத் தக்கது. அந்த கருத்துக்கு மத நூல்களில் எவ்வித அடிப்படையும் இல்லை

மிகச்சரியான தீர்ப்பு.

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்குள்ள மத உரிமைகளை அங்கீகரித்து அவர்களுக்குள்ள மொழி உரிமைகளையும் பாதுகாத்து நிற்கிறது தீர்ப்பு.

நல்ல தீர்ப்பு.

உண்மையில் நீதியான தீர்ப்பு.

இது போலவே சேது கால்வாய் விடயத்திலும் நியாயமான தீர்ப்புக் கிடைக்க வேண்டும்.

உண்மையில் நீதியான தீர்ப்பு.

இது போலவே சேது கால்வாய் விடயத்திலும் நியாயமான தீர்ப்புக் கிடைக்க வேண்டும்.

நீதவானின்ர தீர்ப்பு சரிதான் இனி ஏற்றுக்கொள்ள எல்லாரும் தயாரா ???

:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.