Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடருந்தில் குண்டுவெடிப்பு: 9 பேர் பலி- 73 பேர் படுகாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன்,

கிழக்கில் பிள்ளையான் குழுவின் சாதனைகள் பற்றி நீங்கள் கூறியதுடன் எனக்கு உடன்பாடில்லை. 1989 இல் இருந்த வடக்குக் கிழக்கு மாகாணசபைக்கும் இன்றுள்ள கிழக்கு மாகாணசபைக்கும் உள்ள வேறுபாடு என்ன. அன்றைக்கு 125,000 இந்தியப் படைகளை வடக்குக் கிழக்கில் ஆக்கிரமிக்க வைத்துக்கொண்டுதான் வரதர் முதலமிச்சரானார். இன்று கிழக்கில் சுமார் 35,000 சிறிலங்கா ராணுவம் சுற்றியிருக்க பிள்ளையான் முதலமைச்சர் கதிரையில் இருக்கிறான். சிங்கள அர்சின் பாதுகாப்புப் பிரதேசத்துக்கு வெளியில் நடமாட அவனால் முடியாது. 1989 இல் இந்தியப்படை வெளியேறியபோது வரதரும் அவனது பல்லாயிரக்கணக்கான தமிழ் தேசிய ராணுவமும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனதும் உங்களுக்கு மறந்து போக வாய்ப்பில்லை.

இன்னொரு விடயம், பதில் தாக்குதல்களால் என்னத்தைக் காணப்போகிறோம் என்று கேட்கிறீர்கள். அப்ப தமிழர் கொல்லப்படுவதைத் தடுக்க என்னதான் வழி ? ஏதாவது யோசித்து வைத்திருக்கிறீர்களா ? சிங்களவனை யாரும் தடுக்காவிட்டால் அவன் சந்தோஷமாகத் தமிழர்களைக் கொன்று குவிப்பானே? இப்போது ஒரு தாக்குதல் நடத்துமுன் சற்று யோசிக்கவாவது செய்வான்.

வெருமனே "இத்தாக்குதல்களால் என்னத்தைக் காணப் போகிறீர்கள்" என்று சப்பைக் கட்டு கட்டுவதை விடுத்து என்ன செய்ய வேணுமெண்டு சொல்லுங்கள். எப்படியாவது கொத்துக் கொத்தாக தமிழர் வேட்டையாடப் படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் அவ்வளவுதான்.

  • Replies 61
  • Views 7.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் புரியும் நரவேட்டையைப் பார்த்துக்கொண்டும், பொறுத்துக்கொண்டும் இருந்தால் நீங்கள் கூறும் சர்வதேசம் ஓடோடி வந்து எமக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தருமா?

ஈராக்கில் அப்பாவிகளை கண்மண் தெரியாமல் சகட்டு மேனிக்குக் கொன்றுதள்ளும் அமெரிக்கா தானே உங்கள் சர்வதேசம்? ஆப்கானிஸ்த்தானில் அப்பாவிகளை குண்டு போட்டுக் கொல்லும் நேட்டோவும் அதன் நேச நாட்டுப் படைகளும் தானே உங்கள் சர்வதேசம்? செச்னியாவில் உரிமை கேட்டு ஓலமிடும் மக்களை கொன்று குவித்த ரஷ்ஷியாதானே உங்கள் சர்வதேசம் ? திபேத்தில் அந்நாட்டு மக்களை ஆக்கிரமித்து நிற்கும் சீனாதானே அந்தச் சர்வதேசம் ? பஞ்ஜாப்பிலும் கஷ்மீரிலும் தன்னாட்டு மக்களையே வேட்டையாடும் இந்தியா தானே அந்தச் சர்வதேசம் ?

வேண்டாம் விட்டு விடுங்கள். இந்தச் சர்வதேச நியதிகளால் எமது மக்களைக் காப்பாற்றவோ, எமக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தரவோ முடியாது. இவர்களால் முடிந்தது இன்னும் இன்னும் சிறிலங்கா பேரினவாத அரசின் யுத்த முயற்சிகளுக்கு துணை போய் தமிழரை கொன்று குவிப்பதில் பங்கு கொண்டதுதான்.

குண்டு வெடிச்சு செத்து போட்டுதுகள் சனங்கள்...

இப்ப இங்க ஆராய்வது செத்தவங்களை எரிப்பதற்கா அல்லது புதைப்பதற்கா?

என்ன? இன்னும் கொஞ்சநாள்ள வன்னில குண்டை வைப்பாங்கள் அல்லது போடுவாங்கள்... அப்ப வந்து அழுங்கோ... அஞ்சலியையும் செலுத்துங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

ஞருழுவுநு(சாணக்கியன் @ ஆயல 27 2008இ 11:57 யுஆ)

எந்த தரவுகளின் அடிப்படையில் இவற்றை நீங்கள் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை? உங்கள் கருத்தை பலப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு எழுந்தமானமான முறையில் எழுதுவதை தயவு செய்து தவிருங்கள். முன்புபோலன்றி முழு இலங்கையும் ஆயுதப்படைகள்இ துணைப்படைகள்இ மக்கள் பாதுகாப்பு குழுக்கள் என்று நிரம்பி வழிகிறது. பிள்ளையான் குழு புலிகளை உடைத்து கிழக்கு தமிழ் இளைஞர்களை கொண்டு கிழக்கை ஆயுதமுனையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. முன்னர் உச்சரித்த தந்திரோபாய பின்னகர்வுஇ பொறி என்ற சொற்பிரயோகங்களை இப்போது காணக்கிடைக்கவில்லை.

வருடம் தோரும் பிரபாகரனின் மாவீரர் உரையில்இ சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுப்பது எதற்காக?

சர்வதேச அங்கிகாரம் எமக்கு தேவையா இல்லையா?

அமெரிக்காஇ ஐ.நாஇ ஐ.ஒ போன்றவற்றின் ஆதரவு இல்லாமல்இ பயனுள்ள சுதந்திரம் கிடைக்குமா?

சாணக்கயனிடம் ஒரு கேள்வி

நீங்கள் குறிப்பிடும்

இதில் எவராவது........

எந்த விடுதலைப்போராட்டத்தையாவது.....

பயங்கரவாதம்....அது.....இது...

என்று சொல்லாமல்....வெருட்டாமல்.....

குழிபறிக்காமல்...

கடைசிமட்டும் அழக்கமுயற்சிக்காமல்......

எடுத்த உடனேயே ......

அங்கீகரித்துள்ளார்களா???

அல்லது விடுதலையடைந்த தேசங்கள் எதுவும் தடியால் கூட எவரையும் அடித்ததில்லையா???

எது எப்படியோ........

இலங்கையில் தமிழர்கள் வெட்டப்படுவது குறைந்தது, சிங்களவர்கள் வெட்டு வாங்க தொடங்கியபின்னர்தானுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ........

இலங்கையில் தமிழர்கள் வெட்டப்படுவது குறைந்தது, சிங்களவர்கள் வெட்டு வாங்க தொடங்கியபின்னர்தானுங்கோ...

எதிர்க்கருத்து உண்டா???

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போலவே நெடுக்கர்,

நெடிய கதைகள் நிறைய பேசி, சிறிய எனது கேள்விக்கான பதிலை தொலைத்து நிற்கிறார்!

திட்டமிடாத, அரசியல், இராணுவ, பொருளாதார இலக்குகளை தாக்காத, பொதுமக்களை தமிழர் சிங்களவர் என்ற பேதமில்லாமல் தாக்கும் இந்த குண்டு வெடிப்புகள் பிரச்சனையை தீர்க்க உதவுமா? ஆம் எனில் அது எப்படி?

பொதுமக்கள் இலக்காகபட்டால் அது எவ்வாறான காரணுத்துக்கானதாயினும் கண்டனத்திற்குரியதே! இந்த இரயில் குண்டுவெடிப்பு இந்திய-பிள்ளையான் கூட்டுவேலை தவிர இதற்குள் போகுமளவிற்கு இன்னமும் புலிகள் பலமிளந்துவிடவில்லை. புலிகளின் இலக்கு சிங்கள பொதுமக்களாயின்???? இன்னொரு ருவாண்டா இலங்கையில் எப்போதோ வந்திருக்கும். புலிகளின் பொறுமை அவ்வளவு சிறிதானதாயின்...... மணலாற்று தொடர் சிங்கள குடியேற்றங்கள் புலிகளின் ஆட்லறி இலக்குக்குள்தான் இருக்கின்றன எப்போதோ பிச்சைவேண்டாம் நாயைபிடி எனும் நிலை வந்திருக்கும்.

***

நீங்கள் என்ன நியாயம் சொல்ல வருகின்றீர்கள் எவ்வளவு துன்பங்களை சிங்களவன் தந்தாலும் தமிழர் அப்படியே அதை வாங்கி வைத்து விட்டு உட்காந்திருக்கவேண்டும்??? ஆக துயரங்களை வேண்டி வைப்பதை தவிர வேறுவழி எமக்கில்லை? அதே துயரங்களில் கொஞ்சத்தை துக்கி எங்களுக்கு இது போதும் மீதியை பிடியுங்கள் என்று கொடுக்கு முன்னமே.............. வந்து விடுகிறீர்கள் அரசியல் ரீதியில்....... ராணுவரீதியில் என்ன லாபம்???? அது இப்போதைக்கு எமக்கு தேவையில்லாத கணக்கு என்றுதான் நான் நினைக்கிறேன். இப்போது வேண்டியதெல்லாம் சிங்கள கொலைவெறிகொண்ட நாய்களுக்கு பொருளாதார அழிவுகளே........ அது நடந்ததா? அதுதான் வேண்டும். காரணம் சிங்களவனால் புலிகளை எட்டியும் பார்க்க முடியாது ஆனாலும் உலகத்தில் ஒரு எட்டப்பன் கூட்டமிருக்கிறது. அதுதான் நாங்கள் தருகிறோம் நீ அடி என்று உந்திவிடுகின்றது இது சொந்தமாக நெல்லை அரிசியாக்க தெரியாத மூட்டாள் என்று நான் சொல்லவில்லை இலங்கை ஜனாதிபதியே அதை அடிக்கடி தனதுவாயால் சொல்லுவார். பொருளாதார அழிவு எப்படி? இப்போது இரயிலிலே வெறும் ஒரு கிலோ குண்டுதான் வெடித்தது........... இனி ஒடும் ஒவ்வொரு இரயிலையும் பாதுகாக்க வேண்டுமே......... பாதுகாப்பு செலவு பல கோடி வேண்டும்? கொடுப்பவர்கள் எதுவரைக்கும் கொடுப்பார்கள் என்றும் நாம் பார்க்க வேண்டாமா? பாதுகாப்பு கெடுபிடி ஒரு மணிநேரத்தை சிங்களவர்களின் பயணத்தை தாமதித்தாலே......... கணக்கை டொலருக்கு மாத்தினால்தான் பார்க்க எனக்கும் உங்களுக்கும் இலகு.

Edited by இணையவன்
*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

அதை பிரபாகரனிடமும், பொட்டுஅம்மானிடமும் தான் கேட்டு உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தியாவும் பிள்ளையானும் சேர்ந்து வைக்கும் குண்டுக்குள்.......... உங்களால் எவ்வாறு பிரபாகரனையும் பொட்டுஅம்மானையும் இலகுவாக இழுக்க முடிந்தது?

நெடுக்கு மற்றும் இரகுநாதன்,

உங்கள் பதில்களுக்கு நன்றி, எனினும் காலம் சொல்லப் போகின்ற பதிலுக்காக காத்திருப்போம்.

அன்புடன்,

இந்தியாவும் பிள்ளையானும் சேர்ந்து வைக்கும் குண்டுக்குள்.......... உங்களால் எவ்வாறு பிரபாகரனையும் பொட்டுஅம்மானையும் இலகுவாக இழுக்க முடிந்தது?

தென்பகுதியில் குண்டுவைப்பது யார் என்ற புதிய திசைக்கு விவாதத்தை திசைதிருப்பும் முயற்சியை தடுப்பதற்காகவே கூறினேன்.

புலிகள் செய்தார்களா இல்லையா என்பதை பற்றி உறுதிப்படுத்த அவர்களிடம் கேட்பதை தவிர வேறு வழிகள் இல்லை. ஆரம்பம் முதல் இங்கு பதிந்த கருத்துகள் அனைத்தும், வடபகுதியில் நடைபெறும் தாக்குதல்களுக்கு பதிலடியாகத்தான் இது நடைபெறுவதாக நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறியுள்ளனர்.

***

Edited by இணையவன்
*** மேற்கோள் காட்டப்பட்ட கருத்து தணிக்கை செய்யப்பட்டதால் அதற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது. - இணை

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு மற்றும் இரகுநாதன்,

உங்கள் பதில்களுக்கு நன்றி, எனினும் காலம் சொல்லப் போகின்ற பதிலுக்காக காத்திருப்போம்.

அன்புடன்,

இப்படி எமக்குள் நாம் வெட்டிக்கொண்டால்........

காலம் எப்போ??????

திட்டமிடாத, அரசியல், இராணுவ, பொருளாதார இலக்குகளை தாக்காத, பொதுமக்களை தமிழர் சிங்களவர் என்ற பேதமில்லாமல் தாக்கும் இந்த குண்டு வெடிப்புகள் பிரச்சனையை தீர்க்க உதவுமா? ஆம் எனில் அது எப்படி?

அதிலை உங்களுக்கு என்ன சந்தேகம்...?? எரிபொருள், அரிசி, போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை இப்படியான தாக்குதல் மறக்கடிக்க செய்யும் என்பதோட அடுத்த உயர்வு வரை பெரிய அளவில் எதிர்ப்பு வராமல் செய்யும்...

அதுக்காகத்தான் மகிந்தவின் என்ன விலை கொடுத்தாவது பயங்கரவாதத்தை அளிப்பேன் எண்று (( விலைகளை உயர்த்தி வரிகளை போட்டு)) அலறுக்கிறார்....!! மக்களை திசை திருப்புகிறார்..

இந்த விலை உயர்வு எதுக்குள் கொண்டு செல்லும் எண்றால் ( கீழிருக்கும் இணைப்பை கேழுங்கள்)

http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...052008/Nvee.mp3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.