Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி கோசிப் 43

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் சிட்னியில் நடைபெற்ற தமிழ் இசை அமுதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் மிகவும் எளிமையாக கனீர் என்ற குரலில் தமிழ் பாடல்களை பாடினார் கேட்டு இரசிக்க கூடியதாக இருந்தது.அதை ஒழுங்கு செய்தவர்கள் எளிமையாக ஒழுங்கு செய்து இருந்தார்கள் ஆடம்பரங்கள் அற்ற வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது பக்க வாத்திய கலைஞர்கள் எல்லாரும் சிட்னியில் வாழ்வோர்கள்.இதுவரை தவிர ஏனையோர் சிட்னியில் பிறந்து வளர்ந்தவர்கள்.பாடகரின் பாலிற்கு ஏற்ற வகையில் அவர்கள் தங்கள் பக்க வாத்தியங்களை இசைத்தார்கள் பாராட்டதக்க வேண்டியதொன்று.

பாடகரின் மகன் செந்தூரனும் தந்தைக்கு ஈடாக பாடினார். இதில் பங்குபற்றிய எல்லோரும் தமிழர்கள்.தமிழிசை அமுதத்தில் தமிழன் இல்லாமல் வெள்ளையனும்,சிங்களவனும் வருவானோ என்று நீங்கள் திட்டுவது விளங்குது நான் என்ன சொல்ல வாறேன் என்றா இந்த நிகழ்வில் "டமிழ்ஸ்" கலந்து கொள்ளவில்லை.

வழமையான கச்சேரிகள் என்றால் அகல கரை வேட்டியும்,ஜிப்பா,குருத்தா,க

அப்ப நீங்கள் ஒரு டமிழ் இல்லையோ புத்துமாமா? நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு என்ன உடுப்புபோட்டுக்கொண்டு போனனீங்கள்? முக்கியமா கோவணம் கட்டிக்கொண்டு போனனீங்களோ? தமிழர் எண்டால் கோவணம் கட்டவேணும் எண்டு ஒரு பகுதி ஆக்கள் சொல்லுறீனம். அதான் கேட்கிறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சில "டமிழ்ஸ்" வந்தார்கள் அவர்கள் இவரின் மாணவிகள் என்ற ரீதியில் கலந்து கொண்டார்கள்.

அப்ப நீங்கள் ஒரு டமிழ் இல்லையோ புத்துமாமா? நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு என்ன உடுப்புபோட்டுக்கொண்டு போனனீங்கள்? முக்கியமா கோவணம் கட்டிக்கொண்டு போனனீங்களோ? தமிழர் எண்டால் கோவணம் கட்டவேணும் எண்டு ஒரு பகுதி ஆக்கள் சொல்லுறீனம். அதான் கேட்கிறன்.

முரளி இதை நகைச்சுவைக்காக எழுதினீர்களா அல்லது புத்தன் சொல்லிய விடயத்தில் உங்களுக்கு உடன்பாடில்லாமல் எழுதினீர்களா? எனக்கு விளங்கவில்லை.

புத்தனும் நீங்கள் ஆரம்பித்த இந்த தலைப்பில் இருக்கும் விடயமான

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry413870

எமது மக்கள் எமது கலைஞர்களுக்கு ஆதரவு கொடுப்பதில்லை. இந்திய கலைஞர்கள் என்றால் எந்த தகுதியும் இல்லாது தூக்கி பிடிக்கிறார்கள் என்பதை தான்.

ஒரே விடயத்தை இரண்டு பேர் இரண்டு விதமாக அணுகியிருக்கிறீர்கள்.

அங்கு ஆதங்கப்பட்டு தலைப்பு தொடங்கிய நீங்கள் இங்கு புத்தனை கிண்டல் செய்திருப்பது போல் இருப்பதால் ஒரு தெளிவு படுத்தலுக்காக மட்டுமே இதை கேட்கிறேன். வேறு எந்த உள் நோக்கமும் இல்லை.

Edited by KULAKADDAN

புத்துமாமா எழுதும் ஒவ்வொரு கோசிப்பையும் வாசிச்சு நான் கருத்து கூறி வருகின்றேன் குளக்காட்டன். இங்கு நான் புத்துமாமாவின் ஆக்கத்தை பார்த்து கேள்வி கேட்கவில்லை. இப்ப ஆக்கள் தனித்தமிழ், மற்றது கோவணம் எண்டு சொல்கிகொண்டு திரியுறீனம். அதுபற்றித்தான் கேட்டன்.

நான் புத்துமாமாவின் ஆக்கங்களை ஆர்வத்துடன் வாசிக்கும் விசயம் புத்துமாமாவுக்கும் தெரியும், அங்க (பழைய கோசிப்புகளில்) நான் எழுதியுள்ள பதில் கருத்துக்களை, மற்றது புத்துமாமா எழுதிய ஏனைய ஆக்கங்களுக்கு நான் எழுதிய பதில் கருத்துக்களை வாசிச்சு பார்த்தாலும் தெரியும். :wub:

யாழில புத்துமாமாவின் சில கோசிப்புக்கள் தூக்கப்பட்டபோது நான் எனது கடுமையான எதிர்ப்புகுரல் கொடுத்து இருந்தேன். என்ன புத்துமாமா நான் சொல்லிறது சரிதானே? ஓம் எண்டு ஒருக்கால் வந்து சொல்லிவிடுங்கோ. :D

உங்களுக்கு இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லவேணும் எண்டால்..

ஒருத்தர் நான் எழுதின ஆக்கங்கள் ஒவ்வொன்றுக்கும் கீழ போய் பல தடவைகள் இப்பிடி எழுதி இருந்தார்.

***

இன்னும்கூடத்தான் இந்தக்கருத்து மட்டறுத்தல் செய்யப்படவில்லை. இதப்பற்றி என்ன நினைக்கிறீங்கள் மகா ஜனங்கள்?

திரும்பவும் நான் வைத்தியரிடம் போய் என்னை ஒருக்கால் பரிசோதிக்கவேணுமாம் எண்டு அண்மையில் மீண்டும் அறிவுரை கூறப்பட்டு இருந்திச்சிது. அதை பிறகு இணையவன் நீக்கி இருந்தார். :wub:

நான் புத்துமாமாவுக்கு இப்படி ஏதும் எழுதி இருக்கிறனா? புத்துமாமா இதவச்சு எனக்காக இன்னொரு கோசிப்பு எழுதிவிடுங்கோ பிளீஸ்... அதாவது யாழ் இணையத்தில ஆக்கங்கள் படைக்கிறது பற்றி.. :D:wub:

எங்களுக்கு ஆட்லறி அடிச்சால் நாம திருப்பி மல்றிபரல் அடிப்போம். சரியோ? :lol:

Edited by இணையவன்
*** மேற்கோள் காட்டப்பட்ட கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளதால் நீக்கப்படுகிறது. - இணையவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமா கோவணம் கட்டிக்கொண்டு போனனீங்களோ? தமிழர் எண்டால் கோவணம் கட்டவேணும் எண்டு ஒரு பகுதி ஆக்கள் சொல்லுறீனம். அதான் கேட்கிறன்.

நான் அதுவும் கட்டவில்லை ஏனேன்றால் கல் தோன்றி மண் தோன்றா காலதிற்கு முன் மூத்த தமிழ் குடிமகன் நான் அதாவது ஆதிவாசி :wub:

கருத்துகளை பகிர்ந்து கொண்ட முரளி தமிழ்தங்கை,குளகாட்டான் ஆகியோருக்கு நன்றிகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில 7,8ம் திகதி தென்னிந்திய கர்நாடக மழை பொழியப் போகிறதாம். மொழி தெரியாத தெழுங்குப் பாடல்களைக் கேட்க டமிழ்ஸ் இப்பவே நுளைவுச் சீட்டுக்களை அதிக விலைக்கு வாங்கத் தொடங்கிவிட்டினம். நிகழ்ச்சிக்கு விலையுயர்ந்த ஆடைகளுடன், அதிக முகப் பூச்சுக்கள் பூசி ஆங்கிலம் கதைத்துக் கொண்டு டமிழ்ஸ் தயாராகினம்.

பொன் சுந்தரலிங்கத்தின் கானமழையில் திளைத்தவர்களில் நானும் ஒருவன். 'என் இனமே என்சனமே' என்ற பாடலைப் பொன்சுந்தரலிங்கம் பாட, ' நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்', 'விண்வரும் மேகங்கள் பாடும்' போன்ற பாடல்களை அவரது மகன் செந்தூரன் அழகாகப் பாடினார். மாத்தளை சோமுவின் சுருக்கமான பேச்சு எல்லோரையும் கவர்ந்தது.

ஓ புத்துமாமா போனீங்களோ

நல்ல பாட்டு எல்லோ உந்த பாட்டு.

அட நம்ம தமிழ்ஸ் அநேகமானோரை சொல்லணுமா தென்னிந்திய கலைஞர் எனில் அவர்களிடம் ஆட்டோகிராப் கூட வாங்குவினம் எல்லோ

உங்கள் (ஏனேன்டா அப்ப தான் சுடிதார் அணிந்து வந்த சொர்க்கங்கள்) செருப்பு போடுகிறவையோ என்று பார்த்து போங்கோ, கருத்தாளம் பகுதியில் உங்கள் படம் வந்தால் தாங்க முடியாது சொல்லிப்போட்டன்.

உங்கள் (ஏனேன்டா அப்ப தான் சுடிதார் அணிந்து வந்த சொர்க்கங்கள்) செருப்பு போடுகிறவையோ என்று பார்த்து போங்கோ, கருத்தாளம் பகுதியில் உங்கள் படம் வந்தால் தாங்க முடியாது சொல்லிப்போட்டன்.

ம்ம்...அவையள் வடிவான செருப்பு எல்லாம் போட்டு கொண்டு தான் வருவீனம் பாருங்கோ :wub: ..கருத்தாளம் படத்தில நம்ம படம் வந்தா உங்களாள முடியாதா..ஆனா அந்த கருத்தாள பகுதியை அவையள் பார்த்தா நம்ம மேல ஆழமான "லவ்ஸ்" வரும் பாருங்கோ.. :lol:

இப்ப பாருங்கோ ஒன்னை இழந்தா தான் இன்னொன்றை பெறலாம் :wub: ..(நம்மளிற்கும் மானம் என்டதிற்கு ரொம்ப தூரம் தானே ஆனபடியா இதற்கு எல்லாம் கவலைபட கூடாது என்ன).. :wub:

புது செருப்பு முதலில வெட்ட தான் செய்யும் கால..(அதற்காக செருப்பை தூக்கி போடலாமா என்ன).. :) .

அப்ப நான் வரட்டா!!

அட...மாம்ஸ் நீங்கள் போனனியளே சொல்லவே இல்ல பாருங்கோ.. :wub: (நேக்கு முதலே தெரியும் நம்ம "டமிழ்ஸ் பொண்ணுங்க" வரமாட்டாங்க என்டு)..அது தான் நான் வரல்ல :( ...பிறகு மாம்ஸ் எனி நம்ம கரிகரன் அங்கிள் வாறார் அல்லோ சிட்னிக்கு அப்ப நான் கட்டாயம் போவம் அல்லோ..(ஏனேன்டா அப்ப தான் சுடிதார் அணிந்து வந்த சொர்க்கங்கள்)..பலவற்றை தரிசிக்கலாம் பாருங்கோ..

மற்றது மாமா சிட்னி டமிழ்ஸை பற்றி நீங்க சும்மா குறை சொல்லபடாது சொல்லிட்டன் அவை எவ்வளவு பாவம்..ஏதாச்சும் நிகழ்ச்சி என்டா..(தென்னிந்திய கலைஞர்களின் :wub: )..இந்தியாவில இருந்து காஞ்சிபுரம் பண்ணி போட்டு கொண்டு போறவை தானே அப்படிபட்ட எங்கன்ட ஆட்களை நீங்கள் நையாண்டிபடுத்துறது அவ்வளவு நல்லது இல்ல சொல்லி போட்டன் பாருங்கோ... :(

பிறகு அன்னைக்கு பாருங்கோ மாம்ஸ்..(உந்த சைவமன்றம் நடத்துற போட்டியில வெற்றி பெற்ற பிள்ளைகளுக்கு பரிசு கொடுத்தவை அல்லோ :lol: )..அப்ப நம்மன்ட "சிட்னி டமிழ்ஸ்" எல்லாரும் கட்டாயமா அங்க தானே போகனும் ஏனேன்ட்டா அப்ப தானே அங்க போய் படம் எடுத்து "படம்" காட்டலாம் என்ன நான் சொல்லுறது..(உதில பிழையே இல்ல தானே பாருங்கோ).. :wub:

ஓ..நீங்க தேடின காஞ்சிபுரங்கள் எல்லாம் அங்க நின்றவையாம்..( தவறவிட்டிட்யள் போல :) )..சரி..சரி கவலைபடாதையுங்கோ ஏனேன்டா கரிகரன் அங்கிளின்ட நிகழ்ச்சியில பார்த்திட்டா போச்சு தானே...

எவ்வளவு பாவம் நம்மன்ட "சிட்னி டமிழ்ஸ்" அவைய போய் குறை சொல்ல உங்களுக்கு எப்படி தான் மனசு வந்ததோ தெரியல பாருங்கோ..(நான் எப்பவுமே "சிட்னி டமிழ்ஸ்" பக்கம் தான் குரல் கொடுப்பன்).. :(

அன்னைக்கு மட்டும் உந்த பரிசளிப்பு விழா மட்டும் நடகாட்டி கட்டாயமா அந்த "நிகழ்ச்சிக்கு" வந்திருபோம் என்டு நான் சொல்லவில்லை இந்த பதிலை சிட்னி டமிழ்ஸ் சொல்லுவீனம் பாருங்கோ :D ..(இப்ப விளங்கிச்சே அவைய பற்றி எனியாவது குறை சொல்ல வேண்டாம் சொல்லிட்டன்)..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா கோவணம் கட்டுறவன் தமிழன் ஆகிடவும் முடியாது தமிழ் என்று புலம்புறவன் எல்லாம் தமிழ் பற்றாளன் ஆகிடவும் முடியாது"

அப்ப நான் வரட்டா!!

மு.கு -

யாழ்பிரியா மாமி அறிவது "சிட்னி டமிழ்ஸ்" என்பது பாவிக்கபட வேண்டிய சொற்பதம் இதில் மற்றது..சிட்னியில் இருக்கும் டமிழ்ஸ் இப்படி தான் சொல்லுவார்கள் என்பதும்...(அவர்களின் உரையாடலின் படி அவ்வாறு தான் சேர்க்க முடியும் பாருங்கோ).******

நன்றி...!!

Edited by yarlpriya
நீக்கப்பட்டுள்ளது.

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா கோவணம் கட்டுறவன் தமிழன் ஆகிடவும் முடியாது தமிழ் என்று புலம்புறவன் எல்லாம் தமிழ் பற்றாளன் ஆகிடவும் முடியாது"

அப்ப நான் வரட்டா!!

மு.கு -

யாழ்பிரியா மாமி அறிவது "சிட்னி டமிழ்ஸ்" என்பது பாவிக்கபட வேண்டிய சொற்பதம் இதில் மற்றது..சிட்னியில் இருக்கும் டமிழ்ஸ் இப்படி தான் சொல்லுவார்கள் என்பதும்...(அவர்களின் உரையாடலின் படி அவ்வாறு தான் சேர்க்க முடியும் பாருங்கோ).******

நன்றி...!!

முழுவதும் உண்மை... :icon_mrgreen:

மாமாவை சிட்னியில மாம்ஸ் எண்டோ சொல்லிறவேள்? அப்ப மாமிய எப்பிடி சொல்லிறது?

முழுவதும் உண்மை...

மாமாவை சிட்னியில மாம்ஸ் எண்டோ சொல்லிறவேள்? அப்ப மாமிய எப்பிடி சொல்லிறது?

அட...அட கடசியில ஒரு மாதிரி நாம வென்றிட்டோமல குருவே :D ...அப்பாடா இப்ப தான் நிம்மதி..(என்ன பிரச்சினை என்டா குருவே முந்தி எல்லாம் நாம உந்த ஆங்கிலிசு சொற்களை சில சமயம் வேண்டும் என்டும் போட்டிக்கிறன் இல்ல என்டு சொல்ல மாட்டன் பாருங்கோ)... :)

ஆனா நேற்று வந்து நான் எதைச்சையா என்ட கருத்தில ஆங்கிலிசு சொற் பாவணை வந்துவிட்டது :D ...(உங்களுக்கு விளங்கும் என்டு நினைக்கிறன் ஏனேன்டா முந்தியில இருந்து நான் எழுதுற கருத்தை வாசிக்கிற நல்ல உள்ளங்களிள நீங்களும் ஒருத்தரப்பா) :lol: ...என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்..(அரட்டையும் ஒரு கருத்து தானே)..

அப்ப நேற்று சில சொற்கள் என்னை அறியாம வர..(அதை எல்லாம் நீக்கினா எப்படி இருக்கும்)..ம்ம் உங்களுக்கு என்ட பழைய முகம் தெரியும் தானே யாழில.. :lol:

இப்ப நான் அச்சா பிள்ளையா போவோம் என்டு பார்த்தா..தலையில குத்த நினைக்கீனம்... :D (அது தான் நேற்று நாம யாரென்டு காட்டி போட்டோமல)..கருத்து எழுதாத சில பேரே இவ்வளவு யோசிக்கும் போது உதில கருத்து எழுதுற நான் என்ட கருத்த பாதுகாக்க எவ்வளவு யோசிப்பன் விளங்கிச்சோ.. :)

எனி என்ட கருத்தை வெட்டினாலும் நான் கேட்கமாட்டன் ஏனேன்டா ஒருக்கா காட்டியாச்சு தானே..(சரி இத விடுவோம் ஒருத்தனை நன்னவனா இருக்க விடவே மாட்டாங்களே). :D .ம்ம் இணையவன் அண்ணா தான் ரொம்ப பாவம் நேற்று அவருக்கு கொடுத்த அசெளகரியதிற்கு மட்டும் மன்னிப்பு கேட்பன்..(பாவம் அந்த மனுசன்).. :wub:

அத விடுவோம் நீங்க கேட்ட விசயதிற்கு வாரேன்...சிட்னியில மாமாவை வந்து "மாம்ஸ்" என்று கூப்பிடுவீனம் சில பேர் ஒரு படி மேல போய் "மாமு" என்றும் கூப்பிடுவீனம் பாருங்கோ..ஓ மாமிய வந்து "மாமிஸ்" என்டு கூப்பிடலாம் இல்லாட்டி என்ன மாதிரி "கீதா" என்றும் அன்பா கூப்பிடலாம்.. :D

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.