Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை தமிழருக்கு மரணதண்டணை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பஹ்ரெய்னில் பழைய சர்ச்சை காரணமாக ரவி நாகலிங்கம் என்பவர் நித்திரையில் இருந்த பார்த்திபன் ராமசந்திரன் என்பவரை போத்தலினாலும் மட்பாண்ட கருவிகளாலும் தலையில் தாக்கி கொலைசெய்த குற்றத்திற்காக அவருக்கு மரணதண்டணை வழங்கப்பட்டுள்ளது.

பார்த்திபனின் குடும்பத்தினர் நஷ்ட ஈட்டு பணத்தை (blood money) ஏற்க மறுத்ததால் லிங்கம் என்பவரை தூக்கில் தொங்கவிடுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

லிங்கம் இக்கொலையை December 30, 2006இல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Friend sentenced to death for murder

Doha

A Sri Lankan has been sentenced to death for killing a compatriot as he slept, Gulf Times reports.

Ravi Naga Lingam repeatedly smashed Parthiban Rama Chandran in the head with a ceramic instrument and a bottle, because of an old dispute.

He then locked the 22-year-old victim in his room and threw the key into a rubbish bin. The body was discovered three days later.

After the victim’s family refused the accept the blood money, Primary Court Judge Mamon Hamour sentenced Lingam to death by hanging.

The case is automatically lodged for appeal.

Lingam carried out the savage attack on December 30, 2006 at the victim’s company accommodation in Najma.

According to details submitted to the court, ceramic shards were found embedded in the victim’s skull. A medical report said he died of multiple injuries.

At the court hearing, a policeman testified that he had found Chandran’s body on the morning of January 2 following a tip-off.

The officer said the victim was “almost naked” and a forensic report estimated that he had been dead for 48-96 hours. “The traces of blood were found in the room, corridors, kitchen and the toilet,” the policeman said.

After his arrest, Lingam, 25, implicated a number of Chandran’s roommates in the murder, but later retracted the claim and admitted that he had committed the murder.

Lingam told investigating officers that he had beaten Chandran “due to the injustice he had been facing as the victim kept giving him orders that he had to obey”.

According to the chargesheet, Lingam took the victim’s blood-stained shirt to a laundry in the Bin Mahmoud area. The forensic report said the shirt had been “washed” to remove blood stains.

In his defence, Lingam said he had got into a fight with Chandran and the latter had been the first to hit out. However, the medical report revealed no evidence of injury on Lingam and the court dismissed the claim.

http://www.bahraintribune.com/ArticleDetai...mp;CategoryId=2

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டாரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இளைஞனை விடுவிக்க நடவடிக்கை வேண்டும்

[07 - June - 2008] [Font Size - A - A - A]

*செல்வம் எம்.பி. சபையில் கோரிக்கை

கட்டார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வவுனியாவைச் சேர்ந்த தமிழ் இளைஞனை அத்தண்டனையிலிருந்து விடுவித்து இலங்கைக்கு அழைத்து வர பாராளுமன்றமும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் நடவடிக்கையெடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பிலான சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

"" வன்னிக்கு கொண்டு வரப்படும் பொருட்கள் மதவாச்சியில் வைத்து ஏற்றி இறக்கப்படுவதால் அதற்குரிய கட்டணங்களையும் வர்த்தகர்கள் பொருட்களில் சேர்த்து விடுவதால் அதன் விலைகள் பன் மடங்கு உயர்ந்து காணப்படுகின்றது. இவற்றை கொள்வனவு செய்வதற்கு மக்களால் முடியாதுள்ளது.

எமது பகுதிகளிலுள்ள மக்கள் பொருளாதார ரீதியில் பெரும் அவலங்களை எதிர் கொண்டு வருகின்றனர். கடற்றொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எமது பகுதிக்கு கட்டிடப் பொருட்களை கொண்டு வருவதில் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், கட்டிடத் தொழிலாளர்கள் பலர் பட்டினிச் சாவை எதிர் கொண்டுள்ளனர். வேலை வாய்ப்புகளின்றி அலைந்து திரிகின்றனர்.

இதனை விட மோசமாக இடம்பெயர்ந்து அகதிகளாகவுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வித நிவாரண உதவிகளும் கிடைப்பதில்லை. வன்னிக்கு வெளிநாட்டு நிவாரண குழுக்கள் செல்ல முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணமாகும்.

இதேவேளை, எனது தொகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கட்டார் நாட்டிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்தண்டனையை நீக்கி அவ்விளைஞனை இலங்கைக்கு கொண்டு வர உதவிபுரியுமாறு இச் சபையிடமும் சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் கேட்டுக் கொள்கின்றேன். இந்த நாட்டில் ஏற்றுமதி, இறக்குமதிகள் சிறப்பாக நடைபெற வேண்டுமானால் முதலில் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

http://www.thinakkural.com/news/2008/6/7/i...s_page52242.htm

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஒரு பெண்ணுக்கு (முஸ்லீம் என்று நினைக்கிறேன்) மரண தண்டனையில் இருந்து விலக்குப் பெற குரல் கொடுத்தார்கள். பார்ப்போம் இத்தமிழ் இளைஞனுக்கு எவ்வகையில் குரல் எழுப்பப்படுகிறது என்று. :lol:

நெடுக்காலபோவான் அந்தப்பெண் உண்மையில் கொலை செய்து இருந்தாரா? இந்தப்பையன் உண்மையில் கொலை செய்து இருக்கிறார்போல இருக்கிது. இரண்டும் வேறு வேறு விதமான சம்பவங்கள்.

என்றாலும் எனக்கு இந்த மரணதண்டனையில் உடன்பாடு இல்ல.

இங்கு ஒரு பெண்ணுக்கு (முஸ்லீம் என்று நினைக்கிறேன்) மரண தண்டனையில் இருந்து விலக்குப் பெற குரல் கொடுத்தார்கள். பார்ப்போம் இத்தமிழ் இளைஞனுக்கு எவ்வகையில் குரல் எழுப்பப்படுகிறது என்று. :lol:

உங்கள் வாதம் எவ்வகையில் நியாயமானது எனப் புரியவில்லை. உயிர் என்பது எப்போதும் ஒன்று தான் அது எந்த இனமாக இருந்தாலும். அப்படி ஒரு உயிர் எமது குரல்களால் காப்பாற்றப்பட்டால் அது எல்லாருக்கும் மகிழ்ச்சியான விடயமே.

மேலே முரளி எழுதியது போல் இரண்டு விடயத்திற்கும் நிறைய வேறுபாடுகளுண்டு. அதற்காக அந்தச் சிறுமிக்கு குரல் கொடுத்தவர்கள் இதற்கும் குரல் கொடுப்பார்களா என்று பார்ப்பது அபத்தமானது. அந்தச் சிறுமியை விட இந்த இளைஞனை இலகுவாகக் காப்பாற்றலாம். இதற்கு இறந்த தமிழ் இளைஞனின் பெற்றோர் சம்மதிக்க வேண்டும். ஆனால் அந்தச் சிறுமியைப் பொறுத்தவரை சவூதியைச் சேர்ந்த பெற்றோர்களே சம்மதிக்க வேண்டும். இந்த இளைஞனை காப்பாற்ற அரசாங்கம் கட்டாரில் கதைக்க வேண்டிய அவசியமில்லை தாயகத்திலுள்ள இறந்த தமிழ் இளைஞனுடைய பெற்றோருடன் கதைத்து அவர்களைச் சம்மதிக்க வைத்தாலே போதுமானது. இதற்கு நம்மவர்களும் அந்த பெற்றோரைச்சம்மதிக்க வைக்க முயற்சி எடுக்கலாம். அப்படியான முயற்சிகளுக்கு நானும் எனது ஆதரவை எப்போதும் தரத் தயார். ஏனெனில் எப்போதும் மரணதண்டனையை வெறுப்பவன் நான்.

  • கருத்துக்கள உறவுகள்

மரண தண்டனையை எதிர்க்கிறேன். ஆனால் உண்மையாக இவர் குற்றவாளி எனில் தண்டனை நியாயமானதே. அதுவும் கொலை செய்தவர் என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையை கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பெண் கொலைக்குற்றமற்றவர் என்று தீர்மானித்து விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் படி 14 பக்கங்களுக்கு எழுதி இருக்கிறம். ஆனால் இரண்டு கருத்துக்களூடே.. இந்தத் தமிழ் இளைஞன் கொலை தான் செய்தான் எனவே மரண தண்டனைக்கு ஆளாகலாம் என்ற பாணியிலும் எழுதிறம்.

பெண் அதுவும் இளம் பெண் என்றால்.. கொலை செய்தாலும் செய்யாதது போல. இளைஞன் என்றால் அதுவும் தமிழ் இளைஞன் என்றால் கொலை செய்யாவிட்டாலும் செய்தது போல.. அப்படியா..??!

எனக்குப் புரியவில்லை உங்கள் சிலரின் மனிதாபிமான நிலைப்பாடுகளும் கொலையை தீர்மானிக்கும் விதங்களும்..???! :lol::lol:

Edited by nedukkalapoovan

எனக்குப் புரியவில்லை உங்கள் சிலரின் மனிதாபிமான நிலைப்பாடுகளும் கொலையை தீர்மானிக்கும் விதங்களும்..???! :rolleyes::lol:

நெடுக்கு

1) ஒரு சிறுமி ஒரு குழந்தைக்கு பால் பருக்கும் போது குழந்தை பிரக்கேறி இறந்துள்ளது. அந்தச் சிறுமி அக்குழந்தையை கொல்லவேண்டுமென்ற நோக்கில் செயற்படவில்லை. நடந்த சம்பவம் அச்சிறுமியை குற்றவாளியாக்கியுள்ளது. அந்தச் சிறுமிக்கு அந்த நாட்டில் நடந்த உண்மைகளைச் சொல்ல சரியான வசதியோ, சந்தர்ப்பமோ அளிக்கப்படவில்லை. இறந்த குழந்தையின் பெற்றோரின் வாக்குமூலத்தை வைத்தே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த விசாரணையை மீண்டும் முறையாக நடாத்தி தீர்ப்பளிக்குமாறே பலரும் கேட்டுள்ளனர்.

2) ஒரு தமிழ் இளைஞன் இன்னொரு தமிழ் இளைஞனை முன்பகை காரணமாக போத்தல்களினாலும், மட்பாண்டக்கருவிகளினாலும் கொலைவெறி கொண்டு தலையில் தாக்கிக் கொன்றுள்ளார். இதைத் திட்டமிட்டே அவர் செய்துள்ளார். ஆனாலும் இறந்தவரின் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்க முன்வந்து, அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலேயே குறிப்பிட்ட இளைஞருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

:lol: உண்மையில் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு உங்களுக்குப் புரியவில்லையா?? இங்கும் உங்களுக்கு ஆண், பெண் என்ற வர்க்க வேறுபாடுதான் முன்நிற்கின்றதா??? :)

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையை கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பெண் கொலைக்குற்றமற்றவர் என்று தீர்மானித்து விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் படி 14 பக்கங்களுக்கு எழுதி இருக்கிறம். ஆனால் இரண்டு கருத்துக்களூடே.. இந்தத் தமிழ் இளைஞன் கொலை தான் செய்தான் எனவே மரண தண்டனைக்கு ஆளாகலாம் என்ற பாணியிலும் எழுதிறம்.

பெண் அதுவும் இளம் பெண் என்றால்.. கொலை செய்தாலும் செய்யாதது போல. இளைஞன் என்றால் அதுவும் தமிழ் இளைஞன் என்றால் கொலை செய்யாவிட்டாலும் செய்தது போல.. அப்படியா..??!

எனக்குப் புரியவில்லை உங்கள் சிலரின் மனிதாபிமான நிலைப்பாடுகளும் கொலையை தீர்மானிக்கும் விதங்களும்..???! :lol::lol:

யோவ் நெடுக்கு அறிவிருக்கா?? அறிவிருக்கா?? அதுக்காக இருக்கு ஏன் உமக்கு வேணுமா?? எண்டு கேக்கக்கூடாது. பெண்களுக்கு அதுவும் அந்த விடயத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி தங்களை விளம்பரப் படுத்த முடியும் என்றும் தெரிந்து விட்டால் உடனடியாகவே அதுக்கெண்டு இருக்கிற பெண்ணியவாதியள் கட்டுரை எழுதி கலக்கிப்போடுவினம். அதையும் யாராவது இங்கை கொண்டுவந்து ஒட்டி பக்கம் பக்கமாய் விவாதம் போகும். இது யாரோ ஒருதன் தமிழ் இளைஞன்தானே ?? அவன் பிழைச்சாலென்ன செத்தாலென்ன?? அந்தப் பெண் கொலை செய்திரக்க மாட்டாள் என்று இங்கிருந்தே ஞானக்கண்ணாலை பாத்து சொல்லுறவையாலை இந்தப் பெடியன்தான் கொலை செய்தவன் எண்டு அதே ஞானக்கண்ணாலை பாத்து முடிவு செய்திட்டினம்.அந்தப் பெண்ணுக்கு மட்டும் அந்த நாட்டு நீதிபதி சொன்ன தீர்ப்பு தவறு. இது சரி. இதெல்லாம் விளங்காமல் நீர்வேறை சும்மா மனிதாபிமானம் மண்ணாங்கட்டியெண்டுகொண்டு. :):rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு

1) ஒரு சிறுமி ஒரு குழந்தைக்கு பால் பருக்கும் போது குழந்தை பிரக்கேறி இறந்துள்ளது. அந்தச் சிறுமி அக்குழந்தையை கொல்லவேண்டுமென்ற நோக்கில் செயற்படவில்லை. நடந்த சம்பவம் அச்சிறுமியை குற்றவாளியாக்கியுள்ளது. அந்தச் சிறுமிக்கு அந்த நாட்டில் நடந்த உண்மைகளைச் சொல்ல சரியான வசதியோ, சந்தர்ப்பமோ அளிக்கப்படவில்லை. இறந்த குழந்தையின் பெற்றோரின் வாக்குமூலத்தை வைத்தே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த விசாரணையை மீண்டும் முறையாக நடாத்தி தீர்ப்பளிக்குமாறே பலரும் கேட்டுள்ளனர்.

2) ஒரு தமிழ் இளைஞன் இன்னொரு தமிழ் இளைஞனை முன்பகை காரணமாக போத்தல்களினாலும், மட்பாண்டக்கருவிகளினாலும் கொலைவெறி கொண்டு தலையில் தாக்கிக் கொன்றுள்ளார். இதைத் திட்டமிட்டே அவர் செய்துள்ளார். ஆனாலும் இறந்தவரின் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்க முன்வந்து, அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலேயே குறிப்பிட்ட இளைஞருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

:lol: உண்மையில் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு உங்களுக்குப் புரியவில்லையா?? இங்கும் உங்களுக்கு ஆண், பெண் என்ற வர்க்க வேறுபாடுதான் முன்நிற்கின்றதா??? :)

வசம்பு நீங்கள் நீதிபதியானதும் இந்த வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கினதும் எனக்குத் தெரியாமல் போச்சுது.

இருந்தாலும்.. அந்தப் பெண் பால் கொடுத்து.. குழந்தை புரக்கேறி இறந்தது என்றதை நம்புறீங்க.. இப்படி உலகில எத்தின குழந்தைகள் பால் குடிக்கேக்க புரக்கேறி இறந்திருக்குதுகள்.. அப்ப எனி கள்ளிப் பால் கொடுக்கத் தேவையில்ல..கழுத்தை நெரிக்கத் தேவையில்ல.. புரக்கேறி இறந்திட்டுது என்று சொல்லலாம் என்றீங்க...???! அதெப்படி தெளிவாச் சொல்லுறீங்க.. ஏன் கழுத்தை நெரிச்சுக் கொண்டிருக்க மாட்டினமோ என்ற ஐயத்துக்கு இடமில்லாமல். உங்க எங்கையோ கழுத்தை வெட்டியே ஒரு பெண் அதுவும் தாய் கொலை செய்யல்லையோ..??!

ஆனால் இந்த இளைஞன் மட்டும் சும்மா கொலைவெறியோட அலைஞ்வன் என்றீங்க..???! கூட இருந்தவர் போல...! முடியல்ல நீதிபதி அவர்களே. உங்களின் மனிதாபிமானம் மெய் சிலிர்க்க வைக்கிறது..??! மேன்மைகொள் பெண் நீதி..! :rolleyes::lol:

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவான், சாத்திரி அண்ணை ரெண்டு பேரும் வேறமாதிரி விளங்கிவச்சு இருக்கிறீங்கள் போல இருக்கிது.

ஒருவன் குற்றம் நிரூபிக்கப்படும்வரையில குற்றவாளி. குற்றம் நிரூபிக்கப்பட்டப்பிறகு நிரபராதியோ எண்டு எனக்கு தெரியாது.

நாங்கள் இணைக்கப்பட்ட செய்தியிண்ட அடிப்படையிலதான் கருத்து எழுதுறம். எல்லாமே அப்பிடித்தான். நேரபோய் பார்த்தது கிடையாது.

இந்தவகையில...

இணைக்கப்பட்ட செய்தியில ஒருவர் குற்றம் செய்தற்காக மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது எண்டு இருக்கிது.

ஆனால், பெண் விடயத்தில அப்பிடி இல்ல.

இப்பிடித்தான் பாருங்கோ..

சிறீ லங்காவில நான் இருக்கேக்க சென்.ஜோன்ஸ் பள்ளி மாணவன் வரபிரகாஸ் என்பவன ராக்கிங் (பகிடிவதை) செய்து சாக்காட்டினாங்கள். கடைசி வரையில குற்றவாளிய பிடிக்க முடியவில்ல. அவன் பேராதெனியா பல்கலைக்கழக படிப்பையும் விட்டுட்டு தப்பி ஓடீட்டான்.

அதாவது எங்கட ஆக்களிலையும் இந்த கொலைவெறி, வெறிக்குணம் எல்லாம் இருக்கிது எண்டு உங்களுக்கு தெரியவேணும்.

இப்ப என்ன ஒரு அப்பாவிய கொலையோட சம்மந்தப்படாத ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்டு இருக்கிது எனவே, இதற்காக குரல் கொடுக்கவேணும் எண்டு சொல்லுறீங்களோ இல்லாட்டிக்கு, தெரிஞ்சோ தெரியாமலோ கொலை செய்துபோட்டார் எனவே இவரக்காப்பாற்றுங்கோ எண்டு குரல் கொடுக்கவேணும் எண்டு சொல்லுறீங்களோ?

அப்பிடி எண்டால் வெளிநாடுகளில எண்டால் மட்டம் ஆக்கள கொலை செய்ய ஏலுமோ? மத்திய கிழக்கு நாடு ஒண்டில இப்பிடி ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறதால அவர் மாட்டுப்பட்டுட்டார். ஆனா, கனடா, யூரோப் என்றால் கொலை செய்த கையோட, அல்லது போலிசார் தேட முன்னம் தாயகத்துக்கு இல்லாட்டி வேற நாட்டுக்கு தப்பி ஓடி இருப்பார் எண்டு நான் சொல்லித் தெரியவேண்டியதில்ல.

ஆனா.. ஒரு விசயம்.. தாயகத்தில கொலக்குற்றம் சாட்டப்பட்ட ஆக்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு இருக்கிது என்பதையும் கவனத்தில கொள்ளுங்கோ..

கடைசியா திரும்பவும் சொல்லிறன். எனக்கு இந்த மரணதண்டனை குடுக்கிறதில உடன்பாடு இல்ல.

வேற என்ன...

சரி என்னமோ..

இனி ஆளையாள் போட்டுத்தாக்குங்கோ. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ ஒரு மரண தண்டனைக் குற்றவாளியை செல்வம் அடைக்கலநாதன் காப்பாற்ற ஏனாம் குரல் கொடுக்கிறார். செத்துத் துலையட்டன் என்று விட வேண்டியதுதானே...????!

ஆணுக்கு ஒரு நீதி.. பெண்ணுக்கு ஒரு நீதி. உலகம் போற போக்கில.. தலைச்சுத்துது..! :lol::lol:

குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர்கள், நண்பர்கள் அடைக்கலநாதன் எம்பியிடம் முறைப்பாடு செய்து இருக்கலாம்.

சரி...

அப்ப கொலை செய்தவர யாராம் கொலை செய்தாங்கள்?

இந்த தம்பி நிரபராதி எண்டால் அப்ப கொலை செய்த உண்மையான ஆளக்கண்டு பிடிக்க வேண்டிய இன்னொரு தார்மீக பொறுப்பும் இருக்கிது. எண்டபடியால் இதற்காகவும் குரல் கொடுக்கவேணும் எண்டுறதையும் நினைவில கொள்ளுங்கோ. :lol:

வசம்பு நீங்கள் நீதிபதியானதும் இந்த வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கினதும் எனக்குத் தெரியாமல் போச்சுது.

இருந்தாலும்.. அந்தப் பெண் பால் கொடுத்து.. குழந்தை புரக்கேறி இறந்தது என்றதை நம்புறீங்க.. இப்படி உலகில எத்தின குழந்தைகள் பால் குடிக்கேக்க புரக்கேறி இறந்திருக்குதுகள்.. அப்ப எனி கள்ளிப் பால் கொடுக்கத் தேவையில்ல..கழுத்தை நெரிக்கத் தேவையில்ல.. புரக்கேறி இறந்திட்டுது என்று சொல்லலாம் என்றீங்க...???! அதெப்படி தெளிவாச் சொல்லுறீங்க.. ஏன் கழுத்தை நெரிச்சுக் கொண்டிருக்க மாட்டினமோ என்ற ஐயத்துக்கு இடமில்லாமல். உங்க எங்கையோ கழுத்தை வெட்டியே ஒரு பெண் அதுவும் தாய் கொலை செய்யல்லையோ..??!

ஆனால் இந்த இளைஞன் மட்டும் சும்மா கொலைவெறியோட அலைஞ்வன் என்றீங்க..???! கூட இருந்தவர் போல...! முடியல்ல நீதிபதி அவர்களே. உங்களின் மனிதாபிமானம் மெய் சிலிர்க்க வைக்கிறது..??! மேன்மைகொள் பெண் நீதி..! :lol::lol:

நெடுக்கு

ஓகோ நான் நீதீபதி ஆகிவிட்டேன் என்று நினைத்தோ நீங்கள் எதிர்த் தரப்பு வக்கீல் ஆகிவிட்டீர்கள். மேலே உள்ள இரண்டு சம்பவங்கள் பற்றி நானோ, நீங்களோ பல ஊடகங்கள் மூலம்தான் அறிந்து கொண்டோம். அந்தச் சிறுமியின் விடயத்தில் கூட மனித உரிமைகள் அமைப்புக்கள் தான் நடந்த விடயத்தை வெளியில் சொன்னார்கள்.

அதே போல் இந்த இளைஞன் கொலை செய்ததற்கும் நம்மவர்கள் தான் சாட்சியம் சொல்லியுள்ளார்கள்.

சில ஞானக்கண்களுக்குக் கூட அந்த முஸ்லீம் சிறுமியின் விடயம் திகட்டுவது அந்தச் சிறுமியின் விடயமாக இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் முதலில் இவ்விடயத்தை அறிக்கையாக விட்டதனால்த் தான். அவவிற்குப் பதிலாக வேறு யாராவது அறிக்கை விட்டிருந்தால், இவர்களும் பக்கம் பக்கமாக "முஸ்லீம் சிறுமியின் சவூதி அவலம்" என்று எழுதிக் கலக்கியிருப்பார்கள. பரபரப்பிற்காகவும், விளம்பரத்திற்காகவும்.

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர்கள், நண்பர்கள் அடைக்கலநாதன் எம்பியிடம் முறைப்பாடு செய்து இருக்கலாம்.

சரி...

அப்ப கொலை செய்தவர யாராம் கொலை செய்தாங்கள்?

இந்த தம்பி நிரபராதி எண்டால் அப்ப கொலை செய்த உண்மையான ஆளக்கண்டு பிடிக்க வேண்டிய இன்னொரு தார்மீக பொறுப்பும் இருக்கிது. எண்டபடியால் இதற்காகவும் குரல் கொடுக்கவேணும் எண்டுறதையும் நினைவில கொள்ளுங்கோ. :lol:

இறந்த குழந்தைக்கு புரக்கேறும் வகையில் பாலூட்டி இருக்கலாம் என்ற நிலையும் கவனக் குறைவும் அக்குழந்தையைக் கொன்றிருக்கலாம். அதற்கு தண்டனை அவசியம் என்பதையும் முன்னர் கருத்தில் கொண்டு அந்தப் பெண்ணுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தல்லோ இருக்க வேண்டும்.

கொலை செய்யப்பட்டதற்கான சரியான காரணத்தைக் கண்டறிய வேண்டியது அடைக்கலநாதன் எம்பியின் கடமையல்ல. அந்த நாட்டு பொலீஸ் மற்றும் சட்டத்தின் பணி. கொலை செய்யப்பட்டாரா.. அல்லது கொலை செய்யும் அளவுக்கு நடந்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு இந்தப் பையன் மீது பழி போடப்பட்டதா என்றும்.. பல கோணங்கள் அங்கும் உள்ளனவே..??! கொலை செய்யப்பட்டவருக்காக நீதி கேட்கவில்லை எவரும். கேட்டால் அதற்காகவும் குரல் கொடுத்துத் தான் ஆக வேண்டும்...! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு

ஓகோ நான் நீதீபதி ஆகிவிட்டேன் என்று நினைத்தோ நீங்கள் எதிர்த் தரப்பு வக்கீல் ஆகிவிட்டீர்கள். மேலே உள்ள இரண்டு சம்பவங்கள் பற்றி நானோ, நீங்களோ பல ஊடகங்கள் மூலம்தான் அறிந்து கொண்டோம். அந்தச் சிறுமியின் விடயத்தில் கூட மனித உரிமைகள் அமைப்புக்கள் தான் நடந்த விடயத்தை வெளியில் சொன்னார்கள்.

அதே போல் இந்த இளைஞன் கொலை செய்ததற்கும் நம்மவர்கள் தான் சாட்சியம் சொல்லியுள்ளார்கள்.

சில ஞானக்கண்களுக்குக் கூட அந்த முஸ்லீம் சிறுமியின் விடயம் திகட்டுவது அந்தச் சிறுமியின் விடயமாக இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் முதலில் இவ்விடயத்தை அறிக்கையாக விட்டதனால்த் தான். அவவிற்குப் பதிலாக வேறு யாராவது அறிக்கை விட்டிருந்தால், இவர்களும் பக்கம் பக்கமாக "முஸ்லீம் சிறுமியின் சவூதி அவலம்" என்று எழுதிக் கலக்கியிருப்பார்கள. பரபரப்பிற்காகவும், விளம்பரத்திற்காகவும்.

ஏன் வசம்பு அது சாத்திரி எண்டுநேரடியா எழுதறதுக்கு என்ன தயக்கம் இந்த விடயத்திலை நான் உங்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் இழுக்கவோ அல்லது சுட்டி சாடைமாடையாய் காட்டவே இல்லையே ?? பிறகேன் ராஜேஸ்வரி பற்றி சாடையாய் எழுதினதும் உங்களிற்கு கோபம் வந்து பக்கம் பக்கமாய் அவலம் எழுதி கலக்கியிருப்பினம்எண்டு எனக்கு சாடை காட்டுவான். நான் அந்தக் கட்டுரையை இணைத்தவரைப்பற்றித்தான் கதைத்தேன் அந்தக் கட்டுரையை இணைத்தவர் சங்கர்லால் என்பவர் அப்படியானால் நீங்கள்தான் சங்கர் லாலா?? அது நீங்கள் இல்லையென்றால்?? ஏன் எதுக்கு என்மீது கோபம் வரவேண்டும் ராஜேஸ்வரியின் கட்டுரையை சாடியதாலா?? சரி ராஜேஸ்வரியின் கட்டுரையை சாடியதால் உங்களிற்கு கோபம் வந்தால் அவரது கட்டுரைகள் சிந்தனைகள் உங்களிற்கு உடன்பாடானதா?? அல்லது ஏதோ ஒரு விதத்தில் என்னை எதிர்க்க வேண்டும் என்கிற காரணத்தால் அப்படி எழுதினீர்களா?? அப்டியானால் என்ன காரணம்?? அறிந்து கொள்லாமா??

நீங்கள் முதலில் அறிக்கை விட்ட இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தையோ அல்லது அவ்விடயத்தை இங்கே இணைத்த சங்கர்லாலை மட்டும் விமர்சித்து எழுதவில்லை. கருத்துக்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்பாக எழுதியதவர்களை ஞானக்கண்ணால் பார்த்து எழுதுவதாக விமர்சிக்கின்றீர்கள். இங்கே என்ன இராஜேஸ்வரி யும், சங்கர்லாலும் பதில்க் கருத்துக்களா எழுதிக் கொண்டு இருக்கின்றார்கள்?? கருத்துக்கள் எழுதியவர்களையும் விமர்சிக்கின்றீர்கள். அதனாலேயே அதற்கு பதிலை எழுத வேண்டி வந்தது. நீங்கள் எவரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் ஆனால் மற்றவர்கள் உங்களை விமர்சிக்கக் கூடாதோ??

என்னை விமர்சிக்க்கூடாது என்றோ விமர்சனங்களிற்கு அப்பால் பட்டவன் என்றோ சொல்லவில்லை சாடை காட்டி எழுதாமல் நேரடியாகவே என்னுடைய பெயரைப்போட்டு எழுதச்சொன்னேன். மற்றபடி எனக்கு ஞானக்கண் எல்லாம் கிடையாது நொள்ளைக்கண்தான் இருக்கு

<_<

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி சிலர்.... போதைவஸ்து கடத்தல்,கொலை,கோஷ்டிமோதல்,செய

  • 2 weeks later...

கள வாதிகளுக்கு சிலவேளை முஸ்லீம் பெண் என்றால் குற்றம் செய்யமாட்டார் என்று ஒரு கருத்து இருக்கலாம். தமிழ் இளைஞன் என்றால் கொலை செய்வான் என்ற முடிவும் இருக்கலாம்.

முரளி தீர்ப்பு கூறப்பட்டபடியால் அந்த இளைஞன் குற்றவாளி என்கின்றார். கள நியாயவாதிகள் முடிவெடுத்துவிட்டார்கள்.

வசம்பண்ணா அநியாயத்துக் கோவப்படுகின்றீர்கள். பால் பருக்கும்போது புரைக்கேறி குழந்தை இறந்தது என்றால் அந்த பெண்ணின் கவனக் குறைபாடு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பால் புட்டியிலுள்ள இறப்பரின் துவாரம் பெரிதாக இருந்தாலோ அல்லது புட்டியை அதிகமாக தூக்கி பிடித்தாலோ அதிகமான பால் சென்று மூச்சு முட் சாத்தியம் அதிகம்.

அதனால் மரண தண்டனைக்கெதிராக குரல் கொடுக்கலாம் .ஆனால் தண்டனையிலிருந்து தப்புவிக்க முயற்சி செய்ய கூடாது

நெடுக்ஸ் அண்ணா உங்கள் உணர்வு புரிகிறது.

சரியாகச் சொன்னீர்கள் நான் அநியாயத்திற்குத் தான் கோபப்படுகின்றேன். ஒரு சிறுமியின் தவறும், ஒரு திட்டமிட்ட கொலையும் உங்களைப் போன்றவர்களால் ஒன்றாகப் பார்க்கப்படுவதையே விமர்சிக்கின்றேன். அதுபோல் அச்சிறுமியை முஸ்லிம் என்பதாலும், மற்ற இளைஞன் தமிழன் என்பதாலும் எழும் மாறுபட்ட கருத்துக்களைத் தான் நான் கண்டித்தேன். உயிர் என்பது எல்லோருக்கும் ஒன்று தான், அதை வைத்து தனிப்பட்ட கோபதாபங்களை தீர்த்துக் கொள்ள நினைப்பது முட்டாள்த் தனமானது.

ஏன் இங்கே முஸ்லிம், தமிழ் என்றும், ஆண், பெண் என்றும் பார்க்கிறீர்கள்? முதல் குற்றவாளியாக கருதப்பட்டவருக்கு 17 வயது தான். அதனால் அவர் சிறுமி என்று இனங்காணப்பட்டார். மற்றவர் 18 வயதுக்கு மேல் என்பதால் இளைஞன் என்று இனங்காணப்படுகிறார். மேலும் ஒருவர் நித்திரையில் கொல்லப்படும்போது அது திட்டமிடப்பட்ட கொலையாகத்தானிருக்கும். அதனால் தான் அவர் பக்கமாக பரிதாபப்படுவது இலகுவாக இல்லாமல் உள்ளது.

அவர் நஷ்ட ஈடு கொடுக்க முன்வந்தது - ஒன்று மனிதாபிமானமாக இருக்கலாம், இல்லை தப்பித்துக்கொள்ளும் உத்தியாகவும் இடுக்கலாம். இறந்த இளைஞனை பறிகொடுத்த குடும்பத்தின் நிலைமையையும் யோசிக்கவேண்டும். அவர்களுக்கு மேலும் விபரங்கள் தெரியலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.