Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் கிளைமோர் தாக்குதல் - இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் பலி

Featured Replies

சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் பிரிவினர் இன்று இரவு வன்னியின் புதூர் பகுதியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

புளியங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்கும் இடையே உள்ள புதூர் பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலின்போது மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

  • தொடங்கியவர்

6 civilians killed in SLA claymore attack - LTTE

[TamilNet, Monday, 02 June 2008, 18:09 GMT]

6 devotees incluling 2 chiIdren on their way to a temple were killed and 4 wounded in a claymore mine explosion in Vanni Monday night. LTTEs Director of Peace Secretariat S. Puleedevan blamed the Deep Penetration Unit operated by the Sri Lanka Army for the attack.

The attack took place at Puthoor, located between Kanakraayankulam and Puliyankulam at 8 p.m.

புலித்தேவன் குறித்த சில வதந்திகளை சிங்கள படைத்தரப்பு வெளியிட்டது. தமிழ் நெட்டின் இச்செய்தி அதனைப் பொய்யாக்கியுள்ளத.

Edited by மின்னல்

புலித்தேவன் குறித்த சில வதந்திகளை சிங்கள படைத்தரப்பு வெளியிட்டது. தமிழ் நெட்டின் இச்செய்தி அதனைப் பொய்யாக்கியுள்ளத.

வன்னி மைந்தன் கவிதையும் இதை தான் குறிப்பிட்டதோ?

பலியான உறவுகளுக்கு எனது அஞ்சலி..

6x6=??????? சிங்களவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்டு மட்டும் சுமார் 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வன்னியில் இராணுவத்தின் கிளைமோருக்கு பலியாகியுள்ளனர். இது மிகவும் வருத்தமளிக்கின்ற விடயம். சிங்களப் படைகள் வன்னியின் எல்லைகளில் நின்று கொண்டு செய்யும் கோரச் செயல்களை நிறுத்த வேண்டின் அவர்களின் இருப்பை சிங்கள தேசத்தின் எல்லைக்கு விரட்டி அடிக்க வேண்டும்..!

சம்பவத்தில் உயிர்நீத்த அப்பாவி மக்களுக்கு கண்ணீரஞ்சலிகள். :lol:

மாங்குளத்தில் கிளேமார்த் தாக்குதல்: 2 சிறுவர்கள் உட்பட 6 பொதுமக்கள் படுகொலை

[செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 07:10 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் 2 சிறுவர்கள் உட்பட 6 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயதுக் குழந்தையும் 2 சிறுவர்களும் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவில் இருந்து புதூர் நாகதம்பிரான் கோவில் விழாவுக்கு "8 சிறீ 6109" என்ற இலக்கம் கொண்ட பழைய மொறிஸ் மைனர் காரில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது நேற்று திங்கட்கிழமை இரவு 8:40 மணியளவில் இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் மாங்குளத்திற்கும் கரிப்பட்டமுறிப்பிற்கும் இடைப்பட்ட 19 ஆம் கட்டைப்பகுதியில் நடைபெற்றது.

இதில் 2 சிறுவர்கள் உட்பட 6 பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

படுகாயமடைந்த நிலையில் 4 பேர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்று நீண்ட நேரத்திற்குப் பின்னர்தான் அப்பகுதிக்கு உதவி சென்று சேர்ந்துள்ளது.

கொல்லப்பட்டோர் விபரம்:

முல்லைத்தீவு அம்பலவன்பொக்கணை முள்ளிவாய்க்கால் பகுதிகளைச் சேர்ந்த

பசுபதிப்பிள்ளை முருகதாஸ் (வயது 33)

முருகதாசின் மகன் தனுஜன் (வயது 04)

ஐயாத்துரை வசந்தகுமார் (வயது 30)

தர்மலிங்கம் யோகேஸ்வரி (வயது 35)

கணேசலிங்கம் கனிஸ்ரா (வயது 08)

காத்தமுத்து நாகராசா (வயது 53)

காயமடைந்தோர் விபரம்:

கொல்லப்பட்ட முருகதாசின் மகன் ஜெனடி (வயது 10)

முருகதாசின் மனைவி சித்திரா (வயது 26)

வசந்தகுமார் சுஜிந்தன் (ஒன்றரை வயது)

தர்மலிங்கம் ஜினோஜினி (வயது 16)

இவர்களில் ஜினோஜினி படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

சிறிலங்காப் படையினரால் பாதிக்கப்பட்டு பின்பு ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டு முல்லைத்தீவு கரையோரப்பகுதியில் வசிக்கும் மக்களே காரில் புதூர் நாதம்பிரான் கோவில் திருவிழாவிற்கு சென்று திருப்பிக்கொண்டிருக்கையில் இந்த அவலச்சம்பவம் இடம்பெற்றது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பகுதிகளில் நடை பெறும் இந்த தாக்குதல்களை சமன் செய்தால் மட்டுமே இதனை தடுத்து நிறுத்த முடியும்.

Edited by தமிழ் சிறி

பலியான உறவுகளுக்கு எனது அஞ்சலி.....இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படி

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்கள் மிக விழிப்பாக இருந்தால் இத்தகைய தாக்குதல்காரர்களை இனம் காணலாம். தெற்கில் பதில் தாக்குதல் தொடரவேண்டும் அரசு வன்னி மக்கள் மீதான தாக்குதல் தொடரும் வரை.

பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

அங்காலை வெடிச்சா அனுதாபம், இங்காலை வெடிச்சா ஆரவாரம்!

உங்கடைபாடு பறவாயில்லை நல்லா பொழுதுபோகுது போல?

அது சரி இன்டைக்கு வன்னியில நல்ல மழை போல, கொழும்பில ஓரே சத்தமா இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் எங்கு இறந்தாலும் எனது அனுதாபங்கள். பொழுது போக்க இங்கே நிறைய விடயங்கள் இருக்கு பாருங்கோ. சிங்கள மக்கள், தமிழ் மக்கள் வதைபடும் போது களிப்பில் இருந்தவர்கள், மகிந்தவுக்கு தமிழரை கொல்ல வாக்களித்தவர்கள் கொஞ்சம் தமிழர் அனுபவித்த கஸ்டங்களை அனுபவிக்க வேண்டும்.

இலங்கை இராணுவத்தால் பொதுமக்கள் படு கொலை எண்று BBC சர்வதேச சேவை தலைப்பிட்டு உள்ளது.. அந்த தகவலை புலிகள் வளங்கியதாகவும் கூறுகிறது.

'Six killed' by Sri Lankan army

Violence has intensified this year

Tamil Tiger rebels in Sri Lanka say at least six civilians were killed in an attack by the security forces in the north of the island on Monday night.

They say a passenger vehicle was blown up by a roadside mine planted by the army inside rebel-controlled territory in the district of Mullaitivu.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7433154.stm

Edited by தயா

இது நல்ல மாற்றம். சென்ற முறை 16 பொதுமக்கள் வன்னியில் கொல்லப்பட்ட போது.. பிபிசி/தமிழ் செய்தி வெளியிட்ட போதும் பிபிசி ஆங்கிலம் (பிரதானம்) அதைச் செய்தியாக்காமல் தவிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவை எல்லாம் தற்செயலான சம்பவங்கள் அல்ல. இவற்றுக்குப் பின்னணிகள் இருக்கின்றன..! அந்த வகையில் இது வன்னி நிலவரங்களை வெளி உலகுக்குக் காட்டக் கூடிய நல்ல ஒரு மாற்றம் எனலாம்..! இந்த இடத்தில் தமிழ்நெட் இணையத்தள சேவையையும் பாராட்ட வேண்டும். :lol:

Edited by nedukkalapoovan

இலங்கை மீது ஏதாவது அழுத்தத்தை பிரயோகிக்க முன்னர் தங்களது நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் செய்தியாக இருக்கலாம்....!!

தமிழ் மக்கள் மீது அனுதாபம் உண்மையில் காட்டுவது போல இல்லை தான்...

இதனால் BBC புலிகளுக்கு ஆதரவானவர்கள் எண்று இலங்கை அரசு போடப்போகும் ( முன்னர் போட்டது போல) கூச்சல்களுக்கு பதில் சொல்ல நிச்சயம் தயாராக இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது...

Edited by தயா

இது நல்ல மாற்றம். சென்ற முறை 16 பொதுமக்கள் வன்னியில் கொல்லப்பட்ட போது.. பிபிசி/தமிழ் செய்தி வெளியிட்ட போதும் பிபிசி ஆங்கிலம் (பிரதானம்) அதைச் செய்தியாக்காமல் தவிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவை எல்லாம் தற்செயலான சம்பவங்கள் அல்ல. இவற்றுக்குப் பின்னணிகள் இருக்கின்றன..! அந்த வகையில் இது வன்னி நிலவரங்களை வெளி உலகுக்குக் காட்டக் கூடிய நல்ல ஒரு மாற்றம் எனலாம்..! இந்த இடத்தில் தமிழ்நெட் இணையத்தள சேவையையும் பாராட்ட வேண்டும். :lol:

மேற்குக்கு நாம் அரசியல் ரீதியாக முக்கியத்துவமானவர்கள் இல்லை அதுதான் காரணம் நெடுக்ஸ் இங்கு இருக்கும் பிரபலமான 8 பத்திரிகைக்களுக்கு ஆதாரத்துடன் செய்தி அனுப்பினேன் எந்த பத்திரிகையிலும் வரவில்லை பின் ஏன் உங்களுக்கு தாய்வான் சிம்பாபேயிலெ சனம் செத்தால்தான் மனிதவுரிமை பேசுவீர்களா என காட்டமாக இன்னொரு மின்னஞ்சல் போட்டேன் அதுக்கும் பதில் இல்லை ஆனால் என் நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்தேன் அவர்களால் என்னிடம் மட்டுமே கவலையை தெரிவிக்க முடிந்தது.

சிங்காள இனையம் ஒன்ரில் பிப்பிசி செய்தியினை பிரசுரிக்க வழங்கப்பட்ட தலைப்பு

BBC, LTTE & Ranil Propaganda

http://elakiri.com/forum/showthread.php?t=83792

தற்ஸ்தமிழில் இலங்கையில் 2 சிறார்கள் உள்பட 6 தமிழர்கள் சுட்டுக் கொலை என்ற தலைப்புக்கு கீழ் ஒருவர் எழுதிய பதில்

saviungada ilangai tamil soothira naikala. ilankai kaan ellam dravidians. athaan suffering. hehehe..!

59.189.29.100

http://thatstamil.oneindia.in/news/2008/06...d-in-lanka.html

இணையத்தில் எவர் வேண்டுமானாலும் மாறு வேடத்தில் எழுதலாம்.

எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டு குளிர்காயும் நோக்கில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தின் உளவாளி ஹம்ஸாவின் கையாட்கள் கூட இப்படி எழுதலாம்

இவற்றை ஒரு ஆதாரமாக இணைக்கும் உங்கள் நோக்கம் என்னவென்று புரியவில்லை!!!

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.