Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியேட்டர்களில் வாழ்க்கை நடத்தியவர்கள்

Featured Replies

அஞ்ஞானவாசம் முடிந்த சந்தோசம். ஆறு ஏழு வருஷ கால . ஜரோப்பிய நாடொன்றின் குக் கிராமத்தில் அங்கையே கட்டயாம் காலந்தள்ள வேண்டும் என்ற நிலையும் ஒழிந்து எங்கையும் போய் வரலாம் என்ற நிலை வந்த பொழது கனடாவுக்கு விடுமுறைக்கு சென்றேன்.அங்கு எனது தம்பியிடம் மிளகாய் தூளும் கருவேப்பலையும் வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட 40 கிலோ மீற்றர் சென்றால் தான் முடியும் என்று சொன்னேன். அப்படி வாழ்ந்த கிராமத்தின் நன்மை தீமைகளை பலதும் பத்தும் கதைத்து கொண்டிருந்த பொழுது கேட்டான் ...தமிழ் படங்கள் தியேட்டரில் பார்க்க வசதி இல்லையா .என்று...

தமிழ் படங்கள் வெளிநாட்டில் தியேட்டரில் ஓடுகிறதா..என்ற அதிசயத்துடன் வளர்த்த நாய் முகத்தை பார்த்த மாதிரி பார்த்தேன்

இவையள் ஊரிலை தியேட்டர்களிலையே வாழ்க்கை நடத்தியவர்கள்... இவ்வளவு காலமும் வெளிநாட்டு வந்ததுக்கு தியேட்டரிலை படம் பார்க்கவில்லையாம் மிகுந்த பரிதாப உணர்ச்சியுடன் அண்ணணை கூட்டி கொண்டு போய் படம் காட்டுவமே என்று கனடாவில் காட்ட வேண்டிய முக்கிய இடம் போல தன் மனைவியிடம் கூறுவது கேட்டது

இவன் தியேட்டர்களில் வாழ்க்கை நடத்தியவர்கள் என்றும் கூறும் பொழுது இது புகழ்ச்சி அணி வசனமா அல்லது இகழ்ச்சி அணி வசனமா என்று ஆராய்ந்து வெட்கப் பட வைக்கவில்லை.

. சிறு வயதில் இருந்தே திரைக்குள் நம்மளை தேடும் முட்டாள் தனமான அதி கூடிய சினிமா மோகத்தில் யாழில் உள்ள பல தியேட்டர்களில் படம் பார்க்க அலைந்ததை அவன் அப்படி கூறுகிறான் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் செய்தது.

ஊரில் எங்களுக்கு கால் நடை தூரத்தில் உள்ள சந்தியில் இரு தியேட்டர்கள் இருந்தன இங்கு தான் எனது திரைபடம் பார்க்கும் சரித்திரம் ஆரம்பமானது , அந்த காலங்களில் திரைபடம் பார்ப்பதும் மாமிச ரொட்டி கடைக்கு சென்று சாப்பிடுவதும் மகா

பஞ்சமா பாதகத்தில் ஒன்றாக கருதுவார்கள்.ஆனால் மற்ற என்னோட்டை ஆக்களுக்கு இல்லாத சுதந்திரத்தை எனது பெற்றோர்கள் தந்த காரணத்தனால் அந்த சிறு வயதிலையே நன்றாக படம் பாரப்பேன் .

மாணவர்களகாக இருப்பவர்கள் தியேட்டரில் கலரியில் இருந்து படம் பார்ப்பதை கெளவரவ குறைச்சலாக கருதுவார்கள்,அடிக்கடி படம் பார்ப்பவர்களுக்கு செக்கன் கிளாஸ் ,பெஸ்ட் கிளாஸ் , றிசெர்வ் பல்கனி என்று டிக்கட் எடுத்து கட்டுபடி ஆகாது என்றுது போக...அந்த வயதில் என்ன வீட்டில் பொக்கற் மணியா தரப் போறார்கள்.

நான் அறிய கலரி டிக்கட் 55 சதமோ 65 சதமாக ஆரம்பத்தில் இருந்தது.இந்தியாவின் கிராமங்களில் இருப்பது போல் முன் வரிசை கலரி தரையோ மணலோ போட்டிருப்பதில்லை ,,ஆனால் பல நூறு மூட்டை பூச்சி வாழ்க்கை நடத்தும் வாங்கு போட்டிருப்பார்கள்.

இந்தியாவில் a சென்டர் b சென்டர் போல யாழ்நகரில் படம் ஓடிய பிறகு இரண்டாம் சுற்று வடமராட்சி உள்ள தியேட்டர்களில் திரையிடுவார்கள். அதற்க்கு பின் தான் மற்ற யாழ் குடா நாட்டின் மற்ற தியேட்டர்களில் திரையிடுவார்கள். அத்தோடு இன்ன இன்ன விநியோகஸ்தரின் கொம்பனி படங்கள் என்ன என்ன தியேட்டரில் ஓடும் என்று அநுமானிக்க கூடியதாயிருக்கும்.

குணரத்தினத்தின் சினிமாஸ் கொம்பனி படங்கள் கொழும்பில் கிங்ஸ்லி கொட்டாச்சேனை , பிளாசா வெள்ளவத்தை , கெப்பிட்டல் போன்ற தியேட்டர்களிலும்

யாழ்ப்பாணத்தில் வெலிங்கடன் ,லிடோ

இந்த தியேட்டர்கள் இப்பவும் இருக்கோ தெரியாது .ஆனால் தினசரி பத்திரிகையின் மூன்றாம் பக்கத்திலும் வானொலி விளம்பரங்களிலும் அந்த காலங்களில் முக்கிய இடத்தை பிடிக்கும்

சிலோன் தியேட்டர் படங்கள் கொழும்பில் செல்லமாகால்,கொட்டாஞ்சேனை நவா கொம்பனித்தெரு

யாழ்ப்பாணத்தில் வின்ஸர் ,ரீகல்

சிலோன் என்டர்ண்மண்ட் தியேட்டர் கொம்பனிபடங்கள்

கொழும்பில் சென்டரல் மருதானை

யாழ் நகரில் ராணி ,மனோகரா

வடமராட்சி உள்ள தியேட்டர்கள்

லக்சிமி ,மஹாத்மா , யோகநாயகி ,றஞ்சனா, சென்றல்,புலோலி சினிமா

சரி என்று சொல்லி கனடாவில் தமிழ் படம் பார்க்க சென்றால் படம் ஒழுங்காய் பார்த்தது என்றா நினைக்கிறீங்கள்

அங்கு படம் பார்க்க வந்தவர்களின் தூசண மழையத்தான் கேட்க முடிந்தது

இதை பார்க்கும் போது அந்த காலம் என்னோடு கலரியில் படம் பார்த்தவர்கள் நாகரிகமாக தெரிந்தார்கள்

http://sinnakuddy.blogspot.com/2008/06/blog-post.html

கலரி என்றா?

  • தொடங்கியவர்

கலரி என்றா?

வணக்கம் தூயா .. புலத்தில் பிறந்து வளர்ந்த உங்களுக்கு நான் சொல்லும் கலரியை பற்றி தெரிந்து இருக்க நியாயமில்லை தான்

இலங்கையில் தியேட்டர்களில் வசதி தராதரம் விலை போன்ற அடிப்படையில் கலரி செக்கன் கிளாஸ் பெஸ்ட் கிளாஸ் றிசர்வ் பல்கனி சுப்பர் பல்கனி என்று பிரிப்பு இருந்தது

அது போல என்னை போல வசதி குறைந்த தராதரம் குறைந்த மலிவாக படம் பார்க்க நினைப்பவர்களுக்கு தியேட்டர்களில் வெறு வாங்குகள் மட்டும் வசதி அளித்து முன் வரிசையில் ஒதுக்கபட்ட இடம் தான்

தியேட்டர்களில் கலரி என்று கூறுவோம்...அப்படா ஓரளவு விளங்க படுத்தி இருக்கிறன் என்று நினைக்கிறன் <_<

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்க்கும் போது அந்த காலம் என்னோடு கலரியில் படம் பார்த்தவர்கள் நாகரிகமாக தெரிந்தார்கள்

அது மட்டுமா , யாழ்பாணத்தில் உள்ள சில திரைபட கொட்டகைகள் கனடாவில் தமிழ் படம் ஓடும் திரைப்பட கொட்டகைகளை விட நல்ல தராதரத்தில் உள்ளன.

Edited by nunavilan

  • தொடங்கியவர்

அது மட்டுமா , யாழ்பாணத்தில் உள்ள சில திரைபட கொட்டகைகள் கனடாவில் தமிழ் படம் ஓடும் திரைப்பட கொட்டகைகளை விட நல்ல தராதரத்தில் உள்ளன.

நீங்கள் கூறுவது மிக்க சரி ... அங்கு கிராம புற தியேட்டர்கள் கூட நேர்த்தியாக இருந்தன

வணக்கம் நுணாவிலான் பதிவை பார்த்து கருத்து கூறியமைக்கு மிக்க நன்றிகள்

நானும் சிறீதர் தியேட்டறைபற்றியாக்கும் என்று நினைத்தேன் <_<

  • தொடங்கியவர்

நானும் சிறீதர் தியேட்டறைபற்றியாக்கும் என்று நினைத்தேன் <_<

வணக்கம் ராஜா....நீங்க சொன்னதுக்கும் பொருந்தும் ,,சின்ன திருத்தத்துடன் இருந்தால்...தியேட்டரில் வாழ்க்கை நடத்தி கொண்டிருப்பவர்கள் என்று :icon_idea:

சூப்பர் பெல்கனி யாழ்ப்பாணத்தில சாந்தி தியேட்டரிலதான் இருந்தது.. மே தினம் அன்று மலிவு விலைல சுப்பர் பெல்கனி ஆசையையும் தீர்த்தாச்சு.. :icon_idea:

இரவுக் காட்சி வின்சர் தியேட்டரில பார்ப்பதைப்போல சந்தோசம் வேறு தியேட்டரில் கிடையாது.. இரவில் யன்னல்களை அகலத் திறந்துவிடுவார்கள்.. காற்றோட்டத்தில்.. திறந்தவெளி அரங்கில் படம் பார்ப்பதுபோல இருக்கும்.. பெரிய பெரிய கட்- அவுட்டுகளுக்கு ராணி தியேட்டர்தான் பிரபலம்.. <_<

பழைய நினைவுகளை என்னையும் மீட்ட வைத்த உங்க பதிவுகளுக்கு நன்றிகள் சின்னக்குட்டி. முன்பு ஊரில் திருவிழா காலங்களில் புதுப்படங்கள் வெளிவந்தால், வீட்டில் திருவிழாவிற்கு போவதாக சொல்லிவிட்டு பாடசாலையில் கூடப் படிக்கும் நண்பர்கள் சேர்ந்து நள்ளிரவுக் காட்சிக்குப் போய் படம் பார்த்துவிட்டு திரும்புவோம். நாம் வீட்டிற்கு வரவும் திருவிழா முடியவும் சரியாக இருக்கும். ஒருநாள் படம் பார்த்துவிட்டு வந்து நல்லபிள்ளை போல் படுத்தபின் எனது கூடப்பிறந்த அண்ணரால் எனது சேர்ட் பொக்கற்றிலிருந்து ரிக்கற் பிடிபட்டு, :icon_idea: அடுத்தநாள் வீட்டிலே எனக்குத் "திருவிழா" <_<

:Dசோழியான் சரியாகச் சொன்னீர்கள். :lol:

கலரியில் இருந்து படம் பார்த்து இப்பவும் எனது கழுத்து நோகுது அருமையான பதிவு

உண்மை தான் சோழியான். வின்சர் தியேட்டர் தான் யாழில் பெஸ்ட் என்று சொல்லலாம்.

  • தொடங்கியவர்

சூப்பர் பெல்கனி யாழ்ப்பாணத்தில சாந்தி தியேட்டரிலதான் இருந்தது.. மே தினம் அன்று மலிவு விலைல சுப்பர் பெல்கனி ஆசையையும் தீர்த்தாச்சு.. :lol:

இரவுக் காட்சி வின்சர் தியேட்டரில பார்ப்பதைப்போல சந்தோசம் வேறு தியேட்டரில் கிடையாது.. இரவில் யன்னல்களை அகலத் திறந்துவிடுவார்கள்.. காற்றோட்டத்தில்.. திறந்தவெளி அரங்கில் படம் பார்ப்பதுபோல இருக்கும்.. பெரிய பெரிய கட்- அவுட்டுகளுக்கு ராணி தியேட்டர்தான் பிரபலம்.. :lol:

வணக்கம் சோழியான் ,,பதிவை பார்த்து கருத்து கூறியமைக்கு நன்றிகள

மேதினத்தன்று எல்லா வகுப்புக்கும் ஓரே கட்டணம் ..உங்களைப்போல த்தான் அன்று நானும் சுப்பர் பல்கனி ஆசையை தீர்த்திருக்கிறேன்

இதை விட ராணி தியேட்டரில் box room வசதியும் இருந்தது,,,காதல் ஜோடிகளின் வசதிக்காக

பழைய நினைவுகளை என்னையும் மீட்ட வைத்த உங்க பதிவுகளுக்கு நன்றிகள் சின்னக்குட்டி. முன்பு ஊரில் திருவிழா காலங்களில் புதுப்படங்கள் வெளிவந்தால், வீட்டில் திருவிழாவிற்கு போவதாக சொல்லிவிட்டு பாடசாலையில் கூடப் படிக்கும் நண்பர்கள் சேர்ந்து நள்ளிரவுக் காட்சிக்குப் போய் படம் பார்த்துவிட்டு திரும்புவோம். நாம் வீட்டிற்கு வரவும் திருவிழா முடியவும் சரியாக இருக்கும். ஒருநாள் படம் பார்த்துவிட்டு வந்து நல்லபிள்ளை போல் படுத்தபின் எனது கூடப்பிறந்த அண்ணரால் எனது சேர்ட் பொக்கற்றிலிருந்து ரிக்கற் பிடிபட்டு, :lol: அடுத்தநாள் வீட்டிலே எனக்குத் "திருவிழா" :lol:

:lol:சோழியான் சரியாகச் சொன்னீர்கள். :lol:

வணக்கம் வசம்பு பதிவை பார்த்து கருத்து கூறியமைக்கு நன்றிகள்

திருவிழாக்களில் மட்டும் அல்ல கூத்து கலைநிகழ்ச்சி நடக்கும் காலங்களில் என்னோட்டை நண்பர்களுக்கு படம் பார்க்க வசதி இருந்தது

எனக்கு அந்த பிரச்சனை இருக்க வில்லை ..ஹிஹி என்னை வேளைக்கு வீட்டிலை அவிட்டு விட்டுட்டினம் :)

வணக்கம் சின்னகுட்டி தாத்தா :lol: ..அட எனக்கு விருப்பமான பதிவை போட்டிருக்கிறியள் பாருங்கோ..எல்லா சினிமா திரையரங்குகளையும் சொல்லி இருக்கிறியள் நாம போற திரையரங்குகளை விட்டிட்டியள் பாருங்கோ.. :D

அத நான் சொல்லுறன் என்ன..

1)கொன்கோர்ட் தெகிவள .(நாம முதல் காட்சி பார்க்கிற திரையரங்கு).

2)ரொக்சி வெள்ளவத்த..(கொஞ்சம் அப்படி இப்படி தான் திரையரங்கு ஆனா இப்ப பரவால்ல எண்டு சொல்லீச்சீனம்).

3)சவ்வோய்..(பம்பலபிட்டி).. (உங்க ஆங்கில படங்கள் பார்க்க போறனாங்கள் அல்லோ).

*பிறகு மருதானை "சினிசிட்டி" திரையரங்கும் தோற்றம் பெற்றது.. :)

உங்க காலத்தில் இருந்த மாதிரி இல்ல நம்ம காலத்தில சின்னகுட்டி தாத்தா..(நாம சொகுசா இருந்து படம் பார்த்தனாங்க அல்லோ)..வழமையா படம் பார்க்க போறது எண்டா வீட்டு ஆட்களோட தான் போறது ஆனா வீட்டு ஆட்களோட போய் படம் பார்த்தா அவ்வளவு சுவாரசியம் இருக்கா பாருங்கோ.. :D

நண்பர்களுடன் போற சுகம் இருக்கே தனி சுகம் பாருங்கோ அதுவும் "ரீயூசனை கட்" பண்ணிட்டு அல்லது "பள்ளியை கட்" பண்ணிட்டு போய் பார்க்கிற சுகம் தனி சுகம் பாருங்கோ..முந்தி எல்லாம் தீபாவளி,வருசம் வந்தா காலம எழும்பி குளித்து போட்டு கோயிலிற்கு எல்லாம் போறதில்ல..

தியேட்டரிற்கு வாசலில தான் போய் நிற்கிறது பாருங்கோ ஏன் எண்டா..(காலம போய் நிண்டா தான்)..முதல் காச்சி பார்க்கலாம்..(ஆட்களோட இடி பட்டு தள்ளுபட்டு போய் பார்க்கிற சுகம் இருக்கே தனி சுகம் பாருங்கோ).. :lol:

இப்படி எல்லாம் கஷ்டபட்டு உள்ளுகுள்ள போனா அங்க படம் எல்லாம் பார்க்கிறது எங்க..(அங்க கூத்து தான் பாருங்கோ)..பிறகு உந்த படத்த பார்க்க திருப்பி போறது எண்டா பாருங்கோ "கொன்கோர்ட் திரையரங்கு தெகிவள" நம்மளிற்கு பழக்கபட்ட இடம் எண்டபடியா அங்க தான் போறது.. :)

பிறகு அப்ப எங்கன்ட நண்பர்மார் இருக்கீனம் அல்லோ..(அவைக்கு என்ன தான் ஆங்கிலத்தில விளங்குமோ)..தெரியாது ஆங்கில படம் பார்க்கனும் எண்டு ஆக்கீனை கொடுப்பீனம் அப்ப "சவ்வோய் வெள்ளவத்தைக்கு" தான் போறனாங்க பாருங்கோ ஏன் ஆங்கில படம் பார்க்க போறவை எண்டு நான் சொல்ல தான் வேண்டுமா தாத்தாவிற்கு விளங்கும் எண்டு நினைக்கிறன்.. :lol:

இப்படி பல சுவாரசியாமான விசயங்கள் தாத்தா மீளநினைவுபடுத்திவிட்டியள் பாருங்கோ..அத்துடன் இங்க அது தான் "சிட்னியில" திரையரங்குகள் எல்லாம் அந்த மாதிரி ஆனா உங்க ஒன்னும் இடிபட்டு தள்ளுபட்டு "டிக்கட்" எடுக்க ஏலாது பாருங்கோ.. :D

ஆனபடியா கொஞ்சம் சுவாரசியம் குறைந்து போயிட்டு..(மற்றும்படி உங்கையும் பம்பல் தான்)..எங்களோட சேர்ந்து இங்க பெட்டைகளும் அட்டகாசம் எண்டா பாருங்கோவன் ஆனாலும் இப்ப முந்தி போய் திரையரங்குகளிள முதல் காச்சி பார்கணும் எண்ட ஆசை எல்லாம் போயிட்டு..படம் பாத்தா காணும் எண்டம் மாதிர் தான்..

நன்றி சின்னகுட்டி தாத்தா உங்கள் பதிவின் மூலம் என்னுடைய பழையவற்றை மீளநினைவுபடுத்தியதிற்கு... :)

"அந்தநாள் ஞாபகம்

நெஞ்சிலே வந்ததே

நண்பனே" :(

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு

கொழுப்பிலை சவ்வோய் தியேட்டர் மாதிரித் தான் யாழ்ப்பாணத்தில் றீகல் தியேட்டர் இருந்தது. பிறகு யாழ் நகர மண்டபத்தையும் தியேட்டராக மாற்றி றியோ தியேட்டர் என பெயர் மாறியது. இவை இரண்டிலும் தான் ஆங்கிலப் படங்கள் பார்க்கலாம். இவற்றிலை சில படங்களை பார்க்கப் போனால் ரிக்கற் தர மாட்டினம் அதாலை அரைக்காற்சட்டையை போடாமல்முழுக்காற்சட்டை போட்டு வராத மீசையை வரப்பண்ணி நாங்கள் செய்த கூத்துக்கள் கொஞ்சமல்ல.

வசபண்ணா,

ஓ..அப்படியோ சங்கதி நன்றி வசபண்ணா.. :lol: (அட சில படங்களுக்கு "டிக்கட் தரமாட்டீனமோ)..அப்ப அது என்ன படம் எண்டு ஒருக்கா சொல்லுங்கோவன் :lol: ..அது சரி உந்த படம் பார்த்தா பொலிஸ் பிடிகாதோ வயசு வர முன்னம்..ஏதாச்சும் பொலிஸ் மாமா துரத்தின அநுபவம் இருக்கோ.. :)

அப்ப நான் வரட்டா!!

வசபண்ணா,

ஓ..அப்படியோ சங்கதி நன்றி வசபண்ணா.. :) (அட சில படங்களுக்கு "டிக்கட் தரமாட்டீனமோ)..அப்ப அது என்ன படம் எண்டு ஒருக்கா சொல்லுங்கோவன் :) ..அது சரி உந்த படம் பார்த்தா பொலிஸ் பிடிகாதோ வயசு வர முன்னம்..ஏதாச்சும் பொலிஸ் மாமா துரத்தின அநுபவம் இருக்கோ.. :lol:

ஓஓஓ அதுவோ "A" படத்திற்கு போய் "B" பார்க்கிறது. நாங்க A, B, C, D படிக்கத் தான் போறனாங்கள் ஆனால் சனங்கள் தான் விசயம் புரியாமல் தப்புத் தப்பாய் கதைக்கிறது.

:) அதுசரி என்ன படம் என்று கேட்ட உமக்கு "அது சரி உந்த படம் பார்த்தா பொலிஸ் பிடிகாதோ வயசு வர முன்னம்..ஏதாச்சும் பொலிஸ் மாமா துரத்தின அநுபவம் இருக்கோ".. என்று எப்படி கேள்வி கேட்கத் தெரியுது?? அனுபவம் ரொம்ப அதிகமோ???? :lol::lol:

ஓஓஓ அதுவோ "A" படத்திற்கு போய் "B" பார்க்கிறது. நாங்க A, B, C, D படிக்கத் தான் போறனாங்கள் ஆனால் சனங்கள் தான் விசயம் புரியாமல் தப்புத் தப்பாய் கதைக்கிறது.

:) அதுசரி என்ன படம் என்று கேட்ட உமக்கு "அது சரி உந்த படம் பார்த்தா பொலிஸ் பிடிகாதோ வயசு வர முன்னம்..ஏதாச்சும் பொலிஸ் மாமா துரத்தின அநுபவம் இருக்கோ".. என்று எப்படி கேள்வி கேட்கத் தெரியுது?? அனுபவம் ரொம்ப அதிகமோ???? :lol::lol:

அடடடா..அப்ப இங்கிலிசு படிக்க தான் போயிருக்கிறியள் எண்டு சொல்லுங்கோ.. :) (நன்னா தான் படித்திருக்கிறியள் பாருங்கோ)..அச்சோ நேக்கு அநுபவம் எல்லாம் இல்லையப்பா நான் நன்ன பிள்ள நம்ம தோஸ்த்மார் மாட்டுபட்டவை அவையள் தான் சொன்னவை பாருங்கோ.. :D:(

நாம் உந்தளவு "ரிஸ்க்" எல்லாம் நான் எடுக்க போறதில்ல :D ஏன் எண்டா பிறகு வீட்ட போறதில்லையா :) என்ன வசபண்ணா தாங்கள் எடுத்தனியளோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

நம்மடை காலத்தில.. 75.. 80களில.. தெகிவளை றொக்சி தியேட்டரில சிங்களப் படங்கள் போடுவாங்க.. சிங்கள படம் இல்லாத வேளையில் பழைய எம்ஜிஆர் படங்கள் போடுவாங்க.. வெள்ளவத்தைல பிளாஸா.. அதில புதுப்புது தமிழ் படம் போடுவாங்க.. w.a. de Silva mawatha (High Street)ஆல போனா.. சபையர் தியேட்டர்.. அப்போது சபையரில் முதன்முதலாக '*இராஜராஜசோழன்' சினிமாஸ்கோப் தமிழ் படம் போட்டாங்க.. மற்றும்படி ஆங்கிலப் படங்கள்தான்.. அதில சிங்களப்படம்.. அதைத் தாண்டி போனா ஒரு பக்கம் பாமன்கடை ஈரோஸ் தியேட்டர்.. அதில தமிழ் படம் போடுவாங்க.. பாமன்கடைல இருந்து குறுக்கு றோட்டால கிருலப்பனைக்கு போனா.. அங்கையும் ஒரு தமிழ் படம் ஓடுற தியேட்டரு.. பெயர் ஞாபகத்துக்கு வருதில்லையே.. :unsure: பம்பலப்பிட்டீல மெஜஸ்டிக் தியேட்டர்.. ஆங்கிலப்படங்கள்.. கொள்ளுப்பிட்டியில் குளுகுளு வசதியுடன் 'லிபர்டி' தியேட்டர்.. அதிலும் ஆங்கிலப்படம்.. சிலவருடங்களுக்கு முன் போனபோது லிபர்ட்டி, பிளாஸா போன்றன சமாதி நிலையில் இருந்தன.. :unsure:

கொம்பனித் தெருவில் ''ட' வடிவில் லிடோவும் நவாவும்.. அதாவது இரண்டின் பின்புறமும் ஒன்றுடனொன்று பொருந்தி இருக்கும்.. நவாவில் தமிழ் படங்கள் திரையிடுவார்கள்.. தற்்போது 'நவா'வும் சமாதியாகிவிட்டது..

மருதானையில் சென்ரல், கொட்டாஞ்சேனையில் கெப்பிட்டல் கெயிட்டி என இரண்டு திரையரங்குகள்.. கிராண்பாசில் கிங்ஸ்லி... தெமட்டகொடயில் 'சமந்தா' என்றொரு தமிழ் திரையரங்கு.. ஜிந்துப்பிட்டியில் 'முருகன்' என்றொரு திரை தமிழ் திரையரங்கு.. தற்போது இவற்றின் நிலைபற்றி தெரியவில்லை..

80க்கு பிறகு தெகிவளையில் 'டாசா' முதலாளி எதிரிசிங்கா 'கொன்கோட்' என்றொரு திரையரங்கை நிர்மாணித்தார்.. அதில் 'குரு' என்ற படம் ஒரு வருடத்தையும் தாண்டி காண்பிக்கப்பட்டது. இலங்கையில் அதிகநாட்கள் ஓடிய தமிழ் திரைப்படம் அதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

போதுமா யம்மு பேபி.. :lol:

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு படம் பார்க்க வந்தவர்களின் தூசண மழையத்தான் கேட்க முடிந்தது

இதை பார்க்கும் போது அந்த காலம் என்னோடு கலரியில் படம் பார்த்தவர்கள் நாகரிகமாக தெரிந்தார்கள்

உது மட்டுமே இன்னும் எத்தனையோ விசயங்களில் அந்தக்காலம் எவளவோ மேல்.

  • தொடங்கியவர்

வணக்கம் ஜம்மு சகீவன் ...உங்கள் கருத்துகளுக்கும் அதை தொடந்து வரும் கருத்துகளுக்கும் நன்றி

நான் தொட மறந்த பல விடயங்களை தந்த சோழியானுக்கு நன்றிகள்

ஆங்கில திரைபடங்கள் திரையிடும் முக்கியமான தியேட்டர் ஒன்று நீயூ ஒலிம்பியா என்று கொழும்பு மருதானையில் இருந்தது . மெஜஸ்டிக் தியேட்டரை குறிப்பிட்டார்கள் அந்த காலம் தியேட்டர் ஒன்று ஸ்டிரூயோ முறையில் இருந்தது என்றால்.உது தான் .சீட்டுக்கு அடியிலை எல்லாம் பொக்ஸ் இருந்தது . கிறிஸ்தோபர் அலியின் ட்ரகுலா படம் ஒன்று அந்த படத்தின் பெயரை மறந்து விட்டேன் . யாரும் தனிய அங்கு இருந்து படத்தை பார்க்க முடியுமா என்று பெட் கட்டின காலம் எல்லாம் உண்டு.

ஒரு படக் கொப்பியை வைத்து கொண்டு வெலிங்டன் லிடோ விலும் ஓடுவார்கள்

வின்ஸ்ரிலும ரீகலிலும் , ராணியிலும் ஸ்ரீதரிலும் ஓடுவார்கள்

ஒரு தியேட்டரில் அரை மணித்தியாலம் முன்னர் தொடங்கும்

சோழியன் தாத்தா,

அட...நம்மன்ட தாத்தாவிற்கு எல்லாம் அத்துபடி. :( .(ம்ம்.."றோக்சி" திரையரங்கில தாங்கள் சொன்ன மாதிரி சிங்கள படங்கள் ஓடுறது என்ன) :D ..ஆனா உந்த திரையரங்கு சரியான குப்ப..(ஆனாலும் அங்கையும் இருந்து பார்த்தது தான்).. :(

அது சரி தாத்தா நீங்கள் குறிப்பிட "சபயர் திரையரங்கு" பத்தி இன்னைக்கு தான் கேள்விபடுறன் ஆனா "சபயர் Hotel" எண்டு இருக்கு அதற்கும் உந்த திரையரங்கிற்கு ஏதாச்சும் தொடர்பு இருக்கோ?? ^_^

அட..பாமன் கட "ஈரோஸ் திரையரங்கு" பேர் கேட்ட ஞாபகம் ஒரு நாளும் போனதில்ல..(சில திரையங்கிற்கு போக தான் வீட்ட அனுமதி கிடைக்கும் நம்மளிற்கு) :D ..அங்கால இங்கால போக விடமாட்டீனம் அப்படி எண்டா பள்ளியை மட்டம் போட்டு விட்டு போகணும் பாருங்கோ..அப்படி இருந்தும் இந்த பக்கம் போகல்ல..

அச்சோ..நான் மெஜஸ்டி திரையரங்க மறந்துட்டன்..(ஞாபமூட்டிட்டிய

நம்மடை காலத்தில.. 75.. 80களில.. தெகிவளை றொக்சி தியேட்டரில சிங்களப் படங்கள் போடுவாங்க.. சிங்கள படம் இல்லாத வேளையில் பழைய எம்ஜிஆர் படங்கள் போடுவாங்க.. வெள்ளவத்தைல பிளாஸா.. அதில புதுப்புது தமிழ் படம் போடுவாங்க.. w.a. de Silva mawatha (High Street)ஆல போனா.. சபையர் தியேட்டர்.. அப்போது சபையரில் முதன்முதலாக '*இராஜராஜசோழன்' சினிமாஸ்கோப் தமிழ் படம் போட்டாங்க.. மற்றும்படி ஆங்கிலப் படங்கள்தான்.. அதில சிங்களப்படம்.. அதைத் தாண்டி போனா ஒரு பக்கம் பாமன்கடை ஈரோஸ் தியேட்டர்..

மன்னிக்கவும்.. சிறு தவறு.. சபையர் தியேட்டரில் அப்போது சிங்கள திரைப்படங்கள் போட்டாங்க.. பிளாஸா தியேட்டருக்கு முன்னதல் இருந்த 'சவோய்' திரையரங்கில்தான் முதன்முதலாக 'இராஜராஜசோழன்' என்ற சினிமாஸ்கோப் படத்தை திரையிட்டாங்க.. மற்றும்படி ஆங்கிலப்படங்கள்.. வீட்டுக்கு தெரியாமல் அந்த படத்தை முதல்நாளே பார்த்துவிட்டு.. மீண்டும் ஒருமுறை தந்தையார் கூட்டிச் செல்ல.. முதன்முதலாக பார்ப்பதுபோல நடித்தது மறக்கமுடியாது.. :D

  • 4 weeks later...

வணக்கம் தூயா .. புலத்தில் பிறந்து வளர்ந்த உங்களுக்கு நான் சொல்லும் கலரியை பற்றி தெரிந்து இருக்க நியாயமில்லை தான்

இலங்கையில் தியேட்டர்களில் வசதி தராதரம் விலை போன்ற அடிப்படையில் கலரி செக்கன் கிளாஸ் பெஸ்ட் கிளாஸ் றிசர்வ் பல்கனி சுப்பர் பல்கனி என்று பிரிப்பு இருந்தது

அது போல என்னை போல வசதி குறைந்த தராதரம் குறைந்த மலிவாக படம் பார்க்க நினைப்பவர்களுக்கு தியேட்டர்களில் வெறு வாங்குகள் மட்டும் வசதி அளித்து முன் வரிசையில் ஒதுக்கபட்ட இடம் தான்

தியேட்டர்களில் கலரி என்று கூறுவோம்...அப்படா ஓரளவு விளங்க படுத்தி இருக்கிறன் என்று நினைக்கிறன் :lol:

:lol: இப்போ புரிந்தது...நன்றி சின்னகுட்டிஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு யாழ்ப்பாணதியேட்டர் எல்லாம் தண்ணிபட்டபாடு அதிலையும் ஹரன் தியேட்டர் சொல்லி வேலையில்லையப்பா என்ன வாசனை என்ன வாசனை :D:lol:

என்ன செய்யுறது குமாரசாமியர்.. அவசரத்துக்கு ஹரன் தியேட்டருக்கு பக்கமாகத்தானே ஓடிப்போய் ஒதுங்குறது.. எதை அடக்கினாலும் அதை அடக்க முடியுமா என்ன?! அதுதான் அந்த நறுமணம்.. :D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.