Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஜீவன் உடனான தீபம் தொலைக்காட்சியின் நேர்காணல்

Featured Replies

காய்க்கிற மரம் கல்லெறி வாங்கித்தான் ஆகவேண்டும்!

காய்ப்பதா வேண்டாமா என்ற முடிவை மட்டுமே உங்களால் எடுக்க முடியும். கல் எறிவதா வேண்டாமா என்ற முடிவை எடுப்பவர்கள் அதனை பார்ப்பவர்கள். கலைஞர்கள் இதை நினைவில் கொள்வது மிக நன்று!

அஜீவன் அண்ணா அவர்களின் சிரமங்கள் யாவரும் அறிந்தததே...... இருப்பினும் நான் யாழைவிட்டு வெளியேறுகிறேன் என நீங்கள் முன்பு எழுதியது..... உங்களை கொஞ்சம் இழக்காரமாக எண்ணவேண்டிய நிலைக்கு எமை தழ்ழியது. அதன் கரணகர்த்தா நீங்களே. கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டும் என நீங்களே எழுதிகொண்டு விமர்சனங்களில் இருந்து நான் ஒதுங்குகிறேன் என்பது ஒன்றோடு ஒன்று ஒவ்வாதது என்பது நீங்கள் அறிந்ததுதானே.

நெடுக்காலபோவானின் ஆரம்ப விமர்சனத்தில் எந்த தவறையும் என்னால் காணமுடியாமல் உள்ளது. பல முறை படித்துவிடடேன். இலங்கையின்... கலை பற்றி ஆரம்ப காலம்தொட்டு இன்று வரை தொடும்போது? எத்தனையோ இன்னல்களுக்கும் மத்தியில். சாதரண அரிசிக்கே தடைக்குள்ளான இடத்தில் இருந்து எத்தனையோ குறும்படங்களை எடுத்திருக்கிறார்கள் அது எவ்வாறு மறைந்து போகும்? அது பற்றி நீங்கள் அறிந்திராது விடின் தவறில்லை. ஆனால் அதை ஒருவர் சுட்டிகாட்டும்போது ஏற்க மறுப்பது. அல்லது கத்தினால்தான் தேசியமா? என்றுவிட்டு இருட்டடிப்பு செய்வது நிச்சயம் தவறானதே! விடுதலைபுலிகளை பயங்கரவாதிகள் என தமது அரசாங்கமே தடைவிதித்து வைத்தபோதிலும் ........ ஒர் அவூஸ்ரேலிய தொலைகாட்சி நிறுவனமும் அமெரிக்கா சின் ன் செய்திசேவையும் புலிகளின் கள படப்பிடிப்பாளர்களை பற்றியும் அவர்கள் படும் கஸ்டங்கள் பற்றியும் ஒரு விபரண படத்ததை தாயரித்து வெளியிட்டார்கள். காரணம் அது எவ்வாறன கஸ்டங்களை உடையது என்பதை அதே துறையில் உள்ள இன்னொருவனே அறிவான். அதுபோல நீங்களும் ஒரு கலைஞனாதலால் தாயகத்து குறும்படங்கள் பற்றி அறிவேண்டியவராகின்றீர்கள் என்பதே எனது தாழ்மையான எண்ணம்.

சொந்தபெயரில் வந்து எழுதுங்கள் என அறைகூவல் விடுத்தீர்கள். பின்பு நீங்களே உங்கள் உறவினர்கள் கொழும்பில் இருக்கிறார்கள் என எழுதுகின்றீர்கள். உண்மையை நான் மறைக்கிறேன் என்று நீங்களே ஒப்பு கொள்கின்றீர்கள் இந்த இடத்தில். தமிழனாக பிறந்ததால் மட்டும் எத்தனையோ துன்பங்களை நாங்கள் (நீங்களும்தான்) அனுபவித்திருக்கிறோம் உங்களின் நிலைமையை எங்களால் நிச்சயமாக புரிந்துகொள்ள முடியும். உங்களது உறவினர்களையும் உங்களது படைப்புக்களையும் காக்கவேண்டிய கடமை உங்களுக்கு இருக்க வேண்டியதே. அதே போலதான் உங்களின் படைப்புகளை காப்பாற்றுவதற்காகவா சிங்களத்தை துக்கி நிறுத்துகின்றீர்கள் என்ற கேள்வியை முன்வைப்பது அதை பார்க்கும் ஒரு தழினுக்கு இயல்பாகவே தோன்ற கூடிய ஒரு உணர்வு. இங்கே சிலர் குறிப்பிடுவதுபோல் புலியும் தேசியமும் இருக்க வேண்டிய எந்ந அவசியமும் இல்லை தமிழன் என்ற அடையாளத்துடன் பிறந்த பிறப்பே போதும். இது உங்களுக்கு சிக்கலை தர கூடிய ஒரு கேள்வி. இங்கே உங்களின் சாமர்தியத்தைதான் நான் எதிர்பார்த்தேன் .......... நீங்கள் நான் ஒதுங்குகிறேன் என்பது எனக்கு ஏமாற்றாமாக இருந்தது. அதனால்தான் முடிந்தவைகளையும் திரும்ப கிளறவேண்டிய ஒரு துர்ரதிஸ்ட நிலை!

கலைஞர்களின் வாழ்வு கடினமானதே. மற்றவரை சந்தோசபடுத்த அவர்கள் எத்தனையோ கஸ்டங்களை படுகின்றார்கள்..... அதற்கு உறுதியான மனமும் கடின உழைப்பும் அவசியமானது இடைவிடாத முயற்சிகள்தான் பல வெற்றிகளை கொடுத்திருக்கின்றன. உண்மையில் நீங்கள் இலங்கை சிறைபற்றி குறும்படம் தாயரிக்க முயற்சி செய்தால் என்னால் ஆன பங்களிப்பை பொருளாதார ரீதியில் கூட செய்ய ஆவலாய் உள்ளேன் எப்போதும் தொடர்புகொள்ளுங்கள்!

(அஜீவன் அண்ணா எனது கருத்து உங்களால் புரிந்துகொள்ள கூடியதாக இருக்குமென நான் நினைக்கிறேன். இங்கே உங்கள் மனதை தொடும்படியாக எதுவுமே இல்லை........ ஆனாலும் ஓரே விடயம் வேறு ஆளுக்கு வேறுமாதிரியாக பட்டுவிடும் அதனால்தான் சொல்கிறேன்)

உங்கள் கருத்துதுக்கு நன்றி! மருதங்கேணி

நான் என் சுவிஸ் நண்பர்களுடன் பணிபுரியும் போது நான் கற்றது ஒன்று!

நேற்று நடந்ததை விடு

இப்போ செய்யிறதை பார் என்பார்கள்.

நான் தமிழீழ திரைப்பட துறை குறித்து பல இடங்களில் பேசியிருக்கிறேன்.

அது இந்த பேட்டியில் இல்லை.

இது லண்டன் பயிற்சிப்பட்டறை தொடர்பாக என்னை சந்தித்தது.

ஒரு பேட்டியில் கேட்கும் கேள்விக்குத்தான் பதிலே தவிர

இழுத்து போட்டு சொல்லும் திணிப்புகள் அல்ல.

இப்பேட்டி ஐரோப்பாவில் இடம்பெற்ற என் முதல் நேரடி பேட்டி

என நினைக்கிறேன்.

அதேநாள் லண்டன் டீடீஎன் கலையகம் ஒரு பேட்டியை எடுத்தது.

நான் தொலைக் காட்சிகளுக்கு இதைக் கேளுங்கள் என்று சொல்ல முடியாது.

அது அவர்களது விருப்பம்.

அது அவர்களது பணியில் நான் மூக்்கு நுழைப்பது போலாகிவிடும்.

நான் புலம் பெயர் நாடுகளிலுள்ள தொலைக் காட்சிகளை

குறை கூறுவதுண்டு.

எம்மவர் படைப்புகளுக்கு உரிய அந்தஸ்தை வழங்கவில்லை என்று...........

இது உண்மை!

ஆனாலும் அவர்கள் என்னை வெறுப்பதில்லை.

என் நண்பர்களாக இருக்கிறார்கள்.

சேரலாதன் குயிலினி போன்றவர்கள் சுவிஸ் வந்த போது

தமிழருக்கு ஒரு திரைப்பட கல்லூரியின் முக்கியத்துவம் குறித்து பேசினேன்.

எனது கருத்துகளுக்கு சிலர் மறுப்பு தெரிவித்த போது

சேரலாதன்

அஜீவன் அண்ணாவின் கருத்தை சொல்ல விடுங்கள்

நிறைகளை விட குறைகளே எம்மை புடம் போடும் என்ற போது

ஏனையவர்கள் மெளனமானார்கள்.

அவர்களுடனான சந்திப்பு மகிழ்வாக இருந்தது.

அவர்களது ஒரு அழைப்பை என்னால் நிறைவேற்ற முடியாது என்று சொன்னேன்.

என் காரணங்களை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிந்தது.

அது தமிழர் தலைமையின் அழைப்பு.

அந்த அன்பை நான் பேணி வருகிறேன்.

அது குறித்து நான் இங்கு பேச முடியாததற்கு மன்னிக்கவும்.

1992ல் சுவிஸில் உருவான கதிர் எனும்

முதலாவது வீடியோ சஞ்சிகையில்

யாத்திரை எனும் குறும்படம் இணைக்கப்பட்டது.

அவை குறித்துக் கூட நான் பேசவில்லை.......

இதுபோல் எத்தனையோ விடயங்களை

27 நிமிடத்துக்குள் பேச முடியாது?

சிலர் சுழியாக தெரிவார்கள்.

பலர் தண்ணீராக கரைவார்கள்.

முன்னது தெரியும்

பின்னது தெரியாது.

அதுபோல சிலர்...................

நெடுக்ஸின் பணிக்கு உதவுங்கள்.

நன்றி!

Edited by AJeevan

  • Replies 181
  • Views 21.2k
  • Created
  • Last Reply

சிலர் சுழியாக தெரிவார்கள்.

பலர் தண்ணீராக கரைவார்கள்.

முன்னது தெரியும்

பின்னது தெரியாது.

அதுபோல சிலர்...................

அருமை! மிகவும் ரசித்தேன்!!

பாராட்டுக்கள்!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

தாயக குறும்படங்கள் பற்றியோ அல்லது வேறு ஆக்கங்கள் பற்றியோ விமர்சிப்பதென்பது மிகவும் கடினமான விடயம். சிலவேளை அவை தப்பபிப்பிராயத்துக்கும் இடமளிக்கலாம். தப்பபிப்பிராயம் ஏற்படக் கூடாது என்பதற்காக சிலவற்றைத் தவிர்த்தால், அது விமர்சகரது திறமையைக் களங்கப்படுத்தலாம்.. இப்படியான நிலையில், அஜீவனும் தாயகப் படைப்புகள் பற்றிய விமர்சனத்தைத் தவிர்த்திருக்கலாம் இல்லையா..?!

விமர்சனம் என்பது எதிர் விமர்சனமா இருக்க வேண்டும் என்பதில்லையே. குறை நிறைகளைச் சுட்டிக்காட்டுவதாகவும் தொடர்ந்து வரும் படைப்புக்களுக்கு அவை மெருகூட்டுவனவாகவும் இருக்கலாம் தானே.

நான் நினைக்கிறேன் தாயகக் குறும்படங்கள் சிலவற்றைப் பற்றிய விமர்சனங்கள் ஈழநாதம் போன்ற பத்திரிகைகளில் வந்திருக்கின்றன என்று. சில விமர்சனங்களை வாசித்த ஞாபகம் உண்டு. :unsure:

பேசி பேசியே காலம் கழிப்பதை விடுத்து

இப்ப செய்ய வேண்டிய படைப்பை பற்றி

செயல்படுவதே இப்போதைய தேவை என நினைகக்கிறேன்.

இந்த பேச்சுகளை நிறுத்தி விட்டு

தயவு செய்து

உங்கள் எண்ணங்களின் செயல் வடிவத்தை

உருவாக்குவது குறித்து பேசுங்கள் நெடுக்ஸ்!

அதுவே தற்போதைய தேவை!

நானும் உங்களுக்காக

அடுத்த வேலைகளை விட்டு

ஆவலோடு இருக்கிறேன்!

உங்கள் ஆதங்கம் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்.

காலை முதல் மாலை வரை பேசிப் பேசியே பல விடயங்களைச் செய்வதாகச் சொல்லும் யாழ்க் களத்தில் வந்து நீங்கள் செயலால் செய்து காடுங்கள் என்று கேட்பது உங்களுக்கே நல்லா இருக்கா? இதைத் தான் குசும்பு என்பது.மடியிலையே கை வைத்திட்டீங்க.

கவிதை ஒன்று தான் நாபகம் வருகிறது,

சிந்தனைத் திறனும் செயலும் இன்றி,

வாய்ச் சொல்லில் வீரரடி கிளேயே

இவர் நாளும் நிந்தனை செய்வாரடி கிளியே :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பேசி பேசியே காலம் கழிப்பதை விடுத்து

இப்ப செய்ய வேண்டிய படைப்பை பற்றி

செயல்படுவதே இப்போதைய தேவை என நினைகக்கிறேன்.

இந்த பேச்சுகளை நிறுத்தி விட்டு

தயவு செய்து

உங்கள் எண்ணங்களின் செயல் வடிவத்தை

உருவாக்குவது குறித்து பேசுங்கள் நெடுக்ஸ்!

அதுவே தற்போதைய தேவை!

நானும் உங்களுக்காக

அடுத்த வேலைகளை விட்டு

ஆவலோடு இருக்கிறேன்!

உங்கள் ஆதங்கம் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்.

நெடுக்காலபோவன் கேள்வி கேட்டுவிட்டார்.. விமர்சனங்களைத் தந்துவிட்டார் எனவே அவர் எப்பாடுபட்டாவது தனித்து இதைச் செய்ய வேண்டும் இன்றேல் அவர் எனிமேல் விமர்சனங்களை வைக்கப்படாது என்று நீங்கள் புதிய சமன்பாடொன்றை உருவாக்க நினைக்கிறீர்கள்.

நான் எனது எண்ணத்தை வெளியிட்டேன். அதற்காக நான் ஜெயிலுக்குள் போய் இருந்துவிட்டு வந்து குறும்படத்தை எடுக்க உங்களை ஒளிப்பதிவுக்கு அழைக்க முடியாது.

இது எமது மக்களுக்கான படைப்பு. மக்களின் ஒத்துழைப்பு அவசியம். அது இலகுவாக அல்லது ஒரிரு நாளில் நீங்கள் அவசரப்படும் அளவுக்கு விரைவாகக் கிடைக்கக் கூடியதல்ல.

இந்தக் குறும்படம் தொடர்பான காத்திரமான அறிவுக்கள் எதுவுமே வெளிவரவில்லை. எல்லோரும் எழுத்தளவில் தான் சொல்லியுள்ளனர். அவற்றை உறுதிமொழிகளாகக் கருத முடியாது. எனவே இதை செயற்திட்டத்துக்கான தொடக்கம் என்று கொள்ள முடியாது.

இப்படி ஒரு குறும்படம் செய்ய இருக்கிறோம்.. இதற்கு பங்களிப்புக்கள் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.. அவை வழங்கப்படும் பட்சத்தில் படைப்பை உருவாக்க அவை பயன்படும் என்பதற்கான உத்தரவாதங்கள் என்று பல படிநிலைகள் இருக்கின்றன.

நெடுக்காலபோவன்.. ஒரு ரசிகன். ஒரு படைப்பாளியல்ல. ஒரு ஊடகவியலாளன் அல்ல. நெடுக்காலபோவனின் அறிவிப்பை மக்கள் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

நான் எனது எண்ணத்தை வெளியிட்டேன். அதன் நியாயப்பாட்டைச் சொன்னேன். அதற்குச் செயலுருக் கொடுக்க பலதரப்பட்டவர்களின் கூட்டு முயற்சி அவசியம். இது ஒரு சமூகத்துக்கான படைப்பு என்ற வகையில் சமூகத்தின் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம். இது எனது சொந்தப் படைப்போ அல்லது எனது சொந்த வெளியீடோ அன்று.

முதலில் இதன் அனைத்துப் பரிமானங்களையும் தெளிவாக உள்வாங்கிக் கொண்டு.. உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்.

எண்ணக்கருவை நான் தந்திருக்கிறேன். நானே அதற்கான கருத்தையும் வழங்க முடியாது. அதைப் பாதிக்கப்பட்ட மக்கள் தான் முன் வந்து வழங்க வேண்டும். அதற்கு மக்களுக்கு இது தொடர்பான விபரங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும். மக்களிடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் தான் படைப்பை எப்படி உருவாக்கி வெளியிடுவது என்பது பற்றி சிந்திக்கலாம். அதைவிடுத்து.. நெடுக்காலபோவன்.. உடன தொடங்கும்.. நான் கமராவோட ரெடியா நிக்கிறன் என்றால்.. நான் தான் கமராவில தோன்றி படைப்பை வெளியிட வேண்டும்.

சில படைப்புக்கள் வெளி வர சில வருடங்கள் கூட எடுக்கும். மக்களுக்கு படைப்பின் தேவைபற்றிய அறிவூட்டல் போய்ச் சேர்ந்து அவர்கள் செயற்பட ஆரம்பித்து.. படைப்பை உருவாக்கக் கூடிய பங்களிப்புக் கிடைத்த பின் தான் இதை ஆரம்பிக்க முடியும். இது ஒரு குடும்பத்தை அல்லது தனியாளை மையப்படுத்திய கதையல்ல. இது ஒரு இனம்.. ஒரு அரசு.. சர்வதேசம் சம்பந்தப்பட்ட ஒரு விடயம்.

எனவே இப்படைப்புக்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம். நாம் உங்களுக்கான வேளை வரும் போது அழைத்துக் கொள்கின்றோம் அஜீவன். அதுவரை நீங்கள் உங்களை வேலையைப் பார்க்கலாம்.

மற்றது..

பாரதியின் பாடலை இழுத்து வரமுதல்.. சம்பந்தப்பட்டவர்கள் இந்த விடயத்தின் கன பரிமானத்தை விளங்கிக் கொள்வதும்.. அதனை செயற்படுத்த தனது பங்கென்ன என்று சிந்திப்பதையும் விடுத்து.. உன்னால் முடியாததை ஏன் செய்ய முனைகிறாய்.. உன்னால் இது முடியாது.. நீ வாய்ச்சொல் வீரன் என்பது அவசியமானதன்று. அது இங்கு படைப்புக்கு 0.0001% கூடப் பங்களிக்காது.

முடியாதது என்ற ஒன்றில்லை. எமக்கும் பல சொந்த விடயங்கள் இருக்கின்றன. அதுவும் குறும்படப் படைப்பியலைப் பொறுத்தவரை நான் ஒரு ரசிகன். ஒரு ரசிகன் தனது இனத்துக்காக ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்று இந்தளவுக்கு ஆர்வமுடன் இருக்கிறான் என்பதைப் பாராட்டி வரவேற்கக் கூட முனையாதவர்கள் பாரதியை இதற்குள் இழுத்து வந்து தங்கள் சொல்வீரத்தால் முயற்சிகளை முறியடிக்க நிற்பது கோழைத்தனமாகவே பார்கிறேன். இது தான் எம்மவரின் அடுத்தவன் காலை வாரிவிடும் செயற்பாடு.

ஒன்று ஏற மற்றது அதன் காலைப் பிடிச்சு கீழ விழுத்திறதிலேயே குறியா இருக்கும். இப்படியான சமூக அங்கத்தவர்கள் உள்ள இடத்தில் இருந்து நான் நினைக்கவில்லை.. உருப்படியா பணியாற்ற முடியும் என்று. ஆனால் நான் என்னைப் போன்ற எண்ணங்களுடைய நண்பர்களுடன் இணைந்து இதைச் செய்ய முனையின்.. இதை விட விரைந்து இப்படியான ஒரு படைப்பை எவ்வகையிலும் கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன். யாழில் உள்ளவர்களின் எண்ண ஓட்டத்தை ஒருங்கிணைக்க முயல்வதிலும் என்னைப் போன்ற ஒரே எண்ணமோட்டமுள்ள இளம் சமூகத்திடம் பேசி செயற்பட முனைவது கூடிய வினைத்திறனாக அமையும் என்று நினைக்கிறேன். :unsure:

Edited by nedukkalapoovan

???!!!

  • கருத்துக்கள உறவுகள்

???!!!

நாங்க நீங்க இவ்வளவும் பேசி.. ஒரு தொடக்கப் புள்ளியையும் போட்டுவிட்டு நிற்க.. வாய்ச் சொல்லில் வீரரடி என்று பாரதியார் நுழைகிறார் என்றால் அவருக்கு இது பொறுக்கல்ல... என்று தானே அர்த்தம். அவர் எனி எப்படியும் இதைக் குழப்பிட்டுத்தான் இங்கிருந்து போவார். அதிலும் கொஞ்சம் அமைதி காத்திட்டு ஆற மீண்டும் தொடங்குவம். அதுவரை கேள்விக் குறிகளும் விளிப்புக் குறிகளுமே விடைகளாகட்டும். :unsure:

திரு.நெடுக்காலபோவான்,

அவர்கள் கிடக்கிறார்கள்......அவர்களை ஒருபொருட்டாகக் கருதி ஏன் காலத்தின் தேவையை பின்போடுவான்?

வசம்பு செவ்விகளுக்கு உதவ ஆயத்தம் என்றார். அவர் அதன்பால் வேலைகளைத் தொடங்கியிருப்பார் என நம்பலாம்.

வசம்பும் அஜீவனும் அருகருகே என்றால் அதற்கான செவ்விகளுடன் ஒளிப்பதிவும் செவ்வி தருபவரின் நிலைமைகளுக்கிணங்க நடக்கலாம்....அதற்கு அஜீவன் ஆயத்தம் என்று கருத்துக்கள் பச்சைக்கொடி காட்டுவனபோல் எனக்குத் தோன்றுகின்றன? என்ன அஜீவன் சரிதானே??

அதனைவிட அஜீவன் செய்தியாளரும் கூட....அவர் ஒரு திரியொன்றினைத் தொடக்கி சட்டரீதியாக வழக்குகள் எப்படி இழுத்தடிக்கப்படுகின்றன என்பது பற்றிய இழுத்தடிக்கப்பட்ட ஆதாரங்களைத் (உதாரணங்கள்) தருவீர்கள் என நம்புகிறேன்...இது பதிவாளர்களின் பங்களிப்பை வழங்க வழிவகுக்கும்......உங்கள் விருப்பம்....எனது வேண்டுகோள் இது...

திரு.நெடுக்காலபோவான்,

தனியே நீங்கள் இப்பணியைச் சுமக்க வேண்டாம்..

பகிர்ந்து கொள்ளுங்கள்......பங்களிப்புச் செய்தால் பாவிப்போம்...இல்லாவிடில் நாம் செய்து முடிப்போம்..

வாய் நுழைப்பவருக்கு பணியொன்றினை வழங்குங்கள்...செயல்வீரர் என்றால் பங்களிப்புச் செய்வார்...அல்லாவிடின் பயம் எனப் பதுங்குவார்.....

இவை எனது வினயமான இடுகைகள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவை எனது வினயமான இடுகைகள்...

ஹலோ பாட்டி இடுகை என்றால் என்ன :unsure:

நெடுக்காலபோவன் கேள்வி கேட்டுவிட்டார்.. விமர்சனங்களைத் தந்துவிட்டார் எனவே அவர் எப்பாடுபட்டாவது தனித்து இதைச் செய்ய வேண்டும் இன்றேல் அவர் எனிமேல் விமர்சனங்களை வைக்கப்படாது என்று நீங்கள் புதிய சமன்பாடொன்றை உருவாக்க நினைக்கிறீர்கள்.

நான் எனது எண்ணத்தை வெளியிட்டேன். அதற்காக நான் ஜெயிலுக்குள் போய் இருந்துவிட்டு வந்து குறும்படத்தை எடுக்க உங்களை ஒளிப்பதிவுக்கு அழைக்க முடியாது.

இது எமது மக்களுக்கான படைப்பு. மக்களின் ஒத்துழைப்பு அவசியம். அது இலகுவாக அல்லது ஒரிரு நாளில் நீங்கள் அவசரப்படும் அளவுக்கு விரைவாகக் கிடைக்கக் கூடியதல்ல.

இந்தக் குறும்படம் தொடர்பான காத்திரமான அறிவுக்கள் எதுவுமே வெளிவரவில்லை. எல்லோரும் எழுத்தளவில் தான் சொல்லியுள்ளனர். அவற்றை உறுதிமொழிகளாகக் கருத முடியாது. எனவே இதை செயற்திட்டத்துக்கான தொடக்கம் என்று கொள்ள முடியாது.

இப்படி ஒரு குறும்படம் செய்ய இருக்கிறோம்.. இதற்கு பங்களிப்புக்கள் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.. அவை வழங்கப்படும் பட்சத்தில் படைப்பை உருவாக்க அவை பயன்படும் என்பதற்கான உத்தரவாதங்கள் என்று பல படிநிலைகள் இருக்கின்றன.

நெடுக்காலபோவன்.. ஒரு ரசிகன். ஒரு படைப்பாளியல்ல. ஒரு ஊடகவியலாளன் அல்ல. நெடுக்காலபோவனின் அறிவிப்பை மக்கள் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

நான் எனது எண்ணத்தை வெளியிட்டேன். அதன் நியாயப்பாட்டைச் சொன்னேன். அதற்குச் செயலுருக் கொடுக்க பலதரப்பட்டவர்களின் கூட்டு முயற்சி அவசியம். இது ஒரு சமூகத்துக்கான படைப்பு என்ற வகையில் சமூகத்தின் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம். இது எனது சொந்தப் படைப்போ அல்லது எனது சொந்த வெளியீடோ அன்று.

முதலில் இதன் அனைத்துப் பரிமானங்களையும் தெளிவாக உள்வாங்கிக் கொண்டு.. உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்.

எண்ணக்கருவை நான் தந்திருக்கிறேன். நானே அதற்கான கருத்தையும் வழங்க முடியாது. அதைப் பாதிக்கப்பட்ட மக்கள் தான் முன் வந்து வழங்க வேண்டும். அதற்கு மக்களுக்கு இது தொடர்பான விபரங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும். மக்களிடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் தான் படைப்பை எப்படி உருவாக்கி வெளியிடுவது என்பது பற்றி சிந்திக்கலாம். அதைவிடுத்து.. நெடுக்காலபோவன்.. உடன தொடங்கும்.. நான் கமராவோட ரெடியா நிக்கிறன் என்றால்.. நான் தான் கமராவில தோன்றி படைப்பை வெளியிட வேண்டும்.

சில படைப்புக்கள் வெளி வர சில வருடங்கள் கூட எடுக்கும். மக்களுக்கு படைப்பின் தேவைபற்றிய அறிவூட்டல் போய்ச் சேர்ந்து அவர்கள் செயற்பட ஆரம்பித்து.. படைப்பை உருவாக்கக் கூடிய பங்களிப்புக் கிடைத்த பின் தான் இதை ஆரம்பிக்க முடியும். இது ஒரு குடும்பத்தை அல்லது தனியாளை மையப்படுத்திய கதையல்ல. இது ஒரு இனம்.. ஒரு அரசு.. சர்வதேசம் சம்பந்தப்பட்ட ஒரு விடயம்.

எனவே இப்படைப்புக்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம். நாம் உங்களுக்கான வேளை வரும் போது அழைத்துக் கொள்கின்றோம் அஜீவன். அதுவரை நீங்கள் உங்களை வேலையைப் பார்க்கலாம்.

நீங்கள் நான் சொன்னவற்றை புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.

என்னைப் பற்றி நீங்கள் கருத்துகளை வைத்த போது

எதை பின் பற்ற என்னிடம் வேண்டினீர்களோ

அதை நீங்கள் இப்போது கடைப் பிடிக்க வேண்டுகிறேன்.

மற்றவர்கள் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்!

நான் உண்மையில்

உங்களை பேச விடாமல் பண்ண எதுவும் சொல்லவில்லை.

வெளியில் இருந்து கோல் போடுவதும்

கோதாவுக்குள் இறங்கி கோல் போடுவதும்

இரண்டும் இரண்டு விதமானவை நெடுக்ஸ்.

அதை உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஆறிய கஞ்சி பழங் கஞ்சாகக் கூடாது.

இந்த முனைப்போடுதான் நான் எழுதினேன்.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியவை

- உங்கள் கருத்துகளை முன் வையுங்கள்!

- உங்கள் தேவைகளை முன் வையுங்கள்!

- இதனால் ஏற்படப் போகும் நன்மைகளை தெளிவுபடுத்துங்கள்!

- எப்படியான பங்களிப்புகள் தேவை என்பதை முன் வையுங்கள்!

- இந்த படைப்பால் என்ன செய்ய முடியும் என்பதை

இங்கு வரும் வாசகர்களுக்கு விளக்குங்கள்!

- அவர்கள் பங்கு பற்றும் போது

அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

- படைப்பு தொடர்பான கரு எதைச் சொல்லும் என்பதை தெளிவுபடுத்துங்கள்!

- ஏனைய உதவிகள் குறித்த தேவைகளை முன் வையுங்கள்!

- அதற்காக ஒரு பட்ஜெட்டை நிர்ணயுங்கள்!

- தயாரிப்பாளர்களை தேடுங்கள்!

- இசையமைப்பாளர் அல்லது தொழில் நுட்பம் சம்பந்தப்பட்டவர்களை தேடுங்கள்!

- இவற்றை வெளியிட ஆர்வம் உள்ளவர்களது தொடர்புகளை தேடுங்கள்!

- இணைந்து பணியாற்ற விரும்புவோரை அழையுங்கள்!

இவற்றை விடுத்து இங்கே வாதாடிக் கொண்டிருப்பதில் எதுவும் நடவாது.

எனக்கு எதுவுமே (பணம்) தேவையில்லை.

நான் உலகின் எங்கு வேண்டுமானாலும் இப்போது வரத் தயார்.

இவற்றை விடுத்து இன்னும் தேவையில்லாத கருத்துகளை ஏன் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

ஒரு நிகழ்வு என் நினைவுகளுக்கு வருகிறது............

என் அப்பா

என் பெரியப்பாவுக்கு சொன்னது ...........

நான் சிறுவயதில் வீட்டில் எதையாவது செய்து கொண்டேயிருப்பேன்.

என் பெரியப்பா இவன் படிக்காமல் தேவையில்லாததை எல்லாம் செய்து கொண்டிருக்கிறான் என்று

வீட்டுக்கு வரும்போதெல்லாம் என்னை திட்டிக் கொண்டேயிருப்பார்.

நான் அவரோடு எதிர்த்து பேசுவேன்.

அவர் என்னை பிஞ்சில பழுத்தது என்பார்.

நான் கராட்டே கற்று வந்ததை கேள்விப்பட்டு

இவன் காசு கொடுத்து அடி வாங்கிறான் என்று கேலி செய்வார்.

ஒரு நாள் என் அப்பா

நீங்க பேசி பேசியே இங்கயே நிற்கிறீங்க

அவன் பேசாமல் எங்கோ போய்க் கொண்டிருக்கிறான்

என்று அப்போதைய மித்திரன் வார மலரை தூக்கி போட்டார்.

பெரியப்பா மூஞ்சில் ஈயாடவில்லை.

அதில் ஒரு துண்டு என்னிடம் இருந்தது

இதோ:

48674925bl1.jpg

3.01.1982 மித்திரன் வாரமலர் (இலங்கை)

தமிழ் செல்வம் என் இயற்பெயர்

http://www.ajeevan.com/aboutajeevan.html

நான் சிங்கப்பூரிலிருந்து ஓய்வுக்காக வீடு வந்த போது

கராட்டே குறித்த தகவல்களை முதன் முதலில் தொடராக எழுதத் தொடங்கினேன்.

இப்போது இருக்கும் வாய்ப்பு வசதிகள் அன்று இல்லை.

அப்போதே ஜப்பான் வரை சென்று வந்து தமிழில் எழுதத் தொடங்கினேன்.

எனவே வச்சவச்ச என பேசாதீர்கள்

அடுத்த நகர்வு குறித்து கருத்துகளை எழுதி வாருங்கள்

ஒரு 4 பேர் கிடைத்தாலே போதுமே?

உங்கள் எழுத்துகள் ரொம்ப பலமானது.

அதை தேவையான இடத்தில் பிரயோசனப்படுத்துங்கள்.

உங்களுக்கு அந்த விடயம்

அந்த மக்கள் குறித்த தெளிவு உண்டு.

அதற்காக யாரும் உங்களை சிறை செல்லச் சொல்லவில்லை?

Edited by AJeevan

திரு.நெடுக்காலபோவான்,

அவர்கள் கிடக்கிறார்கள்......அவர்களை ஒருபொருட்டாகக் கருதி ஏன் காலத்தின் தேவையை பின்போடுவான்?

வசம்பு செவ்விகளுக்கு உதவ ஆயத்தம் என்றார். அவர் அதன்பால் வேலைகளைத் தொடங்கியிருப்பார் என நம்பலாம்.

வசம்பும் அஜீவனும் அருகருகே என்றால் அதற்கான செவ்விகளுடன் ஒளிப்பதிவும் செவ்வி தருபவரின் நிலைமைகளுக்கிணங்க நடக்கலாம்....அதற்கு அஜீவன் ஆயத்தம் என்று கருத்துக்கள் பச்சைக்கொடி காட்டுவனபோல் எனக்குத் தோன்றுகின்றன? என்ன அஜீவன் சரிதானே??

அதனைவிட அஜீவன் செய்தியாளரும் கூட....அவர் ஒரு திரியொன்றினைத் தொடக்கி சட்டரீதியாக வழக்குகள் எப்படி இழுத்தடிக்கப்படுகின்றன என்பது பற்றிய இழுத்தடிக்கப்பட்ட ஆதாரங்களைத் (உதாரணங்கள்) தருவீர்கள் என நம்புகிறேன்...இது பதிவாளர்களின் பங்களிப்பை வழங்க வழிவகுக்கும்......உங்கள் விருப்பம்....எனது வேண்டுகோள் இது...

திரு.நெடுக்காலபோவான்,

தனியே நீங்கள் இப்பணியைச் சுமக்க வேண்டாம்..

பகிர்ந்து கொள்ளுங்கள்......பங்களிப்புச் செய்தால் பாவிப்போம்...இல்லாவிடில் நாம் செய்து முடிப்போம்..

வாய் நுழைப்பவருக்கு பணியொன்றினை வழங்குங்கள்...செயல்வீரர் என்றால் பங்களிப்புச் செய்வார்...அல்லாவிடின் பயம் எனப் பதுங்குவார்.....

இவை எனது வினயமான இடுகைகள்...

உங்கள் கருத்துகள் நம்பிக்கை தருகின்றன.

யாழ்கள் உறவுகளை நான் அதிகம் சந்தித்தவன்

அவர்களது ரகசியங்களை பாதுகாப்பவன்.

அதை அனைவரும் அறிவர்

எனவே ஒளவையார் வசம்பு சாத்திரி போன்றவர்களுடன்

(யாராவது விடுபட்டிருந்தால் பொறுத்தருளவும்)

இணைய விரும்புவோர்

கருத்துகளை தொடருங்கள்..............

நன்றி!

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணை..

நாய் பார்க்கிற வேலையை பேய் பார்க்கக் கூடாது.. நீங்கள் நாயா பேயா எண்டிறது நீங்கள் இருக்கிற இடத்தைப் பொறுத்தது.

ஆண்டிப்பட்டிப் பேய், அரசம்பட்டியில நாய். பாண்டிச்சேரி நாய் கொறடாச்சேரியில பேய். :unsure:

ஹலோ பாட்டி இடுகை என்றால் என்ன?

அதென்ன "ஹலோ" "கிலோ"?

தமிழ் நக்ஸ் (ஜம்மு குழந்தையின் பாணி)

நக்ஸ் என்றால் நக்கல் அல்லது நக்குதல்...???!!!

விடையளிப்பதற்கு முதல் இரு வினாக்கள்....

"ஹலோ" என்றால் என்ன?

வினைத்தொகை என்றால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

விடையளிப்பதற்கு முதல் இரு வினாக்கள்....

"ஹலோ" என்றால் என்ன?

வினைத்தொகை என்றால் என்ன?

நாசமாப் போச்சு.. வழக்கமா தமிழ் கடவுளாம் லிங்கத்தின் சன் (தமிழ்லின்க்ஸ்) தானே அவ்வைப் பாட்டியைக் கேள்வி கேட்டு தாலியறுப்பார். இங்க மாறி அல்லோ நடக்குது.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துகளை முன் வையுங்கள்!

- உங்கள் தேவைகளை முன் வையுங்கள்!

- இதனால் ஏற்படப் போகும் நன்மைகளை தெளிவுபடுத்துங்கள்!

- எப்படியான பங்களிப்புகள் தேவை என்பதை முன் வையுங்கள்!

- இந்த படைப்பால் என்ன செய்ய முடியும் என்பதை

இங்கு வரும் வாசகர்களுக்கு விளக்குங்கள்!

- அவர்கள் பங்கு பற்றும் போது

அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

- படைப்பு தொடர்பான கரு எதைச் சொல்லும் என்பதை தெளிவுபடுத்துங்கள்!

- ஏனைய உதவிகள் குறித்த தேவைகளை முன் வையுங்கள்!

- அதற்காக ஒரு பட்ஜெட்டை நிர்ணயுங்கள்!

- தயாரிப்பாளர்களை தேடுங்கள்!

- இசையமைப்பாளர் அல்லது தொழில் நுட்பம் சம்பந்தப்பட்டவர்களை தேடுங்கள்!

- இவற்றை வெளியிட ஆர்வம் உள்ளவர்களது தொடர்புகளை தேடுங்கள்!

- இணைந்து பணியாற்ற விரும்புவோரை அழையுங்கள்!

அண்ணா அதிகம் உங்களைப் பற்றிக் கதைக்காமல்.. இந்தக் கூட்டுத்திட்டத்தின் செயற்பாட்டுக்கு அவசியமான ஆலோசனைகளை நல்குங்கள். அதைத்தான் நாம் எதிர்பார்க்கின்றோம்.

நீங்கள் குறிப்பிட்ட அம்சங்களில் ஏற்கனவே சிலவற்றுக்கான நடவடிக்கைகளில் இறங்கி இங்கு அழைப்புக்களையும் ஒத்துழைப்புக்களையும் கோரியே உள்ளோம். கள உறவு ஒளவையார் அவர்களும் இது விடயமாக சுயமான ஒத்துழைப்புக்களை நல்கி வருகிறார்.

நீங்கள் என்னென்ன வகைகளில் உதவக் கூடிய நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் தெளிவு படுத்துங்கள்.

எமது இந்தக் கூட்டுச் செயற்திட்டத்தின் இலக்கு.. சிறீலங்காச் சிறையில் வாடும் எமது தமிழ் கைதிகளின் (அரசியல்) உண்மை நிலையை அனைத்துலக மட்டத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதுதான்.

முதலில் யாழ் கள நிர்வாகம் எமது இச்செயற்திட்டத்தை யாழ் இணையம் சார்பாக முன்னெடுப்பது பற்றி என்ன நினைக்கிறது குறிப்பாக மோகன் அண்ணாவின் நிலைப்பாடு.. ஒத்துழைப்புக்கள் எவ்வாறு இருக்கும் என்பது பற்றி அறிய வேண்டும். உண்மையில் இதை நடைமுறைக்கு கொண்டு வர விரும்பின்.. அதுவே ஆரம்பமாக இருக்க வேண்டும்.

அவரின் அனுமதி ஒத்துழைப்பின்றி இதனை யாழ் இணையம் சார்பாக முன்னெடுக்க முடியாது. இதுவரைக்கும் அவரா இதற்கு பதில் அளிக்கவில்லை என்றால் அவரே இதை ஒரு வினைத்திறன் மிக்க முயற்சிக்கான ஆரம்பம் என்று கருதவில்லை. அப்படியான ஒரு நிலையில்.. மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றை சிந்திப்பது சாலப் பொருத்தமாக இருக்குமா..??!

அஜீவன் அண்ணா நீங்கள் ஒரு மூத்த உறுப்பினர் என்ற வகையில் மோகன் அண்ணாவிடம் இதற்கான அனுமதி பற்றி கேட்டுப் பார்க்கலாமே. இன்றேல்.. நான் இது பற்றி தனிமடலில் கேட்டுப் பார்கிறேன். அவரின் அனுமதியும் ஒத்துழைப்பும் இருக்கும் என்றால் மேற்கொண்டு செய்யப்பட வேண்டியவற்றை தீர்மானிப்போம்.

சுடுகுது மடியப் பிடி என்று செய்யமுடியாது. சரியான திட்டமிடல் அவசியம். பொறுப்புக்கள் சரியான வகையில் நிர்ணயிக்கப்படவும் நிறைவேற்றப்படவும் வேண்டும். கூட்டு முயற்சியில் சுய ஒத்துழைப்பே பெரிதும் விரும்பப்படுகிறது. இது எமது மக்களுக்கான ஒரு சேவை அல்லது முயற்சி என்பதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

-------------------

தயவுசெய்து.. இதை நெடுக்காலபோவனின் திட்டமாக எண்ணி.. நெடுக்காலபோவனில் கடுப்பில் உள்ளவர்கள் உங்கள் கடுப்பை இங்கு கொட்டாதீர்கள். இது சிறைகளில் வாடிய வாடும்.. உங்களின் சகோதரர்களின் உரிமைக்கான குரலாக அமைய ஒத்துழையுங்கள்.

நாய் பேய் என்று கொண்டு நிற்காதீர்கள். மனிதர்களைப் பற்றிப் பேசுங்கள்.

-------------------

ஒளவையார் நல்ல முன்மாதிரியாக இருந்து இதற்கு ஒத்துழைப்பு நல்குகிறார். அவரின் ஒத்துழைப்புப்போன்று சுய ஒத்துழைப்புக்களே இத்திட்டத்தின் வெற்றிக்கு மூலம். ஏனெனில் இது எமது மக்களுக்கான படைப்பு. எந்தத் தனிநபரையும் முன்னிலைப்படுத்த அல்லது விளம்பரப்படுத்த அல்ல..! :D

Edited by nedukkalapoovan

இந்த கூட்டுமுயற்சிகளில் ஈடுபடுபவர்களின் பின்னணி சரிவர தெரிந்தால் ஒழிய இது போன்ற வேலைத்திட்டங்களை நடைமுறைபடுத்துவதில் பாதுகாப்பு சிக்கல்கள் உட்பட பல்வேறு சிக்கல்கள் எழ வாய்ப்புண்டு. ஆகவே சிந்தித்து செயல்படுங்கள்.

அப்படியே இந்த முயற்சியை தொடர்வதானால் உங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் நன்றாக அறிமுகமான கள உறவுகளுடன் மாத்திரம் இணைந்து செயல்படுங்கள். ஏனென்றால் எந்த புற்றிற்குள் எந்த பாம்பு இருக்கும் என்று சொல்ல முடியாது.

இணையதளங்களினூடாக எவர் வேண்டுமானாலும் என்ன வேடம் இட்டும் நட்பு பாராட்டலாம். இணைந்து செயல்படுபவர்கள் போல் வேடமிட்டு உங்களை பற்றியும் உங்கள் உறவுகள் பற்றியும் தகவல்கள் திரட்டலாம்.

ஆகவே சிந்தித்து எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்

அஜீவன், நெடுக்கு போன்ற ஆர்வமுள்ளவர்கள் தனிப்பட்ட ரீதியாக தங்களுக்கு தெரிந்த நண்பர்களுடன் களத்திற்கு வெளியே இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதே சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். வேண்டுமானால் அதற்கான முதலீட்டை சேகரிக்கும் தளமாக யாழ்களத்தை பயன்படுத்தலாம். ஆரம்பத்தில் முதலீடுகள் கிடைப்பதில் கொஞ்சம் சிரமம் இருந்தாலும், ஓரிரண்டு சிறந்த படைப்புகளை படைத்து திறமைகள் நிரூபிக்கப்பட்டால், மக்கள் தாராளாமாக உதவ முன்வருவார்கள்

சம்பந்தப்படவர்களின் நேரடி சந்திப்பும், சிறப்பான ஒருங்கமைப்பும் இன்றி, அரசியல் சார்ந்த ஒரு பிரச்சினையை கருவாய் வைத்து தரமான ஒரு குறும்படம் எடுப்பது எவ்வளவு தூரம் சாத்தியம் அற்றது என்று திரு.அஜீவன் அறிவார் என்றே நம்புகிறேன்.

இது போன்ற விடயங்களில் தரம் மிகவும் முக்கியம். அதற்கு நல்ல அனுபவம் உள்ள நெறியாள்கை அவசியம். இல்லையென்றால் எதிர்பார்ர்க்கும் தாக்கத்தை படைப்புகள் அளிக்காமலேயே போய்விடும்

Edited by vettri-vel

திரு.நெடுக்காலபோவான், திரு. அஜீவன்,

இருவரும் பந்துகளை மாறி மாற்றிக்கொண்டிருக்காது நான் முந்தி நீ முந்தி என இத்திட்டத்தின் காய்களை நகர்த்த ஆரம்பியுங்கள் இலக்கை நோக்கி.

மற்றவர்களும் இணையக்கூடும்...நிச்சயம் இணைவார்கள்.

படைப்பு முன்னோக்கி செல்லட்டும்.

படைக்கப்படட்டும்.

பாரெங்கும் பரவட்டும்.

கீழுள்ள மோகன் அண்ணாவின் வரிகள் அவர் விருப்பத்தினை விளம்புகிறது.

எனினும் அவரின் நேரடி அனுமதியும் உதவிகளும் இப்படைப்பை மெருகூட்டும்.

திரு.நெடுக்காலபோவான், என்னை உதாரணமாக முதன்மைப்படுத்தி வசைகளை வாங்க வைத்துவிடாதீர்கள். எனக்கு யாழ்கள அனுபவம் சொற்பமே...

அண்ணா அதிகம் உங்களைப் பற்றிக் கதைக்காமல்.. இந்தக் கூட்டுத்திட்டத்தின் செயற்பாட்டுக்கு அவசியமான ஆலோசனைகளை நல்குங்கள். அதைத்தான் நாம் எதிர்பார்க்கின்றோம்.

அஜீவன் அண்ணா அவர்கள் ஒரு குற்றவாளியைப் போல் இங்கு ஒரு பொது இடத்தில் துவம்சம் செய்யப்பட்டு இருக்கிறார். நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் அளவைவிட கடுமையான முறையில் விசாரணை செய்யப்பட்டு இருக்கிறார். இந்தவகையில பார்க்கேக்க, அஜீவன் அண்ணா தான் ஒரு நிரபராதி என்று நிரூபிக்க தொடர்ந்து தனது தரப்பு வாதங்களை முன்வைப்பது பிழையாகத் தெரியவில்லை. :):D

அஜீவன் அண்ணாவின் நிலையில் நான் இருந்தால் அல்லது நீங்கள் இருந்தால் கூட இதைத்தான் செய்து இருப்போம். ஒரு படைப்பாளியின் உள்ளம் என்பது பூ போன்றது. அதை கசக்கி விளையாடிவிட்டு... பின்னர் உடனடியாகவே.. புதிதாக ஒன்றை செய்.. உடனடியாக இப்படியான ஒருமனநிலைக்கு மாறு என்று கேட்பது வேடிக்கையானது. முதலில் காயம் ஆறவேண்டும். அதை நீங்கள் ஆற்றமுடியாது. அது தானாக ஆறவேண்டும். :D:D:)

இது ஏதோ வாழைக்குலையை புகை அடிச்சு பழுக்கவைக்கிற கதையா போகிது. காய் தானாக கனியவேண்டும். மொட்டு தானாக விரிந்து பூக்கவேண்டும். காயை நசிச்சு நசிச்சு அழுத்தம் கொடுத்து கனியாக்க முடியாது. இல்லாட்டி மொட்டின் இதழ்களை நீங்களாக இழுத்து விரித்து பூவாக்க முடியாது. :)

அமைதியாக இருந்து உங்கள் பகுதி நடவடிக்கைகளை செய்யுங்கள். நீங்கள் முதலில் பூவாகுங்கள்... பழுத்து கனியாகுங்கள்... மிகுதி உதவிகள் தானாக கிடைக்கும். :):D

பி/கு: முகக்குறிகள் போடும் கலை உங்களிடம் கற்றது. :D:D

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து.. இதை நெடுக்காலபோவனின் திட்டமாக எண்ணி.. நெடுக்காலபோவனில் கடுப்பில் உள்ளவர்கள் உங்கள் கடுப்பை இங்கு கொட்டாதீர்கள். இது சிறைகளில் வாடிய வாடும்.. உங்களின் சகோதரர்களின் உரிமைக்கான குரலாக அமைய ஒத்துழையுங்கள்.

நாய் பேய் என்று கொண்டு நிற்காதீர்கள். மனிதர்களைப் பற்றிப் பேசுங்கள்.

நெடுக்கண்ணை..

முதலில் உங்கள் தவறான புரிதலைச் சுட்டிக்காட்ட விழைகிறேன். அதற்கு நான் எழுதிய விதத்தில் தவறு இருந்தால் வருந்துகிறேன்.

உங்கள் முயற்சி மிகவும் சிறப்பானது. ஆனால் அதில் அனுபவமே இல்லாத உங்களை அதைச் செய் இதைச் செய் என்று சொல்லுவதும், நீங்களும் அதற்கெல்லாம் ஓமோம் இதைப் பண்ணுவன் அதைப் பண்ணுவன் என்பதும் நடைமுறைக்கு ஒத்துவராதவை.

சிறையில் வாடும் தமிழரின் விடிவுக்கு உதவ அஜீவன் அண்ணனால் குறும்படம் எடுத்து பங்காற்ற முடியும். ஆனால் அவரால் அது முடியவில்லை என்கிறார். முடிந்தால் உங்களை படம் எடுக்க சவால் விடுகிறார். நீங்களும் ஏதோ குறும்படம் எடுத்தால்தான் இளைஞர்கள் விடுதலையாவார்கள்போல் படமெடுக்க வெளிக்கிடுகிறீர்கள்.

உங்களால் உங்களுக்கு கைவந்த இன்னொரு வழி மூலம் இதே பணியைச் செய்ய முடியும். அதை விடுத்து அவரால் எடுக்க முடியாத படத்தை நான் எடுக்கிறேன் என்பது என்ன சிந்தனை? இங்கே குறிக்கோள் மழுங்கடிக்கப்பட்டு தனிமனிதர்களின் ஈகோவே மேலோங்கி நிற்கிறது. :D

நாய் பேய் எல்லாம் பழமொழியிலிருந்து வந்தது. எலி வளையானாலும் தனி வளை வேணும் எண்டு சொன்னால் ஏன் மனிதர்கள் வீட்டிலிருங்கோ எண்டு சொல்வீங்க போல இருக்கே..! :D

மேலும், அஜீவன் அண்ணாவிடம் ஆரம்பத்தில் ஒரு சாமானியனாகக் நீங்கள் கேட்ட கேள்விகளில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. குருவி படம் சரியில்லை என்று சொன்னால், ஏன் நீங்கள் வந்து ஒரு படம் எடுத்துக் காட்டுங்கோ பார்ப்பம் எண்டு விஜய் கேட்பது போல இருக்கு அஜீவன் அண்ணாவின் பதில்கள். :D

யாழ்க் களத்தில் எனது அனுபவம் அவதானிப்பு என்பனவற்றின் அடிப்படையில் நான் பொதுவாக எழுதியதைச் சிலர் தமக்கானாதாகப் புரிந்து கொன்டுள்ளார்கள்.

வெறூம் பேச்சாக இருப்பதைச் செயலாக்க வேண்டும் என்னும் நோக்கில் பல குழுமங்கள் அமைக்கப்பட்டன.இதன் நோக்கம் ஒளி ஒலி எழுத்து வடிவங்களை அவர் அவர் அவரின் நேரம் திறமை போன்றவறிற்க்கு அமைவாக யாழ்க்களத்தின் குழுமங்களாகப் பிரிந்து செயற்படலாம் என்று ஏற்படுதப்பட்டவை.

இவற்றில் செய்திக் குழுமம் கருதுப்படம் செய்தி அலசல் என சிலவற்றை தந்தது.பின்னர் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு தனைப்பட்ட பிரச்சினையில் இப்போது முனைப்பு அற்று விட்டது. நேசகரமும் மூன்று திட்டங்களை நாடத்தி விட்டு இப்போது நிற்கும் நிலையிலிருக்கிறது.

இந்தக் குறும் பட முயற்சி ஒவ்வொரு கண்டத்தில் இருப்போரால் சாத்தியம் ஆனதா? அதை விட இணைனையத்தினூடாக படங்கள் அனிமேசன் என்பனவற்றின் துணையுடன் ஒளிப்படங்களைச் செய்து யூரியுப் போன்றனவற்றில் இணைக்கலாம்.இணைய வழியாகவே கன விடயங்களைச் செய்யலாம்.இதுவே சாத்தியமானதாக எனக்குப்படுகிறது.ஏனெனில் வெட்டி விழுதுவதாகாகக் கதைப்பது இலகு ஆனால் நடைமுறையில் செயர்படுதுவது என்பது கடினமானது, ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள் இருக்கும்.இது பல செயற்பாடுகளினூடாக வந்த எனது தனிப்பட்ட அனுபவம்.

இதோ ஒரு சிறந்த சிறைச்சாலை பாடல்! உங்கள் குறும்படம் வெளிவரும் வரை இதையாவது பார்ப்போமே என்று தான்.... :D

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் அண்ணா யாழில் தொடர்ந்து இணைந்திருங்கள்.அன்றாடம் கொல்லப்படும் எமது இனத்துக்கு செய்யும் பிராயசித்தம் எமது வேறுபாடுகளை மறத்தல் தான்.களத்தில் போராடும் போராளிகளுக்கும் மக்களுக்கும் உத்வேகத்தை கொடுக்கும் மிக மிக அரிய தருணம் இது.

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் அண்ணாவின் நிலையில் நான் இருந்தால் அல்லது நீங்கள் இருந்தால் கூட இதைத்தான் செய்து இருப்போம். ஒரு படைப்பாளியின் உள்ளம் என்பது பூ போன்றது. அதை கசக்கி விளையாடிவிட்டு... பின்னர் உடனடியாகவே.. புதிதாக ஒன்றை செய்.. உடனடியாக இப்படியான ஒருமனநிலைக்கு மாறு என்று கேட்பது வேடிக்கையானது. முதலில் காயம் ஆறவேண்டும். அதை நீங்கள் ஆற்றமுடியாது. அது தானாக ஆறவேண்டும்.

நீங்கள் சொல்வது சரியே. அஜீவனைப் போலத்தான் கமரா தூக்கி படைப்புகள் செய்பவர்கள் எல்லோருக்கும் இளகிய மனசு இருக்கும். அதுதான் நானும் கேட்டுக் கொண்டேன். தாயகக் கலைஞர்களை திருமண வீட்டுக்கும் சாமத்தியவீட்டுக்கும் கமரா தூக்கிற கூட்டத்துக்குள் அடக்கி அவர்களின் இதயங்களை புண்படுத்தக் கூடாது என்று. அவர்கள் வாழும் சூழலில் எவையெவற்றை சாத்தியமாக்க முடிந்ததோ அவையவற்றை சாத்தியமாக்கி படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கின்றனர். எம்மால் ஒரு படைப்புக்கு கூட்டிணையக் கூட முடியவில்லை. ஆனால் அடுத்தவன் படைப்பை.. எடுத்த எடுப்பில்.. தரக் குறைவாகப் பேசுவது.. அல்லது புறக்கணித்துவிட்டுப் போவது.. அந்தக் கலைஞனாலும் அப்படைப்புக்களை ரசிக்கும் ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும். அஜீவனுக்கு ஒரு உணர்வு.. ஏனைய கலைஞர்களுக்கு இன்னொரு உணர்வல்ல என்பதை நீங்களும் ஏற்றுக் கொள்ள முன் வர வேண்டும்..!

எமது கலைஞர்களின் படைப்புக்கள் பல சிரமங்கள் மத்தியில் வந்திருக்க.. சிங்களக் கலைஞர்களை மட்டும் நினைவுபடுத்திக் கொண்டிருப்பது.. எமது தாயகக் கலைஞர்களைப் புறக்கணிப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறது. அது தவிர்க்கப்பட வேண்டும். எமது தாயகக் கலைஞர்களைப் பற்றியும் அவர்களின் படைப்புக்கள் பற்றியும் ஆராய்ந்து கொள்ள புலம்பெயர் தமிழ் கலைஞர்கள் முன் வர வேண்டும் என்பதுவும்.. அவர்களுக்கு தேவையான உதவிகளை.. ஆலோசனைகளை வழங்க முன் வர வேண்டும் என்பதும்.. இத்தலைப்பினூடு உணரப்பட்டிருப்பின் அதுவே போதுமானதாக இருக்கும்..! :D:D

-------------

சரியான ஒத்துழைப்பு இன்றேல்.. எம்மால் எதையும் இக்களத்தை மையமாகக் கொண்டு செய்ய முடியாத சூழ்நிலையே தோன்றும்..! அதுதான் நேசக்கரத்துக்கும் நிகழ்ந்தது. மற்றைய குழுமங்கள் பற்றி பேசத் தேவையில்லை. அது சில தெரிவுகளூடு பிரிக்கப்பட்ட குழுமங்கள். அது தனிப்பட்ட குழுமங்கள். நேசக்கரமும் அவையும் ஒன்றல்ல. நேசக்கரம் தாயகத்துக்கான உதவும் கரம். :D:D

Edited by nedukkalapoovan

நீங்கள் சொல்வது சரியே. அஜீவனைப் போலத்தான் கமரா தூக்கி படைப்புகள் செய்பவர்கள் எல்லோருக்கும் இளகிய மனசு இருக்கும். அதுதான் நானும் கேட்டுக் கொண்டேன். தாயகக் கலைஞர்களை திருமண வீட்டுக்கும் சாமத்தியவீட்டுக்கும் கமரா தூக்கிற கூட்டத்துக்குள் அடக்கி அவர்களின் இதயங்களை புண்படுத்தக் கூடாது என்று. அவர்கள் வாழும் சூழலில் எவையெவற்றை சாத்தியமாக்க முடிந்ததோ அவையவற்றை சாத்தியமாக்கி படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கின்றனர். எம்மால் ஒரு படைப்புக்கு கூட்டிணையக் கூட முடியவில்லை. ஆனால் அடுத்தவன் படைப்பை.. எடுத்த எடுப்பில்.. தரக் குறைவாகப் பேசுவது.. அல்லது புறக்கணித்துவிட்டுப் போவது.. அந்தக் கலைஞனாலும் அப்படைப்புக்களை ரசிக்கும் ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும். அஜீவனுக்கு ஒரு உணர்வு.. ஏனைய கலைஞர்களுக்கு இன்னொரு உணர்வல்ல என்பதை நீங்களும் ஏற்றுக் கொள்ள முன் வர வேண்டும்..!

எமது கலைஞர்களின் படைப்புக்கள் பல சிரமங்கள் மத்தியில் வந்திருக்க.. சிங்களக் கலைஞர்களை மட்டும் நினைவுபடுத்திக் கொண்டிருப்பது.. எமது தாயகக் கலைஞர்களைப் புறக்கணிப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறது. அது தவிர்க்கப்பட வேண்டும். எமது தாயக் கலைஞர்களைப் பற்றியும் அவர்களின் படைப்புக்கள் பற்றியும் ஆராய்ந்து கொள்ள புலம்பெயர் தமிழ் கலைஞர்கள் முன் வர வேண்டும் என்பதுவும்.. அவர்களுக்கு தேவையான உதவிகளை.. ஆலோசனைகளை வழங்க முன் வர வேண்டும் என்பதும்.. இத்தலைப்பினூடு உணரப்பட்டிருப்பின் அதுவே போதுமானதாக இருக்கும்..! :):D

-------------

சரியான ஒத்துழைப்பு இன்றேல்.. எம்மால் எதையும் இக்களத்தை மையமாகக் கொண்டு செய்ய முடியாத சூழ்நிலையே தோன்றும்..! அதுதான் நேசக்கரத்துக்கும் நிகழ்ந்தது. மற்றைய குழுமங்கள் பற்றி பேசத் தேவையில்லை. அது சில தெரிவுகளூடு பிரிக்கப்பட்ட குழுமங்கள். அது தனிப்பட்ட குழுமங்கள். நேசக்கரமும் அவையும் ஒன்றல்ல. நேசக்கரம் தாயகத்துக்கான உதவும் கரம். :):D

இரவுச் சாப்பாடு சாப்பிட்டுவந்து திரும்பவும் மச் விளையாட துவங்கீட்டாங்கையா. நான் இனித்தான் சாப்பிடவேணும். சாப்பிட்டு வந்து உதுக்கு ஆறுதலா பதில் சொல்லுறன். :):D

இரசிகப் பெருமக்களே..

தற்போதைய ஸ்கோர் விபரம்:

அஜீவன் அணி:

இனிங்ஸ் 01: அனைத்து விக்கற்றுக்களையும் இழந்து 100 ஓட்டங்கள்

இரண்டாவது இனிங்ஸ்: விக்கற் இழப்பின்றி 100 ஓட்டங்கள் :D

நெடுக்காகபோவான் அணி:

இனிங்ஸ் 01: அனைத்து விக்கற்றுக்களையும் இழந்து 101 ஓட்டங்கள்

அஜீவன் அணியின் தலைவர் முரளி சிறப்பான முறையில் பந்துவீசி 8 விக்கற்றுகளை கைப்பற்றியுள்ளார். :D

அஜீவன் அணியின் அதிரடி வீரர் வசம்பு ஆட்டம் இழக்காமல் 50 ஓட்டங்களை பெற்று உள்ளார்.

நெடுக்காலபோவான் அணி வீரர் வினித் சிறப்பான முறையில் பந்துவீசி ஐந்து விக்கற்றுகளை கைப்பற்றியுள்ளார்.

அணித்தலைவர் நெடுக்காலபோவான் 49 ஓட்டங்கள் எடுத்த நிலையில் விக்கற் பாதுகாப்பாளர் வெற்றிவேலின் திறமையான விளையாட்டு மூலம் ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். அணியின் அதிரடி வீரர் மருதங்கேணி அஜீவன் வீசிய பந்திற்கு வெற்றிவேலிடம் பிடிகொடுத்து இரண்டு சிக்ஸர்கள் உட்பட 20 ஓட்டங்கள் எடுத்தநிலையில் ஆட்டம் இழந்தார். :)

தொடர்ந்து இணைந்து மகிழ்ந்து போட்டியை கண்டுகளிக்கவும்.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.