Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழும் நானும் (பகுதி 12: குளக்காட்டான் அண்ணா)

Featured Replies

நான் களத்துக்கு புதியவன், அதனால் சியாம் அண்ணாவைப்பற்றி தெரியாது, ஆனால் அவரும் சாத்திரியும் ஒன்று என்பது ஆச்சரியம் தான்.

வசம்பு என்ற பெயரின் மூலம் வசம்பு அண்ணாவின் கற்பனாசக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு.

மீண்டும் நன்றி தூயா. இப்படியான ஆக்கங்கள் யாழின் வரலாற்றை என் போன்ற புதியவர்களுக்கு அறியத்தரும்.

  • Replies 235
  • Views 28.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

என்ன தூயா எதைவேண்டுமானாலும் கேட்கலாம்

ஆனால் நான் உங்களுக்கு நான் வைத்த பெயர்

குக்[சமையல்] :D:D

சும்மா பகிடிக்கு சொன்னன் கோபிக்க வேண்டாம்

உங்ககள் சம்பல் சூப்பர்

தமிழில் பெயரை வைக்கவும்..இல்லை என்றால் களத்தில் பல போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்..கிகிகிகி.. ;) :o:(

:( தூயா பபா இன்றுதான் இவற்றை எல்லாம் வாசிக்க நேரம் கிடைச்சது.

அட சமையலோடு இவர்களை எல்லாரையும் எப்படித்தான் ஆழமாக கவனிக்கிறியளோ தெரியவில்லை. பிரமாதம். சமையல் போலவே :(

முகம்ஸ் தாத்தா இருந்த காலத்தில் பொன்னம்மாக்கா என்று அவர் சொல்லிக் கதைப்பதை மறக்க முடியாது. மீட்டியமைக்கு வாழ்த்துக்கள்.

சியாம் அண்ணா சாத்திரி தாத்தாவா :huh: அச்சோ எனக்கு இப்பதான் தெரியும். :( தகவலுக்கு நன்றிகள் பபா

வசம்பண்ணாவைப் பற்றியும் நல்லாக எழுதி இருக்கிறீங்க. உங்கள் யாழ் பயணம்(சுலபமான விடயம் அல்ல) எவ்வளவு கவனம் தேவை என்பது தெரியக்கூடியதாக இருக்கின்றது :mellow: . ம்ம்ம் தொடரட்டும் வாழ்த்துக்கள் :(

சமையல் என்ன பெரிய வேலையா...இவற்றை கவனிப்பது தான் வேலையே..பகுதி நேர வேலை தான் சமையல் ;) கிகிகிகி

நலமா நிலா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் பெயரை வைக்கவும்..இல்லை என்றால் களத்தில் பல போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்..கிகிகிகி.. ;) :mellow::huh:

சிங்காரி சமையல்

சிங்காரி சரியா தூயா :o:(:(:(

  • தொடங்கியவர்

சிங்காரி சமையல்

சிங்காரி சரியா தூயா :mellow::huh::o:(

அண்ணாச்சி வாரார் இந்த பக்கம்..நான் ஓடிடுறேன்.... :( :( :(

வசம்பண்ணா உங்கள் விளக்கம் அருமை. தூய அக்காவின் விமர்சனமும் உங்கள் விளக்கமும் நன்றாக உள்ளன. உங்களுக்கு களத்திலிருந்து நிறைய நன்மைகள் கிடைத்துள்ளது என்று கூறியிருக்கின்றீர்கள். புதிதாக வருகின்ற எங்களுக்காக விரிவாக உங்கள் கருத்துக்களை தரலாமென்று நினைக்கின்றேன். களத்தில் உங்கள் நண்பர்கள் எதிரிகள் இத்தனையாண்டுகளில் நீங்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் கொஞ:சம் விரிவாக சொல்லுங்களேன்.

நிறையவே சொல்லலாம். பல அறியாத விடயங்களை கள உறவுகளின் இணைப்புக்கள் மூலமும் கணினி தொடர்பான பல சந்தேகங்களை கள உறவுகளின் உதவிகளுடனும் (குறிப்பாக தேவகுரு அண்ணா, நுணாவிலான், சங்கர்லால், வெண்ணிலா போன்றோர்) தீர்த்திருக்கின்றேன். அதே போல் தூயாவின் சமையல்க் கட்டை என் குடும்பத்தில் பலமுறை பரீட்சித்துப் பார்த்திருக்கின்றேன். :lol: (இறைவன் அருளால் இதுவரை விபரீதம் எதுவும் நிகழவில்லை) :wub::lol:

  • தொடங்கியவர்

இறைவன் அருளா?? இது எப்போ தொடக்கம்..

இறைவன் அருளா?? இது எப்போ தொடக்கம்..

ஹி.........ஹி........ஹி..........ஹி.............. :lol: .எல்லாம் அவன் செயல் தானே தூயா . :wub: அது தான் அப்படி எழுதினேன். மற்றும்படி உங்க சமையலைக் குறை சொல்வேனா :lol::lol:

  • தொடங்கியவர்

ஹி.........ஹி........ஹி..........ஹி.............. :lol: .எல்லாம் அவன் செயல் தானே தூயா . :wub: அது தான் அப்படி எழுதினேன். மற்றும்படி உங்க சமையலைக் குறை சொல்வேனா :lol::lol:

வசம்பண்ணா எல்லா புகழும் எனக்கே என்று சொல்லிவிட்டு இப்ப அவன் செயலா?? ;) கிகிகிகிகிகி

  • தொடங்கியவர்

பகுதி 10

யாழில் என்னுடைய அண்ணன்களை பற்றி எழுதும் போது மதன் அண்ணாவை பற்றி எழுதாமல் இருக்க முடியாது. மதன் அண்ணா என்றாலே எனக்கு அத்தனை பாசம். காரணம் நிறைய இருக்கின்றது. அவற்றில் சிலவற்றை இந்த பகுதியில் சொல்ல போகின்றேன். முதல் அவரை அறிமுகம் செய்யலாம்.

av-279.jpg

பெயர்: மதன்

இணைந்தது: 29-January 04

தொழில்: கோவில்களுக்கு செல்வது

உப தொழில்: மட்டுறுத்துனர்

வெற்றி: யாழில் அனைவரின் அன்பையும் பெற்றது

மதன் அண்ணா யாழில் இணைந்தது 29-January 04. அவரின் முதல் பதிவு அடுத்த நாளே திருமணம் பற்றி அமைந்திருந்தது. சீதன பிரச்சனைக்கு யார் காரணம்? என கேட்டு கொண்டு உள்ளே வந்தவரை யாழ் அன்போடு வரவேற்றது. அதன் பின்னர் தான் அறிமுக பதிவு போடவில்லை என கண்டுபிடித்திருப்பார் போல. Hi Everyboday என ஆங்கிலத்தில் பதிவு போட்ட கொழும்பு பி.பி.ஸி தானா எங்கள் மதன் அண்ணா என்ற ஆச்சர்யம் நிச்சயம் அனைவருக்கும் வரும். ஆரம்பத்தில் கொழும்பில் வசித்து கொண்டிருந்த மதன் அண்ணாவின் ஆதங்கத்தை படித்து பாருங்கள்: கொழும்பு தமிழன் தமிழன் இல்லையா?. யாழ் ஒருவரை எப்படி மாற்றுகின்றது என்று பாருங்கள். இதே மதன் அண்ணா தான் , நான் யாழில் இணைந்த நேரம் எனக்கு தமிழ் கற்று தந்தது. என் கதைகளில் இருக்கும் எழுத்து பிழைகளை பார்த்து சொன்னது. யாழ் ஒரு அதிசயம் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.

சமூகம் சார்ந்த விவாதங்கள் பலவற்றை மதன் அண்ணா ஆரம்பித்துள்ளார். ஈழம், தமிழ், உலகம் என அவரது தலைப்புகள் விரிந்து கிடக்கும். அவற்றில் மிக முக்கியமான சிலவற்றை குறிப்பிட்டு சொல்ல விரும்புகின்றேன். தமிழ் கருத்துகளம் ஒரு வெட்டிவேலை? என மோகன் அண்ணாவுக்கே சின்னதாக ஒரு அதிர்ச்சியை குடுக்க மதன் அண்ணாவால் தான் முடியும். (சும்மா) ஆரம்பத்தில் கொழும்பு தமிழர் என இருந்தவர் உள்ளே நிகழ ஆரம்பித்த மாற்றங்களுக்கான முதல் ஆதாரம்: போராட்டத்தில் வெளிநாட்டு தமிழரின் பங்கு எந்த அளவிற்கு இருக்கின்றது? உங்க கருத்து என்ன?

இப்போ நல்ல பிள்ளையாக இருக்கும் மதன் அண்ணாவின் லொள்ளை அந்த நேரத்தில் பாருங்களேன்: பெண்ணே நீயும் பெண்ணா என தலைப்பு போட்டுவிட்டு அன்னையர் தினம் பற்றி எழுதியிருக்கார். சமையல் பக்கமும் வந்து முதல் பதிவிலேயே அல்வா குடுத்திருக்கார். அதன் பின்னர் மனம் மாறி இட்லி செய்யும் இன்னுமொருமுறையை யாழுக்காக தந்திருக்கார். ஆரம்பத்தில் அதிகம் யாழில் எழுதி கொண்டிருந்த மதன் அண்ணா தான் "காணவில்லை" பதிவின் குரு.

வரும் போதே திருமணம் பற்றி பதிவு போட்டவர். அதை அடிக்கடி தொடரவே செய்தார். அதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன: ஆதாரம் 1 & ஆதாரம் 2. அதிலும் ஆதாரம் இரண்டில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி என்றெல்லாம் கேட்டிருக்கார்.

கோயில்களுக்கும் மதன் அண்ணாவிற்குமான உறவு இன்று நேற்று ஆரம்பித்ததில்லை. கோயிகள் வழிபடவா? பணம் சம்பாதிக்கவா? என வந்த நேரத்திலேயே கேட்டிருக்கார் என்றால் பாருங்களேன். அடுத்த ஆதாரம்: ஜெர்மனி ஹம் கோவில். லண்டனில் இருப்பவருக்கு எதுக்கு ஜெர்மன் கோவில் கதை? ;) இதில் சிட்னிக்கு வந்த நேரமும் சிட்னி முருகன் பார்க்காமல் போக மாட்டேன் என அடம்பிடித்தவர் என்றால் நம்பாமலா போவீர்கள். (உபயம்:நவராத்திரிவிழா)

என்ன தான் கோவில் கோவில் என சுத்தினாலும். சினிமாவில் உள்ள ஒவ்வெரு நடிகை பற்றியும் பதிவிட தவறுவதில்லை என்பதற்கான சில ஆதாரங்களை பாருங்களேன்: நயந்தரா, அசின், ரேணுகா மேனன், திரிசா, சினேகா, கோபிகா

யாழில் மட்டுறுத்துனர்களை அதிகம் அறிமுகப்படுத்திய காலகட்டத்தில், அவர்களை மதன் அண்ணா தான் வாழ்த்தி ஒரு பதிவு போட்டார். பதிவு போட்டவரையே நாங்கள் அனைவரும் வாழ்த்தும் காலம் வந்ததை மறக்க முடியுமா! "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்" என மாறியவர் தானே மதன் அண்ணா. ஆனால் அது பாராட்டத்தக்க ஒரு பரிமான வளர்ச்சியாக அமைந்தது. சொல்ல மறந்தது: கருத்துக்களில் மாற்றங்கள் என்ற சிறந்த பகுதியை ஆரம்பித்த புண்ணியவான் எங்க மதன் அண்ணாவே தானாக்கும்!

மதன் அண்ணா பல நல்ல பதிவுகளை ஆரம்பித்திருப்பது எங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. சாத்திரிக்கு எப்படி ஒரு ஐரோப்பிய அவலமோ, புத்தனுக்கு எப்படி ஒரு சிட்னி கோசிப்போ, அது போல் மதன் அண்ணாவிற்கு: தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால் இங்கே அமத்துங்க ;)

எனக்கு மதன் அண்ணா களத்தில் ஒரு பலம் & பாதுகாப்பு. பாராட்டுவதிலும் சரி, நான் என்ன சொன்னாலும் அமைதியாக கேட்பதிலும் சரி, மதன் அண்ணாவை விஞ்ச முடியாது. களத்தில் சில நேரங்களில் கோபப்படுவேன், அப்போது அதை களத்தில் காட்டாமல் மதன் அண்ணாவிடம் தான் கொட்டுவேன். அத்தனையும் சொல்வேன். "இது நிஜாயமா? தர்மமா?" போன்ற வசனங்கள் அடிக்கடி வரும். அத்தனை விசயங்களையும் உள்வாங்கிய பின்னர் நியாத்தை சொல்வார். தங்கை என்பதால் செல்லம் என்றாலும் நியாயமாக தான் பதில் தருவார். நான் அதற்கும் சூடாக பதில் போடுவேன். அதற்கும் ஒரு அமைதியான பதில். அப்புறம் எங்கே கோபம் என நானே தேடும் அளவிற்கு வந்துவிடும். (ஏன் தாயி நீ எப்போ கோபப்பட்டேன்னு கேட்பவர்களுக்கு தனிமடலில் பதில் அளிக்கப்படும் (கிகிகிகி)) அடுத்து என்னுடைய எழுத்துக்களையும் ஆர்வமாக படித்து, ஊக்குவிப்பார் என நான் சொல்லி தான் யாழ் களம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. என்னுடைய ஆரம்ப எழுத்துக்களை பார்த்தீர்கள் என்றால் இதற்கான பதில் கிடைத்துவிடும். எழுத்து பிழைகளை திருத்த சொல்லி ஊக்கம் தந்து, அது படிப்படியாக குறைய ஆரம்பித்த போது மகிழ்ந்தவர். தினம் பேசி, தினம் சண்டை போட்டால் தான் அண்ணன் தங்கையா? இல்லை என்பதற்கு நாங்களே முதல் உதாரணமாகின்றோம்.

மதன் அண்ணா முன்னர் போல் அடிக்கடி யாழுக்கு வர வேண்டும், கருத்தாட வேண்டும். நீங்களும் மதன் அண்ணாவை பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்...

உண்மையில் எல்லோராலும் பாராட்டப்பட்டு எல்லோரையும் கவர்ந்தவர் மதன் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. எதையும் என்போல் வெளிப்படையாகவே பேசுபவர். பக்திமான்மட்டுமல்லாது எல்லா விடயங்களிலும் அனுபவமுள்ள சாமத்தியசாலி. அவர் பற்றிய பதிவையும் அழகாகத் தந்த தூயாவிற்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்ன தான் கோவில் கோவில் என சுத்தினாலும். சினிமாவில் உள்ள ஒவ்வெரு நடிகை பற்றியும் பதிவிட தவறுவதில்லை என்பதற்கான சில ஆதாரங்களை பாருங்களேன்: நயந்தரா, அசின், ரேணுகா மேனன், திரிசா, சினேகா, கோபிகா

:unsure:ஒருவேளை அம்மன் வேடங்களில் அடிக்கடி நடிகைகள் காட்சியளிப்பதால் அவர்கள் மீதும் மதனுக்கு பக்தி வந்திருக்கும். :rolleyes: மற்றும் படி மதன் ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை தான் :lol:

  • தொடங்கியவர்

ஒருவேளை அம்மன் வேடங்களில் அடிக்கடி நடிகைகள் காட்சியளிப்பதால் அவர்கள் மீதும் மதனுக்கு பக்தி வந்திருக்கும். :rolleyes:மற்றும் படி மதன் ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை தான் :unsure:

கிகிகிகி :lol: :lol:

மதன் அண்ணா முன்னர் போல் அடிக்கடி யாழுக்கு வர வேண்டும், கருத்தாட வேண்டும். நீங்களும் மதன் அண்ணாவை பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்...

உங்கள் பார்வையில் மதன் அண்ணாவும் இடம்பெற்றுள்ளார் என்பதையிட்டு மகிழ்ச்சி.

ம்ம் அவரைப் போல ஒரு நல்ல மட்டுறுத்துனரை காணவில்லை. ஏன் அவர் இப்போ யாழுக்கு வாறாதில்லை. ஏன் மட்டுறுத்து பதவி இல்லை?

மதன் அண்ணா அமைதியான அண்ணா என்றாலும் யாழில் கலகல என எல்லோரோடும் கருத்தாடுபவர்.

நான் கேள்விப்பட்டுள்ளேன் மதன் சிறந்த மட்டுறுத்துனர் என்று .மதன் அண்ணாவை பற்றி களத்தில் எழுதியதற்கு எனது நன்றிகள் .தூயா அக்காவிற்கு மதன் அண்ணாவை நன்கு தெரிந்திருக்கிறது. மதன் அண்ணாவுடன் களத்தில் கருத்தாடமுடியவில்லை என்ற கவலைதான் வருகின்றது.

மதன் அண்ணா எங்கிருந்தாலும் வாழ்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கேள்விப்பட்டுள்ளேன் மதன் சிறந்த மட்டுறுத்துனர் என்று .மதன் அண்ணாவை பற்றி களத்தில் எழுதியதற்கு எனது நன்றிகள் .தூயா அக்காவிற்கு மதன் அண்ணாவை நன்கு தெரிந்திருக்கிறது. மதன் அண்ணாவுடன் களத்தில் கருத்தாடமுடியவில்லை என்ற கவலைதான் வருகின்றது.

மதன் அண்ணா எங்கிருந்தாலும் வாழ்க

ஏன் மதனுக்கும் மிரட்டல் விடுவதற்கா?

ஏன் மதனுக்கும் மிரட்டல் விடுவதற்கா?

:rolleyes:அதானே உங்களுக்குப் போட்டியாக இன்னொருவர் வர முடியுமா?? :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes:அதானே உங்களுக்குப் போட்டியாக இன்னொருவர் வர முடியுமா?? :unsure:

ஆக, என்ன சொல்ல வருகின்றீர்கள். எனக்குப் போட்டியாக என்னுமொருவர் என்றால்... இது வரை யாருக்கு நான் மிரட்டல் விட்டிருந்தேன். ஆதாரம் தேவை. அல்லது ஆதாரமில்லாமல் புலம்புகின்றவராகத் தங்களை ஏற்றுக் கொள்ளுவீரா?

ஆக, என்ன சொல்ல வருகின்றீர்கள். எனக்குப் போட்டியாக என்னுமொருவர் என்றால்... இது வரை யாருக்கு நான் மிரட்டல் விட்டிருந்தேன். ஆதாரம் தேவை. அல்லது ஆதாரமில்லாமல் புலம்புகின்றவராகத் தங்களை ஏற்றுக் கொள்ளுவீரா?

ஆ... தாரம் இல்லாமல் நானா?? :rolleyes: சா..... சா.... தாரம் இல்லாமல் பசங்க எப்படி வருவாங்க?? :unsure: அட நீங்க ஆதாரத்தைக் கேட்டீங்களா?? :lol: இந்தப் பக்கத்தை வேறு திசையில் மாற்ற நான் விரும்பவில்லை. ஆனாலும் பொன்னையாவாக உங்க பதிவுகளை ஒரு முறை மீட்டிப் பாருங்கள். புரிந்து விட்டால் நீங்க புத்திசாலி. இல்லையென்றால் நீங்களே ஏதாவது போட்டுக் கொள்ளுங்கள்.................

பி.கு: சோழன் எப்போ உங்களை மிரட்டினாரு?? சொல்லவேயில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீட்டிப் பாருங்கள் என்று எனக்கு ஏன் ஏவல் செய்கின்றீர்கள். ஆதாரம் தாருங்கள் என்று தானே கேட்டேன்.

சாத்திரியின்இடத்தில் நீங்கள் இருந்திருந்தாலும் உங்களுக்கு ஆதரவாகத் தான் பேசியிருப்பேன்.

வணக்கம் தூயா.

இன்றுதான் இந்தபகுதியை பார்த்தேன் வாழ்த்துக்கள், மற்றும் பழையவற்றை மீட்டியதற்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டுறுத்தினராக இருந்து தானும் மற்ற உறுப்பினர்களுடன் சகஜமாக கருத்தாடல் செய்தவர்.அநேகரின் அன்பைப்பெற்றவர்.

தற்போது இவர் வருவது குறைவு.கோவிலில் வேலை அதிகமோ என்னமோ அல்லது ஐயரின் வேலையை இவர் பாரமெடுத்துக்கொண்டாரோ யாருக்குத்தெரியும் :D

மீண்டுமொரு நினைவலைகளுக்கு நன்றி தூயா.

  • தொடங்கியவர்

ஐயர் வேலைக்கு சம்பளம் அதிகமோ?? ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களத்தில நான் உறுப்பினரா இணைந்தபோதும் எனக்கு தமிழில் தட்டச்சு செய்ய தெரியாததால் கன காலம் கருத்து எதுவுமே எழுதவில்லை. அப்போது மதன் அண்ணாவின் கருத்துக்களை வாசித்து விட்டு இவரிடம் உதவி கேட்போம் என்று கேட்ட உடனேயே எப்படி தமிழில் எழுதுவது என்று விரைவாக சொல்லி தந்தவர். பொறுமையாக என்னுடைய கேள்விகளுக்கும் பதில் அளித்தவர். நான் இப்போது கூட மாதவனின் படத்தை அவதாரில் கண்டால் அது மதன் அண்ணாவா என்று பார்க்கும் அளவுக்கு மாதவனின் படமும் மதன் அண்ணாவும் இரண்டற கலந்தவர்கள். :D

மதன் அண்ணா மறுபடியும் களத்துக்கு வாங்கோ

Edited by இன்னிசை

  • கருத்துக்கள உறவுகள்

பி.பி.சி என்ற பெயரில் ஆரம்பத்தில் வந்தவர் பின்பு மதன் என்ற பெயருக்கு மாறினார். இப்பொழுது யாழுக்கு வருவது மிகவும் குறைவு.

  • தொடங்கியவர்

வருவார்..ஆனால் கருத்து எழுதுவதில்லை என நினைக்கின்றேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயர் வேலைக்கு சம்பளம் அதிகமோ?? ;)

எதற்கெடுத்தாலும் அர்ச்சனைதட்டுடன் உலாவும் சைவ பெண்களிருக்கும் வரைக்கும் ஐயர்மாரின் வீபூதிதட்டில் சில்லறைக்கு குறைவேது.சிறுதுளி பெருவெள்ளம். :D

"பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாய ச

பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.