Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழும் நானும் (பகுதி 12: குளக்காட்டான் அண்ணா)

Featured Replies

பி.பி.சி என்ற பெயரில் ஆரம்பத்தில் வந்தவர் பின்பு மதன் என்ற பெயருக்கு மாறினார். இப்பொழுது யாழுக்கு வருவது மிகவும் குறைவு.

:lol:பிபிசி என்ற பெயரில் எழுதிய போது அடிக்கடி பிபி எகிற :lol: சி என்றுவிட்டு பின் மதனாக அவதாரம் எடுத்தார். :lol:

எதற்கெடுத்தாலும் அர்ச்சனைதட்டுடன் உலாவும் சைவ பெண்களிருக்கும் வரைக்கும் ஐயர்மாரின் வீபூதிதட்டில் சில்லறைக்கு குறைவேது.சிறுதுளி பெருவெள்ளம். :lol:

அது மட்டுமா அதைவிட போனஸ் விடயங்கள் நிறையவே இருக்கு. :lol::lol:

  • Replies 235
  • Views 28.2k
  • Created
  • Last Reply

வருவார்..ஆனால் கருத்து எழுதுவதில்லை என நினைக்கின்றேன்...

என்னத்தே சொல்லி என்னத்தே செய்து, வருவார் ஆனால் வரமாட்டார். அது தானே தூயா :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மதனை பிடிக்கிறதில்ல. ஏன்னா.. அவர் ஒரு மட்டுறுத்தினரா இருந்தும் கள விதியை மதிக்கிறதில்ல.

அடிப்படை கள விதியில சினிமா நடிகர்களின் அவற்றர் போடக் கூடாது என்றிருக்கு. அவர் மாதவனின் படம் போட்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் நீக்கி நீக்கி போட்டிருக்கிறார்.

நாங்க எழுதிற ஒரு கருத்தை களவிதிக்கு புறம்பு என்று நிர்வாகம் கருதிட்டா மீண்டும் மீண்டும் அதை எழுதினா..எச்சரிக்கை வாங்கிறம். ஆனா...??! இது அவருக்கு அப்படியில்ல. இது அதிகார துஸ்பிரோயகத்தைக் காட்டுது. எனக்கு அதிகாரத்தைக் கொண்டு சட்டத்தை துஸ்பிரயோகிக்கிறவையை எவ்வளவுதான் குணத்தில நல்லவையா இருந்தாலும் பிடிக்காது. :lol:

அடிப்படை கள விதிகள்: http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry285565

Edited by nedukkalapoovan

நெடுக்கு

மதனுக்கு அந்த அவற்றர் நன்கு பொருந்தி வந்துவிட்டது. அதை ஏனைய கருத்தாளர்கள் பலரே பலமுறை சுட்டிக் காட்டியுள்ளார்கள். களவிதியென்று பார்த்தோமானால் இதைவிட மோசமான விடையங்கள் இங்கு நடைபெற்றன, நடைபெறுகின்றன, நடைபெறும். ஆனால் இவற்றை நிர்வாகம் ஒரு போதும் கவனத்தில் எடுப்பதில்லை.

நீங்களே சொல்லுங்கள் நீங்கள் இணைத்துள்ள களவிதிகளில் எத்தனை கைக்கொள்ளப்படுகின்றன??

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு

மதனுக்கு அந்த அவற்றர் நன்கு பொருந்தி வந்துவிட்டது. அதை ஏனைய கருத்தாளர்கள் பலரே பலமுறை சுட்டிக் காட்டியுள்ளார்கள். களவிதியென்று பார்த்தோமானால் இதைவிட மோசமான விடையங்கள் இங்கு நடைபெற்றன, நடைபெறுகின்றன, நடைபெறும். ஆனால் இவற்றை நிர்வாகம் ஒரு போதும் கவனத்தில் எடுப்பதில்லை.

நீங்களே சொல்லுங்கள் நீங்கள் இணைத்துள்ள களவிதிகளில் எத்தனை கைக்கொள்ளப்படுகின்றன??

அவற்றர் பொருந்திச்சோ இல்லையோ அதுவல்ல பிரச்சனை. கள விதியை அமுல்படுத்திறவங்களே கள விதியை மதிக்காத போது...????! அது எனக்குப் பிடிக்கல்ல...!

நடந்தது.. நடைபெறுகிறது.. நடக்கப் போகிறது என்பதற்காக.. ஒரு தப்பை நியாயப்படுத்தினா.. இன்னும் எத்தனை தப்புக்களை நாங்களும் பிறரும் நியாயப்படுத்துவம்....! சட்டத்தின் முன் சகலரும் சமன்..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

சட்டத்தின் முன் சகலரும் சமன்..!

கடமையுணர்வுள்ள நீதிபதியாக வந்திருக்க வேண்டும் நெடுக்ஸ் நீங்க ;)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பகுதி 11

கடந்த சில பகுதிகளாக யாழில் எனக்கு கிடைத்த அண்ணன்கள் பற்றி எழுதினேன். இந்த பகுதியிலும் ஒரு அண்ணனை பற்றி எழுத உள்ளேன். இந்த அண்ணனின் குரலை கடந்த 10 வருடங்களாக வானொலியில் கேட்டு வருகின்றேன். வானொலி என்றதுமே நான் சொல்வது கானாபிரபா அண்ணாவை பற்றி தான் என கண்டுபிடித்திருப்பீர்கள். யாழில் கானாஸை சந்திக்க முன்னரே, ஒஸ்திரேலிய வானொலிகளில் குரலை கேட்டிருக்கின்றேன். சாதாரண தோற்றத்தில் ஒரு அசாதாரண மனிதன் என்றால் அது கானாபிரபா அண்ணா தான். (அதென்ன சாதாரண தோற்றம், அவர் பார்க்க நல்லா தானே இருக்கார் என்றெல்லாம் கேள்வி கேட்க கூடாது)

praba.png

பெயர்: கானாபிரபா

இணைந்த திகதி: 23-January 05

பிடித்தது: தமிழ் வானொலியில் இலவசமாக பங்காற்றுவது

பிடிக்காதது: ----------- ஒஸ்திரேலிய யாழ் உறவுகளுக்கு தெரிந்திருக்கும் (தனிமடலில் தொடர்பு கொள்பவர்களுக்கு அறிவிக்கப்படும்) (கிகிகிகி)

அதிகம் எழுதியது: சினிமா

வலைப்பதிவு: http://kanapraba.blogspot.com

தமிழில் மேல் உள்ள காதலில் வானொலி அறிவிப்பாளராக கடமையாற்றும் கானாஸுக்கு பல திறமைகள் உண்டு. எழுத்து திறமை பற்றி யாழ் முழுமையாக அறியும். தமிழறிவு பற்றி இணைய உலகமே அறிவும். புத்திசாலித்தனம் அதிகம் உள்ள வானொலி அறிவிப்பாளராக ஒஸ்திரேலிய மக்களுக்கு மட்டுமாவது தெரியும். பல பிரபலங்களை சாதாரணமாக பேட்டி காணும் வித்தை எங்கிருந்து கானாஸுக்கு கிடைத்ததோ தெரியவில்லை. இயக்குனர் சீமானின் பேட்டி இதற்கு ஒரு நல்ல உதாரணம். சினிமா, எழுத்துலகம், இசை என பல துறைகளை பற்றிய ஒரு அகராதி தான் எங்கள் கானாஸ்.

யாழில் தை மாசத்தில் இணைந்த கானாஸ், ஆறுதலாக ஐப்பசியில் தான் தன் முதல் பதிவை எழுதியிருந்தார். அதுவும் மென்பொருள் பற்றி ஒரு பதிவு. வந்தமா, ஒரு அறிமுகப்பதிவு போட்டமா என இருக்கணும். இது என்ன என்றால் 10 மாசத்திற்கு பின்னர் ஒரு பதிவு. யாழை படித்த பின்னர் எழுத ஆரம்பித்தாரோ என்னமோ!

ஆனால் பதில் பதிவுகளை உடனே எழுத ஆரம்பித்துவிட்டார். வந்து தன்னை அறிமுகப்படுத்தாமல், மற்றைய புதியவர்களை வரவேற்று கொண்டிருந்தார். முதன் முதலில் எழுதிய மறுமொழி எங்கள் நித்தியின் அறிமுகப்பதிவிற்கு தான். இப்படி தான் அவருக்கு 5 நாட்களுக்கு பின்னர் இணைந்த என்னையும் வரவேற்றார். "ம்ம்ம் வணக்கம்" என என்னை யாழுக்கு முதன் முதலில் வரவேற்ற பெருமை கானாஸை தான் போய் சேரும். என்னமோ எனக்கு வணக்கம் சொன்னதோடு ஒரு பத்து மாசம் ஆளை காணவில்லை. அதன் பின்னர் ஐப்பசியில் தான் கருந்த்தெழுதினார்.

அந்த நேரத்தில் கானாஸ் நடத்தி வந்த வானொலி நிகழ்ச்சியில் யாழ் இணையம் பற்றி குறிப்பிட்டிருந்தார். இதை கேட்ட யாழ் உறவு தமிழ்நிலா அதை ஒரு பதிவாக பதித்திருந்தார். நான் தான் அந்த அறிவிப்பாளர் என கூறி யாழோடு இணைந்தவர் தான் கானாஸ்.

இணைந்து கானாபிரபா என்ற பெயரை யாழுக்கு அறிவித்த பதிவு என்றால், அது தேவராசா அண்ணை குடும்பம் இருந்த வீடு எனும் நிஜக்கதை தான். கானாஸின் திறமைக்கு ஒரு சான்று தான் மலரக்காவின் நிஜ கதை. ஒரு சாதாரண வானொலி அறிப்பாளரால் சாதிக்க முடியாத விடயம் இது. கானாஸிற்கு இது நிச்சயம் வலிதரும் நிகழ்ச்சி தான். அற்புதமான ஒரு மலரக்காவை பற்றி அவர் இறந்த பின்னராவது இவ்வுலகம் அறிந்து கொண்டது கானாஸால் தன்.

மலையாளா சினிமா மீது கானாஸுக்கு ஈடுபாடு உண்டு. செம்மீன் பற்றிய விமர்சனம் இதற்கு ஒரு நல்ல உதாரணமாக அமைந்தது. கேரளாக்கு சென்று பயணக்கட்டுரை எழுதினதையும் யாழில் யாருமே மறந்திருக்க முடியாதே. மலையாள சினிமா பிடிக்கும் என்பதற்காக, எதற்காக படகு வீட்டுக்கு போய் மீன் பிடித்து சாப்பிட வேண்டும் என கேட்பவர்கள், மறக்காமல் அவரை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்.

கானாஸின் பதிவுகள் பல ஊரை பற்றி இருக்கும். ஊர் நினைவுகளை கிளறி, அன்றிரவு ஊரை பற்றி நினைத்து நினைத்து தூங்காமல் இருக்க வைக்கும். ஈழத்தை விட்டு வந்து எதை இழந்தோம் என்பது இவரின் பல பதிவுகளில் இருக்கும். அவற்றில் சில:

வெடிகொழுத்தி ஒரு தை பொங்கல்

சினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்களும்

யாழ்ப்பாணத்து வருசப்பிறப்பு

அந்த நவராத்திரி நாட்கள்

கே.எஸ்.பாலச்சந்திரன்

மண்ணெண்ணையில் பார்த்த படங்கள்

இதை போல ஈழத்தில் அழிந்து போன இடங்கள், பொருட்கள், மனிதர்கள், வரலாறுகளை பதிப்பதிலும் கானாஸுக்கு ஈடு இல்லை என்பேன். அப்படிப்பட்ட சில பதிவுகள்:

யாழ் தேவி

வாழைமரக்காலம்

எங்களூர் வாசிகசாலைகள்

மாட்டு வண்டி சவாரிகள்

என் இனிய மாம்பழமே

கானாஸின் சமுதாய பதிவுகளில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவை சிலவற்றையும் நிச்சயம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்:

சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி

கறுப்பு ஜீலை

இணையத்திலோ, நேரிலோ கனாஸை அறிந்தவர்கள் அவர் ஒரு சிறந்த படைப்பாளி என்பதை அறிந்திருப்பீர்கள். படைப்பாளி என்பதை விட, அவர் ஒரு சிறந்த ரசிகர் என்பதே மிக பொருந்தும் என்பது என்னுடைய கருத்து. பல ஆக்கங்களை வாசிப்பது தான் கானாஸின் வளர்ச்சிக்கு காரணம் என்பது என்னுடைய ஊகம். சின்ன வயதில் வாசிகசாலையில் அவரது வாசிப்பு ஆரம்பித்திருக்கின்றது. அது இன்று வரை நிற்கவில்லை என்பதை என்னால் ஆதார பூர்வமாக நிரூபிக்க முடியும்.

தற்போது யாழில் எழுதாவிடினும், யாழை நினைக்காமல் இருக்க மாட்டார் என நினைக்கின்றேன். வலைப்பூவில் எழுத ஆரம்பித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளமை உங்களில் பலருக்கு தெரியும். ஆரம்ப காலத்தில் சின்னகுட்டி, கானாஸ், நான் என மூவருமே ஈழத்தமிழர்கள் அதிகம் எழுதி வந்தோம் என நினைக்கின்றேன். (யாழில் இருந்து) அருமையான, மரியாதையான ஒரு உறவு எங்களுக்குள் உண்டு.

என்னைடைய ஒவ்வொரு ஆக்கத்தையும் படித்து, கருத்துக்களை சொல்வார். குறிப்பாக சமையல் குறிப்புகளை படித்து, அதிகமாக கிண்டல் செய்வார். நான் செய்த கேசரியை வைத்து வீடு கட்டியகாத கூறும் கானாஸ், இதுவரை அதற்கான பணத்தை தரவேயில்லை. இதை படிப்பவர்களில் யாராவது நாட்டமை இருந்தால், சரியான தீர்ப்பை கூறுமாறி வேண்டிக்கொள்கின்றேன். முதலில் யாழில் என் ஆக்கங்களை ஊக்குவித்து வந்தவர், இப்போது எனது வலைப்பூக்களில் எழுதி வருவது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும். எப்படி கிண்டல் செய்தாலும், என்னுடைய சில ஆக்கங்கள் வெளியே தெரிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் கானாஸ் என்பதை மறுக்க முடியாது. நான் மறக்கவும் மாட்டேன்.

எங்கு சென்றாலும் தன் திறமையாலும், நட்பான பழக்கத்தாலும் தனக்கென ஒரு நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி கொள்ளும் கானாஸை அனைவரும் வாழ்த்துவோம். இன்னும் சில வருடங்களில் நிச்சயம் அவரை நிமிர்ந்து பார்த்து பெருமைப்படும் அளவிற்கு வளர்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு என்பதை இப்பதிவின் மூலம் தெரிவித்து கொள்வோம்.

பி.கு: இரண்டு வாரம் ஆகிவிட்டது. அடுத்த பகுதியை எழுதவும் என மிரட்டிய அன்பு உறவுகளுக்கு நன்றிகள். (வர வர ரௌடி கூட்டம் அதிகமாகிடிச்சுப்பா) கிகிகிகி

Edited by தூயா

  • கருத்துக்கள உறவுகள்

கானாப்பிரபாவின் ஆக்கங்களை வாசிப்பவர்களுக்கு ஊர் ஞாபகங்கள் வந்து போகும். எல்லோரையும் பாதித்த, மலரக்கா என்ற பதிவின் இணைப்பினை தூயா இணைக்க மறந்து விட்டார்.

யாழில ரெளடிகள் கூட்டமா?. யாரப்பா தூயாவோட ரெளடித்தனம் செய்தது?...

  • தொடங்கியவர்

கானாப்பிரபாவின் ஆக்கங்களை வாசிப்பவர்களுக்கு ஊர் ஞாபகங்கள் வந்து போகும். எல்லோரையும் பாதித்த, மலரக்கா என்ற பதிவின் இணைப்பினை தூயா இணைக்க மறந்து விட்டார்.

இணைத்துவிட்டேன் :lol:

எனக்கு பிரபாவை ஊரில இருந்தே தெரியும். அவரின் பல பதிவுகளை வாசிக்கும் போது நிச்சயம் ஊர் நினைவுகள் வந்து போகும். அவருடைய கேரளா உலாத்தலை வாசித்துத்தான் நானும் எனது பயண அனுபவங்களை எழுதத் தொடங்கினேன். நீங்கள் இணைத்த கானாபிரபாவின் பதிவுகளை இன்று மீண்டும் பார்த்தேன். பெரும்பாலனவற்றுக்கு நான் எனது கருத்துக்களை எழுதியிருப்பதைக் கண்டேன். மீண்டும் ஒரு இனிய பழைய அனுபவங்களைப் பெற்றதை உணர்ந்தேன்.

ஆரம்ப காலத்தில் சின்னகுட்டி, கானாஸ், நான் என மூவருமே ஈழத்தமிழர்கள் அதிகம் எழுதி வந்தோம் என நினைக்கின்றேன். (யாழில் இருந்து) அருமையான, மரியாதையான ஒரு உறவு எங்களுக்குள் உண்டு
.

உண்மை

அது சரி ...தூயா ..கான பிரபா அண்ணை தனது ஆக்கங்களை யாழில் வழமையாக இணைத்து வந்தவர் ..தீடிரென்று நிறுத்தி விட்டார் ...ஏன்?....

யாழில் உள்ள ஆட்கள் அவருக்கு ஏதும் விரும்பதக்காத விசயம் செய்தனீங்களே.. :lol:

பிடிக்காதது: ----------- ஒஸ்திரேலிய யாழ் உறவுகளுக்கு தெரிந்திருக்கும் (தனிமடலில் தொடர்பு கொள்பவர்களுக்கு அறிவிக்கப்படும்) (கிகிகிகி

தூயா ...அந்த இடவெளி விட்ட இடத்தை நிரப்பி எனக்கும் அது என்ன என்று தனிமடலில் அனுப்பி விடுங்கோ ..தயவு செய்து... :lol::lol:

  • தொடங்கியவர்

யாழில் உள்ள ஆட்கள் அவருக்கு ஏதும் விரும்பதக்காத விசயம் செய்தனீங்களே.. :lol:

நான் இல்லை :lol:

கானபிரபாவின் படைப்புக்களை விரும்பிப் படிப்பவர்களில் நானும் ஒருவன். அற்புதமான ஒரு படைப்பாளி. அவரது கேரளப் பயணங்கள் பற்றிய பதிவுகள் பசுமையானவை. அவரின் சேவைகள் தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இவரைப் பற்றி அதிகம் தெரியாது. தமிழ்மணத்தில் வலைப்பூத்திரட்டியூடு அவதானித்ததில் வலைப்பூவில் அடிக்கடி எழுதி வருகிறார் என்பதை அறிந்திருக்கிறேன்.

இவர் பற்றிய தூயாவின் அறிமுகம் பல அறியாத விடயங்களைச் சொல்கிறது நன்றி.

ஆனால் ஒரு சிறிய விடயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்..

ஆரம்ப காலத்தில் சின்னகுட்டி, கானாஸ், நான் என மூவருமே ஈழத்தமிழர்கள் அதிகம் எழுதி வந்தோம் என நினைக்கின்றேன். (யாழில் இருந்து) அருமையான, மரியாதையான ஒரு உறவு எங்களுக்குள் உண்டு.

இந்தக் கருத்து எவ்வளவு தூரம் சரியானது என்று தெரியவில்லை. அண்மையில் ஒரு வலைப்பூவில் பார்த்தேன்.. அதில் 2003 காலப்பகுதியில் இருந்தே சந்திரவதனா.. அஜீவன்... ஈழநாதன்.. போன்ற பலர் எழுதி வந்திருக்கின்றனர். அதிலும் சந்திரவதனா மிக அதிகமாக எழுதி வந்திருக்கிறார்.

வலைப்பூ என்ற பெயரை தமிழ் கூறும் உலகுக்கு அறிமுகம் செய்து வைத்த திசைகள் மாலன் அவர்களால்... கூட சந்திரவதனா.. குருவிகள் போன்றோரின் வலைப்பதிவுகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

தமிழ்மணம் ஆரம்ப கால உறவு காசி, மதி கந்தசாமி போன்றாரால் கூட பல யாழ் கள உறவுகளின் வலைப்பூக்கள் முன்னர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

வலைப்பூவில் 2004 ஜூலை இலும் அதற்கு முன்னரும் எழுதி வந்த உறவுகளை சந்திரவதனா பட்டியலிட்டுள்ளார்..

http://naaledu.blogspot.com/2004/07/eelanathan.html

வலைப்பூ என்ற பதிவில்.. 2004 பெப்ரவரி காலப்பகுதியிலும் அதற்கு முன்னரும் எழுதி வந்த உறவுகளின் தொகுப்பு: (ஈழத்து, தமிழக மற்றும் பிற தமிழ் உறவுகள் உள்ளடங்கியது)

http://valaippoo.blogspot.com/2004_02_29_archive.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நளாயினி, சுரதா தமிழ்வாணன், கவிதன், பரணி போன்றவர்களும் எழுதி வந்திருக்கின்றார்கள்

இந்தக் கருத்து எவ்வளவு தூரம் சரியானது என்று தெரியவில்லை. அண்மையில் ஒரு வலைப்பூவில் பார்த்தேன்.. அதில் 2003 காலப்பகுதியில் இருந்தே சந்திரவதனா.. அஜீவன்... ஈழநாதன்.. போன்ற பலர் எழுதி வந்திருக்கின்றனர். அதிலும் சந்திரவதனா மிக அதிகமாக எழுதி வந்திருக்கிறார்
.

கொஞ்சம் நேரம் நாம தான் என்று நினைச்சு சந்தோச பட விட மாட்டியள் போலை :lol:

உங்களுடைய திருத்தம் முற்றிலும் உண்மை

யாழில் இருந்து) அருமையான, மரியாதையான ஒரு உறவு எங்களுக்குள் உண்டு.

இதையும் இல்லை என்று சொல்லி கொஞ்சம் நேரம் சந்தோசபடுறதை கெடுத்து போடாதையுங்கோ :lol:

  • தொடங்கியவர்

நெடுக்ஸ்,

தகவலுக்கு நன்றிகள். இனி வரும் காலங்களில் எழுதும் போது நினைவில் வைத்துக்கொள்கின்றேன்.

அஜீவன் அண்ணா, குருவிபபா, சண்முகி, பரணி போன்றோர் வலைப்பூவில் இருந்தது எனக்கு தெரியாது.

நான் வலைப்பூவில் எழுத ஆரம்பித்த நேரத்தில் பிரபலமாக இருந்ததும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்ததும் கானாஸும், சின்னகுட்டியும் தான். மற்றவர்கள் பற்றி நீங்க இப்போ சொல்லி தான் எனக்கு தெரிகின்றது என்றால் பாருங்களேன்..

சந்திரவதனா போன்றோர் யாழில் இருந்தார்களா??

சிலருடைய இணைப்புகள் வேலை செய்யவில்லை. அது யாழில் இருந்து அமைக்கப்பட்ட குடில்களா?? "www.kuruvikal.yarl.net"

இதையும் இல்லை என்று சொல்லி கொஞ்சம் நேரம் சந்தோசபடுறதை கெடுத்து போடாதையுங்கோ :lol:

இதற்கு மட்டும் யாருமே வர முடியாது சின்னகுட்டி :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா எவ்வளவு காலமாக வலைப்பூக்களில் எழுதுகின்றீர்களோ தெரியாது. ஆனால் முன்பு யாழ்வலையில் இருந்தவர்கள் பெரும்பாலும் வலைப்பூக்களிலும் இருந்தார்கள். சந்திரவதனா குடும்பப் பொறுப்புக் காரணமாக எழுதுவதைக் குறைத்துக் கொண்டிருந்தாலும், ஆரம்ப காலத்தில் அதிகமாக எழுதி வந்திருந்தார்.

பழைய யாழ்க்களத்தில் மேலுள்ளவர்கள் உள்ளனர்: http://www.yarl.com/kalam/

  • தொடங்கியவர்

தகவலுக்கு நன்றி பொன்னையா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிலருடைய இணைப்புகள் வேலை செய்யவில்லை. அது யாழில் இருந்து அமைக்கப்பட்ட குடில்களா?? "www.kuruvikal.yarl.net"

இது யாழ்.நெட் என்ற பெயரில் சுதரா அண்ணாவினது முயற்சியில் உருவான ஒரு தளத்தில் யாழ் உறவுகளுக்கு உப வலைகளாக வழங்கப்பட்ட வலைப்பூக்கள்.

நான் நினைக்கிறேன் சிறந்த வடிவமைப்புக்காக இதை சந்திரவதனா அவர்கள் இணைப்பாகக் கொடுத்திருக்கிறார்கள் என்று. அப்போதெல்லாம் ஓரிரு வலைப்பூக்களை உறவுகள் பேணி வந்திருக்கின்றனர். இப்போது யாழ்.நெட் செயலிழந்து விட்டது. அதனால் இந்த உப வலைகளும் செயற்படுவதில்லை. அதில் வலைப்பூக்களை வைத்திருந்த பல உறவுகளும் இச்செயலிழப்போடு சோர்ந்து விட்டார்கள் என்பது வருத்தத்துக்குரிய ஒன்று. அதனால் அவர்கள் பற்றிய அறிமுகங்களை நீங்கள் இணைந்த காலத்தில் பெற முடியாமல் போயிருக்கும்.

பாருங்கள் ஒரு 5 அல்லது 6 ஆண்டுக்குள்ளேயே வரலாறுகள் தலைகீழாகின்ற போது தமிழனின் பண்டைய வரலாறு பதிவின்றி எப்படி.. பாழடைந்த நிலையில் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்று..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இது யாழ்.நெட் என்ற பெயரில் சுதரா அண்ணாவினது முயற்சியில் உருவான ஒரு தளத்தில் யாழ் உறவுகளுக்கு உப வலைகளாக வழங்கப்பட்ட வலைப்பூக்கள்.

நான் நினைக்கிறேன் சிறந்த வடிவமைப்புக்காக இதை சந்திரவதனா அவர்கள் இணைப்பாகக் கொடுத்திருக்கிறார்கள் என்று. அப்போதெல்லாம் ஓரிரு வலைப்பூக்களை உறவுகள் பேணி வந்திருக்கின்றனர். இப்போது யாழ்.நெட் செயலிழந்து விட்டது. அதனால் இந்த உப வலைகளும் செயற்படுவதில்லை. அதில் வலைப்பூக்களை வைத்திருந்த பல உறவுகளும் இச்செயலிழப்போடு சோர்ந்து விட்டார்கள் என்பது வருத்தத்துக்குரிய ஒன்று. அதனால் அவர்கள் பற்றிய அறிமுகங்களை நீங்கள் இணைந்த காலத்தில் பெற முடியாமல் போயிருக்கும்.

பாருங்கள் ஒரு 5 அல்லது 6 ஆண்டுக்குள்ளேயே வரலாறுகள் தலைகீழாகின்ற போது தமிழனின் பண்டைய வரலாறு பதிவின்றி எப்படி.. பாழடைந்த நிலையில் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்று..! :lol:

இத்தனை நடந்திருக்கா??

இவர்கள் அனைவரும் இருந்திருந்தால் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்திருப்பார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில வருடங்களில் நிச்சயம் அவரை நிமிர்ந்து பார்த்து பெருமைப்படும் அளவிற்கு வளர்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு என்பதை இப்பதிவின் மூலம் தெரிவித்து கொள்வோம்.

கானாவை பற்றி அழகாக தூயா எழுதி உள்ளார்.சிட்னிக்கு வர முதல் மெல்பனில் இருந்து வானொலிக்கு தொலைபேசியின் அதிகம் சினிமா செய்திகளை பகிர்ந்து கொள்வார்.சங்கர் கணேஷ் இசையமைப்பாளர்களிர் ஒருவரின் மரணத்தை உடனடியாக வானலையில் பகிர்ந்து கொண்டார்.அந்த காலகட்டத்தில் அவர் பிரபலமாக இருக்கவில்லை பின் சிட்னி வந்து வானொலி அறிவிப்பாளராக பிரகாசித்து பல கருத்துகளங்கள் மற்றும் அறிவு களஞ்சியங்கள் போன்ற நிகழ்ச்சிகளை நடாத்தி பிரபலம் ஆனார்.

இன்று சிட்னியில் கானாவை தெரியாத படைப்பாளிகளோ வானொலி நேயர்களோ இருக்க முடியாது என்று தான் நினைக்கிறேன்.தூயா கூறியது போல் இன்னும் அவர் பிரபலம் ஆக வேண்டும் என்றால் அது சர்வதேச ரீதியாக என்று தான் நினைக்கிறேன்.

மேலும் அவரின் படைப்புகள் பிரசுரகாகும் போது எல்லாம் வாசித்திருக்கிறேன் தற்பொழுது அவரின் படைப்புகள் யாழில் பிரசுராமாவது இல்லை.

ஏற்கனவே வளர்ந்து விட்டார் எனி வளர்வது என்றால்...

  • கருத்துக்கள உறவுகள்

தூயா ...அந்த இடவெளி விட்ட இடத்தை நிரப்பி எனக்கும் அது என்ன என்று தனிமடலில் அனுப்பி விடுங்கோ ..தயவு செய்து... :wub::lol:

ஏன் தூயா பகிரங்கமா கூறினால் தங்கள் இமேஜ் பழுதடைந்து விடுமோ ஆகையால் தான் தனிமடலில் தொடர்பு கொள்ள சொன்னீர்களோ. :o

  • தொடங்கியவர்

ஏற்கனவே வளர்ந்து விட்டார் எனி வளர்வது என்றால்...

கற்றது கை மண் அளவு தானே புத்ஸ் ;)

ஏன் தூயா பகிரங்கமா கூறினால் தங்கள் இமேஜ் பழுதடைந்து விடுமோ ஆகையால் தான் தனிமடலில் தொடர்பு கொள்ள சொன்னீர்களோ. :wub:

எதுக்கு அண்ணாச்சியை இங்கு அழைப்பான் என்ற ஒரே நல்ல எண்ணம் தான்..

தவிர அரசியலில் மாட்டி கொள்ள எனக்கு விருப்பம் இல்லை ;) கிகிகிகி

தூயா ....இடைவெளியை நிரப்பி உங்கள் பதில் கிடைத்தது நன்றி :wub::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.