Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேரன் கொமாண்டோ அணியினரால் மன்னார் கூட்டுப்படைத்தளம் தாக்கியழிப்பு: 10 படையினர் பலி- பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு

Featured Replies

எருக்கலம்பிட்டி கடற்ப்படைநிலை மீதான தாக்குதல் முறியடிப்பு-பாதுகாப்பு அமைச்சகம்

வீரகேசரி இணையம் 3:20:36 - மன்னார் எருக்கலம் பிட்டியிலுள்ள கடற்படையினரின் நிலையின் மீது இன்று அதிகாலை 2.15 மணியளவில் கடற்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 6 படகுகளில் வந்த கடற்புலிகள் அணியொன்று இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் இத்தாக்குதலில் கடற்படையினர் முறியடித்துள்ளதாகவும் தேசியபாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலில் கடற்படையினர் தரப்பில் 3 பேர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலை புலிகள் தரப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பாதுகப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை இம்மோதல் தமது தரப்பில் 4 உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அதேவேளை 10 கடற்படையினர் பலியாகியுள்ளதாகவும் விடுதலைபுலிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் இம்மோதலையடுத்து ராடர் உட்பட பெருமளவிலான ஆயுதங்கள் மீட்க்கப்படிருப்பதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

எருக்கலம்பிட்டி கடற்படைநிலை மீதான விடுதலைப்புலிகளின் தாக்குதல் முறியடிக்கும் முகமாக விமானப்படையினர் இன்று அதிகாலை 4:45 மணியளவில் குறித்த பகுதிகளில் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர். விமானப்படையினரின் எம்.ஐ.24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் விடுதலைப்புலிகளின் படகுகள் விடத்தல் தீவினை நோக்கி சென்றுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 3ம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடுபகுதியிலிருந்து 3 குடும்பங்களை சேர்ந்த 13 பேர் கடற்படையினரிடம் சரணடைந்துள்ளனர். இவர்கள் எருக்கலம்பிடி கடற்படைநிலையினை சரணடைந்துள்ளனர். இவர்கள் எருக்கலம்பிட்டி கடற்படை நிலையினை அண்மித்த பகுதிகளில் தங்கவைக்கப்படுள்ளனர். இவ்வாறு தஞ்சமடைந்தவர்களை தடுப்பதற்க்காவே விடுதலைப்புலிகள் எருக்கலம்ப்பிட்டி கடற்படை நிலை மீது இன்று இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ் நெட்டில் புகைப்படங்கள் இணைக்கப்பட்டள்ளது.

www.tamilnet.com

:):lol: :lol:

Edited by Janarthanan

சேரன் கொமாண்டோ அணியினரால் மன்னார் கூட்டுப்படைத்தளம் தாக்கியழிப்பு: 10 படையினர் பலி- பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு

[புதன்கிழமை, 11 யூன் 2008, 05:31 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

மன்னார்தீவுள் உள்ள எருக்கலம்பிட்டி சிறிலங்கா கடற்படையினரின் கூட்டுப்படைத்தளம், தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணியினரால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதில் 10-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ராடார் உட்பட பெருமளவிலான போர்க்கலங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த மாதம் வீரச்சாவடைந்த கடற்புலிகளின் சிறப்பு இயந்திரப் பொறியியலாளரான லெப். கேணல் கடாபி நினைவாக கடற்புலிகளின் லெப். கேணல் சேரன் கொமாண்டோ அணியினரால் இன்று புதன்கிழமை அதிகாலை 2:08 மணிக்கு எருக்கலம்பிட்டி சிறிலங்கா கடற்படையின் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் தளம் 10 நிமிடத்துக்குள் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணியினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

மன்னார் தீவின் நடுவில் பெரும் பாதுகாப்புக்களுக்கு மத்தியில் எருக்கலம்பிட்டி கடற்படைத்தளம் உள்ளது.

இதில் 10-க்கும் அதிகமான சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டனர். பெருமளவிலான படையினர் காயமடைந்துள்ளர். ஏனைய படையினர் தப்பியோடி விட்டனர்.

சிறிலங்கா கடற்படையின் கஜபா படைப்பிரிவின் ஏ கொம்பனி அணியினரே விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் கொமாண்டோ அணியினரால் தாக்கியழிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஆயுத விபரம்:

ராடார் முழுத்தொகுதி -01

50 கலிபர் துப்பாக்கி - 01

50 கலிபர் துப்பாக்கி சுடுகுழல் - 01

50 கலிபர் ரவைப் பெட்டிகள் - 10

50 கலிபர் ரவைகள் - 1,195

81 மில்லி மீற்றர் மோட்டார்கள் - 02

81 மில்லிமீற்றர் எறிகணைகள் - 203

81 மில்லிமீற்றர் பரா - 07

பிகே எல்எம்ஜி - 01

பிகேஎல்எம்ஜி ரவைகள் - 563

ஆர்பிஜி - 01

60 மில்லி மீற்றர் மோட்டர்கள் - 02

60 மில்லி மீற்றர் எறிகணைகள் - 65

60 மில்லி மீற்றர் பரா வெளிச்சக்கூடுகள் - 12

ஆர்பிஜி எறிகணைகள் - 06

ஆர்பிஜி புறப்ளர் - 05

தொலைநோக்கி தொகுதி - 01

ஏகேஎல்எம்ஜி - 01

ஏகேஎல்எம்ஜி இணைப்பிகள் - 675

ஏகேஎல்எம்ஜி ரம் ரவைக்கூடுகள் - 08

ரி-56-2 ரக துப்பாக்கி - 01

ரவைக்கூடுகள் - 09

நடுத்தர ரவைகள் - 5,870

மின்னேற்றி - 01

மின்கலம் - 01

மின் சீராக்கி - 01

ஜக்கற் ரவைக்கூடுதாங்கி - 01

கவச அணி - 01

நில அளவி - 01

செல்லிடப்பேசிகள் - 03

தொலைபேசி - 01

பை - 01

சப்பாத்து - 2 இணைகள்

கத்தி - 01

ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்தாக்குதலில் கடற்புலிகளின் லெப். கேணல் சேரன் கொமாண்டோ அணியினர் கடற்படைத்தள அழிப்புத்தாக்குதலில் ஈடுபட, வழிமறிப்புத்தாக்குதலை கடற்புலிகளின் லெப். கேணல் புனிதா படையணி, லெப். கேணல் எழில்கண்ணன் படையணி ஆகியன ஈடுபட்டன.

தாக்குதலில் ஈருட அணியை முழுமையாக கடற்புலிகளின் கட்டளைத்தளபதி விடுதலை வழிநடத்த, கடல் தாக்குதலை கட்டளைத்தளபதி இளங்கோ வழி நடத்தினார்.

சிறிலங்கா கடற்படைக்கு பெரும் அதிர்ச்சியையும் இழப்பையும் ஏற்படுத்திய இத்தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்றார் அவர்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

5 போராளிகள் வீரச்சாவு.

9 படையினர் பலி அதில் ஒரு படையினரின் (கஜபாகு ரெஜிமெண்ட்) புகைப்படமும் விடுதலைப்புகளால் வெளியிடப்பட்டுள்ளது.

வீரச்சாவடைந்த வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள். :)

11_06_08_mnr_21.jpg

ஆயுதச் சேமிப்பிடத்தில் இருந்து பெட்டிகளில் அடைக்கப்பட்ட எறிகணைகள் மற்றும் ஆயுதங்களை போராளிகள் அகற்றும் காட்சி.

11_06_08_mnr_23.jpg

கைப்பற்றப்பட்ட ரடார் தொகுதி.

மேலும் படங்கள் இங்குள்ளது.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25978

Furuno வகை ரடார்களின் இயல்புகள்:

http://www.yachtbits.com/furuno/1623_radar_system.php

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தளபதிகள் புதிய படையனிகள் வாழ்த்துக்கள் போராளிகளே....இன்னும் சிங்களத்தை திகைக்க வைக்க எத்தனை எத்தனை படையனிகள் களம் இறக்கப்பட இருக்கிறதோ தெரியல்ல

வீரவணக்கம் 5 போராளிகளுக்கு;...

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மன்ணுக்கு வித்தாகி போன விர வேங்கைகளுக்கு வீர வணக்கம் :)

Edited by kuddipaiyan26

மரணித்த வீர வேங்கைகளுக்கு வீரவணக்கம்

களமாடிய புதிய படையணிக்குப் பாராட்டுக்கள்.

இப் படை நடவடிக்கையில் தமது இன்னுயிரைத் தந்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வீர காவியமான வேங்கைகளுக்கு அஞ்சலிகள்

மறுபடியும் ஒரு ராடர் போய்ட்டுதே....என்ன மாயம்?

களமாடி வெற்றிக்கனி சுமந்து விதையான வேங்கைகளிற்கு என் வீரவணக்கங்கள்.

வீழ்ந்தது தளம் விரைந்து மகிழ்ந்தேன். ஜவரை இழந்தோம் என்றறிந்து அகன்றது அந்த மகிழ்ச்சி. . .

  • கருத்துக்கள உறவுகள்

களமாடி வெற்றிக்கனி சுமந்து விதையான வேங்கைகளிற்கு என் வீரவணக்கங்கள்.

வீழ்ந்தது தளம் விரைந்து மகிழ்ந்தேன். ஜவரை இழந்தோம் என்றறிந்து அகன்றது அந்த மகிழ்ச்சி. . .

பரனி

இதே மாரி தான் 21-10-07 அன்று அனுறாதபுரா தாக்குதலில சிங்களவனின் பொர் விமானங்கள் அலிக்க பாட்டதாம் என்ற உடன எவளவு மகிழ்ச்சி

பட்டொம்..பிரகு அந்த 21 கண்மனிகளின் படத்தை பாத்ததும்

அந்த சந்தொசம் அகன்று பொனது :unsure::unsure: .. அதுங்க செய்த தியகங்கல சொல்ல வார்தையெ இல்லை.. மாவிரர்கள் கும்பிடும் தெய்வங்கள்

வீரகாவியமான வேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்.

நாளை பேசும் எம் சந்ததி உம் வீரத்தினை.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.