Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தலைவி அஞ்சனா உம்மாவை காணவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனதா விமுக்தி பெரமுனவில் இருந்து அண்மையில் பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அஞசனா உம்மாவை சென்ற 16ந்திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் முறைப்பாடு செய்துள்ளார்.

Dissident JVP parliamentarian missing, husband complains

[TamilNet, Friday, 20 June 2008, 02:46 GMT]

Anjana Umma, a dissident parliamentarian of the Janatha Vimukthi Peramuna (JVP), who on June 17 expressed her desire to function as independent has not returned home since she left for parliament with two other JVP parliamentarians, according to the complaint lodged with the Mirigama police by her husband Farook Thursday night, an electronic media reported Friday morning.

Ms. Umma had informed her husband through telephone that she was going with JVP parliamentarians Achchala Jagoda and Mohamed Musamil to ensure her personal security, Mr. Farook told Sakthi FM, Friday morning. Thereafter, he lost contact with her.

Mirigama Police confirmed that the husband of Anjana Umma had lodged a complaint with them that his wife was missing since 16th June.

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சனா உம்மா தனித்து இயங்க போவதாக செவ்வாய் கிழமை அறிவித்தார். அது தான் ஜே.வி.பி நாலு சாத்து சாத்தி போட்டு விடுவார்கள். :):lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவா திரும்பி வந்திட்டாவாம்...

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=18334

அப்பாடா..................இப்பதான் நிம்மதி!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று அஞ்சான் உம்மாவின் வாகனத்தை காணவில்லை ,

இன்று அஞ்சான் உம்மாவையே காணவில்லை ,

என்னா நடக்குது சிறீலங்காவில் ?

எப்படியோ............. அஞ்சான் உம்மா திரும்பி வந்தது சந்தோசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு வந்திருப்பார். நாளை மீண்டும் காணவில்லை என செய்திவரும். இவர் தனித்து கட்சி ஆரம்ப்பிகிறாரோ தெரொயவில்லை. ஜேவியில் இருந்தாலும் மனிசி இதுவரை பாராளமன்றத்தில் சாப்பிடத்தவிர வேறு எதற்க்கும் வாய் திறக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு வந்திருப்பார். நாளை மீண்டும் காணவில்லை என செய்திவரும். இவர் தனித்து கட்சி ஆரம்ப்பிகிறாரோ தெரொயவில்லை. ஜேவியில் இருந்தாலும் மனிசி இதுவரை பாராளமன்றத்தில் சாப்பிடத்தவிர வேறு எதற்க்கும் வாய் திறக்கவில்லை.

அஞ்சான் உம்மா கொட்டாவி விடவும் வாய் திறக்கவில்லையா ?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கரகாட்டக்காறன் படத்தில்

கவுண்டமணியிடம் செந்தில் கேட்ட கேள்விதான் ஞாபகம் வருகிறது???

நிர்வாகம் அனுமதிக்காது என்பதால் நீங்களே புரிந்து கொள்ளுங்கள்???

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி இணையம் 6/20/2008 11:02:18 ஆM - ஜேவி.பியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அஞ்சான் உம்மா இதுவரை வீடு திரும்பவில்லையென அவரது கணவர் பாரூக் மிகிரிகம பொலிஸில் நேற்று இரவு முறைப்பாடு செய்துள்ளார்.

தொலைபேசியில் தனது கணவருடன் தொடர்பு கொண்டு தான் வேறு இரு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக செல்வதாக அஞ்சான் உம்மா தெரிவித்துள்ளார் என அவரது கணவர் இலத்திரனியல் ஊடகமொன்றிற்கு இன்று காலை தெரிவித்துள்ளார்.

********************************************************************************

*********************************************************************************

****************************************************************

வீரகேசரி இணையம் 6/20/2008 2:12:55 PM - காணாமற் சென்றதாக கூறப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஞ்சான் உம்மா கொழும்பில் பாதுகாப்பாக உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ரஞ்ஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.தான் யாராலும் கடத்தப்படவில்லை என்றும் தாம் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக அஞ்சான் உம்மா பொலிஸாருக்கு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்ஜான் உம்மா பத்திரமாக இருக்கிறார் இருக்கும் இடம் இன்னமும் தெரியவில்லை

[21 - June - 2008] [Font Size - A - A - A]

காணாமல்போய்விட்டதாக பொலிஸாரால் தேடப்பட்ட கம்பஹா மாவட்ட ஜே.வி.பி.எம்.பி.யான அஞ்ஜான் உம்மா கொழும்பில் பாதுகாப்பாக இருப்பதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்திற்கு புறப்பட்டுச் சென்ற அஞ்ஜான் உம்மா அதன்பின் வீடு திரும்பவில்லையென அவரது கணவனான துவான் பாரூக் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு மீரிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்திருந்தார்.

கடந்த திங்கட்கிழமைக்குப் பின் தனது மனைவி வீடு திரும்பவில்லையென்றும் ஓரிரு தடவைகள் மட்டும் குறுகிய நேரம் அவர் தொலைபேசியில் பேசியதாகவும் தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நேற்றுக்காலை 10.50 மணியளவில் மீரிகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அஞ்ஜான் உம்மா தான் பாதுகாப்பாயிருப்பதாகத் தெரிவித்ததாக பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார். ஆனால், அவர் எங்கிருக்கிறாரென்பது தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. பொலிஸ் பாதுகாப்புடனேயே அஞ்ஜான் உம்மா இருப்பதாக தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் மீரிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.ஜே.வி.பி.எம்.பி.ய

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்ஜான் உம்மா எங்கே போனா யாருக்கு என்ன கவலை. கடைசி சொந்த இனத்துக்கு ஏதாவது செய்தாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இதை விட சாதாரண குடிமகன் அன்றாட வாழ்க்கைக்காக போராடுபவன் பற்றி எவ்வளவோ மேல். அவர்கள் பற்றி செய்தி இருந்தால் போடுங்கள். ஜே.வி.பியின் குத்து வெட்டு பற்றி தமிழ் பேசும் மக்கள் யாரும் அக்கறை கொண்டவர்கள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அஞ்ஜான் உம்மா செத்தால்த்தான் என்ன ? என்ன குடியா மூழ்கிவிடப் போகிறது ? இவ்வளவு காலமும் இருந்து என்னத்தைக் கிழிச்சவ? தமிழருக்கு எதிராக சிங்களப் பேரினவாதத்தின் ஊது கோளாகத்தானே இவ்வளவுகாலமும் கதைச்சு வந்தவ? அவவுக்கு என்ன நடந்தாலத்தான் என்ன ? நாம் எவரும் இதைப்பற்றிக் கவலைப்படக் கூடாது ! செத்தாலும் ஒன்றுதான், இருந்தாலும் ஒன்றுதான். எமக்கு அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அலங்காரப்பொருளாக அஞ்சான் உம்மாவை ஜே.வி.பி.யினர் பயன்படுத்தியுள்ளனர்

இனவாத கட்சிகளில் முஸ்லிம் பெண்கள் இணைந்தால் அவர்கள் பொம்மையாக கருதி அவமதிக்கப்படுவர் என்பதற்கு அஞ்சான் உம்மா சிறந்த எடுத்துக்காட்டாகும் என அகில இலங்கை உலமா கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அக்கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் தெரிவித்திருப்பதாவது, முஸ்லிம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை.

ஆயினும் அவர்கள் தமது தனித்துவத்தையும் மரியாதையையும் காத்துக் கொள்ளக்கூடிய வகையில் அரசியல் ரீதியாக செயற்படுவதே சிறந்தது என்பது அஞ்சான் உம்மாவுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

கடந்த பல வருடங்களாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினராக அஞ்சான் உம்மா இருந்தபோதும் அவர் ஒரு பொம்மையாகவே நடத்தப்பட்டுள்ளார் என்பதை அவரே பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் முஸ்லிம்களை தமது பக்கம் இழுப்பதற்காக ஓர் அலங்காரப் பொருளாகவே ஜே.வி.பி.யினர் அவரை பாவித்துள்ளனர் என்பதும் தெளிவாகிறது.

இனவாதத்தினூடாக தமது அரசியல் நிலைகளை உயர்த்த முனையும் பேரின கட்சிகளிடம் இதைத்தான் நாம் காண முடியும்.

ஆகவேதான், முஸ்லிம் பெண்கள் பேரினக் கட்சிகளின் அங்கத்தவர்களாகவும் ஆதரவாளர்களாகவும் இருப்பதை தவறு என முஸ்லிம் அறிஞர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளனர். எது எப்படியிருப்பினும் அஞ்சான் உம்மாவுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலைக்கு நாம் பெரிதும் வருந்துவதோடு அவரைச் சுற்றியுள்ள முள் வேலிகள் உடைக்கப்பட்டு பேரின அரசியலின் கூட்டிலிருந்து வெளியேறி தனது குடும்பத்தை கவனிக்கும் உத்தமியாக மிளிரவேண்டுமென உலமா கட்சி பிரார்த்திக்கிறது என மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.