Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொறன்ரோவில் பேரெழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வு

Featured Replies

எழுச்சிக்கு கிடைத்த நற் பலன்.

Canadian Tamils hold rally, condemn Ottawa's ban

Stewart Bell , Canwest News Service

Published: Sunday, July 06, 2008

TORONTO - Waving the flag of the Tamil Tigers guerrillas, thousands of Canadian Tamils gathered this weekend for their first rally since the federal government shocked the community by outlawing a Toronto-based Tamil non-profit group under the Anti-Terrorism Act.

http://www.canada.com/topics/news/national...d8-02c20e1bde72

Edited by பொய்கை

  • Replies 60
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கனடா வாழ் தமிழர்களுக்கு நன்றிகள்

அகவணக்கத்தை தொடர்ந்து தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் செனவிரத்தின பிரதம உரையை ஆற்றினார். ஓர் சிங்களவர் தமிழர் விடுதலைப் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்பதில் எவ்வளவு ஆர்வமாக இருக்கின்றார் என்று பார்த்தபோது, மற்றும் அவரது விரிவான, தெளிவான உரையைக் கேட்டபோது பிரமிப்பாக இருந்தது.

பிரயன் செனவிரட்டினா அவர்கள் பண்டாரநாயக்கா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் தருபவர்.

நானும் சென்றிருந்தேன், இது எங்களின் கடமை.

கனடிய அரசாங்கம் இந்த நிகழ்வை நடைபெறவிடாது தடுக்க அல்லது வேகத்தை குறைக்க பலவிதமான முயற்சிகளை பண்ணியது. இதன் உச்சக்கட்டமாக சில முக்கியமானவர்களை கைதும் செய்திருந்ததாக தகவல். எது எப்படியிருப்பினும் தமிழர்கள் இதைப்போன்ற பல தடைகளை தாண்டிய அனுபவமுள்ளவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துக்காட்டியுள்ளனர்

கைது செய்யப்பட்டவர்கள் திங்கட்ககிழமை விடுவிக்கப்பட சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.

இணைவோம் தமிழராய்....

மீண்டும் கனடாவில் தமிழர்கள் கைதா?. உண்மைச் செய்தியா?

அடிக்கடி எமது எழுச்சியை கனடாவில் காட்ட வேண்டும் சிங்களவருக்கு இப்ப நல்லா உரைக்குது மெல்பேன் பொங்கு தமிழ் பற்றிய ஒரு கருத்தாடல் சிங்கள இனையம் ஒன்றில் நடந்து வருகின்றது அதில் இங்கு இருக்கும் சிங்களவன் ஒருவன் 90%மான தமிழர்கள் புலிகளுக்கு ஆதரவு என சொல்லும் அளவுக்கு இந்த பொங்கு தமிழ் நிகழ்வுகள் அதிர்ந்திருகின்றன.உலகம் பூராவும் பொங்கு தமிழ் நிகழ்வு வெற்றி அடைந்திருகின்றது கனேடிய அரசு அவசர பட்டுவிட்டோமோ என சிந்திக்க நிச்சயம் வைத்திருக்கும் கனேடிய பொங்கு தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

100 % ஆக்கி காட்டுவோம். அது வரை ஓயப்போவதிலை.

  • கருத்துக்கள உறவுகள்

எனது பொங்கு தமிழ் நிகழ்வு அனுபவம்

வெள்ளிக்கிழமை இரவு. இணையத்தில் தேடித்ஹ் தேடிப்[ பார்க்கிறேன். பொங்கு தமிழ் நிகழ்வு நடைபெறும் இடம், காலம் எதுவும் தெரியவில்லை. சனிக்கிழமை என்று நிகழ்வு நாளை மட்டும் ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். நான் வசிக்கும் ஊரில் தமிழ் வானொலிச் சேவை இல்லை. என்னிடம் TVI தொலைக்காட்சியும் இல்லை. குழப்பத்துடன் படுக்கைக்குச் சென்றுவிட்டேன்.

விடிகாலையில் யாழைத் திறந்து பார்த்தால் புதினத்தின் இணைப்பு மூலம் 2:00 மணிக்கு டவுண்ஸ்வியூ பார்க்கில் பொங்கு தமிழ் நிகழ்வு என்று போட்டிருந்தார்கள். நேரம் அப்போது காலை 8:00 மணி. நான் இருக்குமிடத்திலிருந்து நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு 4 மணி நேரப் பயணம். அவசர அவசரமாக வீட்டாரைத் தயாராகும்படி செய்து வீட்டிலிருந்து புறப்பட 10:00 மணியாகிவிட்டது. இடையில் மதிய உணவு எடுத்துவிட்டு டொரோண்டோ சென்றடைய 2:30 ஆகிவிட்டது. கீல் / ஷெப்பேர்ட் சந்திப்பில் ஒரே வாகன நெருக்கடி. ஒரு வழியாக சமாளித்து உள்ளே நுழைந்தால் நிகழ்வுக்காக கடும் வெயிலிலும் செயலாற்ற வந்திருந்த தொண்டர் படை வாகனங்களை சரியான தரிப்பிடங்களுக்கு திருப்பி விட்டுக் கொண்டிருந்தது. ஒன்றன்பின் ஒன்றாக வந்த வாகனங்கள் ஒரு 5 வினாடிகளுக்கு ஒரு வாகனம் என்கிற கதியில் தரிப்பிடங்களை நிரப்பிக்கொண்டிருந்தன. ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு திடலுக்குள் சென்றோம்.

அந்த உச்சி வெயிலிலும் திரண்டிருந்தது ஒரு மாபெரும் மக்கள் கூட்டம். மஞ்சள் சிவப்பு ஆடைகளென்ன..! குடைகளென்ன..! கொடிகளென்ன...! ஒரு தீர்க்கமான செய்தி கனேடிய மற்றும் சர்வதேச சமூகத்துக்கு அங்கே இடித்துரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆடைகள் மற்றும் குடைகள் வாங்க முயற்சி செய்தேன். ஆனால் எல்லாமே விற்றுத் தீர்ந்து விட்டிருந்தன. என்னுடைய நண்பர்கள் பலரும் நேரத்துக்கு வந்துவிட்டிருந்தார்கள். எல்லோருடைய முகங்களிலும் ஒரு ஓர்மம் வெளிப்பட்டாது. வழக்கமாக நண்பர்கள் மத்தியில் இருக்கும் இளகல் போக்கு அன்று தென்படவில்லை.

விழா மேடை நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. அறிவிப்பாளரின் அவ்வப்போதைய அறைகூவல்களுக்கு மக்களின் பதில் ஆரவாரமாக ஓங்கி ஒலித்தது ஒரு உணர்வுபூர்வமாக இருந்தது.

நிகழ்வுகளை முடித்துவிட்டு உறவினர் வீட்டில் தங்கிவிட்டு இன்று மாலை வீடு திரும்பினோம். மொத்தத்தில் உணர்வுகளால் நிறைந்த தமிழ் எழுச்சிக் கனல் அகழ்வு, இந்த டொரொண்டோ பொங்கு தமிழ் நிகழ்வு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாக்காரருக்கு நன்றி.

உலகில் ஈழத்தமிழரின் குரலை ஒலிக்கவைப்பதன் பெரும்பங்கு கனடாக்காரருக்குத்தான் இருக்கிறது. அடுத்ததாக லண்டன்காரர். ஏனென்றால் அங்குத்தான் இப்படியாகப் பெருந்தொகையில் திரளக்கூடிய மனிதவளமுண்டு. ஏனைய இடங்களில் இரண்டாயிரம், மூவாயிரம் பேர் திரள்வது உள்ளூர் மட்டத்திலும், சிலவேளை அந்தந்த நாட்டு உயர்மட்டங்களிலும் மட்டுமே சிறுதாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் கனடாவில் நடப்பது உலகம் முழுவதுக்குமான தாக்கம்.

கனடாவில் ஒருலட்சம் பேர் புலிகளின் பின்னால் என்பதை ஆதாரப்படுத்தி உலகில் எந்தமூலையிலும் நாம் கதைப்பதும், அதை மேற்கோளிட்டு ஒட்டுமொத்தப் புலம்பெயர்ந்தவரின் எண்ணமும் அரசியல் நிலைப்பாடும் அதுவே என்பதை உணர்த்துவதும் சாத்தியம்.

அனைத்து கனேடிய உறவுகளுக்கும் ஐசூர்யாவின் நன்றிகள் பல!!!

ஒயாமல் உழைப்போம் இலக்கு ஒன்றிற்க்காக!!!

ஏற்பாடுகளை திறம்படச்செய்த அமைப்பாளர்களுக்கும் கலந்து கொண்ட நம்மவர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்..

விதுசா என்ற உறவு தெரிவித்தது போன்று கனடாவில் யாரும் கைது செய்யப்படவில்லை.

பொங்கு தமிழ் நிகழ்வில் என்னதான் தமிழர்கள் திரண்டாலும் தமிழ் ஊடகங்கள் தவிர்ந்த கனேடிய ஊடகங்களில் தமிழர் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை அள்ள வீசும் நசனல் போஸ்ட் ஏட்டைத் தவிர வேறெந்த ஊடககும் இதனைக் கண்டு கொள்ளவில்லை. (எமக்கெதிரான நச்சுக்கருத்துக்களைக் கூறினாலும் பொங்கு தமிழ் பற்றிய செய்தியைச் வெளியிட்டமைக்காக இந்த ஊடகத்திற்கு நன்றி தெரிவிக்கவேண்டும்.). இப்படியான நிகழ்வுகள் நடைபெறும்போது கனேடிய ஊடகங்களிற்கு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கவேண்டும். ஆனால் மக்களைத் திரட்டுவதில் கவனமெடுக்கும் ஏற்பாட்டாளர்கள் இதனைக் கவனத்தில் கொள்வதில்லை. என்னதான் மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டாலும் இது குறித்து ஊடகஙகள் செய்திகளை வெளியிடாவிட்டால் போராட்டங்களை நடத்தி என்ன பயனை அடையப் போகிறோம்? எங்கள் போராட்டங்கள் எங்களின் ஊடகங்களில் மாத்திரம் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது மாதிரி அதற்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கிறது.

விதுசா என்ற உறவு தெரிவித்தது போன்று கனடாவில் யாரும் கைது செய்யப்படவில்லை.

பொங்கு தமிழ் நிகழ்வில் என்னதான் தமிழர்கள் திரண்டாலும் தமிழ் ஊடகங்கள் தவிர்ந்த கனேடிய ஊடகங்களில் தமிழர் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை அள்ள வீசும் நசனல் போஸ்ட் ஏட்டைத் தவிர வேறெந்த ஊடககும் இதனைக் கண்டு கொள்ளவில்லை. (எமக்கெதிரான நச்சுக்கருத்துக்களைக் கூறினாலும் பொங்கு தமிழ் பற்றிய செய்தியைச் வெளியிட்டமைக்காக இந்த ஊடகத்திற்கு நன்றி தெரிவிக்கவேண்டும்.). இப்படியான நிகழ்வுகள் நடைபெறும்போது கனேடிய ஊடகங்களிற்கு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கவேண்டும். ஆனால் மக்களைத் திரட்டுவதில் கவனமெடுக்கும் ஏற்பாட்டாளர்கள் இதனைக் கவனத்தில் கொள்வதில்லை. என்னதான் மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டாலும் இது குறித்து ஊடகஙகள் செய்திகளை வெளியிடாவிட்டால் போராட்டங்களை நடத்தி என்ன பயனை அடையப் போகிறோம்? எங்கள் போராட்டங்கள் எங்களின் ஊடகங்களில் மாத்திரம் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது மாதிரி அதற்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கிறது.

இது எங்கும் இருக்கும் பிரச்சினை மின்னல்

Canadian Tamils hold rally, condemn Ottawa's ban

Waving the flag of the Tamil Tigers guerrillas, thousands of Canadian Tamils gathered this weekend for their first rally since the federal government shocked the community by outlawing a Toronto-based Tamil non-profit group under the Anti-Terrorism Act.

A statement issued by the event's organizers condemned the government for last month's decision to ban the World Tamil Movement as a suspected financial front for the Tigers, and called on Canada to recognize guerrilla-held areas of northern Sri Lanka as an independent state, called Tamil Eelam.

"There is no other solution to this conflict," said Brian Senewiratne, a medical doctor from Australia who was the keynote speaker, addressing the large crowd at Downsview Park from a giant stage.

The Sri Lankan-born physician, who showed video clips of helicopter gunships firing rockets, called the Sri Lankan government a "murderous, barbaric regime" that was at war "against the Tamil people."

He said the Tamil Tigers, also known as the Liberation Tigers of Tamil Eelam, or LTTE, were a legitimate liberation movement. "There is a very clear distinction between terrorism and freedom fighters."

He urged the crowd to get more involved in the fight for Tamil independence.

"What I want to do is move you from watching things happen to making things happen." Canada's decision to ban the Tamil Tigers "has to be challenged," he said.

The rally was just the latest of many similar events that have taken place across Canada over the past decade but it came at a critical time: as the Tigers are apparently losing ground steadily on the battlefield and the Conservatives in Ottawa are taking a firm stand against Tamil Tigers activities in Canada.

Following a five-year RCMP investigation, Public Safety Minister Stockwell Day announced in June that the government had placed the World Tamil Movement, which had offices in Toronto and Montreal, on Canada's list of outlawed terrorist groups because of evidence it was financing the Tigers.

The location of the rally was not announced until late Friday afternoon. The Sri Lankan United National Association of Canada had written to police asking them to cancel the event's permit because the Tigers are an outlawed terrorist group under Canadian law.

Participants were bussed in from around the region. They ranged from young children to the elderly, and carried signs that read: "O Canada you have a responsibility," and "Don't label us as terrorists."

Organizer Thiru Thiruchelvam said the location was only announced at the last minute because the event kept growing and they had to find a venue to accommodate the expected crowds.

"What we want is peace," said Thiruchelvam, who told how his 19-year-old son was killed by Sri Lankan government forces. "We are asking the Canadian government to get involved."

Sri Lankan Consul General Bandula Jayasekara denied Senewiratne's claim that Sri Lanka was at war with the Tamil people.

"The LTTE has killed more Tamil leaders than anyone else," he said. "Unfortunately the LTTE, a ruthless terrorist organization, has brought its ruthless war to Canada."

canada.com

பாராட்டுக்கள் கனடா வாழ் உறவுகளே..யாழ் களத்திலிருந்து யார் போனிங்க?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Vancouver Sun, Ottawa Citizen, Regina Leader-Post போன்ற பத்திரிகைகளிலும் இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ள்து.

எல்லா ஊடகவியாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஏனோ தெரியவில்லை செய்தி வெளிவரவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா குறிப்பிட்ட "இளைமையான சிட்னி பொங்கு தமிழ்" போலவே இங்கும் தமிழ் இளையோரே அதிக அளவில் தொண்டுப்பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

எல்லா ஊடகவியாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஏனோ தெரியவில்லை செய்தி வெளிவரவில்லை.

நீங்களா அழைப்பு விடுத்தீர்கள்?

எந்தவொரு வெள்ளையின ஊடகரையும் நிகழ்வில் காணமுடியவில்லையே?

நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் எம்மவர்கள் கனேடிய அரசிற்கோ அல்லது கனேடிய மக்களிற்கோ இந்த நிகழ் தொடர்பான செய்திகள் என்றடைவதிலும் பார்க்க வன்னிக்கு செய்தி சென்றைடைய வேண்டும் என்பதில் மாத்திரம்தான் கவனமெடுக்கினம் எண்டது என்னாலை உணர முடிகிறது. புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் மீதான பற்றை நாங்கள் வன்னிக்குக் காட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அவர்களிற்கு அது சரியாகத் தெரியும்.

பொங்கு தமிழ் பேரெழுச்சி கொள்ள வேண்டுமென்பதற்காக வணிக நிறுவனங்களை மூடி வணிகர்கள் ஒத்துழைத்தார்கள். 75 ஆயிரம் பேர் தமது முக்கிய கடமைகளையோ அல்லது களியாட்டங்களையோ எல்லாம் உதறிவிட்டு நிகழ்வில் கலந்து கொண்டு தமது எழுச்சியை வெளிப்படுத்தினார்கள். ஆனால் கிடைத்த பயன் என்ன? நசனல் போஸ்ட் என்ற ஒரே ஒரு பத்திரிகையில் மட்டும் செய்தி. அவ்வளவே! (ராகவா நாசல்போஸ்டில் வந்த செய்திதான் கனடா.கொம் வன்கூவர் சண், ஒட்டாவா சிற்றிசன், ரெஜினா லீடர் போஸ்ட் ஆகியவற்றின் இணையத் தளங்களில் வந்துள்ளது. பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டதா என்று தெரியாது)

கனடாவில் 2004ல் நடந்த பொங்கு தமிழ் ரொறன்ரோவின் மையத்தில் நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் வெள்ளத்தைக் கண்டு முக்கிய செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்கள் பலர் வந்து ஒளிப்படங்களை காணொளியை எடுத்துச் சென்றனர். ஒரு சில ஊடகஙகள் அதனைச் செய்தியாக வெளியிட்டன. அதன்பின்னர் நடைபெற்ற எந்தவொரு எழுச்சி நிகழ்வு கனேடிய ஊடகங்களின் கண்களில் படுவதில்லை. ஏன் ஏன்?

இதைப்பற்றி நாங்கள் கவலைப் படுவதில்லை. நாங்கள் படும் கவலை ஒன்றுதான் நிகழ்வை வெற்றிகரமாக பெருந்திரளான மக்களைத் திரட்டி நிகழ்வை எழுச்சியாக நடத்திவிட்டோம் என்று படங்களுடன் புதினம் பதிவு சங்கதி தமிழ்நெட்டில் செய்தியைப் போட்டு வன்னியில் உள்ளவர்களிற்கு சொல்லுவது மட்டும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா அரசாலும், இலங்கை தூதரகத்தால் கனடிய அரசுக்கு கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே பொங்குதமிழுக்கு முதல் நாளே நிகழ்ச்சி நடப்பதற்கான இடம் அறிவிக்கப்பட்டது. அதுக்குள்ளே உங்களுக்கு எல்லா பத்திரிகைக்கும் . ஊடகங்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்பது சுத்த அறிவீனம். யதார்த்த நிலையை உணரவில்லை என்று தான் கொள்ள முடியும்.

வாழ்த்துக்கள் கனடிய மக்களுக்கு............

கனடா அரசாலும், இலங்கை தூதரகத்தால் கனடிய அரசுக்கு கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே பொங்குதமிழுக்கு முதல் நாளே நிகழ்ச்சி நடப்பதற்கான இடம் அறிவிக்கப்பட்டது. அதுக்குள்ளே உங்களுக்கு எல்லா பத்திரிகைக்கும் . ஊடகங்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்பது சுத்த அறிவீனம். யதார்த்த நிலையை உணரவில்லை என்று தான் கொள்ள முடியும்.

அண்ணை என்ர அறிவீனம், யாதார்தத்தைப் புரிந்து கொள்ளாதநிலை ஒரு புறமிருக்கட்டும் நாங்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். கனேடிய அரசு மற்றும் கனேடிய மக்கள் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கவே இந்தப் போராட்டங்கள். வெறுமனே தமிழ் மக்கள் கூடியிருந்து குண்டு சட்டியில் குதிரை ஓட்டிவிட்டுப்போகவல்ல. வீதியால் செல்பவர்களிற்கு தெரியாத இடத்தில் ஒரு திறந்த வெளியில் நிகழ்வு நடைபெறுகிறது. இதற்கு கனேடிய அரச பிரதிநிதிகள் யாரும் வரவில்லை. வேற்றின ஊடகர்கள் எவரும் வரவில்லை. பிறகு எப்படி உங்களின எழுச்சியை கனேடிய அரசிற்கோ கனேடிய மக்ளிற்கோ காட்டப்போகிறீர்கள்?

75 ஆயிரம் கனேடியத் தமிழர்களும் ஒன்று திரண்டது புதினம் பதிவு சங்கதியில் செய்தி வரவேண்டுமென்பதற்காகவா? தங்களின் வணிகத்திற்கு உச்ச வருவாய் வரும் நேரத்தில் தமது வணிக நிறுவனங்களை மூடி தமிழ் வணிகர்களே ஒத்துழைத்தார்களே! எல்லாம் தமிழ் ஊடகங்களில் மாத்திரம் செய்தி வருவதற்கா?

விடுதலைப் புலிகள் மீது தடை அதனைவிட கொடுமையாக கனேடிய தமிழரின் அமைப்பான உலகத் தமிழர் மீது தடை. இந்தத் தடைகளிற்கு எதிராக உங்களின் குரலை கனேடிய அரசிற்கு எப்படித் தெரியப்படுத்தப் போகிறீர்கள். தமிழ் இணையத் தளங்களில் படங்களுடன் செய்தி போட்டா? வெட்டவெளியில் நின்று கத்தும் போது அருகில் உள்ள வீதியால் செல்பவனுக்கே கேட்காதபோது எப்படி ஒட்டாவாவில் உள்ள அரசிற்குக் கேட்கப்போகிறது??? இதைப்பற்றியெல்லாம் சிந்திக்கமாட்டீர்களா?

பொங்குதமிழ் நடக்கப்போகிறது என்று ஒரு வாரத்திற்கும் மேலாக அறிவிப்புக்கள். இரண்டு மூன்று நாட்களிற்கு முன்போ சனிக்கிழமைதான் நிகழ்வு நடைபெறும் என்றும் அறிவிப்பு. இந்த அறிவிப்புக்களைத் தொடர்ந்து ஊடகர்களை தொடர்பு கொண்டு சனிக்கிழமை போராட்டம் நடைபெறப்போகிறது இடத்தை வெள்ளிக்கிழமை அறியத்தருகிறோம் என்று அழைப்பு விடுத்தால் என்ன? எங்களிற்கு வேண்டியது அதுவல்லவே செய்தி வன்னியைச் சென்றடைந்தால் போதும் என்பதே!

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் அண்ணா,

உங்கள் ஆதங்கம் சரியானதே ஆனால் நீங்கள் மறுபக்கத்தையும் பார்க்கவேண்டும்.

1) பத்திரிகைகளில் அதிகம் செய்தி வராததினால், ஏற்பாட்டாளர்கள் அதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லையென்று எப்படி முடிவுக்கு வந்தீர்களோ தெரியாது. ஒரு பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது அது ஒன்றே பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு அனுப்பப் பட்டதை எடுத்துக்காட்டுகிறது. வேறு பத்திரிகையாளர்களும் வந்திருக்கலாம் ஆனால் பத்திரிகையில் செய்தி வராததற்கு ஏற்பாட்டாளர்கள் என்ன செய்ய முடியும். மேற்குலகில் பத்திரிகையில் செய்தி வரப்பண்ணவும் பணம் வேண்டும். ஏற்பாட்டாளர்கள் நாட்டைப் பார்ப்பதா அல்லது பணத்தை செலவழித்து இதைப்பார்ப்பதா?

2) கனேடியப் பொதுமக்கள் கேட்கக்கூடியதாக, பார்க்கக்கூடியதாக ஒரு லட்சம் பேர் முக்கியமான சந்திகளில் கூடமுடியுமா? அதற்கான அனுமதி மீண்டும் கிடைக்கும் என நினைக்கிறீர்களா?

3) ஒரு லட்சம் பேர் ஒன்று கூடிய ஒரு அரசியல் நிகழ்வு ஒட்டாவாவிற்கு கேட்காது என நினைக்கிறீர்களா? ஏற்பாட்டாளர்களைக் கேட்டால் சொல்வார்கள் எத்தனை கனேடிய அரச உளவாளிகள் செய்தி சேகரிக்க வந்தார்களென்று ஏனெனில் சிலபேர் தங்கள் அடையாள அட்டையைக் காட்டியே மேடைக்குச் சென்றிருக்கிறார்கள்.

4) தமிழ் இணையத்தளங்களை ஏன் வித்தியாசமாகப் பார்க்கிறீர்கள். அவைகள் செய்தி வெளியிடுவதில் சில தவறுகள் இருக்கலாம் அதற்காக வெறுக்காதீர்கள். அவர்கள் நடந்த சம்பவத்தை செய்தியாக்கியுள்ளார்கள் அதற்காக ஏற்பாட்டாளர்கள் என்ன செய்ய முடியும்.

5) எதற்காக புலிகளின் குரலில் இதை நேரடி ஒலிபரப்புச் செய்கிறார்களென நினைக்கிறீர்கள்? எப்படி ஒவ்வொரு கள வெற்றிச் செய்திகளும் எங்களை உற்சாகமூட்டுகிறதோ அதே மாதிரி இவ்வாறான நிகழ்சிகள் நாட்டிலுள்ளவர்களுக்கு நிச்சயம் ஒரு உந்து சக்தியாக இருக்கும். நிட்சயம் குண்டு சட்டியில் குதிரை ஓட்டிவிட்டுப்போகிற நிகழ்சியல்ல இது.

மீண்டும் சொல்கிறேன் உங்கள் ஆதங்கம் சரியானதே அதற்காக எற்பாட்டாளர்களை குறை சொல்லும் முறை தவறானது. உலகத்தமிழர் இயக்கத்தை தடை செய்து அதன் தொண்டர்களுக்கு மன உளச்சல்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் யாரோ சிலபேர் முன்வந்து இப்படி ஒரு எற்பாட்டைச் செய்து இவ்வளவு மக்களை ஒன்று திரட்டியுள்ளார்கள். ஆகவே அவர்களுக்கான பாராட்டுடன் உங்கள் குறையை முன் வையுங்கள்.

மின்னல், இங்குள்ள அரசியல் நிலைமைகளைச் சரியாக அறிந்துபின்புதான் கருத்துக் கூறவேண்டும். பிரபா கூறியதுபோல், நேஷனல் போஸ்டிற்குத் தெரிந்த விடயம் மற்ற ஊடகங்களுக்கு எப்படித் தெரியாமல் போயிருக்கும்? தமிழர்களின் அரசியல் நிகழ்வுகளுக்கு, மண்டபங்கள், திடல்கள் போன்றவற்றை வழங்கக்கூடாது என இங்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் கடந்த சில வருடங்களாக மாவீரர்நாள் நிகழ்வுகள் புதிய புதிய இடங்களில்தான் நடத்தப்பட்டு வருகிறது. நாமும் ஒவ்வொரு வருடமும் புதிய இடமாகக் கண்டுபிடித்துத்தான் மாவீரர் நாளைக் கொண்டாடி வருகிறோம். கடந்த சில வருடங்களாக மாவீரர் தினம் நடக்கும் இடங்களும் முதல்நாள் மாலை ஆறு மணிக்குப் பின்புதான் அறிவிப்பார்கள். காரணம், அதன்பின், மண்டப முகாமையாளர்கள் இருக்கமாட்டார்கள். இதனைத் தடுத்து நிறுத்துபவர்களும், தடுப்பதற்கு அனுமதி பெற முடியாது என்பதால். அதைப்போலத்தான் இந்நிகழ்விற்கும் நடக்கப்போகும் இடத்தை முதலே அறிவித்தால் அதனைத் தடுத்துவிடுவார்கள் என்பதால்தான் இடத்தை வெள்ளி மாலைவரை வெளியிடாமல் வைத்திருந்தார்கள். இதில் சம்பந்தப்பட்ட ஓரிருவரைத் தவிர வேறெவருக்கும் நடக்கப்போகும் இடம் தெரிவதில்லை. அதேபோல்தான் கனேடிய ஊடகங்களுக்கும் பொங்குதமிழ் நடக்கப்போவதாக வேளைக்கே அறிவித்தால், அவர்கள் உடனே சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவித்துவிடுவார்கள். இது அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். அதுமட்டுமின்றி, இங்கு குறுகியகால அவகாசத்தில் அரசியல்வாதிகளை அழைக்கமுடியாது. ஒரு சிறிய நிகழ்விற்கே ஒரு மாதத்திற்கு முன்னர் அழைத்தால்தான் அவர்கள் வருவார்கள். இப்போதிருக்கும் அரசியல் சூழ்நிலையில் நாம் அவர்களை எதிர்பார்க்கவும் முடியாது. எமது தேசியக்கொடியைக்கூட மிகவும் இரகசியமாகச் செய்யவேண்டிய நிலைமையில் கனடியத் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

எமக்கென்று ஒரு ஊடகப்பிரிவே உண்டு. எல்லா ஊடகங்களுக்கும் இதனைப் பற்றிய விபரங்கள் அனுப்பப்பட்டன. மற்றைய ஊடகங்கள் இந்நிகழ்வை சம்பந்தப்பட்டவர்கள் தடுத்து நிறுத்திவிடுவார்களென நினைத்திருக்கலாம். நேஷனல் போஸ்ட் நிருபர்கள், தமக்கு சாதகமாக ஏதாவது கிடைக்குமென நினைத்து வந்திருப்பார்கள். ஊடகங்கள் மூலம்தான் கனேடிய அரசுக்குச் செய்திகள் போகின்றது என்ற உங்களின் அறியாமையை நாம் என்ன செய்வது?

எத்தனை தடைகள் வந்தாலும் தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்போம் என நாம் கனேடிய அரசுக்குக் காட்டவேண்டும் என்பதே எமது நோக்கம். அதனை நாம் திறம்படச் செய்து முடித்துவிட்டோம். இதைவிட எமக்கு வேறெதுவும் தேவையில்லை. நாம் எதிர்பார்த்ததைவிட வெற்றிகரமாக இது நடந்து முடிந்திருக்கிறது.

தயவுசெய்து, இவ்வாறான உங்கள் கருத்துக்களால் செயற்பாட்டாளர்களைத் தளர்வடைய வைக்காதீர்கள். இரவிரவாகக் கண்முழித்து, அனைத்தையும் திறம்படச் செய்துமுடிக்க அவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள் என சம்பந்தப்பட்டவர்களுக்குத்த

Edited by Thamilachchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பொங்குதமிழ் ஈழத்தில் நடக்க வேண்டும் என்பதே அனைவரினதும் அவா. இருப்பினும் வேறு ஏதும் கனடா அரசிற்குக் காட்ட வேண்டிய தேவையிருக்கும் பட்சத்தில் செய்யப்படும், எழுச்சி பற்றிய செய்திகளைக் கிடைக்க நண்பர் மின்னல் அவர்கள் அனைத்துப் பத்திரிகைகள், அரசு அமைப்புக்களுக்கான அறிவிப்பினை வழங்கும் பொறுப்பைக் கொடு;ககின்றோம்.

மேல ஆக்கள் சொன்னமாதிரி கனேடிய ஊடகங்களுக்கு உதுகள் தெரிஞ்சு இருக்காது எண்டு சொல்வதற்கு இல்லை. பெருந்தெரு 401, 404, 427 இல யாராவது குசுவிட்டாலே பரபரப்பாக சத்தம் போடுற கனேடிய ஊடகங்களுக்கு Downsview Park இல 75,000 சனம் கூடின விசயம் தெரியாது எண்டால் அது நகைப்புக்கு இடமானது. தவிர, நான் அவதானித்த அளவில் ஒரு Single Police Car ஐ கூட எனது கண்களால் காண முடியவில்லை. இது எல்லாம் எதனை உணர்த்துகின்றது. எல்லாரும் அமைதியாக இருந்து கனேடிய தமிழரின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிச்சு கொண்டு இருக்கின்றார்கள் என்பதை தெரிவிக்கின்றது.

மற்றது, பேராசிரியர் செனவிரத்தின சொன்னமாதிரி நாம அவதானிப்பாளர்கள் எண்டுற நிலையில இருந்து செயற்பாட்டாளர்கள் எண்டுற நிலைக்கு மாறவேணும். அவர் சொன்னமாதிரி ஒரு தமிழன் 10 வெள்ளைக்காரனுக்கு எமது பிரச்சனையை சொன்னால் எமக்கு பின்னால் ஆதரவு தருவதற்கு 10 மில்லியன் வெள்ளைக்காரர்களை நாம் வெளிநாட்டில் திரட்ட முடியும்.

அதாவது நாம செய்யக்கூடியது என்ன எண்டால் எம்மாலான - எமது வசதிக்கு ஏற்றபடி பரப்புரைகளை செய்யவேண்டும். மற்றவன் செய்வான் இல்லாட்டிக்கு ஏற்பாட்டாளர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்காமல் நாம அதை செய்யவேண்டும்.

எமது வெள்ளைநண்பர்களிற்கு Social community NetWorks - such as Facebook, msn, my Space, Youtube... ஊடாக பரப்புரை செய்யலாம். மேலும் நீங்களே ஒரு ஊடகவியலாளராக செயற்படலாம். CITY TV, CNN போன்றவற்றுக்கு நாங்கள் Video Clpis ஐ அனுப்பி வைக்கலாம். பல மேலைத்தேய ஊடகங்கள் இப்படியான செய்திகள் தமக்கு அனுப்பப்படுவதை ஊக்குவிக்கின்றன. இதற்கான இணையத்தில சிறப்பு பக்கங்கள உருவாக்கி இருக்கின்றன.

என்னட்ட நல்ல வீடியோ கமரா இல்ல. இல்லாட்டிக்கு இன்னும் தெளிவான காணொளிய யூரியூப்பில போட்டு இருக்கலாம். விரைவில ஒண்ட வாங்கிப்போட்டு, இனிவரும் காலங்களில இப்படியான நிகழ்ச்சிகள் வரும்போது தெளிவான காணொளிகள எடுத்து பரப்புரை செய்யலாம் எண்டு நினைக்கிறன். நீங்களும் கையில கமரா வச்சு இருந்தால் எங்கையாவது போகேக்க வரேக்க இப்படியான முக்கிய சம்பவங்கள் நடந்தால் அதப்படம் பிடிச்சுப்போட்டு மற்றவர்களுக்கு அதை பரப்பலாம்.

இதற்கு என்று முழுநேரமாக மினக்கட தேவை இல்லை. நேரம், சந்தர்ப்பம் கிடைக்கும்போது நாம இதச்செய்தாலே பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

மற்றது, நான் ரேடியோ கேட்பது இல்லை. மின்னல் தந்த தகவல் மூலமே நான் பொங்குதமிழுக்கு போனேன். ஆனா நீங்கள் தந்த தகவலில ஒரு சின்ன பிழையா போச்சிது. Downsview Subway இருந்து Downsview Park க்கு ஐஞ்சு நிமிச நடையில போகலாம் எண்டு எழுதி இருந்தீங்கள். நாமளும் மோட்டுத்தனமா நடக்க துவங்கி உண்மையில அது அஞ்சு நிமிசம் இல்ல. 15, 20 நிமிச நடை. வயசு போன சனம் பாவம். ரேடியோவிலயும் சரியா சொல்ல இல்ல போல. சப்வேயிலயே இறங்கின உடன பஸ் பிடிச்சு ஐஞ்சு நிமிசத்தில Downsview Park க்கு போய் இறங்கி இருக்கலாம். பிழையான தகவலால சனம் தேவையில்லாமல் நடக்க துவங்கி கஸ்டப்பட்டுதுகள்.

கடைசியாக இந்த நிகழ்வுக்காக உழைச்ச அனைத்து இளைஞர்களுக்கும் பாராட்டு தெரிவிக்க வேணும். வாகனங்களை கட்டுப்படுத்துதல் துவக்கம், மேடை வரை எல்லாம் அருமையாக செய்து இருந்தார்கள்.

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

நான் வசிக்கும் ஊரில் தமிழ் வானொலிச் சேவை இல்லை. என்னிடம் TVஈ தொலைக்காட்சியும் இல்லை. குழப்பத்துடன் படுக்கைக்குச் சென்றுவிட்டேன்.

என்ன டங்குவார் இணையத்தில்த்தான் எல்லாக் கனேடிய வானொலிகளையும் கேட்கலாமே.

நீங்கள் ஒரு நாளும் கேட்கவில்லையா? ஆச்சரியமாக உள்ளது.

உதாரணத்துக்கு இதை கேட்டுப்பாருங்கள்.

http://www.ctr24.com/common/index.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.