Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பி.கே.கே. அமைப்பு மூலம் ஆயுதங்கள் - துருக்கிய இராணுவத் தளபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விழுந்து கிடந்ததாகக் காணப்பட்ட பி.கே.கே. எவ்வாறு மீள எழுந்தது...

மறுபக்கம்

//தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பலவேறு துரோகங்களால் இழப்புகளைச்

சந்தித்துள்ளது. அவற்றை தண்டிப்பதை விட முக்கியமானது அவ்வாறான தவறுகள் தொடராமல்

தடுப்பது. அது வெகுசன அரசியலாலேயே இயலுமானது. அதே அளவு முக்கியமானது விடுதலைக்கான

போராட்டங்கள் அனைத்திற்கும் உள்ள பொது எதிரிகளை தேசிய மட்டத்திலும் சர்வதேச

மட்டத்திலும் மக்களுக்கு அடையாளங்காட்டுவது. எதிரியைத் தனிமைப்படுத்துவது என்பது

ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து செய்கிற காரியமல்ல. எதிர்த்து நின்றே அதைச் செய்ய

முடியும். //

பல வேளைகளிற் போர்கள் ஏன் தொடக்கப்பட்டன என்பது பற்றிய நினைவே அழிந்து போய்ப் போர்கள் தொடர்கின்றன. போருக்கு கற்பிக்கப்படுகிற காரணங்களும் வேறுபடுகின்றன. அமெரிக்கா ஈராக்கில் தொடக்கிய போர் ஈராக்கில் உள்ள பேரழிவுப் போர்க்கலங்களை இல்லாதொழிப்பதாகத் தொடங்கி ஈராக்கில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக என்று மாறி, இன்று பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பேரில் தொடருகிறது. அமெரிக்காவின் ஆள்வலிமையும் ஆயுதவலிமையும் போரை வெல்ல உதவவில்லை என்றால் அதற்கான காரணம் ஈராக்கோ சிரியாவோ அல்ல.

இரண்டு அடிப்படையான காரணங்களே முக்கியமானவை. அமெரிக்கப் படைகளின் இருப்பை ஈராக்கின் மக்கள் வெறுக்கின்றனர். விடுதலைப் போரை மக்கள் ஆதரிக்கின்றனர். அமெரிக்கா இதுவரை ஈராக்கின் மக்களைப் பிளவுபடுத்தி ஒருவரோடு ஒருவர் மோதவிடுவதிலும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு இடமே இல்லாத ஒரு மண்ணில் அவர்களுக்கு ஒரு இடத்தை உருவாக்கியதிலும் ஒரு வகையான வெற்றியைப் பெற்றிருக்கிறது. இவற்றைக் கொண்டு விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தவும் ஆக்கிரமிப்பை நீடிக்க ஒரு நியாயத்தைக் காட்டவும் இயலுமாக இருந்தது. ஆனாலும், அமெரிக்கா உருவாக்கிய பூதங்கள் அமெரிக்காவுக்குப் புதிய தலைவலிகளை ஏற்படுத்தியுள்ளன. இது எல்லா ஆதிக்கவாதிகளுக்கும் நடப்பது.

இன்று அமெரிக்காவுக்கு ஆதரவாக ஒரு சமூகம் ஈராக்கில் இருக்கிறதென்றால் அது ஈராக்கின் குர்திய சமூகம் தான். அமெரிக்கா 16 ஆண்டுகள் முன்னர் நடத்திய ஆக்கிரமிப்பை அடுத்து ஈராக்கின் வடக்கிலும் தெற்கிலும் ஈராக்கின் அரசாங்கத்தின் படைகளின் கட்டுப்பாடு இல்லாது போயிற்று. இதனைப் பயன்படுத்திக் குர்திய சமூகம் ஈராக்கின் வட பகுதியில் ஒருவாறான சுயாதிபத்தியத்தை அமெரிக்க உதவியுடன் மெல்லமெல்ல உருவாக்கிக் கொண்டது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது அமெரிக்காவுக்கு முழு ஆதரவாகக் குர்திய தேசிய இனத்தின் தலைமைகள் செயற்பட்டன.

//விழுந்து கிடந்ததாகக் காணப்பட்ட பி.கே.கே. எவ்வாறு மீள எழுந்தது என்று நாம்

சிந்திக்க வேண்டும். பி.கே.கே.நண்பனையும் எதிரியையும் வேறுபடுத்திக் காணுகிறது.

மாற்றுக் கருத்துடைய, குர்திய விடுதலைப் போராட்டத்தை ஆயுதமேந்தி முன்னெடுப்பதை

நிராகரிக்கிற, குர்தியர்களைக் கூட அது எதிரிகளாகக் காணவில்லை. அதேவேளை,

துருக்கியப்படையினருடன் குர்தியர்களின் அரசியல் நிறுவனம் எதுவும் ஒத்துழைக்காத

விதமாக அரசியற்பணிகளை வெகுசனத் தளத்தில் முன்னெடுக்கிறது. தனது தவறுகளிலிருந்து

கற்கிறது. துரோகிகளைத் தண்டிப்பதைவிடத் தனிமைப்படுத்துவதிற் கவனங்காட்டுகிறது.

//

எனவே, அவர்களை மகிழ்விக்கிற விதமாகவும் தனக்குள் ஒரே ஆதரவுத் தளத்தை வலுப்படுத்து முகமாகவும் அமெரிக்கா ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தில் குர்தியத் தலைமைகட்கு ஒரு கணிசமான பங்கையும் குர்தியப் பிரதேசங்களில் ஏறத்தாழ ஒரு சுயாட்சியும் உருவாக உதவியது.

ஈராக்கினுள் நுழைய இருந்த அடிப்படையானதும் அறிவிக்கப்படாததுமான அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறவில்லை. ஈராக்கின் எண்ணெய் வளத்தைத் தமதாக்கிக் கொள்ளக் காத்திருந்த அமெரிக்க எண்ணெய்க் கம்பனிகள் இப்போது குர்தியப் பகுதியிலுள்ள எண்ணெயைத் தமதாக்கிக் கொள்வதில் கவனங்காட்டின. அந்த நோக்குடன் செய்யப்பட்ட ஒரு உடன்படிக்கை இன்று ஈராக்கிய ஆட்சியாளர்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.

மறுபுறம் துருக்கியின் குர்திய சமூகத்தின் விடுதலை இயக்கமான குர்திய தொழிலாளர் கட்சியின் (பி.கே.கே.) தலைவரான ஒச்சலான் சிறைப்பிடிக்கப்பட்டதையடுத்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குகதாசன்,

நான் நெடுங்காலமாக பின்பற்றிவரும் ஒரு போராட்டம்தான் ஆப்கானிஸ்த்தன் மக்களின் சுதந்திரத்துக்கான போர்.ரஷ்ஷிய் ஆக்கிரமிப்பை எதிர்த்து அவர்கள் நடத்திய அந்தப் போராட்டம் பற்றி நீங்கள் கேட்டதில் எனக்கு ரெட்டை மகிழ்ச்சியே. இதோ சில விபரங்கள்.

இன்றுள்ள அகமட் கர்ஸாயின் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகள் தான் முன்பிருந்த விடுதலைப் போராளிகளான முஜாகிதீன்கள். இவர்கள் முன்னர் அகமட் ஷா மசூத், குல்புடீன் கெக்மட்யார், இஸ்மாயில்கான், அப்துள் ரபாணி, அப்துள் ரஷீத் தோஸ்த்தம்( இவர் முன்னாள் அதிபர் நஜிபுள்ளாவின் ராணுவத்தின் பகுதித் தளபதியாக இருந்து பின்னர் அரசு கவிழும்போது போராளிகளுடன் இணைந்து கொண்டவர்) போன்ற முஜாகிதீன் தளபதிகளின் கீழ் போராடியவர்கள்.

பின்னர் ரஷ்ஷியா தனது ஆக்கிரமிப்பு ராணுவத்தை 1989 இல் திருப்பி அழைத்தபோது அதுவரை ரஷ்ஷியாவின் பாதுகாப்பில் இருந்த நஜிபுள்ளாவின் பொம்மை அரசு ஆட்டங்கண்டு போனது. ரஷ்ஷியப்படைகளின் வெளியேற்றத்தோடு முஜாகிதீன்கள் ஒரு சில மாதங்களிலேயே தலைநகர் காபூலைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்கள். அதன் பின்னர் யார் ஜனாதிபதி, யார் பிரதமர் என்ற போட்டியில் மீண்டும் தமக்குள் பிரிந்து அடிபட்டார்கள். தலைநகர் ஜனாதிபதியிடமும்(ரபானி), வெளி நகர்கள் பிரதமரிடமும்(குல்புடீன் கெக்மட்ட்யார்) வீழ்ந்தன.

இந்த குழுமோதல்கள் அயல் நாடான பாக்கிஸ்த்தானுக்குள் அகதிகள் பிரச்சனையை ஏற்படுத்தியது.அதுவரை முஜாகிதீன்களுக்கு அமெரிகாவின் உதவிகளை எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்த பாக்கிஸ்த்தான் ஒருகட்டத்தில் முஜாகித்தீகளை ஒழித்துக்கட்ட நினைத்தது. தனது நோக்கத்துக்காக பாக்கிஸ்த்தானில் அகதிகளாயிருந்த ஆப்கானிய இளைஞ்சர்களை இஸ்லாமிய அடிப்படைவாதப் பொறிக்குள் வீழ்த்தி அவர்கள் மூல ஒரு பெரிய அழித்தொழிப்புப் போரை ஆப்கானிஸ்த்தானில் நடத்தத் திட்டமிட்டது.

பாக்கிஸ்த்தனிய ராணுவத்தின் படைப்பலத்துடன் ஆப்கானிஸ்த்தானுக்குள் புகுந்த இந்தத் தலிபான்கள் போகுமிடமெல்லாம் தம்மை எதிர்த்தவர்களை அழித்துக்கொண்டே சென்றனர். இஸ்லாமிய அடிப்படைவாதச் சட்டத்தை துப்பாக்கி முனையில் மக்களிடையே புகுத்தினர். முன்பு உலகில் கேள்விப்படாதளவிற்கு பெண்களுக்கெதிரான வன்முறைகளும், மனித உரிமை மீறல்களும் இந்தத் தலிபான்களால் நிகழ்த்தப்பட்டன. இதில் பெண்களுக்கு படிப்புத் தேவையில்லை, அவர்களுக்கு நோய் வந்தால் எவரும் மருத்துவம் பார்க்கக் கூடாது, பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது...போன்றவை மிகவும் பிரபலம்.

ஆனைப் பலத்துடன் அசுர வேகத்தில் முன்னேறி வந்துகொண்டிருந்த தலிபான்களை ஏற்கனவே தமக்குள் அடிபட்டு பலமிழந்து போயிருந்த முஜாகிதீன்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக நகரங்களும், மாவட்டங்களும் தலிபான்களிடம் விழ முஜாகிதீன்கள் நாட்டின் வடக்கு மூலைக்குள் ஒடுக்கப்பட்டார்கள். வடக்கில் ஒடுக்கப்பட்ட சில முஜாகிதீன் தளபதிகள் தமக்குள் "வடக்கு முன்னணி" என்ற ஒரு மரபு வழி ராணுவத்தை உருவாக்கி முன்னேறிவந்த தலிபான்களை எதிர்க்கத் தொடங்கினார்கள். இதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றார்கள்.

ஒரு கட்டத்தில் நாட்டின் 85 வீதம் தலிபான்களின் கைகளிலும் மீதி வடக்கு முன்னணியின் கைகளிலும் இருந்தது.

இஸ்லாமிய அடிப்படைவாத ராணுவமான தலிபான் அதே நோக்கத்தைக் கொண்ட அல் கய்டாவை தனது நண்பனாக்கிக் கொண்டது. அதனால் ஒசாமா பின்லாடன் ஆப்கானிஸ்த்தானுக்குள் காலூன்ற தலிபான் வழிசமைத்துக் கொடுத்தது.(ஒசாமா ஏற்கனவே முஜாகிதீன்களுடன் இணைந்து ரஷ்ஷியாவுக்கெதிராகப் போரிட்ட சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி).

இஸ்லாமிய அடிப்படைவாதத் தலிபான்களுக்கும், அதனை எதிர்த்த வடக்கு முன்னணிக்கு இடையில் நடந்த போரில் முஜாகிதீன்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலைவரான ஜெனரல் அகமத் ஷா மசூத் தலிபான் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து அதுவரை அமெரிக்காவில் வாழ்ந்து வந்த இன்றைய ஆப்கானிய ஜனாதிபதி அரசுத் தலைவரானார்.

ஒருகாலத்தில் ரஷ்ஷியப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த வீரம் மிக்க முஜாகிதீன்கள் வல்லரசுகளின் பலப் பரீட்சியில் அகப்பட்டு இன்று அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பில் ஆப்கானிஸ்த்தானில் பொம்மைகளாக இயங்கி வருவது வருத்தமளிக்கிறது.

தமக்குள் அடிபட்டு அழிந்துபோன முஜாகிதீன்களின் சரித்திரம் எமக்கு நல்ல பாடம். தமது சொந்த மக்களில் தங்கியிராமல், அமெரிக்கா, ரஷ்ஷியா, ஈரான், சவுதி அரேபியா என்று குழுவுக்கு ஒரு நாடு என்ற ரீதியில் ஆயுதமும், பணமும் வந்து குவிந்து கொண்டதால் தமக்குள் அடிபட்டே அழிந்தும் போனார்கள். ஆனால் ரஷ்ஷிய ஆக்கிரமிப்பை எதிர்த்து அந்த மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி. லட்சக்கணக்கில் மக்கள் செத்து மடிந்தபோதும் அவர்கள் பாரிய ரஷ்ஷிய ராணுவத்தை புற முதுகிடச் செய்தார்கள்.

வல்லரசுகளால் பாவிக்கப்படும் போராட்டங்களுக்கு இறுதியில் என்ன கிடைக்கும் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு !

நன்றி

நன்றி

நன்றி

ஙரழவந யெஅநஸ்ரீ'ரெயெஎடையn' னயவநஸ்ரீ'துரட 11 2008இ 03:53 Pஆ' pழளவஸ்ரீ'426925'ஸ

விழுந்து கிடந்ததாகக் காணப்பட்ட பி.கே.கே. எவ்வாறு மீள எழுந்தது...

நன்றி

நன்றி

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுள்ள அகமட் கர்ஸாயின் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகள் தான் முன்பிருந்த விடுதலைப் போராளிகளான முஜாகிதீன்கள். இவர்கள் முன்னர் அகமட் ஷா மசூத்இ குல்புடீன் கெக்மட்யார்இ இஸ்மாயில்கான்இ அப்துள் ரபாணிஇ அப்துள் ரஷீத் தோஸ்த்தம்( இவர் முன்னாள் அதிபர் நஜிபுள்ளாவின் ராணுவத்தின் பகுதித் தளபதியாக இருந்து பின்னர் அரசு கவிழும்போது போராளிகளுடன் இணைந்து கொண்டவர்) போன்ற முஜாகிதீன் தளபதிகளின் கீழ் போராடியவர்கள்.

நன்றி

இன்றுள்ள அகமட் கர்ஸாயின் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகள் தான் முன்பிருந்த விடுதலைப் போராளிகளான முஜாகிதீன்கள்

முக்கியமாக அகமட் அவர்களைப்பற்றி மேல் நாட்டு ஊடகள்களுக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டென்பதை நான் பார்த்தேன்

அதனால் இவர் மேலைநாட்டிலிருந்து கொண்டுவந்து இப்பதவியில் அமர்த்தப்பட்டிருக்கலாம் என்றே நினைத்திருந்தேன்

அவரும் ஒருபோராளி என்பதும் ஒற்றுமையின்மையாலும் சொந்தக்காலில் தங்கியிருக்காமையால் இப்படியானவர் என்பது

எனக்கும் என்தேசத்துக்கும் தேவையான தகவல்

தங்களுக்கும் திரு. னுலாவிழான் அவர்கட்கும்

யாழ் களத்திற்கும் என் நன்றிகள்

கேளுங்கள் கொடுக்கப்படும் என்பது இதுதானோ..........................

உண்மையில் எங்கெல்லாம் நாம் வசித்தாலும் இந்த தகவல்களை உடனுக்குடன் பெற உதவும் இந்த அரிய வசதிகளை நன்மைக்காக மட்டுமே எல்லோரும் பயன்படுத்தவேண்டும் என எல்லோரையும் கேட்கிறேன்........

அறிந்திராத அறியவேண்டிய பல தகவல்களை தந்த ரகுநாதன் மற்றும் நுனாவிலானுக்கும் குகதாசனுக்கும் நன்றிகள்..

உலகில் விடுதலையை வேண்டி நிக்கும் அனைத்து இனத்தவருக்கும் விரைவில் விடுதலை கிட்டவேண்டும் அதுவே என் விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

சூராவளி,

விடுதலையின் வாசலில் நிக்கும் எமக்கு முன்னர் உலகில் நடந்த விடுதலைப் போராட்டங்கள் நிச்சயம் ஒரு செய்தியை விட்டுச் சென்றிருக்கும். அவற்றை அறிந்துகொள்வதன் மூலம்தான் எமது போராட்டத்தை நாம் சரியான வழியில் நகர்த்த முடியும்.

தலைவரும் அதைத்தான் செய்கிறார்.

உங்கள் கருத்துக்கு நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.