Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கமலின் பார்ப்பனிய முகம் (4)

Featured Replies

தசாவதாரம் திரைப்படத்தின் மீது கருத்தியல் சார்ந்த காட்டமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பலர் சுட்டிக் காட்டும் ஒரு விடயம் "பூவராகன்" பாத்திரம். கமல் ஏற்ற பத்து வேடங்களில் ஒரு தலித் தலைவரின் வேடமாக பூவரகான் பாத்திரம் வருகின்றது. நிறைய புரட்சிக் கருத்துக்களைப் பேசிக் கொண்டே, கடைசியில் மேல்சாதியினருக்காக தன்னுடைய உயிரை அர்ப்பணிக்கிறது இந்தப் பாத்திரம்.

வராகம் என்றால் பன்றி என்று பொருள். தலித் தலைவர் ஒருவரின் பெயரை பன்றி என்று அர்த்தம் வருவதாகவும், உருவத்தை அழகற்ற விதத்திலும் கமல் உருவாக்கியதும், கடைசியில் அந்தப் பாத்திரத்தை மேல்சாதியினருக்காக உயிர்த் தியாகம் செய்வதாக சித்தரித்ததும் கமலுடைய பார்ப்பனிய முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்சாதியினருக்காக உயிரை தியாகம் செய்கின்ற காட்சிகள் தமிழ் சினிமாவில் அடிக்கடி காண்பிக்கப்படுகின்ற ஒன்று. இதற்கான சிந்தனை எங்கேயிருந்து வருகின்றது என்பதுதான் இங்கே முக்கியமானது.

இந்தச் சிந்தனை மனு தர்மத்தில் இருந்து வருகின்றது. மனு தர்மம் ஒவ்வொரு வர்ணத்தினருக்கும் கடமைகளை வகுத்துக் கொடுக்கின்றது. பாவங்களிற்கான தண்டனைகளை கூறுகிறது. சுவர்க்கத்திற்கு செல்வதற்கான வழி வகைகளை கூறுகின்றது.

மிக மிக தாழ்த்தப்பட்ட மக்களை மனு தர்மம் "பாகியசாதியினர்" என்று குறிப்பிடுகின்றது. இந்தப் பாகியசாதியினர் சுவர்க்கத்திற்கு செல்வதற்கு ஒரே ஒரு வழியை மட்டுமே மனு தர்மம் கூறுகிறது. அந்த வழியைத் தவிர வேறு எந்த வழியிலும் பாகியசாதியினர் சுவர்க்கத்திற்கு செல்ல முடியாது.

அந்த வழி எதுவென்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள். மனுதர்மத்தின் பாகியசாதியினனாகிய பூவராகன் பின்பற்றிய அதே வழிதான்.

மனு தர்மத்தின் பத்தாவது அத்தியாயம் 62வது சுலோகம் இப்படிச் சொல்கிறது: பார்ப்பனர், பசு, பெண், பாலன் இவர்களை காப்பாற்றுவதற்காக பாகியசாதியினர் பொருளை வாங்காமலே உயிரை விடுவது அவர்களுக்குச் சுவர்க்கத்திற்கு காரணமாகும்.

இந்தச் சுலோகம் கூறுவது போன்றே தலித்தாகிய பூவராகனும் பொருள் எதையும் வாங்காமலேயே தன்னை விட உயர்சாதியினரின் பாலர்களுக்காக உயிரை விடுகின்றான்.

மனு தர்மத்தில் இருந்து உருவான இந்தப் பார்ப்பனியச் சிந்தனையை தமிழ் சினிமா எத்தனையோ படங்களில் வெளிப்படுத்தியிருக்கிறது. தன்னை பகுத்தறிவுவாதி என்று பிரகடனப்படுத்தும் கமலும் அதே மனு தர்ம பார்ப்பனிய சிந்தனையை பூவராகன் பாத்திரம் மூலம் வெளிப்படுத்துகின்றார்.

இறந்து கிடக்கும் பூவராகனின் காலை ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவர் தொட்டுக் கும்பிடுகின்றார் அல்லது தொட்டுக் கும்பிடும்படி கேட்கப்படுகின்றார். மனநலம் குன்றிய ஒரு பார்ப்பன மூதாட்டி பூவராகனை தன்னுடைய மடியில் கிடத்தி தன்னுடைய மகன் என்று சொல்கிறார்.

பார்ப்பனர்களுக்குத்தான் நேரடியான சுவர்க்கம் உண்டு என்பது இந்து மதத்தின் பொதுவான கருத்து. மற்றைய வர்ணத்தினர் புண்ணியங்கள் செய்து, அடுத்த பிறப்பில் பார்ப்பனராக பிறந்துதான் சுவர்க்கத்தை அடைய வேண்டும். அடுத்த பிறப்பை எடுக்காமலேயே பார்ப்பனர்களைப் போன்று நேரடியாக சுவர்க்கம் செல்வது மற்றைய வர்ணத்தினருக்கு மிகவும் கடினம்.

மனு தர்மம் சொன்னதன்படி தன்னுடைய உயிரை தியாகம் செய்ததன் மூலம், பார்ப்பனர்களால் அடையக் கூடிய சுவர்க்கத்தை அடையும் தகுதி பெற்றுவிட்ட ஒருவனின் காலை தொட்டு வணங்குவது என்பதும், அந்த ஒருவன் பார்ப்பன மூதாட்டியால் "மகன்" என்று அழைக்கப்படும் "உயர்நிலையை" அடைவதும் பார்ப்பனிய இந்தத்துவ சிந்தனையின் எச்சங்களே தவிர வேறில்லை.

தசாவதாரத்தில் இஸ்லாமிய மக்கள் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்தும் இங்கே குறிப்பிட வேண்டும். ஏதோ அந்நிய தேசத்தவர்கள் போன்றும், நிறைய பிள்ளை குட்டி பெறுபவர்கள் போன்றும் இஸ்லாமியப் பாத்திரங்கள் காட்டப்பட்டது ஒரு புறம் இருக்கட்டும். கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விடயம் உண்டு.

கமல் தாறுமாறாக லாரியை ஓட்டி இஸ்லாமியக் குடும்பம் வந்த வேன் ஒன்றின் மீது மோதி விடுகிறார். ரத்தக் காயம் பட்ட இஸ்லாமியப் பெண்மணியை இரத்தம் கொடுத்துக் காப்பாற்றுகிறார். தங்கள் மீது மோதி ரத்தக் காயம் ஏற்படுத்தியதே கமல்தான் என்று அறியாது, அந்த இஸ்லாமியக் குடும்பம் கமல் மீது நன்றி பாராட்டுகிறது. அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறது.

அந்நிய தேசத்தவர்களான, நிறையப் பிள்ளை குட்டி பெறுபவர்களான இஸ்லாமியர்களை லாரியால் அடித்ததும் கமல்தான். அவர்களை காப்பாற்றியதும் அதே கமல்தான். காப்பாற்றிய கமலுக்கு இஸ்லாமியக் குடும்பம் நன்றியோடு இருக்கிறது. இந்த இடத்தில் குஜராத் மோடியின் சிந்தனை நினைவுக்கு வருகிறது.

ஆயிரக் கணக்கான முஸ்லீம்களை படுகொலை செய்து விட்டு, அந்த மக்களுக்கு தான்தான் பாதுகாப்பு என்று மோடி சொல்கின்றார். உலகம் முழுவதும் இருக்கின்ற பேரினவாதச் சிந்தனை இது. "அடிப்பதும் நாங்களே, காப்பாற்றுவதும் நாங்களே" என்கின்ற இந்த பேரினவாதச் சிந்தனை இந்தியாவில் இந்துத்துவ பார்ப்பனியத்தின் ஒரு அங்கமாக இருக்கின்றது.

இந்தச் சிந்தனையின் வெளிப்பாடாக தசாவதாரத்தின் இஸ்லாமியக் குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சியை புரிந்து கொள்கின்ற போது, கமலின் பார்ப்பனிய முகம் மேலும் கோரமடைகிறது.

இந்தத் தொடரை முடிக்கின்ற நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய இன்னம் ஒரு விடயம் உண்டு. கமல் தன்னுடைய படங்களில் அடக்குமுறையாளர்களான பார்ப்பனர்களை அப்பாவிகளாக சித்தரிக்கின்றார். அந்த அப்பாவிகளை காப்பதற்கு தான் இருப்பதாக காட்சி அமைக்கிறார். தசாவாதரம் படத்தின் இந்துத்துவ பார்ப்பனிய நலன்களுக்கு ஏதுவான வகையில் காட்சிகளை அமைக்கின்றார்.

இப்பொழுது இதன் அடிப்படிடையில் ஒகேனக்கல் உண்ணாவிரதத்தின் போது கமல் பேசிய பேச்சினை சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். சத்தியராஜ் போன்றவர்கள் தமிழ் தேசிய உணர்வை தட்டி எழுப்புவது போன்று பேச, அதை தணிப்பதற்கு கமல் தன்னுடைய "வள வளா" பேச்சின் மூலம் முனைந்தார்.

தமிழ் தேசிய உணர்வை தணிக்க வேண்டும் என்ற சிந்தனை பார்ப்பனிய நலன் சார்ந்தது அன்றி வேறென்ன?

கமலின் பார்ப்பனிய முகம் பற்றிய குற்றச்சாட்டை கமலினுடைய ஒரு வசனத்தையோ அல்லது ஒரு காட்சியையோ வைத்து நான் கூறவில்லை. தொடர்ந்து அவரைக் கவனித்த பின்பே இக் குற்றச்சாட்டை வைக்கின்றேன். இந்தத் தொடரின் நான்கு பாகங்களையும் படித்த உங்களுக்கு இது புரியும் என்று நம்புகின்றேன்.

பார்ப்பானாக நடிக்கின்ற சூத்திரனையும், சூத்திரனாக நடிக்கின்ற பார்ப்பானையும் நம்பாதே என்பது தந்தை பெரியாரின் கருத்து. இந்தக் கருத்து உண்மை என்று இதுவரை பல பார்ப்பனர்கள் தமது நடவடிக்கைகள் மூலம் எமக்கு நிரூபித்திருக்கிறார்கள். கமலின் அண்மைய நடவடிக்கைகளும் அவர் பற்றிய மறுவாசிப்பின் தேவையை உணர்த்தி நிற்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்திற்கு பின்னர் உங்களை காணவில்லையென நினைக்க இங்கு நிற்கிறீர்கள். "மெய்யெனப்படுவதில்" ஏதாவது ஒரு தலைப்பு தொடங்குங்கோ ஏனெண்டா நெடுக்கர் எல்ல இடமும் ஓடி திரியிறார். நீங்கள் அங்கை ஒரு தலைப்பு தொடங்கினாதான் அவரை அங்கை கட்டி போடலாம். சும்மா பகிடிக்கு தான் ... பிறகு நெடுக்கர் கோவிக்கிறதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மனுநீதி பற்றி கூறுவது உண்மைதான்.

ஆனால்............ ஒரு திரைப்பட இயக்குனர். ஆபத்தான சூழ்நிலையில் ஒரு பொநல சிந்தனையாளனின் செயலையும் சுயநல சிந்தனையாளனின் செயலை காட்ட முயற்சி செய்வது போல்தான் எனக்கு தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இந்தியாவின் சினிமாக்களிளும் பார்க்க நாங்களே பல இடங்களிள் எம்மை அறியாமலே இந்து என்று காட்டுகிறோம் உதாரணதிற்கு ஆறுமுக நாவலர் சைவதிற்கும்,தமிழிற்கும் தொண்டாற்றினார்கள் என்பார்கள் ஆனால் அவர் சைவத்திலும் பார்க்க இந்து மததிற்கு தான் அதிகமாக சேவை ஆற்றினவர்.அது போக அண்மையில் மறைந்த தங்கம்மா அப்பா குட்டி அவர்கள் சைவத்திலும் பார்க்க இந்துமததிற்கு தான் கூடுதலாக சேவை ஆற்றியுள்ளார்.

ஆனால் அவரையும் சைவத்தையும்,தமிழையும் காப்பாற்றியவராக தான் சொல்லுவார்கள் ஆனால் முழுக்க முழுக்க இந்து மதத்தை முன்னிலைபடுத்தியவர்கள் தான். :lol:

சபேசன் கமல் தன்னை ஒரு சோசலீச வாதியாக காட்டி கொண்டதுக்கு நல்லதொரு பெயரை கொடுக்கிறீர்கள்...!! உங்களை போண்றோர் சொல்வது உண்மையா எண்று பார்க்கவே படத்தை அவசரமாக பார்த்தேன்....!!!

பூவராகன் இறந்து கிடக்கும் போது வைனவ பாப்பாத்தி கிழவி (கமல்) வந்து தொட்டு தூக்கி எனது மகனே எண்று அழும்போது பக்கத்தின் நிண்ற அந்தணன் சொல்வாரே அவன் எந்த என்ன வர்ணமோ எண்று அதுக்கு கிழவி கொடுக்கும் சாட்டை "அவன் உன்னை விட சிவப்பு எண்று" அதுதான் நீதி...!!

மற்றது திராவிடன் கறுப்பு எண்று சொல்லும் நீங்களே கறுப்பாக இருப்பதனால் கமல் அழகாக இல்லை எனலாமா..?? அதானால் தாள்த்தப்பட்டவன் அழகு இல்லை எண்று சொல்ல முடியுமா...?? பூவராக அழகு இல்லை என்பது உங்களின் கூற்றில் மட்டும்தான்...!! காரணம் காலம் காலமாக கறுப்பாக இருக்கும் நீக்கிறோக்களையும் சேர்த்து நீங்கள் அவமானப்படுத்து கிறீர்கள்....!!

மற்றது பூவராகன் தாள்த்தப்பட்டவர்தான் ஆனால் அவர் போராடியது உயர்சாதியருக்கு எதிராக அல்ல சுறண்டலுக்கு எதிராக...!!

Edited by தயா

  • தொடங்கியவர்

கமலின் பார்ப்பனிய முகம் குறித்த என்னுடைய விமர்சனம் வெறுமனே "தசாவதாரம்" படத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல.

உண்மையில் "ரஜனி - கமல்" என்ற தலைப்பில் நான் எழுதி வந்த தொடரில் கமலைப் பற்றி எழுத இருந்த விடயங்கள் இவைகள். அதை நான் எழுதத் தொடங்கிய போது, "தசாவதாரம்" திரைப்படம் வெளிவந்திருக்கவில்லை.

"தசாவதாரம்" திரைப்படமும் என்னுடைய சந்தேகங்களை வலுக்கச் செய்ததால், இதை தனியாக உடனடியாக எழுத வேண்டியதாகி விட்டது.

நம்மவர், மகளிர் மட்டும், நளதமயந்தி, வசூல்ராஜா என்று தொடர்ச்சியாக பல படங்களில் கமல் பார்ப்பனர்களை அப்பாவியாகவும், அவர்களை தான் காப்பாற்றுவதாகவும் சித்தரித்து வருவதை கவனித்து வருகிறேன்.

ஆனால் தசாவதாரம் ஒன்றுக்கும் மேற்பட்ட பார்ப்பனிய நலன்களுக்கு சார்பாக அமைகின்றது. அவைகள் இந்தத் தொடரில் விளக்கப்பட்டுள்ளன.

இயக்குனர் சங்கர் "ஜென்ரில்மேன்" படத்தில் ஆரம்பித்த பார்ப்பனிய விசுவாசத்தின் உச்சக்கட்டத்தை "அந்நியன்" படத்தில் வெளிப்படுத்தினார்.

கமல்"தசாவதாரம்" படத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்சாதியினருக்காக வாழ்ந்து, அவர்களுக்காகவே உயிரையும் கொடுக்க வேண்டும் என்ற மனுதர்ம நீதி தசாவதாரம் படத்திலும் நிலைநாட்டப்பட்டுள்ளது.

பத்து கமலில் இறந்து போவது இருவர்தான். ஒருவர் வில்லன், மற்றவர் பூவராகன்.

"அழகற்ற உருவம்" என்ற பதத்தை நானும்சற்று தயக்கத்துடனேயே எழுதினேன். வேறு சொற்கள் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் அந்தப் பதத்தை நான் நிறத்தோடு தொடர்பு படுத்தி எழுதவில்லை. கறுப்பு என்பது அழகுதான். வெள்ளை நிறத்திலும் பொதுப்பார்வைக்கு அழகற்றவர்கள் நிறையப் பேர் உண்டு.

ஆனால் பூவராகனின் முகம் நிறத்தைக் கடந்து அழகற்ற முறையில் உருவாக்கப்பட்டிருப்பது பற்றியே நான் பேசுகிறேன். இங்கே "அழகற்ற" என்ற சொல்லை பொதுப்புத்தியில் இருந்தே பயன்படுத்துகிறேன்.

"அழகு" என்றால் என்ன என்ற கேள்வி இருப்பதையும் நான் அறிவேன். இந்த சொல்லை பயன்படுத்த வேண்டியிருப்பது பற்றி எனக்கும் நெருடலும் சங்கடமும் உண்டு.

இன்னும் ஒன்று!

சுரண்டலில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஈடுபடுவதில்லை. அவர்கள் சுரண்டப்படுபவர்கள். சுரண்டலில் ஈடுபடுபவர்கள் உயர்சாதியினர்தான். சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்படுவது உயர்சாதியினரின் நலன்களே.

  • தொடங்கியவர்

வெளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம்: கமலஹாசனுக்கு உலக நாயகன் பட்டம்!

தீசுமாசு டி சில்வா

ஜூன் 12. ‘தசாவதாரம்’ ரிலீசுக்கு ஒரு நாள் முன்தினம். வழக்கொன்று வந்தது உச்ச நீதிமன்றத்தில். வழக்கம்போல் தள்ளி வைக்கவில்லை. காரணம், வழக்காடியவர்கள் புறப்பட்ட இடம் அப்படி. விடுமுறையென்றாலும் வீட்டிலிருந்தேனும் விசாரித்தாக வேண்டும்! விசாரித்தார்கள்.

முதலில் படத்தைப் பாருங்கள். பிறகு போடுங்கள் வழக்கை" என்றார்கள். ‘நாங்கள் இருக்கிறோம்’ என்று ரகசிய ஜாடை காட்டி, தைரியமூட்டி சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். படம் வந்து வாரம் நான்காகி விட்டது. வழக்கையும் காணோம், ஒரு புண்ணாக்கையும் காணோம். என்னாச்சு? 12 ஆம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் நடந்த பங்காளிச் சண்டையைச் சொல்லி இந்துக்களின் மானத்தைக் கூண்டிலேற்றுகிறார் கமல் என்ற குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை என அறிந்து, வருந்தி ஜகா வாங்கி விட்டார்களா? ‘இருக்கலாம்’ என்பவர்கள் அப்பாவிகள்.

சுஜாதா செத்துப்பூட்டாரு, பாலச்சந்தருக்கு வயசாயிடுச்சு, மணிரத்னத்துக்கோ முடியல. கொஞ்சம் வெவரஞ் தெரிஞ்சவாளா இருக்குற இவரையும் பகைச்சுக்கிட்டா கோடம்பாக்கத்துல நமக்கு ஆளில்லாமப் போயிடுமேங்கிற கரிசனையால அடக்கி வாசிக்கிறாங்களோ....? அப்படியும் இருக்கலாமென்பவர்கள் உண்மையின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறார்கள். இப்படி யோசித்துப் பார்க்கலாம்.

ஓடாத படத்தைத் தடை செய்து ஓடவைக்க சில தயாரிப்பாளர்களே பினாமிகளின் பெயரில் கோர்ட்டுக்குப் போவார்கள். ஆஸ்கார் ரவிச்சந்திர அய்யரின் பினாமியாக இராம. கோபாலய்யர் ஏனிருக்கக்கூடாது? போஸ்டரில் பெயர் இல்லாவிட்டாலென்ன? ‘சைலன்ட் பார்ட்னராக’ இருக்கலாமில்லையா?

வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதை எனும் அறிவிப்புடன் படம் ஆரம்பிக்கிறது. இந்த அறிவிப்பு மட்டும் போதுமா? வரலாறு எங்கே முடிகிறது, கற்பனை எங்கே தொடங்குகிறது என்று சொல்ல வேண்டாமா? இரண்டாம் குலோத்துங்கன், ரங்கராஜன் நம்பி சைவ - வைணவ யுத்தம், ‘ஓம் நமோ நாராயண நமஹ...’ இவையெல்லாம்தான் வரலாறு என்று ஒரு கூட்டம் நம்பிப் படம் பார்த்துக் கொண்டிருக்க, மல்லிகா ஷெராவத், பிளெட்சர், கிளப் டான்ஸ் சமாச்சாரங்கள்தான் வரலாறு, மற்றதெல்லாம் கப்ஸா என்று இன்னொரு கூட்டம் குழம்பி விடக்கூடாதே!

ஒரு படைப்பாளனின் நேர்மை அவன் சொன்ன செய்தியில் மட்டுமல்ல, சொல்லாமல் விட்ட சங்கதிகளிலும் இருக்கிறது. பம்பாயில் இந்து - முஸ்லீம் கலவரத்தைச் சொன்ன படைப்பாளி மணிரத்னம், கலவரத்துக்குக் காரணமான பாபர் மசூதி இடிப்பைத் திட்டமிட்டே மறைத்ததுபோல்... ‘ஜென்டில்மேன்’ முதல் ‘சிவாஜி’ வரை கல்வி வியாபாரமாகி விட்டது என புலம்பும் ஷங்கர் கூட்டணி, அது தனியார்மய - தாராளமய தாசர்களால் நேர்ந்தது என்பதைச் சொல்ல மறுப்பது போல்... கிருமி யுத்தத்தின் பூர்வ ஜென்மத் தொடர்பை ஜப்பானின் ஹிரோஷிமா - நாகசாகியில் தேடுவதற்குப் பதில் கையில் கிடைத்த புராணக் குப்பைகளில் அலசியிருக்கிறார் கமல்.

கடலில் தூக்கிப் போடப்பட்ட பெருமாள் சிலையை மீண்டும் கரைக்குக் கொண்டு வரவே சுனாமி வந்ததாம். அதாவது இயற்கைச் சீற்றத்தை புராணத்துடன் முடிச்சுப் போடுகிறார். ஜெயேந்திரனைக் கைது செய்ததால்தான் சுனாமி வந்தது என சங்கர மடத் துதிபாடிகள் அப்போது சொன்னதை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும். முன்னதற்கு வயிற்றெரிச்சல் காரணம். பின்னவருக்கு? பிராமனிய விஷமத்தனமே காரணம்.

ஆன்மீக முட்டாள் ரஜினியை விட, அரைகுறை அறிவாளி கமல் உண்மையில் ரொம்ப... ஆபத்தானவர். தசாவதாரத்தைக் கிழிகிழியெனக் கிழிக்கும் விமர்சகர்களில் சிலரும் கொண்டாடும் புரட்சிப் படம் ஹேராம். ஹேராமின் நாயகன் யார்? காந்தியைக் கொன்றவன். கொல்வதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் - அதன் வழி இந்தத் தேசத்தின் ஒட்டுமொத்த முசுலீம்களையும் கருவறுக்க வசதியாக தன்னுடைய பெயரை ஒரு முசுலீம் பெயராக்கிக் கொண்ட ஒரு ஆர்.எஸ்.எஸ். கிரிமினல். அவன் பெயர் கோட்சே. அந்தக் கோட்சேவைத்தான் நாயகனாக்கினார் கமலஹாசன். அதுசரி, ஒரு கிரிமினலை கதாபாத்திரமாக்கும் உரிமை ஒரு படைப்பாளிக்கில்லையா? இருக்கிறது. ஆனால், இது வெறும் படைப்பாளியின் உரிமை பற்றிய விசயமில்லையே. அந்தக் கதையை எந்தப் பாத்திரத்தின் வழியாக அந்தப் படைப்பாளி முன்வைக்கிறார் என்பதே கேள்வி.

வேலு நாயக்கர் என்ற ரௌடியாக, பொம்பளைப் **யாக, மோசமான மனநோயாளியாக வந்தபோதெல்லாம் அவரின் வக்கிரங்களைக் கண்டு ரசிகர்கள் கண்களைப் பொத்திக் கொள்ளவில்லை. மாறாக கைதட்டி ரசித்தார்கள். பாத்திரத்தின் தன்மையோடு ஒன்றிப் போனார்கள். ‘சூப்பர் ஸ்டார்’ இமேஜ் உள்ள நடிகன் ஏற்கும் எந்தப் பாத்திரமும் ரசிகரிடம் அப்படித்தான் போய்ச் சேரும். கோட்சேவும் அப்படித்தான் போய் சேர்ந்திருக்கக்கூடும். ஒருவகையில் கோட்சே தரப்பு ‘நியாயங்களை’ ஹேராம் வழியாக ரசிகர்களிடம் கொண்டு சென்றார் கமல்.

சிவசேனாவும், வி.எச்.பி.யும் அரசியல் தளத்தில் செய்யும் பணியை கலைத்துறையில் செய்திருக்கிறார் இந்தக் கலைஞானி. செய்ய வேண்டிய வேலையை சரியாகச் செய்திருக்கிறேனா என்று ‘பம்பாய்’ படத்தின்போது பால்தாக்கரேவின் காலில் விழுந்து கேட்டார் மருமகன் மணிரத்னம். புஷ்ஷின் அங்கீகாரத்திற்காக அலைந்து திரிந்தார் மாமா கமலஹாசன். நல்ல கலைக்குடும்பம்.

அறுபது லட்சம் யூதர்களைக் கொன்ற ஹிட்லரின் நாஜிக் கொடூரத்தைப் பதிவு செய்யும் ஒரு எழுத்தாளன் அடுத்த வரியில் ‘குழந்தைகளென்றால் ஹிட்லருக்குக் கொள்ளைப் பிரியம்’ என்று ஒரு பாராட்டையும் சேர்த்து எழுத முடியுமா? படம் சொல்லும் அரசியலை ஒரு ஓரம் தள்ளி வைத்துவிட்டு, ஒரு நடிகனாக கமலின் பன்முக ஆற்றலைப் பார்க்க நம் கழுத்தைப் பிடித்து திருப்புகிறார்களே.... சிலர்! அவர்கள் முடியுமென்று சொல்கிறார்கள்.

‘கடைந்தெடுத்த கிரிமினல்’ என்று உலகமே காறி உமிழ்கிறது ஜார்ஜ் புஷ் முகத்தில். ‘உலக நாயகனே வா... வா...’ என்று கும்மியடித்துக் குலவையிடுகிறார் கமலஹாசன். ஒரு மோசமான அரசியலை முன்னெடுக்கும் படைப்பில் நல்ல விசயங்களைத் தேடி பூதக் கண்ணாடியோடு கிளம்புபவன் நல்ல விமர்சகன் அல்ல. அந்த ஆளோட ரசிகர் மன்றத் தலைவன். தந்தை பெரியார் சொன்னதுபோல் இது பீயில் அரிசி பொறுக்கும் வேலை. சரி, ஒரு வாதத்துக்கு இவர்களிடம் மேலோங்கும் நடிப்பு ரசனையை அங்கீகரித்து ஒரு கேள்வி கேட்கலாம். முண்டாசு கட்டாத பாரதி... உடைவாளும், உறுமலும் இல்லாத ஒரு கட்டபொம்மன்... கோட்டும், சூட்டும், சவடாலும் தொலைத்த ஜார்ஜ் புஷ்... படுக்கையறையிலோ, கக்கூசுக்குள்ளோ... அனேகமாக அவர்கள் அப்படித்தான் இருந்திருப்பார்கள். ஒரேயொரு காட்சியில் அடையாளப்படுத்திவிட முடியுமா அவர்களை... எந்த ஒப்பனையாளரின் துணையுமின்றி? நடிகர் திலகத்துக்கே நிச்சயம் நாக்கு தள்ளி போகும். கலைஞானி என்ன... வெங்காயம்!

பின்னிணைப்பு அல்ல சாட்டை:

கண்டங்கள் பல தாண்டி, பல தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்த கோவிந்த ராமசாமி ஒரு பெண்ணிடமிருந்து தம்மாத்துண்டு டப்பியை பிடுங்க இத்தனை பாடா?

அந்தப் பெண் ஒரு அக்ரகாரத்து மாமி என்பதைக் கணக்கில் கொண்டால் கலைஞானியின் ‘நூல்’ அரசியல் புலப்படும். ஆலய நுழைவு, இடஒதுக்கீடு இவையெல்லாவற்றையும் பிராமனர்களிடமிருந்து நாமாகப் பிடுங்க முயற்சிக்கக்கூடாது. அவர்களாகப் பார்த்து ‘ஐயோ பாவம் பொழச்சுப் போறான்’ என கொடுத்தால் எண்சாண் உடம்பையும் ஒரு சாணாக்கிக் குறுகி பெற்றுக்கொள்ளலாம்.

தில்லை வாழ் அந்தணர்களிலிருந்து தில்லி ‘எய்ம்ஸ்’ வாழ் அந்தணர்கள் வரை அதைத்தான் சொல்கிறார்கள். சுனாமியால் ஜனங்க செத்துக் கிடக்கையில் ஒருத்தனுக்கு காதல் உணர்வு கிளம்புவது குரூரமில்லையா?

தந்தை மரணப்படுக்கையில் கிடந்தபோது தனயனுக்கு மூடு கிளம்பியதாக மகாத்மா வரலாறு சொல்கிறது. சத்திய சோதனையின் அந்தப் பகுதி கமலை பாடாய் படுத்தியிருக்க வேண்டும். ஹேராமிலிருந்து அவருக்கு எழுச்சியூட்டும் தருணங்களாக இவையே அமைகிறது. தொடர்ந்து இதை இப்படியே விட்டு விடுவது ஆபத்து. மாத்ரூபூதம் செத்து விட்டதால் நாராயண ரெட்டியிடம் போய் கமல் ‘கவுன்சிலிங்’ பெறலாம்.

அடைத்து வைக்கப்பட்டதால் சுனாமியிலிருந்து முசுலீம்கள் தப்பித்தார்களா?

குஜராத்தின் கோத்ரா கலவரத்தில் விரட்டப்பட்ட முசுலீம்கள் இன்னமும் அகதி முகாம்களில்தான் அடைபட்டிருக்கிறார்கள். அடிக்கடி நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் அப்பூமியில் முசுலீம்களுக்கு பெருமாளே ஏற்பாடு செய்த பாதுகாப்பு என்கிறார் கமல்.

தேவையில்லாமல் எதுக்குப் பத்து அவதாரங்கள்?

அது, சிவாஜியின் ஒன்பது அவதாரங்களை மிஞ்ச வேண்டும் என்ற சொந்த அரிப்பால் வந்த வினை. ‘கவியரசு’ கண்ணதாசனை பின்னுக்குத் தள்ள, ‘கவிப்பேரரசு’ பட்டம் போட்டுக் கொண்ட வைரமுத்துவின் அரிப்புக்கு ஈடான அரிப்பு இது. "அந்த மேதை எங்கே; நான் எங்கே?" என்று வெளியில் கைகட்டி பவ்யம். உள்ளுக்குள்ளோ அதைத் தாண்டிக் குதிக்க சந்தர்ப்பம் தேடி அலைச்சல். அரிப்பு இருக்கும் அளவுக்கு கொஞ்சம் சரக்கும் இருந்திருந்தால் கமலின் மானம் இப்படி கப்பலேறியிருக்காது.

கிளைமாக்சில் சுனாமி வந்ததற்கு உண்மையான காரணம் என்ன?

"பெருமாளைக் கரையில் கொண்டு சேர்க்க!" - இது அசின் போன்ற அரை லூசு ஆத்திகக் கும்பலுக்கு. "கிருமியைக் கொல்ல" - இது பாராட்டி விழா எடுக்கக் காத்திருக்கும் கி. வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவுக் கோஷ்டிக்கு. உங்களுக்கு என்ன பிடிக்குமோ, அதை எடுத்துக் கொள்ளலாம். இந்த ரெண்டுகெட்டான் காட்சிக்குப்பின் நமக்கு இன்னொரு கேள்வி எழுகிறது. உலகையே அழிக்கிற கிருமியை கடல் தண்ணீர் அழித்துவிடுமென்றால், அதற்கு சுனாமியை அனுப்பத் தேவையில்லையே! மெரினா பீச்சில் வழக்கமாக வந்து போகும் ஒரு கடல் அலை போதுமே! பெருமாள் அந்தக் காலத்து ஆள். வெவரம் பத்தாம சுனாமியை அனுப்பிட்டாரு. கலைஞானியல்லவா உஷாராயிருந்து அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேணும்!

அது சரி, இவ்வளவு கஷ்டப்பட்டு சிலையை கரையில் சேர்த்து என்ன பிரயோஜனம்? பழையபடி சிதம்பரம் கோயிலுக்குள் அதைக் கொண்டு வைப்பது யாராம்? சிதம்பரம் தீட்சிதர்களைக் கேட்டு சீக்கிரம் அதற்கொரு ஏற்பாடு செய்ய வேண்டாமோ! அவசரப்பட்டு அடுத்த சுனாமியை பெருமாள் சாமி அனுப்பிச்சிடப் போறார்.

"கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும்" என்ற வசனம் கடவுள் இல்லை என்பதைத்தானே சொல்கிறது?

"நீ ஆம்பளைதானே? " என்ற கேள்விக்கு "அப்படி இருந்தால் நன்றாக இருக்கும்" என பதில் சொல்லும் ஜென்மம் எது? கண்டிப்பாக ஆணுமில்லை, பெண்ணுமில்லை; இடைப்பட்ட ஏதோவொண்ணு. "இருக்கிறாரா, இல்லையா?" என்ற கேள்விக்கு ‘இருக்கு’, ‘இல்லை’ என்ற ஒற்றைச் சொல் மட்டுமே பதிலாக இருக்க முடியும். மற்றவையெல்லாம் பகுத்தறிவு முகமூடிக்குப் பின்னால் பதுங்கிக் கிடக்கும் மௌடீகங்களே. "கடவுளே, உனக்குக் கண்ணு அவிஞ்சு போச்சா?" எனப் புலம்பும் பக்தனின் குமுறலில் வெளிப்படுவது கடவுள் மறுப்புதானென்றால் சந்தேகமே வேணாம்... கமலின் வாயிலிருந்து தெறிக்கும் ஒவ்வொரு சொல்லும் பகுத்தறிவுப் பாசறையில் புடம் போட்டவை என்று ஒத்துக் கொள்கிறோம். புகழாரம் இன்னும் கொஞ்சம் நீண்டு "வசனங்களை எழுதியவர் கமலா? பெரியாரா?" என பட்டிமன்றம் நடத்தாத வரைக்கும் நாம் தப்பித்தோம்.

- தீசுமாசு டி சில்வா (theesmas@gmail.com)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.