Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுடரொளி கட்டுரை

Featured Replies

வடபோர் முனையில் விடுதலைப் புலிகள் காண்பிக்கும் பொறுமையின் எல்லைப்புள்ளியை அண்மித்திருக்கும் அரச படைகள், தாம் இரண்டு வருடங்களாக மேற்கொள்ளும் படை நடவடிக்கைக்கான ~பரிசு| பெறும் கட்டத்தையும் நெருங்கிக்கொண்டிருக்கின்றன.

பல்வேறு வழிகளிலும் புலிகளை சீற்றமுற செய்யும் காரியங்களை மேற்கொண்டு, ஒன்றிலுமே தாம் எதிர்பார்த்த பெறுபேற்றை பெற்றக்கொள்ளாமல் படைத்தரப்புத்தான் தற்போது சீற்றமடைந்திருக்கிறது.

இதன் வெளிப்பாடாக அண்மைக்காலமாக கொழும்பில் அதிக நேரம் முகாமிட்டிருக்கும் இராணுவ தளபதி, வன்னியில் தாம் கைப்பற்றிய பிரதேசங்களாக உள்ளுர் கல்வெட்டுக்களையும் கைவிடப்பட்ட ஓலைக்கொட்டில்களையும் காண்பித்து பேட்டிகள் கொடுத்தவண்ணமுள்ளார்.

அதேபோல, களத்தில் படைகளை வழிநடத்தும் இராணுவ அதிகாரிகளும், தாம் இப்படியொரு தலைமைத்துவத்தை பெற்றது பெரும்பேறு என்ற ரீதியில் அங்கு செல்லும் சிங்கள ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தவண்ணமுள்ளனர்.

உண்மையில், களநிலைவரத்தை பார்க்கப்போனால், விடத்தல்தீவை அரச படைகள் அடைந்திருக்கின்றன. புலிகளின் மிகப்பெரிய கடற்படை தளம் என தாம் வர்ணித்ததற்கு ஏற்ப, புலிகள் அதை விட்டுக்கொடுக்காமல் சண்டையிடுவார்கள் என இராணுவ தரப்பு எதிர்ப்பார்த்தது.

ஆனால், விடத்தல்தீவு என்பது மன்னார் தமது கைகளில் உள்ளவரை அதற்கு தேவையான ஒரு பின்புலமாக விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டுவந்த ஒரு இடம். மன்னாரை விட்டு எப்போது புலிகள் பின்வாங்கினரோ, அன்றோடு விடத்தல்தீவின் கேந்திர முக்கியத்துவம் அற்றுப்போய்விட்டது.

இதனை புரிந்துகொள்ளாத படைகள் விடத்தல்தீவு வெற்றியை, ஆனையிறவை வென்றது போலான ஒரு நடவடிக்கையாக கருதி கொண்டாடுகின்றன.

தற்போது, அங்கிருந்து வடக்காக இலுப்பைக்கடவைக்கு சென்று ஏ-32 வீதியில் மேற்கொண்டு நகரும் நடவடிக்கையில் அரச படைகள் ஈடுபட்டு வருகின்றன.

படையினரின் நடவடிக்கையை சற்று ஆழமாக நோக்கினால், அவர்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்பக்களில் இருந்து சில தெளிவுகளை பெற்றுள்ளார்கள் போல தெரிகிறது.

அதாவது, ஜெயசிக்குறு காலப்பகுதியில் பெருமெடுப்பில் ஏ-9 பாதையில் கால்வைத்த படையினர் மாங்குளம் செல்லும்வரை புலிகளின் எதிர்த்தாக்குதல்களால் பல ஆயிரக்கணக்கானோரை இழந்தனர்.

இதற்குக் காரணம், ஏ-9 பாதையின் இருமருங்கிலுமிருந்து புலிகள் மேற்கொண்ட தொடர்ச்சியாக தாக்குதல்கள்தான். தாண்டிக்குளத்தில் ஆரம்பித்து கனகராயன்குளம் வரை புலிகளின் பல்வேறு முற்றுகைத்தாக்குதல்களுக்கு

  • தொடங்கியவர்

சம்பூரை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்வரை எவ்வாறு திருகோணமலை முழுவதையும் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனரோ -

அதோபோன்று, பூநகரி புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவரை குடாநாடு புலிகளின் மறைமுக கட்டுப்பாடட்டிற்குள்தான் இருக்கும் என்பது எழுதாத விதி.

.

அப்ப என்ன புநகரி போய்போகுது என்று விசரைக்கிழப்பிறியோளோ ???

வவுனியா பக்கம் - அதாவது சிங்கள பிரதேசத்துடன் நிலத்தொடர்புடைய - பகுதியிலிருந்து படை நடவடிக்கையை ஆரம்பித்த இராணுவத்தினருக்கு எப்போதும் ஒரு நம்பிக்கை உள்ளது.

அதாவது, புலிகள் தாக்கினால், திரும்பி ஒடுவதற்கு பின்பக்கமாக தமக்கு இடமுள்ளது. ஆகவே, நம்பிக்கையாக - தமது தளபதிகளின் கட்டளைகளை கேட்டு - அவர்கள் எவ்வளவு தூரமும் வன்னிக்குள் வருவார்கள். இதுதான் ஜெயசிக்குறு காலப்பகுதியிலும் நடைபெற்றது.

ஆனால், குடாநாட்டில் அந்த சாத்தியம் இல்லை. தப்பியோடுவதானால் பலாலிதான் இலக்கு.ஆகவேதான், குடாநாட்டை பொறுத்தவரை படையினருக்கு தீராத பயம் எப்போதுமிருந்துவருகிறது.

  • தொடங்கியவர்

அப்ப இயக்கம் இப்ப தமிழீழ எல்லையில்லை அதாவது சிங்கள எல்லையில தான் வவுனியாவில நிக்கிதெண்டுறியள் ??? என்னே ஒரு இராணுவ - அரசியல்- புகோள அறிவு .

அது மட்டுமல்ல பாருங்கோ வவுனியாவால முன்னேறுவதற்கு இராணுவத்திற்கு துணிவென்னண்டால் தப்பி ஓடுறதிற்கு மட்டும் தான் புதிசா கணக்கு சொல்லுற உங்களிற்கு (99 இல் ஓடியதை மறக்கவில்லை )

வவுனியாவால உதவி கிடைக்கும் எண்டுறதை மட்டும் என்கிற தெரியாதோ ????? அல்லது புரியாதை உங்கட எழுத்தை அப்பிடியே நம்பிற எங்கட சனத்தின்ர தலையில நல்லா தூள் அரைக்கலாம் என்று

நினைக்கிறயளோ ???

இந்த மாதிரி கடந்த 6 வருட இராணுவ - அரசியல் விளக்கங்கள் தான் இப்ப புலிகள் தந்திரோபாயமாக பின்னகரும் போது விசரக்கிழப்புகுது.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: என்ன புதியவன்,

நீங்களே கொண்டுவந்து கட்டுரையை இணைச்சுப்போட்டு ஆரைப் பேசித் தள்ளிக்கொண்டு இருக்கிறியள் ? எழுதினது ஆரெண்டு சொன்னால்த்தானே நாங்களும் நாலு சாத்துச் சாத்தலாம்.

நீங்களே இணைத்து விட்டு விசரக்கிளப்புது என்றால் நாங்கள் எப்படி

  • தொடங்கியவர்

சரி சரி அந்தரப் படதையுங்கோ சாத்துறதெண்டால் தெல்லாம் பொறுங்கோ !

சுடரொளிக்காக - ப.தெய்வீகன்.

என்ன சரி தானே தரும அடிக்கு !!!

  • கருத்துக்கள உறவுகள்
:lol: நீங்கள் சொல்லிப்போட்டீங்கள் தானே?! இனி மிச்சத்தை நாங்கள் பாத்துக் கொள்ளுறம். அதுசரி, கட்டுரையில என்ன எழுதியிருக்கு எண்டு சொன்னனீங்கள் ?!!!!!
  • தொடங்கியவர்

:lol: நீங்கள் சொல்லிப்போட்டீங்கள் தானே?! இனி மிச்சத்தை நாங்கள் பாத்துக் கொள்ளுறம். அதுசரி, கட்டுரையில என்ன எழுதியிருக்கு எண்டு சொன்னனீங்கள் ?!!!!!

என்ன அண்ணை ஏதும் எனக்கு திருப்பி சாத்த போறியள் போல கிடக்கது !!!

  • கருத்துக்கள உறவுகள்
:lol: சரி, சரி...இதுக்கெல்லம் போய்க் கோவிக்கக் கூடாது. நானும் கட்டுரையை வாசிச்சுப்போடுத்தான் இருக்கிறன். ரெண்டு மூண்டு நாளைக்கு முதல் தமிழ்நாதத்தில வந்திருந்ததாக ஞாபகம்.
  • தொடங்கியவர்

இதில என்னத்தை அண்ணை கோவிக்க கிடக்குது !

பாருங்கோவன் வவுனியாவில தமிழ் தேச -சிங்கள தேச எல்லையில தான் இயக்கம் நிக்கிறது மாதிரி தான் கதைவிடுகினம்

அது சரி அதை விடுங்கோ பிறகு !

வவுனியாவால முன்னேறு ஆமிக்கு துணிவு என்னவென்றாலாம் திரும்பி ஓடலாம் என்று தானாம் ??? ஏன் அவனுக்கு விநியோகம் பற்றி தெரியாது போல !!!

இதையெல்லாம் என்னவென்று சொல்லுவது !

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் புதியவன்,

சில கட்டுரைகளையும் அறிக்கைகளையும் பார்க்கும்போது எரிச்சல் தான் வருகிறது. புலிகள் எதுக்காகப் பினவாங்குகிறார்கள் என்று கூடத் தெரியாமல் தமது மனம் போன போக்கில் எழுதித் தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். சில வேளைகளில் வாசிக்கும் போது என்னையறியாமலேயே சிரித்து விடுவேன். மக்களை சோர்வில்லாமல் போராட்டத்தின்பால் ஈர்த்து வைத்திருப்பது எவ்வளவு அவசியமோ அதேபோல மக்களை பிழையாக வழி நடத்தாமல் இருப்பதும் அவசியம். இது எமது தமிழ் ஆய்வாளர்கள் பலருக்குப் புரிவதில்லை. அவர்கள் ஏதோ தமிழ் சினிமாவில படத்தின்ற முடிவில கதாநாயகன் வந்து ஒரு நூறு அல்லது இருநூறு பேரை ஒற்றையா நிண்டு போட்டுத்தள்ளிப்போட்டு கதாநாயகியையும் அவவின்ர அம்மாவையும் காப்பாத்திற மாதிரித்தான் கதை எழுதீனம்.

  • தொடங்கியவர்

அதே தான் ரகு அண்ணை நானும் நினைக்கிறன்.

உண்மையிலே பாhத்தோமானால் சமாதான காலத்தில் தமிழ்தேசியத்தி;காக நிற்கும் ஓடகங்கள் நம்பிக்கை என்பதற்கு பதிலாக ஊருவேற்றிய வேலையை தான் செய்தார்கள் அதாவது இனி ஓரு போர் வராது தப்பி தவறி வந்தால் கூட விடுதலைப்புலிகள் பக்கம் சர்வதேசம் நிற்கும் அதுமட்டுமல்ல மகிந்தவினால் எதுவுமே செய்யமுடியாது

அத்துடன் இராணுவம் தாக்குதலைத் தொடங்கு மானால் புலிகள் இயக்கத்தால் வாரக் கணக்கில் தமிழீழ பகுதிகள் கட:ப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் அத்துடன் இராணுவம் தொடங்கினால் சர்வதேச எம்பக்கம் நிற்கும் போன்றவை எல்லாவற்றிற்கும் எதிர்மாறாகத் தான் நடந்துள்ளன நடந்தும் வருகின்றன என்பது வேதனையான விடயம்.

ஆகவே இவ்வாறான் ஊட்டல்கள் வாசித்து பழக்கிப் போய்லிட்ட மக்களிற்கு தீடிரென சம்புர் வாகரை மட்டக்களப்பு மன்னார் மடு விடத்தல்தீவு இப்பொழது மல்லாவி துணுக்காய் என்ற பொழுது நம்ப முடியவில்லை காரணம் சிங்க அரசுகளின் பிரச்சார தந்திரத்தை விட எம்மவர்களின் பிரச்சார தந்திரம் தந்த பரிசு தற்பொழ தான் வேலைசெய்கிறது .

என்னங்கப்பா, நிலத்தைப் பிடிக்கிறதும், சண்டை போடுறதைப் பற்றியும்தான் கதைக்கிறியள். எதைச் செய்ய வேண்டும் என்று புலிகளுக்கல்லவா தெரியும். கேள்விப்படுவதை வைத்துக் கொண்டு கற்பனை செய்கின்றவர்கள், அதைப் பெரிதாக முன்னெடுப்பவர்கள் இவைகளைப் பற்றி ஆராயத்தான் செய்வார்கள். புலிகள் பதில் சொல்லும் வரை பொறுத்திருப்போம்.

ஏன் ஆற்றையோ கட்டுரையை கொணந்து போட்டு நீங்களே திட்டுவான்...

முடிஞ்சா நீங்களும் ஒண்டை எழுதிப்பாக்கிறது.. அப்பதெரியும் உங்களை எத்தினபேர் திட்டுவாங்களெண்டு..

  • கருத்துக்கள உறவுகள்

அதே தான் ரகு அண்ணை நானும் நினைக்கிறன்.

உண்மையிலே பாhத்தோமானால் சமாதான காலத்தில் தமிழ்தேசியத்தி;காக நிற்கும் ஓடகங்கள் நம்பிக்கை என்பதற்கு பதிலாக ஊருவேற்றிய வேலையை தான் செய்தார்கள் அதாவது இனி ஓரு போர் வராது தப்பி தவறி வந்தால் கூட விடுதலைப்புலிகள் பக்கம் சர்வதேசம் நிற்கும் அதுமட்டுமல்ல மகிந்தவினால் எதுவுமே செய்யமுடியாது

அத்துடன் இராணுவம் தாக்குதலைத் தொடங்கு மானால் புலிகள் இயக்கத்தால் வாரக் கணக்கில் தமிழீழ பகுதிகள் கட:ப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் அத்துடன் இராணுவம் தொடங்கினால் சர்வதேச எம்பக்கம் நிற்கும் போன்றவை எல்லாவற்றிற்கும் எதிர்மாறாகத் தான் நடந்துள்ளன நடந்தும் வருகின்றன என்பது வேதனையான விடயம்.

ஆகவே இவ்வாறான் ஊட்டல்கள் வாசித்து பழக்கிப் போய்லிட்ட மக்களிற்கு தீடிரென சம்புர் வாகரை மட்டக்களப்பு மன்னார் மடு விடத்தல்தீவு இப்பொழது மல்லாவி துணுக்காய் என்ற பொழுது நம்ப முடியவில்லை காரணம் சிங்க அரசுகளின் பிரச்சார தந்திரத்தை விட எம்மவர்களின் பிரச்சார தந்திரம் தந்த பரிசு தற்பொழ தான் வேலைசெய்கிறது .

புதியவன் அவர்கட்கு

நீங்கள் எழுதுவதில் உண்மை இல்லாமல் இல்லை

அதே நேரம் பத்திரிகைக்காரர்களும் தமது வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தல் மற்றும் தமிழரை தடம்பிரளாமல் பாதுகாத்தல் மற்றும்...........

இன்னும் பல விடயங்களுக்காக அப்படி எழுதியிருக்கலாம்

முக்கியமாக நீங்கள் அடிக்கடி முன்வைக்கும் குற்றச்சாட்டு.........

தமிழர்களை பிழையான போக்கில் சிந்திக்கவைத்து விட்டார்கள் என்பது????????

இதில் எனக்கு சில மாற்றுக்கருத்துக்கள் உண்டு.............

அப்படி எழுதிய கட்டுரையாளர்களில் கூடுதலானவர்கள் தமிழ்த்தேசியத்தை மதிப்பவர்கள் என்பதால்..........

அவர்களும் நீங்கள் தற்போது நினைப்பதுபோல்???????????

அந்த நேரத்தில் அதாவது ஒப்பந்த காலகட்டத்தில் மக்களை மனம் தளரவிடக்கூடாது என்பதற்காகவும்

அந்த நேரம் நிலமை அப்படியிருந்ததாலும் எழுதியிருக்கலாம்

அதாவது எல்லோரும் நல்லது செய்யவே முனைந்தார்கள் என்பதே என் வாதமாகும்.........

அது பிழைத்து போவதற்கு....................

எமது மக்களின் பேச்சோடு நின்று .....பங்களிப்பு போதாமை......

மகிந்தவின் ஆட்டம்.......

தமிழ்நாடு அரசின் பித்தலாட்டம்....

பயங்கரவாதம் என்னும் பேய் காட்டும் இரக்கமற்ற அழிவுகள்.......

உலக நாடுகளின்போக்கு..........

இதை எல்லாவற்றையும்விட முக்கிமானதாக

எம்தலைவனிடம் இக்கட்டுரையாளர்கள் இவ்வளவு பொறுமையை எதிர்பாராமை...........

ஆகியவை காரணமாக இருக்கலாம்.........

அதாவது எல்லோரும் நல்லது செய்யவே முனைந்தார்கள் என்பதே என் வாதமாகும்.........

அதேநேரம் ஆட்டம் இன்னும் முடியாதவேளையில்????????????????

உங்கள்வாதமும் தப்பாகலாம் சிலநாட்களுக்குள்?????????????

  • தொடங்கியவர்

அதே நேரம் பத்திரிகைக்காரர்களும் தமது வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தல் மற்றும் தமிழரை தடம்பிரளாமல் பாதுகாத்தல் மற்றும்...........

அதேநேரம் ஆட்டம் இன்னும் முடியாதவேளையில்????????????????

உங்கள்வாதமும் தப்பாகலாம் சிலநாட்களுக்குள்?????????????

  • தொடங்கியவர்

அண்ணன் குகதாசன் !

உங்களுடைய மாற்றுக்கருத்துக்ளை நானும் ஏற்றுக் கொள்கிறேன் ஆனாலும் பெரும்பாலும் வியாபார தந்திரதாக சில வேளைகளில் அவ்வாறான விடயங்கள் பயன்படுத்தப்பட்டது எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ள கூடியது என்று தெரியவில்லை சில வேளைகளில் அதன் பயனை இன்று எமதினம் தமிழிழ பிரதேசங்கள் எங்கிலும் அனுபவிக்கின்ற வேளையில் நாமும் மனரீதியில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்பது புரிகிறது.

அத்துடன் நான் எதுவும் அனுமானங்களோ அல்லது விவாதங்களோ செய்யவில்லை நீங்கள் குறிப்பிடுவது போல தப்பாவுவதற்கு

உண்மை நிலைகiளை அல்லது நம்ரிக்கை ஊட்டங்களிற்கு பதிலாக தேவையற்ற விதத்தில் மக்களை நம்பிக்கை கொள்ள செய்யவல்ல !

ஏன் ஆற்றையோ கட்டுரையை கொணந்து போட்டு நீங்களே திட்டுவான்...

முடிஞ்சா நீங்களும் ஒண்டை எழுதிப்பாக்கிறது.. அப்பதெரியும் உங்களை எத்தினபேர் திட்டுவாங்களெண்டு..

என்ன சுராவளி ! என்னில ஏதாவது கோபம் எண்டால் நேரடியா திட்ட வேண்டியது தானே !

அதுக்கு என்னத்திற்கு கட்டுரையை எழுதும் பேச்சு வேண்டும் என்று சொல்லுறியள் அண்ணை !

சரி எப்பிடி எண்டாலும் திட்டங்கோ !

உதாரணம் .கழுதை செம்மறி துலைவான் பிரண்டுபோவான் ஆனால் பாருங்கோ குறுக்காலபோவான் எண்டு மட்டும் திட்டிப்போடதையுங்கோ பிறகு தெரியும் தானே !

  • கருத்துக்கள உறவுகள்

:lol: குகன் பிரச்சனை என்னவென்றால், சில கட்டுரைகளால் மக்கள் அதீத எதிர்பார்ப்புக்கு ஆளாகி விடுகிறார்கள். இன்று புலிகள் இன்னும் ஏன் தாக்கவில்லை என்கிற ஆதங்கத்துக்கான காரணமும் இவ்வாறு கடந்த 5 அல்லது 6 வருடங்களில் வந்த பல கட்டுரைகளில் புலிகளின் பலம் பற்றிய அதீத நம்பிக்கையும், ராணுவத்தின் திட்டமிடலிலும் அதன் படை நடத்து திறனிலும் இருப்பதாக இந்தக் கட்டுரையாளர்கள் கொண்டிருந்த மிகவும் தாழ்வான அபிப்பிராயமும்தான்.

எதிரியின் பலத்தைப் பரிசோதிக்காது வெறுமனே புலிகளின் அசாத்திய பலம்( இது புலிகளளித் தவிர வேறு எவருக்குமே தெரியாமல் இருந்தாலும் கூட)பற்றி மட்டும் கற்பனை செய்து எழுதியதன் விளைவு தான் நாங்கள் எல்லோரும் இன்று அநுபவிக்கும் ஏக்கம் என்று நினைக்கிறேன்.

புலிகள் என்றும் போல எண்ணிக் கருமமம் ஆற்றிக் கொண்டேதான் வருகிறார்கள். இடையில் நாம்தான் குழம்பிப் போயிருக்கிறோம்(நான் உற்பட).

நடக்கவேண்டியவை சரியாக நடக்கும். ஆனால் இந்தப் பத்தி எழுத்தாளர்கள் நினைப்பதுபோல் அல்ல.

புதியவனுக்கு ஒரு சிறப்புபக்கமே போடலாம்.... :o

உதுவொல்லோ டொமோக்ரஸீ....... :lol:

தொடரட்டும் உங்கள் பணி..... :o

விளங்காபயல்களை விட்டுத்தள்ளுங்கள்...... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:lol: குகன் பிரச்சனை என்னவென்றால், சில கட்டுரைகளால் மக்கள் அதீத எதிர்பார்ப்புக்கு ஆளாகி விடுகிறார்கள். இன்று புலிகள் இன்னும் ஏன் தாக்கவில்லை என்கிற ஆதங்கத்துக்கான காரணமும் இவ்வாறு கடந்த 5 அல்லது 6 வருடங்களில் வந்த பல கட்டுரைகளில் புலிகளின் பலம் பற்றிய அதீத நம்பிக்கையும், ராணுவத்தின் திட்டமிடலிலும் அதன் படை நடத்து திறனிலும் இருப்பதாக இந்தக் கட்டுரையாளர்கள் கொண்டிருந்த மிகவும் தாழ்வான அபிப்பிராயமும்தான்.

எதிரியின் பலத்தைப் பரிசோதிக்காது வெறுமனே புலிகளின் அசாத்திய பலம்( இது புலிகளளித் தவிர வேறு எவருக்குமே தெரியாமல் இருந்தாலும் கூட)பற்றி மட்டும் கற்பனை செய்து எழுதியதன் விளைவு தான் நாங்கள் எல்லோரும் இன்று அநுபவிக்கும் ஏக்கம் என்று நினைக்கிறேன்.

புலிகள் என்றும் போல எண்ணிக் கருமமம் ஆற்றிக் கொண்டேதான் வருகிறார்கள். இடையில் நாம்தான் குழம்பிப் போயிருக்கிறோம்(நான் உற்பட).

நடக்கவேண்டியவை சரியாக நடக்கும். ஆனால் இந்தப் பத்தி எழுத்தாளர்கள் நினைப்பதுபோல் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

ஆனால் அவர்களுக்கும் சிலநேரம் அப்படி எழுதவேண்டிய கடமை இருந்திருக்கலாம் என்பது என்வாதம்

ஏனெனில் எழுதியவர்களில் பெரும்பாலானோர் எம்மீது அக்கறை கொண்டவர்கள்

டி.சிவராமிலிருந்து

அருஸ் வரைக்கும்.............

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணமாக

கருணாவின் பிரச்சினையின்போது இந்தக்கட்டுரையாளர்களின் பணி போற்றுதற்குரியது

முக்கியமாக சிவராம் அவர்களின் பணி...............

  • கருத்துக்கள உறவுகள்

:lol: குகன்.

தாரகி சிவராம் போல் ஒரு ராணுவ ஆய்வாளை முன்னர் இருந்ததுமில்லை, இனி இருக்கப்போவதுமில்லை. இன்று அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்ப ஆளில்லாமல் தமிழ் ஊடகத்துறை தவித்துக் கொண்டிருக்கிறது. இன்று தமிழரின் அங்கலாய்ப்புக்கும், ஆதங்கத்துக்கும் காரணமே தாரகி போன்ற ஒரு ராணுவ ஆய்வாளர் இல்லாமல் போனதுதான்.

மக்களை சரியான திசையில் வழிநடத்திக்கொண்டுவந்த ஒரு சமூகவியலாளனை சிங்களமும், விலைபோன தமிழ் ஒட்டுண்ணிகளும் சேர்ந்து கொன்றுவிட்டது அநியாயம்.

தாரகி இன்று இருந்திருந்தால் நாம் நிம்மதியாக இருந்திருக்கலாம்.

தாரகியை வேறு எந்த ஆய்வாளருடன் ஒப்பிடுவதைய் தவிர்ப்பதுதான் நல்லது.

  • தொடங்கியவர்

புதியவனுக்கு ஒரு சிறப்புபக்கமே போடலாம்.... :lol:

உதுவொல்லோ டொமோக்ரஸீ....... :huh:

தொடரட்டும் உங்கள் பணி..... :wub:

விளங்காபயல்களை விட்டுத்தள்ளுங்கள்...... :huh:

லொள்ளு பனங்காய் !

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.