Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளிநாட்டு பட்டங்களுக்கு சிறீலங்காவில் அங்கீகாரம் இல்லை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாமல் வெளிநாடுகளில் பட்டம் பெறுபவர்களின் பட்டங்கள் சிறீலங்காவில் எனிமேல் அங்கீகரிக்கப்படமாட்டாது என்று சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது.

பல மேற்குலகப் பல்கலைக்கழகங்கள் கணணி சார் மற்றும் வர்த்தகம், முகாமைத்துவம் சார்ந்த பட்டப்படிப்புக்களை எந்தவித உயர்தர பரீட்சைப் பெறுபேறையும் அடிப்படைத் தகுதியாகக் கோராமல் வழங்கி வருவதுடன்.. ரஷ்சியா போன்ற நாடுகளில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாமலே மருத்துவப் படிப்பைக் கூட தொடரக் கூடிய நிலை இன்றிருக்கிறது.

A/Level qualification imperative - Warnapala

The Ministry of Higher Education will never recognize the foreign degrees obtained by students who do not have the basic Advance Level qualifications and strict guidelines will be laid down shortly to streamline the entire higher education system and to prevent obtaining such degrees, Higher Education Minister Wiswa Warnapala said.

dailymirror.lk

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிறி லங்காவின் தரம் தான் உயர் .....தரமோ ? உலகமே சிரிக்குது லங்காவை பார்த்து .

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல அணுகுமுறை. இலங்கையில் பேராதனை, மொரட்டுவ போன்ற பல்கலைக்கழகப் பட்டங்களை கொலரை நிமிர்த்திக்கொண்டு வாங்கி சிங்கப்பூருக்குப் போனால் "உன் பட்டம் அங்கீகரிக்கப்பட்டதல்ல" என்று சொல்லி விடுவார்கள். Professional Engineer போன்ற தகுதிகளை அடைவது மிகக் கடினம். மேற்குலக நாடுகளிலும் இதே போன்ற பிரச்சினைகள். அதனால் reciprocal முறையில் இலங்கையில் இப்படி ஒரு ஒழுங்கு முறை கொண்டுவருவது நல்லதே.

இலங்கையை விட இந்தியாவில் இம்முறையைக் கொண்டுவந்தால் இன்னும் அதிக தாக்கங்களை ஏற்படுத்தும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறி லங்காவின் தரம் தான் உயர் .....தரமோ ? உலகமே சிரிக்குது லங்காவை பார்த்து .

சிறீலங்காவின் அரசியல் குழறுபடி நிறைந்ததாக இருக்கலாம். ஆனால் சிறீலங்காவின் கல்வித்தரம் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளோடு ஒப்பிடும் படிக்கு உயர்வானது.

எனது அனுபவத்தில் சொன்னால் சிறீங்காவின் உயர்தரம் பிரிட்டனின் உயர்தரத்தை விட தரமானது..! மிகவும் ஆழமாகவும் விரிவாகவும் விடயங்களை கற்றுக் கொடுக்கிறது. ஆனால் செய்முறை மற்றும் பிரயோக நுட்பங்கள் தான் போதாமையாக உள்ளது. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல அணுகுமுறை. இலங்கையில் பேராதனை, மொரட்டுவ போன்ற பல்கலைக்கழகப் பட்டங்களை கொலரை நிமிர்த்திக்கொண்டு வாங்கி சிங்கப்பூருக்குப் போனால் "உன் பட்டம் அங்கீகரிக்கப்பட்டதல்ல" என்று சொல்லி விடுவார்கள். Professional Engineer போன்ற தகுதிகளை அடைவது மிகக் கடினம். மேற்குலக நாடுகளிலும் இதே போன்ற பிரச்சினைகள். அதனால் reciprocal முறையில் இலங்கையில் இப்படி ஒரு ஒழுங்கு முறை கொண்டுவருவது நல்லதே.

இலங்கையை விட இந்தியாவில் இம்முறையைக் கொண்டுவந்தால் இன்னும் அதிக தாக்கங்களை ஏற்படுத்தும்.

உண்மைதான். ஏனெனில் அவர்கள் உலக பல்கலைக்கழக விபரக்கொத்தில் இடம்பிடிக்கக் கூடிய அளவுக்கு தமது கற்கைச் செயற்பாடுகளை சர்வதேசப் பார்வைக்குக் கொண்டு வராமையே அதற்குக் காரணம்.

கொழும்பு பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம் பெற்றிருக்கின்ற இடத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பெறவில்லை. காரணம் அவர்களுக்கு உலகப் பல்கலைக்கழகங்களுடன் இருக்கின்ற தொடர்புகளும்.. கற்கை நெறிகள் பற்றிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடனான பரஸ்பர தகவல் பரிமாற்றமும் குறைவு.

உதாரணத்துக்கு இதைப் பாருங்கள்.. உலகப் பல்கலைக்கழகங்களின் விபரக்கொத்தில்.. எது முதலிடம் இருக்கிறது.. என்று. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை இதில் காணவே இல்லை. இவ்வாறான ஒரு நிலையில் எப்படி.. பட்டங்கள் அங்கீகாரம் பெறும்..???!

http://www.braintrack.com/linknav.htm?ppre...181&level=3

Edited by nedukkalapoovan

சிறீலங்காவின் அரசியல் குழறுபடி நிறைந்ததாக இருக்கலாம். ஆனால் சிறீலங்காவின் கல்வித்தரம் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளோடு ஒப்பிடும் படிக்கு உயர்வானது.

எனது அனுபவத்தில் சொன்னால் சிறீங்காவின் உயர்தரம் பிரிட்டனின் உயர்தரத்தை விட தரமானது..! மிகவும் ஆழமாகவும் விரிவாகவும் விடயங்களை கற்றுக் கொடுக்கிறது. ஆனால் செய்முறை மற்றும் பிரயோக நுட்பங்கள் தான் போதாமையாக உள்ளது. :o

:):rolleyes::)

அண்ணை நெடுக்கால போவான் நக்கலடிக்கிறதுக்கு ஓரு அளவு இல்லையே !

அமெரிக்காவையும் பிரிட்டனையும் எங்கட சொறிலங்காவோட ஓப்பிடுறியள் !

வேற என்னத்திலதான் ஒப்பிடலாம்... :rolleyes::o:):)

உப்பிடித் தான் பாருங்கோ முந்தி எங்கட எல்லாம் வெண்டதுகள் யாழ்பாணத்தில புலம்புறவை இந்தியாவின்ர படிப்பை விட சொறிலங்காவின்ர படிப்பு திறம் என்று ஆனால் பாருங்கோ சொறிலங்காவின்ர கல்வித் தரத்தை விட இந்தியா எங்கையோ போய் கொண்டிருக்கிறது .

அது தட்டுமலில்லாமல் ஏனைய நாடகளிட்ட இருக்கிற தொழி; அனுபவம் மிக்க பட்டறிவுள்ள விரிவுரையாளர்களின்ர தன்மையும் வேற பாருங்கோ ! அதோட செய்முறை பயிற்சிகளில் சொறிலங்காவின்ர பாடத்திட்டங்கள் இப்பவும் பிட்டன் காரன் இஞ்ச பாவிக்க எறிஞ்சு போட்டு போனதை தூக்கி வைச்சுக் கொண்டு படம் காட்டியினம் இது கூடுதலாக பேராதனையில பொறியில் படிச்சுப் போட்டு லண்டனுக்கு போய் அங்க வெள்ளைக்காரன் செயன்முறையை செய் என்று விட ஓடிவெளிச்சிருக்கும் இது எங்கட கன பொடியளுக்கு நடந்த அனுபவம் பாருங்கோ !

சுராவளி அண்ணை உங்களுக்கு இப்பிடி நடந்திருக்கும் எண்டு நினைக்கிறன் .

ஆனால் செய்முறை மற்றும் பிரயோக நுட்பங்கள் தான் போதாமையாக உள்ளது. :rolleyes:

அதுதான் இப்படி எழுதி இருக்கிறேனே. ஆனால் பாடப்பரப்பு விடயத்தில் பிரித்தானிய மாணவர்களைக் காட்டிலும் சிறீலங்கா மாணவர்கள் அதிகம் அறிந்திருக்கிறார்கள். செய்முறைக் கல்வியும் பிரயோகக் கல்வியும் போதாது..! நவீனத்துவமற்ற செய்முறைக் கல்வி பெரும் பிரச்சனை அங்கு..! :o

ஆனால் பாருங்கோ அண்ணை சொறிலங்காவின்ர சில படிப்புகளிற்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில இனுமதி எடக்க வெளிக்கிடேக்கள்ளை உங்கட படிப்பை விட நாங்கள் எவ்வளவோ நவீனத்துவமாக்கி nபோட்டம் என்று சொல்லி தட்டுறாங்கள் அதிலயே விளங்குது சொறிலங்காவின்ர கல்வித் திட்டம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் பாருங்கோ அண்ணை சொறிலங்காவின்ர சில படிப்புகளிற்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில இனுமதி எடக்க வெளிக்கிடேக்கள்ளை உங்கட படிப்பை விட நாங்கள் எவ்வளவோ நவீனத்துவமாக்கி nபோட்டம் என்று சொல்லி தட்டுறாங்கள் அதிலயே விளங்குது சொறிலங்காவின்ர கல்வித் திட்டம்

என்ன தான் அவை தங்கள நவீனம் என்றாலும் அடிப்படை விளங்காமல் படிக்கிற அவையிட மாணவர்கள் இப்போ எல்லாம் அறிவியல் மற்றும் கணித பாடங்களில் விருப்புக் குறைஞ்சு போய்க் கொண்டிருக்கினம்.

பிரிட்டனைப் பொறுத்தவரைக்கும் 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைக் கட்டி வைச்சிருந்தும்.. எவ்வளவோ கட்டணச் சலுகைகளை அளிச்சும் பிள்ளைகள் ஏன் அறிவியல்.. மற்றும் கணிதம்..பொறியியல் படிக்கப் போகுதுகள் இல்லை..???! எல்லாம் வரலாறும் சைக்கோலொஜியும் சமூகவியலும் கணணி தகவல் தொழில்நுட்பமும் தான் படிக்க முண்டி அடிக்குதுகள்..!

அறிவியல் மருத்துவம் பொறியியல் கணிதம் போன்றவற்றில் இன்னும் வெளிநாட்டு மாணவர்களின் தலையைத் தானே நம்பி இருக்கினம். அமெரிக்காவிலும் இதேதான் நிலை..!

சிறீலங்காவின்ர பொருளாதார நிலைதான் அதன் செய்முறைக் கல்வியிலும் பிரயோகக் கல்வியிலும் பெரிய குறைபாட்டை ஏற்படுத்தி இருக்குது. அதை அவர்கள் கருத்தில் கொள்ளும் போது சிறீலங்கா கூட திறமையான மாணவர்களை உருவாக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கும்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.