Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை வான்தாக்குதல் புலப்படுத்துவதென்ன......edited .....வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

பிரபாகரனின் பிள்ளைகளின் பாதுகாப்பைப் பற்றிச் சொல்லி மிரட்டும் இந்திய இராணுவ அதிகாரி.

Edited by narathar

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

:D ஜெயபாலன் அவர்களே, உங்களிடம் அந்த இந்திய அதிகாரிகள் போட்டுக் காட்டிக் கேள்விகேட்ட ஒலி, ஒளி நாடாக்களில் என்ன இருந்தது, எதற்காக நீங்கள் சங்கடப்பட்டீர்கள் என்று கூற முடியுமா? ஏனென்றால் உயர்மட்ட அதிகாரிகளுடன் பழக்கப்பட்ட உங்களுக்கு உள்ள தர்ம சங்கடம் எங்களுக்கு இல்லையல்லவா?

இந்திய அதிகாரிகளின் கருத்துக்கும், மிரட்டலுக்கும் பயந்து போய்த்தான் நீங்கள் இந்தியாவை அநுசரித்துப் போக வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தால் அதை எங்களால் விளங்கிக் கொள்வது கடிணமல்ல. இது இந்தியர்களுக்குக் கைவந்த கலை. தமக்குத் தேவையானதை மற்றவனை மிரட்டிப் பணியவைத்துப் பெற்றுக்கொள்வதில் இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை.

கவிஞ்ஞரே கருத்துக்களை முழுமையாகவே எழுதுங்களேன். உங்களுக்குத் தெரிந்த விடயங்கள் எங்களுக்கும் தெரிந்து விட்டுப் போகட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகுநாதன் கருத்துக்களில் பண்பைக்காட்டினால் நன்றாக இருக்குமே!

உங்கள் வாசகங்களில் கையாளல் மிகமோசமாக இருக்கின்றது புரியவில்லையா உங்களுக்கே?

நன்றி நாரதர் அருமையான தகவல்களை இணைத்திருக்கின்றீர்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாரதர் அவ்வப்போது கேட்ட விடயங்களாயினும் தொகுத்துப்பார்க்கிறது பயனுள்ளதாக உள்ளது. இதுபற்றி ஒரு தனிக் கட்டுரை எழுதுங்கள். ஆங்கிலத்தில் இலங்கையில் இந்தியா 1987 1990 கலக்கட்ட செய்ல்பாடுகளை பிரபல எழுத்தாளர் அல்லது அடேல் எழுதுவதும் தமிழ்நெற் போன்ற தளங்களில் கல்வியாளனின் நிதானத்தோடு இந்த விடயங்கள் மீண்டும் விவாதிக்கப் படுவதும் அவசியம்.

தேவன் உங்களுக்கு என்னுடைய நன்றிகள். உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

ரகுநந்தன் 1990 முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்கிறேன் என்ற குற்றச்சாட்டில் கருணாவின் ஆட்க்கள் என்னை மண்வெட்டும் சவளுடன் கிரான் சுடலைக்கு எடுத்துச் சென்றபோதும் அஞ்சி கலங்கி தடம்புரண்டவனல்ல. பின்னர் வன்னிக்கு அனுப்புமாறு வடக்கில் இருந்து வந்த உத்தரவால் காப்பாற்றப் பட்டவன். வானியிலேயே அஞ்சாதவன் வேறு எங்கும் அஞ்சிவிடுவேன் என்று யாரும் கருதிட வேண்டியதில்லை.இலங்கை இராணுவத்தோடும் அதிகாரிகளோடும் இதைப்போன்ற பல நெருக்கடிகளைச் சந்திதிருக்கிறேன். ரகுநந்தன் உங்கள் பிழையான interpritation எல்லாவற்றையும் என்கருத்தாக்கி குற்றம் சாட்டுகிறீர்கள். எனக்கு என் பணிமுக்கியம். உங்களுக்காக வாயைத்திறந்து நுணல்போலக் கெடமுடியாது. நீங்கள் மட்டும்தான் தாய்மண்ணை நேசிக்கிறவர் என்று கருதுகிறீர்களாக்கும். இனி நாம் விவாதங்களில் சம்பந்தப் படாமல் விலகி இருப்போம். ஒரு வாரத்தின் பின்னர் மீண்டும் வருகிறேன்.

அண்ணா டிக்சித்தின் சுங்கான் இன்னும் புகைஞ்சிட்டுத்தானிருக்கு. அவரு பத்திக்கிட்டாரு. மத்தவங்களும் அப்படித்தான். இந்தியாவைக் கடந்து இப்ப ஈழப்போராட்டம் வெளி வந்த நிiலை. இதெல்லாம் இப்ப சபைக்கு உதவாது விட்டுவிடுங்கள். சரித்திரங்கள் புதியதாக உருவாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன், தேவன், நன்றி உங்கள் கருத்துக்களுக்கு.

நீங்கள் சொல்வது சரி, எனக்கு சொல்லாடலில் மரியாதை தெரியாது. மேலும் என்னுடன் வீணே வாதிடுவதில் எந்தப் பயனும் இல்லை என்பதையும் ஒத்துக்கொள்கிறேன்.

ஆனால் நீங்கள் சொல்லிய ஓரிரு வரிகளை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்.

மீண்டும் உங்களின் நேரத்தை ஒதுக்கி கருத்துப் பகிர்ந்ததற்கு நன்றிகள்.

வணக்கம் !

கடந்த காலங்களில் இந்திய அதிகாரிகள் இந்திய அரசாங்கம் இந்திய அரசியல்வாதிகளுடனான முரண்பாட்டை இந்தியாவுடனான முரண்பாடாகப் பார்த்ததில் நாங்களும் எட்டிக்குப் போட்டியாக பல தவறுகளை இழைத்துவிட்டோம். இந்திரா அம்மையாருக்குப்பின் காங்கிரஸ் அரசுகளும் அதிகாரிகளும் பல அநீதிகளை எங்களுக்கு செய்துவிட்டார்கள். ஏட்டிக்குப் போட்டியாக நாமும் தவறுகள் இழைத்துவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா டிக்சித்தின் சுங்கான் இன்னும் புகைஞ்சிட்டுத்தானிருக்கு. அவரு பத்திக்கிட்டாரு. மத்தவங்களும் அப்படித்தான். இந்தியாவைக் கடந்து இப்ப ஈழப்போராட்டம் வெளி வந்த நிiலை. இதெல்லாம் இப்ப சபைக்கு உதவாது விட்டுவிடுங்கள். சரித்திரங்கள் புதியதாக உருவாகட்டும்.

நாம. அவர.களைவிட.டு பலநாளாச.சு

அவர.கள. எமைவிட.டுவிட வழி????

நாம. அவர.களைவிட.டு பலநாளாச.சு

அவர.கள. எமைவிட.டுவிட வழி????

குற்றுக்கள் எல்லாம் விழுந்து போச்சு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குற்றுக்கள் எல்லாம் விழுந்து போச்சு.

ippathan Chennaikku vantheen. iravu vasiththu pathil ezuthuveen

அய்யா கவிஞரே இந்திய அரசியல் கட்சிகளோடு தலைவர்களோடு பல வழிகளில் உறவுகள் புதுப்பிக்கப்பட்டு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் இந்தியாவில் (அது தமிழ்நாடாக இருக்கட்டும் டெல்லியாக இருக்கட்டும்) lobbying செய்ய வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. அவ்வாறான முயற்சியில் நீங்கள் இறங்கியிருக்கிறீர்கள் என்றால் அதற்கு என்னுடைய பாராட்டுக்களும் நன்றியும். இந்தியாவில் (தமிழ்நாடு உட்பட) தாயகம் சம்பந்தப்பட்ட தற்போதைய நிலமை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும் விளங்கியிருக்கும் என்ற நிலைப்பாடு அவர்கள் எமது ஆதரவாகத்தான் இயங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை (taking India for granted) நாமும் மாற்ற வேண்டும்.

ஒட்டு மொத்த இந்தியாவையும் ஒரே தட்டில் வைத்து பார்க்காது ஆதரவுத்தளத்தை அடிமட்ட நிலையில் கல்விமான்கள் மாணவர்கள் மட்டத்தில் நடுத்தரவர்க்கத்தின் மத்தியில் சிறுக சிறுக கட்டி எழுப்ப முடியும். இந்தியா கண்டு வரும் வேகமான பொருளாதார வழர்ச்சியால் ஏற்படும் உள்ளக சமூக அரசியல் மாற்றங்கள் இத்தகைய முயற்சிக்கு ஏதுவாகத்தான் இருக்கும்.

உங்கள் தொடர்புகள் எந்த மட்டத்திலே தெரியாது. 1980களில் இருந்து இலங்கை விவகாரங்களில் ஈடுபட்டவர்கள் என்றால் அவர்களிற்கு புதிதாக சொல்வதற்கு அதிகம் இருக்கப் போவதில்லை. அவர்கள் அந்த கறைபடிந்த வரலாற்றை உருவாக்குவதில் முன்னின்றவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நடந்தவற்றை எமது நிலையில் இருந்து கட்டுரை வடிவில் எழுதுங்கள் ஊடகவியலாளர் பாணியில் எழுதுங்கள் புத்தகமாக எழுதுங்கள் அடேல் போன்றவர்கள் எழுதுங்கள் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்ற antics தான் விளங்கவில்லை. உண்மையில் அப்படியான ஆக்கங்கள் உங்களது முயற்சிக்கு உதவும் என்றால் உதாரணத்திற்கு இந்தத்த தொடர் (இதுவரை 10 பாகங்கள் வந்துவிட்டது) மிகவும் விலாவாரியாக சொல்லி வருகிறது ஆதாரங்களுடன்.

http://www.sangam.org/2007/11/Indo_LTTE_Wa...gy.php?uid=2643

இந்தியாவோடு உறவுகளை புதுப்பிப்பதாக சொல்லிக் கொண்டு பழையதை கிளறி 2 தரப்பு நிலைப்பாடுகளையும் வைக்க வெளிக்கிட்டால் மீண்டும் 2 தரப்பிலும் உள்ள தீவிரவாத சிந்தனையுள்ளவர்களிற்கு களமமைத்துக் கொடுபதாக இருக்கும் என்பது தான் எனது தாழ்மையான கருத்து.

இந்தியாவிற்கும் ஈழத்திற்கும் இடையில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் என்பது உலகின் வேறு பகுதிகளில் ஒரு தேசியம் இன்னொரு தேசியத்தை மேலாண்மைவாத நிலையில் இருந்து அணுகிய போது உருவான வரலாறுகளோடு ஒப்பிடப்படக் கூடியவை. எல்லாத் தேசியங்களும் தமது நலன்களை முன்னொடுப்பதை இலக்காகக் கொண்டுதான் இயங்குகின்றன. அந்த முயற்சியில் முரண்பாடுகளும் ஒற்றுமையும் வருவது இயல்பு. அந்த வகையில் இந்தியா போன்ற வல்லரசுக் கனவோடு இயங்கும் பலமான தேசியம் அதன் நகர்வுகளை ஈழத்தின் தேசிய நலனிற்கு முரணாக இறுமாப்போடு முயற்சித்தது. அதை சந்ததி சந்ததியாக காலனித்துவத்தால் சிதைந்து மீண்டும் துளிர்விட முயன்று கொண்டிருந்த ஈழ தேசம் தன்னால் முடிந்தவரை எதிர்கொண்டது. அதில் இருந்து 2 தரப்புமே நிறைந்த அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்கள்.

இந்தியாவின் தேசிய நலனில் அக்கறை உள்ள ஒருவர் புலிகள் தவறுவிட்டார்கள் என்று வாதத்தை முன்வைத்து இன்றைய காலத்தில் நேரத்தை விரையமடிக்கமாட்டார். அதற்கான மூலகாரணம் வேறாகத்தான் இருக்க முடியும்.

ஈழத்தவர்களைப் (புலிகளைத் தவிர்த்து) பொறுத்தவரை இந்தியாவோடு கிடைத்த அனுபவத்தை இரைமீட்பது பற்றி எழுதினா இண்டைக் அடிச்சது இறங்கிவிடும். பிறகு எழுதுறன்

மேலே குறுக்கால போனவரின் கருத்தை தந்தை பெரியார் வழி பேரன்கள் பின்பற்றினாலே தமிழீழத்தில் படுகொலைகள் நிறுத்த படும் தேவை இல்லாமல் கோவில்களில் அரிப்பு எடுத்து அரிச்சனைகள் செய்ய தேவை இல்லல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவனுக்கும் சசிக்கும் நன்றி. நமது அரசியலில் 1950களில் இருந்தே வளக்கறிஞர்ப் பாணியிலான உள்வாரிப் பிரச்சாரம் நிறைய இருக்குறது. ஆரம்பத்தில் தயகத்தில் வாக்குப் பெட்டியை நிரப்பவும் பின்னர் புலத்தில் நிதி சேகரிப்பை உச்சப் படுத்தவும் உள்வாரிப் பிரச்சாரச்சார உத்திகள் பயன்பட்டுள்ளது. இதுவும் அவசியமான பணிதான். எனினும் இப்பணியில் ஈடுபடுகிற பலர் lobbying பணிகளை உள்வாரிப் பிரச்சாரத்தை ஆங்கிலத்தில் வெளிநாட்டு அரசுகளிடமும் அரசியல் சக்திகளிடமும் கொண்டு செல்வது என்றே புரிந்துகொண்டனர். நமது அலுவலகங்களுக்குப் பேச வருகிறவர்கள் எல்லாத் தருணங்களிலும் அடிப்படையான பிரசாரத்தையே திரும்பத் திரும்ப செய்ய முனைகிறார்களென மேற்கு நாடுகளின் ராசதந்தரிகள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

ஊர்வலங்களும் வெளிநாட்டவர்களுக்குப் பலம்காட்டுவதாகவே அமைகிறது. இத்தகய அணுகுமுறைக்கு உதரணமாக கொள்ளப்படும் குர்திஸ் போராளிகளின் PKK ஊர்வலங்களை தங்களை மிரட்டும் முயற்ச்சியென்றே மேற்குலகம் கருதுகிறது. நாம் மேற்குலகில் தனிமைப் பட்டமைக்கு lobby செய்யக்கூடியவர்கலைப் புறம்தள்ளிவிட்டு பிரசாரகர்கலை அந்தப் பணிக்கு பிரதியீடு செய்தமையும் முக்கியமான காரணமாகும்.

நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்ட தமிழர் ஆதரவைக் கோரிநிற்க்கிற உள்வாரிப் பிரச்சாரங்களை மட்டுமே நாங்கள் திட்டமிடலாம. அது நாம் சொல்வது. lobby பணிகளில் நாம் எதிர்கொள்ளும் நாட்டுகளும் சக்திகளும்தான் எந்தவிடயங்கள் அனுகப் படவேண்டுமென்பதைத் தீர்மானிக்கின்றன. அவர்களது அச்சங்களையும் தயக்கங்களையும் கோபங்கலையும் உண்மைத்தன்மை கெடாமல் நம்பிக்கையூட்டும் வகையில் மிகுந்த அரசியல் ஆழுமையுடன் நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேற்க்கு நாடுகளில் உள்ள குறச் சாட்டுகளுடன் சேர்த்து இந்தியச் செயல்பாடுகள்பற்றிய கேழ்விகளைப் பெரும்பாலான மேற்க்குலக ராஜதந்திரிகள் முன்வைக்கிறார்கள். இவற்றை பிரசாரகர் பாணியில் அனுகவோ பதில்சொல்லவோ வாய்ப்பில்லை.

ஜெனீவா பேச்சுவார்த்தைகளின் முறிவு தொடர்பான மேற்குலக வாதப் பிரதிவாதங்களையும் எனது அதிருப்தியையும் போராளிகளுக்கு விரிவாகத் தெரிவித்துள்ளேன், அவைபற்றி இங்கு பேசவேண்டியதில்லை. எனினும் lobby பிரசாரமல்ல என்கிற பிரக்ஞை இங்கு விவாதித்த எவரையும்விட போராளிகளுக்கு அதிகம் உள்ளது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருகிறது. மீண்டும் நீண்ட பிரயாணங்கள் இருப்பதால் ஒரிரு வாரங்களுக்குப் பின்னர் சந்திக்கலாம்.

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.