Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்பண்ணையின் கவிதை தொகுப்பு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல வரிகள் சுப்பண்ணை வாழ்த்துக்கள்

நன்றி முனி. இப்ப திருப்திதானே :D

நல்லாயிருக்கு :D

நன்றி தூயா

சகலதும் சிவமயம்..சிவன் இன்றி சக்தி இல்லை,"உன்னை போற்றிப்பாட எனக்கிங்கு வார்த்தையில்லை" என்று யாரும் கவி பாட வேண்டிய அவசியமில்லை காரணம் ஆண் இல்லையெனில் இவ்வுலகு இல்லை. :D

நன்றி புத்தா. ஆண்கள் மட்டும் இருந்து எதையும் செய்யேலாதுதானே பெண்களும் அவசியமப்பா. :wub:

சுப்பர் கவிதைகள் எல்லாம் பிரமாதம்.நீங்கள் ஆண்,பெண் என்று இரன்டு பகுதியையும் திருப்தி படுத்துறமாதிரி பூந்து விளையாடி இருக்கிறள்.அரசியலில உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. :)

சகீ நன்றி.அரசியலோ ???? :D பேசாமல் பனம்பழத்துக்கு கறுப்பு கண்ணாடி போட்டவரிண்ட கட்சியில் சேரவோ எல்லாத்துக்கும் நல்லது :lol::D

  • Replies 54
  • Views 8.1k
  • Created
  • Last Reply

பெண்களுக்கு கவிதை ஓன்று எழுதினவுடனே எல்லாரும் ஆண்களிக்கு இல்லையா என்கிறார்கள் சரி அவர்களுக்கு எழுதுவம் என்று நினைச்சால் நேற்று தூங்கப்போகும் போதுதான் இந்த கவிதை வந்தது சரி பாருங்கோவன்.

:) சக்தியின்றி சிவமில்லை

சிவமின்றி சக்தியில்லை

சரி இருவருக்குமே கவிதை எழுதிட்டியள் சுப்பண்ணை :D நன்று தொடருங்கள்.....

நோயொன்று வந்தாலும் இல்லை என்பாய் பிறர்க்கென்றால் கலங்கி நிற்பாய்

:D:lol::D சில ஆண்கள் தமக்கு குட்டியா டலை இடிச்சா கூட எல்லோர் மேலும் எரிஞ்சு எரிஞ்சு விழுவினம் தெரியுமோ? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

:huh: சக்தியின்றி சிவமில்லை

சிவமின்றி சக்தியில்லை

சரி இருவருக்குமே கவிதை எழுதிட்டியள் சுப்பண்ணை :D நன்று தொடருங்கள்.....

:(:D:( சில ஆண்கள் தமக்கு குட்டியா டலை இடிச்சா கூட எல்லோர் மேலும் எரிஞ்சு எரிஞ்சு விழுவினம் தெரியுமோ? :mellow:

தூர நின்று தண்ணியை ஊத்துங்கோ.ஊரில விசர் நாய்க்கு அப்படித்தான் செய்யிறவை :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes: சக்தியின்றி சிவமில்லை

சிவமின்றி சக்தியில்லை

சரி இருவருக்குமே கவிதை எழுதிட்டியள் சுப்பண்ணை :) நன்று தொடருங்கள்.....

:( சில ஆண்கள் தமக்கு குட்டியா டலை இடிச்சா கூட எல்லோர் மேலும் எரிஞ்சு எரிஞ்சு விழுவினம் தெரியுமோ? :lol:

நன்றி வெண்ணிலா

அது சில ஆண்கள்தானே மிகுதி ஆக்கள் எல்லாம் நல்ல ஆக்களல்லோ :wub:

தூர நின்று தண்ணியை ஊத்துங்கோ.ஊரில விசர் நாய்க்கு அப்படித்தான் செய்யிறவை :o

ஏன் சகி தண்ணி ஊத்துவான் காத்துபட்டாலே காணும் தானே :o

Edited by suppannai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடற்கரையில் காதல்

அழகிய கடற்கரை அதில் அவள் ஒரு கற்சிலை

கரை தொட்டிடும் அலையில் தொங்குது மனது

கலையும் காகக்கூட்டம் என் கனவினையும் சேர்த்து

காய்ந்திடும் கருவாடு என் இதயத்தை எடுத்து

கட்டிய மணல் கோட்டை அதில் சிதைந்ததோ என் மனக்கோட்டை

கூந்தல் வருடிய தென்றல் அவள் வாசம் உணர்த்தி சென்றதுவே

ஆடிடும் கட்டுமரத்தில் என் உறவும் ஆடிச் சென்றதுவே

சில்லிடும் குளிர்காற்றில் என் சிந்தையும் குளிர்ந்து போனதுவே

பாடிடும் அந்த தென்னை என் சோகத்தை உனக்கு சொல்லாதோ ?

பளிச்சிடும் அச்சங்கு என் மனதை உனக்கு காட்டாதோ ?

களைகட்டுது மீனவர் கூட்டம் என் களையினை எடுக்க யாருமில்லை

விளையாடிடும் பள்ளிச் சிறுவா என் கதையினை அவளுக்கு சொல்வாயோ?

Edited by suppannai

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்மகன்

தனக்கென வாழ்ந்திடும் உலகிலே நீ பிறர்க்கென வாழ்வாய்

உழைத்திடுவாய் ஓய்வின்றி உன் குடும்பம் காத்திடவே

நோயொன்று வந்தாலும் இல்லை என்பாய் பிறர்க்கென்றால் கலங்கி நிற்பாய்

துக்கத்தில் அழாவிட்டால் துன்பம் உனக்கு இல்லையா ?

உண்மையறியா உலகம் சொல்லட்டும் நீ வருந்தாதே

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் நன்றாயிருக்கு. அதிலும் ஆண்களுக்கு சமர்ப்பணம் அற்புதம். ஆச்சரியங்கள் தொடரட்டும் கவிஞரே!!!

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தமிழ்சிறி, சுவி :lol:

கனவு காதல்

காதலொன்று கண்டதில்லை

கன்னி சுகம் பார்த்ததில்லை

கவிதை ஓன்று பாடுகிறேன்

கனவில் வந்த காதல் இது

அத்தான் என அழைத்துவந்தாள்

அன்பாக பேசி வந்தாள்

சொல்லாத பலவும் - ஓர்

புன்சிரிப்பில் சொல்லி வந்தாள்

பாவையவள் வந்து நிற்க

வார்த்தை பகிஷ்கரிப்பு எனக்கு

கண்ணே என்று அழைத்தேன்

காதலில் நனைந்துவிட்டேன்

கை கோர்த்து நடந்தோம்

கண் பேச கண்டோம்

முத்தம் பல பரிமாறினோம்

முற்றிலும் மறந்தோம் எம்மை

முதல் முத்தம் தேனானது

ஸ்பரிசங்கள் விழுங்கியது என்னை

போய் வரவா என்றாள்

வந்துவிடு என்னோடு என்றேன்

அன்பே தூக்கத்தில் என் உளறல்

அம்மா வந்தார் தேநீரோடு

கனவா என்றார் கனிவோடு

கலைந்தது தூக்கம் அன்றோடு

நன்றி தமிழ்சிறி, சுவி :lol:

கனவு காதல்

அன்பே தூக்கத்தில் என் உளறல்

அம்மா வந்தார் தேநீரோடு

கனவா என்றார் கனிவோடு

கலைந்தது தூக்கம் அன்றோடு

கனவு நிஜமாக வாழ்த்துக்கள்... :lol::lol:

உங்கள் மற்றய கவிதைகளும் நன்றாயுள்ளன.

ம்ம்..சித்தப்பு..பு..!!.. :lol:

கனவிலும் காதலோ..லோ..??..கனவில் மிதந்து காதலில் தத்தளிக்காமல்..ல் கரையை வந்த கவி பயணம்..ம் அழகு வாழ்த்துக்கள் சித்தப்பு..பு..!!.. :unsure:

நிஜ காதலிற்கு தான் வில்லங்க வருவாங்க இங்க கனவிலுமா..மா.. :unsure: தொடருங்கோ சித்தப்பு..பு நானும் ஒருக்கா கனவை கண்டிட்டு பெறகு வாறன் உந்த பக்கம்..ம்...(கொஞ்ச நாளா கனவில பாவனாவை புறகணிப்பு செய்யிறன் எண்டா எண்ட பாருங்கோவன்).. :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனவு நிஜமாக வாழ்த்துக்கள்... :(:D

உங்கள் மற்றய கவிதைகளும் நன்றாயுள்ளன.

நன்றி மல்லிகைவாசம்.

ம்ம்..சித்தப்பு..பு..!!.. :)

கனவிலும் காதலோ..லோ..??..கனவில் மிதந்து காதலில் தத்தளிக்காமல்..ல் கரையை வந்த கவி பயணம்..ம் அழகு வாழ்த்துக்கள் சித்தப்பு..பு..!!.. :D

நிஜ காதலிற்கு தான் வில்லங்க வருவாங்க இங்க கனவிலுமா..மா.. :) தொடருங்கோ சித்தப்பு..பு நானும் ஒருக்கா கனவை கண்டிட்டு பெறகு வாறன் உந்த பக்கம்..ம்...(கொஞ்ச நாளா கனவில பாவனாவை புறகணிப்பு செய்யிறன் எண்டா எண்ட பாருங்கோவன்).. :D

அப்ப நான் வரட்டா!!

நன்றி மகனே,பாவனா புறக்கணிப்பு செய்யிறவோ இல்லை நீங்கள் புற கணிப்பு செய்யிறிங்களோ? :)

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு கவிதை ஓன்று எழுதினவுடனே எல்லாரும் ஆண்களிக்கு இல்லையா என்கிறார்கள் சரி அவர்களுக்கு எழுதுவம் என்று நினைச்சால் நேற்று தூங்கப்போகும் போதுதான் இந்த கவிதை வந்தது சரி பாருங்கோவன்.

சுப்பண்ணை! நீங்கள் கவிதையில் உங்களையே அர்ப்பணித்திருக்கிறீர்கள் சரி. வராவிட்டால் இசகுபிசகான முடிவுகள் எடுக்க வேண்டாம்.

நல்ல காலம்! ஆண்களுக்கான கவிதை வரவில்லையென்டுதானே தூங்கப் போனனீங்கள். கவிதை வந்ததால் தூங்கவில்லை அப்படித்தானே!!!

கவிதைகள் நன்று. தொடருங்கள் வாழ்த்துக்கள்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களுக்கு கவிதை ஓன்று எழுதினவுடனே எல்லாரும் ஆண்களிக்கு இல்லையா என்கிறார்கள் சரி அவர்களுக்கு எழுதுவம் என்று நினைச்சால் நேற்று தூங்கப்போகும் போதுதான் இந்த கவிதை வந்தது சரி பாருங்கோவன்.

சுப்பண்ணை! நீங்கள் கவிதையில் உங்களையே அர்ப்பணித்திருக்கிறீர்கள் சரி. வராவிட்டால் இசகுபிசகான முடிவுகள் எடுக்க வேண்டாம்.

நல்ல காலம்! ஆண்களுக்கான கவிதை வரவில்லையென்டுதானே தூங்கப் போனனீங்கள். கவிதை வந்ததால் தூங்கவில்லை அப்படித்தானே!!!

கவிதைகள் நன்று. தொடருங்கள் வாழ்த்துக்கள்!!!

நன்றி சுவி. நான் ஆண்களுக்கும் கவிதை எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் எழுதுவதற்குரிய பொருள் உடனே கிடைக்கவில்லை அதில் ஒரு குழப்பம் நிலவியது ஆனால் தூங்கப்போகும் போது எனது சிந்தனையில் உதித்ததே அந்த கவிதை. கவிதை எழுதுவதற்கு எமது மனநிலையும் சுற்றுப்புற சூழலும் மிகவும் அவசியம் என்றே எண்ணுகிறேன் ஏனேன்றால் அமைதியான நள்ளிரவிலேயே நான் கவிதை எழுவது அல்லது அதிகாலைபொழுதில் எழுதுவேன் :icon_mrgreen: .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வான் புலி வலம்

வான் புலி வலம் வரும் வானம் இதுவல்லவோ

வாழ்த்து தமிழா எம் வான் புலி வருகிறான்

வான் புலி தந்த எம் தலைவா வாழ்வாய் பலகாலம்

வடக்கில் எழுந்திடுவார் ஓர் சொடுக்கில் முடித்திடுவார்

இடரினை நீ தந்தாலும் தொடராக தொடுத்திடுவர்

சப்புகஸ்கந்தை எரிகிறதாம் கட்டுநாயக்க நடுங்குகிறதாம்

தூங்காது அவர் விழிகள் துயரங்கள் உனக்கு நிரந்தரம்

வானவேடிக்கை காட்டி எம்மவரை நீ வாழ்த்திடுவாய்

விரட்டிவரும் விமானம் வீணாக பறந்திடும் பின்னே

நீ விலங்கிட்ட தமிழன் விலங்குடைத்து பறக்கிறான்

ஈழம் மலர்கின்றதே எம் தேசம் விடிகின்றதே

இந்திரா தூங்கிடும் எம்மவர் வான் வலம் வந்தால்

ஒலிகனும் கனனும் நண்பர்கள் வான் புலிக்கு

பசூக்கா நீ அடித்தாலும் பதுங்கிடார் எம் புலிகள்

ஒடுக்குவார் உம் கொட்டம் ஓங்குவார் தமிழன் புகழ்

இலக்குகள் இடறாது உன் இடர்கள் தொடராது வான்புலிக்கு

தள்ளாடியில் அடித்தல் தள்ளடுகிறாய் நீ

எம் இதயத்தில் அடித்தாலும் எழுந்து பறப்பார் எம் புலிகள்

புயல் கற்று மழை எல்லாம் புன்னகைக்கும் அவன் வருகை கண்டு

விண்மீனை பறித்து எம் வான்புலிக்கு வாழ்த்துங்கள்

சந்திரனில் அமைத்திடுவோம் எம் வான் புலிக்கு தளமொன்று

நல்ல கவிதை :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை :unsure:

நன்றி தூயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் மயக்கம்

பட படவென்று சுட்டிக்கதை பேசும் சுந்தரவல்லியே

திருமணநாள் காணத்துடிக்கும் திருக்கார்த்திகை மலரே

தீராத காதல் என் மீது ஏன் உனக்கு

பஞ்சு விழி என்னை கொல்லுதே

பஞ்சமின்றி என்னை வாட்டுதே

பட்டு விரல் என்னை கிள்ளுதே

பலகதை பேசி என்னில் படருதே

பல்லவி நான் பாட சரணம் நீ பாட

செம் மாலை பொழுது மயங்குதே

சொக்கி தவிக்கும் அம் மாலை மல்லிகை

நம் சொந்தக்கதை பேசி மகிழுதே

சூரியன் மறைவது உன் காதலின் கட்டளைக்கோ

பௌர்ணமிகள் பொழிவதும் உன் காதலை வாழ்த்தவோ

விண்மீன் அள்ளி உன் கூந்தலில் சேர்த்திடுவேன்

உன் கையில் குழந்தையாவேன் நீ தீண்டி மகிழவே

சில மொட்டுக்கள் விரிந்திடும் உன் முத்தஒலி கேட்டு

பெண்ணே இது காணுமா உன் விரதங்கள் முடியுமா

விளக்கினை அணைக்கவா உன் விழிகளை மூடவா

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே இது காணுமா உன் விரதங்கள் முடியுமா

விளக்கினை அணைக்கவா உன் விழிகளை மூடவா

இது கார், மார்கழி மாதங்கள். விரதங்கள் தொடர்ச்சியாக வரப்போகுது சுப்பண்ணை!!!

ம்ம்..சித்தப்பு..பு..!!. :lol:

"விளக்கினை அணைக்கவா உன் விழிகளை மூடவா"..

இந்த வரியில உங்களிண்ட காதல் மயக்கம்..ம் நன்னா தெரியுது..து நன்கு ரசித்தேன் :D இவ் வரிகளை..ளை மொத்தத்தில் கவிதையை வாசித்து எனக்கு மயக்கம் வராம இருந்தவரைக்கும் சந்தோஷம்..ம்.. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணே இது காணுமா உன் விரதங்கள் முடியுமா

விளக்கினை அணைக்கவா உன் விழிகளை மூடவா

இது கார், மார்கழி மாதங்கள். விரதங்கள் தொடர்ச்சியாக வரப்போகுது சுப்பண்ணை!!!

விரதம் வந்தால் என்ன விரதம் ஒரு பெரியவிடயமே அல்ல :)

ம்ம்..சித்தப்பு..பு..!!. :(

"விளக்கினை அணைக்கவா உன் விழிகளை மூடவா"..

இந்த வரியில உங்களிண்ட காதல் மயக்கம்..ம் நன்னா தெரியுது..து நன்கு ரசித்தேன் :lol: இவ் வரிகளை..ளை மொத்தத்தில் கவிதையை வாசித்து எனக்கு மயக்கம் வராம இருந்தவரைக்கும் சந்தோஷம்..ம்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

தப்பு தப்பு தப்பு ........எண்ட காதல் மயக்கமில்லை கற்பனை காதல் மயக்கம் :lol: . நன்றி மகனே.ஏன் அந்தவரிதான் எல்லாருக்கும் பிடிச்சிருக்கோ..... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

" பட படவென்று சுட்டிக்கதை பேசும் சுந்தரவல்லியே

திருமணநாள் காணத்துடிக்கும் திருக்கார்த்திகை மலரே ...............

திருமண நாள் காணத்துடிக்கும் திருக்கார்த்திகை மலரே .........

மாவீரர் நாள் வருவதால் ,கார்த்திகை திருக்கார்திகை ஆனதோ ? ஆம் நல்ல கருத்து ,

ஈழ மலராள் ..........தமிழ் ஈழம் என்றும் திருமணம் காண துடிக்கிறாள் .

கவிஞர் அவர்களே ..........உங்கள் கற்பனை வளம் , நிஜமாக் வாழ்த்துக்கள்

நிச்சயம் வரும் . .

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சோகத்தின் காதலன்

ஏன் இந்த சோகம் எப்பொழுதும்

சோகத்தின் காதலன் நானே தான்

அன்னைமடி உறங்கியிருந்தேன் துன்பமில்லையே

அவள் கண்ணீர் துடைக்க புறப்பட்டேன் இன்பமில்லையே

விதி ஓன்று விளையாடுகின்றது என் வாழ்க்கையிலே

புது வினை வந்து சேருகின்றது புது கோலத்திலே

விரக்தியே மிஞ்சுகின்றது என் ஏக்கத்திலே

நினைப்பதெல்லாம் நடக்காது நானறிவேன்

இறைவா நீ தானே நினைத்தாயே நடத்திவிடு

ஏமாற்றங்கள் சிலவேளை மனதினில் பாயலாம்

ஏமாற்றமே தொடர்ந்தால் மனம் பாய்ந்துவிடுமே

விருட்சங்கள் தாங்குது பல விழுதுகளைத்தான்

விழுதே விருட்சத்தை அரித்தால் என்ன செய்வேன்

புது வருடம் பிறக்கப்போகும் நேரத்திலே

புது வசந்தம் வந்து சேராதா இந்த காலத்திலே

முயற்ச்சிகள் தோற்பதில்லை முடிவினிலே

முயற்சிக்கும் மனமில்லையே நெஞ்சினிலே

பலமுறை அழுதுவிட்டேன் பலவற்றை எண்ணி

இப்பொழுது அழவும் முடியவில்லையே சிலவற்றை எண்ணி

விரக்தியின் உச்சத்தில் நிலைதடுமாறுகின்றேன்

எனக்கொரு வழி காட்டிடு நான் நம்பும் இறைவா

கலங்காத மனது இன்று கலங்கி கதறுகிறதே

அழைப்பவனை காத்திடும் அந்தோணியாரே

என் மீது இரக்கமில்லையா உமக்கு

என்ன பாவம் செய்தேன் சொல்லுமையா

என் குருதியால் உம் பாதம் கழுவிடுவேன்

எனக்கு விடை தாருமையா அந்தோணியாரே

என்னை போக வழிவிடுமையா அந்தோணியாரே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சோகத்தின் காதலன்

விரக்தியே மிஞ்சுகின்றது என் ஏக்கத்திலே

நினைப்பதெல்லாம் நடக்காது நானறிவேன்

இறைவா நீ தானே நினைத்தாயே நடத்திவிடு

ஏமாற்றங்கள் சிலவேளை மனதினில் பாயலாம்

ஏமாற்றமே தொடர்ந்தால் மனம் பாய்ந்துவிடுமே

விருட்சங்கள் தாங்குது பல விழுதுகளைத்தான்

விழுதே விருட்சத்தை அரித்தால் என்ன செய்வேன்

புது வருடம் பிறக்கப்போகும் நேரத்திலே

புது வசந்தம் வந்து சேராதா இந்த காலத்திலே

முயற்ச்சிகள் தோற்பதில்லை முடிவினிலே

முயற்சிக்கும் மனமில்லையே நெஞ்சினிலே

பலமுறை அழுதுவிட்டேன் பலவற்றை எண்ணி

இப்பொழுது அழவும் முடியவில்லையே சிலவற்றை எண்ணி

விரக்தியின் உச்சத்தில் நிலைதடுமாறுகின்றேன்

எனக்கொரு வழி காட்டிடு நான் நம்பும் இறைவா

கலங்காத மனது இன்று கலங்கி கதறுகிறதே

என் குருதியால் உம் பாதம் கழுவிடுவேன்

எனக்கு விடை தாருமையா அந்தோணியாரே

என்னை போக வழிவிடுமையா அந்தோணியாரே

சோகங்கள் இல்லாத வாழ்க்கை உண்டோ சுப்பண்ணை?!! சுமைகள் இல்லாத மனிதர் உண்டோ? வேதனை இல்லாத பொழுதும் உண்டோ?!! தோல்விகள் சூழாத செயலும் உண்டோ?!! விரக்தி" என்பது வேண்டா விஷமுள்!! அதை இன்றே அகற்றிடுங்கோ!! வாழ்க்கை என்பது இறைவனின் பெருவரம் ! துணிந்தே செயற்படுங்கோ! நிழலைக் கண்டே பயந்து ஒளிந்தால் நிஜங்கள் கனக்காதோ?!!! வாழ்வில் சகஜம் இதுவென எண்ணியே துணிந்தால்! பூமி சொர்க்கமாய் ஆகாதோ?!!

விழவிழ எழுவது துணிந்தவன் செய்வது! உறுதியைக் கொண்டால் வெற்றி கைவசம் என! துணிந்தே செயற்படுங்கோ. வாழ்வை சுகமாய் ஆக்கிடுங்கோ!! பிறகின்ற வருடம் புத்தொளி தரட்டும்! பிறக்கின்ற பொழுது புத்துயிர் தரட்டும்! நீங்களும் புதிதாய்ப் பிறந்ததாய் எண்ணி வாழ்வைக் கொண்டாடுங்க! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை வணக்கம்! சோகம்தான் இன்பத்தின் ஆதாரம். தொடருங்கள். வாழ்த்துகள்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோகங்கள் இல்லாத வாழ்க்கை உண்டோ சுப்பண்ணை?!! சுமைகள் இல்லாத மனிதர் உண்டோ? வேதனை இல்லாத பொழுதும் உண்டோ?!! தோல்விகள் சூழாத செயலும் உண்டோ?!! விரக்தி" என்பது வேண்டா விஷமுள்!! அதை இன்றே அகற்றிடுங்கோ!! வாழ்க்கை என்பது இறைவனின் பெருவரம் ! துணிந்தே செயற்படுங்கோ! நிழலைக் கண்டே பயந்து ஒளிந்தால் நிஜங்கள் கனக்காதோ?!!! வாழ்வில் சகஜம் இதுவென எண்ணியே துணிந்தால்! பூமி சொர்க்கமாய் ஆகாதோ?!!

விழவிழ எழுவது துணிந்தவன் செய்வது! உறுதியைக் கொண்டால் வெற்றி கைவசம் என! துணிந்தே செயற்படுங்கோ. வாழ்வை சுகமாய் ஆக்கிடுங்கோ!! பிறகின்ற வருடம் புத்தொளி தரட்டும்! பிறக்கின்ற பொழுது புத்துயிர் தரட்டும்! நீங்களும் புதிதாய்ப் பிறந்ததாய் எண்ணி வாழ்வைக் கொண்டாடுங்க! :(

தமிழ்தங்கை நன்றி உங்கள் கனிவான கருத்துக்கு.நீங்கள் சொன்னது சரிதான்.இந்த கவிதை நேற்று காலையில் எழுதினேன் காலையிலேயே ஒரு கஷ்டமான செய்தி வந்தது என்னசெய்வதென்றே தெரியாத நிலையில் எழுதிய கவிதையே இது.அதை யாழில் இணைத்துவிட்டு யாழோடு சிலமணித்துளிகள் செலவிட்டேன் மனதில் இருந்த கவலை சிறிது சிறிதாக குறைந்தது.நன்றி தமிழ்தங்கை உங்கள் வாழ்த்துக்கு உங்களுக்கும் வரப்போகும் புதுவருடம் எல்லா வளங்களையும் அழியா மகிழ்ச்சியையும் தர இறைவனை வேண்டுகிறேன் :( .

சுப்பண்ணை வணக்கம்! சோகம்தான் இன்பத்தின் ஆதாரம். தொடருங்கள். வாழ்த்துகள்!!!

வணக்கம் சுவி .சோகம்தான் எல்லாத்துக்கும் முதல்படி ஆனால் சிலவேளைகளில் அது மறந்துபோய்விடுகிறதே. நன்றி உங்கள் ஆதரவுக்கு :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.