Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேணல்(Colonel) கிட்டுவின் இறுதி மணித்துளிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேணல்(Colonel) கிட்டுவின் இறுதி மணித்துளிகள்

கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் வங்கக் கடலில் வைத்து விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டுவையும் அவருடன் பயணித்த 9 போராளிகளையும் பலி கொண்டதன் மூலம் தமிழர் வரலாற்றின் துரோகப் பக்கங்களில் இமயநாடு தனக்கென தனியிடத்தைப் பிடித்துக் கொண்டது.

1985 ஆம் ஆண்டு யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாக கிட்டு நியமிக்கப்பட்டார்.

பின் தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசத்திற்கு உணர்த்துவதற்காக சர்வதேச தொடர்பாளனாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

07-01-1993 அன்று இந்தோனேசியாவின் மலாக்காவிலுள்ள பியூபர் கலா தீவில் தளபதி கிட்டுவும் மற்றும் 9 போராளிகளும் ஹொண்டூராஸ் நாட்டிலுள்ள சான் லோரன்யோ என்னும் துறை முகத்தில் பதிவு செய்யப்பட்ட எம்.வி. அகத் என்னும் கப்பலில் ஏறினார்கள்.

13 ஆம் திகதி அன்று இந்தியாவிலிருந்து 440 கடல் மைல்களுக்கு அப்பாலும் இலங்கையின் தென் முனையிலிருந்து 290 கடல் மைல்களுக்கு அப்பாலும் நில நேர் கோட்டிற்கு வடக்கில் 6 பாகையிலும நிலைக் கோட்டிற்கு கிழக்கே 8 பாகையிலும் எம்.வி. அகத் கப்பல் தளபதி கிட்டுவுடனும் ஏனைய 9 போராளிகளுடனும் சென்று கொண்டிருந்தது.

குறிப்பிட்ட பகுதியை வந்தடைந்த கப்பல் 16 ஆம் திகதியே யாழ்ப்பாணத்தை சென்றடைய வேண்டியிருந்ததால் அங்கிருந்து வரும் சமிக்ஞைக்காக காத்திருந்தார்கள். அதேநேரம் இரவு 10.30 மணியளவில் இந்திய கடற்படை கப்பலொன்று விடுதலைப் புலிகளின் கப்பலை நெருங்கியது.

இரவு நேரமென்பதால் இந்திய கப்பலை விடுதலைப் புலிகளால் இனங்காண முடியவில்லை. இதேவேளை, இந்திய கடற்படைக் கப்பலிலிருந்து வானொலி மூலமாக எம்.வி. அகத் கப்பலின் கப்டன் ஜெயச்சந்திரனுடன் தொடர்பு கொள்ளப்பட்டது. திருகோணமலையை நோக்கியா இந்தக் கப்பல் செல்கிறதென கேட்கப்பட்ட கேள்விக்கு கப்டன் ஜெயச்சந்திரன் ஆமென பதிலளித்தார். அடுத்ததாக நீங்கள் இலங்கைத் தமிழர்களாவென கேள்வி தொடுக்கப்பட்டது. அதற்கும் ஆமென பதிலளிக்கப்பட்டது. இதன் பின்னர் கப்பலில் பயணிகள் இருக்கின்றார்களாவென்பதை அறிய கப்பல் கப்டன் விரும்புவதாக கூறப்பட்டது. இதனால் சினமடைந்த கப்பல் கப்டன் ஜெயச்சந்திரன் எங்களைக் கேள்வி கேட்கும் நீங்கள் யாரென பதில் கேள்வி கேட்டபோதும் அதற்கு பதில் வழங்கப்படாது அகத் கப்பலை பார்வையிட வேண்டுமென்பதில் இந்திய கடற்படைக் கப்பல் கப்டன் உறுதியாகவிருந்தார். இந்நிலையிலேயே தங்கள் கப்பலை நெருங்கக் கூடாதென அந்த கப்பலின் கப்டன் ஜெயச்சந்திரன் இந்திய கடற்படைக் கப்பலுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதன் பின்பே தாம் இந்திய கடற்படை என அறிவிக்கப்பட்டது.

ஐ.என்.எஸ். 38 விவேகா என்னும் இந்திய கடற்படைக் கப்பல்தான் தங்களை வழி மறித்துள்ளதென்பதை புலிகள் புரிந்து கொண்டனர். இதையடுத்து எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் இறங்க வேண்டாமென தளபதி கிட்டு தனது போராளிகளுக்கு உத்தரவிட்டார். இதன் பின் இந்திய கடற்படைக் கப்பலின் கப்டனும் வானொலியில் பேசுவதற்கு விரும்புவதாக கிட்டு அறிவித்தார்.

இதையடுத்து இடம்பெற்ற உரையாடலின் போது எங்களுடைய கப்பலை ஏன் தடுத்து வைத்துள்ளீர்களென கிட்டு விசாரித்தபோது அது பற்றி எனக்குத் தெரியாது. உங்களுடைய கப்பலை கரைக்கு கொண்டு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதற்கு உடன்படத் தவறினால் உங்கள் கப்பல் தாக்கப்படுமென இந்தியக் கடற்படைக் கப்பலின் கப்டன் தெரிவித்தார்.

ஏற்கனவே இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான உறவு சீராக இல்லாததால் இந்திய கடற்படைக் கப்பலை தாக்கினால் அது வேண்டாத விளைவுகளை ஏற்படுத்துமென்பதை உணர்ந்து கொண்ட கிட்டு, எமது உயிரை இழந்தாலும் பரவாயில்லை இந்திய கப்பலைத் தாக்கக் கூடாதென போராளிகளுக்கு கடும் உத்தரவிட்டார். இதையடுத்து இந்திய கப்பலைத் தொடர்ந்து செல்லுமாறு தனது கப்பலின் கப்டனுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் மற்றொரு இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். பாப்பா 44 கிருபாணி என்னும் கப்பல் ஒரு புறமும் ஐ.என்.எஸ் 38 விவேகா கப்பல் மறுபுறமுமாக அகத் கப்பலுக்கு பாதுகாப்பு வழங்கி கரையை நோக்கி அழைத்துச் சென்றன.

எம்.வி. அகத் கப்பலில் புலிகளின் முக்கிய தளபதியான கேணல் கிட்டு பயணம் செய்கிறாரென்பதை நன்கு தெரிந்துகொண்டு அவரை யாழ்ப்பாணம் செல்லவிடாது தடுத்து உயிரோடு சிறை பிடித்துச் செல்லவே இந்திய கடற்படைக் கப்பல்கள் வந்திருக்கின்றனவென்ற உண்மையை விடுதலைப் புலிகள் உணர்ந்து கொண்டனர்.

இதேவேளை, தளபதி கிட்டு இந்திய கடற்படைக் கப்பல் கப்டனுடன் மீண்டும் பேச விரும்புவதாக தெரிவித்தார். சம்மதம் கிடைத்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து சமாதான திட்டமொன்றைப் பற்றி விவாதிக்கவே தான் யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருப்பதாக கிட்டு விளங்கப்படுத்தினார். ஆனால், இந்தியக் கடற்படைக் கப்பல் கப்டனோ அவர்களை சென்னையை நோக்கி வருமாறு வற்புறுத்தினார். சென்னைக்கு ஏன் தாம் வரவேண்டுமென கிட்டு வினவியபோது தனக்கு எதுவும் தெரியாதெனவும் சென்னை வந்தவுடன் உயர் அதிகாரிகள் உங்களைச் சந்தித்து விபரம் தெரிவிப்பார்களெனவும் இந்திய கடற்படைக் கப்பல் கப்டன் கூறினார்.

இப் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே கப்பலும் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சென்னைக்கு அருகேயுள்ள எண்ணூரிலிருந்து கிழக்கே 16 ஆவது மைலுக்கு அகத் கப்பல் வந்த போது, அதை நிறுத்தி நங்கூரம் பாய்ச்சும் படி கிட்டு கப்பல் கப்டனுக்கு உத்தரவிட்டார். இதற்கு மேல் பயணம் செய்து இந்திய எல்லைக்குள் நுழைவதற்கு கிட்டு மறுத்து விட்டார்.

இதேநேரம் இன்னொரு இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ்.சாவித்திரியும் கிட்டுவின் கப்பலை முற்றுகையிட்டிருந்த இரு கப்பல்களுடன் இணைந்து கொண்டது.

இந்நிலையில் உடனடியாக சரணடையும் படி கிட்டுவுக்கு உத்தரவிடப்பட்டது. அதற்கு மறுத்து விட்டு கிட்டு, தன்னுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்பினால் இந்திய உளவுத் துறை தலைவர்களையோ அல்லது சென்னையிலுள்ள அரசியல் தலைவர்களையோ அழைத்து வரும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் இதை ஏற்பதற்கு இந்திய கடற்படை தளபதி மறுத்து விட்டார்.

16 ஆம் திகதி காலை 6 மணிவரை அவகாசம் வழங்கப்படுவதாகவும் அதற்குள் கிட்டுவும் ஏனையவர்களும் சரணடைய வேண்டுமெனவும் இல்லையெனில் கப்பல் தாக்கப்பட்டு சிறை பிடிக்கப்படுவீர்களெனவும் கிட்டுவுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

சரியாக காலை 6 மணிக்கு இரு ஹெலிகொப்டர்களும் மூன்று போர் விமானங்களும் கிட்டுவின் கப்பலை சுற்றி வட்டமிட்டன. சிறிது நேரத்தில் கிட்டுவின் கப்பலை இந்திய கடற்படைக் கப்பல்கள் மிகவும் நெருங்கி வந்தன.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொண்ட கிட்டு கப்பலின் கப்டன் ஜெயச்சந்திரனையும் மாலுமிகளையும் கடலில் குதித்து தப்பிச் செல்லுமாறு உத்தரவிட்டார். இதற்கு அவர்கள் மறுக்கவே சிலரை கிட்டு தானே கடலுக்குள் தள்ளிவிட்டார். தனக்காக உயிர் விட தயாரான கப்பலின் கப்டனையும் மாலுமிகளையும் அநியாயமாக பலி கொடுக்க விரும்பாததாலேயே கிட்டு அவர்களை தப்புமாறு உத்தரவிட்டார்.

சரியாக காலை 6.30 மணியளவில் கிட்டு பயணித்த எம்.வி.அகத் கப்பல் வெடித்து தீப்பிடித்துக் கொண்டது. இந்தியாவின் கைகளில் சிக்க விரும்பாத கிட்டுவும் ஏனைய 9 போராளிகளும் சர்வதேசக் கடலிலேயே தம்மைத் தாமே வெடிக்க வைத்து கப்பலுடன் சங்கமமாகினர்.

கடலில் குதித்த கப்பல் கப்டனையும் மாலுமிகளையும் இந்திய கடற்படைக் கப்பல் சிறை பிடித்தது. கைது செய்யப்பட்டவர்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் சென்னைக்கு அருகேயே கிட்டுவின் கப்பலை சுற்றி வளைத்ததாக இந்திய கடற்படை குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்தவர்களை விசாகபட்டினத்திற்கு கொண்டு சென்றனர். சென்னைக்கு கொண்டு வந்தால் தமிழ் நாட்டு மக்களிடையே கொதிப் புணர்வும் கிளர்ச்சியும் வெடிக்கலாமென அஞ்சியதே இதற்கு காரணமாகும்.

சென்னைக்கு அருகே சென்ற மர்மக் கப்பலை தாங்கள் சுற்றிவளைத்ததாகவும், அக் கப்பலில் பெயரோ கொடியோ காணப்படவில்லையெனவும் இந்திய கடற்படை பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டது.

கிட்டுவின் கப்பலை இந்திய கடற்படையினர் இரவு 10.30 மணியளவிலேயே வழி மறித்தனர். இந்நிலையில் கப்பலில் கொடி பறக்க வில்லையென கூறுவது அர்த்தமற்றது. ஏனெனில் எந்த நாட்டுக் கொடியும் சூரியன் மறைந்த பின்பு பறக்கவிடப்படுவதில்லை. கிட்டுவின் கப்பலை சுற்றி வளைத்த இந்திய கடற்படைக் கப்பல்களில் கூட அந்த நேரம் இந்தியக் கொடி பறக்கவில்லை.

மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக பல தளபதிகள், போராளிகள் சாவை அரவணைத்து தமிழின விடியலுக்கு வழிகாட்டி நிற்கின்றனர்.

நேதாஜி அவர்களின் வரிகள் நினைவுக்கு வருகின்றன,

'''Freedom is not given, it is taken.. One individual may die for an idea; but that idea will, after his death, incarnate itself in a thousand lives. That is how the wheel of evolution moves on and the ideas and dreams of one nation are bequeathed to the next...' Netaji Subhas Chandra Bose .

unarvukaL.com

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அகிம்சை, காந்தியம் என்று புருடா விடும் பாரத தேசம், தளபதி கிட்டு இந்தியாவுக்குள் நுளையமுற்பட்டார் என்று பொய்யான செய்தியை தமிழ் நாட்டு ஊடகங்களில் வெளிவரச் செய்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.