Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிராண்ட்பாஸ் டி மெல் மாவத்தை ஸ்ரீ முத்துமாரியம் தேவஸ்தானத்தில் பிக்கு ஒருவரால் தெய்வ உருவச்சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது

Featured Replies

வணக்கம் உறவுகளே!

மதவெறிபிடித்த காவிக்காடயனின் ஈனச்செயலை மனிதர்கள் எவரும் மன்னிக்கமாட்டார்கள்

புத்தனின் பெயரால் எத்தனை கொடுமைகள்.

மதங்கள் மனிதருக்குத்தேவை

மதவெறிகள் பாழாய்போன அரசியலுக்குதான் தேவை

மதவெறி கழைந்து மனிதனாய் இருப்போம்.

  • Replies 75
  • Views 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாத்திக வெறியர்களுக்கு தங்களின் நாத்திக கொள்கைகளை திணிப்பதே பிரதானமாக இருக்கிறதே தவிர.. நடந்த சம்பவத்தின் பின்னால் அரச பயங்கரவாதம் இருக்கிறது என்ற பிரச்சாரப்படுத்தல் அவர்களுக்குத் தெரியவில்லை.

ஒரு நாத்திகவாதி கேட்கிறார்.. அம்மனின் கையில் இருந்த ஆயுதங்கள் ஏன் பிக்குவைத் தாக்கவில்லை என்று. நாளை அவர் கேட்கக் கூடும்... அம்மன் தனது நிலைக்கு ஏன் ஜோர்ஜ் புஸ்ஸிடம் முறையிடவில்லை என்று. இப்படிப்பட்ட முட்டாள் தனம் நிறைந்த நாத்திக வாதமல்ல இப்போது தேவை.

சிங்கள பெளத்த பேரினவாதம் என்பதன் கொடிய பயங்கரவாத செயற்பாடுகளில் இதுவும் ஒன்று. தலதாமாளிகையை தாக்கிய போது.. அதை பெளத்தத்துக்கு எதிரான தமிழ் பயங்கரவாதிகளின் தாக்குதல் என்று உலகம் பூராவும் பிரச்சாரம் செய்தது சிங்கள அரசு.

ஆனால்.. எம்மவர்களோ.. இதை நாத்திகப் பிரச்சாரத்துக்கு கையில் எடுக்க முண்டியடிப்பதைச் செய்கிறார்களே தவிர.. தமிழ் மக்களுக்கு உண்மையில் அவர்களின் மதச் சுதந்திரம் கூட அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இல்லை என்பதை சொல்ல இதைப் பாவிக்க முயலவில்லை. அதுமட்டுமன்றி சிங்கள அரசு இந்து மதத்துக்கு எதிராக நடத்திய மத வெறித்தாக்குதல் என்பதாகவும் இது காட்டப்படலாம். இது ஒரு தொடர் தாக்குதலின் விளைவு என்று பழைய வரலாற்று துர்ப்பாக்கிய நிகழ்வுகளை கூட மீள உலகின் கண்களின் முன் கொண்டு வரலாம். ஆனால் அதைச் சொல்ல அவர்கள் தயாரில்லை. ஏனெனில் அதைச் சொன்னால்.. அது நாத்திக கோமாளித்தனத்துக்கு கேடாகிடும் என்று நினைக்கிறார்கள்.

இந்துக்களை அதிகமாகக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளே.. சிறீலங்காவுக்கு இராணுவ ரீதியில் உதவி வருகின்றன. அங்குள்ள மக்களும் அவை குறித்து அக்கறை செய்வதில்லை. இவ்வாறான சம்பவங்களை சரியான வடிவில் பிரச்சாரப்படுத்துவதன் மூலம்.. இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் சிறீலங்காவில் இந்து மதத்தைப் பின்பற்றும் தமிழ் மக்கள் மீதும் சிங்கள பெளத்தம் ஒரு அழிப்பு நடவடிக்கையை செய்வதாக.. ஆதாரத்துடன் காட்டி.. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உண்மை முகத்தை அவர்களுக்கு காட்ட முடியும். இது இன்று நேற்றல்ல நிகழ்கிறது.. நயினை நாகபூசனி அம்மன் தேரை எரித்ததில் இருந்து.. இதைத்தான் செய்கிறது சிங்கள பெளத்த பேரினவாதம்.

ஆனால் நாம் அவற்றை சரியான வடிவில் வெளி உலகுக்கு கொண்டு வராததால் தான்.. பல கோடி இந்துக்களின் அனுதாபத்தை எம் பக்கம் வைத்திருக்கத் தவறி இருக்கிறோம்.

நல்லூரில் மக்கள் மத்தியில் இராணுவ சீருடையில் அரச படைகள் செயற்பட்டு சமயத் தொண்டாற்றுவதாகப் பிரச்சாரம் செய்ய சிங்களப் பேரினவாத அரசுக்கு என்ன தேவை இருக்கிறது. அதில் உள்ள பிரச்சார நோக்கிற்கு பதிலடியாக இச்சம்பவத்தை மாற்ற முடியும். காரணம்.. இந்தச் சம்பவம் சர்வதேச ஊடகவியலாளர்கள் அவதானிக்கக் கூடிய இடமொன்றிலேயே நிகழ்ந்துள்ளமை தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு சாதகமான காரணி.

ஆனால்.. அதைச் செய்ய விளையாத தமிழ் மக்கள் விரோத நாத்திகக் கூட்டம்.. தங்களின் வறண்டு போன செத்துப் போன.. கொள்கைகள் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் ஓடுவது தமிழ் மக்களின் கையறு நிலையையே காட்டுகிறது.

மனோ கணேசன் இச்சம்பவத்தை கண்டித்திருப்பதுடன்.. பெளத்த பிக்குகளின் இன மத வெறித்தன்மையை வெளிக்கொணரவும் செய்துள்ளார். ஏன் எம்மவர்களுக்கு அப்படியான ஒரு கோணத்தில் இதை பாவிக்க முடியவில்லை.

தேங்காய் உடைக்கிறதாகட்டும்.. இச்சம்பவம் ஆகட்டும்.. சிங்கள பெளத்த பேரினவாத மத வெறிக்கு நிகராக ஈழத்தில் இந்து மத வெறி இருக்கிறது என்று ஒரு போலி தன்மையை நிலைநாட்ட ஒரிசா வரை போய் ஆதாரம் தேடி வரும் நாத்திகக் கூட்டம்.. ஈழத்தில் தமிழ் மக்களின் நிலைக்காக நீலிக்கண்ணீரும் வடித்துக் கொள்கிறது. இது அவர்களின் போலி அக்கறையைத் தானே காட்டுகிறது.

இதையேதான் டக்கிளசும் செய்கிறான். கருணாவும் செய்கிறான். இக்கூட்டங்கள் எம்மத்தியில் இருக்கும் வரை... சிங்கள பெளத்த பேரினவாதம்.. தமிழ் மக்களை அழிப்பது நியாயப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்..! :D:):):lol:

நெடுக்காலபோன்.....!

உங்களின் சிந்தனையையும்.... எண்ணத்தையும் புரிந்து கொள்ள முடிகின்றது. அதை நான் மறுப்பதற்கில்லை.

ஆனால் நாத்தீகவாதிகளை வீண் வம்புக்கு முதன் முதலில் ஒரு ஆத்தீகன் வம்புக்கிளுப்பதை நீங்கள் முதலில் இருந்து பார்த்ததால் தெரியும்.

நான் கடவுளை எதிர்ப்பதில்லை.... ஆனால் கடவுளை மனிதனே படைத்தான் என்பதை நான் முழுமனதுடன் நம்புகிறேன் அதை ஆதாரத்துடன் இங்கே பார்க்கிறேன். மனிதன் படைத்தாலும் அதனால் அவனுக்கு ஏதாவது நன்மை இருக்குமெனில் அது நல்லதுதானே என்றுதான் நான் எண்ணுகிறேன்....... அதற்காக முழு சமூதாயத்திற்கும் ஒர வஞ்சனை செய்துவிட்டு ஒரே ஓரு சமூகம் மட்டும் கடவுளின் பெயரால் வாழநினைத்தால். எவ்வாறு எதிர்காமல் இருக்க முடியும்??? கடவுளை நீங்கள் நம்புங்கள் அது உங்கள் அறிவுடன் சம்ந்தபட்டது...... நம்பாத எங்கள் மேல் அதை ஏன் திணிக்கின்றீர்கள் (நீங்கள் இல்லை சிலர் செய்கின்றார்கள்)???

நாரதர் சொன்னதுபோல்..... நீங்களே பாருங்கள்.

நாத்தீக்வாதியால் ஏதாவது ஒரு மதத்திற்கு தீங்கு நடக்கின்றதா என்று? இன்னொரு மதவாதியால்தான் மற்றைய மதத்தவன் அல்லல் படுகிறான் அடிபடுகிறான். மதங்கள் அன்பையே அடிப்படையாக போதிக்கிறன்றன.....இவன் எங்கிருந்து இந்த வெறியை பெறுகிறான்??? இவனது அறிவுதான் அதற்கு காரணமாகிறது......

அதனால்தான் மதவாதிகள் அறிவு பெறவேண்டும் என்று நாம் அடிக்கடி சொல்கிறோம்..... நீங்கள் அறிவுடையவராயின் நீங்கள் வாதம் செய்ய வேண்டியது உங்களுடைய சக மதவாதிகளுடன்தான் எம்முடன் அல்ல...... அவர்களுக்குதான் சக மனிதனை மனிதனாகவே பார்க்க கூடிய அடிப்படை அறிவு தேவையாய் இருக்கிறது.

எந்த மதத்தின் சிலை உடைக்கப்படது என்பதை விட.... ஒரு மனிதனின் படைப்பு சிதைக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கு சிதைத்தவனின் காரணத்தை நானும் நீங்களும் விவாதத்திற்கு எடுத்தால் என்ன முடிவுக்கு வரலாம்???

தனது கடவுள் இல்லை எனும் அவனது முட்டாள்தனமான அறிவைத்தானே சாடலாம்? அல்லது கடவுளை அரசியல் ஆக்கும் அவனது எண்ணத்தை தானே சாடலாம்??

தமிழனுடையது இனவெறியால் சிதைகிறது எனும்போது உங்களுக்கு வர கூடிய அனைத்து ஆதங்கமும் எனக்கும் வருகிறது நெடுக்காலபோவான்.... ஆனால் சிலருடைய திணிப்பும் வீண் மதவெறியும் என்னால் ஏற்கமுடியாது உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவும் நடைமுறையும் எல்லா நெரங்களிலும் ஒத்துப்போவதில்லை. பகுத்தறிவு சொல்வது போல,

1. மதங்கள் - வெறும் மாயைகள்.

2. பாசைகள் - வெறும் சப்தங்கள்.

3. கலாசாரங்கள் - வெற்று நடைமுறைகள்.

4. நாட்டு எல்லைகள் - செயற்கைக்கோடுகள்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். சரி... இவ்வளவு பகுத்தறிவு விசயத்தையும் நமது context இல் நடைமுறைப்படுத்தி பார்ப்போமா ?

மேற் சொன்ன 4 விடயங்களும் பகுத்தறிவின் பிரகாரம் வெறுமையானவையே. எனவே நாம் சிங்களவரின் மதம்,பாசை,கலாசாரம், நாடு என்பவற்றை ஏற்றுக்கொண்டு விட்டால் இவ்வளவு பிரச்சனைகளும் தேவையில்லையே ? ஏன் இந்த ஈழப்போரட்டம் ?

பகுத்தறிவின் பிரகாரம் ஈழப்போராட்டம் அவசியமற்றது :lol:

ஏன் அதையே சிங்களவர்கள் செய்யகூடாது??? அனாவசிய திணிப்பு வெறுப்பிற்கு உரியது..... ஏன் தமிழனிடம் சிங்களத்தை திணிக்கவேண்டும்..... அதை செய் என்று எந்ந பகுத்தறிவாளனும் சொன்னதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே!

மதவெறிபிடித்த காவிக்காடயனின் ஈனச்செயலை மனிதர்கள் எவரும் மன்னிக்கமாட்டார்கள்

புத்தனின் பெயரால் எத்தனை கொடுமைகள்.

மதங்கள் மனிதருக்குத்தேவை

மதவெறிகள் பாழாய்போன அரசியலுக்குதான் தேவை

மதவெறி கழைந்து மனிதனாய் இருப்போம்.

இது சம்பந்தமாக சுவரொட்டிகள் பாரீசில் ஒட்டப்பட்டதை கண்டேன்

யாராவது கிடைத்தால் இணைக்கலாமே????????

கொள்கைகள் அழகாக இருக்கலாம். தவறில்லை. அதற்காக தார்மீகம் என்று சொல்லி 2 கிளெமோரை ULFA இற்கு கொடுத்துவிட்டு அயுதக்கப்பலை இந்திய கடற்படையிடம் பறிகொடுப்பது முட்டாள் தனம்.

சமதர்மத் தமீழீழம் என்னும் கொள்கைக்காகத் தான் ஒவ்வொரு புலி மாவீரனும் இறக்கிறான்.ஆகவே கொள்கை என்பது அழகுக்கு என்று புலத்தில் இருந்து நீங்கள் சொல்லலாம்.அக் கொள்கைக்காகப் போராடுபவனும் மாவீரனாபவனும் செயற்பட முடியாது.உல்பாவின் போராட்டம் அவர்களுடையது ஒருவனின் போராட்டத்தை இன்னொருவன் போராட முடியாது.அதே போல் ஒரு மதவெறியை ஆதரித்துக்கொண்டு நாங்கள் இன்னொரு மத வெறியனுடன் கை கோர்க்க முடியாது.

நீங்கள் மத அடையாளம் வேண்டாம் என்று சொல்பவராகத் தெரியவில்லை.

தமிழத் தேசியதிற்க்கு மத அடையாளம் இல்லை என்று தான் எதினை முறை சொல்லி இருக்கிறேன், பிறகென்ன கேள்வி?

மாறாக இந்து மத எதிர்ப்பாளராகவே தெரிகிறீர்கள். முன்பு ஒரு காலத்தில் மளையாள தேசத்தில் இருந்து ஏபிரகாம் கோவூர் என்பவர் யாழ்பாணம் வந்திருந்தார். அவர் தன்னை பகுதறிவாளராகக் காட்டிக்கொன்டார். இந்து மத எதிர்ப்பே அவர் நோக்கம்.

நான் இந்து மதமெல்ல எல்லா மதங்களையும் மறுதலிப்பவன்.எதிர்ப்பவனல்ல.எ

னக்கு மிகவும் கிட்டிய அறிந்த இந்து/சைவ மதத்தை வெகுவாக மறுதலிப்பவன்.ஏனெனில் எனது சூழலில் அதன் பாதிப்புக்களை அதிகம் பார்ப்பதால்..அதே போல் ஒவ்வொரு பகுத்தறிவு வாதியும் தன்னைச் சூழ உள்ள மதத்தையே அதிகம் விமர்சிப்பான்.இங்கிலாந்தில் இருப்பவர் கிரித்துவ மதத்தை மறுதலிப்பார் ,ஏனெனில் அவருக்கு அந்த மதத்தைப் பற்றிய புரிதல் அதிகம் இருக்கும் தன்னைச் சூழ இருக்கும் சமூகத்தில் அதன் தாக்கம் அவருக்கு அதிகம் தெரியும். டாக்டர் கோவூர் இந்து மத எதிர்ப்பாளராகச் செயற்பட்டவரல்ல அவர் ஒரு மனோதத்துவ நிபுணர் தனது மனோதத்துவத் துறையால் பலரை குணமாக்கியவர் அவர் சூனியம் பிசாசு பேய் என்று மனோ வியாதிகளை உடைவர்களைக் குணமாக்கியவர்.அவர் தனது கிரித்துவ மதத்தையும் மறுதலித்தவர்.அவை படிப்பறிவற்ற சிங்கள தமிழ் மக்களிடம் பணியாற்றியவர்.சாய்பாபாவிற்க

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோன்.....!

உங்களின் சிந்தனையையும்.... எண்ணத்தையும் புரிந்து கொள்ள முடிகின்றது. அதை நான் மறுப்பதற்கில்லை.

ஆனால் நாத்தீகவாதிகளை வீண் வம்புக்கு முதன் முதலில் ஒரு ஆத்தீகன் வம்புக்கிளுப்பதை நீங்கள் முதலில் இருந்து பார்த்ததால் தெரியும்.

நான் கடவுளை எதிர்ப்பதில்லை.... ஆனால் கடவுளை மனிதனே படைத்தான் என்பதை நான் முழுமனதுடன் நம்புகிறேன் அதை ஆதாரத்துடன் இங்கே பார்க்கிறேன். மனிதன் படைத்தாலும் அதனால் அவனுக்கு ஏதாவது நன்மை இருக்குமெனில் அது நல்லதுதானே என்றுதான் நான் எண்ணுகிறேன்....... அதற்காக முழு சமூதாயத்திற்கும் ஒர வஞ்சனை செய்துவிட்டு ஒரே ஓரு சமூகம் மட்டும் கடவுளின் பெயரால் வாழநினைத்தால். எவ்வாறு எதிர்காமல் இருக்க முடியும்??? கடவுளை நீங்கள் நம்புங்கள் அது உங்கள் அறிவுடன் சம்ந்தபட்டது...... நம்பாத எங்கள் மேல் அதை ஏன் திணிக்கின்றீர்கள் (நீங்கள் இல்லை சிலர் செய்கின்றார்கள்)???

நாரதர் சொன்னதுபோல்..... நீங்களே பாருங்கள்.

நாத்தீக்வாதியால் ஏதாவது ஒரு மதத்திற்கு தீங்கு நடக்கின்றதா என்று? இன்னொரு மதவாதியால்தான் மற்றைய மதத்தவன் அல்லல் படுகிறான் அடிபடுகிறான். மதங்கள் அன்பையே அடிப்படையாக போதிக்கிறன்றன.....இவன் எங்கிருந்து இந்த வெறியை பெறுகிறான்??? இவனது அறிவுதான் அதற்கு காரணமாகிறது......

அதனால்தான் மதவாதிகள் அறிவு பெறவேண்டும் என்று நாம் அடிக்கடி சொல்கிறோம்..... நீங்கள் அறிவுடையவராயின் நீங்கள் வாதம் செய்ய வேண்டியது உங்களுடைய சக மதவாதிகளுடன்தான் எம்முடன் அல்ல...... அவர்களுக்குதான் சக மனிதனை மனிதனாகவே பார்க்க கூடிய அடிப்படை அறிவு தேவையாய் இருக்கிறது.

எந்த மதத்தின் சிலை உடைக்கப்படது என்பதை விட.... ஒரு மனிதனின் படைப்பு சிதைக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கு சிதைத்தவனின் காரணத்தை நானும் நீங்களும் விவாதத்திற்கு எடுத்தால் என்ன முடிவுக்கு வரலாம்???

தனது கடவுள் இல்லை எனும் அவனது முட்டாள்தனமான அறிவைத்தானே சாடலாம்? அல்லது கடவுளை அரசியல் ஆக்கும் அவனது எண்ணத்தை தானே சாடலாம்??

தமிழனுடையது இனவெறியால் சிதைகிறது எனும்போது உங்களுக்கு வர கூடிய அனைத்து ஆதங்கமும் எனக்கும் வருகிறது நெடுக்காலபோவான்.... ஆனால் சிலருடைய திணிப்பும் வீண் மதவெறியும் என்னால் ஏற்கமுடியாது உள்ளது.

முதலில் எமக்குள் பலருக்கு கடவுள் நம்பிக்கை.. மத நம்பிக்கை.. மதவாதி.. மதவெறி.. போன்ற பதங்களுக்கான சரியான விளக்கம் தேவைப்படுகிறது.

கடவுள் நம்பிக்கை என்பது பொதுவான ஒன்று. மனிதன் தனது சக்தி அப்பாற்பட்டதை கடவுள் என்பதாக இனங்காண்பது பொதுவாக உள்ளது.

மதம் என்பது மனிதனின் வாழ்வுக்குரிய நெறிமுறைகளைச் சொல்லும் ஆன்மீக வழி.. அதில் கடவுள் உருவகிக்கப்பட்டிருக்கலாம்.

அந்த வழிமுறையை நம்பி அதனைப் பின்பற்றுவது மத நம்பிக்கை.

மத வெறி என்பது.. மனிதனுக்குரிய பொதுவான நெறிமுறையை தனக்கு மட்டுமே.. தான் சார்ந்தோருக்கு மட்டுமே என்று கொள்ளுதல் என்பதாகக் கொள்ளலாம்.

இதே போன்றதே நாத்திகம் என்பதும்.

பகுத்தறிவு = நாத்திகம் அல்ல. பகுத்தறிவு எல்லோருக்கும் இயற்கையாக உள்ள மூளையின் தொழிற்பாடு. அது ஒரு சிலருக்கு என்று சொல்லிக் கொள்வது நாத்திக வெறி. எவ்வாறு மத வெறி கொடூரமானதோ அவ்வளவுக்கு அவ்வளவு நாத்திக வெறியும் கொடூரமானது.

நாத்திக வெறி தூண்டிவிட்ட வன்முறைகள் பல. கடவுள் நம்பிக்கையை அறிவியல் கொண்டு விளக்கலாம்.. அல்லது விலக்கலாம்.. ஆனால் வன்முறையால் அல்ல. சாமி சிலையை உடைப்பதும்.. சாமிக்கு செருப்புமாலை போடுவதும்.. நாத்திகவாதியின் சிலையை கோவில் முன் நிறுவுவதும்.. வன்முறையைத் தூண்டும் செயல்கள் தான். தூண்டிவிட்டு.. மோதவிட்டு.. அரச பீடத்தில் உள்ளவர்களின் ஆதரவுடன் மத நம்பிக்கை உள்ளவர்கள் மீது பழியைப் போடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது அரசியல் சார்ந்தும் நடக்கிறது.

இப்போ கூட இந்தச் சம்பவத்தின் பின் நிச்சயம் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் கை இல்லாமல் இல்லை. ஆனால் அந்த மத வெறியை.. இன்னொரு மத நம்பிக்கை அடிப்படையில் எழும் நாத்திக வெறியால் மூடி மறைக்க முயல்வது தான் கண்டிக்கத்தக்கது.

ஒரிசா பிரச்சனையை எடுத்து வந்தார்கள். இன்று அரேபிய தேசங்கள் எங்கும் மதச் சுதந்திரம் இல்லை. மத வெறிதான் இருக்கிறது. இஸ்லாம் தவிர்த்து அங்கு எவையும் அங்கீகரிக்கப்படுவதில்லை. அது தவறானது. அது வெறித்தனமானது. ஆனால் அந்த உலகை நோக்கி ஏன் நாத்திகவாதம் போகுதில்லை. ஏன் இந்து மதத்தை மட்டும் சுற்றி வட்டமடிக்கிறது.

கட்டாய மதமாற்றங்கள் கூட மத வெறிதான். இந்துக்கள் எந்த நாட்டிலும் மத மாற்றம் என்பதை கைக்கொள்பவர்களாக இல்லை. ஆனால் கிறீஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் அதைச் செய்கின்றனர். எந்த இஸ்லாமியனாவது அல்லது கிறீஸ்தவனாவது இந்து மதத்துக்குள் வரக்கூடாது என்றோ அல்லது கட்டாயம் இந்துவாகவே இருக்க வேண்டும் என்றோ இந்து மதம் சொல்லவில்லை. அன்பை அடிப்படையாகக் கொண்டு எழும் இந்து மதம்.. மனிதர்கள் எல்லோரையும் சமனாகவே மதிக்கிறது.

பிரச்சனைகளுக்கு மதமல்ல காரணம். மதத்தின் பெயரால் மனிதர்கள்..( அரசியல்வாதிகள்.. நாத்திகவாதிகள்.. சமூக தலைவர்கள்) தூண்டி விடும் வன்முறைகளே காரணமாக இருக்கின்றன.

எனவே சகட்டுமேனிக்கு பிரச்சனைகளின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முயலாமல்.. மக்களின் மத நம்பிக்கை மீது.. அவதூறான பழி சுமத்துவதும்.. மக்களை சீண்டுவதுமான நாத்திகம் அல்லது பகுத்தறிவு எனக்கே என்ற வெறித்தனத்தை தான் நான்.. மத வெறியை விட மோசமானதாக இனங்காண்கிறேன்.

மதவாதிகளை கட்டுப்படுத்தலாம்.. ஆனால் நாத்திகவாதிகளை கட்டுப்படுத்துவது இலகுவானதல்ல. காரணம்.. அவர்கள் தமக்குத்தான் பகுத்தறிவு மற்றவனுக்கு 5 அறிவு என்ற வெறித்தனத்தோடு இந்த உலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த வெறித்தனம் அகல வேண்டும்.

அறிவியல் என்பதும் பகுத்தறிவு என்று நாத்திகவாதிகள் அடையாளமிடுவதும் ஒன்றல்ல. அறிவியல் ரீதியாக வளர்ந்துவிட்ட மனித நுண்ணறிவு இன்று பல விடயங்களை திருத்தமாகக் கையாளக் கற்றுக் கொள்ளக் கூடிய சூழலில் எனக்கே பகுத்தறிவு.. நான் சொல்வதே சரி என்ற நாத்திகவெறித்தனம் உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதல்ல. அதேபோல்.. மத வெறியும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதல்ல.

ஆனால் மதங்கள் காட்டும் மனித வாழ்வுக்குரிய ஆன்மீகம் சார்ந்த நெறிகள் நிச்சயம் அறிவியலால் கூட அனுசரிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது..!

இந்த அடிப்படைகளோடு உங்கள் கருத்தை மீளப் பாருங்கள்.. உங்கள் கருத்தின் பலவீனங்கள் உணரப்படும்..! :lol:

Edited by nedukkalapoovan

போற போக்கை பாத்தால் பேசாமல் யெகோவா இல்லாட்டி அல்லொலகல்லோல மதங்களுக்கு மாறலாம் போலை கிடக்கு :)

கோட்டும்சூட்டும் தந்து கையோடை கொஞ்ச காசும் தருவாங்களாம் :lol:

சுய உழைப்பில தன் நம்பிக்கை இல்லாம கடவுள்கள் பாத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறவர்கள் தான் இப்படி அலோலூயா சாய்பாபா என்று அலைகிறவர்கள்.சுயமாகச் சிந்திக்கும் மதங்களை மறுதலிக்கும் எந்தப் பகுத்து அறிபவனும் இவ்வாறு மதம் மாற மாட்டான்.அனேகமான ஹலோலூயாக் கேசுகள் நாட்டில சைவப் பழங்களாக இருந்தவர்கள்.தாம் நம்பிய கடவுள் கை விட்டு விட்டார் என்றதும் கடவுளை மாற்றிக் கொள்பவர்கள்.

.

இதே போன்றதே நாத்திகம் என்பதும்.

பகுத்தறிவு = நாத்திகம் அல்ல. பகுத்தறிவு எல்லோருக்கும் இயற்கையாக உள்ள மூளையின் தொழிற்பாடு. அது ஒரு சிலருக்கு என்று சொல்லிக் கொள்வது நாத்திக வெறி. எவ்வாறு மத வெறி கொடூரமானதோ அவ்வளவுக்கு அவ்வளவு நாத்திக வெறியும் கொடூரமானது.

நெடுக்கல்போவான் நாத்தீகம் நாத்தீகம் என்று நீங்கள் தான் சொல்லிக் கொண்டிருகிறீர்கள். நாங்கள் அல்ல.பகுத்து அறிவது எல்லா மனிதருக்கும் ஆனாது ஆகவே நீங்களே பகுத்து அறிந்து கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் நாத்தீகம் என்பதுவும் வெறி என்பதுவும் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை? நாதீகம் என்றால் என்ன? :lol:

//இன்னொரு மத நம்பிக்கை அடிப்படையில் எழும் நாத்திக வெறியால் மூடி மறைக்க முயல்வது தான் கண்டிக்கத்தக்கது//

மத நம்பிக்கையில் இருந்து எழும் நாத்தீகமா? என்னப்பா அது? :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கல்போவான் நாத்தீகம் நாத்தீகம் என்று நீங்கள் தான் சொல்லிக் கொண்டிருகிறீர்கள். நாங்கள் அல்ல.பகுத்து அறிவது எல்லா மனிதருக்கும் ஆனாது ஆகவே நீங்களே பகுத்து அறிந்து கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் நாத்தீகம் என்பதுவும் வெறி என்பதுவும் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை? நாதீகம் என்றால் என்ன? :lol:

இன்றைய தமிழக அடிப்படை நாத்திகம் என்பது.. பிராமண சமூகத்தை.... அவர்கள் சார்ந்த மத நம்பிக்கைகயை சீண்டி வெறுப்பேற்றி... வன்முறைகளை தூண்டிவிட்டு.. தங்கள் கெட்டித்தனத்தை.. வெறித்தனத்தை காட்டுதல் என்பதுதான்.

யாழ் களம் வளர்த்து வரும் நாத்திகமும் அதுவே. இது ஒருவகை தொற்றுநோய். விளம்பரம் தேடிகளின்.. நோய்.

மூடநம்பிக்கைக்கு எதிராக கடவுள் நம்பிக்கை உள்ளவனும் குரல் கொடுக்கிறான்.. அறிவியலாளனும் குரல் கொடுக்கிறான். பகுத்தறிவு என்பது கடவுள் நம்பிக்கைக்குரியவனுக்கும் உள்ளது இல்லை என்போருக்குள்ளும் உள்ளது. ஆனால் அறிவியலாளனும்.. கடவுள் நம்பிக்கை உள்ளவனினதும் குரல்களில் உள்ள அணுகுமுறை.. நாத்திக வெறியர்களிடம் இல்லை. தனக்கே பகுத்தறிவு.. தானே கடவுள் இல்லை என்று வரையறுத்தவன் என்ற வெறித்தனத்தோடு இவர்கள் நடந்து கொள்வது.. நடைமுறை உலகுக்கு ஒத்துவராத தன்மைகளாகும்..! :)

Edited by nedukkalapoovan

// நான் சொல்வதே சரி என்ற நாத்திகவெறித்தனம் உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதல்ல. //

நான் சொல்வதே சரி என்று பெரியார் முதல் எந்தப் பகுத்தறிவு வாதியும் சொல்ல வில்லை, நான் சொல்வது உனக்குச் சரியாகப் பட்டால் அதனை ஏற்றுக் கொள் என்பதே பகுத்து அறிவது.அதனை விட்டு நீ பேசாதே எனது மதத்தை விமர்சிக்காதே விமரிசனதிற்க்கு அப்பாற்பட்டது எனது மதம் என்பதே இந்து மதப் பாசிசம் அதுவே மத வெறித்தனம்.

சிந்திக்கச் சொல்வது எங்கே வெறித்தனமானது உனது அறிவைக் கொண்டு அறிவார்ந்து சிந்திக்கச் சொல்வதில் என்ன வெறி இருக்கிறது.சரி என்று பட்டால் ஏற்றுக் கொள் இல்லாது விட்டால் விழுந்து கும்புடு அல்லது அலோயுயாப் பாடு, யார் தடுத்தார்? :lol:

இன்றைய தமிழக அடிப்படை நாத்திகம் என்பது.. பிராமண சமூகத்தை.... அவர்கள் சார்ந்த மத நம்பிக்கைகயை சீண்டி வெறுப்பேற்றி... வன்முறைகளை தூண்டிவிட்டு.. தங்கள் கெட்டித்தனத்தை.. வெறித்தனத்தை காட்டுதல் என்பதுதான்.

யாழ் களம் வளர்த்து வரும் நாத்திகமும் அதுவே. இது ஒருவகை தொற்றுநோய். விளம்பரம் தேடிகளின்.. நோய்.

மூடநம்பிக்கைக்கு எதிராக கடவுள் நம்பிக்கை உள்ளவனும் குரல் கொடுக்கிறான்.. அறிவியலாளனும் குரல் கொடுக்கிறான். அவர்களின் குரலில் உள்ள அணுகுமுறை.. நாத்திக வெறியர்களிடம் இல்லை. தனக்கே பகுத்தறிவு.. தானே கடவுள் இல்லை என்று வரையறுத்தவன் என்ற வெறித்தனத்தோடு இவர்கள் நடந்து கொள்வது.. நடைமுறை உலகுக்கு ஒத்துவராத தன்மைகளாகும்..! :)

முதலில் நாத்தீகம் என்றால் என்ன என்று சொல்லுங்கள்? தீண்டாமை சுரண்டல் மனி நீதி என்று பிராமணச் சாதி காலம் காலமாக்ச் செய்தவறிற்கான் சமூக எதிர்வினையை அவர்கள் தமிழ் நாட்டில் பெறுகிறார்கள்.அதற்கும் நாத்திகதுக்கும் என்ன சம்பந்தம்? பல கடவுள் நம்பிகையாளர்களே பிராமணர்களுக்கு எதிராக இருகிறார்கள் தமிழ் நாட்டில்.

யாழ்களத்தில் விஎச்பி செய்த கொலைகளை நியாயப்படுத்தும் வெறித் தனம் யாருடையது?கடவுள் மறுப்பளர்கள் எந்த வெறித் தனத்தை ஆதரித்தனர்? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

// நான் சொல்வதே சரி என்ற நாத்திகவெறித்தனம் உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதல்ல. //

நான் சொல்வதே சரி என்று பெரியார் முதல் எந்தப் பகுத்தறிவு வாதியும் சொல்ல வில்லை, நான் சொல்வது உனக்குச் சரியாகப் பட்டால் அதனை ஏற்றுக் கொள் என்பதே பகுத்து அறிவது.அதனை விட்டு நீ பேசாதே எனது மதத்தை விமர்சிக்காதே விமரிசனதிற்க்கு அப்பாற்பட்டது எனது மதம் என்பதே இந்து மதப் பாசிசம் அதுவே மத வெறித்தனம்.

சிந்திக்கச் சொல்வது எங்கே வெறித்தனமானது உனது அறிவைக் கொண்டு அறிவார்ந்து சிந்திக்கச் சொல்வதில் என்ன வெறி இருக்கிறது.சரி என்று பட்டால் ஏற்றுக் கொள் இல்லாது விட்டால் விழுந்து கும்புடு அல்லது அலோயுயாப் பாடு, யார் தடுத்தார்? :lol:

நான் பெரியார் எனப்படும் ராமசாமியை பகுத்தறிவு மனிதனாக இனங்காணவில்லை. அவர் தன்னை பிராமண சமூகத்துக்கான எதிரி என்ற நிலையில் தான் பெரிதும் இருத்திக் கொண்டு வாழ்ந்தார். அவரின் அந்த அணுகுமுறை மனித பகுத்தறிவுக்கு உட்பட்ட ஒன்றல்ல.

மனித பகுத்தறிவின் முன் மனிதர்கள் அனைவரும் சமன். பிராமணன்.. தலித்தியன் என்ற வேறுபாடுகளுக்கு இடமில்லை..! ஆக அடிப்படையில்.. தனக்கு பிராமண மக்களை விட அறிவு அதிகம் என்ற போலித்தனமான தோற்றத்தை பேண ராமசாமியும் குழுமமும் உச்சரித்த நாத்திகத்தின் ஒரு வடிவம் தான் அவர்களின் பகுத்தறிவு என்பது. அது மனிதர்களுக்குள் உள்ள பொதுவான மூளை சம்பந்தபட்ட பகுத்தறிவல்ல. பிராமணர்கள் சம்பந்தப்பட்ட பழிப்பறிவு ஆகும்..! :)

அல்லேலுயா ஆகட்டும்.. ராமசாமியம் ஆகட்டும்.. திட்டமிட்டு திணிக்கப்படும் போது அது இன்றைய அதி நவீன அறிவியல் உலகில் வாழும் மக்களால்.. மனித பண்பாட்டை பேண விரும்பும் மக்களால் மறுதலிக்கப்படவே செய்யும்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நாத்தீகம் என்றால் என்ன என்று சொல்லுங்கள்? தீண்டாமை சுரண்டல் மனி நீதி என்று பிராமணச் சாதி காலம் காலமாக்ச் செய்தவறிற்கான் சமூக எதிர்வினையை அவர்கள் தமிழ் நாட்டில் பெறுகிறார்கள்.அதற்கும் நாத்திகதுக்கும் என்ன சம்பந்தம்? பல கடவுள் நம்பிகையாளர்களே பிராமணர்களுக்கு எதிராக இருகிறார்கள் தமிழ் நாட்டில்.

யாழ்களத்தில் விஎச்பி செய்த கொலைகளை நியாயப்படுத்தும் வெறித் தனம் யாருடையது?கடவுள் மறுப்பளர்கள் எந்த வெறித் தனத்தை ஆதரித்தனர்? :lol:

இங்குள்ள நாத்திகம் என்பதற்கான தற்கால நடைமுறை வடிவத்தை ஏலவே சொல்லிவிட்டேன். ராமசாமியைக் காவித் திரிந்து... பிராமண சமூகம் மற்றும் அது சார்ந்த மதத்தை எப்படிக்கேனும் எதிர்த்துக் கொண்டு.. சீண்டு முடிந்து கொண்டு.. தம்மை விளம்பரப்படுத்தி.. பிரபல்யப்படுத்துவதுதான்..! அங்கு மனித நேயத்துக்கோ.. மக்களின் தேவைகளுக்கோ.. மக்களில் மாற்றங்களுக்கோ தெளிவான வழி கிடையாது..!

இதுதான் இன்றைய தமிழகத்தை மையமாகக் கொண்டு தமிழர்கள் மத்தியில் உலவி வரும் நாத்திகமும்.. அதன் பழிப்பறிவு பகுத்தறிவுமாகும்..! :):)

நான் பெரியார் எனப்படும் ராமசாமியை பகுத்தறிவு மனிதனாக இனங்காணவில்லை. அவர் தன்னை பிராமண சமூகத்துக்கான எதிரி என்ற நிலையில் தான் தன்னை பெரிதும் இருத்திக் கொண்டு வாழ்ந்தார். அவரின் அந்த அணுகுமுறை மனித பகுத்தறிவுக்கு உட்பட்ட ஒன்றல்ல.

மனித பகுத்தறிவின் முன் மனிதர்கள் அனைவரும் சமன். பிராமணன்.. தலித்தியன் என்ற வேறுபாடுகளுக்கு இடமில்லை..! ஆக அடிப்படையில்.. தனக்கு பிராமண மக்களை விட அறிவு அதிகம் என்ற போலித்தனமான தோற்றத்தை பேண ராமசாமியும் குழுமமும் உச்சரித்த நாத்திகத்தின் ஒரு வடிவம் தான் அவர்களின் பகுத்தறிவு என்பது. அது மனிதர்களுக்குள் உள்ள பொதுவான மூளை சம்பந்தபட்ட பகுத்தறிவல்ல. பிராமணர்கள் சம்பந்தப்பட்ட பழிப்பறிவு ஆகும்..! :lol:

அல்லேலுயா ஆகட்டும்.. ராமசாமியம் ஆகட்டும்.. திட்டமிட்டு திணிக்கப்படும் போது அறிவியல் உலகில் வாழும் மக்களால்.. மனித பண்பாட்டை பேண விரும்பும் மக்களால் மறுதலிக்கப்படவே செய்யும்..! :)

நீங்கள் இராமாசிமையை நம்பாது விடுவதும் போலி என்று திட்டித் தீர்ப்பதும் உங்கள் விருப்பம்.அதற்காக தமிழ்னாட்டில் இருக்கும் பல கோடித் தமிழர்களும் அப்படிப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது தான் தவறு.இராமசாமி சொல்லியதை உண்மை என்று நம்பியதால் தான் திராவிட இயக்கமும் பார்ப்பன எதிர்ப்பும் தமிழ்னாட்டில் ஒரு அரசியற் சக்தியாக எழுந்தது.எந்த அரசியல் இயக்கமும் இல்லாத முரண்பாடுகளில் இருந்து தோற்றம் பெறாது என்பது மிகச்சாதரணமாக எல்லோருக்கும் புரியும் ஒரு உண்மை.இந்த வரலாற்றையும் நீங்கள் மறுத்தால் உங்களை ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது .ஏனெனில் நீங்கள் அப்படித் தான்.பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடாது.இராமாசமி சொல்லுயதை மக்கள் மறுதலிக்கவில்லை என்பதே வரலாறு.

பகுத்தறிவை எவரும் திட்டமிட்டு திணிக்க முடியாது. நீங்களே சொன்னது போல் அவர் அவரே தமது மூளையில் சிந்தித்து ஏற்றுக் கொள்கிறர்கள்.இங்கே நீங்களே உங்களின் கூற்றுக்களுடன் முரண்படுவது என்பது வழக்கமாக நடக்கும் விடயம் தானே. :)

Edited by narathar

இராமசாமி சொல்லியதை மக்கள் மறுதலிக்கவில்லை என்றால்..

இன்று தமிழகத்தில் திருமணம் என்பதே நடக்கக் கூடாது.

ஒருவன் ஒருத்தி என்று வாழக் கூடாது.

கோவில்கள் இருக்கக் கூடாது.

பிராமண மக்களே இருக்க கூடாது.

இவ்வளவையும் மக்கள் இன்றும் இன்னும் தொடர்கிறார்கள். அதுமட்டுமன்றி அகண்ட பாரத தேசத்தில் மனிதருக்கெல்லாம் பழிப்பறிவூட்டிய ஒருவரை தேசிய தலைவருக்குரிய மரியாதை கொடுத்து மதிக்காததும் ஏனோ..??! :D:lol:

பகுத்தறிவை எவரும் திட்டமிட்டு திணிக்க முடியாது. நீங்களே சொன்னது போல் அவர் அவரே தமது மூளையில் சிந்தித்து ஏற்றுக் கொள்கிறர்கள்.இங்கே நீங்களே உங்களின் கூற்றுக்களுடன் முரண்படுவது என்பது வழக்கமாக நடக்கும் விடயம் தானே. :)

நான் தெளிவாக நாத்திகவாதிகளின் பழிப்பறிவையும்.. மூளைப் பகுத்தறிவையும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டிய பின்னும்.. எனது கருத்துக்குள் வழமையான இறுதிக்கட்ட... முரண்பாடு காட்டுகிறீர்கள் என்றால்.. உங்கள் பழிப்பறிவுக்கு முன் மூளையின் பகுத்தறிவு எம்மாத்திரம்..! :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரியார் பகுதறிவு என்பது மனிதனாய் பிறந்தும் அவன் அந்த வாழ்கையை வாழவிடாது ஒரு மிருகத்துக்கு சமனாக வாழவைத்த ஒரு அராஜகத்தை தகர்க்க தோற்றுவிக்கப் பட்ட சம்மட்டி.

இதை திணிப்பாகவும் மனித உரிமைக்கு எதிரானதாகவும் என்று சொல்லமுடியும் என்றால் அன்றைய காலத்திலே தாழ்த்தப்பட்ட வர்கத்தை மனிதனுக்கு இருக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைகள் போல் வாழவைத்த பிராமணர்களின் நீதி மனிததர்மத்துக்கு உடன்பாடானதோ? மனித உரிமைகளை கொஞ்சிமகிழ்கின்றனவையா?

கடவுள் இல்லை என்பது அநாதீகத்துக்கு மிகப் பெரிய குற்றமாய்த்தெரிவதால் நாதீகம் சொல்லவருகின்ற நியாயங்களை உள்வாங்க பிடிவாதமாக மறுக்கின்றது.

சரி கடவுள் இருக்கின்றதா, இல்லையா என்ற கேள்விகளுக்கு அப்பால் வருகின்றேன்!

பாலுடன் தண்ணீர் சேர்ப்பதை குற்றம் என்று தெரிந்தும் அதை தொழிலாய் செய்துகொண்டிருக்கின்ற ஒருவன் கடவுளை வணங்குகின்றான் பணத்தை அள்ளி அள்ளி கடவுளுக்கு வளங்குகின்றான்.

காசாளனாக கடை ஒன்றில் வேலை செய்கின்ற ஒருவன் தான் வாங்கிய கள்ளத்தாள் ஒன்றை தெரிந்தும் அதை இன்னொரு வாடிக்கையாளனுக்கு கொடுக்கின்றான், இவனிடமும் தெய்வபக்தி நிரம்பிக் கிடக்கின்றதாம்.

இந்த சாக்கைடைப்புத்திகளில் ஓடிக்கொண்டிருப்பதுதான் தெய்வபக்தி என்ற உணர்வென்றால் நிட்சயம் அதை இல்லாதொழிக்கவே வேண்டும்.

ஏழைகளின் வயிற்றில் அடித்த பணம்தானே கோயில் உண்டியல்களின் வயிற்றை நிரப்புகின்றது.

தெய்வநம்பிக்கை என்பது பொதுநல சிந்தனையின் கருவில் வளருகிறது என்றால் அது வாழட்டும். நிட்சயம் அது மனிதகுலத்துக்கு வாழும் வழியாகும்.

ஆனால் இன்று கடவுளை நம்புகின்ற பெரும்பான்மையினர் சுயநலப்பிசாசுகளாய் இருக்கின்றனர் என்றால் அது மிகை இல்லை.

ராமசாமி சக மனிதனை விளித்து அவனுக்கு புத்திமதி சொல்லி இருப்பின்.. அது உலகெங்கும் வரவேற்கப்பட்டிருக்கும். ராமசாமி சொன்ன பல கருத்துக்களை பாரதியும் சொல்லி இருக்கிறான்.. வள்ளுவனும் சொல்லி இருக்கிறான். ஆனால்.. அவர்கள் சொன்னவை எவையும் மதத்ததை.. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பார்த்தல்ல. முழு மனித இனத்தையும் பார்த்துச் சொன்னார்கள். அதுதான் அவர்களின் பகுத்தறிவு. ராமசாமியின் அணுகுமுறைகள்.. பகுத்தறிவு.. மனித ஒற்றுமை.. சமூக ஒற்றுமை என்பவற்றுக்கு அப்பால்.. சமூகப் பிரிவினைகளை ஆழப்படுத்தும் செயலையே செய்து முடித்திருக்கிறது.

தீண்டாமை பற்றி பெரும் தமிழ் புலவர்கள் கூட பாடித்தான் சென்றிருக்கிறார்கள். அப்போதிருந்தே.. அதற்கான அறிவு பதியப்பட்டாயிற்று. ஆனால்.. அதை ராமசாமிதான் இட்டார் என்பது நாத்திகர்களுக்கு முக்கியமாக இருக்கலாம். ஆனால்.. பகுத்தறிவுள்ள மனிதனுக்கு..??! :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராமசாமி சொல்லியதை மக்கள் மறுதலிக்கவில்லை என்றால்..

இன்று தமிழகத்தில் திருமணம் என்பதே நடக்கக் கூடாது.

ஒருவன் ஒருத்தி என்று வாழக் கூடாது.

கோவில்கள் இருக்கக் கூடாது.

பிராமண மக்களே இருக்க கூடாது.

இவ்வளவையும் மக்கள் இன்றும் இன்னும் தொடர்கிறார்கள். அதுமட்டுமன்றி அகண்ட பாரத தேசத்தில் மனிதருக்கெல்லாம் பழிப்பறிவூட்டிய ஒருவரை தேசிய தலைவருக்குரிய மரியாதை கொடுத்து மதிக்காததும் ஏனோ..??! :):lol:

நான் தெளிவாக நாத்திகவாதிகளின் பழிப்பறிவையும்.. மூளைப் பகுத்தறிவையும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டிய பின்னும்.. எனது கருத்துக்குள் வழமையான இறுதிக்கட்ட... முரண்பாடு காட்டுகிறீர்கள் என்றால்.. உங்கள் பழிப்பறிவுக்கு முன் மூளையின் பகுத்தறிவு எம்மாத்திரம்..! :D:)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு

எழுமைக்கும் ஏமாப்புடைத்து

இந்த வள்ளுவன் குறளுக்கு ஒரு அநாதீகவாதி கருத்தை இப்படி சொல்லலாம்.

கல்வியானது மனிதனின் ஏழ்பிறப்பினூடும் வரத்தக்கது என்று இந்துமதத்தின் நம்பிக்கையை ஆதாரமாக்க வள்ளுவரைத் துணைக்கு அளைக்கலாம்.

அங்கே வள்ளுவர் கருத்தின் ஆழத்தை அதிகப்படுத்துவதற்க்குதான் ஏழ்பிறப்பு என்ற நடைமுறை வழக்கை எடுத்தாண்டார்.

இது போலவே பெரியாரின் கருத்துக்களின் ஆழத்தை அறியாத அரைவேக்காட்டுதம் கண்ட கோலங்களில் பொருள் கொள்ளவைக்கின்றது.

காலம் காலமாக மக்கள் மனதில் ஆழவேரோடி நிற்க்கும் அறியாமை இருளைப் போக்க சில எல்லை மீறிய நடவடிக்கைகளும் வேண்டி இருந்தது. மக்கள் மனதில் தனது கருத்துக்களின் நம்பிக்கையினை ஆழத்தில் புதைப்பதற்க்காக.

அறியாமை.. தீண்டாமை போவதற்கு பிராமணனைத் திட்டிக் கொண்டிருப்பதல்ல உபாயம். எல்லா மனிதர்களும் சனனாக கருதப்படும் நிலை உருவாக வேண்டும்.

மக்கள் கிராமம் தோறும் ஒவ்வொரு பல்கலைக்கழகம் அமையுங்கள். மக்களின் அறியாமை அகலுதோ இல்லையோ என்று தீர்மானிக்கலாம். சும்மா ராமசாமியின் உளறல்களை காவித் திரிந்து கொண்டிருப்பதால்.. எந்தப் பயனையும் தமிழகம் அடையப் போவதில்லை. சாதி உச்சரிப்பில் இருந்து சான்றிதழ் வரை வந்ததுதான் மிச்சம்...! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமசாமி சக மனிதனை விளித்து அவனுக்கு புத்திமதி சொல்லி இருப்பின்.. அது உலகெங்கும் வரவேற்கப்பட்டிருக்கும். ராமசாமி சொன்ன பல கருத்துக்களை பாரதியும் சொல்லி இருக்கிறான்.. வள்ளுவனும் சொல்லி இருக்கிறான். ஆனால்.. அவர்கள் சொன்னவை எவையும் மதத்ததை.. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பார்த்தல்ல. முழு மனித இனத்தையும் பார்த்துச் சொன்னார்கள். அதுதான் அவர்களின் பகுத்தறிவு. ராமசாமியின் அணுகுமுறைகள்.. பகுத்தறிவு.. மனித ஒற்றுமை.. சமூக ஒற்றுமை என்பவற்றுக்கு அப்பால்.. சமூகப் பிரிவினைகளை ஆழப்படுத்தும் செயலையே செய்து முடித்திருக்கிறது.

தீண்டாமை பற்றி பெரும் தமிழ் புலவர்கள் கூட பாடித்தான் சென்றிருக்கிறார்கள். அப்போதிருந்தே.. அதற்கான அறிவு பதியப்பட்டாயிற்று. ஆனால்.. அதை ராமசாமிதான் இட்டார் என்பது நாத்திகர்களுக்கு முக்கியமாக இருக்கலாம். ஆனால்.. பகுத்தறிவுள்ள மனிதனுக்கு..??! :D:lol:

நீங்கள் சொன்ன அனைவரும் தீண்டாமையைப் பாடினார்கள்

பெரியார் செய்து காட்டினார் அதை நடைமுறையில்.

சனத்தொகையின் மூன்று வீதத்தினரே அனைத்து உயர்பதவியிலும் இருக்கின்றார்கள் என்றால் அந்த பிராமணர் சாதீயவாதத்தை மருந்துக்கும் சாதிக்காதவர்கள் என்றுதானே அர்த்தம்.

சட்டத்தின் உச்சிவரை சென்றும் கொலைப்பாதகங்கைளைச் செய்த மகுடாதிபதிகள் செங்கம்பள வரவேற்புடன் சிரித்துக் கொண்டே சிறைக்கு வெளியால் வருகின்றார்கள் சட்டம் திறம் பட தன் கடமையை செய்ய விடுவதால்த் தானோ அப்படி நடக்கின்றது.

இதை பெரியார் எச்சில் வளியப் பார்த்துக் கொண்டிருந்திருக்க வேண்டுமாக்கும்!

பெரியாரை பெரியாராக இந்தியச்சட்டம் அங்கீகரிக்கவில்லை

புலியைப் பயங்கரவாதியாக அங்கீகரித்திருக்கிறது. ஏன்

இரண்டுக்கும் ஒரே காரணம்தான் அங்கே பார்ப்பானியனின் நரித்தனம் கோலோச்சுகின்ற.

அறியாமை.. தீண்டாமை போவதற்கு பிராமணனைத் திட்டிக் கொண்டிருப்பதல்ல உபாயம். எல்லா மனிதர்களும் சனனாக கருதப்படும் நிலை உருவாக வேண்டும்.

மக்கள் கிராமம் தோறும் ஒவ்வொரு பல்கலைக்கழகம் அமையுங்கள். மக்களின் அறியாமை அகலுதோ இல்லையோ என்று தீர்மானிக்கலாம். சும்மா ராமசாமியின் உளறல்களை காவித் திரிந்து கொண்டிருப்பதால்.. எந்தப் பயனையும் தமிழகம் அடையப் போவதில்லை. சாதி உச்சரிப்பில் இருந்து சான்றிதழ் வரை வந்ததுதான் மிச்சம்...! :)

ஆமாம் பல்கலைக்களகங்களை என்னவென்றே அறியாதவர்கள்தானே இன்று இராமர் பாலம் உடைக்கப்படக் கூடாது என்று குறுக்கே படுக்கின்றார்கள்.

நீங்க போங்க ,ஆயிரம் பெரியார் வந்தாலும் இவர்களைத் திருத்த முடியாதே என்று நான் வருந்துகிறேன்!

சமதர்மத் தமீழீழம் என்னும் கொள்கைக்காகத் தான் ஒவ்வொரு புலி மாவீரனும் இறக்கிறான்.ஆகவே கொள்கை என்பது அழகுக்கு என்று புலத்தில் இருந்து நீங்கள் சொல்லலாம்.அக் கொள்கைக்காகப் போராடுபவனும் மாவீரனாபவனும் செயற்பட முடியாது.உல்பாவின் போராட்டம் அவர்களுடையது ஒருவனின் போராட்டத்தை இன்னொருவன் போராட முடியாது.அதே போல் ஒரு மதவெறியை ஆதரித்துக்கொண்டு நாங்கள் இன்னொரு மத வெறியனுடன் கை கோர்க்க முடியாது.

தமிழத் தேசியதிற்க்கு மத அடையாளம் இல்லை என்று தான் எதினை முறை சொல்லி இருக்கிறேன், பிறகென்ன கேள்வி?

நான் இந்து மதமெல்ல எல்லா மதங்களையும் மறுதலிப்பவன்.எதிர்ப்பவனல்ல.எ

னக்கு மிகவும் கிட்டிய அறிந்த இந்து/சைவ மதத்தை வெகுவாக மறுதலிப்பவன்.ஏனெனில் எனது சூழலில் அதன் பாதிப்புக்களை அதிகம் பார்ப்பதால்..அதே போல் ஒவ்வொரு பகுத்தறிவு வாதியும் தன்னைச் சூழ உள்ள மதத்தையே அதிகம் விமர்சிப்பான்.இங்கிலாந்தில் இருப்பவர் கிரித்துவ மதத்தை மறுதலிப்பார் ,ஏனெனில் அவருக்கு அந்த மதத்தைப் பற்றிய புரிதல் அதிகம் இருக்கும் தன்னைச் சூழ இருக்கும் சமூகத்தில் அதன் தாக்கம் அவருக்கு அதிகம் தெரியும். டாக்டர் கோவூர் இந்து மத எதிர்ப்பாளராகச் செயற்பட்டவரல்ல அவர் ஒரு மனோதத்துவ நிபுணர் தனது மனோதத்துவத் துறையால் பலரை குணமாக்கியவர் அவர் சூனியம் பிசாசு பேய் என்று மனோ வியாதிகளை உடைவர்களைக் குணமாக்கியவர்.அவர் தனது கிரித்துவ மதத்தையும் மறுதலித்தவர்.அவை படிப்பறிவற்ற சிங்கள தமிழ் மக்களிடம் பணியாற்றியவர்.சாய்பாபாவிற்க

நீங்கள் மற்றவர்களை மதவெறியர்களாகவும் உங்களை மதனம்பிக்கையற்ற பகுதறிவாளராகவும் காட்ட நினைக்கும் ஆதங்கம் தெளிவாகத் தெரிகிறது. :lol:

எதனையும் காட்ட வேண்டிய அவசியம் எனக்கில்லை.எனது கருதுக்கள் என்னைப் பிரதிபலிக்கின்றன.

இத்திரியில் எங்கேனும் நான் பிறர் மதத்தை பழித்தோ, என் மதத்தை உயர்த்தியோ காட்டவில்லை. என் பதில்கள் யாவற்றினதும் மையக்கருத்து தமிழரிடையே காணப்படும் இந்து, கிரீஸ்தவர்கள் சர்வதேசத்தில் காணப்படும் தத்தமது மத அமைப்புகள் மூலம் எவ்வாறு ஈழப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கலாம் என்பது பற்றியது ஆகும்.

உங்கள் கருத்துகளை மீளப் படித்துப் பாருங்கள் கத்தோல்லிக்கத் திருச் சபை வன்னியில் செய்யும் செயற்பாட்டையும் விஎச்பியின் மனித பலியையும் சமன் படுத்தி நியாயப்படுத்தி இருக்கிறீர்கள்.கறைபடிந்த கைகள் எவருடையவையும் இல்லை என்று விஎச்பியின் கறை படிந்த கரங்களை நியாயப்படுத்தி இருகிறீர்கள்.மனிதரை பலி எடுக்கும் மதவாதிகளின் ஒன்று கூடல் ஈழத்திலும் மதச் சண்டைகளையும் கலவரங்களையுமே ஏற்படுத்தும்.அரசியலுடன் மதத்தைக் கலந்து வாக்கு வங்கி வியாபாராம் செய்யும் பிஜேபி விஎச்பி பாணியிலான அமைப்புக்களின் வருகை என்பது தமிழ்த் தேசிய விடுதலைப்போரை மழுங்கடிக்கும் என்பது தமிழ்த்தேசியத் தலமையால் வெகுவாக உணரப்பட்ட ஒன்று.அத்தோடு தமிழர்கள் என்னும் அடையாளதுக்குள் இசுலாமியர்களும் வருகிறார்கள் என்பதையும் நீங்கள் மறந்து விடீர்கள்.தமிழ்னாட்டில் ஏன் இசுலாமியர்கள் தங்களை தமிழர்களாக் அடியாளாம் காட்டிக் கொள்கிறார்கள்?

இந்தியாவில் எங்கெல்லாம் பிஜெபி விஎச்பியின் அரசியல் பலமாக் இருக்கிறதோ அங்கெல்லாம் மதக்கலவரங்கலும் மதச்சண்டைகளும் நடக்கின்றன.

ஆனால் நீங்கள் இம்முயற்சிகள் யாவற்றிற்கும் எப்படி மத வெறிச்சாயம் பூசலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிரீர்கள். இங்கு யாருக்கு வெறி பிடித்துள்ளது என்று தெரியவில்லை.

உங்கள் மத எதிர்ப்பு கருத்துக்களுக்கு அஞ்சவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் எத்தனையொ சந்தர்பங்களில் தான் வைத்திருக்கும் இறை நம்பிக்கை பொய்த்து போகுமளவுக்கு சோதனைகளைச் சந்திக்கிறான். இச்சோதனைகள் நீங்கள் கூறும் நாத்திக கருத்துக்களைக் காட்டிலும் பலமடங்கு நாத்திகத்தன்மை கொண்டவை. அப்படி இருந்தும் மறுபடியும் அவன் இறை நம்பிக்கைக்கு வருகிறானென்ரால், அறிவியலால் வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பதிற்கும் விளக்கம் தர முடியாது இருப்பதே காரணமாகும்.

பகுத்தறிவது என்பது அறிவால் அறிவது அறிவியல் சார்ந்தது.வெறும் உணர்வால் அறிவது அறிவியல் அல்ல.சோதனைகள் வரும் போது மட்டும் கடவுள் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குவது என்பது பகுத்தறிவு அன்று. நாத்தீகம் ஆத்திகம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை.அது இந்தப் பயங்கரவாதி என்பது போல் நீங்களாகவே ஏற்படுத்தும் வெறும் வார்த்தைப் பிரயோகங்கள்.அதில் எந்த உள் அடக்கமும் இல்லை.

அறிவைப் பாவித்து அறிந்து கொள்வது பகுத்தறிவு .சமயம் கடவுள் என்பவை எல்லாம் அறிவால் அறிந்துகொள்ளாது காலம் காலமாகச் சொல்லப்படுபனவற்றை அப்படியே எந்தக் கேள்வியும் இல்லாமால் எந்தப் பகுத்து அறிதலும் இல்லாமல் உண்மை என்றும் நம்பும் நம்பிக்கை சார்ந்தது. நீங்கள் எப்படி இந்துவானீர்கள் உங்கள் பகுத்து அறியும் திறனாலா? இல்லையே உங்கள் பெற்றோர் என்ன சமயமோ அந்தச் சமயத்தை உங்கள் சமயம் என்று ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் எல்லாச் சமயங்களையும் கற்றறிந்து இந்து சமயத்தைத் தேர்ந்தெடுக்க வில்லை.அது காலம் காலமாக உங்கள் பெற்றோர் வழியாக வந்த நம்பிக்கையாக உங்களுக்குப் புகட்டப்பட்டது.அதனையே நீங்கள் இன்று பின் பற்றுகிறீர்கள். நீங்கல் ஒருகிரிதுவ குடும்பத்தில்பிறந்திருந்தா

தமிழகத்தில் பிறந்து தன் அடையாளத்தை ,மொழியை, இனத்தை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக்கொண்டிருக்கும் தமிழனுக்கும் ...ஈழத்தில் பிறந்து சிங்கள வெறியர் கூட்டத்தின் கொலைவெறிக்கு அஞ்சி புலம் பெயர்ந்து வாழும் தமிழனுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை... வாய்ச்சொல்லில் வீரர்களடி.....

கொழும்பில் இந்துக்கோயில் ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது....

தமிழகத்தில் இந்து முன்னணி என்ற கட்சியும் உள்ளது உலகமெங்கும் உள்ள இந்துக்களுக்காக குரல் கொடுக்கும் ராமகோபால அய்யர் அவர்களை தலைவராக கொண்ட அந்த அமைப்பும்,அதே போல் குஜராத்திலும் ,ஒரிசாவிலும் இந்துக்களுக்காக வீரப்போர் புரியும் பா.ஜ.க என்ற கட்சியை தமிழகத்தில் தலைமையேற்று நடத்தும் இல.கணேசன் அய்யர் வாளும் ...

வாயே திறக்கவில்லையே ஏன்??????????????????

உங்கள் கருத்துகளை மீளப் படித்துப் பாருங்கள் கத்தோல்லிக்கத் திருச் சபை வன்னியில் செய்யும் செயற்பாட்டையும் விஎச்பியின் மனித பலியையும் சமன் படுத்தி நியாயப்படுத்தி இருக்கிறீர்கள்.

ஒரு மத அமைப்பின் செயற்பாடுகள் எல்லாம் மத வெறியின் பாற் பட்டவை அல்ல என்பதற்கு உதாரணமாகவே மன்னார் ஆயர் அகதிகளுக்கு உதவுவதை சொன்னேன். நீங்கள் தான் அதை மனிதப்பலிக்கு சமனாக்கி என்னை குறை கூருகிறீர்கள். மீண்டும் ஒருமுறை வாசியுங்கள்.

கறைபடிந்த கைகள் எவருடையவையும் இல்லை என்று விஎச்பியின் கறை படிந்த கரங்களை நியாயப்படுத்தி இருகிறீர்கள்.

சற்று யோசியுங்கள். VHP ஐ குறை சொல்ல எங்களிடம் என்ன தகுதி இருக்கிறது ? எத்தனை நாடுகளில் VHP இற்கு பயங்கரவாதிகள் பட்டம் இருக்கிறது ? எமக்கு ? அவர்களின் குறைகள் முக்கியமல்ல. அவர்களால் எமக்கு ஆகவேண்டியதென்ன என்பதே முக்கியம்.

மனிதரை பலி எடுக்கும் மதவாதிகளின் ஒன்று கூடல் ஈழத்திலும் மதச் சண்டைகளையும் கலவரங்களையுமே ஏற்படுத்தும்.அரசியலுடன் மதத்தைக் கலந்து வாக்கு வங்கி வியாபாராம் செய்யும் பிஜேபி விஎச்பி பாணியிலான அமைப்புக்களின் வருகை என்பது தமிழ்த் தேசிய விடுதலைப்போரை மழுங்கடிக்கும் என்பது தமிழ்த்தேசியத் தலமையால் வெகுவாக உணரப்பட்ட ஒன்று.அத்தோடு தமிழர்கள் என்னும் அடையாளதுக்குள் இசுலாமியர்களும் வருகிறார்கள் என்பதையும் நீங்கள் மறந்து விடீர்கள்.தமிழ்னாட்டில் ஏன் இசுலாமியர்கள் தங்களை தமிழர்களாக் அடியாளாம் காட்டிக் கொள்கிறார்கள்?

இந்தியாவில் எங்கெல்லாம் பிஜெபி விஎச்பியின் அரசியல் பலமாக் இருக்கிறதோ அங்கெல்லாம் மதக்கலவரங்கலும் மதச்சண்டைகளும் நடக்கின்றன.

VHP இன் குறை நிறை எமக்கு முக்கியம் அல்ல என்றும் எமது நலனே முக்கியம் என்றும் ஏற்கனவே பல தடவை சொல்லிவிட்டேன்.

ஈழப்போரட்டதில் இந்தியாவின் தாக்கம் பற்றி சொல்லத்தேவையில்லை. VHP இந்திய அரசியலை கட்டுப்படுத்தவல்ல ஒரு சக்தி. VHP இன் ஆதரவு ஈழப்போராட்டத்திற்கு இருக்கும் என்றால் VHP இங்கே பிரசன்னமாயிருக்க வேண்டும் என்றா அர்த்தம் ?

PKK ஆதரவு உண்டு என்றால் PKK இங்கே உள்ளது என்றோ PKK இங்கு செயற்படுகிறது என்றோ இல்லை.

பகுத்தறிவது என்பது அறிவால் அறிவது அறிவியல் சார்ந்தது.வெறும் உணர்வால் அறிவது அறிவியல் அல்ல.சோதனைகள் வரும் போது மட்டும் கடவுள் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குவது என்பது பகுத்தறிவு அன்று. நாத்தீகம் ஆத்திகம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை.அது இந்தப் பயங்கரவாதி என்பது போல் நீங்களாகவே ஏற்படுத்தும் வெறும் வார்த்தைப் பிரயோகங்கள்.அதில் எந்த உள் அடக்கமும் இல்லை.

இது நீங்கள் அறிவை முழுமையாக பாவிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. ஏனென்றால், அறிவால் ஒரு எல்லையை தாண்டி நகரமுடியாது. அந்த எல்லையை நீங்கள் இன்னும் தொட வில்லை. அதனால் தான் அறிவால் அறியமுடியும், அறிவால் அறியமுடியும் என்று சிறு வட்டத்திற்குள்ளேயே சுழள்கிறீர்கள்.

உணர்வையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். இனிப்புச் சுவையை, அறிவியலால் - (வார்தையால்) - விளக்கமுடியுமா ?

எப்படி பல வார்தைகள் வேண்டி நிற்கும் இவ் இனிப்பு சுவை என்ன என்பது பற்றிய விளக்கமானது, ஒரு கணப்பொழுதில் உணர்வின் மூலம் இலகுவாக விளக்கப்படுகிறதோ, அதுபோலவே மனித அறிவியலால் விளங்கவே முடியாத விடயங்கள் உணர்வின் மூலம் இலகுவாக விளங்கப் படலாம். உதாரணமாக, இந்து சமயத்தால் சொல்லப்படுகின்ற அடிப்படைப் பொருட்கள்.

அறிவைப் பாவித்து அறிந்து கொள்வது பகுத்தறிவு .சமயம் கடவுள் என்பவை எல்லாம் அறிவால் அறிந்துகொள்ளாது காலம் காலமாகச் சொல்லப்படுபனவற்றை அப்படியே எந்தக் கேள்வியும் இல்லாமால் எந்தப் பகுத்து அறிதலும் இல்லாமல் உண்மை என்றும் நம்பும் நம்பிக்கை சார்ந்தது.

அப்படியா ? :D நன்பரே,

இந்து சமயத்தில் அத்துவைதம் என்று ஒரு பகுதி உண்டு. அதைப்படியுங்கள். அதன் பின் மீண்டும் ஒரு முறை இங்கு நீங்கள் எழுதியதை வந்து வாசியுங்கள்.

நீங்கள் எப்படி இந்துவானீர்கள் உங்கள் பகுத்து அறியும் திறனாலா? இல்லையே உங்கள் பெற்றோர் என்ன சமயமோ அந்தச் சமயத்தை உங்கள் சமயம் என்று ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் எல்லாச் சமயங்களையும் கற்றறிந்து இந்து சமயத்தைத் தேர்ந்தெடுக்க வில்லை.அது காலம் காலமாக உங்கள் பெற்றோர் வழியாக வந்த நம்பிக்கையாக உங்களுக்குப் புகட்டப்பட்டது.அதனையே நீங்கள் இன்று பின் பற்றுகிறீர்கள். நீங்கல் ஒருகிரிதுவ குடும்பத்தில்பிறந்திருந்தா
  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கள் எங்கே தொடங்கி எங்கே நிற்கின்றோமென்று...........???

புத்த தர்மத்தில் தொடங்கி..............???

பெரியாரை குறிவைத்து ...................????

நிற்கிறது.

இது தேவையா????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.