Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியிலிருந்து வெளியேற முடியாதென ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது--வன்னி மக்களின் போராட்டத்திற்கு வெற்றி

Featured Replies

சாணக்கின்

ஒருகாலத்தில் சோவியத் ஒன்றியத்தில் இருந்து தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த ஒரு நாட்டு பேராசிரியருடனான கலந்துரையாடலில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது.

புரட்சியின் பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்வாங்கப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பல ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கின்ற மக்களின் பொதுவான தன்மைகள்

சட்டம் ஒழுங்கை மறுப்பது,

வேலத்தலங்களில் மேற்பார்வை இல்லாவிட்டால் செய்ய வேண்டியதை செய்யாது இருப்பது,

விதிகளை முறித்து விடையங்களை செய்ய முனையும் பாங்கு.

இவை மேற்கு ஐரோப்பிய நாடுகளை விட அதிகம் இருப்பதற்கான காரணம் பற்றி விளக்கினார்.

சோவியத் காலத்தில் தமது நாடுகளின் கனிய வள சுரங்கங்கள் தொழிற்சாலைகள் என்பவற்றின் செயற்பாடுகள் சோவியத் வல்லரசை கட்டியேழுப்ப உதவியது. அந்த நாடுகள் ஓன்றியத்தினுள் குடியரசுகளாக ஓரளவு சுயாட்சியையும் கொண்டிருந்தார்கள். அதாவது முற்று முழுக்க தம்மை தாமே நிர்வகிப்பதற்கான பொறுப்பையும் இழக்கவில்லை. எனவே இவற்றுக்கான பண்புகளை சமுதாயத்தில் முற்றாக இழக்கவில்லை. ஆனாலும் சோவியத் ஒன்றிய மேலாட்சிக்கு எதிர்ப்பை காட்டியது அவர்கள் பயன் பெற்ற தமது நாட்டு தொழிற்சாலைகளிலும் சோவியத்தினால் அமுல்படுத்தப்பட்ட நீதி நிர்வாக அலகுகளை பலவீனப்படுத்தும் வகையிலான அவற்றை முறித்து இயங்கும் புரட்சிகர மனோபாவம். அது காலப்போக்கில் அவர்களிற்குள் ஊறிப்போய் இன்று முற்றுமுழுக்க சுதந்தரமாக இயங்கத் தொடங்கிய பின்னரும் அது தொடர்கிறது.

இதன் நீடித்த ஆழமாக வேரூன்றிய வடிவத்தையே ஐரோப்பியர்களின் காலனித்துவ காலத்து நாடுகளிலும் இன்னமும் காணலாம்.

தமிழர்களைப் பொறுத்தவரை சுயாட்சி இழந்து எத்தனை நூற்றாண்டுகள் கடந்துவிட்டோம் எத்தனை சந்ததிகள் கு கழுவும் கூட்டமாக பிறந்து வழர்ந்து விட்டோம்? எந்தளவிற்கு எம்மிடம் சுயாட்சிக்கான பண்புகளை இழந்திருப்போம்? எமக்குள் தன்மான சுயமரியாதை சிந்தனைகள் உருவாகாது இருப்பதற்கு எப்படிப்பட்ட நச்சுவிடையங்களை எத்தனை ஆட்சியாளர்கள் எந்தெந்த வடிவங்களில் விதைத்துவிட்டார்கள்?

இவற்றின் மொத்த அறுவடையைத்தான் இன்று புலம்பெயர்ந்த தமிழர்களில் அவர்கள் நடத்தும் "ஊடகங்களில்" இங்கு கருத்துப்பகிர்பவர்களில் காண்கிறோம்.

எம்மை இறுதியாக ஆட்சி செய்பவர்கள் விட்ட தவறுகளால் இந்தக் கோணத்திலாவது சிந்தித்து தேடல் செய்ய வைக்கிறது இப்படி ஒரு தளத்தில் இவற்றை பகிர வைக்கிறது. பயணிக்க வேண்டிய தூரம் மிக நீண்டது.

சமூகத்தில் உயர்நிலையில் இருந்த சிலர் விட்ட தவறுகள் அவர்களால் ஏமாற்றப்பட்ட அனுபவம் தற்பொழுது உயர்நிலையில் இருந்து யார் என்ன சொன்னாலும் சந்தேகத்தோடு பார்க்க வைக்கிறது. அப்பட்டமான புலிபுராணம் சூரியதேவன் புராணம் ஒன்றுதான் துரோகிகளுக்கே பாதுகாப்பான முகமூடியாக மாறிவிட்டது போல் இருக்கிறது.

  • Replies 62
  • Views 5.8k
  • Created
  • Last Reply

நடுநிலை என்றால் என்ன?

ஒ! சங்கரி போல், K. T. கூஜசிங்கம் போல் சிங்கள அரசிடம் பணம்பெற்றுக் கொண்டு உலகமெங்கும் சென்று பரப்புரை செய்து தமிழ்மக்களை நடுத்தெருவுக்கு கொண்டுவரும் கைங்கரியத்தை சிங்கள கூலிப்படைகளுக்கு இணையாக செய்வதா?

ஓ! இந்த நடுத்தெருவுக்கு கொண்டுவரும் காரியங்களுக்கும், ஒரு இராணுவ தளத்தின் நடுவில் ஒளிந்திருந்து உதவிசெய்யும் காரியங்களுக்கும் தான் நடுநிலை என்று பெயரா?!!!

ஓ! இப்படியான திருடர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து அம்பலப்படுத்தும் காரியங்கள் நடுநிலயான காரியங்கள் அல்லவா?

ஓ! அரசியல் சாணக்கியர்களுக்கு இது எல்லாம் நடுநிலையான காரியங்கள் இல்லையா?

இல்லை, அந்தப்பக்கம் சிங்கள அரசிடம் பணமும் வாங்கிக்கொண்டு இந்த பக்கம் வந்து கொஞ்சம் பல்லையும் காட்டிக்கொண்டிருப்பது தான் நடுநிலையா?

அநேகமான விபச்சாரிகளும் எந்த வாடிக்கையாளர் பக்கமும் சாராத நல்ல நடுநிலையாளர்கள் தான்!

Edited by vettri-vel

......

சமூகத்தில் உயர்நிலையில் இருந்த சிலர் விட்ட தவறுகள் அவர்களால் ஏமாற்றப்பட்ட அனுபவம் தற்பொழுது உயர்நிலையில் இருந்து யார் என்ன சொன்னாலும் சந்தேகத்தோடு பார்க்க வைக்கிறது. அப்பட்டமான புலிபுராணம் சூரியதேவன் புராணம் ஒன்றுதான் துரோகிகளுக்கே பாதுகாப்பான முகமூடியாக மாறிவிட்டது போல் இருக்கிறது.

இங்க சிலர் அரைச்ச மாவை திரும்பத்திரும்ப அரைப்பதும்... தமிழ் தேசியகுத்தகைகாரர் போல நாட்டாண்மை பண்ணுவதும் உங்கடை கருத்தை உறுதிப்படுத்துது. இதையெல்லாம் தாண்டி எப்ப விடிவு பிறந்து....?

....இப்படியான் கேணையள் போராட்டத்துக்கு தலைமை தாங்க இல்லை எண்டது கொஞ்சம் நிம்மாதியானது...

தயா,

நீங்கள் இப்பிடிச் சொன்னாலும்,

தலைவர் விடைகொடுக்கிற, அஞ்சலி செய்யுற படங்களை தாக்குதல் வேகத்தில வெளியிடுறத்திற்கு காரணம் புலம்பெயர்ந்தவர்களை சந்தோசமா வைச்சிருக்கத்தானே?

ஏன் கோத்தபாய கேட்டமாதிரி... இப்ப மக்களின் இழப்புகள் துயரங்கள் உந்தவேகத்தில வெளிவருகுதில்லை? அதைக்கண்டு கலங்கி பங்களிக்கிறவன்தான் போராளி....! நிண்டு நிலைப்பான்!

வெற்றி என்று விசிலடிக்கிறதுகளும், பவுசுக்கு வால்பிடிக்கிறதுகளும், தோல்வி துன்பம் என்றவுடன கலைஞ்சு போயிடுங்கள் இல்லாட்டி கட்சிமாறீடுங்கள்!

இதுகளை ஏன் உணருகினம் இல்லை?

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டுபவர்கள் தாங்களும் தொப்பியை போட்டு கொண்டு அடுத்தவனுக்கு அதை பரிசளிப்பதும் பட்டம் கொடுப்பதும் சுட்டி காட்டினால் எவன் தலையிலாவது ஏத்திவிட்டு செல்வது...............................

இரு வரியில் சொன்னாலும் உண்மையை சொல்லி இருக்கிறீர்கள், எப்படி இப்படி எல்லாம் கண்டுபிடிகிறீர்கள்? :icon_mrgreen:

சிலர் பாலுக்கும் காவலாம் பூனைக்கும் தோழனாம்!

அப்படி இருப்பது தான் அரசியல் சாணக்கியமாம்!

இதற்கு ஆமாம் சாமி போடாதவர்களின் முதுகில் ஏறி தேசியத்தின் நாட்டாண்மை என்று ஒரு பட்டம் பறக்க விடுவர்களாம்!

வயிரு வளர்ப்பதற்காக மானத்தை விற்காதே என்று சொல்வது நாட்டாண்மை இல்லை தம்பி,

அதற்கு சூடு, சொரணை, சுயமரியாதை, தன்மான உணர்வு இப்படி எல்லாம் பெயர் இருக்கிறது.

Edited by vettri-vel

இங்க சிலர் அரைச்ச மாவை திரும்பத்திரும்ப அரைப்பதும்... தமிழ் தேசியகுத்தகைகாரர் போல நாட்டாண்மை பண்ணுவதும் உங்கடை கருத்தை உறுதிப்படுத்துது. இதையெல்லாம் தாண்டி எப்ப விடிவு பிறந்து....?

எமது சமூக மட்டத்தில நாங்காள வரிஞ்சு கட்டிக் கொண்டிருக்கிற மத மயக்கத்தில இருந்தே தெளிய முடியவில்லை. அதுக்குள்ளை சர்வதேச அரங்கில அங்கீகாரத்தோடை சிறீலங்காவிட்டை இருந்து விடிவு பிறக்கும் என்றது எல்லாம் தற்போதைக்கு பேராசை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

காட்டாறு மற்றும் முனிவர்,

இந்த துரோகியையும் ஒரு மனிசனா மதித்து பதிலெழுதுற உங்கட பெருந்தன்மைக்கு மிக்க நன்றி!

அதோட "ஒன்றுபடுதல்" அல்லது "ஒற்றுமை" என்றால் என்ன என்று எனக்கு ஒருக்கா விழங்கப்படுத்துவியளே?

யாரை ஒன்றுபடச் சொல்லுறியள்?

ஏன் அவை ஏன் விலத்தி நிக்கினம், ஆர் அவையை விலத்தி வைச்சது!

அவையை ஒன்றுபடுத்துறத்திற்காக நீங்கள் எப்படியான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறியள்?

சாணாக்கியன் இங்கு யாரும் யாருக்கு துரோகிப்பட்டம் வழங்குவதில்லை

இருந்தாலும் உங்கள் மனம் உங்களூக்கு சொல்லுது போல நீங்கள் இடும் கருத்துக்களுக்குஅமைய

என்னை பொறுத்தவரைக்கும் நாடு என்ன செய்தது என்ற கேள்விகள் தேவையில்லை...நீ என்ன செய்தாய் அதற்கு இதுதான் தேவை இதையயெல்லாம் நான் சொல்லி திரிவதுமில்லை நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் எனக்கு தெரியாது ஆனால் நம் மக்கள் படும் வேதனை சொல்லி மாளாது அது உங்களுக்கு தெரியுமோ தெரியாது.ஒருதடவை ஆமிகாரன்டா செக் பொயின்டால போகும் போதுதான் விளங்கும் இதுக்காகவே அவர்கள் பாடு படுகிறார்கள் புலம் பெயர்ந்த தமிழர்களும் இதுக்காகவே பாடு படுகிறார்கள் தமக்கென ஒரு நாடு அமையும் போது யாரிடமும் அடி வேண்ட அவசியமும் இல்லை அகதி வாழ்கையும் தேவையில்லை ஆனால் அவர்களை புலம் பெயர்ந்த மந்தைகள் எனவும் வர்ணிப்பது வேதனையானது ....கோவிலுக்கு மணியடி ஜயர்ர வேட்டி அவுட்டு கொடி கட்டு இது தேவை இல்லாதது

ஆரிய கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாய் இருப்பார்கள் எங்கள் புலம் பெயர் உறவுகள் அன்று கிளிநொச்சியில் இருக்கும் போது அறிந்து கொண்டேன்

ஏனவை விலத்தி நிற்கினும் யார் என்று கூறுங்கள்?

இரு வரியில் சொன்னாலும் உண்மையை சொல்லி இருக்கிறீர்கள், எப்படி இப்படி எல்லாம் கண்டுபிடிகிறீர்கள்

எல்லாம் யானைப்பால்[ஞானப்பால் ]குடித்தது சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பூச்சாண்டி காட்டிட்டு.. இன்று எல்லாரும் புலிகள் வழியமைத்துக் கொடுக்க மூட்டை முடிச்சுகள்.. மிஞ்சிப் போன பியர் கானுகள் மற்றும் வைன் போத்தல்களுடன் வன்னியை விட்டுப் போய்விட்டார்கள். ஆனால் நீங்கள் யாழ் களத்தில விடமாட்டன் என்று நிக்கிறியள். :o

இதையே.. ஈராக்கிலும்.. ஆப்கானிஸ்தானிலும்.. சூடானிலும் சோமாலியாவிலும் செய்திருந்தால்.. எவ்வளவு பிரச்சனைகளை.. உயிரிழப்புக்களை தவிர்த்திருக்கலாம்..! :o:icon_mrgreen:

Edited by nedukkalapoovan

ஆரிய கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாய் இருப்பார்கள் எங்கள் புலம் பெயர் உறவுகள் அன்று கிளிநொச்சியில் இருக்கும் போது அறிந்து கொண்டேன்

ஏனவை விலத்தி நிற்கினும் யார் என்று கூறுங்கள்?

முனிவர்,

நான் நினைச்சன் நீங்கள் முற்றும் உணர்ந்தவர் என்று, இப்பத்தான் குருகுலத்தில சேர்ந்திருக்கிறியள் போல!

நான் கேட்ட கேள்விகளுக்கும், நீங்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் உண்மைகளை அறியும் ஆர்வம் இருந்தால் போகப்போக உங்களுக்கே புரியும்.

வன்னியில் இருந்து வெளியேறிய ஐநா பணியாளர்களோடு மக்களின் சில இறுதி நேர உரையாடல்கள்

mms://wmstreaming.eurotvlive.com/ondemand/thayaka_valam/20080915.asf

http://www.eurotvlive.com/script/viewVideo...932852014862209

நன்றி - ஐரோப்பா தொலைக்காட்சி 15-09-2008

Edited by kurukaalapoovan

தயா,

நீங்கள் இப்பிடிச் சொன்னாலும்,

தலைவர் விடைகொடுக்கிற, அஞ்சலி செய்யுற படங்களை தாக்குதல் வேகத்தில வெளியிடுறத்திற்கு காரணம் புலம்பெயர்ந்தவர்களை சந்தோசமா வைச்சிருக்கத்தானே?

ஏன் கோத்தபாய கேட்டமாதிரி... இப்ப மக்களின் இழப்புகள் துயரங்கள் உந்தவேகத்தில வெளிவருகுதில்லை? அதைக்கண்டு கலங்கி பங்களிக்கிறவன்தான் போராளி....! நிண்டு நிலைப்பான்!

வெற்றி என்று விசிலடிக்கிறதுகளும், பவுசுக்கு வால்பிடிக்கிறதுகளும், தோல்வி துன்பம் என்றவுடன கலைஞ்சு போயிடுங்கள் இல்லாட்டி கட்சிமாறீடுங்கள்!

இதுகளை ஏன் உணருகினம் இல்லை?

அப்படி படங்கள் போட்டு ஒரு தலைப்பை நீங்கள் யாழில் திறந்தாலே வாசிப்பவர்களின் தொகையே குறைவாக இருக்கும்...!!!

90% மான புலம்பெயர்ந்தவை இடம்பெயர்வின் அவலங்களை கண்டவை....!!

ஏன் என்னை கேளுங்கள் நான் சொல்வேன் அப்படியான ஒரு நிகள்வை நான் கற்பனை செய்து பார்க்க கூட தயார் இல்லை...!!

1996ம் ஆண்டின் தென்மராட்ச்சியில் இருந்து வன்னிநோக்கிய இடம்பெயர்வின் போது நான் கடைசி நாள் முழுவதும் நான் நான்கு படகுகள் தொடுத்த தொடர் ஒண்றின் ஓட்டிகளில் ஒருவன்... மூண்று லட்சம் மக்கள்வரை வருவதுக்காக நிக்கிறார்கள்... நான்கு படகுகளிலும் ஒவ்வொரு முறையும் குறைந்த அளவானவர் களையே ஏற்ற முடிந்தது...

கடைசி முறை போன போது கரையில் நிண்டவர்கள் தானாக ஏற, படகுகள் நிறைந்து விட்டது... வர முடியாமல் தண்ணீர் கரையில் நிண்ட ஒரு வயது போன அம்மா என் கையை பிடித்து வைத்து கொண்டு கேக்கிறா "ஐயா எங்களை எல்லாம் விட்டுப்போட்டு போகப்போறியளோ"...??? இனி எப்ப ஐயா நீங்கள் எல்லாம் வருவியள்...?? நீண்ட காலம் ஆச்சு அந்த நிகள்வு மறப்பதுக்கு...

அப்படி ஒரு சம்பவத்தை இன்னும் ஒரு தரம் பாக்க கேக்க எனக்கு மனம் இல்லை அதுதான் உண்மை....!!

Edited by தயா

எல்லாரும் கைவிட்டுட்டு போறாங்க... போகட்டும்.

நமக்கு நாங்கள்தான் உதவவேணும். த.பொ.மே.க ( T.R.O.) ஐ பொருளாதார ரீதியில் பலப்படுத்துற வழியை பார்ப்பம்.

வெளிநாடுகளில அரசுக்கெதிரான பிரச்சாரங்களை முன்னெடுக்க வேணும் இதுக்கு புலம்பெயர் நாடுகளில இப்ப தங்கியிருக்கிற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒத்தாசை செய்யுங்கோ.

உதவமுடியுமானவர்கள் அவர்களுடன் கைகோருங்கள் முடியாதவர்கள் உபத்திரமாவது செய்யாமல் தள்ளி நிக்கலாமே..அவர்களின் தனிப்பட்ட விசயங்களை இங்கு விபாதிப்பதை தவிர்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.