Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எட்டுமாததங்களில் களமுனைகளில் 1509 போராளிகளே வீரச்சாவு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

02_10_2008_012_014.jpg

02_10_2008_012_013.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எம்மினிய வாழ்வுக்காய்

தமதினிய உயிர்களை ஈய்ந்த அந்த மாவீரர்களுக்கு

சிரம் தாழ்த்தி வந்தனங்கள்

உமது கனவை நிறைவுசெய்வோம் என உறுதியெடுத்துக்கொள்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

8 மாதத்தில் இறந்த போராளிகள் 1509. இதுவரை ஈழப்போரில் சந்திரிகாவின் ஜெயசுக்குறு காலத்தில் 1997ல் 2112 போராளிகள் வீரமரணம் அடைந்தார்கள். அதற்கு அடுத்து 2000ல் 1983 போராளிகள் வீரமரணம் அடைந்தார்கள். 1997ல் 2112 போராளிகள் இழந்தும் பிறகு ஒயாத அலை 3ன் போது இராணுவத்தை ஒரு கிழமைக்குள் பிடித்த இடங்களில் இருந்து ஒடச்செய்தவர்கள். உண்மையில் 1509 போராளிகள் இழந்ததற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பிட்ட சிலரைத் தவிர பங்களிப்பு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே காரணம். பங்களிப்போரின் எண்ணிக்கை கூட இழப்புகள் குறையும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 மாதத்தில் இறந்த போராளிகள் 1509. இதுவரை ஈழப்போரில் சந்திரிகாவின் ஜெயசுக்குறு காலத்தில் 1997ல் 2112 போராளிகள் வீரமரணம் அடைந்தார்கள். அதற்கு அடுத்து 2000ல் 1983 போராளிகள் வீரமரணம் அடைந்தார்கள். 1997ல் 2112 போராளிகள் இழந்தும் பிறகு ஒயாத அலை 3ன் போது இராணுவத்தை ஒரு கிழமைக்குள் பிடித்த இடங்களில் இருந்து ஒடச்செய்தவர்கள். உண்மையில் 1509 போராளிகள் இழந்ததற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பிட்ட சிலரைத் தவிர பங்களிப்பு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே காரணம். பங்களிப்போரின் எண்ணிக்கை கூட இழப்புகள் குறையும்.

இந்த இழப்பு அதிகமானது இதை குறைத்திட எல்லோரும் முன்வரவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

இன்னும் உயிராயுதத்தை பாவிக்கவேண்டியுள்ளதை இட்டு புலம்பெயர்தமிழர்கள் வெட்கப்படவேண்டும்

இருந்த இடத்திலிருந்து அடிக்க ஆயதமிருக்கும்போது......................?????

  • கருத்துக்கள உறவுகள்

சராசரியாக 180 போராளிகள் ஒரு மாதத்தில் வீரமரணம் அடைகிறார்கள். மேமாதம் வரை வீரமரணமடைந்த போராளிகள் 900 க்கும் 1000க்கும் இடையில் என்று முன்பு செய்தி வந்தது. புலம்பெயர்ந்த நாடுகளில் தாயகத்துக்கு பங்களிப்புச் செய்யாமல் இராணுவம் எத்தனை செத்தது? ஏன் இன்னும் பெடியள் அடிக்கேலை? என்று விமர்சனம் செய்யும் எம்மவர்கள் சிந்திப்பார்களா?.

  • கருத்துக்கள உறவுகள்

வீரச்சாவடைந்த போராளிகளுக்கு வீரவணக்கங்கள். :wub:

கந்தப்பு.. ஆளையால் இப்படிக் குற்றம்சாட்டிட்டு.. தாங்கள் தாங்கள்... தாயகத்தை விட்டு போராடப் பயந்து ஓடி வந்ததை மறைச்சு வாழத்தான் பலரும் விரும்பினம். தான் தான் சார்ந்தவை பாதிக்கப்படாம.. புலம்பெயர்ந்து சந்தோசமா வாழுற அதே நேரம்.. தமிழீழமும் கிடைக்க வேணும்.. இப்படித் தான் பல தமிழர்கள்.. மந்திரக்கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். அவர்கள் விழிப்படைஞ்சு.. ம்ம்ம்..??!

ஆனால் சிங்களவன்.. தன்ர பிள்ளைகளை உயிர்ப்பலியிட்டு.. மொத்த இலங்கையையும் சிங்கள பெளத்த நாடாகப் பிரகடனம் செய்திட்டான். நாங்கள் புலம்பெயர் நாடுகள் எங்கனும்.. ஒட்டுண்ணியாக வெற்றிகரமாக வாழக் கூடிய பெருமை மிக்க இனம் என்று எனித் தற்பெருமை பேசிக் கொள்ள வேண்டியதுதான்..! :huh:

Edited by nedukkalapoovan

எட்டு மாதங்களில் களமுனைகளில் 1இ509 மாவீரர்கள் மட்டுமே வீரச்சாவு: புலிகள் தரப்பில் தெரிவிப்பு

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து ஓகஸ்ட் வரையான எட்டு மாதங்களில் 1509 போராளிகளே களப்பலியானார்கள். அரசு வெளியிடும் தகவல்களில் உண்மையில்லை. விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை மேற்கண்டவாறு நேற்று அறிவித்துள்ளது.

இதுவரை களப்பலியான போராளிகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை அந்தப் பணிமனை நேற்று வெளியிட்டது. இந்த வருடத்தில் முதல் எட்டு மாதங்களில் 1047 ஆண் போராளிகளும் 462 பெண் போராளிகளுமாக 1509 பேர் களப்பலியாகியுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் 6500 போராளிகள் கொல்லப்பட்டனர் என்று அரசு அறிவித்துள்ளது. அது பெரும் தவறாகும். போராளிகள் மரணமானதும் வானொலி மூலம் அறிவிப்போம். அத்துடன் களப்பலியானவர்கள் விபரங்கள் மாத அடிப்படையில் வெளியிடுவோம். அவற்றைக் கொண்டு களப்பலியானவர்களின் எண்ணிக்கையை எவரும் இலகுவில் கணக்கிட்டுவிட முடியும் என்று மாவீரர் பணிமனையின் பேச்சாளர் தெரிவித்தார்.

1982 ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி தொடக்கம் 2008ம் ஆண்டு ஓகஸ்ட் 31 ம் திகதி வரை 21648 போராளிகள் களப்பலியாகியுள்ளனர். அவர்களில் 16953 ஆண் போராளிகளும் 4695 பெண் போராளிகளும் அடங்குவர் என மாவீரர் பணிமனை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி தமிழ்வின்

1509 மாவீரர்கள் மட்டுமே வீரச்சாவு.

தலைப்பு நெருடல் ஆனது... 8 மாதங்களில் 1500 பேர் என்பது பாரிய இளப்பு...

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு நெருடல் ஆனது... 8 மாதங்களில் 1500 பேர் என்பது பாரிய இளப்பு...

அரசாங்கம் சொல்வதுபோல் அவ்வளவல்ல.

எட்டு மாதங்களில் களமுனைகளில் 1509 மாவீரர்கள் மட்டுமே வீரச்சாவு

என்று சொல்ல வந்திருக்கலாம்???

ஆனால் ஒரு போராளியென்றாலும் இழப்பு பெரிதே.

தலையை சுற்றவைக்கும் எண்ணிக்கை. அந்த சுயநலமற்ற ஆத்மாக்களை நினைச்சாவது எங்கட சுகபோகங்களை கொஞ்சம் சுருக்கி எங்களால் ஆன எல்லா வழிகளிலும் போராட்டத்திற்கு உதவ வேண்டும். எங்கட இளம் சமுதாயம் எங்கட கண்ணுக்கு முன்னாலேயே அழிவதை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பது, கேவலங்கெட்ட சுயநலம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.