Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் மாபெரும் போராட்டம்

Featured Replies

bbtf.jpg

வன்னியில் பொது மக்கள் மீதான விமானத் தாக்குதல்களை கண்டித்து லண்டனில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட வுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை லண்டன் நகரில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தின்; முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது

மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைகால விடுமுறை கழிந்து எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பிரித்தானிய நாடாளுமன்றம் கூடுவதால், அதிகளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வருகை தரும் நேரத்தில் இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் வாழும் ஒவ்வொரு தமிழனும் இதனை தமது தார்மீகக் கடமையாக ஏற்று, தமது ஒற்றுமையையும், விருப்பையும் பிரித்தானிய அரசியல் கட்சிகளுக்கும், அனைத்துலக சமுகத்திற்கும் அனைத்துலக ஊடகங்களுக்கும் வெளிப்படுத்த முன்வரவேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

புலத்தில் இப்டியான கூட்டங்களில்....பங்குபற்றா மக்கள் பல விதம்... :lol: காரணம் பல... :icon_mrgreen: ஆனால்... உங்கள் குறும்படம்.... பாடல்கள்... கவிதைகள்... புத்தகங்கள்... பேப்பர்கள்.... இணையங்களால் மட்டும் நாம் ஒன்றும் சாதிக்க இயலா.... :blink: இப்படியான முக்கிய கூட்டங்களிலும் நாம் கட்டாயம் பங்கு பெற வேண்டும்.... :) மூளை உள்ளவர்களோ.... மூளை இல்லாதவரோ... எமக்கு விடுதலை வேண்டும்..... :):lol:

போட்டிகள் இப்போ வேண்டாம்....... தமிழ்ஈழத்துக்காக....நாம் வெல்லுவோம்.... மட்டக்கிளப்பில்.... கருணாவும்...பிள்ளையானும்... வெல்லடும்.... கிளிநொச்சியில்... புலிகளும்.... புலத்தில் நாம் எல்லோரும்... சேர்ந்து வெல்லுவோம்... தயவு செய்து... வாங்கள்... வாங்கள் தயவு செய்து.... வாழத்தான் வேண்டும் ...ஆனால்... இதுஅல்ல வாழ்க்கை........ எல்லா சினிமாவும் எல்லாருக்கும் விளங்கும்...அதாவது நம் அல்லது எதிரிக்கு கூட.... விளங்கும்.....தீர்வு தமிமீழம்தான்.

http://www.uktamilnews.com/index.php?optio...35&Itemid=1

Protest Outside the Parliament

Location - Parliament Square, London SW1P

Monday, 06 October 2008

From 4 - 7PM

(Nearest Tube Station: Westminster)

A peaceful protest has been organised by the British Tamils Forum on Monday, 6 October 2008 between 4pm and 7pm, at the Parliament Square. Monday, 6 October 2008 is when for the first time after the summer recess the Parliament will be back in session. Most Members of Parliament will attend on this day.

This is organised to lobby the UK political establishment and law makers to take immediate action to halt the indiscriminate aerial bombardment carried out by the Forces of Government of Sri Lanka against innocent Tamil civilians in the Vanni region. This is also to demand immediate action by HM's Government to send aid directly to help the over 230,000 Tamils who have been internally displaced by the military action taken by the Government of Sri Lanka.

For further information, please contact - 020 8544 8016

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே குகதாசன் ,நெல்லையன் ஆர்ப்பாட்ட பேரணி ,உண்ணாவிரதம் என்று கனடாவில் நடந்ததை பார்த்திருப்பீர்கள் எத்தனை ஆயிரம் பேர்கள் கனடாவில் இருக்கின்றனர்.நன்கு ஒழுங்கமைக்கபட்டதுதானே ஆனால் கலந்து கொன்டோர் எத்தனை பேர்?? பார்த்தீர்களா கேட்டால் ஆயிரம் காரணம் சொல்வார்கள்.

ஆர்ப்பாட்டம் பேரணி என்று நடத்தினால் ஒரு திருப்புமுனையாக அமையவேண்டும் ஆனால் சும்மா ஆர்ப்பாட்டம் பேரணி என்று சொல்லி கொஞ்சபேர் அமர்ந்து கொண்டு நடத்தினால் ஒலிக்குமா சர்வதேச அரங்கில்??

அதுக்காக தான் அப்படி எழுதினேன் ஆனால் நீங்கள் இரண்டு பேரும் எனக்கு நன்றாக கொடுத்து விட்டிர்கள் நன்றி :mellow::mellow:

நன்கு ஒழுங்காக அமைக்கப்பட்டு எல்லோரும் கலந்து கொண்டு தங்கள் உணர்வை வெளிப்படுத்தி ஓர்திருப்பு முனையை ஏற்படுத்தவேண்டும் என்று கூறுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஏதாவது செய்தே ஆகவேண்டியநிலையில் தமிழினம்?????

இல்லையா????

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஏதாவது செய்தே ஆகவேண்டியநிலையில் தமிழினம்?????

இல்லையா????

ஏற்றுக் கொள்கிறேன் அண்ணே ஆனால் நடாத்தப்படும் ஒவ்வொரு நிகழ்வும் அந்த நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றுக் கொள்கிறேன் அண்ணே ஆனால் நடாத்தப்படும் ஒவ்வொரு நிகழ்வும் அந்த நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

அப்படி செய்வதற்கு எமக்கென்று ஒரு நாடு இருக்கவேண்டும்

இவர் எல்லோரும் யாரோ தானே

ஆனால் அடிக்க அடிக்க அம்மியும்.................????

கிட்டத்தட்ட 25 வருடங்களாக பிரான்சில் இப்படியான நிகழ்வுகளில் தவறாது கலந்து கொண்டவன் என்கின்ற ரீதியில் எனக்கும் உங்களைப்போல் சலிப்புண்டு

ஆனால் வேறுவழி????

முயற்ச்சியுடையோர் இகழ்ச்சியடையார் பேரணியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நன்றிகள், நன்றிகள்

Edited by muneevar

அண்ணே குகதாசன் ,நெல்லையன் ஆர்ப்பாட்ட பேரணி ,உண்ணாவிரதம் என்று கனடாவில் நடந்ததை பார்த்திருப்பீர்கள் எத்தனை ஆயிரம் பேர்கள் கனடாவில் இருக்கின்றனர்.நன்கு ஒழுங்கமைக்கபட்டதுதானே ஆனால் கலந்து கொன்டோர் எத்தனை பேர்?? பார்த்தீர்களா கேட்டால் ஆயிரம் காரணம் சொல்வார்கள்.

ஆர்ப்பாட்டம் பேரணி என்று நடத்தினால் ஒரு திருப்புமுனையாக அமையவேண்டும் ஆனால் சும்மா ஆர்ப்பாட்டம் பேரணி என்று சொல்லி கொஞ்சபேர் அமர்ந்து கொண்டு நடத்தினால் ஒலிக்குமா சர்வதேச அரங்கில்??

அதுக்காக தான் அப்படி எழுதினேன் ஆனால் நீங்கள் இரண்டு பேரும் எனக்கு நன்றாக கொடுத்து விட்டிர்கள் நன்றி :mellow::mellow:

நன்கு ஒழுங்காக அமைக்கப்பட்டு எல்லோரும் கலந்து கொண்டு தங்கள் உணர்வை வெளிப்படுத்தி ஓர்திருப்பு முனையை ஏற்படுத்தவேண்டும் என்று கூறுகிறேன்

முனிவர், கனடாவில் நடத்தப்பட்டது கவனயீர்ப்புப் போராட்டம். அதோடு, அது முன்னேற்பாடுகளின்றி நடத்தப்பட்ட ஒன்று. அதாவது, ஓரிரண்டு நாட்களுக்குள் ஒழுங்கு செய்து நடத்தப்பட்டது. அதோடு, அன்று வேறொரு எழுச்சி நிகழ்வும் நடத்தப்பட்டது. அதனால் மக்களின் வருகை இரண்டாகப் பிரிந்தது. அது நடத்தப்பட்டது, சிறிலங்காவின் சுதந்திரதினத்தைக் கொண்டாடிய சிங்கள மக்களுக்கெதிராக. அவர்கள் கொண்டாடிய கட்டடத்தின் முன்பாகக் கவனயீர்ப்பு நடத்தப்பட்டது. அங்கு வந்திருந்த மக்களின் தொகை திருப்திப்படக்கூடியதாகவே இருந்தது. அந்த இடத்தில் அதிகப்படியான மக்கள் வந்திருந்தால் காவல்துறையினரால் நிறுத்தப்பட்டிருக்கலாம். அதேபோல, அன்று நடத்தப்பட்ட எழுச்சிநிகழ்வும் எதிர்பார்த்ததைவிடப் பலமடங்கு வெற்றியீட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பொங்குதமிழுக்கு மக்கள் அலைமோதவில்லையா? எல்லாவற்றிற்கும் மக்கள் குவியவேண்டுமென நாம் எதிர்பார்க்கமுடியாது. குகதாசன் குறிப்பிட்டதுபோல, அடிக்கடி செல்லும் மக்கள் சலிப்புறுவது இயற்கைதானே??? அதோடு, நாம் இன்னும் எமது போராட்டங்களை எமக்குள்ளேயேதான் செய்து கொண்டிருக்கிறோம். இனிமேல், நாம் செய்யும் போராட்டங்கள், நாம் வாழும் அரசாங்கங்களைக் குறிவைத்து நடத்தவேண்டும். அப்போதுதான் அதற்குப் பலனிருக்கும்.

முனிவர், எங்களை நாமே மாற்றுவதற்கே பல வருடங்கள் பிடித்தது. அப்படியிருக்க, மாற்றார் நாட்டினரை சுலபத்தில் மாற்றிவிடமுடியுமா? ஆகவே, தொடர்ந்து போராடுவோம். வெற்றியின் விளிம்பில் நிற்கிறோம் என்று ஆறுதல்பட்டுக்கொண்டு தொடர்ந்து எமது கடமையைச் செய்வோம்.

கனடாவில் நடத்தப்பட்ட சில நிகழ்வுகளுக்கு எதிர்பார்த்த அளவில் மக்கள் வரவில்லை என்பது உண்மைதான். அதற்கான காரணங்களைத்தான் நாங்கள் சரியாக ஆராயவேண்டும்.

பொதுவாக, இப்படியான நிகழ்வுகளை ஒழுங்குசெய்யும் ஏற்பாட்டாளர்கள் கடைசிநேரத்தில்தான் மக்களுக்கு விபரங்களை அறிவிக்கிறார்கள். அனைத்து ஊடகங்களினூடாகவும் தொடர்ச்சியான பரப்புரைகளை மேற்கொண்டால் கணிசமான அளவில் மக்கள் ஆதரவைப் பெறலாம் என்ற நிலையிலும் ஏனோ அவ்வாறு செய்வதில்லை. இதைவிடக் கொடுமையான விடயம் என்னவென்றால், யாராவது ஒரு முயற்சியை ஆரம்பித்தால் அதற்குப் போட்டியாகப் பலர் அதேமாதிரியான நிகழ்வுகளை ஒழுங்குசெய்கிறார்கள். அண்மையில் வானம்பாடிகள் ஒரு தொடர் இசை நிகழ்ச்சியை நடாத்தி வன்னியில் வாடும் மக்களுக்கான நிதிச் சேகரிப்பில் ஈடுபட்டார்கள். அடுத்த வாரமே 24 மணிநேர தவில் நிகழ்ச்சி, 27 மணிநேர நிழ்ச்சியென்று பலரும் நிதிச்சேர்ப்பை ஆரம்பித்துவிட்டார்கள். இதைப்போல எத்தனையோ நடக்கிறது. நோக்கங்கள் உன்னதமானதாக இருப்பினும் இப்படியான நடவடிக்கைகளால் மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தி, அவர்கள் சோர்ந்துபோவதுதான் இங்குள்ள நிலை. கனடாவில் இருக்கின்ற தமிழ்மக்களிடம் தாயகத் தாகம் நிறையவே இருக்கிறது. தனிப்பட்ட குழுப்போட்டிகளால் அதை மழுங்கடிக்காமல், சரியான விதத்தில் ஒழுங்கமைத்து முன்னெடுத்தால் எத்தனையோ விடயங்களைச் சாதிக்கலாம். அதற்கு இங்குள்ள தமிழ் ஊடகங்களையும் ஒன்றிணைத்துச் சரியான விதத்தில் பயன்படுத்தவேண்டும். அண்மையில் இடம்பெற்ற ஒலிவழி ஊடகங்களின் ஒன்றிணைந்த நிகழ்வின் வெற்றி நல்ல எடுத்துக்காட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர், கனடாவில் நடத்தப்பட்டது கவனயீர்ப்புப் போராட்டம். அதோடு, அது முன்னேற்பாடுகளின்றி நடத்தப்பட்ட ஒன்று. அதாவது, ஓரிரண்டு நாட்களுக்குள் ஒழுங்கு செய்து நடத்தப்பட்டது. அதோடு, அன்று வேறொரு எழுச்சி நிகழ்வும் நடத்தப்பட்டது. அதனால் மக்களின் வருகை இரண்டாகப் பிரிந்தது. அது நடத்தப்பட்டது, சிறிலங்காவின் சுதந்திரதினத்தைக் கொண்டாடிய சிங்கள மக்களுக்கெதிராக. அவர்கள் கொண்டாடிய கட்டடத்தின் முன்பாகக் கவனயீர்ப்பு நடத்தப்பட்டது. அங்கு வந்திருந்த மக்களின் தொகை திருப்திப்படக்கூடியதாகவே இருந்தது. அந்த இடத்தில் அதிகப்படியான மக்கள் வந்திருந்தால் காவல்துறையினரால் நிறுத்தப்பட்டிருக்கலாம். அதேபோல, அன்று நடத்தப்பட்ட எழுச்சிநிகழ்வும் எதிர்பார்த்ததைவிடப் பலமடங்கு வெற்றியீட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பொங்குதமிழுக்கு மக்கள் அலைமோதவில்லையா? எல்லாவற்றிற்கும் மக்கள் குவியவேண்டுமென நாம் எதிர்பார்க்கமுடியாது. குகதாசன் குறிப்பிட்டதுபோல, அடிக்கடி செல்லும் மக்கள் சலிப்புறுவது இயற்கைதானே??? அதோடு, நாம் இன்னும் எமது போராட்டங்களை எமக்குள்ளேயேதான் செய்து கொண்டிருக்கிறோம். இனிமேல், நாம் செய்யும் போராட்டங்கள், நாம் வாழும் அரசாங்கங்களைக் குறிவைத்து நடத்தவேண்டும். அப்போதுதான் அதற்குப் பலனிருக்கும்.

முனிவர், எங்களை நாமே மாற்றுவதற்கே பல வருடங்கள் பிடித்தது. அப்படியிருக்க, மாற்றார் நாட்டினரை சுலபத்தில் மாற்றிவிடமுடியுமா? ஆகவே, தொடர்ந்து போராடுவோம். வெற்றியின் விளிம்பில் நிற்கிறோம் என்று ஆறுதல்பட்டுக்கொண்டு தொடர்ந்து எமது கடமையைச் செய்வோம்.

தமிழச்சி அக்கா எந்தவொரு நிகழ்வாகயிருந்தாலும் திட்டமிடல் என்பது மிக முக்கியம் திட்டமிட்டு நடாத்திப்பருங்கள் யாவிலும் வெற்றி உதாரணம் நீங்கள் கூறிய பொங்குதமிழ் இதயே கூற முற்படுகிறேன் சுமார் ஜந்நூறு பேர் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்வதற்க்கும் ஜந்தாயிரம் பேர் சேர்ந்து செய்வதற்க்கும் வித்தியாசம் உண்டு .மேலும் தாங்கள் நடத்தும் நிகழ்வை எல்லோருக்கும் அதாவது பங்கு பெறுபவர்கள் எல்லோருக்கும் அறியும்படியாகசெய்யவேண்டும்

நாம் நடத்தும் போராட்டங்கள் அந்த அரசாங்கத்தை குறிவைத்து நடத்தவேண்டும்

நிட்சயமாக அந்த நாட்டு அரசாங்கத்தை குறிவையுங்கள் ஏதாவது பலன் கிட்டும் குகதாசன் சொன்னது போல அடிக்க அடிக்க அம்மியும் நகரும்..........அதற்க்காக அங்குள்ளவர்களை ஒன்று சேருங்கள் .இதையே எதிர்ப்பார்க்கின்றோம் இழுப்பாணி சப்பாணியாக இருந்தால் அவ்வளவுதான்??

கடமையை செய்யுங்கள் வெற்றியின் விளிம்பில் நிற்கிறோம் வெற்றி நிட்சயம் என

கனடாவில் இப்போது நடத்தப்படும் நிகழ்வுகள் திட்டமிட்டு, ஒரு அணியின்கீழ்தான் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிகழ்விற்கும் எவ்வளவு மக்கள் வரவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறதோ அவ்வளவு மக்கள் தொகை வரவழைக்கப்படுகிறது. நான் முன்னர் கூறியது போல, கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்ட இடம் அதிக மக்களைக் கொள்ளக்கூடிய இடமல்ல. அங்கே ஓரிடத்தில் அதிகமாகக் குழுமமாக மக்கள் நிற்பதற்கு அனுமதியில்லை. அப்படி அனுமதி எடுப்பதும் கடினம். ஆகவே, மக்கள் பரந்து நிற்க வேண்டிய கட்டாயம் இருந்தது. என்னைப் பொறுத்தவரைக்கும் அந்நிகழ்விற்கு வந்த மக்கள்தொகை திருப்திப்படக்கூடிய வகையிலேயே இருந்தது. அதேபோல், தவிர்க்க முடியாத காரணங்களால்தான் இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் வைக்க வேண்டியதாகிவிட்டது. எல்லா விளக்கங்களையும் வெளியில் கூறமுடியாது. விழா ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்த வெற்றி அங்கே கிடைத்தது.

வானம்பாடிகளின் நிகழ்வின்போதும், தவில் குழுவினர், ஒரு மணித்தியாலத்திற்கு தங்கள் நிகழ்வினைச் செய்திருந்தார்கள். அதேபோல், வானம்பாடியினரும் 30 மணிநேர உண்ணாவிரதத்தின்போதும், தவில் நிகழ்வின்போதும், தங்கள் நிகழ்ச்சியை வழங்கியிருந்தார்கள். ஆகவே, இது போட்டிக்காகச் செய்த நிகழ்வல்ல. ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்துதான் இந்நிகழ்வுகளைச் செய்கிறார்கள். வானம்பாடிகளின் நிகழ்வின்போதே, தவில் குழுவினர், இவ்வாறானதொரு நிகழ்வைச் செய்யப்போவதாகத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இவ்வளவு விரைவில் நடக்குமென நான் எதிர்பார்க்கவில்லை. தவில் நிகழ்ச்சிக்குச் செல்ல எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதனால், வந்த மக்கள்தொகை பற்றித் தெரியவில்லை. ஆனால், மற்ற இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் மண்டபம் நிறைந்து வழிந்தது.

நக்கீரன் குறிப்பிட்டதுபோல, இங்கு போட்டிக்காக அந்த விழாக்கள் நடத்தவில்லை. அறிவுறுத்தலின்படிதான் நடத்தப்பட்டது. நீங்கள் குறிப்பிட்டதுபோல, ஒவ்வொரு கிழமையும் இப்படிச் செய்வதால் மக்களுக்குச் சலிப்பு வரும் என்பது உண்மைதான். விழா ஏற்பாட்டாளர்கள் இந்நிகழ்வுகளைக் காலம் கடந்து செய்திருந்தால் அதிக பலன்களைப் பெற்றிருக்கலாம். அதனை, அவர்கள் ஏனோ கவனத்தில் எடுக்கவில்லை. இனிமேல் இவ்வாறான நிகழ்ச்சிகளுக்கிடையில் உரியகால இடைவெளி வழங்குவார்கள் என நினைக்கிறேன். மக்களை விழிப்படைய வைத்திருக்கவேண்டுமே தவிர சலிப்படைய வைக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

காற்று மூச மூசத்தான் கனலும் சிவக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.