Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வே மண்ணில் ஏகன் திரைப்படம்

Featured Replies

தமிழ்வானத்தின் ஆதரவில் இன்று வெற்றிகரமாக நோர்வே மண்ணில் ஏகன் திரைப்படம் திரையிடப்பட்டது.;

பரணிக்கு சினிமாவை விட்டால் வேறு ஒன்றுமில்லை. ரொம்ப முக்கியம். :D பார்த்திட்டீங்கள் போல.....படம் எப்படி? அதையும் சொல்றது. இல்ல டிக்கட் கிடைக்கல்யோ? :)

aeganstills11dm9.jpg

இன்று சென்னையில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடாத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு அஜித் உரையாற்றியுள்ளார்.

அந்த உரை ஒரு நிமிடத்துக்குட்பட்டததாக அமைந்திருந்தது. அவர் இந்த உண்ணாவிரதப் போராட்ட உரையில் கூற வந்ததே வேற ஒன்றாக அமைந்திருக்கையில் அதில் சினிமாவை சினிமாவோடு விட்டுவிடுங்கள் என்ற கருத்தையே முன்வைத்தார். ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடத்திய இந்த உண்ணாவிரதப் போரட்டத்தில் அஜுத் ஆற்றிய உரையில் ஈழத்தமிழர் பற்றிய எந்த ஒரு விடயத்தை கூட அவர் அங்கு குறிப்பிடவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் அஜுத் இந்த போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளனும் என்று செய்தி வெளியிட்டதை அடுத்து புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கொந்தழிப்பின் பின் அஜுத் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று ஊடங்கங்களுக்கு விசேட கருத்தை தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து மக்களின் கொந்தழிப்பால் சில நாடுகளில் அஜுத்தின் புதிதாக வெளியாகிய ஏகன் திரைப்படம் ரத்து செய்யப்பட்டிருந்த இந்த நிலையில் அஜுத் இன்று ஆற்றிய உரையில் மீண்டும் சர்சயாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சினிமாவை சினிமாவோடு விட்டுவிடுமானால் ஏன் சினிமா சங்கம் ஈழத்தமிழருருக்காக அணி திரண்டு இந்தப் போராட்டம் நடத்த வேண்டும்?? ஏன் அஜுத் ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடத்திய உண்ணாவிரதப் போரத்தில் கலந்து கொள்ள வேண்டும்? இந்த அஜுத்தின் கருத்திலிருந்து இந்த போராட்டம் ஒன்று தேவையில்லை. இதை நடத்தியிருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பதுதாகவே தென்படுகிறது.

அஜுத்தின் அந்த கருத்துக்கு தமிழ் சினிமா நடிகர் சங்க தலைவர் சரத்குமார் ஆற்றிய உரையில் அஜுத்திற்கு சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்

Edited by vidivelli

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்வானத்தின் ஆதரவில் இன்று வெற்றிகரமாக நோர்வே மண்ணில் ஏகன் திரைப்படம் திரையிடப்பட்டது.;

தமிழ்வானமோ பரணி ? புரியவில்லை ? :D

  • தொடங்கியவர்

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் என்ற கவிதையின் ஆசிரியர்தான் தமிழ்வாணம் . இங்கு இதை இணைத்தது காரணம் ஈழத்திற்கு ஆதரவு என்ற பெயரில் கவிதைகளை வரைந்து விட்டு பின்புறமாக குத்துவது எந்தவிதததில் நாகரீகம். சினிமாவை சினிமாகவே பாருங்கள் என்ற நடிகரின் படத்தை எதற்காக ஓடவேண்டும் .

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் என்று கூற முதல் நாம் ஈழத்தமிழராய் வாழவேண்டும் அந்த வலி புரியவேண்டும்.

அப்படிப் போடுங்க அரிவாளை. மற்றவர்களுக்கு உபதேசம் செய்வோர் தமது பக்கத்தை சரி பார்ப்பதில்லை. அஜித் இப்படிச் சொன்னாரோ இல்லையா என்பதற்கு இன்றுவரை விடையில்லை. ஆனால் புறக்கணிப்பு என்று கொடி பிடிப்பர்கள் தங்களுக்கு ஏதாவது வருமானம் கிடைக்குமென்றால் புறக்கணிப்பு காணாமல் போய்விடும். ஜெயலலிதாவையும் ஜெயா தொலைக்காட்சியையும் எதிர்த்துக் குரல் கொடுப்போம். அதே வேளை ஜெயா தொலைக்காட்சியோடு கைகோர்த்து ராகமாலிகாவை ஐரோப்பாவில் நடத்துவோம். எவரும் கண்டு கொள்ளக் கூடாது. இது தானப்பா :D எமது தேசியக் கொள்கைகள். :(

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் என்ற கவிதையின் ஆசிரியர்தான் தமிழ்வாணம் . இங்கு இதை இணைத்தது காரணம் ஈழத்திற்கு ஆதரவு என்ற பெயரில் கவிதைகளை வரைந்து விட்டு பின்புறமாக குத்துவது எந்தவிதததில் நாகரீகம். சினிமாவை சினிமாகவே பாருங்கள் என்ற நடிகரின் படத்தை எதற்காக ஓடவேண்டும் .

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் என்று கூற முதல் நாம் ஈழத்தமிழராய் வாழவேண்டும் அந்த வலி புரியவேண்டும்.

மன்னிக்கவும் பரணி. தமிழ்வானம் என்று நோர்வேயில் ஏதோ அமைப்பு இருக்காக்குமெண்டு நினைச்சுத்தான் அப்படியொரு கேள்வியை கேட்டுவைத்தேன்.

அதுதானே அஜித்தே சொன்னாச்சேல்லே சினிமாவை சினிமாவா பாருங்கோவெண்டு. :D

அஜித் ஒரு சுயநல வாதி. நிச்சயமாக எதிர்காலத்தில் இவரை வைத்து படம் எடுக்க திரை உலகம் சற்ற்று பின் நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உணற்சிகள் என்பவை மனதின் அடியில் இருந்து தானாக எழவேண்டும். அது யாரும் வற்புறுத்தியோ அல்லது பயப்படுத்தியோ வரக்கூடாது. தமிழகத்திலேயே இவருக்கு எதிராக குரல்கள் கிளம்பியிருக்கும் போது புலம் பெயந்த நாடுகளில் உள்ள தமிழர்களில் சிலர் இவரின் ஏகன் திரைப்படத்தை பார்க்க முண்டியடித்துக்கொண்டு திரையரங்கு வாசல்களில் நின்றமை எம் இனத்தின் ஒற்றுயை எடுத்துக்காட்டுகின்றது. சினிமாவை சினிமாவோடு விட்டுவிடவேண்டுமானால் ஏன் சினிமா சங்கம் ஈழத்தமிழருருக்காக அணி திரண்டு இந்தப் போராட்டம் நடத்த வேண்டும்?? ஏன் அஜுத் ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்? இந்த அஜுத்தின் கருத்திலிருந்து இந்த போராட்டம் ஒன்றும் தேவையில்லை. இதை நடத்தியிருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பதுதாகவே தென்படுறது.

கீழே உள்ள தொடரில் சென்று பார்த்தால் அங்கேயும் நடிகர்கள் தான் அதுவும் மானம் உள்ள நடிகர்களின் ஆவேச கொதிப்புக்களை காணலாம்.

காணொளி

விடிவெள்ளி

உங்கள் கருத்திற்கு நான் எதிர்க் கருத்துக் கூறுவதாக நினைக்க வேண்டாம். ஒருவர் எமக்காக கத்திக் குரல் கொடுப்பதால் மட்டும் அது எமக்கு ஆதரவான கருத்தாகப் போய்விடாது. அதுபோல் ஒருவர் அமைதியாக உதவுகின்றாரென்றால் அது நமக்கு ஆதரவில்லாமல் போய்விடாது. ஒருவர் கத்துவதால் மட்டும் அவர் தான் மானமுள்ள தமிழர் ஆகி விடுவாரா என்ன. இவர்கள் சிலரின் ஆவேசமான தமிழகத்தில் "தனித் தமிழ் நாடு" காண்போம் போன்ற அர்த்மற்ற பேச்சுக்கள் தானே, முதலில் ஒருமித்துக் குரல் கொடுத்தவர்களைக் கூட இன்று கேள்வி கேட்க வைத்திருக்கின்றது.

நீங்கள் சொல்லியது போல் எமக்காக ஒலிக்கும் குரல்கள் அவர்களின் அடிமனதிலிருந்து வர வேண்டும். மிரட்டி வர வைப்பதற்கு பெயர் ஆதரவு இல்லை. எமக்காக ஒலிக்கும் குரல்களைப் பற்றிக் கொள்வோம். மற்றவர்களை மிரட்டுவதை விட்டுவிட்டு அவர்களாகவே உணர விட்டுவிடுவோம். அது தான் அவர்களையும் சிந்திக்க வைக்கும்.

விசு, ரஜனி போன்றவர்களக்கு நாம் தேவையில்லாமல் எவ்வளவு உபத்திரவம் கொடுத்தோம். ஆனால் விசு தனது அரட்டை அரங்கம் மூலம், தமிழகத்திலுள்ள எமது சிறார்களுக்கு படிப்புச் செலவைக் கொடுத்த போது எம்மைச் செருப்பால் அறைந்தது போல் இருந்தது.

எனவே முடிந்தவரை எமக்கு நண்பர்களைச் சம்பாதிக்க முடியாவிட்டாலும், எதிரிகளை சம்பாதிக்காது இருப்போம். தயவு செய்து எனது கருத்தில் தவறிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். மனதில் பட்டதைத் தான் எழுதினேன்.

நான் நேற்று, இணையதளம் ஒன்றில் இருந்து தரவிறக்கம் செய்து இப்படத்தை பார்த்து விட்டு என்னை எந்த செருப்பால் அடிக்கலாம் என தேடி திருந்தேன். வழக்கமாக அஜித்தினதும், விஜயினதும், ரஜனியினதும் திரைப்படங்களை பார்பது இல்லை. காரணம், படு குப்பையாக இருக்கும் என்று. அப்படி தெரிந்து இருந்தும், நேரம் செலவழித்து தெரியாத்தனமாக பார்த்து விட்டேன்

கடந்த 5 வருடங்களில் நான் பார்த்த மிக மோசமான படம் இது.

பரணி: உங்களுக்கு எப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் இங்கு பணியாற்றுகிறேன் என்று உங்களுக்குத் தெளிவு படுத்தியிருந்தும். இப்படியான ஒரு தலைப்பை இலகுவாகப் போட்டு நீங்கள் சாதித்ததாக நினைக்கலாம். இதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டிய நாள் மீண்டும் திரும்பும். உங்களைப் போன்றவர்களால் தான் எங்கள் மக்களிடையே பலதரப்பட்ட குழப்பங்கள் தோன்றுகிறது. நீங்கள் குறிப்பிட்டது போல் உண்மையிலேயே அஜித் அப்படிக் குறிப்பிட்டு இருந்தால் இந்த விடயத்தை முதலில் எதிர்ப்பவன் நானாகத் தான் இருப்பேன். அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசலாம் ஆனால் அதற்காக வருத்தப்பட வேண்டிய நேரம் வரும் என்பதற்கு நீங்கள் ஓர் உதாரணமாக ஆகிவிடாதீர்கள்.

இதற்கு மேல் உங்களின் கருத்துக்கு ஆதரவாகப் பதில் சொன்னவர்களுக்கு நான் பதில் அளிக்க வேண்டிய தேவையில்லை. நான் எந்த நிலையில் இங்கு திரைப்படங்கள் ஓடுவதற்கு உதவுகிறேன் என்றும் உங்களுக்கு முழுமையகாத் தெரியாது. ஆகவே வசம்பு போன்றவர்களின் கருத்தையே உங்களின் தெளிவற்ற கேள்விகளுக்குப் பதிலாகத் தருகிறேன்.

உங்கள் கருத்திற்கு நான் எதிர்க் கருத்துக் கூறுவதாக நினைக்க வேண்டாம். ஒருவர் எமக்காக கத்திக் குரல் கொடுப்பதால் மட்டும் அது எமக்கு ஆதரவான கருத்தாகப் போய்விடாது. அதுபோல் ஒருவர் அமைதியாக உதவுகின்றாரென்றால் அது நமக்கு ஆதரவில்லாமல் போய்விடாது. ஒருவர் கத்துவதால் மட்டும் அவர் தான் மானமுள்ள தமிழர் ஆகி விடுவாரா என்ன. இவர்கள் சிலரின் ஆவேசமான தமிழகத்தில் "தனித் தமிழ் நாடு" காண்போம் போன்ற அர்த்மற்ற பேச்சுக்கள் தானே, முதலில் ஒருமித்துக் குரல் கொடுத்தவர்களைக் கூட இன்று கேள்வி கேட்க வைத்திருக்கின்றது.

நீங்கள் சொல்லியது போல் எமக்காக ஒலிக்கும் குரல்கள் அவர்களின் அடிமனதிலிருந்து வர வேண்டும். மிரட்டி வர வைப்பதற்கு பெயர் ஆதரவு இல்லை. எமக்காக ஒலிக்கும் குரல்களைப் பற்றிக் கொள்வோம். மற்றவர்களை மிரட்டுவதை விட்டுவிட்டு அவர்களாகவே உணர விட்டுவிடுவோம். அது தான் அவர்களையும் சிந்திக்க வைக்கும்.

விசு, ரஜனி போன்றவர்களக்கு நாம் தேவையில்லாமல் எவ்வளவு உபத்திரவம் கொடுத்தோம். ஆனால் விசு தனது அரட்டை அரங்கம் மூலம், தமிழகத்திலுள்ள எமது சிறார்களுக்கு படிப்புச் செலவைக் கொடுத்த போது எம்மைச் செருப்பால் அறைந்தது போல் இருந்தது.

எனவே முடிந்தவரை எமக்கு நண்பர்களைச் சம்பாதிக்க முடியாவிட்டாலும், எதிரிகளை சம்பாதிக்காது இருப்போம். தயவு செய்து எனது கருத்தில் தவறிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். மனதில் பட்டதைத் தான் எழுதினேன்.

விசு, ரஜனி போன்றவர்களக்கு நாம் தேவையில்லாமல் எவ்வளவு உபத்திரவம் கொடுத்தோம். ஆனால் விசு தனது அரட்டை அரங்கம் மூலம், தமிழகத்திலுள்ள எமது சிறார்களுக்கு படிப்புச் செலவைக் கொடுத்த போது எம்மைச் செருப்பால் அறைந்தது போல் இருந்தது.

தமிழ்வானம் அண்ணா கவலை வேண்டாம்..ஒவ்வொருமனிதரும் தன் மனச்சாட்சிக்கு சரியாக வாழ்ந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.எங்கள் எல்லோருக்கும் தமிழ்தேசிய உணர்வு அதிகம் அதனால்தான் அப்படி எழுதப்படுகிறது.தமிழனுக்கு எதிராக பேசினாலும்.. ஆதரவாக பேசாவிட்டாலும் கோபப்படும் நாங்கள்..ஆதரவாக பேசினால் கட்டியணைத்து கண்ணீர் விடுவோம்.தவறுகளை எங்கள் உணர்வை நினைத்து மன்னிக்கலாம்தானே..நீங்கள் உங்கள் கடமையைச்செய்யுங்கள்.நன்றி

  • தொடங்கியவர்

வணக்கம் வசி நான் இங்கு எதையும் சாதித்து விடவுமில்லை எதற்கும் எதிரியும் இல்லை. நாமே முகத்தில் புன்னகையும் உள்ளே புகைச்சலையும் வைத்திருந்தால் மற்றவர்கள் எப்படி திருந்துவார்கள். நான் உங்களுடன் உரையாடியபோதே கூறியிருந்தேன் அதற்கேற்றபோல் நடந்தேன். இன்றும் சொல்கின்றேன் அஜித் செய்தது தவறு தன் தவறை ஓப்புக்கொள்ளாமல் சினிமாவை சினிமாவோடு வைத்திருங்கள் என்று கூறியதன் அர்த்தம் விளங்கியிருந்தும் நீங்கள் செய்தது பிழை. வருமானம் இன்று வரும் நாளை போய்விடும் ஆனால் உங்கள் பெயர் மக்கள் மத்தியில் நல்லதொரு அபிப்பிராயத்துடன் இருந்தது ஆனால் நான் உரையாடியதில் இருந்து பலரும் மிகமிக கவலைப்பட்டார்கள் ஏன் இவர்கள் திரும்ப திரும்ப தப்பையே செய்கின்றார்கள் என்று அப்போதுதான் நினைத்தேன் ஒரு சின்ன கருத்தை வைப்போம் என்று. . உண்மையில் உங்கள் கவிதைக்கும் நட்புக்கும் நான் நிறையவே மரியாதை வைத்திருக்கின்றேன். அது என்றும் நிலைக்கும் ஆனால் உங்கள் பெயரை நீங்களே கெடுக்க நினைக்காதீர்கள். அவர்கள் இன்று உழைப்பார்கள் நாளை உதறிவிட்டு வெளியே வந்துவிடுவார்கள். நீங்கள் உங்கள் கவிதை மூலம் நிறைய சாதிக்க வேண்டும் இப்படியான செயல்கள் செய்வதால் உங்கள் முயற்சிகளும் வீணாகிவிடும். எழுதுங்கள் நிறைய எழுதுங்கள்

வசம்பு.

எமது தாயக விடுதலைப்போராட்டத்திற்கு மிகப்பெரிய ஆதரவு அலைகள் இருக்கின்றன. ஆனாலும் இடையிடையே சிறு சிறு எதிர்ப்பு போன்ற சலசலப்புகளும் இருக்க தான் செய்கின்றன. இவை வெறும் சுய நலத்துக்காக எழும் எதிர்ப்பலைகளே. தனி ஒரு அஜித் எதிர்த்துவிட்டால் நாம் தோல்வி அடைய போவதும் இல்லை. இல்லை அஜித் தான் நேசக்கரம் நீட்டுவதாயின் நாம் வென்றுவிடப்போவதும் இல்லை. ஏனெனில் நாம் தனித்து எமது கைகளையே நம்பி போரிடும் ஓர் இனம். எம் தலைவனை நம்பியே நாம் இரவில் விழிகளை மூடுகின்றோம் மறுநாளும் இன்று போல் விடியும் என்று. அண்று அதே உண்ணாவிரத மேடையில் சிலர் சொன்னார்கள் நான் இலங்கை தமிழருடன் வெளிநாடுகள்ளில் பழகி இருக்கின்றேன் ... அவர்கள் மிகவும் அன்பானவர்கள் இனிமையானவர்கள். அவர்கள் திட்டுவதே ஒரு இனிமையாயிருக்கும் என்று. ஆம் நாம் அன்பானவர்கள் தான் ஆனாலும் அவர்கள் செய்த வினைக்கான பயனை அவர்கள் அன்று பெற்றார்கள். அவை கடந்தவை அவற்றை இனி மேலும் மறப்பதே சாலச் சிறதது. அதுபோல் எமது பயணத்துக்கு எதிராக செயற்படுவோரையும் அரவணைத்து அவர்களுக்கு எம் பக்க நியாயங்களையும் எடுத்துரைத்து அவர்கள் துணையுடனும் எம் உரிமைகளை வென்றெடுப்பது தான் சிறந்தது. இது தெரியாமல் இல்லை

அது அப்படி இருக்க சினிமாவில் மாயாஜாலம் செய்து எம்மை அண்டிப் பிளைப்பு நடாத்தும் அல்டிமேட் எமது விடயத்தில் சாணகச் சாரை மாதிரி இருப்பது தான் எமக்கு கடுப்பாக இருக்கின்து.

Edited by vidivelli

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் என்ற கவிதையின் ஆசிரியர்தான் தமிழ்வாணம் . இங்கு இதை இணைத்தது காரணம் ஈழத்திற்கு ஆதரவு என்ற பெயரில் கவிதைகளை வரைந்து விட்டு பின்புறமாக குத்துவது எந்தவிதததில் நாகரீகம். சினிமாவை சினிமாகவே பாருங்கள் என்ற நடிகரின் படத்தை எதற்காக ஓடவேண்டும் .

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள் என்று கூற முதல் நாம் ஈழத்தமிழராய் வாழவேண்டும் அந்த வலி புரியவேண்டும்.

பரணி அண்ணா நீங்கள் சொன்ன கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆனால் அண்ணா இங்கு சவுண்டு விடும் ஒருவருக்கும் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் விடுதலைக்கு எதிராக வலுதீவிரமாக குரல் கொடுப்பவருக்கும் நெருங்கிய தொடர்பு. அதற்காக இந்த நபர் களத்தில் ஒற்று வேலை கூட பார்க்கின்றாராம்.

அவரும் இங்கு குரல் கொடுக்கின்றார் அண்ணா இதுதான் உலகம் அவருடைய கட்டுபாட்டில் இங்கு ஒரு கும்பல் இங்கு வேலை செய்கின்றது.

அண்ணா இங்கு சவுண்டு விடும் ஒருவருக்கும் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் விடுதலைக்கு எதிராக வலுதீவிரமாக குரல் கொடுப்பவருக்கும் நெருங்கிய தொடர்பு. அதற்காக இந்த நபர் களத்தில் ஒற்று வேலை கூட பார்க்கின்றாராம். அவரும் இங்கு குரல் கொடுக்கின்றார் அண்ணா இதுதான் உலகம் அவருடைய கட்டுபாட்டில் இங்கு ஒரு கும்பல் இங்கு வேலை செய்கின்றது.

பார்த்தால் பார்த்துவிட்டு போகட்டுமே....... இங்கு என்ன எதிரிப்படை முகாம் மீது தாகுதல் நடத்த திட்டமா போடுகின்றோம்?

பரணிக்கு சினிமாவை விட்டால் வேறு ஒன்றுமில்லை. ரொம்ப முக்கியம். :lol: பார்த்திட்டீங்கள் போல.....படம் எப்படி? அதையும் சொல்றது. இல்ல டிக்கட் கிடைக்கல்யோ? :unsure:

பரணி ஒரு சிறந்த கவிஞர். அவரது பல கவிதைகளை நான் வாசிச்சு மகிழ்ந்து இருக்கின்றேன். ஆனால்.. அவர் எதேச்சையாக மற்றவர்களை வலிந்து குற்றம் சுமத்தி சேறு பூசுவதிலும் வல்லவர். கவிஞர் ஜெயபாலனுடன் பரணி மல்லுப்பிடித்த கருத்தாடலை எத்தனைபேர் வாசிச்சு இருப்பீங்களோ தெரியாது. இன்று கவிஞர் ஜெயபாலன் தனுசுடன் படம் நடிக்கிறாராம் எண்டு யாழில செய்தி ஒட்டி பெருமைப்படுபவரும் பரணி அவர்களே. இன்று வசீகரனுக்கு சேறு பூசுகின்றார். நாளை யாருக்கு சேறுபூசுகின்றார் என்று பார்ப்போம். இது அவரது பலவீனம்.

பரணி இந்த நாறிப்போன கருத்தாடல்களில் இருந்து விலகிநின்று யாழில் நல்ல கவிதைகளை படைக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்.

Edited by முரளி

  • தொடங்கியவர்

வணக்கம் முரளி

சேறு பூசவில்லை அந்த கருத்துக்களின் உள் அர்த்தங்கள் தெரிந்தால் நீங்களும் என்வழிதான். நான் எழுதிய (வெட்டி ஒட்டவில்i) கருத்துக்களும் தகவல்களும் செவி வழி வந்தவவை அதில் உள்ளவற்றை நன்றாக ஆழ்நது பாருங்கள் அர்த்தம் புரியும். வசீகரனுடன் தொலைபேசியில் கதைத்திருந்தேன். இங்கு எழுதியதற்கான காரணத்தையும் கூறியிருந்தேன். அவர் செய்தது பிழை என்று வாதாடினேன்.

மற்றையது ஜெயபாலன் அவர்களிற்கு விளம்பரம் செய்யவில்லை பெருமைப்படவுமில்லை அதன் அர்த்தம் என்னவென்று என்னை தெரிந்தவர்களிற்கு ஏன் எழுதினேன் என்று புரியும்

ஆனால் அண்ணா இங்கு சவுண்டு விடும் ஒருவருக்கும் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் விடுதலைக்கு எதிராக வலுதீவிரமாக குரல் கொடுப்பவருக்கும் நெருங்கிய தொடர்பு. அதற்காக இந்த நபர் களத்தில் ஒற்று வேலை கூட பார்க்கின்றாராம். அவரும் இங்கு குரல் கொடுக்கின்றார் அண்ணா இதுதான் உலகம் அவருடைய கட்டுபாட்டில் இங்கு ஒரு கும்பல் இங்கு வேலை செய்கின்றது.

களத்திற்கு சில தினங்கள் என்னால் வர முடியாமல்ப் போனதால் இன்று தான் தங்களின் இப்பதிவை கண்ணுற்றேன். நீங்கள் யாரைக் குறிவைத்து இப்படியான கருத்துக்களை எழுதுகின்றீர்களோ தெரியாது?? ஆனால் நிச்சயமாக உங்கள் கற்பனையில் இப்படியான கட்டுக்கதைகள் தோன்றியிருக்காது. யாரோ உங்களை முட்டாளாக்க இப்படியான கதைகளை கட்டிவிட, நீங்களும் அதை நம்பி எம்மையும் முட்டாளாக்குகின்றீர்களா??

யாழ்க் களத்தில் எவர் கருத்தையும் யாரும் வாசிக்கலாம் (களத்தில் தம்மைப் பதிவு செய்யாதவர்கள் உட்பட). அப்படியிருக்க இங்கு ஒற்று வேலை பார்க்க என்ன இருக்கின்றது?? ஏன் தற்போது யாழ்க் களத்திலா எமது விடுதலைக்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றன??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.