Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடக வியாபாரி சோவின் ஊடக வியாபாரி

Featured Replies

இலங்கைப் பிரச்சனை சம்பந்தமாக ஊடகவியாபாரி சோவின் கேள்வி பதில் பகுதி

கேள்வி பதில் :-

இரா. சாந்தகுமார், சென்னை49

கே : ஈழத் தமிழர்கள் ஆதரவின்றி, விடுதலைப் புலிகள் எப்படி இலங்கை ராணுவத்தை இத்தனை ஆண்டுகள் எதிர்த்து வர இயலும்?

ப : "சிறுவர்கள், விடுதலைப் புலி இயக்கத்தில் சேர்ந்து, அவர்களுடைய கேடயங்களாகப் பயன்படுகிறார்கள் என்பது, ஈழத் தமிழர்கள் ஆதரவில்லாமல் நடக்குமா?' என்று கூடக் கேட்கலாம். "தமிழர்களின் மிதவாத, தீவிரவாதத் தலைவர்கள் பலர், கொல்லப்பட்டது பற்றி, ஈழத் தமிழர்கள் கொதித்தெழவில்லை என்பதிலிருந்தே, அவர்கள் விடுதலைப் புலிகள் செயல்பாட்டை ஆதரிக்கிறார்கள் என்பது தெரியவில்லையா?' என்றும் கேட்கலாம். துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பெறப்படுகிற ஒப்புதல், ஆதரவாகிவிடாது.

வெ. கிருஷ்ணன், இடைப்பாடி

கே : "சகோதர யுத்தத்தால் பலவீனப்பட்டு விட்டோம்' – என்று

விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி அறிவுரை கூறியுள்ளது பற்றி?

ப : ஒரு விதத்தில் பார்த்தால் இது உண்மையே. "நாங்களும், சிங்களவர்களும் சகோதரர்கள்; எங்களிடையே நடக்கிற சண்டையில் அன்னியர்களான இந்தியர்கள் தலையிடத் தேவையில்லை' என்று முன்பு விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர். ஆகையால், இப்போது நடக்கிற சிங்களவர்கள் – புலிகள் சண்டை, சகோதர யுத்தம்தான். அதுதான் இலங்கைத் தமிழர்களை நெடுங்காலமாகப் பலவீனப்படுத்தி வருகிறது, புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு, தங்கள் சகோதரர்களுடன் (நிஜமான) பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினால், இந்தப் பலவீனம் மாறும்.

மு.ரா. பாலாஜி, கோலார் தங்கவயல்1

கே : விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற தமிழர் கருணா, இலங்கை அரசில் எம்.பி. பதவி பெற்றிருக்கிறாரே, அவர் இப்போது தமிழர்களின் எட்டப்பனா? விபீஷணனா?

ப : முன்பு, இலங்கை அதிபர் பிரேமதாசாவுடன் கைகோர்த்து, உதவிகள் பல பெற்று, இந்தியாவைப் பிரபாகரன் எதிர்த்தாரே – அப்படி சிங்கள அரசின் உதவியைப் பெற்ற பிரபாகரன் அப்போது தமிழர்களின் எட்டப்பனா, அல்லது விபீஷணனா என்பதை

முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். அதே முடிவை கருணா விஷயத்திலும் வைத்துக்கொள்ளுங்கள். சரியாக இருக்கும்.

என். சண்முகம், சேலம்1

கே : "விடுதலைப் புலிகளிடம் சிக்கிய ஈழத் தமிழர்களை விடுவிக்க, தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினாலே போதுமானது' என்று தமிழ் ஐக்கிய விடுதலை

முன்னணி (டி.யூ.எல்.எஃப்.) தலைவர் ஆனந்த சங்கரி கூறியுள்ளது – எதைக் காட்டுகிறது?

ப : ஆனந்த சங்கரி, டி.யூ.எல்.எஃப். தலைவராக இருந்து, இலங்கைத் தமிழர்களிடையே பணியாற்றி வருபவர். பலமுறை அவர்களால் வெவ்வேறு அமைப்புகளுக்கு – பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இங்குள்ள புலிகள் ஆதரவாளர்கள், ஆனந்த சங்கரியைக் கூட தமிழராக ஏற்க மாட்டார்கள். "புலிகளை ஆதரிக்காதவர்களின் கருத்து நிராகரிக்கத்தக்கது; அவதூறுக்கு உள்ளாக்கத்தக்கது' என்பது, தமிழகத் தலைவர்களின் கருத்து.

கே.என். பாலகிருஷ்ணன், சென்னை91

கே : ஒருவேளை தமிழ் ஈழம் அமைவதாகவே வைத்துக்கொள்வோம். அப்போது அங்கே ஜனநாயகம், சர்வாதிகாரம் இரண்டில் எது கோலோச்சும்?

ப : தனி ஈழம் அமைகிறது என்று வைத்துக்கொண்டால் – அங்கே

விடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியான சர்வாதிகாரம்தான் நடக்கும். தங்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கிடையாது என்பதை, அவர்கள் ஏற்கெனவே பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள்.

ஆர்.வி. கிருஷ்ணமூர்த்தி, சென்னை44

கே : "இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கூறுவதன் மூலம், விடுதலைப் புலிகளுக்கு அவர் உதவுகிறார்' – என்று ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி?

ப : இலங்கை அரசு நடத்துகிற ராணுவத் தாக்குதல், விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான். அந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுவது

– "விடுதலைப் புலிகள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பதுதான். ஜெயலலிதா கூறியுள்ளது நியாயமே.

ஜி. லட்சுமி வாசுதேவன், சென்னை42

கே : "இலங்கையில் ராணுவத் தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவால் கூற முடியாது. பிற நாட்டு விவகாரங்களில் நாம் தலையிட முடியாது' – என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகிறாரே?

ப : அவர் கூறியுள்ளது சரிதான். "காஷ்மீரில் ராணுவம் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது; தனது ராணுவ நடவடிக்கையை இந்தியா உடனே நிறுத்த வேண்டும்' என்று பாகிஸ்தானோ, வேறு ஒரு நாடோ நிர்பந்திக்க முடியுமா? முடியாதல்லவா? நமக்கு ஒரு நியாயம், இலங்கைக்கு ஒரு நியாயமா?

ஜி. சாந்தி, பனங்கோட்டூர்

கே : முரண்பட்ட கொள்கையை உடைய கட்சிகள் கூட்டணி அமைத்தால் ஏற்படும் விளைவுகளை அ.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் இலங்கைப் பிரச்சனையில் சந்திக்கத் தொடங்கியுள்ளதே? இதனால் அ.தி.மு.க., ம.தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்படும் என நினைக்கிறீர்களா?

ப : இலங்கை விஷயத்தில் முரண்பட்ட கொள்கையையுடைய தி.மு.க.வும்,

காங்கிரஸும் சேர்ந்தே இருப்பது போல – ம.தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்கள் கூட்டணியைத் தொடர்ந்தாலும் தொடரலாமே!

ஏ. முகம்மது மைதீன், சிவகங்கை

கே : "இந்தியாவில் தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்றால், புலிகள் மீதான தடை

நீக்கப்பட்டு, பிரபாகரனின் உதவியை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'

– என்று பால்தாக்கரே கூறியுள்ளாரே?

ப : வன்முறையாளர், வன்முறையாளரை ஆதரிப்பதில் வியப்பில்லை.

பி. பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி

கே : மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, கலைஞர் வாபஸ் பெறும் அளவிற்கு துணிச்சல்காரரா என்ன?

ப : மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வருகிற ஆதரவு வாபஸ் ஆகும் போலத் தெரிகிறது – என்று ஏதாவது ஒரு பத்திரிகை எழுதினாலே, அவருக்கு கடும் கோபம் வருகிறது. "எப்படிச் சொல்லலாம் இப்படி? நானாவது, மத்திய அரசை மிரட்டுவதாவது? இது வேண்டுமென்றே செய்யப்படுகிற சதி!' என்றெல்லாம் கோபித்துக் கொள்கிறார். நிலைமை இப்படியிருக்க, ஆதரவாவது, வாபஸாவது?

ஒரு துணிவு அவருக்கு உண்டு. "எம்.பி.க்கள் ராஜினாமா' என்று சொல்லிவிட்டு, "இல்லை. மத்திய அரசுக்கு இன்னமும் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது

– ஆகையால் எம்.பி.க்கள் ராஜினாமா இல்லை' என்று ஒரு பல்டி அடிக்கிற துணிவு அவருக்கு உண்டு.

எஸ். பக்கிரிசாமி, திருவாரூர்1

கே : "விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பெரியார் திராவிடர் கழகத்தினர், சட்டத்திற்குப் புறம்பான வன்முறையில் ஈடுபடுகின்றனர்' – என்று ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என். ராம் குறிப்பிட்டுள்ளது பற்றி?

ப : ராம் கூறியதில் என்ன தவறு? விடுதலைப் புலிகளைக் கண்டனம் செய்து "ஹிந்து' பத்திரிகையில் மாலினி பார்த்தசாரதி எழுதிய கட்டுரைக்கு – எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயரில், பெரியார் திராவிடர் கழகத்தினர் வன்முறையில் இறங்கி, கோயம்புத்தூரில் ஹிந்து பத்திரிகையின் அலுவலகத்தில் "தாக்குதல்' நடத்தினர். ராம் அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.

தாங்கள் ஏற்காத கருத்தைக் கூறுபவர்கள் தாக்குதலுக்கு உரியவர்கள் என்கிற ஆபத்தான அணுகுமுறை கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாதிரி சட்ட விரோதப் போக்குகளை வளர விடுவது ஆபத்து. என்னைப் பொறுத்தவரையில் "ஹிந்து' கட்டுரை முழு ஏற்புக்குரியதே.

எம். சம்பத், வேலாயுதம்பாளையம்

கே : இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில், இந்தியாவின் அணுகுமுறை சரிதானா?

ப : இதுவரை பழுது காண இடமில்லை.

.......................

எச்சரிக்கை

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான எல்.டி.டி.ஈ.யை ஆதரித்தும், பிரிவினைவாதத்தை எழுப்பியும் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அக்கட்சியின் அவைத் தலைவர் மு. கண்ணப்பன், திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய சட்டவிரோதப் பேச்சுக்களுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடுமையான கண்டனம் தெரிவித்து, அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அதன் பிறகு காங்கிரஸ் சார்பிலும், இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதனால் வேறு வழியின்றி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நிர்பந்தத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால், இது தொடர்பான வழக்குகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

...................................

துக்ளக், இந்த வார இதழ்

http://www.tamilnadutalk.com/portal/index....showtopic=13938

Edited by yarlpaadi

இதை ஏன் இங்க கொணந்து போட்டனியல்?... நாங்களும் உந்த சொறி சோ வின்ர இளவை வாசிக்கவேணுமா?

உவன் எப்பிடி எண்டு எங்களுக்குத்தெரியும்தானே.... தமிழ்மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஓசில வயிறுவளர்க்கும் பாப்பனர்களில் இவனும் ஒருவன்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே : ஈழத் தமிழர்கள் ஆதரவின்றி, விடுதலைப் புலிகள் எப்படி இலங்கை ராணுவத்தை இத்தனை ஆண்டுகள் எதிர்த்து வர இயலும்?

ப : "சிறுவர்கள், விடுதலைப் புலி இயக்கத்தில் சேர்ந்து, அவர்களுடைய கேடயங்களாகப் பயன்படுகிறார்கள் என்பது, ஈழத் தமிழர்கள் ஆதரவில்லாமல் நடக்குமா?' என்று கூடக் கேட்கலாம். "தமிழர்களின் மிதவாத, தீவிரவாதத் தலைவர்கள் பலர், கொல்லப்பட்டது பற்றி, ஈழத் தமிழர்கள் கொதித்தெழவில்லை என்பதிலிருந்தே, அவர்கள் விடுதலைப் புலிகள் செயல்பாட்டை ஆதரிக்கிறார்கள் என்பது தெரியவில்லையா?' என்றும் கேட்கலாம். துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பெறப்படுகிற ஒப்புதல், ஆதரவாகிவிடாது.

தேவன்; அரசை முப்பதுவருடங்களிற்க்கு மேலாக எதிர்த்து சமாளிக்க புலிகளின் பலத்திற்க்கு அடிப்படையாக மூச்சாக விழங்கும் சக்தி என்னவாகும் என்பதே வினவப்பட்ட விடயம். அந்த அடிப்படைக்கு தண்ணிகாட்டும் வகையாக பதிலளிக்கின்றார்.

சரி இரண்டாவது சோவின் வினாவிற்க்கு பார்ப்போம் விடையை

சிறுவர்கள் கேடயமாக உபயோகிக்கப் படுகின்றமைதான் சுத்தமான பொதுசன இலக்குகளை தாக்கி அறியாத சிறீலங்கா இராணுவம் புலிச்சமரில் பின்னடைவை சந்திக்க நேரிடுகின்றது என்றால் ஜயசிக்குறு போன்ற நடவடிக்கைகளில்

40 மைல் நீளப்பரப்பை கைப்பற்றிய வேளை புலிகள் சிறார் கவசத்தை உபயோகித்து தடுக்க முயற்சிக்கவில்லை. புலிகளால் விரட்டி அடிக்கப் பட்ட தாக்குதலில் சிறார்கவசம் பயன்படுத்தியமைதான் ஒரே நாளில் ஓட்டம் எடுக்க காரணமோ?

அரச இராணுவ ஆட்சி நிகழும் யாழில் புலிகளை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியின் வெற்றி எவர் துப்பாக்கி முனையின் சாதிப்பால் ஆனதாம்?

சாதிவெறி என்ற ஒரு நோய்தான் இந்த சோ

இவர்கருத்தைக் கேட்க்க எத்தனை பேர்தான் பின்னால் நிற்க்கின்றார்களாம்

தான் கதைப்பதை தானே பாராட்டினால்த்தான் உண்டு இந்த தற்க்குறியை யார்தான் மதிக்கின்றார்கள் உலகில்

வெ. கிருஷ்ணன், இடைப்பாடி

கே : "சகோதர யுத்தத்தால் பலவீனப்பட்டு விட்டோம்' – என்று

விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி அறிவுரை கூறியுள்ளது பற்றி?

ப : ஒரு விதத்தில் பார்த்தால் இது உண்மையே. "நாங்களும், சிங்களவர்களும் சகோதரர்கள்; எங்களிடையே நடக்கிற சண்டையில் அன்னியர்களான இந்தியர்கள் தலையிடத் தேவையில்லை' என்று முன்பு விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர். ஆகையால், இப்போது நடக்கிற சிங்களவர்கள் – புலிகள் சண்டை, சகோதர யுத்தம்தான். அதுதான் இலங்கைத் தமிழர்களை நெடுங்காலமாகப் பலவீனப்படுத்தி வருகிறது, புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு, தங்கள் சகோதரர்களுடன் (நிஜமான) பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினால், இந்தப் பலவீனம் மாறும்.

தேவன்; சிங்களவர்களுக்கு தோள்கொடுக்கிறமையானது இரகசியமான சகோதர உறவுத்தன்மையின் பாலதோ யாருடையதை யார் ஆண்டான் எல்லாம் அந்த பரமனுக்கே வெளிச்சம்.

எட்டப்பனை ஆங்கிலேயனுக்குப் பிடிக்கும்

எங்கள் கோடரிக்காம்புகளை சோவுக்குப் பிடிக்கும்

எல்லாம் அவர் தமிழ் உணர்வில் கொண்ட தீராத காதல் தான் காரணம்.

மு.ரா. பாலாஜி, கோலார் தங்கவயல்1

கே : விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற தமிழர் கருணா, இலங்கை அரசில் எம்.பி. பதவி பெற்றிருக்கிறாரே, அவர் இப்போது தமிழர்களின் எட்டப்பனா? விபீஷணனா?

ப : முன்பு, இலங்கை அதிபர் பிரேமதாசாவுடன் கைகோர்த்து, உதவிகள் பல பெற்று, இந்தியாவைப் பிரபாகரன் எதிர்த்தாரே – அப்படி சிங்கள அரசின் உதவியைப் பெற்ற பிரபாகரன் அப்போது தமிழர்களின் எட்டப்பனா, அல்லது விபீஷணனா என்பதை

முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். அதே முடிவை கருணா விஷயத்திலும் வைத்துக்கொள்ளுங்கள். சரியாக இருக்கும்.

தேவன்; தன் கொள்கைக்கு எதிரியாகின்றவன் கொம்பன் ஆனாலும் பகைவனாக வரிப்பான் மானத்தமிழன் பிரபாகரன்.

கொள்கைக்கு எதிரியாய் இருந்தாலும் சோத்துக்கு உபகாரம் பண்ணுவன் காலைப் பற்றுவார் கேவல இரத்தம் உடம்பில் ஓடும் சோபோன்றோர்.

என். சண்முகம், சேலம்1

கே : "விடுதலைப் புலிகளிடம் சிக்கிய ஈழத் தமிழர்களை விடுவிக்க, தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினாலே போதுமானது' என்று தமிழ் ஐக்கிய விடுதலை

முன்னணி (டி.யூ.எல்.எஃப்.) தலைவர் ஆனந்த சங்கரி கூறியுள்ளது – எதைக் காட்டுகிறது?

ப : ஆனந்த சங்கரி, டி.யூ.எல்.எஃப். தலைவராக இருந்து, இலங்கைத் தமிழர்களிடையே பணியாற்றி வருபவர். பலமுறை அவர்களால் வெவ்வேறு அமைப்புகளுக்கு – பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இங்குள்ள புலிகள் ஆதரவாளர்கள், ஆனந்த சங்கரியைக் கூட தமிழராக ஏற்க மாட்டார்கள். "புலிகளை ஆதரிக்காதவர்களின் கருத்து நிராகரிக்கத்தக்கது; அவதூறுக்கு உள்ளாக்கத்தக்கது' என்பது, தமிழகத் தலைவர்களின் கருத்து.

தேவன்; ஆனந்தசங்கரிக்குப் பின்னால் நிற்க்கும் கூட்டத்தின் அளவு அதன் பொருள் என்ன வென்று காடும்.

கே.என். பாலகிருஷ்ணன், சென்னை91

கே : ஒருவேளை தமிழ் ஈழம் அமைவதாகவே வைத்துக்கொள்வோம். அப்போது அங்கே ஜனநாயகம், சர்வாதிகாரம் இரண்டில் எது கோலோச்சும்?

ப : தனி ஈழம் அமைகிறது என்று வைத்துக்கொண்டால் – அங்கே

விடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியான சர்வாதிகாரம்தான் நடக்கும். தங்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கிடையாது என்பதை, அவர்கள் ஏற்கெனவே பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள்.

தேவன்; அதை புலிகள் முதல் அறியச் செய்த நபர் சோ ஏன் என்றால் அப்படி ஒருபாசம் அவரில்.

ஆர்.வி. கிருஷ்ணமூர்த்தி, சென்னை44

கே : "இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கூறுவதன் மூலம், விடுதலைப் புலிகளுக்கு அவர் உதவுகிறார்' – என்று ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி?

ப : இலங்கை அரசு நடத்துகிற ராணுவத் தாக்குதல், விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான். அந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுவது

– "விடுதலைப் புலிகள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பதுதான். ஜெயலலிதா கூறியுள்ளது நியாயமே.

தேவன்; ஈழத்தமிழர், புலிகள் , சிங்களவர்

இம்மூவரில் சிங்களவர்களில் பாசம் ஏற்பட ஒரேகாரணமாய் இருப்பது புலிகளின் மீதுள்ள வெறுப்பு அந்த வெறுப்பு என்ற வேரில் மிழைத்தை சிங்களவர்மீதான நல்லவிப்பிராயம் அது தமிழர்களைக் காத்தருளும் பண்பு கொண்டது என்பது அவர்கள் வாதம்.

ஜி. லட்சுமி வாசுதேவன், சென்னை42

கே : "இலங்கையில் ராணுவத் தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவால் கூற முடியாது. பிற நாட்டு விவகாரங்களில் நாம் தலையிட முடியாது' – என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகிறாரே?

ப : அவர் கூறியுள்ளது சரிதான். "காஷ்மீரில் ராணுவம் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது; தனது ராணுவ நடவடிக்கையை இந்தியா உடனே நிறுத்த வேண்டும்' என்று பாகிஸ்தானோ, வேறு ஒரு நாடோ நிர்பந்திக்க முடியுமா? முடியாதல்லவா? நமக்கு ஒரு நியாயம், இலங்கைக்கு ஒரு நியாயமா?

தேவன்; இன்று தமிழர்களைக் காத்தருள்வார்கள் என்ற நம்பிக்கைக்கு பாத்திரமான அந்த சிங்களத்தரப்பை எதிர்க்க எண்பதுகளில் ஆயுத வன்முறைக்கு பள்ளிகளைத்திறந்து ஈழத்தவர்களுக்கு பாடம் பயின்று கொடுத்தனர் அப்போது உள்ள இறைமை வேறு அலகில் இருந்ததா?

Edited by தேவன்

  • கருத்துக்கள உறவுகள்

சோ குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருக்கும் ஒரு முட்டாள். ஆனால் தான் ஏதோ ஜீனியஸ் என்ற நினைப்பில் தமிழ்நாட்டில் பத்திரிகை நடத்துகிறார். இந்தியாவுக்கு வெளியே பெரும்பாலும் போவதில்லை. அழைக்கப்படுவதுமில்லை. இந்து சமயத்தின் புராண இதிகாசங்களையெல்லாம் உண்மையென நம்பி மற்றவர்களையும் நம்பவைத்துக்கொண்டு காலத்தை ஓட்டுபவரென்றால் அவரின் சிந்தனை எந்தளவில் உள்ளது என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவர் இந்த நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு இந்தியாவில்தான் குப்பை கொட்டமுடியும். மேற்கு நாடுகளில் அறிவியலாளர்கள் சிரிப்பார்கள். ஆதலால் இந்து ராம் போன்ற பார்ப்பனர்கள்தான் இவருக்கு ஏற்றவர்கள். இவரை அறிவுலகம் நிராகரித்து எவ்வளவோ காலமாகிவிட்டது. இவரைப் போய்.... விமர்சித்துக் கொண்டு கொண்டு.... சே! சே! நமது புத்தியை......

  • தொடங்கியவர்

இதை ஏன் இங்க கொணந்து போட்டனியல்?... நாங்களும் உந்த சொறி சோ வின்ர இளவை வாசிக்கவேணுமா?

உவன் எப்பிடி எண்டு எங்களுக்குத்தெரியும்தானே.... தமிழ்மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஓசில வயிறுவளர்க்கும் பாப்பனர்களில் இவனும் ஒருவன்....

சோவுக்கு வால்பிடிப்பவர்கள் நம்மவரில் உண்டு அவரை விமர்சிக்க கூடாது என்பவர்களும் உண்டு அவர்களுக்காகவே இந்த ஊடகவிபச்சாரியின் வாந்தியை இங்கே இணைத்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

குமுதம் 19.11.2008 வார இதழில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு குழுதம் அளித்த பதில்கள் (அரசு பதில்கள்)

கோ. பாண்டுரங்கன், மேலாத்தூர்.

தி.மு.க எம்.பி.க்களின் ராஜினாமா நாடகத்தை ரசித்தீர்களா?

நம் இதயங்களை நெகிழ வைத்த கண்ணீர்க் காவியமாயிற்றே அது! நல்ல காலம், இலங்கையில் போர் நிறுத்தத்தை இந்திய அரசு கொண்டு வந்து விட்டதாலும், ஈழத்தமிழர்கள் அங்கே இப்போது நிம்மதியாக வாழ்வதாலும் நாடகம் நல்ல படியாக இனிது முடிந்தது. இனி அவார்டு கொடுக்க வேண்டியதுதான் பாக்கி.

ஆர். சுதர்ஸனன், நங்கநல்லூர்.

இஸ்லாமிய வாசகருக்கு வக்காலத்து வாங்கும் அரசுவே, ஒரு எஸ். எம்.எஸ். வாசகத்தைச் சொல்லட்டுமா?

"எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் அல்ல, ஆனால் எல்லா தீவிரவாதிகளும் இஸ்லாமியர்களே!".

தீவிரவாதம் என்பது எல்லாத் தரப்பிலும் இருக்கிறது நண்பரே. இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்யும் புத்த அரசாங்கமும், பாலஸ்தீனத்தில் அராபியர்களை அழிக்கும் யூத இஸ்ரேலிய அரசும், இந்தியாவில் தினமும் குண்டுகளை வெடிக்க வைத்து மக்களைக் கொல்லும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் தினசரி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் கிறிஸ்துவ அமெரிக்க ராணுவமும் , குஜராத்திலும் ஒரிஸாவிலும் அகோர மான படுகொலைகளை நிகழ்த்தும் தீவிர இந்து அமைப்புகளும் பயங்கரமான தீவிரவாதிகள்தான். இதில் எந்த மத நம்பிக்கையும் விதிவிலக்கல்ல. ஆனால் இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டும் பரப்பப்படும் வதந்திகள் ( உங்கள் எஸ்.எம்.எஸ் உள்பட ) உள்நோக்கம் கொண்டவை.

ந. சந்திரமவுலி, ஊத்துக்குளி.

நமது முதல்வர் பிரதமருக்குப் பல கடிதங்கள் எழுதியும் தமிழக மீனவர்கள் மீது சிங்கள ராணுவம் சுடுவது நின்றபாடில்லையே, தீர்வுதான் என்ன?

திருப்பிச் சுடுவதுதான். அப்போதுதான் அவர்களுக்கு உறைக்கும்.

செந்தமிழன், பெருமாள்பட்டு.

விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்க்கிறார் ஜெயலலிதா. அது அவருடைய அரசியல் கருத்து. அதற்கான முழு உரிமை அவருக்கு உண்டு. ஒப்புக்கொள்ளலாம். ஆனால் ஈழத் தமிழர்களுக்கான சுதந்திரம் பற்றியோ விடுதலை பற்றியோ கூட அவர் ஆறுதலாகப் பேசுவதில்லையே?

ஒருவேளை, எல்லா ஈழத் தமிழர்களுமே விடுதலைப் பு'லிகள்தான் என்று நினைக்கிறாரோ என்னவோ..

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

'விடுதலைப்புலிகளை மன்னிக்க மாட்டோம்' என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியின் இளங்கோவனின் பேட்டி குழுதத்தில் வந்திருக்கிறது.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சுறுசுறுப்பான காங்கிரஸ்காரர். தன்னுடைய எண்ணங்களை பகிரங்கமாய் வெளிப்படுத்தக்கூடிய தைரியசாலி. ஒரு இனிய மாலையில் இந்திரா நகரிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

உங்கள் பேச்சுகள் ஈழத்திலுள்ள தமிழர்களுக்கு எதிராக இருக்கிறதே? ஈழத் தமிழர்கள் மீது உங்களுக்கென்ன கோபம்?

``நான் எப்போதும் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு எதிராக பேசியது கிடையாது. மாறாக, அவர்களுடைய நல்வாழ்விற்குத்தான் குரல் கொடுத்து வருகிறேன். மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசாங்கமும் இதைத்தான் வலியுறுத்தி வருகிறது. தீவிரவாத இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தரக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்து. அதனுடைய மூலசூத்திரதாரி பிரபாகரனை இலங்கை அரசாங்கம் பிடித்து, ராஜீவ்காந்தியை கொன்ற குற்றத்துக்காக இந்தியஅரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.''

ராஜீவ்காந்தி கொலைக்குக் காரணம் விடுதலைப்புலிகள் என்றால் இந்திராகாந்தியைப் படுகொலை செய்தது சில சீக்கியர்கள். அதற்காக ஒட்டுமொத்த சீக்கியர்களை ஒதுக்கிவிட முடியுமா? இன்று நமது பிரதமரே சீக்கியர்தானே?

``ஒன்றை நான் மிகத் தெளிவாகச் சொல்கிறேன். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் பிரபாகரனையும் மற்றும் அவருடைய இயக்கத்தையும்தான் எதிர்க்கிறோமே தவிர ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களை அல்ல. இந்திராகாந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின்மூலம் தண்டிக்கப்பட்டிருக்கிறார்க

தேவன் அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்!

ஆனால் மேலும் விரிவாகவும், ஆதாரபூர்வமாகவும் (தெரிந்ததுதானே என்றிராமல்) தருவதுதான் இந்த கருத்துக்களத்தினூடாக செய்யக் கூடிய மிகப்பெரிய சேவை. அடுத்த கேள்விபதிலில் இவற்றையும் குமுதம் சேர்த்துக் கொள்ளும்.

எமது பக்கத்தில்தான் உண்மைகள் என்று வெறுமனே இருந்தால் அவை எடுபடாது போய்விடும். உண்மைகள் கூட நீதிமன்றத்தில் சரியாக வாதிடப்படாதுவிடின் அவையும் அநீதியாகிவிடும்.

Edited by சாணக்கியன்

எங்கள் கருத்தாளர்களின் பதில்களையும் மேலும் கேள்விகளையும் தொகுத்து குமுதத்திடம் யாராவது அனுப்பி வைக்கலாம் (அல்லது இந்தத்திரியின் இணைப்பை கூட அனுப்பலாம்)

  • கருத்துக்கள உறவுகள்

சோவின் பேட்டி துக்ளக் இதழில் தான் வந்தது. குமுதத்தில் வரவில்லை. துக்ளக் சோ நடாத்தும் பேட்டி. அவர் நாங்கள் எழுதும் கடிதங்களை குப்பையில் தான் போடுவார். குமுதம் இணைய இதழில் வரும் ஆக்கங்களுக்கு அவ் ஆக்கங்களின் கீழ் கருத்துக்கள் எழுதலாம். காங்கிரஸ் இளங்கோவனின் கருத்துக்கு நான் எனது கருத்தை எழுதி அனுப்பி இருந்தேன்.

துளக்கில் சோவின் பதில்களுக்கான பதில்களை மற்றும் கேள்விகளை ஏனைய தமிழர் சார்பு பத்திரிகைகளுக்கு அனுப்பலாம்!

இளங்கோவனுக்கு "புத்தரின் பெயரால்" இறுவட்டு ஒன்றை இலவசமாக அனுப்பி வைக்கலாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'விடுதலைப்புலிகளை மன்னிக்க மாட்டோம்' என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியின் இளங்கோவனின் பேட்டி குழுதத்தில் வந்திருக்கிறது.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சுறுசுறுப்பான காங்கிரஸ்காரர். தன்னுடைய எண்ணங்களை பகிரங்கமாய் வெளிப்படுத்தக்கூடிய தைரியசாலி. ஒரு இனிய மாலையில் இந்திரா நகரிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

உங்கள் பேச்சுகள் ஈழத்திலுள்ள தமிழர்களுக்கு எதிராக இருக்கிறதே? ஈழத் தமிழர்கள் மீது உங்களுக்கென்ன கோபம்?

``நான் எப்போதும் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு எதிராக பேசியது கிடையாது. மாறாக, அவர்களுடைய நல்வாழ்விற்குத்தான் குரல் கொடுத்து வருகிறேன். மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசாங்கமும் இதைத்தான் வலியுறுத்தி வருகிறது. தீவிரவாத இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தரக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்து. அதனுடைய மூலசூத்திரதாரி பிரபாகரனை இலங்கை அரசாங்கம் பிடித்து, ராஜீவ்காந்தியை கொன்ற குற்றத்துக்காக இந்தியஅரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.''

தேவன்; இந்திய அரசியலுக்கு புலி எதிர்ப்பு நிலைப்பாடும், சிங்கள ஆதரவு நிலைப்பாடும் ஒரு விபத்தாக ஒரு கால எல்லையில் வந்தவை. இந்திய அரசு கொண்ட முன்னைய நிலைப்பாடானது புலிகள் ஈழத்தில் விடுதலை மீட்பர்கள், சிங்களம் ஈழத்தின் எதிரி. எனவே இந்த பழைய நிலைப்பாடுகளை இடம் மாற்றி தமது கருத்தாக வெளியிட அந்த அரசியல் விபத்து ஒன்றுதானே காரணம். அது எப்படி ஈழத்தமிழர் சார்ந்த கொள்கையில் பாதிப்பை ஏற்படுத்த துரும்பளவும் செல்வாக்கு செலுத்த முடியாத சம்பவம் அல்லவா?

எனவே எதிரியின் எதிரி நண்பன் என்ற சமன்பாட்டின் அடிப்படையில்த்தான் சிங்கள அரசுக்குசார்பாக இந்திய அரசு வளங்கும் நற்சான்றிதழ்களை எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லவா?

எனவே சிங்களம் உயர்ந்த பட்சமாக ஒட்டுமொத்த தமிழினத்தையே அழிக்கின்ற செயல்களுக்கு கூட புலிஎதிர்ப்பு என்ற நிலைப்பாடு சந்தோசப்படக் கூடியதே!

றஜீவின் மரணத்திற்க்காக புலிகளுக்கு வளங்கும் தண்டனையை இப்படி உங்களால் பிரித்துப்பார்க்க முடியுமா?

அவர்கள் போராட்டம் உண்மையாக தமிழ் இனத்துக்கானது என்றால் உங்கள் பு.எ நிலைப்பாட்டை மாற்றிவிடுவீர்கள் என்ற வகையில் உங்கள் நிலைப்பாட்டுக்கு நியாயம் வைத்திருக்கின்றீர்களா?

ஒருமித்த மக்கள் ஆதரவு புலிகளுக்கு இருந்தால் உங்கள் புலிஎதிர்ப்பு நிலைப்பாடு காணாமல் போயிருக்கும் என்ற மனிததர்மத்தை மதிக்கின்ற பண்பைக் கொண்டு விளங்குகின்றதா?

ஆக தமிழீழத்தின் மலர்வு உங்கள் தேசியத்துக்கு ஆகாது என்ற அடிப்படையில் இருந்து புலிஎதிர்ப்பு நிலைப்பாடு பிறந்திருக்கும் போது மேற்சொல்லப்பட்ட காரணங்கள் எவ்வாறு உண்மை கொண்டு இருக்க முடியும்?

-----

ராஜீவ்காந்தி கொலைக்குக் காரணம் விடுதலைப்புலிகள் என்றால் இந்திராகாந்தியைப் படுகொலை செய்தது சில சீக்கியர்கள். அதற்காக ஒட்டுமொத்த சீக்கியர்களை ஒதுக்கிவிட முடியுமா? இன்று நமது பிரதமரே சீக்கியர்தானே?

``ஒன்றை நான் மிகத் தெளிவாகச் சொல்கிறேன். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் பிரபாகரனையும் மற்றும் அவருடைய இயக்கத்தையும்தான் எதிர்க்கிறோமே தவிர ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களை அல்ல. இந்திராகாந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின்மூலம் தண்டிக்கப்பட்டிருக்கிறார்க

  • கருத்துக்கள உறவுகள்

தேவன்; தாயின் வளர்த்த நன்றியில் கூட தேவை வந்தால் அரசியல் செய்வோம். அப்படிப்பட்ட சுத்தமான அரசியல் வாதிகளைக் கொண்ட இளங்கோவன் கட்சிக்காறரிடம் மன்னிக்கும் மனிதாபிமானம் குடியிருந்ததாக வரலாறு இல்லை!

இவரின் தாயார் அ.தி.மு.க என நினைக்கின்றேன் .

இதனால் இவர் குடும்ப சுக , துக்கங்களில் கூட பங்குபற்றுவதில்லை , அல்லது தாயாரை அழைப்பதில்லை என்று எங்கோ வாசித்த ஞாபகம் .

துளக்கில் சோவின் பதில்களுக்கான பதில்களை மற்றும் கேள்விகளை ஏனைய தமிழர் சார்பு பத்திரிகைகளுக்கு அனுப்பலாம்!

இளங்கோவனுக்கு "புத்தரின் பெயரால்" இறுவட்டு ஒன்றை இலவசமாக அனுப்பி வைக்கலாம்!

நல்ல யோசனை....

  • தொடங்கியவர்

இணையத்தில் தேடியபோது கிடைத்த படங்கள்

c80rSN--l06xALyvoRtYVA-1.jpg

oTxJXcTt5ZcPIc9Zuc3Fqg.jpg

rPjSQT9K32dOsg9FItt-hg.jpg

KTIzL7UYlkspP_LR1M3G-A.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.