Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு மலர்ச்சாலையில் சிறிலங்கா படையினரின் 250 உடலங்கள்: முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர

Featured Replies

முகமாலை மோதல்களில் படையினருக்கு இன்று பலத்த சேதம் உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி 450ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டு இருக்கலாம்

GTN ற்கு கிடைத்த தகவலின்படி முகமாலை மற்றும் பூநகரிப் பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற மோதலில் 200ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 200ற்கு மேற்பட்ட படையினர் காயம் அடைந்தும் இருப்பதாக அரசாங்க உள்ளகத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயினும் இன்றைய மோதல் குறித்து வெளியாகி உள்ள மற்றைய தகவலில் பரந்தன் நோக்கிச் சென்ற இராணுவ அணி ஒன்றுடன் தொடர்பு அற்றிருப்பதாகவும் அந்த இராணுவ அணியைத் தேடிச் சென்ற மற்றைய அணி மீதும் புலிகள் நடத்திய தீடீர்த் தாக்குதலில் மேலும் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து ற்கு கருத்து தெரிவித்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர அரசாங்கத் தரப்புத் தகவலின்படி 450ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

இதேவேளை படையினர் கைப்பற்றிய முக்கிய பிரதேசம் ஒன்றை மீண்டும் விடுதலைப் புலிகள் கைப்பற்றி இருப்பதாகமற்றைய தகவல் ஒன்று தெரிவிக்கிறது

எனினும் இவை குறித்த உத்தியோகபூர்வ தகவல்களை இருதரப்பிடமும்

மேலதிக விவரங்களுக்கு http://www.globaltamilnews.net/tamil_news....=2402&cat=1 :huh:

Edited by N.SENTHIL

அருமையான செய்தி. நல்ல ஸ்கோர். களமாடிய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

படங்கள் காணொளிகள் ஒண்டும் வரவில்லையா?

பூநகரியில 15 டிவிசன் கொடிகள் பறக்க நடந்த வெற்றி விழாவுக்கு எதிர்மறையாக கடசி தண்ணி கொள்கலன்கள் சப்பாத்துகளையாகுதல் பாயில அடுக்கி வைச்சு படம் எடுத்து விடுங்கோ எங்கடை தேசிய விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படவில்லை எண்டு உலகத்துக்கு காட்ட. இல்லாட்டி சோர்ந்து போவம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போர் அவசியம் தானா. நூற்றுக்கணக்கான இளம் வயதினரை இரு தரப்பும் பலியிட்டு.. வெறும் மண்ணை பிடிப்பதால்.. ஆவது என்ன..???! எமது நிலம் மீட்க்கப்பட வேண்டும் என்பதில் எவ்வளவு அக்கறைப்படுறமோ.. எமது இளம் சமுதாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் அக்கறை செய்ய வேண்டும்.

போராடும் போராளிக்குத்தான் தெரியும்.. ஒரு சோடி எதிரியின் சப்பாத்தை கைப்பற்றுவதில் கூட உள்ள சிரமம். யு ரியுப்பிலும்.. சி என் என்னிலும் செய்வது போல.. சுழற்நாற்காலியில் இருந்து கொண்டு செயற்படுவது போன்றதல்ல.. களம். எனவே பெறுமதி மிக்க தமது உயிர் வாழ்வு என்பவற்றை அர்ப்பணித்துப் போராடும் போராளிகளின் சிறிய வெற்றியையும் பெரிதாக மக்கள் உணர்ந்து போராளிகளுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டியது அவசியமே. அதே நேரம்.. இப்போராட்டத்தினை போரால் தீர்க்க முடியாது.. அது பேரழிவுகளை தரும் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து.. சமாதான வழியில் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு தேட அனைத்து மக்களும் சர்வதேசத்தின் உதவி வேண்டி உரத்த குரலில்.. ஒற்றுமையாக சோராமல் குரல் கொடுக்க வேண்டும். :huh:

Edited by nedukkalapoovan

நல்லவை நடக்க நாம் தலைவன் கைகளை உறுதிப்படுத்துவோம் களமாடி விதைந்து போன எமது உயிரின் உறவுகளுக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதே நேரம்.. இப்போராட்டத்தினை போரால் தீர்க்க முடியாது.. அது பேரழிவுகளை தரும் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து.. சமாதான வழியில் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு தேட அனைத்து மக்களும் சர்வதேசத்தின் உதவி வேண்டி உரத்த குரலில்.. ஒற்றுமையாக சோராமல் குரல் கொடுக்க வேண்டும். :huh:

உண்மைதான் நெடுக்ஸ் அண்ணை, எங்கட சனங்கள் பக்குவமாக இங்கிருந்து கொண்டு 'என்னப்பா பெடியள் வன்னியையும் விட்டுடுவாங்களே' எண்டு விவாதிக்குதுகள்"..

களத்தில் நிற்பவனுக்குத்தான் அதன் கனமும் வலியும் தெரியும். போராட்ட காலத்தை விட யுத்த நிறுத்தத்தின் போதுதான் பல தலைவர்களை இழந்தோம் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் நெடுக்ஸ் அண்ணை,

போரினால் ஒரு இளைய தலைமுறைக்கான இடைவெளி தெரிவது கண்கூடு. அங்கு பொதுமக்களும் அநியாயச்சாவை, பாம்புக்கடி, வாந்திபேதி என்பதற்கு ஆளாகின்றார்கள், விரைவில் ஒரு நல்ல நிலை வரவேண்டும். அதற்கு முதலில் புலம்பெயர்ந்த நம்மவருக்குள் ஒற்றுமை வேண்டும். "வெறும் வாய் வெற்று வார்த்தைகளால் ஆகப்போவது ஒன்றும் இல்லை" செயற்பட வேண்டும்.

  • தொடங்கியவர்

தற்போதைய சூழலில் போர்நிறுத்தம் சரிவராது: ரணில்

போர் நிறுத்தத்தால் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் வந்து விடாது. அரசியல் தீர்வு ஒன்றே பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி என்றார் அவர்.

:rolleyes::huh: ஸ்மைலி போட மறந்திட்டேன்

Edited by N.SENTHIL

மகிந்த சீறும் நல்ல பாம்பு என்றால்....................ரணில்....அமைதி காக்கும் புடையன் பாம்பு....இரண்டுமே கக்குவது..விஷம் தான்..........

இவர்கள் மட்டும் அல்ல..........இனிவரும் காலங்களில் ஆட்சியில் வர இருப்பவர்களும் மேற்குறிப்பிட்டவைகளில் ஒன்றே....

எனவே அந்த வகை பாம்புகள் கடிக்காமல் இருப்பது..........என்று சொல்வது.......இயற்கை விதிகளுக்கு முரணானது...அவைகளை **** தவிர வேறு வழி.......கிடையவே கிடையாது....

வாழ்த்துக்கள் எமது வீரவேங்கைகளுக்கு.......மலரட்டும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத் தமிழினத்தின் ஒருமித்த குரலை மறுதலித்தவாறு தமிழின விரோதிகளால் முன்னெடுக்கப்படும் இந்தப் போரின் அகோர நிகழ்வுகள் வெளிப்பட ஆரம்பித்துவிட்டது..

வெந்து தணியும் இந்தக்காடு....

தத் தரிகிட தத்தோம்

தமிழினம் நிமிர்ந்து நடக்கட்டும்!

:huh:

130 SLA killed, 450 wounded in 3 days in Mukamaalai

[TamilNet, Thursday, 20 November 2008, 15:45 GMT]

At least 130 Sri Lanka Army (SLA) soldiers lost their lives and more than 450 wounded in the offensive push within the last 3 days in Ki'laali and Mukamaalai fronts, according to a reliable Sri Lankan military source. 29 SLA soldiers lost their lives sustaining sniper fire, the source said and added several soldiers were killed while they were trapped in Tiger minefield. The LTTE is yet to release details on the fighting in Northern Front.

The SLA soldiers who were sent on offensive mission into the no-go zone in Ki'laali and Mukamaalai were trained for a 'do-or-die mission,' the source claimed hinting that the SLA soldiers of divisions 53 and 55 were under tremendous pressure from Jaffna command of the SLA as the Sri Lankan Vanni SF HQ was set ready to link up with the Jaffna peninsula from Poonakari.

Meanwhile, Mangala Samaraweera, the leader of the SLFP-M wing said Thursday that 200 SLA soldiers were killed on Tuesday alone and more than 700 had sustained wounds in the recent fighting in various fronts in Vanni.

"I know that by last Tuesday, 235 injured soldiers were brought to Colombo National Hospital. It was reported that 85 were brought to Kalubowila, 90 to Jayawardenepura and more than 300 to the military hospital. Also, the bodies of more than 200 brave sons of this country were brought to Jayaratne Funeral Directors," he said.

போராடிய போராளிகளுக்கும் களத்தில் பலியான வீரவேங்கைகளுக்கும் எமது வீரவணகங்கள்..

இப்படியான இழப்புகள் தான் எதிரியை போர் நிறுத்தம் என்னும் உறங்கு நிலைக்கு கொண்டுவரும்... எதிரிக்கு பெரும் இழப்புகள், குறுகியகாலத்தில் ஏற்பட, கைப்பற்றிய இடங்கள் மீண்டும் கைப்பற்றப்பட எதிரி போர் நிறுத்தம் போர் நிறுத்தம் என்று கூவிக்கொண்டு உலக நாடுகள் எல்லாம் ஓடி காப்பாற்றுங்கள், உதவுங்கள் என்று கதறுவான்...

அப்போது எமது இறுதி எல்லைக்கு சற்று மேல் எதிரியை விட்டு பின் எல்லைபோட்டு நாங்கள் போர் நிறுத்தம் அறிவிப்போம்... இனி பட்டது போதும்.... இது தான் நடக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

வடபகுதி முன்னரங்கு நிலைகளான கிளாலி மற்றும் முகமாலைப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் இடம்பெற்ற மோதல்களில் 130 படையினர் பலியாகினர். சுமார் 450 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் 29 படையினர் சினைப்பர் தாக்குதல்களினால் தமது உயிர்களை இழந்துள்ளனர். பெரும்பாலான படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடித் தாக்குதல்களில் பலியாகினர்.

எனினும் இந்த தகவல்கள் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. "செய் அல்லது செத்துமடி" என்ற அடிப்படையில் கிளாலி மற்றும் முகமாலை ஆகிய இடங்களில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர படையினரின் 200 சடலங்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பெரும்தொகையான படையினர் காயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

www.tamilwin.com

அருமையான செய்தி. நல்ல ஸ்கோர். களமாடிய வீரர்களுக்கு வாழ்த்துக்கள். படங்கள் காணொளிகள் ஒண்டும் வரவில்லையா?

பூநகரியில 15 டிவிசன் கொடிகள் பறக்க நடந்த வெற்றி விழாவுக்கு எதிர்மறையாக கடசி தண்ணி கொள்கலன்கள் சப்பாத்துகளையாகுதல் பாயில அடுக்கி வைச்சு படம் எடுத்து விடுங்கோ எங்கடை தேசிய விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படவில்லை எண்டு உலகத்துக்கு காட்ட. இல்லாட்டி சோர்ந்து போவம்.

கு.போ அண்ணை... அவங்களுக்கு 450 என்ன 1000 கூட ஒரு பெரிய தொகை இல்லை. 10,000 கூட பெரிய தொகை இல்லை. ஏன் எண்டால் மூண்டு லட்சம், நாலு லட்சம், இன்னும் தேவை எண்டால் அஞ்சு லட்சம் படைபலத்தை பெருக்கக்கூடிய வசதி ஆக்கள் பலம் அவனிட்ட இருக்கிது. ஆனால்... தவளைப்பாச்ச்சல், அது இது எண்டு நம்மவர் செய்யேக்க அதற்கு கொடுத்த பெறுமதி பெரிசு. ஆயிரக்கணக்கில போராளிகள் உயிர்த்தியாகம் செய்துதான் இடங்களை பிடிக்கக்கூடியதாக இருந்திச்சிது. அந்த இடத்தை நம்மவர்களால தக்கவச்சுக்கொள்ள முடிய இல்லை. ஆனையிரவு முதல்தரம் அடிக்கேக்க எங்கடபக்க ஸ்கோர் 1500? ரெண்டாம் தரம் வெற்றிகரமாக அடிச்சு பிடிகேக்கையும் அதிக உயிரிழப்பு ஏற்பட்டிச்சிது.

எண்ட நண்பன் ஒருத்தனும் ஆனையிரவு சண்டையில களமாடி இருந்தான். அவன் சொன்னான் தாங்கள் இறங்கினது வெட்டவெளியுக்காலையாம். தங்கட குழுவில் இருந்த 36 பேரில நகர்வு துவங்கின கையோடையே ஏழு எட்டுப்பேர் உயிர் போய்விட்டதாம். பிறகு தானும் காயப்பட்டு தொடர்ந்து முன்னேறி பொயிண்டை பிடிச்சுப்போட்டுத்தான் வைத்தியசாலைக்கு போனதாய் சொன்னான்.

1000 ஆமியிண்ட உயிரிழப்பை விட 10 போராளிகளிண்ட உயிரழப்பு பாரதூரமான பின்விளைவை ஏற்படுத்தும் எண்டுறவிசயம் பலருக்கு தெரியவில்லை போல இருக்கிது.

எங்களுக்கு எங்க தெரிய போகுது ,மண்டேக்கயும் ஓண்டும் இல்ல ,உப்பிடி யாராவது சொன்னால் தானே,

இப்படி விளக்கங்கள் , ஆய்வுகள் தொடரவேண்டும், குடிச்சுட்டு போனவனிட்ட பாடம் எடுக்கிறது இன்னும் நல்லது, நக்கல் நையாண்டில திறமை கொஞ்சம் காணாது

Edited by பல்லவன்

அப்பு பல்லவன் இஞ்ச ஒருவரும் ஒருத்தருக்கும் பாடம் எடுக்க இல்லை. ஆமியிண்ட ஸ்கோரை பார்த்து துள்ளிக்குதிக்கிறீனம் சிலர். அதான் எங்கட பக்க ஸ்கோர் பற்றியும் ஒரு தகவலை வச்சம். ஓட்ட எண்ணிக்கைகள் பற்றிய உங்கட கருத்துக்களையும் நீங்கள் முன்வைக்கலாம்.

அந்தளவுக்கு திறமை காணாது முரளி ,

சந்தோசப்படுவது இயற்கையானது , குறை கூறமுடியாது, யாரும் துள்ளி குதித்த மாதிரி தெரியவில்ல

திறமையிண்ட அடிப்படையில நாங்கள் இஞ்ச கருத்து எழுதவில்ல. ஊரில இருந்த அனுபவங்கள், பட்ட துன்பங்கள் இதன் அடிப்படையிலதான் நாம கருத்து எழுதுறம். போர் எண்டால் எப்பிடி இருக்கும் எண்டு அனுபவிச்சு பார்த்தால்தான் தெரியும். மற்றவனுக்கு ஏத்திவிட்டுட்டு பின்னால ஒளிஞ்சுநிண்டு வேடிக்கை பார்க்கிற மனநிலையில நாம இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு பல்லவன் இஞ்ச ஒருவரும் ஒருத்தருக்கும் பாடம் எடுக்க இல்லை. ஆமியிண்ட ஸ்கோரை பார்த்து துள்ளிக்குதிக்கிறீனம் சிலர். அதான் எங்கட பக்க ஸ்கோர் பற்றியும் ஒரு தகவலை வச்சம். ஓட்ட எண்ணிக்கைகள் பற்றிய உங்கட கருத்துக்களையும் நீங்கள் முன்வைக்கலாம்.

புலிகளில எத்தின பேர் வீரச்சாவு அடையினம் எண்டத்தை நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு நாளும் புலிகளின் குரலில் அறிவிக்கினம்.

நல்ல அனுபவம் இருக்கு,

நான் இங்கு அதிகம் எழுதுவதில்லை, காரணம், ஒரு பார்வையாளனாய் இருந்து கொண்டு கருத்து கூற முடியவிலலை

குற்ற உணர்வு

Edited by பல்லவன்

தீபன் அண்ணாண்ட டீம் முதன் முதல் 4ஆம் கட்ட ஈழப்போரில் இறங்கியிருக்காம்.

Edited by தராக்கி

புலிகளில எத்தின பேர் வீரச்சாவு அடையினம் எண்டத்தை நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு நாளும் புலிகளின் குரலில் அறிவிக்கினம்.

ஐயோங்க... ஸ்கோர் சொல்லிறது எங்கட வேலை இல்லை. மேலும் அதை நாங்கள் சொல்லி நீங்கள் கேட்கப்போறது இல்லை. இந்தா இவ்ளோ ஆர்மி செத்துப்போச்சிது எண்டு... மலைப்பை ஏற்படுத்தி செய்திபோட்டப்பட்டு இருக்கிது. அதான் எங்கடபக்கமும் திரும்பி பார்த்தம்.

ஒரு வாரத்திற்குள், குறைந்தது தொள்ளாயிரத்துப் பத்துப் படையினரை, வன்னி - யாழ் களமுனைகளில் சிறீலங்கா அரசாங்கம் இழந்துள்ளது.

IBC TAMIL

200க்கும் மேற்பட்ட படையினரின் சடலங்கள் கொழும்பு மலர்ச்சாலையில் - மங்கள சமரவீர

அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட படையினரது சடலங்கள் கொழும்பில் உள்ள ஜயரத்ன மலர்ச்சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மோதல்களில் படுகாயமடைந்த 710 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவோரில் 235 கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், 85 களுபோவில வைத்தியசாலையிலும், 90 பேர் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையிலும், இராணுவ வைத்தியசாலையில் 200க்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எத்தனை படைவீரர்களது உயிர் தியாகம் செய்யப்பட்டாலும் அரசாங்கம் இந்த முட்டாள்தனமான யுத்தத்தை முன்னெடுப்பதில் உறுதியுடன் இருப்பது வேதனைக்குரியதென அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மணித்தியாலத்திற்கு மணித்தியாலம் வடக்கில் ஏதாவது ஒரு இடத்தை கைப்பற்றியதாக அரசாங்கம் பிந்திய செய்திகளை வெளியிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளை தோற்கடிக்கவோ அல்லது வடக்கு மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கவோ இந்த யுத்தம் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இந்த யுத்தம் அரசாங்கத்தின் பிழைகளை மூடிமறைப்பதற்காகவே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலை தொடர்ந்தால், ரொபர்ட் முகாபேயின் சிம்பாப்வே நாட்டைவிட இலங்கை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படக்கூடும் என மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ம் திகதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அரசாங்கம் இரகசிய தீர்மானமொன்றை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/

ஒரு வாரத்திற்குள், குறைந்தது தொள்ளாயிரத்துப் பத்துப் படையினரை, வன்னி - யாழ் களமுனைகளில் சிறீலங்கா அரசாங்கம் இழந்துள்ளது.

IBC TAMIL

:huh:

முகமாலை மோதல்களில் படையினருக்கு இன்று பலத்த சேதம் உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி 450ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டு இருக்கலாம் - நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர GTN ற்கு வழங்கிய விசேட செவ்வி:

http://www.globaltamilnews.net/tamil_news....=2402&cat=1

GTN ற்கு கிடைத்த தகவலின்படி முகமாலை மற்றும் பூநகரிப் பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற மோதலில் 200ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 200ற்கு மேற்பட்ட படையினர் காயம் அடைந்தும் இருப்பதாக அரசாங்க உள்ளகத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயினும் இன்றைய மோதல் குறித்து வெளியாகி உள்ள மற்றைய தகவலில் பரந்தன் நோக்கிச் சென்ற இராணுவ அணி ஒன்றுடன் தொடர்பு அற்றிருப்பதாகவும் அந்த இராணுவ அணியைத் தேடிச் சென்ற மற்றைய அணி மீதும் புலிகள் நடத்திய தீடீர்த் தாக்குதலில் மேலும் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மலர்ச்சாலையில் சிறிலங்கா படையினரின் 250 உடலங்கள்: முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர

[வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008, 02:33 மு.ப ஈழம்] [க.நித்தியா]

கொழும்பு மலர்ச்சாலையில் சிறிலங்கா படையினரின் 250 உடலங்கள் வைக்கப்பட்டுள்ளன என்றும் காயமடைந்த 405 படையினர் பேர் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை மங்கள சமரவீர நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பூநகரியை சிறிலங்கா படையினர் மீண்டுமொரு தடவை தம்வசப்படுத்திக்கொண்டதன் மூலம் போரில் வெற்றியடைவது போன்ற மாயையை அரசு காட்ட முயற்சிப்பதாக தெரிவித்த முன்னாள் அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு அமைப்பாளருமான மங்கள சமரவீர

பூநகரி படையினர் வசமானதை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. அதன் பெருமை எமது படையினருக்கு உரியது. ஆனால், பூநகரி கைப்பற்றப்பட்டது இது முதல் தடவையல்ல.

15 வருடங்களுக்கு முன்னர் 1993 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாளும் விடுதலைப் புலிகளிடமிருந்து பூநகரி கைப்பற்றப்பட்டது. அப்போதும், புலிகள் தப்பியோடுவதாக அரச ஊடகங்கள் பெரிதாக ஆர்ப்பரித்தன. பின்னர் என்ன நடந்தது. அடுத்தடுத்து பெரும் இழப்புக்களை அரச படையினர் எதிர்கொண்டனர். இன்னும் எவ்வளவு தூரம் படையினர் முன்னேறினாலும் கூட இந்த போரில் முழுமையான வெற்றியைப்பெற முடியாது. இதனை மகிந்த ராஜபக்ச உணர்ந்தே இருக்கின்றார்.

பூநகரி வெற்றியை தமது அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்வதற்கான உத்தியாக மகிந்த ராஜபக்ச பயன்படுத்தப் போகின்றார். டிசம்பர் 9 ஆம் நாளுக்குப்பின்னர் எந்த வேளையும் நாடாளுமன்றம் கலைக்கப்படும். இதனை நான் உறுதியாகக் கூறுகின்றேன்.

ஆளும் தரப்பிலிருந்து பலர் வெளியேறவிருக்கின்றனர். போரைக்காட்டி அடுத்த தேர்தலில் மக்கள் ஆணையை கோரும் ஒரு நாடகத்தை அரசு மேடையேற்றவிருக்கின்றது.

மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர் பசில் ராஜபக்சவும் இந்தியாவுக்குச் சென்று பேசிய உண்மையான தகவல்கள் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. புதுடில்லியின் அழுத்தம் காரணமாக அரசு மிக விரைவில் போர் நிறுத்தத்துக்கு தயாராகி வருகின்றது. அரச தலைவர் அதற்கு தக்க தருணத்தை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்.

போர் நிறுத்தம் செய்யப்படுவதனை நாம் ஒருபோதும் எதிர்க்க மாட்டோம். அதனை வரவேற்கின்றோம். போரின் மூலம் எதுவித பயனையும் அடைய முடியாது. போர் நிறுத்தத்தினை செய்து அடுத்த பணியாக சமகாலத்தில் அரசியல் தீர்வு யோசனையை அரசு முன்வைக்க வேண்டும்.

போரின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவே முடியாது. போரின் மூலம் புலிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்கவும் முடியாது இந்த யதார்த்தத்தை அரசு உணர்ந்து செயற்பட வேண்டும்.

இந்த வாரத்தில் மட்டும் போர் முனையில் கொல்லப்பட்ட 250 படையினரின் உடல்கள் ஜயரட்ன மலர்ச்சாலைக்கு கொண்டுவரப்பட்டன. காயமடைந்த படையினரில் 235 பேர் தேசிய மருத்துவமனையிலும் 85 பேர் களுபோவில மருத்துவமனையிலும் 90 பேர் ஜயவர்த்தனபுர மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உண்மைத்தகவல்களை பாதுகாப்புத்தரப்பு வெளியிடாமல் மறைத்து வருகின்றது.

நாட்டு மக்கள் இன்று ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். போர் மாயையில் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் ஒரு பகீரதப் பிரயத்தனத்தில் அரசு ஈடுபாடு காட்டி வருகின்றது. ஆனால், அதில் வெற்றி காண முடியாது என்பதை உணர்ந்த நிலையில் தான் போரையே காரணமாக வைத்து நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல அரச தலைவர் தீர்மானித்துள்ளார்.

டிசம்பர் 9 ஆம் நாளுக்குப்பின்னர் எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம். பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கத் தயாராகுமாறு அரச தலைவரே ஆளும் தரப்பினருக்கு அறிவுறுத்தியிருக்கின்றார்.

ஜனவரி மாதத்துக்குப் பின்னர் பெரும் சவாலை அரசு எதிர்கொள்ளவிருக்கின்றது. இதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் பொருட்டே பொதுத் தேர்தலுக்கு செல்லத்தயாராகி வருகின்றது என்றார் அவர்.

ஆதாரம்: தினக்குரல்

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.