Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மும்பை நகரம் தாக்குதலுக்கு உள்ளானது

Featured Replies

இன்னும் அமளி துமளி கலவரம் முடிய இல்லைப் போல இருக்கிது. ரெண்டு நாட்கள் ஆகப்போகிது.

மூன்றாவது நாளாக தொடர்கிறது.. இன்னும் முடியவில்லை.

டிரைடன்ட் ஓட்டலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்‌கொலை : டிரைடன்ட் ஓட்டல் முழு கட்டுப்பாட்டுக்கள் வந்ததாக கமாண்டோ படை அறிவிப்பு ( இந்திய நேரப்படி பிற்பகல் 2.40 மணி)

மும்பை : பல மணி ‌நேர போராட்டத்துக்கு பிறகு மும்பை டிரைடன்ட் ஓட்டலில் இருந்த 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து டிரைடன்ட் ஓட்டல் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. கொலை செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மும்பை நாரிமன் ஹவுசில் நடக்கும் சண்டைக்கு தேசிய பாதுகாப்பு படை (என். எஸ்.ஜி., ) ஆபரேஷன், பிளாக் டொர்ணடோ என்று பெயரிட்டுள்ளனர். நாரிமன் ஹவுசில் தீவிரவாதிகள் 3வ தள‌த்தில் முற்றுகையிடப்பட்டுள்ளனர்.

தாஜ் ஓட்டலில், பயங்கர சத்தத்துடன் மீண்டும் குண்டு வெடித்துள்ளது. கமாண்டோ படை தீவிரவாதியை நெருங்குகிறது. தீவிரவாதியுடன் கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

தாஜ் ஓட்டலில், கடற்படை கமாண்டோக்கள் (மார்கோஸ் ) நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில், தீவிரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், 9 கிரெடிட் கார்டுகள் மற்றும் மொரிஷியஸ் நாட்டு அடையாள அட்டை ஆகியவற்றை தீவிரவாதிகளுடைய பையில் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்கள் மும்பை போலீசில் ஒப்படைத்துள்ளதாக கடற்படை கமாண்டோ அதிகாரி தெரிவித்துள்ளார்.

தாஜ் ஓட்டலில் மீண்டும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகின்றது. தாஜ் ஓட்டல், பழைய கட்டிடம் தரை தளத்தில், குண்டு வெடித்துள்ளது. அதிக சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

டிரைடன்ட் ஓட்டலை கமாண்டோ படை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இது வரை 93 பிணை கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாளோனார், வெளிநாட்டவர்கள் என தெரிகிறது. டிரைடன்ட் ஓட்டலை சுற்றி வளைத்துள்ள கமாண்டோ படையினர் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் முன்னேறி வருகின்றனர்.

நாரிமன் ஹவுசில், கமாண்டோ படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகின்றது. நாரிமன் ஹவுஸ் 4வது மாடியில் இன்று காலை மீண்டும் குண்டு வெடித்தது. மும்பை மாநகரில் கடந்த 30 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றுவரும் தீவிரவாதிகளின் தேடுதல் வேட்டை தற்போது இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக மும்பை போலீஸ் கமிஷனர் ஹாசன் கபூர் தெரிவித்துள்ளார். இந்த தேடுதல் வேட்டையில் தேசிய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். நாரிமன் ஹவுசில் கடும் சண்டை ந‌டந்து வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் கமாண்டோ படையினர், நாரிமன் ஹவுஸ் மாடியில் இறக்கப்பட்டனர். நாரிமன் ஹவுஸ் பகுதியை தேசிய கமாண்டோ படை‌யினர் சுற்றி வளைத்துள்ளனர்.

fpnmix_71566408873.jpg

தீவிரவாதிகளை கண்டதும் சுடும் யுக்தி : முன்னேறுகிறது கமாண்டோ படை

நாரிமன் ஹவுசில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை கண்டதும் சுடும் யுக்தியுடன் கமாண்டோக்கள் முன்னேறி வருகின்றனர். கமாண்டோக்கள் இருமுனை தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் நாரிமன் ஹவுசில் களமிறங்கி மாடியிலிருந்து கடும் தாக்குதலிலும், நுழைவாயில் வழியே உள்ளே சென்று அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகள் நடமாட்டத்தை கமாண்டோ படையினர், அறிந்துள்ளனர். இதனால், தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவது உறுதியென விங் கமாண்டர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளை பிடிக்க ஹைடெக் ஆயுதங்கள்

கமாண்டோ படையினர் இன்சாஸ் மற்றும் உஷி ரக ஹை டெக் மிஷின் கன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரண்டு எம் -18 ரக ஹெலிகாப்டர்களும், தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 20 முதல் 30 தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் அதிரடியாக நாரிமன் ஹவுசில் நுழைந்துள்ளனர். இவ்வாறு விங் கமாண்டர் உபாசனி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து நான்கு படகுகள் மூலம் மும்பைக்கு வந்துள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருந்தாலும், எத்தனை பயங்கரவாதிகள் வந்தனர் என்ற விவரம் கிடைக்கவில்லை. மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், நேற்று முன்தினம் இரவு கடல் மார்க்கமாக நான்கு படகுகளில் மும்பைக்கு வந்துள்ளனர் என, புலனாய்வு நிறுவனங்களும், போலீசாரும் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து மும்பை கடற் பகுதியை வந்தடைந்த பயங்கரவாதிகள், பின்னர் அங்கிருந்து தாக்குதல் நடத்திய இடங்களுக்கு சென் றுள்ளனர். தாக்குதல் தொடர்பாக போலீசாரிடம் பிடிபட்ட சில பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையிலும் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. மகாராஷ்டிராவில் உள்துறை பொறுப்பை கவனித்து வரும் துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல், இந்த விவரங்களை ஒப்புக் கொண்டாலும், இது தொடர்பான மேல் விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டார். மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக்கும் இத்தகவலை உறுதி செய்துள்ளார். இதற்கிடையில், பயங்கரவாதிகள் கராச்சியில் இருந்து மும்பை வர பயன்படுத்திய நான்கு படகுகளை, மும்பை கொலபா போலீஸ் நிலைய போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் பாகிஸ்தான் நாட்டவர்கள் என்பதும் உறுதியாகியுள்ளது.

குண்டுகள், கண்ணி வெடி குழு பயணம்: மும்பை தாக்குதலை தொடர்ந்து, புனேயில் உள்ள ராணுவ முகாமிலிருந்து வெடிகுண்டு மற்றும் கண்ணி வெடிகளை கண்டுபிடித்து செயல் இழக்கச் செய்யும் நிபுணர்கள் மும்பை சென்றுள்ளனர். அத்துடன் பல்வேறு படைப் பிரிவுகளைச் சேர்ந்த ஏராளமான ராணுவ வீரர்களும் மும்பை சென்றுள்ளனர். புனேயில் உள்ள ராணுவத்தின் தென்பகுதி தலைமையகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புனே நகரமும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இரு கப்பல்கள் தடுத்து நிறுத்தம்: மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து தீவிரவாதிகள் வந்ததாக சந்தேகிக்கப்படும் இரு கப்பல்கள் குஜராத் கடற்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபடுவதற்காக கப்பல்கள் மூலமாக தீவிரவாதிகள் வந்ததாக கிடைத்த தகவலையடுத்து கடற்படை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில், சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற அல் கபீர் மற்றும் எம்.வி., ஆல்பா என்ற இரு கப்பல்களை கடற்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

http://www.dinamalar.com/

pic1mw8.jpg

தமிழரின் இறையாண்மையை சிதைத்து சிங்கள இறையாண்மையை அமுல்படுத்த முயலும் அரச பங்கரவாதத்திற்கு எதிராக தற்காப்பு போர் நடத்தும் தமிழரும் தங்கடை அவலங்களை உப்பிடி படங்கள் காணொளிகள் மூலம் தான் உலகிற்கு கொண்டு வரவேண்டும். போராட்டத்தை நியாயப்படுத்த வேண்டும் அங்கீகாரத்தை வலியுறுத்த வேண்டும்.

சிங்கள ஆமிக்காறனின்ரை சப்பாத்து தண்ணிப்போத்தலுக்கு இருக்கிற மரியாதை அவலப்படும் தமிழரிற்கு இல்லை. ஆனால் ஒருவரும் எங்கடை அவலத்தை கண்டு கொள்ளீனம் இல்லை எண்டு ஒப்பாரி. அதை விட்டா தங்களுக்கும் 50 கலிபராலை ஆர்பிஜியாலை சுடத்தெரியும் பிகே எல்எம்பி ரி56 கைக்குண்டு எண்டு ஆயுதங்களை இனங்காணத் தெரியும் ரவைகளை எண்ணத் தெரியும் ஆனபடிய அங்கிகரியுங்கோ எண்டு படங்காட்டினம். உந்த கூத்த செய்யிற வானொலிகள் தொலைக்காட்சிகளை பிறகு தேசியத்தின்ரை அலகுகள் எண்டு வேறை சொல்லீனம். ஆயுதக்குழுவின்ரை சாகச தொலைக்காட்சி தனிநபர் துதிபாடி விழா எடுக்கும் வானொலி எண்டு சொல்லுங்கோ.

Edited by kurukaalapoovan

இந்தியாவில சனிக்கிழமை காலம்பறயோட எல்லாம் ஒருமாதிரி முடிவுக்கு வந்துவிட்ட மாதிரி தெரியுது. எண்டாலும் உறுதி செய்யப்பட இல்லை. Times Of India இல போய்ப்பார்த்தன் செய்திகள் காணொளிகளை. நடைபெற்ற சம்பவங்களை பார்க்க சினிமாப்படங்களில வாற சம்பவங்கள் மாதிரி இருக்கிது. அகோரமாய் கொலை தாண்டவம் நடந்து இருக்கிது. ஒருத்தர் இறந்து வீழுறதையும் காணொளியில காட்டினாங்கள். அது கொலையாளிகளில ஒருத்தரா இல்லாட்டிக்கு கமாண்டோக்களில ஒருத்தரா எண்டு சரியாக தெரிய இல்லை.

கொலையாளி ஒருத்தர் உயிரோட பிடிபட்டு இருக்கிறார். இப்ப அவர் தன்னை கொலைசெய்யுமாறு காவல்துறையிட்ட கெஞ்சுறாராம். டங்குவார் சொன்ன எண்கவுண்டர் Expert பற்றியும் செய்தி இருக்கிது. அந்த தகவலிண்ட அடிப்படையில பார்த்தால் மும்பாய் பாதாள உலககோஸ்டிகளிண்ட தொல்லையில இருந்து விடுபட்டு இப்பத்தான் ஓரளவு நிம்மதியாய் இருக்கிது போல. அந்த நிம்மதியையும் இப்ப இவங்கள் யாரோ வந்து குழப்பிபோட்டாங்கள்.

இந்த கொலை தாண்டவம் சம்மந்தமாய் வருகின்ற மும்பாய் செய்திகளை பார்க்க மண்டை விறைக்கிது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

6 தீவிரவாதிகள் இங்கிலாந்து நாட்டவர்?-மொரீசியஸ் நாட்டவரும் அடக்கம்?சனிக்கிழமை, நவம்பர் 29, 2008,

லண்டன்: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய 6 பேர் இங்கிலாந்து நாட்டுக் குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியர்கள் என்று தெரியவந்துள்ளது.

இவர்கள் பிரிட்டனின் பிராட்போர் நகரின் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இங்கிலாந்தில் நடந்த பஸ் குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டவர்களும் இதே பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை தாக்குதலில் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர்கள் ஈடுபட்டது குறித்து பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் கூறுகையில்,

மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய 6 பேர் இங்கிலாந்து நாட்டவரா என்பது குறித்து உடனடியாக கூற முடியாது. அதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஒரு நாட்டில் தீவிரவாதிகள் செயல்படும்போது, அவர்களுக்ககு வேறு நாட்டிலிருந்து ஆதரவு கிடைக்கலாம் அல்லது வேறு நாட்டிலிருந்து தீவிரவாதிகள் ஊடுறுவியும் வரலாம்.

இதுபோன்ற தீவிரவாதத் தாக்குதல்களின்போது இந்தியாவும், இங்கிலாந்தும் நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டியது இப்போது மிகவும் முக்கியமாகும்.

தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச நடவடிக்கையை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்தும் தீவிரமாக யோசிக்க வேண்டும்.

மும்பை தாக்குதல் சம்பவம் மிகவும் அராஜகமானது. இந்திய அதிகாரிகளுக்கு உதவ இங்கிலாந்து மெட்ரோ போலீஸ் துறையிலிருந்து சில நிபுணர்கள் விரைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் இந்திய அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளன. அவற்றை விரிவாக ஆராய வேண்டியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் சில தகவல்களைக் கூறியுள்ளார். அதுகுறித்து அவருடன் நான் பேசுவேன் என்றார் பிரவுன்.

இதற்கிடையே இந்த தீவிரவாதிகளை அடையாளம் காண மத்திய உளவுப் பிரிவினரும் இங்கிலாந்தின் உளவுப் பிரிவான MI5 அமைப்பும் இணைந்து விசாரணையை ஆரம்பித்துள்ளன.

தீவிரவாதிகளில் மொரீசியஸ் நாட்டவர்:

மேலும் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்ற தீவிரவாதிகள் விட்டுச் சென்ற பையில் மொரீசியஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் ஐடி கார்டும் கிடந்தது.

இதனால் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவன் மொரீசியஸைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தப் பையில் ஏராளமான சீன கிரனைடுகள், அமெரிக்க டாலர்கள், இந்திய ரூபாய், 7 கிரெடிட் கார்டுகளும் சி்க்கின

thatstamil.

  • கருத்துக்கள உறவுகள்

பலி 195-காயம் 300: 16 வெளிநாட்டினர், 14 போலீசார், 2 கமாண்டோக்கள்

சனிக்கிழமை, நவம்பர் 29, 2008, 15:23

மும்பை: மும்பையில் 63 மணி நேரம் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 300 ஆகியுள்ளது.

மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் 26 உடல்கள் கிடக்கின்றன. இவை இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

பலியானவர்களில் 18 வெளிநாட்டினர், 14 மும்பை போலீசார், 2 என்எஸ்ஜி கமாண்டோக்களும் அடக்கம்.

தாஜ் ஹோட்டலில் மட்டும் 100க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

டைம்ஸ் ஆப் இந்தியாவின் பெண் நிருபரான சபீனா செகல் சைக்கியாவும் தீவிரவாதிகளின் குண்டுக்கு பலியாகிவிட்டார். அவரது உடல் தாஜ் ஹோட்டலின் 6வது மாடியில் கிடந்தது.

இவர் தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து அங்கிருந்தபடியே டைம்ஸ் நெள தொலைக்காட்சிக்கு தகவல் தந்து வந்தார். திடீரென அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து இன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

காயமடைந்தவர்களில் 23 பேர் வெளிநாட்டினர் ஆவர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனி, பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆகியோருடன் பிரதமர் மன்மோகன் சி்ங் இன்று ஆலோசனை நடத்தினார்.

இதில் ரா, ஐபி, மும்பை போலீசார், கடற்படையின் உளவுப் பிரிவு ஆகியவை கொடுத்த அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் தீவிரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானிய அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்து முழு அறிக்கை தயாரிக்கப்பட்டு பாகி்ஸ்தான் அரசிடமே தரப்படவுள்ளது.

இந்த அறிக்கையை அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நேச நாடுகளிடமும் தர இந்தியா முடிவு செய்துள்ளது.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் வெளிநாட்டவர்களை கொல்லவும் திட்டம் - பிடிபட்ட தீவிரவாதி தகவல்

வீரகேசரி நாளேடு 11/28/2008 9:12:20 PM - பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து கப்பலில் வந்த சுமார் 25 தீவிரவாதிகள், 3 படகுகளில் மும்பையின் கேட்வே பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவி இந்த பயங்கர தாக்குதலை மேற்கொண்டிருப்பதாக புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

10 குழுக்களாக பிரிந்த லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகளே மும்பை ரெயில் நிலையம், ஹோட்டல்கள், மக்கள் கூடும் சந்திப்புகளில் கண் மூடித்தனமாக சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீவிரவாதிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி தாஜ் ஹோட்டல், பிரைடண்ட் ஒபரோய் ஹோட்டல், நரிமன் ஹவுஸ் வளாகம் ஆகிய 3 இடங்களில் புகுந்ததுடன் அங்கிருந்த 9 வெளிநாட்டவர்களை சுட்டுக் கொன்றனர். மற்றவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டனர்.

இதையடுத்து டில்லியில் இருந்து 400 தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள், 65 இராணுவ கமாண்டோக்கள் வரவழைக்கப்பட்டனர். நேற்று அதிகாலை அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் அதிரடியாக புகுந்தனர். தாஜ் ஹோட்டலில் இருந்த சுமார் 200 பேரை பத்திரமாக மீட்டனர். அது போல ஒப ரோய் ஹோட்டலில் இருந்த 250 பேர் மீட்கப்பட்டனர். அதன் பிறகு தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தும் அதிரடி நடவடிக்கையை இன்று பிற்பகல் கமாண்டோ வீரர்கள் தொடங்கினார்கள்.

கமாண்டோ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இனி உயிர் தப்ப இயலாது என்பதை உணர்ந்த தீவிரவாதிகள் தாஜ், ஒபரோய் ஹோட்டலின் மேல் தளத்தில் கையெறி குண்டுகளை வீசியபடி இருந்தனர். இதனால் 2 ஹோட்டல்களும் தீப்பிடித்து எரிந்தன.

எனினும், கமாண்டோ படையின் கறுப்பு பூனைப் பிரிவு வீரர்கள் தாஜ் ஹோட்ட லுக்குள் அதிரடியாக நுழைந்து ஒவ்வொரு அறையாக தேடி, சோதனை நடத்தி தீவிரவாதிகளை வேட்டையாடினார்கள். அங்கு 7 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த் தப்பட்டனர். 3 தீவிரவாதிகள் குண்டுக் காயங்களுடன் மேல் மாடிக்கு தப்பி ஓடினார்கள்.

அந்த 3 தீவிரவாதிகளையும் உயிருடன் பிடிக்க கமாண்டோ வீரர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு அந்த 3 தீவிரவாதிகளும் பிடிபட்டனர். அவர்கள் மூவரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

அதில் ஒருவர் பெயர் அஜ்மல் அமீர்கமால் என்று தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் முல்தான் நகர் அருகே உள்ள பரிட்காட் என்ற ஊரை சேர்ந்தவர். இந்த 3 தீவிரவாதிகளும் லஷ் கர்இதொய்பா இயக்கத்தின் தற்கொலை படையைச் சேர்ந்தவர்கள்.

பிடிபட்ட 3 தீவிரவாதிகளிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தீவிர வாதிகள் இந்திய பொருளாதாரத்தை சீர் குலைக்கவும், வெளிநாட்டவர்களை கொல்லவும் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியதாக கூறினார்கள். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் ஒபரோய் ஹோட்டலிலும், நரிமன் இல்லத்திலும் தலா 4 தீவிரவாதிகள் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து ஒபரோய் ஹோட்டலில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளை வீழ்த்தும் நடவடிக்கை தீவிரப்படுத் தப்பட்டது. அங்கு நேற்று நள்ளிரவுக்குப் பிறகு துப்பாக்கி குண்டு சத்தம் எதுவும் கேட்கவில்லை. கையெறி குண்டு வீச்சும் இல்லை.

இன்று காலை ஒபரோய் ஹோட்டலின் அனைத்து மாடிகளி லும் கமாண்டோ வீரர்கள் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அங்கு இருந்த தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

இதற்கிடையே இன்று காலை தாஜ் ஹோட்டலின் பழைய கட்டிடம் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை ஆரம்பித்தனர். அவர்களுக்கும் கமாண்டோ வீரர்களுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. தாஜ், ஒபரோய், நரிமன் இல்லம் ஆகிய 3 இடங்களிலும் இன்று காலை இராணுவ கமாண்டோ வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினார்கள்.

நரிமன் இல்லத்தின் 4 ஆவது மாடி தகர்ப்பு

தீவிரவாதிகள் மீதான தாக்குதல் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக மும்பை பொலிஸ் கமிஷனர் ஹசன் கபூர் கூறினார். ஆனால் தீவிரவாதிகள் ஹோட்டல்களில் பதுங்கி இருந்த படி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த சண்டை யின் போது தாஜ் ஹோட்டலில் கமாண்டோ வீரர் படுகாயம் அடைந்தார்.

இஸ்ரேலியர்கள் அதிகம் வாழும் நரிமன் இல்லத்துக்குள் நுழைந்த தீவிர வாதிகள் ஏராளமான வெளி நாட்டவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். நரிமன் இல்லத்துக்குள் கமாண்டோ வீரர்கள் நுழைவது மிகவும் சவாலாக இருந்தது. கடும் போராட்டத்துக்குப் பிறகு நேற்று இரவு நரிமன் இல்லத்துக்குள் இராணுவ கமாண்டோக்கள் நுழைந்தனர்.

இதை அறிந்த தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினார்கள். இன்று அதிகாலை 5 தடவை அடுத்தடுத்து கையெறி குண்டுகளை வீசினார்கள். இதில் நரிமன் இல்லத்தின் 4ஆவது மாடி தகர்ந்தது.

நரிமன் இல்லத்தின் மற்ற பகுதிகளில் இருந்து உள்ளுக்குள் நுழைய முடியாத நிலை இருந்ததால் இராணுவ ஹெலிகொப்டர்களில் இருந்து நரிமன் இல்லத்தில் குதிக்க தீர்மானித்தனர். அதன் படி கமாண்டோ படையின் கறுப்புப் பூனைப்படையைச் சேர்ந்த 5 வீரர்கள் ஹெலிகொப்டர்களில் இருந்து நரிமன் இல்லத்தின் மாடி மீது இறக் கப்பட்டனர்.

கமாண்டோ வீரர்கள் மீதும், ஹெலிகொப்டர் மீதும் தீவிரவாதிகள் ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுடும் அபாயம் இருந்தது என்றாலும் கமாண்டோ படையினர் மிகவும் துணிச்சலாக மாடி மீது இறங்கினார்கள். ஹெலிகொப்டரை இயக்கிய விமானிகள் தீவிரவாதிகளின் தாக்குதல் ஆபத்தை சமாளிக்கும் வகையில் மெல்ல பறந்தபடி செயல்பட்டனர்.

நரிமன் இல்ல மாடி வழியாக புகுந்துள்ள கமாண்டோ வீரர்களும் பதிலடி நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். இதனால் நரிமன் இல்லத்தில் இன்று காலை முதல் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=8901

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை தாக்குதலின் எதிரொலி: இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாடில், ராஜினாமா செய்துள்ளார். மகாராட்டிரா முதலமைச்சர் தேஸ்முக் ராஜினாமா செய்யத் தயார் என அறிவித்துள்ளார், !தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ராஜினாமா என்ற செய்தி வெற்று வதந்தி - சன் நியூஸ் செய்தி

Edited by வினவு

உறையவைக்கும் படங்கள் சில

http://www.boston.com/bigpicture/2008/11/m...der_attack.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.