Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்டிறுதிக்கான சில கேள்விகள் : கேள்விகள் மட்டும்...

Featured Replies

வறிய நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மருந்து நிறுவனங்களின் மனிதப் பரிசோதனைகள், ஆயுத பேரம் மற்றும் பரிசோதனை, தொடரும் வளங்களின் சுரண்டல் இப்படி எங்கு திரும்பினாலும் நெஞ்சை அழுத்தும் விடயங்கள் நிகழ்ந்தேறிய வண்ணமே உள்ளன.

Biocon என்ற பங்களுர் மருந்து நிறுவனத்தின் அதிபர் Kiran Mazumdar Shaw என்ற இந்தியப் பெண்மணி இன்று இந்தியாவின் முதன்நிலை பணக்காரப் பெண்மணி. இவரது நிறுவனம் நீரிழிவு மற்றும் புற்றுநோய் சம்பதமான மருந்துகளின் நவீன ஆராய்ச்சிகள் தொடர்பில் பல சேவைகளை வழங்கி வருகின்றன. இந்தியாவில் இருக்கும் விஞ்ஞானிகளின் திறமையும் ஊதியக் குறைவும் தனது கம்பனியின் வளர்ச்சியின் ரகசியங்களில் முக்கியமானவை என்கிறார் கலாநிதி Shaw. தற்போது மிகப்பெரிய ஒரு வைத்தியசாலையின் கட்டட நிர்மாணத்திலும் Shaw முதலிட்டுள்ளார். இவரது கம்பனி எவ்வகையான தில்லுமுல்லுகளிலோ அல்லது வறிய மக்கள் மீது தமது மருந்துகளைப் பரிசோதிப்பது போன்ற நடவடிக்கைகளிலோ ஈடுபடுகின்றார்கள் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் நமது உலக நடப்பில் அவ்வாறும் கூட ஏதேனும் இந்நிறுவனத்தின் அபரிமித வளர்ச்சிக்குக் காரணமாய் இருக்குமோ என்று எண்ணாமல் நம்மால் இருக்க முடியவில்லை. Biocon போன்ற வளர்ச்சிச் செய்திகளைப் படிக்கையில் “Constant Gardener (2005)” என்ற படம் ஏனோ ஞாபகத்திற்கு வந்தே தீருவேன் என்று அடம் பிடிக்கின்றது.

உலகின் அறியப்பட்ட கடைசி நாடோடி வேட்டுவர்களாக (Hunter-gatherer) விவசாயம் என்ற பொறிக்குள் கூட அகப்படாது சுதந்திரமாய் வாழ்ந்து வந்த போர்ணியோ தீவுகளின் பினான் மக்களும் கூட இன்று விவசாயத்திற்கு அடிமைப்படுத்தப் பட்டுவிட்டார்கள். அவர்களின் மழைக்காடுகள் மரங்களிற்காகத் தறிக்கப்பட்டவண்ணம் உள்ளன. நாடோடிகளை ஏதிலி ஆக்கியதில் அந்நாட்டு அரசும் தொடர்பு படுவதாய் பேசிக்கொள்கிறார்கள். (ஒரு உப செய்தி: Anxiety என்ற மனநிலையின் புராதனத்தை ஆராய்பவர்கள் விவசாயத்தோடு தான் அங்சாயிற்றி தொடங்கியிருக்கலாமோ என்றும் சந்தேகிக்கின்றார்கள். அதாவது காலை எழுந்து பசித்தால் கிடைத்ததை உண்ட மனிதன் காணிக்குள் பயிர்போட்டுப் பயிரிற்குக் காவல் காக்கத் தொடங்குகையில் முன்னைய அவனது உணவும் இன்று அவனிற்கு எதிரியாகி அவனிற்குப் பயமளிக்கத் தொடங்குகிறது. அதாவது, உதாரணத்திற்கு, முன்னர் அகிளானையும் பன்றியையும் உணவாய் மட்டும் பார்த்து அவற்றைக் காண்கையில் மகிழ்ந்த வேட்டுவன், இன்று விவசாயியாகி பன்றியும் அகிளானும் தனது பயிரை நாசமாக்காது காக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவதால் முன்னர் மகிழ்ச்சி அளித்த பன்றியினதும் அகிளானதும் காட்சி இன்று விவசாயி ஆன அவனிற்குப் பயமளிக்கத் தொடங்குகிறது.)

இவ்வாறான செய்திகள் வந்ததும் நமது மார்க்சிசத் “தோழர்கள்” பிரசங்கங்கங்கள் நிகழ்த்துகிறார்கள். தேவைக்கு மிஞ்சிய உற்பத்தி, சொத்துச் சேகரிப்பு, சுரண்டல், மேட்டுக்குடி என்று இரசிக்கும் வகையில் கட்டுரைகளையும் இதர படைப்புக்களையும் நமது பார்வைக்கு வைக்கிறார்கள். எமக்கும் எல்லாம் சரிபோலவும் நாமும் அநியாயத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கவேண்டும் போலவும் படுகின்றது. சேகுவாரா பற்றிய படங்களும் கட்டுரைகளும் எமது உணர்வுகளிற்குக் களிம்பு தடவுவது போல் இருக்க, திருப்பத்திருப்ப அவற்றைப் பார்க்கின்றோம் படிக்கின்றோம். மு.மயூரன் ஏதேனும் புதிதாய்ச் சொன்னாரா என்று அவரது வலைப்பூவில் தேடுகின்றோம். கொமூனிசம் தோற்றுவிடவில்லை என்பதற்குக் கியூபா உதாரணம் என்கின்றோம்.

ஆனால், சுற்றுலாப் பயண மையங்களிற்குள் இருந்து தப்பி கியூபர்களின் கியூபாவிற்குள் கியூபர்களோடு சேர்ந்து பயணித்தவர்கள் தாம் பெற்ற பட்டறிவினை எம்மோடு பகிர்ந்து கொண்டால் கேட்க மறுக்கின்றோம். அவையெல்லாம் முதலாளித்துவத்தின் பிரச்சாரம் என்று ஒதுக்கி விடுகின்றோம். உண்மையில், கியூபாவில் இருவேறு பணம் கூடப் புழக்கத்தில் உள்ளன (CUC அல்லது “டொலர்” மற்றும் “கியூபன் பெசோ”). CUC இன் பெறுமதி கியூபன் பெசோவை விட 25 மடங்கு அதிக பெறுமதி உடையதாக உள்ளது. விமான நிறுவனங்கள், விடுதிகள், கடைகள் மற்றும் கறுப்புச் சந்தை தொழிலாளர்கள் CUC இல் ஊதியம் பெற அரச அலுவலர்களும் ஓய்வூதியம் பெறுவோரும் கியூபன் பெசோவிலே ஊதியம் பெறுகிறார்கள். அநேக பொருட்களை வாங்குவதற்கு கியூபன் பெசோ CUC இற்கு மாற்றீடு செய்யப்படவேண்டும். இவை பற்றி நாம் கேட்க மறுக்கின்றோம். ஏனெனில் சேகுவாரா தருகின்ற காவியக் கவர்ச்சியியோடு இவ்வுண்மைகள் முரண்படுவது எமக்குப் பிடிக்கவில்லை.

கியூபாவின் வியத்தகு வைத்தியசாலை(கள்) பற்றிப் பேசி வியக்கிறோம். ஆனால் எத்தனை சராசரிக் கியூபர்களிற்கு இவ்வைத்தியசாலை எட்டும் தூரத்தில் உள்ளது என்பது எமது தேடலிற்கு அப்பாற்பட்டதாய்ப் போய் விடுகின்றது.

மாவோவின் நெடும்பயணம் என்று கூறும் போதே நமது நா தழதழக்கின்றது. ஆனால் மாவோவின் கலாச்சாரப் புரட்சிக்குள், சுற்றிவரப் புத்தகங்கள் எரிய, வாழ்ந்து தப்பி வெளி வந்த சீனன் தன் கதை கூறின் கேட்க மறுக்கின்றோம். அமெரிக்கா வந்த சீனன் முதலாளித்துவத்தால் கவரப்பட்டவனாகத் தான் இருப்பான் எனவே அவனது செய்தி ஏற்றுக் கொள்ளப்படமுடியாதது என்கின்றோம். மாவோ எரித்த புத்தகங்கள் பற்றிக் கூறும் சீனனின் கதை கேட்க மறுக்கும் நாமும் நம் "தோழர்களும்" நமது யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட செய்தியை அவனிற்குக் கூறுகின்றோம்.

மனிதன் பெறுமதிகளோடு பிறந்தானா? கடவுள் அல்லது இயற்கை மனிதனைச் சில பண்புகளோடு படைத்தாரா/உருவாக்கியதா? அல்லது இருத்தலியல் கூறுவது போன்று மனிதனின் essense என்பது அவனது existenceசின் பின்னர் தான் தோன்றுகிறது என ஏற்றுக் கொள்வோமா?

கமூனிசத்தையோ அல்லது முதலாளித்துவத்தையே புனிதப்படுத்தியே தீரவேண்டிய அவசியம் எமக்கு ஏன் எழுகின்றது? இப்புனிதப் படுத்தலில் எமது நலன்களின் பங்கு என்ன?

"தக்கன பிழைக்கும்" என்ற எளிய கூர்ப்பியல் விதியை நாம் ஏற்றுக் கொள்கின்றோமா? உலகின் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டன என்பதை மனதாரா நாம் நம்புகின்றோமா? நம்பினால், வளங்களிற்கான போட்டி நியாமானது என்பதனை நாம் ஏற்றுக் கொள்கின்றோமா? இல்லை இல்லை போட்டி தேவை இல்லை எல்லாவற்றையும் எல்லோரிற்கும் எப்போதும் சமனாகப் பங்கிட எம்மிடம் வழி உள்ளதென்று ஆரேனும் கூற முடியுமா (மரங்களும் சூரிய ஒளிக்குப் போட்டி போடுகின்றனவே! எத்தனை சிறு தாவரங்கள் விருட்சங்களின் அடியில் சிறுத்துப் போகின்றன.) ? அப்படி யாரேனும் கூறின் நாம் ஏற்றுக்கொள்வோமா? சமனாகப் பங்கீடு செய்ய ஒரு பங்கீடு செய்யும் அமைப்பு அவசியம்? பங்கீடு செய்யும் அவ்வமைப்புத் தேனெடுத்த கையை நக்கினால் என்ன செய்வது என்று கேள்வி எமக்குப் பிறக்குமா? பங்கீடு செய்யும் அவ்வமைப்புத் தொடர்ந்து சிறு துளிகளை நக்கினால் நாளடைவில் அது வாய்நிறைந்த சுரண்டலாய் ஆகி விடாதா?

வளங்கள் மட்டுப்படுத்தப் பட்டன தான் அவற்றிற்கான போட்டி இருக்கும் தான் அப்போட்டி நியாயமானது தான் என்று நாம் ஏற்றுக் கொள்வோமேயாயின் போட்டி எவ்வாறு நிகழ்த்தப்படலாம் என்று வரைவிலக்கணம் செய்ய ஆருக்காவது அருகதை உண்டா? போட்டி என்று வந்தபின்னர் ஒவ்வொருவரும் தம்மிடம் உள்ள அனைத்து அஸ்திரங்களையும் பாவிப்பது எவ்வகையில் தவறானது? இல்லை பெறுமதிகள் என்ற பூச்சாண்டியைக் காட்டி இன்ன இன்ன அஸ்திரங்கள் போட்டியில் பாவிக்கப்படலாகாது என்று கூறப்போகின்றோமா? அவ்வாறு நாம் கூறின் அது நேர்மையானதா? எம்மிடம் இல்லாத அஸ்திரம் பிறனிடம் உள்ளதால் அது எமது போட்டிக்குத் தடை என்ற அடிப்படையில் எமது பெறுமதி அமைகிறதா என்று நாம் பரிசீலிக்க வேண்டாமா? நேர்மை என்பதே பெறுமதி தானே, நேர்மை அவசியம் என்று ஏன் கூறுகின்றோம்? இவ்விதி எங்கிருந்து வந்தது? ஆரால் எதற்காக நேர்மை புனிதப் படுத்தப்பட்டது?

மேற்படி விசாரணைகள் அல்லது கேள்விகள் முடிவின்றித் தொடரப்படலாம் என்ற நிலையில் சுரண்டல்கள் என்பதும், அவை அபத்தம் என்பதும், அவற்றைப் பார்த்து நெஞ்சம் அழுகிறது என்பதும் வேடிக்கையாய் இல்லையா? யாருக்காக யார் எதற்காக அழுகின்றோம்? அழுகை என்ற வெளிப்பாடு எவ்வுணர்வின் வெளிப்பாடு? அவ்வுணர்வின் ஆழம் என்ன? அங்கு அவ்வடிமட்ட ஆழத்தில் என்ன தெரிகிறது?

ஆண்டிறுதிக்கான சில கேள்விகள்….

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்டிறுதிக்கான சில கேள்விகள்….

எந்த ஆண்டின் இறுதிக்கு?

எனக்கென்னவோ இது ஒரு 1968ம் ஆண்டிறுதிக்கு பொருத்தமான கேள்விபோல இருக்கு அது தான் கேட்டன். நீண்ட துயில் ஏதேனும் கலைந்தெழுந்து... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொமொருவனின்.. காத்திரமான கேள்விகள்.. முதலாளித்துவம்.. தந்தவை..!

எனக்கு கொஞ்சம் முதலாளித்துவம்.. நிறைய சமதர்மம் வேண்டிய ஒரு கலப்பு நிலை வரணும் என்ற விருப்பம். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு கொஞ்சம் முதலாளித்துவம்.. நிறைய சமதர்மம் வேண்டிய ஒரு கலப்பு நிலை வரணும் என்ற விருப்பம். :rolleyes:

முதலாளித்துவ நாடுகளில அடைக்கலம் பெற்றுக்கொண்டு சமதர்மக் கனவு காணுவது கோயிலுக்கை போய் நாத்திகத்துக்கு (நாத்திகத்துக்கு என்ன ராசி?) அருச்சனை செய்தமாதிரி இருக்கு :huh:

  • கருத்துக்கள உறவுகள்

முதலாளித்துவ நாடுகளில அடைக்கலம் பெற்றுக்கொண்டு சமதர்மக் கனவு காணுவது கோயிலுக்கை போய் நாத்திகத்துக்கு (நாத்திகத்துக்கு என்ன ராசி?) அருச்சனை செய்தமாதிரி இருக்கு :huh:

நியாயம் தான் பண்டிதர். சமதர்மம் சலிப்படைய முதலாளித்துவம் புரட்சியா தெரிஞ்சுது. முதலாளித்துவம் சலிப்படையச் செய்வதால்.. நிச்சயம் இன்னொன்று அதை பிரதி செய்து தானே ஆக வேண்டும். மனிதன் சிந்திப்பவனாச்சே..! மனித சிந்தனைதான் கடவுளும் ஆகிறது.. நாத்திகமும் ஆகிறது. வேறு ஏதும் இல்லை..! :rolleyes:

  • தொடங்கியவர்

நானறிந்தவரையில் எமது சமூகத்தவர் மத்தியில் பலர்--அதுவும் குறிப்பாக வாசிப்புப் பழக்கமும் எழுத்தாற்றலும் நிறைந்த பலர்--இன்னமும் கமூனிச சிந்தனையையே கவர்ச்சியானது என்று கருதும் ஒரு நிலை இருக்கவே செய்கின்றது. நேபாளத்தில் ஒரு சிறு மாற்றம் வந்தாலோ புதுசா இணையத்தில ஏதேனும் சேகுவாரா படம் கிடைச்சாலோ எம்மவர்கள் மத்தியில் ஒரு ஆரவாரத்தைப் பார்க்கமுடிகிறது. தற்போது நிலவுகின்ற பணச்சந்தைத் திக்குமுக்காடல் தொடர்பிலும் கூட சிலர் முற்றுமுளுதாக கமூனிசப் பாணியில் மட்டும் சிந்திப்பதும் இந்தா பார் அமெரிக்கா உடைந்து சிறு துண்டுகளாய்ச் சிதறுகின்றது அதைத்தொடர்ந்து செங்கொடி எழுகின்றது என்பது போன்ற கட்டுரைகளை எழுதுவதும் இன்றைக்கும் நிகழ்கின்றன. உலகின் அனைத்துப் பிரச்சினைக்கும் முதலாளித்துவமும் அதன் நலன்களும் மட்டுமே காரணம் என்றும் பலர் சிந்திக்கின்றார்கள். இந்நிலையில் தான் சில கேள்விகள் கேட்கத் தோன்றின.

நல்லதொரு கட்டுரை இன்னுமொருவன். பண்டிதர் சொன்ன அனுபவம் எனக்கும் கொஞ்சம் வந்திச்சிது இதை வாசிக்க. வழமையாக காலம் காலமாக பாவிக்கிற சொல்லுகளை பாவிச்சு எழுதினபடியால இப்பிடி இருக்கிதோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எனது அன்றாட வாழ்விற்கு மட்டும் போதுமானதை எடுத்துகொண்டு மற்வற்றை அரசுடமை அன்றி உலகுடமையாக்கும் மன பக்குவம் யாபருக்கும் இருப்பின். கொமுனிசியத்தை விரும்பவும் தேவையி;ல்லை முதாலாளித்துவத்தை வெறுக்கவும் தேவையி;ல்லை. ஆனால் அது அனைவரிடமும் ஒருபோதும் வாரது. அதனால்தான் கொமுனிசியம் உலகில் தோற்றுபோனது. இப்போது முதலாளித்துவம் எல்லோரையும் ஏமாற்றி கொண்டிருக்கின்றது.

பறக்கும்தட்டு போன்ற கற்பனைகள் நிஜமாகி வேற்றுஉலக மானிடர்கள் யாரவது எமது உலகுடன் போருக்கு வந்தால்...... ஒரு வேளை உள்ளுர் சண்டைகள் சற்று குறையலாம். அப்போது எமது வாழ்வு உலகில் ஆனது எனும் நிலை தோன்றி உலகை பாதுகாக்கும் எண்ணம் எல்லோரிடமும் இல்லாதுபோனாலும் பெரும்பாண்மையிடம் தோன்றும் வாய்ப்பு அதிகம்.

அதுவே ஒரு திணிப்ற்ற கொமுனிசியமும் ஏமாற்று முதாலிளியத்துவமும் இல்லாதொழித்து நெடுக்ஸ் சொல்வது போன்று எல்லோராலும் விரும்ப கூடிய ஒரு புதிய ஆட்சி முறையை உருவாக்கலாம். எதற்கும் மனித மனமாற்றமே காரணியாக இருப்பதால்..... அதற்கான ஒரு நிலை தோன்றுமா என்பதுதான் எனது கேள்வியாகவும் நிற்கின்றது.

  • தொடங்கியவர்

எனது அன்றாட வாழ்விற்கு மட்டும் போதுமானதை எடுத்துகொண்டு மற்வற்றை அரசுடமை அன்றி உலகுடமையாக்கும் மன பக்குவம் யாபருக்கும் இருப்பின். கொமுனிசியத்தை விரும்பவும் தேவையி;ல்லை முதாலாளித்துவத்தை வெறுக்கவும் தேவையி;ல்லை. ஆனால் அது அனைவரிடமும் ஒருபோதும் வாரது. அதனால்தான் கொமுனிசியம் உலகில் தோற்றுபோனது. இப்போது முதலாளித்துவம் எல்லோரையும் ஏமாற்றி கொண்டிருக்கின்றது.

வாசித்துக் கருத்துக் கூறிய அனைவரிற்கும் நன்றிகள்.

மருதன்கேணி,

நீங்கள் விரும்புவது போன்று "எனது அன்றாட வாழ்விற்கு மட்டும் போதுமானதை எடுத்துகொண்டு மற்வற்றை அரசுடமை அன்றி உலகுடமையாக்கும் மன பக்குவம்..." என்ற மனநிலை அனைவரிற்கும் வந்தால் கூட, "எனது அன்றாட வாழ்விற்கு மட்டும் போதுமானதை எடுதுக்கொள்ளல்" என்பது கூடப் போட்டியின்றிச் சாத்தியமற்றது என்றே எனக்குத் தோன்றுகின்றது. அதாவது, வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டனவாய் இருக்கும் வரை போட்டி தவிர்க்கப்படமுடியாதது. போட்டி இருக்கும் என்றால், போட்டி சம்பந்தமான அனைத்துக் கேள்விகளும் மீண்டும் எழவே செய்யும்...

இன்று மனங்கள் கிளிநொச்சியில் குவிந்திருப்பதால் இத்தலைப்பை இன்னொரு நாளைக்கு ஒத்திவைப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

1) 79,80 களில் இயக்கங்களின் ஒண்று கூடல் நடை பெறும் பொழுது,அங்கு சமுகமளித்த நன்பர்(அவர்கள் பாஷையில் தோழர்)கமூனிச நாடு எது என்று ஒரு கேள்வியை கேட்டார் ,ஒருத்தர் ரஷ்யா என்றார்,இன்னுமொருவர் சீனா என்றார் , இன்னொருத்தர் கியுபா என்றார்...உடனே கேள்வி கேட்ட நன்பர் சிரித்து போட்டு சொன்னார், உலகம் முழுவதும் கமூனிசம் பரவிய பின்புதான் உம்மையான கமூனிச நாடு உருவாகும் .அதற்காக நாம் போரடவேணும் .(அந்த நன்பர் இப்பொழுது கனடாவில் வாழ்கிறார்..சிறிலன்கா பா.உ ஆகவும் கொஞ்காலம் இருந்தவர்.புலிகாச்சல் வந்து கனடாவி தஞ்சம் அடைந்திட்டார்)

2) மத்திய கிழக்கு நாட்டில் தொழில் புரியும் பொழுது ஒரு இஸ்லாமிய அரபியர் சொன்னார் உலகம் பூராவும் எப்பொழுது பாந்தோசை (இஸ்லாமிய தொழுகை) கேட்கிறதோ அப்போதுதான் உலகம் அமைதி அடையுமாம்

3)பிரித்தானியா காரன் ,சூரியன் தங்கள் சாம்ராஜ்சத்தில் மறைவது இல்லை என்றான்.அதில் அவன் வெற்றியும் கண்டான். அவன் தனது அரசியல் சித்தாந்தத்தை(ஜனநாயகமாம்) இன்றும் தினித்துக்கொன்டுதான் இருக்கிறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.