Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீ லங்கா அமெரிக்க தூதுவரின் வலைப்பூவில் அவரின் ஒருபக்கச்சார்பான போக்கிற்கு உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்!

Featured Replies

வணக்கம்,

அண்மையில கிளிநொச்சியை சிறீ லங்கா இராணுவம் கைப்பற்றியது தொடர்பாக சிறீ லங்கா அமெரிக்கத்தூதுவரகம் ஒருபக்கச்சார்பான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இருந்தது. கீழுள்ள இணைப்பை சொடுக்கி இது தொடர்பான உங்கள் கருத்தை - எதிர்ப்புக்களை - சிறீ லங்கா அமெரிக்கத் தூதுவரின் வலைப்பூவில் தெரிவித்துவிடுங்கள். நன்றி!

சிறீ லங்கா அமெரிக்க தூதுவரின் வலைப்பூவில் கருத்துக்கூற இங்கே அழுத்துங்கள்!

சிறீ லங்கா அமெரிக்க தூதுவரகம் கிளிநொச்சி கைப்பற்றல் தொடர்பாக முன்பு வெளியிட்ட அறிக்கை:

Embassy Colombo Press Statement

January 6, 2009 - The fall of Kilinochchi represents an important point in the 25-year war that has divided Sri Lanka. We hope that this event will help hasten an end to the conflict. The U.S. believes that a lasting, sustainable peace can best be achieved if the Sri Lankan Government works now to reach a political solution that addresses the aspirations of all Sri Lankans, including Tamils, Muslims, and Sinhalese. The United States does not advocate that the Government of Sri Lanka negotiate with the LTTE, a group designated by the United States since 1997 as a Foreign Terrorist Organization. However, we do believe that a broad range of other Tamil voices and opinions must be brought into a political process to reach a political solution that Tamils inside and outside of Sri Lanka see as legitimate. This will help assure Tamils that their rights are protected, that they have a say over important areas of their lives in geographical areas in which they predominate, and that they are an integral and respected part of an undivided Sri Lanka. At the same time, such as process would further delegitimize and erode the support of the LTTE in Sri Lanka and abroad.

Posted by US Embassy Colombo at 8:39 PM

http://usembassycolombo.blogspot.com/2009/...-statement.html

பி/கு: எனக்கு இந்த தகவலை நண்பர் ஒருவர் தனிமடலில் தெரிவித்து இருந்தார்.

Please use this link and go to the US Embassy website and add your comments to the latest Press Release from the Embassy. Please pass it on to others. We need to get atleast 10,000 to respond.

http://usembassycolombo.blogspot.com/2009/...-statement.html

Edited by முரளி

நல்லது முரளி. நானும் கருத்தை வைக்கின்றேன். அத்துடன் நண்பர்களிற்கும் தெரியப்படுத்துகின்றேன்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முரளி இணைப்புக்கு. கருத்துக்கள் சரிபார்க்கப்பட்டு(review) தான் போடுவினாமாம் பார்ப்போம். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கருத்துக்கள் சரிபார்க்கப்பட்டு(review) தான் போடுவினாமாம் பார்ப்போம். "

நியாயமான கருத்தில் சரிபார்க்கிறதுக்கு என்ன இருக்கு ஒட்டுமொத்த தமிழரின் குரலும் ஒரே மாதிரி ஒலித்தால் நிராகரிக்க முடியுமோ?!

நன்றி முரளி நானும் என் தோழர்களுக்குத் தெரியப்படுத்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது முரளி. நானும் கருத்தை வைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இயலுமானவரை எக்கருத்தி எழுதினாலும் கையெழுத்து வையுங்கள். அது தான் எங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்... அத்தோடு நாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களும் நன்மதிப்பைத் தரும்.

  • தொடங்கியவர்

வணக்கம், வலைப்பூவில நாங்கள் எழுதுபவற்றை எல்லாம் அவர்கள் பிரசுரம் செய்யாவிட்டாலும், எமது கருத்துக்கள் அவர்களை சென்றடைவது நல்லது. என்றபடியால எழுதவசதி இருக்கிறவர்கள் உங்கள் கருத்துக்களையும் அதில கொஞ்சம் சொல்லிவிடுங்கோ. நன்றி!

  • தொடங்கியவர்

அனைவருக்கும் வணக்கம்,

நாங்கள் நேற்று எழுதிய பதிவுகளை வலைப்பூவில பிரசுரிச்சு இருக்கிறார்கள். எனது பதிவும் அதில பிரசுரிக்கப்பட்டு இருக்கிது. ஆனால்.. ஆக பதின்நான்கு கருத்துக்கள்தான் புதிதாக பதியப்பட்டு இருக்கிது. ஏனையவர்கள் எழுத இல்லையா இல்லாட்டிக்கு எழுதினதை பிரசுரிக்க இல்லையா எண்டு தெரியாது.

ஆங்கிலத்தில உங்கள் கருத்துக்களை சொல்ல முடியாதவர்கள் உங்கள் கருத்தை தமிழில இதில சொன்னால் அதை தாங்கள் ஆங்கிலத்தில மொழிபெயர்த்து குறிப்பிட்ட வலைப்பூவில பதிஞ்சு விடுவம் எண்டு ஓர் நண்பர் எனக்கு தனிமடலில தெரிவிச்சு இருக்கிறார்.

எண்டபடியால, யாராவது இதுபற்றி உங்கள் தமிழில கூறப்படுற கருத்து ஆங்கிலத்தில மொழிபெயர்க்கப்பட்டு அந்த வலைப்பூவில பதியப்படுறதை விரும்பினால் தெளிவாகவும், சுருக்கமாகவும் உங்கள் கருத்துகளை இங்கு தெரிவிச்சு விடுங்கோ. நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று எழுத நேரமின்மையால் இன்று எழுதியிருந்தேன்.

எனது கருத்தை பார்த்து விட்டு தீர்வு பொதியுடன் வாறாரோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முரளி,கந்த்தப்பு

முடிந்தவரை ஆங்க்கிலத்தில் சமாளித்து எழுதிவிட்டேன்!

தனது பொருளாதார வள மேம்படுத்தலுக்காக ஈராக்கில் போர் தொடுத்த அமெரிக்கா(ஆரம்பத்தில் குவைதுடன் இணைந்து ஈராக்கிய எல்லையிலிருந்த எண்ணை வளத்தை சுரண்டி ஈராக்-குவைத் போருக்கு அடித்தளமிட்டது) வஞ்ஞிக்கப்பட்ட மக்கள் கோபம் நியாத்திற்காக வன்முறை வடிவம் கொண்டது. அமெரிக்கரால் பயங்கரவாதம் என்ற பேரில் தனது தான் தோன்றிதனமான செயலுக்கு எதிரான அனைத்து செயல்களும் முடக்கபட்டுள்ளது.

இவர்களிடம் நாம் நியாத்தை எதிர்பார்க்கமுடியுமா?

1997 ல் புலிகளை அமெரிக்கா தடை செய்த்து அப்பொதும் நிலமை கிட்டத்தட்ட இப்போதுள்ள நிலமை போல்தான்(புலிகள் பலவீனமான ஒரு தோற்றம்),

உரிமைப்போர்களை ஆயுதப்படைகளை கொண்டு அடக்குவதில் அமெரிக்காவுக்கு நிறையவே அனுபவம் உண்டு தென் அமெரிக்க நாடுகள் முதல் வியட்னாம் என்று தொடர்ந்த்து செல்கிறது.

உலகத்தை எமாற்றுவதில் அவர்கௌக்கு நிகர் அவர்களே!(உயிரியல்,இரசாயண ஆயுதம் என்று கதை விடுவார்கள்) படமே காட்டுவார்கள்,சும்மா படமல்ல சாட்டிலைட் படம்.

இதுக்குத்தான் கீரைக்கடைக்கும் எதிர் கடை வெணுமெண்டிரது.

அந்த காலத்திலயும் விட்டாங்கள் ஒரு புளுகு(1969) மனித குலத்தின் இராட்சதத்தனமான பாய்ச்சல் எண்டு சந்திரனில காலடி வைச்சது எண்டு

இதுக்கெல்லாம் அமெரிக்கா வெட்கப்படாது வெட்கப்படப்போவதுமில்லை அனால் நம்பி ஏமாந்த்தவர்கள்தான் வெட்கப்பகிறார்கள். இதுதான் உலகம்!

  • தொடங்கியவர்

நன்றி ஈழப்பிரியன் அண்ணா, வசி. இங்கு யாராவது உங்கள் கருத்தை தமிழில எழுதினால் அதை மொழிபெயர்த்து அங்கு ஆங்கிலத்தில பதிவு இடப்படும். என்றபடியால ஆங்கிலத்தில எழுத வசதி இல்லாத ஆக்கள் இஞ்ச தமிழில இதுபற்றிய உங்கட கருத்தை சொல்லலாம். நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.