Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லசந்தவின் கொலையின் பின்னணியில் கருணா…!! தப்பிய தமிழ் ஊடகவியலாளர்..!!

Featured Replies

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையின் பின்னணியில் கருணா உள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதபற்றி மேலும் தெரியவருவதாவது.கடந்த டிசம்பர் 31 ஆம்திகதி இரவு தன்னுடைய காதலியுடன் பெந்தொட்டையில் கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரு பிரபல கோட்டலில் கருணா உல்லாசமாக இருந்ததாக பிரபல ஆங்கிலத் தினசரியான சண்டே ஐலண்ட் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது.

இந்த செய்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை 04-01-2009 அன்று வெளியாகியிருந்தது. இச்செய்தி வெளியாகி 4 நாட்களில் அதாவது 08-01-2009 அன்று லசந்த சுட்டுக்கொல்லப்பட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி புத்தாண்டு பிறப்பதற்கு சில சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பெந்தோட்டை கடற்கரையில் தனது காதலியுடன் செல்லமாக விளையாடிக் கொண்டிருந்த கருணாவை லசந்த தனது புதிய மனைவியுடன் அங்கு மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த பொழுது தற்செயலாக அவதானித்துவிட்டார். கருணாவின் புதிய காதலி பெரதெனியா பல்கலைக்கழக மாணவி என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

கருணா அவ்விடுதியில் காதலியுடன் இருந்ததை நேரடியாகக் கண்டவர்கள் இருவர். ஒருவர் லசந்த விக்கிரமதுங்க. மற்றையவர் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர். அவர் லசந்தவின் நண்பரும் கூட. கருணாவிற்கு ஏற்கனவே லசந்தவை தெரியும். ஆனால் தமிழ் ஊடகவியலாளரைத் தெரியாது. எனவே நைசாக அவ்விடத்திலிருந்து விலகிய அவர் வேறு ஒரு இடத்திலிருந்து நடப்பதை அவதானித்திருக்கிறார்.

லசந்தவை கண்ட கருணா தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டு லசந்தவைப் பார்த்து அசட்டு சிரிப்பை வெளியிட்டுக்கொண்டிருந்தபோத

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவைத் தப்பிக்க வைக்க சண்டே ஐலண்ட் முயல்கின்றது போலும். இலங்கை ஊடகங்களில் அதிகளவு இனவாதம் கக்கும் பத்திரிகைகளில் அதுவும் ஒன்று. . இப்போது மகிந்த மீது பழி விழும் எனத் தெரிந்தவுடன் மூடி மறைக்க முயல்கின்றது. சிரச தொலைக்காட்சி நொருக்கப்பட்டது, என்ன கருணாவின் உல்லாச காணொளியைப் படம் போடுவினம் என்றா??

மகிந்தவைத் தப்பிக்க வைக்க சண்டே ஐலண்ட் முயல்கின்றது போலும். இலங்கை ஊடகங்களில் அதிகளவு இனவாதம் கக்கும் பத்திரிகைகளில் அதுவும் ஒன்று. . இப்போது மகிந்த மீது பழி விழும் எனத் தெரிந்தவுடன் மூடி மறைக்க முயல்கின்றது. சிரச தொலைக்காட்சி நொருக்கப்பட்டது, என்ன கருணாவின் உல்லாச காணொளியைப் படம் போடுவினம் என்றா??

:) எப்படி தூயவன் இப்படி எல்லாம்?

:) எப்படி தூயவன் இப்படி எல்லாம்?

தூயவன் சொல்வது 100% உண்மை

தூயவன் சொல்வது 100% உண்மை

என்ன செய்வது நாங்கள் என்ன தான் காட்டு கத்தினாலும் உண்மை?

மகிந்தவைத் தப்பிக்க வைக்க சண்டே ஐலண்ட் முயல்கின்றது போலும். இலங்கை ஊடகங்களில் அதிகளவு இனவாதம் கக்கும் பத்திரிகைகளில் அதுவும் ஒன்று. . இப்போது மகிந்த மீது பழி விழும் எனத் தெரிந்தவுடன் மூடி மறைக்க முயல்கின்றது. சிரச தொலைக்காட்சி நொருக்கப்பட்டது, என்ன கருணாவின் உல்லாச காணொளியைப் படம் போடுவினம் என்றா??

குற்றம் சுமக்க எண்டே சிலரை அரசாங்கம் வளர்க்கும்... அதிலை கருணா ஒரு கழுதை... எல்லா குற்றத்தையும் சுமக்கும் அவரை அரசாங்கம் ஒரு நாள் பிடித்து உள்ளை போடும்.. உடனை அரசு ஒரு அறிக்கையையும் விடும்... அதிலை அரசாங்கம் கருணாவின் கொலைகளை எல்லாம் விசாரித்து கண்டு பிடித்து விட்டது எண்டு...

அரசாங்கம் சுத்தமானது ஆகிவிடும்... இண்டைக்கு எதிர்வு கூறும் பத்திரிகைகள் எல்லாம் தீர்க்க தரிசன பட்டம் கிடைக்கும்... கருணாவுக்கு நாமம் கிடைக்கும்...

மகிந்த தப்ப வேண்டுமாயின் ........ "வேள்விக்கு வளர்த்து விட்ட கடா" கருங்காலிக்கு ... ரோகாரத்தான்!

  • கருத்துக்கள உறவுகள்

ஐலண்ட், திவயின என்கிற ரெண்டு பத்திரிகைகளுமே காலம் காலமாக தமிழினப் படுகொலையை நியாயப்படுத்தி வரும் தூய சிங்கள இனவாதப் பத்திரிகைகள். தமிழினப் படுகொலையை எவர் செய்தாலும் அவர்களை ஆதரித்துக் கருத்தெழுதி வரும் பத்திரிகை. அந்த வரிசையில் தற்போது சிங்களத்தின் ஒப்பற்ற தலைவனாக மகிந்தவை தூக்கிப் பிடித்து எழுதிவரும் இந்தப்பத்திரிகை, மகிந்த மீது விழும் குற்றச்சாட்டுக்களை அடியோடு மறுதலிக்கும் வேலையச் செய்து வருகிறது. இது மகிந்தவின் ஊதுகுழலான லேக் கவுஸ் பத்திரிகளை விடவும் அதிகமாக மகிந்தவைக் காக்க முன்னிற்பதோடு, அதை இலவசமாகவும் செய்துவருகிறது. அதன் ஒரு பகுதிதான், மகிந்தவால் ஏவப்பட்டுக் கொல்லப்பட்ட இன்னொரு சிங்கள இனவாதப் பத்திரிகையான (இப்படி எழுதுவதால் பலர் என்னோடு சண்டைக்கு வரக்கூடும், உண்மையில் லசந்த எதிர்த்து வந்ததெல்லாம் மகிந்தவின் அரசியலையே அன்றி அவன் செய்துவரும் தமிழினப் படுகொலையை அல்ல. தமிழர்க்கெதிரான போர் விடயத்தில் த ஐலண்ட் பத்திரிகை என்ன கொள்கையைக் கொண்டிருக்கிறதோ அதே கொள்கையைத்தான் சண்டே லீடரும் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு வித்தியாசம், ஐலண்ட் பத்திரிகை சொல்லாமல் மறைத்த ராணுவ ஊழல் விவகாரங்களை சண்டே லீடர் அவ்வப்போது வெளியிட்டு வந்தது. இது அவர்கள் தமிழர் மீதான் போரை எதிர்க்கிறார்கள் என்று அர்த்தப்படுத்தப் படவில்லை, மாறாக அப்போர் சரியான முறையில், இன்னும் விவேகமான முறையில் நடைபெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி வந்திருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய உறவினரான் லசந்த உரிமையாளராக இருக்கும் ஒரு பத்திரிகை தமிழர் மீதான் போரில் என்ன நிலையை எடுக்கும் என்று நாம் எண்ணிப்பார்ப்பது அவ்வளவு ஒன்றும் கடிணமான வேலை அல்ல). சண்டே லீடர் பத்திரிகையின் உரிமையாளர் லசந்த விக்கிரமதுங்கவாஇ மகிந்த கொல்லவில்லை என்று நிரூபிப்பதற்காக கருணா தனிப்பட்ட காரணம் ஒன்றிற்காக கொன்றிருக்கிறான் என்று நிறுவ முற்படுகிறது.

ஆனால் நடந்தது என்னவென்றால், கருணா என்கிற கூலிக்குக் கொலை செய்யும் வேட்டை நாயைக் கொண்டு மகிந்த தனது நீண்ட நாள் எதிரியைக் கொன்று போட்டிருக்கிறான். அவ்வளவுதான் !

... இன்னொரு சிங்கள இனவாதப் பத்திரிகையான (இப்படி எழுதுவதால் பலர் என்னோடு சண்டைக்கு வரக்கூடும், உண்மையில் லசந்த எதிர்த்து வந்ததெல்லாம் மகிந்தவின் அரசியலையே அன்றி அவன் செய்துவரும் தமிழினப் படுகொலையை அல்ல.

"What is more, a military occupation of the country's north and east will require the Tamil people of those regions to live eternally as second-class citizens, deprived of all self respect. Do not imagine that you can placate them by showering "development" and "reconstruction" on them in the post-war era. The wounds of war will scar them forever, and you will also have an even more bitter and hateful Diaspora to contend with. A problem amenable to a political solution will thus become a festering wound that will yield strife for all eternity.:

Final Editorial From Lasantha

Link:

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=27986

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்க்ள் கருத்துக்கு நிழலி,

நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் லசந்தவின் வாக்கியங்கள் போரை தமிழ்ர்க்கெதிரானதாகக் காட்டியிருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அதே பத்திரிகையில் எழுதும் ஏனைய பத்தியாளர்கள் சாதாரண சிங்கள இனவாதப் பத்திரிகைச் செய்தியாளர்களிடமிருந்து எவ்விதத்திலும் வேறுபட்டவர்கள் இல்லையென்பதை நான் கண்டிருக்கிறேன். முக்கியமாக ராணுவ ஆய்வு பத்திகளில் இதை அவதானித்திருக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.