Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Catch Me If You can: பிரபாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்கூவரில் இருந்து ரிஸி தன்னை கேட்பது போலுள்ளது. :)

இவர்களுக்கு.... இப்போ.... இப்படி.... தலையங்கங்கள்.... தேவையா... !? :lol:<_<:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரிசி நிறையத் திரைப்படம் பார்ப்பார்போல... :)

PJ118.jpg

இப்பத்திரிகையை அனைத்து தமிழரும் புறக்கணிக்க வோண்டும்....

தலைவரை இது போன்ற "கார்டுன்" அளவில் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

இவரும் சிங்களத்தின் எடுபடியா?

இல்லை இது போண்றவற்ரை எமது மக்கள் விரும்பி பார்பார்கள் என்று பகல் கனவு காணுறாறோ?

இல்லை இப்படித் தான் காலம் காலமாக ****

****

Is Rishi tryiing to make a joke of out of a Libertaion Struggle ? Nobody should buy these type of papers or encourage these type of writers.

‘பரபரப்பு’ என்ற பத்திரிகை பற்றி எழுதவேண்டும் என நான் பலமுறை நினைத்ததுண்டு. ஆனாலும் ஒரு புலம்பெயர்ந்த தமிழனின் முயற்சியை கேவலமாக்கக்கூடாது என்ற எண்ணத்தில் இதுவரை எங்கும் எழுதவில்லை.

ஆனாலும் எழுதவேண்டியதேவை இப்பொழுது எழுந்துள்ளது.

‘பரபரப்பு’ பத்திரிகை ஆரம்பித்தபோது ஒரு புதுமாதிரியான பெயரை அதாவது ‘ஒரு பேப்பர்’ ‘அரைப்பேப்பர்’ போல என்றுதான் நினைத்தேன். ஒவ்வொரு இதழையும் தேடி வாங்கி வாசித்தேன். ஆனால் காலக்கிரமத்தில் அது ‘வெறும் பரபரப்பாக’ மட்டுமேயிருந்தது தெளிவாகியது.

விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்தபோது.... உலகத் தமிழினமே கண்ணீர் சொரிந்தவேளை.... ‘தாக்குதலுக்கு முந்திய கடைசி நிமிடங்கள்...’ என்ற தலைப்புடன் பரபரப்பு (இதழ் 141) விற்பனையானது. தமிழ்ச்செல்வனடன் கடைசி நிமிடங்களில் இருந்த எவருமே பின்னர் உயிருடன் இல்லை. அப்படியாயின் பரபரப்புக்கு எப்படி இந்தச் செய்திகள் கிடைத்தன? (அது வெறும் கப்ஸா)

உலகத் தமிழினமே கண்ணீரில் மிதந்தவேளை.... அந்தக் கண்ணீரையே விற்று பணம்பண்ண நினைக்கும் ‘பரபரப்பு’ ஒரு ‘வெறும் பரபரப்பு’த்தான்.

‘பரபரப்பு’ பற்றி எழதத்தொடங்கினால் மிக நீண்டதாக எழுதலாம். (விரைவில் எழுதுவேன்) ஆனால் ஒன்று நிச்சயம் இவர்கள் எல்லாம் தமிழ் தேசியத்தை, தமிழின உணர்வை, ஏன் தங்களது தாயைக்கூட காசுக்காக விற்கத் தயங்காத ஈனப்பிறவிகள்.

‘ஆட்டைக் கடித்து, மாட்டைகடித்து,... கடைசியில் மனிதனைக் கடித்தது...’ என்பதுபோல இந்தச்சேட்டை.

எங்களின் தலைவரைப் பிடிக்கமுடியாது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று ஆனால் அவர் எப்பொழுதாவது இப்படி சினிமாத்தனமாக சவால்விட்டவரா? ஏனய்யா இந்த வீண் பரபரப்பு?

இதைவைத்து ஒரு பிழைப்பு! ஒரு யாவாரம்!!

இவர்களையும் இவர்களது எழுத்துக்களையும் புறக்கணிப்பது எமது கடமை!

தமிழ்நாதம் போன்ற நல்ல இணையங்களும் இவர்களது விளம்பரங்களைத் தவிர்ப்பது நல்லது என்பது எனது பணிவான வேண்டுதல்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிரி எதிர்பார்க்கும் பல உளவு தகவல்களை பரபரப்பு சர்வசாதாரணமாக வெளியிட்டதை பல முறை பார்த்துள்ளேன். தனது பத்திரிகை விற்பனைக்காக இப்படி பரபரப்பாக செய்திகளை வெளியிட்டு தனது வயிற்றை நிரப்ப நினைப்பவர்களும் எமது இனத்துக்கு துரோகம் செய்பவர்களாக தான் என்னால் பார்க்க முடிகிறது.

தமிழ் கடை ஒண்டிலை பரபரப்பை படிச்சு கொண்டு நிண்ற கடை உரிமையாளரை பாத்திட்டு நான் நக்கலா அவரை கேட்டன்... அண்ணை நீங்கள் இப்பவுமா உந்த சாத்திரங்களை நம்புறீயள் எண்டு...

அதுக்கு அவர் சொன்னார்... பரபரப்பிலை எழுதி போட்டாங்கள் முல்லை தீவை கட்டுக்குள் வச்சு இருக்கிறது கஸ்ரம் எண்டு... அப்படி விட்டு போட்டுபோனால் இன்னும் கஸ்ரமாம்... எனக்கு இப்ப நல்ல நம்பிக்கை வந்திட்டுது எங்கட போராட்டம் இனிமேல் உருப்பட்டும் எண்டு எனக்கு கவுண்டர் நக்கல் போட்டார்....

நான் ஒண்டும் பேசாமல் வந்திட்டன்... :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாதம் போன்றவற்றறில் வருகின்ற விளம்பரங்கள் தான் அவற்றைப் பறகக்கணிக்காமல் இருக்க வைக்கின்றன என நினைக்கின்றேன். முன்பு ரிசி தமிழ்நாதத்திற்காக வன்கூவரில் இருந்து ஒலிப்பதிவுகளைத் தந்த நட்புறவு தான் தொடர்ந்து பரபரப்பு விளம்பரங்கள் வரக் காரணமோ தெரியவில்லை.

சமீபத்தில் பூநகரி போனால் தமிழீழப் போராட்டம் தோற்றுவிட்டது என்ற மாதிரி எழுதியிருந்தனர். அவ்வாறே முன்பு நடந்த சம்பவங்கள் பற்றிய ஒரு கட்டுரையில், புலிகளைப் பற்றி சில அவதூறான எண்ணங்களை ஊக்குவிக்கும் வண்ணம் சில விடயங்கள் அமைந்திருந்தன.

தமிழ் மண்ணை வியாபாரத்துக்காக அசிங்கப்படுத்தினால், பரபரப்பையும் எங்காவது பொது இடங்களில் தீ பற்ற வைப்பதைத் தான் காணப் போகின்றார்கள். :-)

  • தொடங்கியவர்
‘பரபரப்பு’ பற்றி எழதத்தொடங்கினால் மிக நீண்டதாக எழுதலாம். (விரைவில் எழுதுவேன்) ஆனால் ஒன்று நிச்சயம் இவர்கள் எல்லாம் தமிழ் தேசியத்தை, தமிழின உணர்வை, ஏன் தங்களது தாயைக்கூட காசுக்காக விற்கத் தயங்காத ஈனப்பிறவிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.