Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாய் தானும் எந்த நேரமும் கைது செய்ய படலாம் என்று பதறிப்போன தவராசா(இவர்தான் இன்று ஈ.பி.டி.பி.அமைப்பின் முக்கிய உறுப்பினர் தவராசா) காவல்துறையிடம் ஓடொடி சென்று தனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை தனக்கு நகைகள் இருக்கிற இடம் தெரியும் காட்டித்தரலாம் ஆனால் அதற்கு மாற்றீடாக சகோதரனை விடுதலை செய்வதோடு தன்னையும் கைது செய்ய வேண்டாம் எனகேட்டு கொண்டு நகைகள் இருந்த இடத்தையும் யாரால் எப்படி எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்றும் விலாவாரியாக சொல்லி காட்டிகொடுத்து விட்டார்.

நாகரீகமாக சொல்வதானால் அரசுதரப்பு சாட்சியாக மாறிவிட்டார்...................

அப்பவிருந்தே உவருக்கு காட்டிக்கொடுக்கிற தொழிலோ

  • Replies 468
  • Views 73.4k
  • Created
  • Last Reply

ரஐனி திரணகம அவர்களின் முறிந்த ப படித்தேன். ஆனால் அதற்கு பிறகு நடந்தவற்றை உங்கள் கட்டுரை மூலம் தெளிவுபடுத்துகின்றீர்கள். நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈ.பி.ஆர்.எல்.எவ் காரை நகர் முகாமைத்தகர்க்கப்போகிறார்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம் பகம் 9

காத்தடிக்கிது கலகலக்கிது காரை நகரை ஈபி அடித்த கதையை இந்த வாரம் பாக்கலாம். எண்பதுகளில் முக்கியமான 5 பெரிய இயக்கங்களில் ஈபிஆர்எர்எவ் வும் ஒன்று என்று முதலில் கூறியிருந்தேன் அதில் அதிகமான உறுப்பினர்கள் தொகையை கொண்டது புளொட் அமைப்பாகும் ஆனால் அந்த அமைப்பின் தலைம அளவு கணக்கில்லாமல் ஆட்களை அள்ளியெடுத்து பயிற்சி கொடுத்து விட்டு பின்னர் அவர்களிற்கு வேண்டிய ஆயுதங்கள் இல்லாமலும் ஏன் அவர்களிற்கு உணவே கொடுத்து பராமரிக்க முடியாமலும் திண்டாடிக் கொண்டிருந்தது

எனவே அவர்கள் இலங்கை அரசிற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தவார்கள் என்று எதிர் பார்த்து கொண்டிருக்க அவர்கள் தங்களிற்குள் தாங்களே தாக்குதல்களை நடத்தி கொண்டிருந்தார்கள். அடுத்தாக ரெலோவும் சில தாக்குதல்களை செய்திருந்தது ஈரோஸ் இயக்கம் வடகிழக்கிற்கு வெளியெ சில குண்டு தாக்குதல்களை நடத்தியிருந்தது. புலிகள் தொர்ச்சியாகவே வழைமை போல அவர்களில் தாக்குதல்கள் ஏதோ வடிவத்தில் இலங்கை அரசிற்கெதிராக நடந்து கொண்டுதான் இருந்தது.

ஆனால் ஈ பி மட்டும் கணிசமான உறுப்பினர் தொகை மற்றும் ஆயுதங்கள் என்று இருந்தும் எவ்வித தாக்குதலும் அதன் தொடக்க காலத்திலிருந்த செய்திருக்கவில்லை அது அப்படியே தொடர்ந்தால் கடைசியில் அதன் உறுப்பினர்களிடமே ஒரு வெறுப்பு தன்நம்பிக்கை வளர தொடங்கி விடும் அபாயம் இருந்தது.அதனால் அது பொதுமக்களிடமும் தங்கள் உறுப்பினர்களிடமும் ஒரு நம்பிக்கையையும் ஒரு உற்சாகத்தையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அதன் இயக்க தலைமை ஒரு தாக்குதலுக்கான திட்டத்தை போட்டது. அதுதான் காரை நகர் கடற்படை தளத்தை தாக்கும் திட்டம். 1985 ம் ஆண்டு மாசி மாதம் 10 ந்திகதி தாக்குவதாக அதற்கு நாளும் குறிக்கபட்டது.

அந்த செய்தி ஈபி யின் இராணுவபிரிவான பி எல் ஏ உறுப்பினர்களிற்கு தெரிவிக்கபட்டதும் அந்த செய்தி ஈபியின் முக்கிய ஆதரவாளர்கள் என்று பரவி அந்த தாக்குதல் நடப்பதற்கு சில நாட்களிற்கு முன்பே வீதியில் சாதாரணமாக சந்தித்து கொள்ளும் இருவர் "என்ன ஈபி காரைநகர் அடிக்க போகுதாமே "என்று கதைக்கின்ற அளவிற்கு யாழ் குடா எங்கும் அந்த செய்தி பரவி விட்டிருந்தது.

அப்படியானால் எங்கு என்ன செய்தி கிடைக்கும் என்று தன்னுடைய புலனாய்வு வலையை விரித்து வைத்திருக்கும் எதிரிக்கு செய்தி எப்படி போயிருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஈபி அமைப்பினரிற்கு யாழ் குடாவில் மானிப்பாய் மற்றும் அதனை அண்டிய கிராமங்களான நவாலி சங்கு வேலிப்பகுதிகளிலேயே இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சிறு முகாம்களும் மூன்று பெரிய பயிற்சி முகாம்களும் அமைந்திருந்தது எனவே இந்த தாக்குதலுக்கான தயாரிப்பு வேலைகளும் அதிகமாக இந்த பகுதிகளிலேயெ நடந்தது.மானிப்பாயில் உள்ள வாசிகசாலையின் பொறுப்பாளராக ஈபி அமைப்பின் அரசியல் பிரிவில் இருந்த அலெக்ஸ் என்பவர் இருந்ததனால் மானிப்பாய் வாசிக சாலையும் ஈபி அமைப்பின் அதிகாரபூர்வமற்ற ஒரு அரசியல் அலுவலகமாகத்தான் இயங்கி வந்தது.

எப்பொழுதும் ஈபி அமைப்பின் அரசியல் உறுப்பினர்கள் அங்கு காணப்படுவார்கள் அந்த அமைப்பின் சுவரொட்டிகள் துண்டு பிரசுரங்கள் என்பனவும் அங்குவைத்துதான் அதிகமாக எழுதப்படும். நான் செய்திபத்திரிகை புத்தகங்கள் படிக்க அங்குதான் போவது வழைமை அதனால் எனக்கும் பல ஈபி அரசியல் பிரிவினர் பழக்கமானார்கள்.காரை நகர் தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாள்களிற்கு முன்பே அந்தவாசிகசாலையில் ஈபி உறுப்பினர்கள் பரபரப்பாக சுவரொட்டிகள் தயாரிக்க தொடங்கிவிட்டிருந்தனர்.காரை

கந்தப்பு! ஈரோஸை "து}ரத்து இடிமுழக்கம்" என்று சொன்னதாகத்தான் எனக்கு ஞாபகம்.

எனவே அதுவரை ஒரு கண்ணிவெடித்தாக்குதலை கூட செய்து அனுபவமில்லாத இயக்கம் எடுத்த எடுப்பிலேயெ ஒரு தளத்தின் மீதான தாக்குதலை நடாத்த திட்டமிட்டதுதான் தவறு

மிகவும் பயனுள்ள தகவல்கள் - இவர்கள் எந்த அளவில் இருந்தார்கள் என்பதை அறிய மட்டுமில்லை - இவர்கள் - தேவையான காலங்களில எப்பிடி பிரயோசனமில்லாமல் - இருந்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியதில்!

தொடருங்கள் -நன்றி - சாத்திரி! 8)

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு! ஈரோஸை "து}ரத்து இடிமுழக்கம்" என்று சொன்னதாகத்தான் எனக்கு ஞாபகம்.

வட கிழக்கு வெளியே தாக்குதல்கள் மேற்கொண்டதினால் ஈரோஸினை 'துரத்து இடி முழக்கம்' என்றும், வடகிழக்கில் தாக்குதல்கள் ஒன்றையும் மேற்கொள்ளாது அமைதியாக இருந்தமையினால்' மெளன கீதங்கள்' என்றும் நகைச்சுவையாக மக்கள் அழைத்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் வசிக்கும் ஒருவர் சொன்ன தகவல். கரைனகர் கடற்படை முகாமை ஈ.பி.ஆர்.எல்.எவ் தாக்குதல் மேற்கொல்லப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டு விடுப்புப்பார்க்க சிட்னியில் வசிப்பவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் முகாம்களுக்கு சென்றிருந்தார். தாக்குதல்களுக்கு தயார் படுத்தியபின்பு, ஈ.பி.ஆர்.எல்.எவ் போராளிகளோடு டக்ளசும் தொலைக்காட்சியில் 'காக்கிச் சட்டை' படத்தினை விழுந்து விழுந்து ரசித்துப்பார்த்துக்கொண்டிர

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்டத்தில் எனது(பொய்) சாட்சியம் புஸ்பராசாவின் புத்தகம் பற்றிய பார்வை பாகம்.10

கடந்த பதிப்பில் ஈ பி ஆர் எல் எவ் வினரின் கரைநகர் கடற்படை தளத் தாக்குதல் பற்றிய விபரத்தை எழுதியிருந்தேரன் அதனை படித்த பலரும் அந்த கட்டுரையில் என் சோபா வை பற்றி ஒரு வசனம் கூட எழுதவில்லை என்று மின்னஞ்சலிலும் மற்றும் தொலை பேசியிலும் கேட்டு வாட்டி எடுத்து விட்டார்கள். காரணம் ஈபி இயக்கம் என்றால் காரை நகர் கடற் தளம் நினைவில் வருவது போல காரைநகர் கடற் தளம் என்றாலே சோபா நிச்சயம் எம்மவர்களிற்கு நிச்சயம் நினைவில் வருவார்.ஈழத்தில் நடந்த அகிம்சை போராட்டங்களாயினும் சரி ஆயுதபோராட்டங்களாயினும் சரி அதில் தமிழீழ பெண்களின் பங்கு எப்பொழுதுமே முக்கியமானதாக இருந்திருக்கின்றது.

அந்த வகையில் ஈழத்தில் ஒரு முகாம் தாக்குதலிற்கு சென்று அதில் இறந்து போன முதல் தமிழ் பெண் என்பதால் சோபாவின் பெயர் அனைவர் நினைவிலும் நிலைத்து நிற்கின்றது.இந்த முகாம் தாக்குதலில் ஈ பி யினரின் சொந்த தயாரிப்பான (மோட்டர்) குறுந்தூர எறிகணையை இயக்குகின்ற குழுவில் சோபாவும் இருந்தார் . எறிகணையை (செல்) எறிகணை செலுத்தி குளாயினுள் இறக்கி விட்டு பின்னர் அதன் திரியை பற்றவைக்கவேண்டும்.அப்படி செய்த போது எறிகணை வெளியேறாமல் குளாயின் உள்ளேயே வெடித்ததால் அதனருகில் இருந்த பலருடன் சோபாவும் இறந்து போனார்.இவர் 15 வயதிலேயே ஈபிஆர்எல்எவ் இயக்கத்தில் இணைந்து 17 வயதில் இறந்து போனார்.

புஸ்பராசா அவர்கள் எழுதிய புத்தகத்தை சமர்ப்பணம் செய்தவர்களில் சோபாவும் ஒருவர். சரி இனி ஈழபிரச்சனையில் இந்திய தலையீடுகள் எங்கே ஏன் எப்படி ஆரம்பித்தது என்று அனேகமாக பலரும் அறிந்தது தான் எனவே அவற்றை நான் விரிவாக விபரிக்க தேவையில்லை ஆனாலும் அவற்றை சுருக்கமாக ஒரு பார்வை பார்த்து கொண்டு செல்வோம்.இலங்கை சுதந்திரடைந்த காலத்திலிருந்தே இன்று வரை இலங்கையரசானது இந்திய அரசை அவ்வப்போது தனது தேவைகளிற்குமட்டும் பாவித்து கொண்டதே தவிர எந்த காலத்திலும் இந்திய அரசுடன் மனந்திறந்த நட்புபேணியது கிடையாது. வங்காள தேசத்திறகான இந்தியா பாக்கிஸ்தான் யுத்தத்தின் போது பாகிஸ்தான் விமானங்களிற்கு சிறீமா அரசு இரத்மலானையில் எரி பொருள் நிரப்பிய அதே நேரம் பின்னர் ஜே வி பி கிளர்ச்சியை அடக்க இந்திய இராணுவத்தை நாடியது என்று பல உதாரணங்களை சொல்லிகொண்டே போகலாம்.

இப்படி இலங்கையரசு தனது அவசர தேவைகளிற்கு மட்டும் இந்தியாவை பாவித்து கொண்டு அதன் நட்பு எல்லாம் அமெரிக்க இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடகளுடன்தான் இருந்து வந்தது.வந்துகொண்டிருக்கின்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழ போராட்டத்தில்.....பாகம் 11

ஈழபோராட்டத்தில் இறங்கிய போராட்ட இயக்கங்கள் இந்தியா தவிர்ந்த வேறு பிற நாடுகளிலும் பயிற்சிகள் எடுத்திருந்தன என்று கடந்த பகுதியில் பார்த்திருந்தோம். அதில் முக்கியமாக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் இராணுவ அமைப்பான பி எல் ஓ விடமும் நிக்கரகுவா வின் விடுதலைஇயக்கங்களிடமும் பயிற்சிகளையும் எடுத்திருந்தனர். இதில் ஈரோஸ்.புளொட்.ஈபிஆர்எல்எவ். ஆகிய இயக்கங்களே அடங்கும் .அதைவிட இலங்கை அரசிற்கு ஆயுத உதவி மற்றும் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சிகள் வழங்கிய இஸ்ரவேலின் உளவு அமைப்பான மொசாட் இலங்கை இராணுவத்திற்கு மட்டுமல்ல தமிழ் இயக்கமான புளொட் அமைப்பிற்கும் பயிற்சிகளை வழங்கியது. காரணம் இஸ்வேலின் இலங்கையுடனான நட்பு முழுக்க முழுக்க இராணுவ நலன் சார்ந்ததாகவே அன்றிலிருந்து இன்றுவரை இருந்து வருகிறது.

இலங்கையில் பிரச்சனை இருக்கும் வரைதான் தாங்கள் தங்களது இராணுவ தளபாடங்களை இலங்கைக்கு விற்பனை செய்வது மட்டுமல்ல அவற்றை பரீட்சிக்கும் ஒரு பரீட்சை களமாகவும் இலங்கையை அது வைத்திருந்தது அதே போல தென்கிழக்காசியாவிலேயே இஸ்ரவெலிடம் இருந்து இலங்கை அரசே அதிகளவு ஆயுததளவாடங்களை வாங்கிய நாடும் ஆகும்.எனவே தான் மொசாட் அமைப்பு தமிழ் இயக்கங்களிற்கும் பயிற்சிகளை வழங்கியது இதன் விபரங்களை மொசாட்டின் ஒய்வுபெற்ற அதிகாரி ஒருவர் தன்னுடைய புத்தகம் ஒன்றில் எழுதியிமிருந்தார். புளொட் அமைப்பில் பாலஸ்தீன பி்.எல்.ஓ விடம் பயிற்சி பெற்றதாக கூறிக்கொண்ட பலர் உண்மையிலேயெ மொசாட்டிடம்தான் பயிற்சி எடுத்திருந்தனர்.

பயிற்சி எடுத்தவர்களிற்கு தாங்கள் உண்மையில் யாரிடம் பயிற்சி எடுக்கிறோம் என்று உண்மையில் தெரிந்திருந்திருந்ததா? என்பது தெரியவில்லை.ரெலோவிற்கு இந்திய இராணுவமே பயிற்சிகளை தொடர்ந்தது. புலிகள் அமைப்பு பின்னர் தமிழ் நாட்டிலும் தமிழீழத்தின் பகுதிகளிலும் பயிற்சி பாசறைகளை நிறுவி தாங்களே பயிற்சிகளை வழங்க தொடங்கினார்கள் வேறு எந்த வெளிநாட்டிடமும் பயிற்சி உதவி என்று போகவில்லை. காரணம் இங்கு ஒரு சம்பவத்தை நினைவு படுத்த விரும்புகிறேன் 80 களில் ஆயுதபோராட்டம் முனைப்பு பெற்றவேளையில் அனேகமான எல்லா இயக்கங்களும் பாடசாலைகளிற்கு வந்து அங்கு மாணவர்கள் மத்தியில் போராட்டம் பற்றிய அவசியத்தையும் விழிப்புணர்வையும் ஊட்டுவதற்காக மாணவர்களை அழைத்து வகுப்புகள் வைப்பார்கள்.அப்படியே தங்கள்: அமைப்பில் இணைய விரும்புபவர்களையும் இணைத்து கொள்வார்கள்.

அப்படி ஒரு நாள் நான் படித்த கல்லூரியில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினர் ஒரு வகுப்பை வைத்தனர் நானும் போயிந்தேன் அதில் அவர்கள் கியுபா விடுதலை போராட்டம்பற்றி அழகாக விழங்கபடுத்தி அதை போல நாமும் போராடவேண்டும் என்று கூறி கியூபா விடுதலை போராட்டம்பற்றி தமிழில் சிறிய ஒரு புத்தகம் ஒன்றையும் அனைவரிற்கும் தந்துவிட்டு போனார்கள். அடுத்ததாக புலிகள் அமைப்பின் சார்பில் திலீபன் ஒரு வகுப்பை வைத்தார்.அதில் முன்னர் ஈ.பி யினரின் வகுப்பில் கலந்து கொண்ட அனைவருமே திலீபன் நடாத்திய வகுப்பிற்கும் சென்றிருந்தோம்.அதில் திலீபன் இலங்கையரசின் அடக்குமுறைகள் படுகொலைகள் முக்கியமாக மாணவர்மீதான தரப்டுத்துதல் பற்றிய உள்நோக்கம் என்பனவற்றை விபரித்து விட்டு யாரிற்காவது ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேள்விகேட்கலாம் என்றார். அப்போது ஒரு மாணவன் எழுந்து திலீபனிடம் அண்ணா முதலில் கூட்டம் வைத்த ஈ.பி யினர் கியூபா விடுதலை போராட்டத்தை பற்றி விழங்கபடுத்தி அழகாக உதாரணமும் காட்டி அந்த நாட்டு மக்களை போலவே நாங்களும் போராட வேண்டும் என்று சொல்லி இதோ இந்த புத்தகத்தையும் தந்தார்கள் ஆனால் நீங்கள் எந்தநாட்டு விடுதலை போராட்டத்தையும் உதாரணமாக சொல்லவில்லையே என் உங்களிற்கு தெரியாதா??

என்று கொஞ்சம் நக்கலாகவே கேட்டார்.அதற்கு திலீபன் சிரித்தபடியே சொன்னார் தம்பி உதாரணத்தை நானும் சொல்லலாம் வியட்னாம் கியூபா பாலஸ்தீனம் என்று வேறுநாட்டு போராட்டங்களை பற்றி சொல்வது கொஞ்சம் கவர்ச்சியாகவும் இருக்கும் எனக்கும் இதெல்லாம் தெரியும் என்று காட்டி உங்களிடம் ஒரு மதிப்பை உயர்த்ததான் இவை உதவுமே தவிர உண்மையான எங்கள் போராட்டத்திற்கு இவை பெரிதாய் உதவாது எங்கள் போராட்டத்திற்கான உதாரணங்களை அனுபவங்களை எங்கள் போராட்டத்திலிருந்தேதான் பெறவேண்டும் உதாரணமாய் கியூபா கெரில்லா யுத்தத்திற்கு அந்த நாட்டின் இயற்கை அமைப்பு மலையும் காடுகளும் போராளிகளிற்கு உதவின அதைபடித்துவிட்டு காடுகளோ மலைகளோ இல்லாத எங்கள் யாழ் குடாநாட்டில் எப்படி கெரில்லா யுத்தத்தை முன்னெடுப்பது?? என்றுதலையை போட்டு குழப்பவேண்டாம் எங்கள் குடாநாட்டின் ஒழுங்கை அமைப்புகள் தான் எங்கள் கெரில்லா யுத்தத்தின் காப்பரண்கள் விரும்பினால் அறிவை வளர்த்து கொள்ள மற்றைய விடுதலை போராட்டம்பற்றிய புத்தகங்களையும் படியுங்கள் என்றார்.

இந்திய படையுடனான புலிகளின் யுத்தத்தின் போதும் ஏன் இப்பொழுதும் நினைத்து பார்க்கிறேன் திலீபன் அன்று சொன்னது எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள்.இப்படி வேறுநாடுகளில் பயிற்சிகள் பெற்றும் வேறுநாட்ட போராட்டங்களை பற்றியே பக்கம் பக்கமாக பேசியும் எழுதியுமே மற்றைய இயக்கங்கள் காலத்தை கடத்தி காணாமல் போயும் விட்டன.இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கமும் அதன் செயற்பாடுகளை நியாயபடுத்தும் புஸ்பராசாவும் கூட விதிவிலக்கல.இதில் இந்தியா ஈழபோராட்ட அமைப்புகளிற்கு பயிற்சிகள் வழங்கினாலும் இந்த அமைப்புகள் ஒன்றாய் இணைந்துவிடாதபடி மிக கவனமாக பார்த்து கொண்டார்கள் ஏனெனில் இயக்கங்கள் ஒன்றிணைந்தால் தங்கள் கட்டுபாடுகளை மீறி இவர்கள் ஈழத்தை அமைத்து விடுவார்கள் என்கிற பயத்தினால் இடைக்கிடை அந்த அமைப்புகளிற்கிடையே பிரச்னைகளை உருவாக்குவதிலும் ஏன் அந்த இயக்கங்களின் உள்ளேயே கூட பிரச்சனைகளை உருவாக்கி விட்டுகொண்டும் தான் இருந்தனர்.இந்த விடயத்தில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.இயக்க உட்படுகொலைகளிற்கு றோவினரின் பினனணி இருந்தது என்று புஸ்பராசாவே ஒத்துகொள்கிறார்.

அதே நேரம் இந்த போராட்ட அமைப்புகளிற்கும் தமிழ் நாட்டு தமிழர்களிற்கும் அதிகளவு நெருக்கத்தையும் இந்தியபுலனாய்வு துறை விரும்பவில்லை அதற்குள்ளும் அவ்வப்போது ஏதாவது சதிசெய்துகொண்டேதான் இருந்தனர். ஆனாலும் இந்த விடயத்தில் றோ அதிகாரிகளால் பெரிய வெற்றியை பெறமுடியவில்லையென்றே சொல்லலாம்.தமிழ்நாட்டின் அரசியல் விழையாட்டுக்களை தவிர்த்து பார்த்தால் தமிழ்நாட்டு தமிழரின் ஆதரவும் அக்கறையும் ஈழத்தமிழரிற்கு எப்பொழுதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.தற்பொழுது அது புத்துயிற் பெற்று இன்னும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது இதுவும் சில இந்திய கொள்கை வகுப்பாளர்களிற்கும் சில புலனாய்வு அதிகாரிகளிற்கும் அவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்காது எனவே தமிழ் நாட்டு தமிழர்களின் உணர்வுஎழுச்சியும் ஈழத்தமிழரின் வெற்றியுமே இவர்களின் மனங்களில் மாற்றத்தை கொண்டுவரும்.

இதை விடுத்து இந்திய படை காலத்தை பார்த்தால் ஈழத்தில் இந்திய படைகாலத்தில் கூட இந்திய அரசு தங்கள் ஒட்டுகுழுவாக ஒரு குழுவை வைத்திருக்காமல் அங்கும் பல குழுக்களையே வைத்திருந்தனர் காரணம் ஒரேயொரு குழுவை வைந்திருந்து அது சில நேரம் தங்கள் மக்களை தாங்களே எப்படி துன்புறுத்தி படுகொலைகளை செய்வது என்று மனம் மாறியோ அல்லது வேறு விடயங்களால் இந்திய அதிகாரத்துடன் முரண்பட்டு பிரிந்து போய் விட்டாலோ அது இந்திய அதிகாரத்திற்கு பேரிழப்பாகிவிடும் எனவே தான் ஒன்று கைவிட்டு போனாலும் இன்னொன்று தங்கள் தாளத்திற்கு ஆடும் என்பதால் பல குழுக்களை இயக்கி அதில் எந்தகுழு தங்களிற்கு அதிக விசுவாசமாய் இருக்கிறதோ அதன் விசுவாசத்திற்கேற்ப அதற்கு சலுகைகளை வழங்கினர். அப்படி அதிகவிசுவாசம் காட்டியகுழுதான் புஸ்பராசா சார்ந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கமாகும். அவர்களின் கீழ் ஒரு தமிழ் தேசிய இராணுவம் என்று ஒரு படையணியை உருவாக்கி ஒரு கண்துடைப்பு வாக்கெடுப்பையும் நடாத்தி வடக்குகிழக்கு மகாணத்தை கடதாசியில் சில கையெழுத்துகளால் இணைத்து தங்கள் நூலில் ஆடும் வரதராஜபெருமாளை முதலமைச்சரும் ஆக்கினார்கள்.

இன்று இந்திய அரசால் உருவாக்கபட்டஅந்த வடக்கு கிழக்கு கடதாசி இணைப்பைகூட தமிழருடன் செய்து கொள்ளும் எல்லா ஒப்பந்தங்களையும் கிழித்தே பழக்கபட்ட சிங்கள இனவாதம் அதையும் கிழித்து குப்பையில் போட்டுவிட்டு கூத்தாடுகிறது. அதைபார்த்து மண்டையை சொறிந்தபடியே மகிந்தராஜபக்சவிற்கு செங்கம்பள வரவேற்பு குடுத்து மகிழ்கிறது இந்திய மத்தியஅரசு.இந்த இந்திய இராணுவத்தால் உருவாக்கபட்ட தமிழ் தேசிய இராணுத்தின் பின்னால் தமிழ் மக்களின் சொல்லமுடியாத வேதனைகள் இழப்புக்கள் அழுகைகள் அவலங்கள் என்று ஏராளம் ஏராளம்.அடுத்த பாகத்தில் அவற்றையும் பார்த்து கொண்டு இந்த தொடரை முடிவிற்கு கொண்டுவரலாம் என எண்ணியுள்ளேன்.

என்னய்யா முடிக்கிற கதையெல்லாம் சொல்லுரீங்கள். இந்திய ராணுவக்காலம் பற்றி நிறைய எழுதுங்கோ...!

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சாத்திரி, அவசரப்பட்டு இத்தொடரை முடிக்கிறியள்?. இத்தொடரை முடித்தாலும் வேறு ஒரு தொடரிலாவது ஈழப்போராட்ட வரலாற்றினை முமுமையாகத் தாருங்கள்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவத்தின் உதவியுடன் உருவாக்க பட்ட தமிழ் தேசிய இராணுவத்திற்காக வீதிகளில் திரிந்த கண்ணிற்கு தெரிந்தவர்கள் மட்டுமென்றில்லை வீடு வீடாகவும் புகுந்து இளைஞர்கள் அனைவரும் வலுகட்டாயமாக பிடித்து இழுத்த கொண்டு செல்லபட்டு கட்டாய பயிற்சிகள் வழங்கபட்டனர் மறுத்தவர்களிற்கு கட்டிவைத்து கடுமையான தண்டனைகள் மட்டுமல்ல சுட்டும் கொல்லபட்டனர்.பாடசாலை வசல்களில் நின்றே பாடசாலை முடிந்ததும் அப்படியே பாடசாலை சீருடைகளுடனேயே மாணவர்களை அள்ளிசென்றனர். வெளியே போன பிள்ளைகள் வீடுவரவில்லெயென்று தேடியபடி இந்திய இராணுவ முகாம்களிலும் இந்த ஈ.பி யின் முகாம் வாசல்களிலும் கண்ணீருடன் காத்து நின்றபெற்றோர்களும் மிரட்டி விரட்டபட்டனர்.தங்கள் பிள்ளைகளை பாது காக்க அந்த காலகட்டங்களில் பெற்றோர்கள் பட்ட தயரங்களை இந்த கட்டுரையில் எழுத்தகளால் என்னால் விழக்கிவிட முடியாது.அது மட்டுமல்ல எந்த வீட்டிலாவது வயதிற்கு வந்த இளம் பெண்களை வைத்திருந்தவர்கள் பாடு இதைவிட மேசமானது அந்த பெண்களை தங்களை திருமணம் செய்ய சொல்லி மிரட்டுவார்கள் மறுத்தால் மறுநாள் அவள் கடத்தபடுவாள் எங்காவது அவர்கள் தங்கள் மிருகதனத்தை தீர்த்துவிட்டு மிச்சமாய் அவளது உயிரற்ற உடலமட்டும் மிஞ்சும்.

புலிகளிற்கு உதவியவர்கள் என்று சொல்லி தங்கள் சொந்த பகையாளிகளையெல்லாம் சுட்டு தள்ளினார்கள் புலிக்கு தேனீர் கொடுத்தவன் சாப்பாடு கொடுத்தவன் அந்த குடும்பத்தில் யாராவது புலிகள் இயக்கத்தில் இருந்தால் அவனது குடும்பம் என்று தேடி தேடி மனிதவேட்டையாடினர். எனது ஊரான மானிப்பாயில் மண்டையன் குழு என்று ஒரு ஈ.பி கும்பல் முகாம் இருந்தது இதற்கு பொறுப்பாய் இருந்தவன் தான் பின்னர் மட்டகளப்பில் கொல்லபட்ட ராசிக் என்பவன். இந்த குழுவிற்கு மண்டையன் குழு என்று சிறப்பு பெயர் வந்ததற்கான காரணம் என்னவெனில் இவர்கள் யாரையாவது கைது செய்தால் சுட்டு கொல்ல மாட்டார்கள் அந்த நபரின் தலையை மட்டும் வெட்டி முண்டத்தை எங்காவது போட்டுவிட்டு தலையை மற்றவர்கள் பார்வைக்கு படும்படியாக சந்திகளில் மதில்களில் வைத்துவிட்டு போவார்கள்.

இந்த இயக்கத்தைதான் புஸ்பராசா அவர்கள் ஈழவிடுதலை இயக்கங்களிலேயே மிகவும் மனிதாபிமானம் நிறைந்த ஒரேயொரு இயக்கம் என்று புகளாரம் பாடியிருக்கிறார். இப்படியான இவர்களின் கொடுமைகளில் கொலைகளில் சித்திரவதைகளில் இருந்து தப்பிக்க இளவயது ஆண்களும் பெண்களுமாய் இரகசியமாய் புலிகள் இருந்த காட்டுபகுதிகளிற்கு சென்று அவர்களுடன் இணைந்து கொள்ள தொடங்கினர். இந்திய அதிகாரிகள் போட்டகணக்கு பிழைக்க தொடங்கியது.இந்த காலகட்டத்தில் தான் பிரான்சில் வசித்த புஸ்பராசா இந்திய அதிகாரிகளின் விசேட அழைப்பின் பெயரில் பிரான்சில் ஈ.பி அமைப்பிற்கு வேலை செய்த உமாகாந்தனையும் அழைத்து கொண்டு இலங்கை சென்றார்.

அங்கு இந்திய இராணுவ உலங்குவானூர்திகளிலும் வடக்கு கிழக்கு எங்கும் 50க்கும் மேற்பட்ட தேசிய விடுதலை இராணுவத்தினரின் ஆயுத பாதுகாப்பு வழங்க மேலதிகமாக முன்னும் பின்னும் இந்திய இராணுவத்தின் இராணுவ வாகன தொடரணிகளின் பாதகாப்புடன் வலம்வந்து யாழ் அசோகா விடுதியிலும் கொழும்பில் நட்சத்திர விடதிகளிலும் தங்கியிருந்த இவரிற்கு தங்கள் பிள்ளைகளை இழந்தபிள்ளைகிற்காய் கதறிய இருக்கின்ற பிள்ளைகளை காப்பாற்ற துடித்த தாய்தந்தைகளின் அவலங்கள் புரியவில்லையென்று சொல்முடியாது. காரணம் அசோகாவிடுதியில் முன்னால் இருந்த முகாமில் சித்திரைவதைபட்ட இளைஞர்களின் கதறல்கள் தன்னை கலவரபடுத்தியதென்றும் அவர்களை பார்க்க தினமும் அந்த முகாமின் முன்னால் வந்து அழுதபடிநின்ற பிள்ளைகளின் பெத்தவர்களை பார்க்க கவலையாய் இருந்ததென்றும் ஒரு ஒப்பிற்கு சப்பில்லாமல் ஒரு வசனத்தை எழுதி அவற்றிற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போல தப்பிக்க நினைக்திருக்கிறார்.

உற்ற நண்பர்களான பத்மநாபாவிடமோ வரதராஜபெருமாளிடமோ ஏன் உறுதுணையாக நின்ற இந்திய இராணுவ அதிகாரிகளிடமோ கூறி இவற்றை ஏன் அவரால் தடுக்கமுடியாமல் போனது . வேண்டாம் அதற்கான முயற்சிகளையாவது செய்தாரா?? என்றால் இல்லையென்பதே பதில்.இருக்கும்வரை பணம் பதவி சுகம் என்று அனுபவித்துவிட்டு இறுதியில் மரண படுக்கையில் இவைகளிற்காக இவர் வருந்துகிறேன் என்று இவர் கவலை தெரிவித்ததால் என்ன பயன்??. இந்த தொடரை எழுத தொடங்கும் போதே பலர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டனர் அது இறந்து போன ஒரு மனிதனை பற்றி எழுதுவது அவ்வளவு நாகரீகம் அல்ல என்றனர். இருக்கலாம் ஆனால் இந்த தொடரை தொடர்ந்து படித்தவர்வர்களிற்கு புரிந்திருக்கும் இது அந்த இறந்து போன மனிதனின் சொந்த வாழ்க்கையை பற்றிய விமர்சனமோ அல்லது விசமகருத்துகளையோ நான் இங்கு எழுதியிருக்கவில்லை பொதுவாழ்வு என்றும் தன்னினத்திற்கான விடுதலை போராட்டம் புறப்பட்டு தான் தடுமாறியது மட்டுமன்றி தன்னுடன் சேர்ந்தவர்களையும் தடுமாறவைத்து தன்னினத்தையும் தத்தளிக்கவைத்தவரின் தன்னிலைவிளக்க புத்தகம் எல்லாம் எம்மினத்தின் வரலாற்று புத்தகமாக ஆகிவிடாது.

ஈழவிடுதலை போராட்டத்தை ஈடுவைத்து வாழ்ந்தவர்கள் இறந்து போனாலும் மன்னிக்க முடியாதவர்களே. இதை எழுதுகின்ற நானும் படிக்கிற நீங்களும் ஒருநாள் இறந்து போகிறவர்களே எனவே மரணம் ஒன்று மட்டும் எல்லா மனிதனையும் புனிதன் ஆக்கிவிடாது என்று கூறி இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வரகின்ற வேளை இந்த தொடரை எழுத எனக்கு எவ்வித நிபந்தனைகளையோ கட்டுபாடுகளையோ விதிக்காமல் சுதந்திரமாய் எழுதவிட்ட ஒரு பேப்பரின் பொறுப்பாசிரியர் கோபிக்கும். இந்த தொடருக்காக ஈழவிடுதலையின் ஆயுத போராட்டத்தின் ஆரம்பகால தகவல்களை தந்துதவிய தமிழ் மாணவர் பேரவையின் அமைப்பாளரான திரு பொன்.சத்தியசீலன் அவர்களிற்கும்.மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஆரம்பகால போராளிகள்சிலரிற்கும். எனது கட்டுரைகளிற்கு வரும் விமர்சனங்கள் பாராட்டுகள் திட்டுக்கள் என்று எல்லாவற்றையுமே என்னுடன் சரிசமமாய் பகிர்ந்துகொள்ளும் ஒரு பேப்பர்காரன்கள் ஒரு பேப்பர்காரிகள் இந்த கட்டுரையை எழுத தூண்டுதலாய் அமைந்த யாழ்கொம் இணையதளத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக வாசகர்களாகிய உங்கள் அனைவரிற்கும் நன்றிகூறி விடை பெறமுன்னர் ஈழவிடுதலையின் ஆயுத போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் பங்குபற்றிய பலர் இன்று புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள் தாங்கள் விடுதலை போராட்டத்தை ஏதோஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு சில காரணங்களால் இடையில் விட்டு விட்டு வந்துவிட்டோம் என்கிற ஒரு தாழ்வு மனப்பான்மையில் ஒரு தவிப்பில் இருப்பதை அறிய முடிகிறது அவர்கள் அதை விடுத்து தங்கள் அனுபவங்களையும் நிகழ்வுகளையும் உண்மை பதிவுகளாக்க வேண்டும் அதுதான் அவர்கள் அடுத்த எமது சந்ததிக்காக விட்டு செல்லும் வரலாறு ஆகும். அதே போல மாணவர் பேரவை அமைப்பின் அமைப்பாளர் திரு பொன். சத்தியசீலன் அவர்களும் இதேபோன்ற ஒரு முயற்சியில் இருப்பதாக அறிந்தேன் அவரது முயற்சி விரைவில் பதிவாக வெளிவரும் என்கிற ஆவலுடன் எதிர்பார்த்து நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

89ம் ஆண்டில் உந்த பிள்ளை புடி காரர்களுக்கு ஒடி ஓளிந்தவை யாபகத்துக்கு வருகிறது. இப்பவும் ஒட்டுக்குழுவான கருணாகுழுவும் தென் தமிழ் ஈழத்தில் இளைஞ்சர்களினைக் கட்டாயமாகப் பிடிக்கிற கொடுமையும், அப்பாவித்தமிழர்களை ஈபிடிபி, கருணா அணியினர் கொன்று குவிக்கும் செயல்கள் தொடர்கின்றன. அரசாங்கத்தின் எச்சில் உணவுக்காக சொந்த இனத்தினைக்காட்டிக் கொடுக்கும், ஆதரிக்கும் இந்த ஈனப்பிறவிகள் இறந்தாலும் மன்னிக்க முடியாதவர்கள்.

சாத்திரி அவர்களே, உங்களுக்குத் தெரிந்த ,அல்லது கேட்டு அறிந்த ஈழவிடுதலைப் போராட்ட விடயங்களினை தொடர்ந்து ஒரு பேப்பரிலும், யாழிலும் தாருங்கள். உங்களின் ஆக்கங்கள் ஒரு புத்தகமாக வெளியிடப்பட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய இந்த தொடர் முடிவுக்கு வந்தாலும் எங்கள்் ஆயுத போராட்்டம் பற்றிய பதிவுகள் முடிந்்தவரை வேறு வடிங்களில் தொடரும். என்்பதை தெரிவித்து கொளள்கிறேன் :huh:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி சார் உங்கட புதிய பதிவுகளை எதிர்பார்க்கிறம்

என்னுடைய இந்த தொடர் முடிவுக்கு வந்தாலும் எங்கள்் ஆயுத போராட்்டம் பற்றிய பதிவுகள் முடிந்்தவரை வேறு வடிங்களில் தொடரும். என்்பதை தெரிவித்து கொளள்கிறேன் :huh:

தொடரவேண்டும் சாத்திரி!

ஒரு தொடரை எழுத முற்படுகையில் - நீங்கள் செய்த முயற்சியின் - கஸ்டங்கள் ...தேடல்கள்

புரிந்து கொள்ளபட கூடியதே-!

நிறைய அறிந்து கொண்டோம்- நன்றி!!

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் முடிவதைப் பலர் விரும்பாவிட்டாலும், வரலாற்றுப் பதிவுகளை மீள நினைவு படுத்திய சாத்திரிக்கு வாழ்த்துக்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நினைவுகள் பதிவேடு செய்வதன் மூலம் தான் எதிர்காலம் அதன் வலிகளையும் கஸ்டத்தையும் புரிந்து கொள்ளும். பங்குள்ளவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல தொடர் என்றுதான் நினைக்கின்றேன். சாத்திரி அவர்களுக்கு நன்றி.

மனம் திறந்து ஒரு விடயத்தைச் சொல்ல ஆசைப் படுகிறேன். நான் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவன் மிகச் சிறு வயதில் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன். என்னைப்போன்று பலர் இருக்கின்றார்கள். ஈழப்போராட்டத்தை புத்தகங்கள் வழியாக மட்டுமே அறிந்து கொண்டேன்.

ஒரு உண்மை தெளிவாகத் தெரிகிறது. ஈழப்போராட்டம் தொடர்பாக எழுதப் படும் அத்தனை நூல்களுமே இரு நிலைப் பாட்டைக் கொண்டிருக்கின்றன. ஒன்று தீவிரமான புலி ஆதரவு மற்றது தீவிரமான புலி எதிர்ப்பு. இரண்டும் மிகைப் படுத்தப் பட்டே இருக்கின்றன.

சுதந்திரத் தமிழீழம் என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகப் போராட வெளிக்கிட்ட இந்தப் போராட்டக் குழுக்கள் நடத்திய சகோதரப் படுகொலைகளை நினைத்தால் நெஞ்சம் அழுகிறது. அனைத்து இயக்கங்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது என்றே நினைக்கின்றேன்.

ஆனால் சிங்களப் பேரினவாதப் பிடியிலிருந்து விடுபட்ட சுதந்திரத் தமிழீழத் தனியரசே ஈழத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். அந்த வகையில் புலிகளை ஆதரிப்பதே எங்களின் தலையாய கடமை ஏனெனில் மந்திரத்தால் மாங்காய் விழாதல்லோ!!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.