Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுடன் பேச்சு வார்த்தை இல்லை-போர் நிறுத்தம் இல்லை:ராஜபக்சே தம்பி

Featured Replies

எழுதப்பட்டது: வியாழன் மாசி 05இ 2009 10:03 யஅ Pழளவ ளரடிதநஉவ: புலிகளுடன் பேச்சு வார்த்தை இல்லை-ராஜபக்சே தம்பி

--------------------------------------------------------------------------------

புலிகளுடன் பேச்சு வார்த்தை இல்லை-போர் நிறுத்தம் இல்லை:ராஜபக்சே தம்பி

இலங்கையில் அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்து வருவதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

அங்கு போரை நிறுத்தி விட்டுஇ சமரச பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அந்த நாடுகள் வற்புறுத்தி உள்ளன. இந்த நிலையில் இலங்கைக்கு உதவி செய்து வரும் நாடுகளான அமெரிக்காஇ நார்வேஇ ஜப்பான்இ ஐரோப்பிய யூனியன் நாடுகள் கூட்டாக இலங்கை அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்தன.

குறிப்பிட்ட காலம் வரை போரை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று அதில் கூறியிருந்தன. அமெரிக்காஇ இங்கிலாந்து தனியாகவும் இந்த கோரிக்கையை விடுத்தன.

இதற்கு இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரும்இ அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோதபய ராஜபக்சே ’’இதுபோல கேலிக்கூத்து வேறு எதுவும் இருக்க முடியாது. விடுதலைப் புலிகள் நிபந்தனையின்றி முழுவதுமாக சரணடைந்து ஆயுதங்களை கீழே போட்டால்தான் அவர்களுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்படும்’’ என்று கூறியதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

இணை தலைமை நாடுகளின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த கோத்தபயஇ "இது புலிகளை காப்பாற்றுவதற்கான பகிரங்க முயற்சி' என்றும் தெரிவித்திருப்பதாக அந்த பத்திரிக்கை கூறியுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு வருங்காலத்தில் அரசியல் பங்களிப்பு எதுவும் இருக்க முடியாது என்றும்இ புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்த பிறகு தொடங்கப்படும் புதிய அமைதி பேச்சுவார்த்தைகளில் விடுதலைப்புலிகளையும் பங்கேற்க செய்யுமாறு இலங்கை அரசிடமிருந்து சர்வதேச சமுதாயம் எதிர்பார்க்கக் கூடாது என்றும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் "விடுதலைப்புலிகளுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த மாட்டோம்இ போரையும் நிறுத்த மாட்டோம்'' என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் என நக்கீரன் தெரிவித்துள்ளது

நன்றி

கலகம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு.

இராணுவ சம பலத்தில் இருந்து கொண்டுதான் இவர்களோடு பேசப் போவது தமிழர்களுக்கு நன்மை.

அது தகர்ந்துள்ள நிலையில்.. பெரியவை.. ஆயுதத்தைப் போட்டிட்டு சரணடை என்பினம்.. சின்னாக்கள்.. பேச்சும் இல்லை.. சண்டை நிறுத்தமும் இல்லை என்பினம்.

இவர்களிடம் சரணடைவதன் மூலமோ.. கெஞ்சிக் கூத்தாடி போரை நிறுத்துவதாலோ.. எமக்கு உரிமை கிடைக்கப் போவதில்லை.

அந்த வகையில்.. தமிழர்களை இக்கட்டான முடிவில் இருந்து காக்கும் கோத்தபாயவிற்கு நன்றிகள்.

நாம் தமிழர்கள் பலம் பெற்ற பின்.. பேச்சுக்குப் போனால்.. ஆயுதத்தைக் கைவிடாமலே.. உரிமைக்காகப் பேசலாம்.

ஆயுதத்தோட பேசப் போன போதே.. உரிமை வழங்காதவை.. சரணடைஞ்சா... சிங்கக் கொடியை தந்து.. சிறீலங்காவின் சுதந்திர தினத்துக்கு இசை நிகழ்ச்சிதான் நடத்தச் சொல்லுவினம்..! :)

Edited by nedukkalapoovan

சரியான முடிவு

இதைத்தான் எதிர்பார்த்தோம்

ஆப்பை இழுத்திட்டார் இனி இறுக்கேக்கைதான் வலி தெரியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலகம் என்ற இணையத்தளத்தில் வரும் செய்திகளை இங்கே இணைக்க வேண்டாம்!! அது சில வதந்திகலையும் பொய்ச்செய்திகளையும் போடுகிற ஒரு இணையத்தளம்!!

நல்லா யோசிச்சு சொல்லவேண் டும் கோஒத்தபாய பிறகு கதையை மாத்தக்கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவளை தன் வாயால் தான் கெடும்

  • கருத்துக்கள உறவுகள்

கலகம் என்ற இணையத்தளத்தில் வரும் செய்திகளை இங்கே இணைக்க வேண்டாம்!! அது சில வதந்திகலையும் பொய்ச்செய்திகளையும் போடுகிற ஒரு இணையத்தளம்!!

Sri Lanka rejects Co-Chairs’ call for surrender negotiations

[TamilNet, Thursday, 05 February 2009, 10:56 GMT]

The Sri Lankan government has rejected the call by the Co-Chairs (US, EU, Japan and Norway) for the Tamil Tigers to negotiate terms of surrender with Colombo. Defence Secretary Gotabaya Rajapaksa told the BBC that the government would accept only "unconditional surrender".

Saying the LTTE would probably lose its remaining controlled areas in the North soon, the Co-Chairs had urged the Tigers to negotiate with Colombo terms for a surrender.

The Co-Chairs suggested this would avoid further bloodshed amongst civilians, scores of whom are being killed by the Sri Lankan military’s bombardment of hospitals and camps for displaced people.

However, Rajapaksa told the BBC: "There is no question of negotiations on surrender. The rebels should surrender unconditionally. They should lay down their arms first."

The Tigers have said they will not lay down their arms until they have a "guarantee of living with freedom and dignity and sovereignty", the BBC reported.

Rajapaksa ruled out any amnesty for top LTTE leaders, but said that "lower level cadres" would be "given amnesty, retrained, given vocational training and integrated into mainstream society".

Rajapakse also rejected US-led international calls for a ceasefire, saying that the Tigers had used ceasefire time "only to regroup and attack security forces".

"When the government declared a 48-hour ceasefire period last week, the rebels used the period to launch suicide attacks near the frontlines using three trucks loaded with explosives," he claimed.

---------------

கலகம் எப்படியோ தெரியா.. ஆனால் இந்தச் செய்தி உண்மை.

அதுமட்டுமன்றி அல்யஜீராவில் பேசிய சிறீலங்காப் பேச்சாளர் ஒருவர்.. வன்னி மக்கள் சரணடைய 9 மாத காலம் வழங்கப்பட்டும்.. அவர்கள் அரசின் சொல்லுக்கு செவி மடுக்காததால் அவர்கள் மீது அரசு கோபமாக இருக்கிறது என்றும் சொன்னார். இன்னும் ஓரிரு நாட்களில் புலிகள் அழிக்கப்பட்டுப் போர் ஓய்ந்து.. நிலமை வழமைக்குத் திரும்பும் என்றும் சொன்னார்.. அதுவே ராகபக்சவின் நம்பிக்கை என்றும் சொன்னார். :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

கனடா C M R வானொலியிலும் சொனனார்கள் அதன்காரணமாகத்தான்

இச்செய்தியினை இதில் இணைத்தேன்

தவிரவும் நீங்கள் சொல்வதுபோல் பல நம்பமுடியாத செய்திகள்

கலகத்தில் உள்ளனதான்

Edited by vvsiva

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த செய்தி உன்மைதான் நான் சொல்ல வந்தது என்னவென்றால் கலகத்திலிருந்து எதையும் போடவேண்டாம் என்று. என்னுடைய பார்வைக்கு அந்த பக்கம் இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு பக்கம். எமக்கு தேவையான தமிழீழம் சம்மந்தமான செய்திகளையும் தகவளையும் போட்டுக்கொண்டு இடையில் வதந்தி, பொய் மற்றும் எமது விடுதலை போராட்டத்துக்கு எதிரான தகவல்கலையும் செய்திகளையும் போடுகிறது. இது எமது மனதையும் விடுதலை போராட்டத்தையும் பாதிப்பதுக்காக செய்யப்படுகிறது. இது என்னுடைய கருத்து.

Edited by suriyan

அந்த செய்தி உன்மைதான் நான் சொல்ல வந்தது என்னவென்றால் கலகத்திலிருந்து எதையும் போடவேண்டாம் என்று. என்னுடைய பார்வைக்கு அந்த பக்கம் இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு பக்கம். எமக்கு தேவையான தமிழீழம் சம்மந்தமான செய்திகளையும் தகவளையும் போட்டுக்கொண்டு இடையில் வதந்தி, பொய் மற்றும் எமது விடுதலை போராட்டத்துக்கு எதிரான தகவல்கலையும் செய்திகளையும் போடுகிறது. இது எமது மனதை பாதிப்பதுக்காக செய்யப்படுகிறது. இது என்னுடைய கருத்து.

ture

  • கருத்துக்கள உறவுகள்

சரியான முடிவு

இதைத்தான் எதிர்பார்த்தோம்

ஆப்பை இழுத்திட்டார் இனி இறுக்கேக்கைதான் வலி தெரியும்

தவளை தன் வாயால் தான் கெடும்

நல்லா யோசிச்சு சொல்லவேண் டும் கோஒத்தபாய பிறகு கதையை மாத்தக்கூடாது.

சாலையும் போய்விட்டதாக அறிவித்தல் வந்தபின்பும்...............

தங்கள் தன்னம்பிக்கைக்கு தலைவணங்குகின்றேன்

ஆனால்..........????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.