Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''என்னை சாகும்வரை தூக்கிலிடுங்கள்'' - சீறும் சீமான்

Featured Replies

seemanrv7.jpg

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து ஏடாகூடமாக பேசினார் என்று புதுச்சேரி போலீஸாரால் தேடப்பட்டுக் கொண்டிருக்கும் இயக்குநர் சீமானை சந்தித்தபோது...

இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதற்காக இரண்டுமுறை கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள். ஆனாலும் அந்த இயக்கத்தை ஆதரித்து தொடர்ந்து நீங்கள் பேசி வருவதற்கு பின்னணிகள் இருப்பதாகச் சொல்கிறார்களே?

தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தை ஆதரித்து நான் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பல தலைவர்களும் பேசி வருகிறார்கள். காரணம் அப்படிப் பேசுவது சட்டப்படி குற்றம் இல்லை என்பதனால்தான். சட்டப்படி குற்றம் எனில் எனக்கு பிணை தந்திருக்காது நீதிமன்றம். இந்த நாட்டில், ஒரு விசயத்தை ஆதரிப்பதற்கும் எதிர்ப்ப தற்கும் சம உரிமை உண்டு. அதனால்தான் இதனை ஜனநாயகம் என்கிறார்கள். தடை செய்யப்பட்ட இயக்கத்தை எதிர்த்து பேசுகிறவர்களுக்கு இருக்கும் அதே உரிமை ஆதரித்துப் பேசுகிறவர்களுக்கும் தரப்பட வேண்டுமா? வேண்டாமா? எதிர்த்து எப்படி வேண்டுமானாலும் எவன் வேண்டுமானாலும் பேசலாம், ஆதரித்துப் பேசினால் குற்றமா? இதென்ன ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா?

காந்தியை கொலை செய்த ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் இந்த நாட்டில் தடை செய்யப்பட்டது. அப்போது தடையை நீக்குங்கள் என்று ஆதரித்துப் பேசவில்லையா? தொடர்ந்து ஆதரித்துப் பேசியதால் தடையையும் நீக்கினார்கள். அதுவும் இந்த நாட்டில்தான் நடந்தது. அப்போ தெல்லாம் இப்படிப்பட்ட கூக்குரல்கள் எழவில்லையே ஏன்?

இலங்கையில் எமது உறவுகளுக்காக, தமிழர் களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் புலிகள். அந்த இயக்கத்திற்கு, இந்த தேசம் தேவையற்ற ஒரு தடையை விதித்துள்ளது. அதனை நீக்குங்கள் என்று குரல் கொடுக் கிறோம். யாரைக் கேட்டு இந்த தேசம் தடை விதித்தது? மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியதா இந்த அரசாங்கம்? தடை தேவையா என்று தமிழக மக்களிடம் அண்மையில் ஊடகங்கள் வாக்கெடுப்பு நடத்தியது. தேவையில்லை என்றும் தடையை நீக்குங்கள் என்றும் 90 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். அப்போ மக்கள் குற்றவாளிகளா? எமது உறவுகளுக்காக குரல் கொடுப்ப தற்கு உணர்வைத் தவிர எந்த பின்னணியும் கிடையாது, ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.

நீங்கள் பேசுகிற கூட்டங்களில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்துவது அநாகரிகமாக தோன்றவில்லையா? இதனால் பிரச்சனையின் தன்மையும் உங்கள் மீதான மதிப்பும் குறைவதாக ஒரு விமர்சனம் வருகிறதே?

மயிர் என்பது கொச்சை யான வார்த்தை இல்லை. அது கொச்சையாக இருந்தால், அதனை புனிதம் என பாதுகாத்து கோயில்களுக்கு காணிக்கைச் செலுத்தமாட்டார்கள். அய்யா பெரியார் துவங்கி திராவிட இயக்க நம் தலை வர்கள் பலரும் கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதனைத்தான் நான் சொல்கிறேனே தவிர, புதிதாக கண்டுபிடித்துச் சொல்லவில்லை. மக்கள் மொழியில் நான் பேசுவதாலும் உணர்வின் அடிப்படையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதினாலும் பிரச்சனையின் வீரியம் பலம் பெற்றிருக்கிறது. குறைந்துவிடவில்லை.

நீங்கள் கலந்துகொண்ட புதுச்சேரி கூட்டத்தில் "காவிரி நதிநீரை வாங்கித்தர வக்கில்லாத வேசி மக்கள்' என்று பேசியிருப்பது ரொம்பவும் ஓவராகத் தெரியவில்லையா?

இந்த நாட்டில் கர்நாடகாவைப்போல, தமிழகமும் ஒரு மாநிலம்தான். மற்ற மாநிலங்களுக்கு இருக்கும் அனைத்து உரிமை களும் தமிழகத்திற்கு உண்டு. "காவிரி நதிநீரிலிருந்து இத்தனை டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும்' என்று ஆணையம் தீர்ப்புச் சொன்னது. அதனை மதிக்காத கர்நாடகா, உச்சநீதிமன்றம் போனது. அங்கேயும் ஆணையத்தின் தீர்ப்பு உறுதி செய் யப்பட்டது. ஆனால், தண்ணீரைத் திறந்து விட்டதா, கர்நாடகம்? இல்லை. இதனைத் தட்டிக்கேட்டதா காங்கிரஸ் அரசு? அதுவும் இல்லை. ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசை இந்திய அரசு தண்டித்திருக்க வேண்டுமென்பதுதானே நியாயம்! கர்நாடகாவிற்கென்று ஒரு சட்டத்தையும் தமிழகத்திற்கென்று ஒரு சட்டத்தையும் வைத்திருக்கிறதா காங்கிரஸ் அரசு? தமிழகத்தின் "வரி'யிலும் இயங்குகிற மத்திய அரசு, எங்கள் உறவுகளை காப்பாற்றுங்கள் என்றால் இறையாண்மையை பற்றி பேசுகிறது. அதுவும் இலங்கை இறையாண்மைக்காக கவலைப்படுகிற இந்திய அரசு, தமிழகத்திற்கான இறையாண்மையைப் பற்றி ஏன் கவலைப்படவில்லை. இதனை வலியுறுத்தும் விதத்தில்தான் "இந்த நாட்டில் இறையாண்மை பற்றி பேசுகிறவர்கள், காவிரி நதிநீரை தமிழகத்திற்கு வாங்கித்தர வக்கில்லை' என்றேன். "வேசி மகன்' என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.

சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, புதுச்சேரியில் துவங்கி தமிழகம்வரை நீங்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் பேசுகிற பேச்சுக்களால் இந்தமுறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படலாம் என்கிற சூழல் உருவாகியிருக்கிறதே?

எந்த சட்டத்தில் வேண்டுமானாலும் கைது செய்துகொள்ளட்டும். அதனை எதிர் கொள்வேன். சட்டத்தைக் காட்டி என்னை மிரட்டுவதால் "எமது உறவுகளுக்கான எனது குரல்வளையை நெறித்துவிடலாம், உணர்வு களை கொன்றுவிடலாம்' என்று கணக்குப் போட்டுவிட வேண்டாம். எத்தனை முறை சிறைக்குச் சென்று திரும்பினாலும் ஈழ உறவுகளுக்கான உணர்வினை வெளிப்படுத்திக்கொண்டுதான் இருப்பேன். அடக்கிவிட முடியாது. இப்படி சட்டங்களைக் காட்டி சிறையில் அடைப்பதைவிட, சாகும்வரை என்னை தூக்கிலிடுங்கள். அதுதான் எனக்கு மகிழ்ச்சி.

நன்றி நக்கீரன் வாரஇதழ்

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமாக தமிழ் தாய் தந்த மகன்களில் சீமானும் ஒருவர் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் அண்ணா

உங்களை "சிறையில் போடவே ஒரு சில்லறைக்கூட்டம் காத்திருக்கு!! நீங்கள் சீறும் இல்லை இல்லை பாயும் புலி'....எங்களுக்கு நீங்கள் வேண்டும் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

முழுத்தமழகமும் உங்களை மாதிரி இருந்தால் எங்கள் விடிவு வெகு அருமையில்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தமிழகத் தமிழனின் எழுச்சியின் குறியீடு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் ஈழத்தமிழரின் உரிமைக்குரலாய் ஒலிப்பது மத்தியமாநில அரசுகளின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.

கையாலாகா கிழவன் இதற்காகவே அச்சமுற்று போய் ஆஸ்பத்திரியில் முதுகுவலி என படுத்திருந்தானோ

சீமானை பிடித்து போட்டபின் சற்று அகலவே வாயை திறப்பான்.

Revolution - புரட்சி

In order to succeed, revolutionary change must be in alignment with certain unchanging laws. The process must begin at the right moment, gather support from a broad base of people, be guided by sincere and capable leadership and most important of all must address a real need.

The strength of the forces of change will always be in proportion to the urgency of the need being championed. This is true whether the revolution is in government, in business, in education or in one's personal affairs.

சீனத்து ஐச்சிங் தத்துவத்தில் இருந்து

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.