Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குறுக்கு வழிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தேவகுரு

  • Replies 358
  • Views 138.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தேவகுரு ஜயா :(

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 93

Favourites பட்டியலில் உள்ளவற்றை பிரதிபண்ணல்

எமது கம்பியூட்டரின் இயங்குதளத்தை அழித்து மீண்டும் நிறுவும்போது இப்பட்டியல் அழிந்து விடுகிறது. சிலவேளைகளில் புதியதொரு உலாவியை நிறுவும்போது இப்பட்டியலை பிரதிபண்ணவேண்டிய தேவை ஏற்படலாம். இப்படி பல தேவைகளுக்காக ஏற்படும் இவ்வேலையை செய்துகொள்வது எப்படி என பார்ப்போம்.

1. Format செய்யப்பட்ட ஒரு Floppy டிஸ்க் ஐ அதன் டிறைவிலிடவும். இன்ரர்நெட் எக்ஸ்புலோரரை இயக்கவும்

2. File மெனுவில் Import and Export என்பதை கிளிக்பண்ணவும். Wecome to import and expot என்னும் விசாட் பெட்டி திறக்கும். Next ஐ கிளிக்பண்ணி மீண்டும் Expot Favorites, மீண்டும் Next, இப்போது Favourites பட்டியல் தென்படும், அதில் Favorites என்பதை தேர்வு செய்யவும், மீண்டும் Next

3. இப்போது Destination dialog box தென்படும். அதில் Browse ஐ கிளிக்பண்ணி Floppy க்குரிய A; டிறைவ் என்பதை "Save in" பாரில் கொண்டுவந்து நிறுத்தவும். இப்போது Bookmark என்ற பெயர் "File Name" பாரில் காணப்படும், Save என்பதை கிளிக்பண்ணி மீண்டும் Finish ஐ கிளிக்பண்ணவும். வேலை முடிந்துவிட்டது.

சரி இப்போது புதிய கம்பியூட்டரில் அல்லது புதிய உலாவியில் எப்படி restore பண்ணுவதென்று பார்ப்போம்.

1. சேமிக்கப்பட்ட Floppy ஐ டிறைவிலிடுங்கள். File-->Import and Export--> Next--> Import Favorites என கிளிக்பண்ணவும்.

2. அடுத்து வரும் பெட்டியில் C:MY DocumentsBookmark.htm என காணப்படும், அதனருகிலுள்ள Browse என்பதை கிளிக்பண்ணி Save in பாரில் A: டிறைவை கொண்டுவந்து நிறுத்தவும். கீழே Bookmark என காணப்படும், அதை தேர்ந்தெடுக்கவும், Save என்பதை கிளிக்பண்ணவும்

3. அடுத்துவரும் பெட்டியில் A:Bookmark.htm என்பதை காண்பீர்கள். அதில் Next. Next, Finish என கிளிக்பண்ணவும். இப்போது பிரதிபண்ணல் முடிந்துவிட்டது.

இன்னொரு சுருக்கமான வழியுள்ளது. Windows ExplorerMy DocumentsFavorites என்ற போல்டரை திறந்து அதிலுள்ளவற்றை கொப்பி பண்ணி, புதிய கம்பியூட்டரில் அதே போல்டரை திறந்து Paste பண்ணிவிடுங்கள். செய்துபாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஜயா.. நான் நீங்கள் கீழ்சொன்ன வழியில் தான் செய்வேன் .. மற்ற முறையை இன்று அறியத்தந்ததுக்கு நன்றிகள்.

நன்றி தேவகுரு ஜயா

  • தொடங்கியவர்

எதை நிறுவியுள்ளார்கள்? எதை நிறுவாமல் விட்டுள்ளார்கள்? எதை நிறுவி விட்டு அழித்துள்ளார்கள்?

அண்மையில் மிகப்பெரிய வாசகசாலைக்கு சென்றிருந்தேன். ஏராளம் புத்தகங்கள். ஓடியோ வீடியோ கஸட்கள். இவைகளை அங்கத்தவர்கள் வீட்டிற்கு எடுத்துப்போவதும் வருவதுமாக இருந்தார்கள். கம்பியூட்டர்கள் முன் பலர் இருந்து உலாவிக்கொண்டிருந்தாடர்கள். சிலவற்றின் முன் Full Access Computer, சிலவற்றின் முன் Limited Access computer என எழுதிய மட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு அறையில் பாலர்களுக்கு ஏதோ பயிற்றுவித்துக்கொண்டிருந்த

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 94

போய்வந்த பாதை அழித்துவிடுவது எப்படி?

காலையில் இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும்போது வயதுவந்தவர்களுக்கு மாத்திரம் என வகைப்படுத்தப்பட்ட ஓரிரு வெப்தளங்களை ஆர்வம் காரணமாக பார்த்துவிட்டீர்கள். மாலையில் அண்ணன் வந்து கம்பியூட்டரில் உலாப்போகும்போது இதை கண்டுகொண்டால் என்ன நினைப்பார். இப்படி உங்கள் மனம் உங்களை குடையும். என்ன செய்வது? தடம் அழிப்பது எப்படி? இதோ வழி.

நான்கு இடங்களில் அழிவு செய்யவேண்டும்.

1. Delete Internet temporary files

இன்ரநெட் எக்ஸ்புளொரர் பாவிப்பவர்கள் முதலாவதாக இந்த தற்காலிக பைல்களை அழித்துவிடவேண்டும். இந்த பைல்களில் நாம் பார்த்த வெப்தளங்களின் சில உருவங்களும் (cached image) விலாசங்களும் தானாகவே பதியப்படுகின்றன. இவைகள் Gif அல்லது Jpg பைல்களாக பெரும்பாலும் இருக்கும். இன்ரநெட் எக்ஸ்புளொரரில் Tools--> Internet Options--> Delete Files என்பதை கிளிக்பண்ண இந்த பைல்களெல்லாம் அழிந்து போகும்.

2. Clear the History

அட்றஸ் பாரின் வலதுகை முக்கோணத்தை கிளிக்பண்ண வரும் drop drown மெனுவில் உள்ள வெப்தள விலாசங்களையும், இன்ரநெட் எக்ஸ்புளொரரின் Tool Bar இன் History பட்டனை கிளிக்பண்ண தோன்றும் பட்டியலையும் அழிக்கவேண்டும். Tools--> Internet Options-->Clear History என்பதை கிளிக்பண்ண இவைகள் அழிந்து போகும். இன்ரெநெட் டயலக் பொக்ஸ் இல் கீழ் பகுதியில் Days to keep pages in history என்பதன் எதிரில் எத்தனை நாட்களுக்குரிய பக்கங்களின் விலாசங்களை வைத்திருக்க வேண்டும் என நியமிக்கின்றோமோ அத்தனை நாட்களுக்குரிய விலாசங்களே இந்த History பைலில்ல் இருக்கும்.

3. Delete Cookies

Documents and Settings என்ற போல்டரின் கீழ் உப பைல்களாக இந்த Cookies பைல்கள் காணப்படும். Searcha வசதியை பயன்படுத்தி இந்த போல்டரை தேடுங்கள். இரண்டு அல்லது மூன்று போல்டர் காணப்படலாம். அவைகளை திறந்து அவற்றினுள் உள்ள எல்லா பைல்களையும் அழியுங்கள். Index.dat என்ற ஒரு பைல் மட்டும் அழியாது; விட்டுவிடுங்கள். எல்லா Cookies போல்டர்களையும் திறந்து அழித்துவிட்டதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

4. Delete Autocomplete

விலாசங்களை நாம் அட்றஸ் பாரில் அடிக்குமுன் தானாக முன்வந்து இதுதானா விலாசம் என யோசனை கூறும் இந்த வசதியையும் அழிக்கவேண்டும். அல்லது அண்ணர் ஓரிரு எழுத்துகளை அடிக்குமுன் இந்த வசதி நாம் மறைக்க விரும்பும் விலாசத்தை யோசனை கூறுவதாக நினைத்து காட்டிக்கொடுத்துவிடும். Tools--> Internet Options--> Content Tab--> Auto Complete இவைகளை கிளிக்பண்ணி வரும் பெட்டியில் Clear Forms, Clear Passwords என்ற இரு பட்டனையும் அழுத்தி இந்த வசதியை நிறுத்தி விடலாம்.

சரி இப்போது நீங்கள் நிம்மதியாக போய் தூங்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவகுரு அண்ணா உங்களிடம் சந்தேகங்கள் எதும் கேட்க வேண்டுமாயின்.. இங்கே கேட்கலாமா?? நன்றி

  • தொடங்கியவர்

விஷ்ணு அவர்கட்கு

சந்தேகமிருந்தால் இதேபக்கத்தில் கேட்கலாம். முடிந்தவரை விடை இறுப்பேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா..

இறுதியாக உலாவிய தடயங்களை அழிக்கும் முறை பற்றி சொன்னிங்க....

எம். எஸ். என் ல்..... ஒரு தடவை sign in செய்தால் sign செய்த ஈ மெயில் முகவரி msn sign செய்யும் இடத்தில் இருக்கும். அடுத்த தடவை ஈ மெயில் முகவரியை எழுதாமல் முகவரியை தெரிவு செய்து pass word உதவியுடன் உள் நுளையலாம்

எனது கேள்வி... msn sign செய்யும் இடத்தில் இருக்கும் முகவரி ஒன்றை எப்படி அழிப்பது??? :roll: :roll: ஒரு நண்பரின் வீட்டில் msn use பண்ணிவிட்டு எப்படி அழிப்பது?? :roll:

  • தொடங்கியவர்

விஷ்ணு அவர்கள் கேட்ட கேள்விக்கு தம்பி கவிதன் அழகாகவும் தெளிவாகவும் பதிலிறுத்ததன் முலம் எனது நேரத்தையும் சிரமத்தையும் மீதப்படுத்தியுள்ளார். இப்படியான கேள்விகள் எம்மவர்களின் திறமைகளை வெளிக்கொணர்கின்றதை பார்த்து சந்தோஷமடைகின்றேன். (கவிதன் அவர்களின் பதில் மேல் posting ல் உள்ள லிங்கை கிளிக்பண்ண கிடைக்கிறது)

  • கருத்துக்கள உறவுகள்

தேவகுரு குறுக்குவழி 94ஆல் விசயம் தெரிந்த பெற்றேர்கள் ஏமந்துவிடுவார்களே.. உதாரணத்துக்கு ஒரு சிறுவன் விசயம் தெரியாமல் நம்மட பெடியளுடைய இனையத்தளத்துக்கு (அதுதான் தேனி அதிரடி நெருப்பு போன்ற ஒன்றுக்கும் உதவத) போய்ட்டுவந்தால் அடுத்த நாள் அதை பார்த்த அவரின் பெற்றோர்களுக்கு அதைப்பற்றி தெரிந்து கொண்டு எனிமேலும் அப்படிபட்ட இனையத்தளங்களுக்கு நீ செல்லகூடாது எண்டு அதட்டி வைப்பார்கள், அதுவே நீங்கள் சொன்ன முறையை அவர்கள் பின்பற்றி இருந்தால் அம்புட்டும்தான்...அடிக்கடி அவர்கள் அப்படியான இனையத்துக்கு போய்டு அதை அழித்துவிட்டால் பெற்றோர்களுக்கு தெரியாமல் போய்விடும். அதுவே பின்பு அப்படிபட்ட இனையத்தளங்களூக்கு செல்லும் சி|றுவர்கள் பெரியவர்களுக்கு அங்கே போவதால் கோமா ஆக்கி வைத்திய சாலையில் அனுமதிக்க படவேண்டிய நிலை உருவாகலாம்... :idea: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஷ்ணு அவர்கள் கேட்ட கேள்விக்கு தம்பி கவிதன் அழகாகவும் தெளிவாகவும் பதிலிறுத்ததன் முலம் எனது நேரத்தையும் சிரமத்தையும் மீதப்படுத்தியுள்ளார். இப்படியான கேள்விகள் எம்மவர்களின் திறமைகளை வெளிக்கொணர்கின்றதை பார்த்து சந்தோஷமடைகின்றேன். (கவிதன் அவர்களின் பதில் மேல் posting ல் உள்ள லிங்கை கிளிக்பண்ண கிடைக்கிறது)

நன்றி தேவகுரு ஜயா,,, நான் கிப்ட் அனிமேசன் செய்து பார்ப்பம் என்று பார்த்தேன்.. சரி ஒருகல்லில் இரண்டுமாங்காய் என நினைத்து செய்தேன். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவகுரு குறுக்குவழி 94ஆல் விசயம் தெரிந்த பெற்றேர்கள் ஏமந்துவிடுவார்களே.. உதாரணத்துக்கு ஒரு சிறுவன் விசயம் தெரியாமல் நம்மட பெடியளுடைய இனையத்தளத்துக்கு (அதுதான் தேனி அதிரடி நெருப்பு போன்ற ஒன்றுக்கும் உதவத) போய்ட்டுவந்தால் அடுத்த நாள் அதை பார்த்த அவரின் பெற்றோர்களுக்கு அதைப்பற்றி தெரிந்து கொண்டு எனிமேலும் அப்படிபட்ட இனையத்தளங்களுக்கு நீ செல்லகூடாது எண்டு அதட்டி வைப்பார்கள், அதுவே நீங்கள் சொன்ன முறையை அவர்கள் பின்பற்றி இருந்தால் அம்புட்டும்தான்...அடிக்கடி அவர்கள் அப்படியான இனையத்துக்கு போய்டு அதை அழித்துவிட்டால் பெற்றோர்களுக்கு தெரியாமல் போய்விடும். அதுவே பின்பு அப்படிபட்ட இனையத்தளங்களூக்கு செல்லும் சி|றுவர்கள் பெரியவர்களுக்கு அங்கே போவதால் கோமா ஆக்கி வைத்திய சாலையில் அனுமதிக்க படவேண்டிய நிலை உருவாகலாம்... :idea:  :wink:

டண் இதுக்கு இன்னொரு மென்பொருள் இருக்கு .. சிறுவர்களின் நடவடிக்கையைக் கண்காணிக வென. அதனை கணனியில் நிறுவிவிட்டால் அது சில தவறான தளங்களுக்கு போவதை தடை செய்வதுடன் அவர்கள் கணனியில் செய்யும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொள்ளும். பின்னர் அவ் மென்பொருளின் இணைப்பு தருக்கிறேன்

:lol:

தேவகுரு உங்களின் குறுக்கு வழிகள் தொடர் மிக்க பயன்மிக்கதாயுள்ளது. உங்களுக்கு எனது மிக்க நன்றிகள்.

  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 95

$NtUninstallKB8909537$ என பெயர்கொண்ட போல்டர்களின் முக்கியத்துவம் என்ன?

விண்டோஸ் XP யில் Hotfixes, Updates ஒவ்வொரு தடவையும் நிறுவப்படும்போது அவை ஏதாவது குழறுபடி செய்தால் அல்லது தேவையில்லை என பின்னொருபொழுதில் நீங்கள் கருதினால் அழித்துவிடுவதற்கு வசதியாக மேற்கூறப்பட்ட போல்டர்கள் Windows,Winnt போல்டரினுள் நிறுவப்படுகின்றன. Windows அல்லது Winnt போல்டரை திறந்து பார்த்தால் இவை அவலஷணமாக ஒன்றன்கீழ் ஒன்றாக ஒரேமாதிரியாக நிறைய காணப்படும். இவை என்ன? அழித்துவிடலாமா? என நாம் யோசிப்போம். Hotfixes, Updates நிறுவப்பட்டு பல நாட்களின்பின் குழறுபடிகள் ஏதும் இல்லையாயின் கண்டிப்பாக இந்த போல்டர்களை அழித்துவிடலாம். குழறுபடிகள் இல்லையாயின் யாரும் எக்காலமும் இந்த உபயோகமான Hotfixes ஐ அழிக்கப்போவதுமில்லை. மேற்கூறப்பட்ட Uninstall போல்டர்களை பாவிக்கப்போவதுமில்லை.

இந்த இலக்கங்களை கொண்ட போல்டரின் பெயரின் மத்தியில் Q என்ற எழுத்து காணப்படின் அது Hotfix ஐயும் KB என்ற எழுத்து காணப்படின் Updates ஐயும் குறிக்கும். இந்த போல்டரினுள் ஏற்கனவே நிறுவப்பட்ட Hotfixes ஓ அன்றி Updates ஓ கிடையாது. இவைகளை அழிப்பதற்கான் வழி மாத்திரம் உள்ளன. Add/Remove புறோகிறாமில் இந்த Hotfixes, Updates ஐ அழிப்பதற்கான கட்டளைச்சொல் இருந்து அதை நாம் பயன்படுத்தும்போது அதற்கு வேண்டிய வழிமுறைகள் இந்த போல்டர்களின் உள்ளிருந்துதான் வருகின்றன.

இந்த போல்டர்களை நீங்கள் Select பண்ணி Delete பண்ணலாம். Windows மற்றும் Winnt யில் இந்த போல்டரை அழித்தபின் ஆனால் இதற்குரிய அல்லது இதனோடு சம்பந்தப்பட்ட குறிப்பு Add/Remove புறோகிறாமில் இருந்தால் அதை அழிப்பதற்கு Registry திறந்து சில அழிவுகளை செய்யவேண்டிவரும். இந்த போல்டர்களை ஒரேயடியாக அழித்துவிடாதீர்கள். Recycle Bin ல் சிலகாலத்திற்கு போட்டு வைத்து Restore பண்ணவேண்டி நிச்சயம் வராது என கண்டபின் அங்கிருந்து அகற்றிவிடுங்கள். உங்கள் Hard disk ல் நிறைய இடமிருந்தால் அழிக்காமல் விட்டுவைத்தாலும் பரவாயில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தேவகுரு ஜயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா... உங்கள் தகவல்கள் பயன் உள்ளதாக உள்ளது

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 96

டிஜிட்டல் கமெறா ஒன்று கிடைக்கப்பெற்றதனால் அதனால் எடுக்கப்படும் படங்களை கம்பியூட்டரில் இறக்கி பார்க்கையில் தெரியும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவேண்டி ஏற்பட்டது. அதற்கு துணைபுரியும் வகையில் கைவசம் Photoshop 6 ம் கிடந்தது. படங்களை சீர்செய்ய வேண்டிய தேவை போட்டோஷொப்பை கற்கும் ஆர்வத்தை தூண்டியதனால் கடந்த மூன்று வாரங்களாக எனது பொழுதை அதில் கழித்துக்கொண்டுள்ளதனால் குறுக்குவழிகளில் கவனம் செலுத்தமுடியவில்லை.

உருவங்களை வெட்டி அழகான பின்னணியுடன் ஒட்டி Under Exposure ஆல் ஏற்படும் குறைபாடுகளை நீக்கி இன்னொரு படத்தை புதிதாக உருவாக்கும்போது நிறையவே திருப்தி ஏற்படுகிறது. அத்தோடு மலர்கொத்துக்களையும் சிறிய பிராணிகளையும் சேர்த்துவிட்டால் கூடிய மகிழ்சி ஏற்படுகிறது

போட்டோஷொப்பை கற்க நிறைய தளங்கள் இணையத்தில் உள்ளன. கீழ்காணுபவைகள் எனக்கு உதவின

http://www.sketchpad.net/photoshp.htm

http://graphicssoft.about.com

http://www.elated.com/tutorials/graphics/photoshop/

  • 2 months later...
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 97

தனிப்பட்ட கோப்புகளுக்கு Win XP யில் நுழைவுச்சொல் (Password)

முக்கியமான விடயங்கள், ரகசிய சங்கதிகள் அல்லது யாரும் பார்க்கக்கூடாது எனப்படும் சங்கதிகள் கொண்ட ஒரு கோப்பை உண்டாக்கிவிட்டீகள். இதை யாரும்பார்க்காமல் நுழைவுச்சொல் கொடுத்து பாதுகாக்க விரும்பினால் இப்படி செய்யவும். கோப்பை திறந்து வைத்துக்கொண்டு File --> Save as ஐ கிளிக்பண்ண வரும் பெட்டியின் வலது பக்க மேல் மூலையில் Tools எனக் காணப்படும் மெனுவைக்கிளிக் பண்ணவரும் உபமெனுவில் Security Options என்பதை கிளிக்பண்ணவும். Security என்ற பெட்டி தோன்றும். அங்கே Password to open, Password to modify, Read only என பல தேர்வுகள் காணப்படும். Password to open என்பதன் எதிரில் விரும்பிய password ஐ கொடுத்து OK பண்ணிவிட்டால் சரி.. Password தெரிந்தவர்களால் மாத்திரம் இனிமேல் இந்த கோப்பை திறக்கமுடியும்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 98

Doc கோப்பை Jpeg formet க்கு மாற்றுவதெப்படி?

இரண்டு வருடங்களின் முன் அழகான ஒரு Scenary படத்தை நண்பர் ஒருவருக்கு email அனுப்பும்போது அந்தப்படத்தையும் அதில் பதித்து (paste) அனுப்பிவிட்டேன். இப்போது email லின் பிரதியில் உள்ள .doc format ல் உள்ள அந்த படத்தை Adobe Photoshop ல் திறந்து இன்னொரு படத்துடன் சேர்க்கவேண்டி (combine) ஏற்பட்டது. Doc extension ஐ Jpg என மாற்றினாலும் திறக்க முடியவில்லை. வேறு எந்த Grafic software இலும் இந்த word படம் திறக்கமாட்டேன் என்கிறது. வலது கிளிக்பண்ணி கொப்பிபண்ணி Adobe Photoshop இலோ அல்லது Ms Paint இலோ Paste பண்ண முற்பட்டபோது quality குறைந்து நிறங்கள் மாறுகிறது. இரு மணித்தியால தேடலின் பின் வழிகண்டுகொண்டேன்.

குறிப்பிட்டபடத்தை word ல் திறந்து வைத்துக்கொண்டு Print Screen பட்டனை அழுத்த படம் கொப்பிபண்ணப்படுகிறது. பின் Adobe Photoshop ஐ(அல்லது Ms Paint) திறந்து paste பண்ணிவிட்டு, Crop Tool உதவியோடு படத்தை தவிர மற்றெல்லாவற்றை கத்தரித்து அகற்றிவிட்டு Jpg format ல் சேமித்துக்கொண்டு வேண்டியதை செய்யமுடிந்தது

ஆம் நீங்கள் கூறியது போலத்தான் நேரடியாக கொப்பி செய்தால் படத்தின் நிறங்களில் நிறைய மாற்றங்கள் வருகின்றன.

GIF கோப்பாக இருக்கும் சில படங்களை கொப்பி செய்து

போட்டாலும் இப்படித்தான் வந்தது எனக்கு...

நல்ல யோசனை.. நன்றி தேவகுரு.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

குறுக்குவழிகள் - 99

Cache என்பது என்ன?

ஓர் உலாவி தான் செல்லும் வெப்தளங்களின் தகவல்களை சேமிப்பதற்கும் பின் தேவைப்படும்போது அணுகுவதற்கும் ஆன ஹாட் டிஸ்க்கில் உள்ள இடம்தான் Cache என்பது. நீங்கள் ஓர் வெப்தளத்திற்கு முதன்முதலில் செல்லும்போது உங்கள் உலாவி அத்தளத்தின் பிம்பத்தை Cache ல் பதிந்துவிடுகிறது. மீள இன்னொருதரம் அத்தளத்திற்கு செல்லும்போது உலாவி அத்தளப்பக்கங்களை Cache ல் தேடி, கிடைத்தால் முழுவதையுமோ அல்லது பகுதியையோ அத்தளப்பக்கங்களை திரையில் காட்டுவதற்கு பயன்படுத்தும். இதனால் வேலை பாதியளவு குறைவதோடு செயற்திறனும் அதிகரிக்கும்.

இந்த Cache ஐ அடிக்கடி சுத்தம் செய்வது உலாவியை தளங்களிலிருந்து புதிய தகவல்களை இறக்கம்செய்ய நிர்ப்பந்திக்கும். அத்தோடு தேவையற்ற தகவல்கள் தேங்கிக்கிடப்பதையும் தவிர்க்கலாம். உலாவிகளை Cache ஐ தேடாமல் ஒவ்வொருமுறையும் புதிதாக தகவல்களை இறக்கம் செய்யும்படியும் அமைத்துக்கொள்ளலாம். அதற்கு அதன் Help மெனுவை பார்த்து செட் பண்ணிக்கொள்ளவேண்டும்.

Cache ஐ இப்படி சுத்தம் செய்துகொள்ளவும்.

IE--> Tool--> Internet Options--> General Tab--> Delete Files.

Delete Cookies என்று ஒரு பட்டன் காணப்படும். அதை பாவிக்கத்தேவையில்லை. Files ஐ அழிக்கும்போது Cookies ம் தானாக அழிந்துவிடும். Internet Temporary Files யும் History யும் அழிப்பதுதான் Cache ஐ சுத்தப்படுத்துவதாகும்.

உங்கள் ஹாட் டிஸ்க்கில் Cache க்காக ஒதுக்கப்பட்டுள்ள அளவை நீங்கள் கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்

IE--> Tools--> Internet Options--> General Tab--> Settings செட்டிங்ஸ் டயலக் பொக்ஸ் இல் ஒரு Slider காணப்படும் அதை இழுத்து கொள்ளளவை மாற்றிகொள்ளலாம். (XP யில் இப்படி).

இதே பெட்டியில் ஒவ்வொருமுறையும் புதிதாக தகவல்களை இறக்கம் செய்யும்படியும் அமைத்துக்கொள்ளக்கூடிய Settings ம் உண்டு. Check for newer versions of stored pages என்ற வாக்கியத்தின் கீழ் பல Options கள் காணப்படுகின்றன. பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.