Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க அணுகுமுறை மாற்றத்தை வரவேற்கிறோம் - புலிகளின் பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர்

Featured Replies

அமெரிக்க அணுகுமுறை மாற்றத்தை வரவேற்கிறோம் - புலிகளின் பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர்

98133001.jpg

"நீடித்திருப்பதும் குறைவாகவே விளங்கிக்கொள்ளப்பட்டதுமான, இலங்கைத்தீவின் ஈழத்தமிழர் சிக்கலுக்கு இத்தைகயதொரு புதிய அணுகுமுறையை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்" என்றார் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர், செல்வராசா பத்மநாதன் .

"நீடித்திருப்பதும் குறைவாகவே விளங்கிக்கொள்ளப்பட்டதுமான, இலங்கைத்தீவின் ஈழத்தமிழர் சிக்கலுக்கு இத்தைகயதொரு புதிய அணுகுமுறையை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்" என்றார் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதிதாகநியமிக்கப்பட்டுள்ள பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர், செல்வராசா

பத்மநாதன் .

வெள்ளியன்று அமெரிக்க அரச செயலர் ஹிலாறி கிளின்ரன் விடுத்தஅறிக்கை குறித்து "தமிழ்நெற்" இணையத்தளம் அவரைத் தொடர்பு கொண்டபோது அவர் இவ்வாறுகூறினார்.

"உடனடியான போர்நிறுத்தம் என்பது பொதுமக்கள் மீதானபடுகொலைகளை நிறுத்துவதுடன் பாதிக்கப்பட்ட மக்களால் மேலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய வகையில் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வழிவகுக்கும்" என்றார் திரு. பத்மநாதன் .

"இலங்கையின் எல்லாஇனக்குழுக்களதும் எதிர்பார்ப்புகளை சந்திக்கும் வகையிலான தீர்வொன்றை உருவாக்க முனைகையில், கடுந்துயர் ஒருபுறமும் பேராசை மறுபுறமும் இருப்பதை முறைவழுவாமல் எடை போட்டுக் கொள்ளவேண்டும் " என்று மேலும் அவர் தெரிவித்தார்.

‘எல்லா இனக்குழுக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் ஒத்திசையவேண்டும்' என்பது ஒற்றையாட்சி சூழ்ந்த சிறிலங்கா அரசமைப்பின் அணுகுமுறை. தமிழ்த் தேசிய எதிர்பார்ப்புக்களை மறுதலிக்கவே இந்த அணுகுமுறை கையாளப்பட்டிருப்பதற்கு வரலாறு உண்டு என்றுகுறிப்பிட்டார் பத்மநாதன்.

"கடந்தகாலத்தில் பல தடவைகள் தமிழர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். சிங்களத் தலைமைமீது அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது. முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மிகுந்த கவனம் எடுக்கும் முறைதவறா அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்பது எங்கள் உண்மையான எதிர்பார்ப்பு," என்றும் அவர் கூறினார்.

‘மனிதக்கேடயம்' தொடர்பான கேள்வி குறித்துப் பேசுகையில், வன்னிப் பொதுமக்கள் இக்கேள்வி குறித்து உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை உலக நாடுகள் சுயமாகவும் நேரடியாகவும் அறிந்து அளவிட வேண்டுமென்பதையே தான் வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

ஹிலாறி கிளின்ரன் தேர்தல் காலத்தில் கூறியதற்கு அமைய, இலங்கைத் தீவின் சிக்கல் குறித்து ஆர்வம் எடுத்துக் கொள்வதற்காக அவருக்குத் தனிப்பட்ட நன்றி தெரிவித்த பத்மநாதன், தமிழர் ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பிருந்தே தமிழ்ப் பொதுமக்களை குறிவைப்பவர்கள் என்று நன்கு அறியப்பட்ட சிங்கள ஆயுதப் படைகளின் கரங்களில் தற்போது தமிழர்கள் படும் கடுங்கொடுமையை அமெரிக்காவினால் தடுக்க முடியும் என்றார்.

பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தியிருப்பதும், விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழேவைக்குமாறு வலியுறுத்தாது விட்டிருப்பதும் முக்கிய அணுகுமுறை மாற்றம் என்பது பத்மநாதனின் தொனியாக இருந்தது.

சிக்கலுக்கு முடிவுகாணும் வகையில் முறைவழுவா அணுகுமுறை எங்கிருந்து வரினும்,அமைதியும் கடும் உழைப்பும் கொண்ட தமிழ்க் குமுகத்தின் இயல்பு அதற்கு ஈடுசெய்யக்கூடியது என்பதும் அவரது தொனியாக இருந்தது.

http://www.sankathi.com/

நேற்றைய தினம் ஹாலரி கிளிண்டன் ஜனாதிபதியுடன் உரையாடியபோது தெரிவித்திருக்கும் கருத்துகளுக்களை விடுதலைப்புலிகளின் சர்வதேச பேச்சாளர் செல்வராஜா பத்மநாதன் வரவேற்றுள்ளாதாக தமிழ் நெற் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அச் செய்தியில் இலங்கையில் உடனடியாக யுத்தநிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு போர்பகுதியில் சிக்குண்டிருக்கும் மக்களுக்கு மனிதபிமான உதவிகள் சென்றடைய உடனடியாக இலங்கை அரசு உதவவேண்டும் என்றும், நீண்டநாளாக தொடரும் இந்த போராட்டமானது பேச்சுவார்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டுமே, அன்றி யுத்தத்தினால் அல்ல என்று ஹாலரி கிளிண்டன் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் தமிழர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதன் மூலமே உண்மையான சமாதான தீர்வு எட்ட்ப்படும் என அவர் தெரிவித்த கருத்துக்களை புலிகாளின் சர்வதேச பேச்சாளர் வரவேற்றிருப்பது, குறிப்பிடத்தக்கது.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது எந்த அளவுக்கு ஊர்ஜிதமானது என்பது புரியவில்லையே.

சும்மா, புலிகள் ஆயுதத்தைக் கீழே போடவேண்டும் என்னும் வழக்கமான வாசகம் தற்காலிகமாக அல்லது தவறுதலாக விடுபட்டுப்போனதைப் பெரிதுபடுத்த முடியுமா?

நாங்கள் எங்கள் பக்கத்துத் தொனியை அமெரிக்காவின் தொனியென்று எப்படி எதிர்வு கூறமுடியும்.

அமெரிக்காவின் அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது எந்த அளவுக்கு ஊர்ஜிதமானது என்பது புரியவில்லையே.

சும்மா, புலிகள் ஆயுதத்தைக் கீழே போடவேண்டும் என்னும் வழக்கமான வாசகம் தற்காலிகமாக அல்லது தவறுதலாக விடுபட்டுப்போனதைப் பெரிதுபடுத்த முடியுமா?

நாங்கள் எங்கள் பக்கத்துத் தொனியை அமெரிக்காவின் தொனியென்று எப்படி எதிர்வு கூறமுடியும்.

யோசிக்கவேண்டிய விடயம்தான்,

பொதுவா எம்மவர்கள் நம்பி நம்பி நாசமாப்போனது தான் மிச்சம், நம்பாமல் போனாலும் சாதிக்க முடியாது.... நல்லாச்சிந்தித்து செயலாற்றினா எங்கள் பக்க ஞாயங்களையும் அவர்களை ஏற்கவைக்க முடியும்.

எமது விடுதலைப்போராட்டம் சிங்கள அரசு சொல்வது போல் சிங்களவனுக்கு ஏற்படு இருக்கும் பிரச்சனை அல்ல இது உலகப்பிரச்சனை அடிமைப்பட்டு வாழ மறுத்து உறுதியோடு போராடும் வரை உலகின் மாற்றுக்கருத்துக்கள் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது எந்த அளவுக்கு ஊர்ஜிதமானது என்பது புரியவில்லையே.

சும்மா, புலிகள் ஆயுதத்தைக் கீழே போடவேண்டும் என்னும் வழக்கமான வாசகம் தற்காலிகமாக அல்லது தவறுதலாக விடுபட்டுப்போனதைப் பெரிதுபடுத்த முடியுமா?

நாங்கள் எங்கள் பக்கத்துத் தொனியை அமெரிக்காவின் தொனியென்று எப்படி எதிர்வு கூறமுடியும்.

புலிகள் அமெரிக்காவின் அறிக்கையை வரவேற்றிருப்பதன் மூலம் இந்தியாவுக்கு சரியான நேரத்தில் சரியான ஆப்பு வைத்திருக்கிறார்கள்.அமெரிக்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
புலிகள் அமெரிக்காவின் அறிக்கையை வரவேற்றிருப்பதன் மூலம் இந்தியாவுக்கு சரியான நேரத்தில் சரியான ஆப்பு வைத்திருக்கிறார்கள்.அமெரிக்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் இந்த நகர்வு இந்திய-அமெரிக்க அச்சை நோக்கியதாக எடுத்துக் கொள்ளலாம்.

பாஜக 2004 வரையில் ஆட்சியில் இருக்கும்வரையில், இலங்கை தொடர்பில் அவர்களின் நிலைப்பாடு பெருமளவில் கையறு நிலையிலேயே இருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய புலிகள் இந்தியாவை மேவி எமது பிரச்சினையை சர்வதேச மட்டத்துக்குக் கொண்டு சென்றனர். அமெரிக்கா ஏற்கனவே புலிகளுக்குத் தடை போட்டுவிட்டதால் (1997), புலிகளின் அடுத்த தெரிவு நோர்வே தலைமையிலான ஐரோப்பாவை முன்னிறுத்திய ஒரு சமாதான முயற்சி ஆகும். அவர்களும் தங்கள் லாப நட்டக் கணக்குகளோடு வந்தார்கள். எமது பிரச்சினை சர்வதேச மட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த நிலையில் 2004 இல் இந்தியாவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் காங்கிரஸ் தலைமையை மறுபடியும் கொண்டு வந்தது. அவர்களின் வெளியுறவுக் கொள்கைகள் மாற்றம் பெற்றன. தங்களை மீறி ஈழ விவகாரத்தில் உட்புகுந்து விட்ட ஆதிக்க சக்திகளை வெளியேற்ற முற்பட்டனர். அதன்பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு.

தற்போது, இந்தியாவில் மறுபடி நடக்கவிருக்கும் தேர்தலை முன்னிட்டு சில சில அரசியல் நகர்வுகளைச் செய்யவேண்டியது கட்டாயம். இதன் வெற்றி தோல்வி தேர்தலின் பெறுபேறுகளைப் பொறுத்தது. திரு பத்மநாதன் அவர்களின் கருத்து அமெரிக்காவை நோக்கியதாக உள்ளது. அதே நாளில் திரு யோகரட்ணம் யோகி அவர்களின் கூற்றும் கூர்ந்து கவனிக்கத் தக்கது. தங்களுடன் இணக்கமாகப் பழகி ஒரே மேசையில் உணவு உட்கொண்ட சொல்கைம் மற்றும் அகாசி போன்றவர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக ஸ்ரீலங்காவின் இன அழிப்புக்குத் துணை போகிறார்கள் என்கிறார். இது ஐரோப்பிய அச்சிலிருந்து புலிகள் விலகுவதையே குறிக்கிறது.

We observe, Erik Solheim, Ysuhi Akashi, who moved closely with us, received our hospitality, ate at our table are now waiting for the day Tigers will be completely wiped out, hoping to reap the benefits. Showering praise to the murderous activities of Sri Lankan government, they hope to gain.

தமிழ்நெற் இணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.