Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

EU வுக்கு முன்னால் உரிமை போர் பெல்ஜியம் பிறஸல்ஸ்..

Featured Replies

http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

http://eurotvlive.com/download/20090316/20..._Belgium_01.wmv

பிரித்தானியாவுக்கு மீண்டும் வருகையில் பிருத்தானிய Immigration and border agency ஐ சேர்ந்த அலுவலகர்கள் பிரித்தானிய தமிழர்கள் 10 000 பேர் வரை போராட்டத்துக்கு போய் வந்தார்கள் எனும் தகவலையும் கிட்டத்தட்ட 80 000 பேர் அங்கு கூடினார்கள் எண்றும் கூறினர்... (தங்களுக்குவேலை பழு இண்று அதிகம் எண்றும் சொல்லும் போது)

Edited by தயா

  • Replies 56
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தயா தங்கள் இணைப்பிற்கு

உடல் நலம் பாதித்திருந்தபோதும்

எனது வரலாற்றுக்கடமையை செய்ய

எனது குடும்பத்தவர் பலரது வேண்டுகோளையும் புறந்தள்ளி

நானும் வந்திருந்தேன்

கிட்டத்தட்ட முழுமையான தூரம் நடந்து

கூட்டம் முடியும்வரை நிலையிலேயே நின்றிருந்தபோதும்

எனது கடைமையை செய்யாது விட்டிருந்தால்

இங்கு வராது விட்டிருந்தால்

ஏற்பட்டிருக்கும் மனவலியிலும்பார்க்க......

இது ஒன்றும் பெரிதாய் தெரியவில்லை

பிறஸல்ஸ்.. நகரை மட்டுமல்ல பெல்ஐpயத்தையே 5 அணி நேரம் அசையவிடாது செய்த தமிழனின் தமிழின உணர்வுக்கு தலைவணங்குகின்றேன்

லண்டனில் இருந்து ஒரு பஸ் வந்திருந்தது கிளிநொச்சி ஈ.போ.ச (ஈழம் போக்குவரத்து சபை) என்ற பெயரில்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இருந்து ஒரு பஸ் வந்திருந்தது கிளிநொச்சி ஈ.போ.ச (ஈழம் போக்குவரத்து சபை) என்ற பெயரில்.. :D

ஆமாம்

நானும் கண்டேன்

மிகவும் அழகாக வடிவமைத்திருந்தார்கள்

மக்களையும் கவர்ந்திருந்தது

  • தொடங்கியவர்

லண்டனில் இருந்து ஒரு பஸ் வந்திருந்தது கிளிநொச்சி ஈ.போ.ச (ஈழம் போக்குவரத்து சபை) என்ற பெயரில்.. :D

லண்டனில் இருந்து வந்த அவை எல்லாமே தமிழ் நிறுவனம் ஒண்றிற்கு சொந்தமான வண்டிகள் எண்று சொன்னார்கள்..

  • தொடங்கியவர்

நன்றி தயா தங்கள் இணைப்பிற்கு

உடல் நலம் பாதித்திருந்தபோதும்

எனது வரலாற்றுக்கடமையை செய்ய

எனது குடும்பத்தவர் பலரது வேண்டுகோளையும் புறந்தள்ளி

நானும் வந்திருந்தேன்

கிட்டத்தட்ட முழுமையான தூரம் நடந்து

கூட்டம் முடியும்வரை நிலையிலேயே நின்றிருந்தபோதும்

எனது கடைமையை செய்யாது விட்டிருந்தால்

இங்கு வராது விட்டிருந்தால்

ஏற்பட்டிருக்கும் மனவலியிலும்பார்க்க......

இது ஒன்றும் பெரிதாய் தெரியவில்லை

பிறஸல்ஸ்.. நகரை மட்டுமல்ல பெல்ஐpயத்தையே 5 அணி நேரம் அசையவிடாது செய்த தமிழனின் தமிழின உணர்வுக்கு தலைவணங்குகின்றேன்

வரும் வீடியோவில் பறை அடித்து உரிமை கேட்டு கோசம் எழுப்பினார்கள்... அங்கே கூடவே நடனம் ஆடுகிறார்களே... அந்த குழுவை இரசித்தவாறுதான் அருகில் வந்தேன்..

அதில் ஆடுபவர்களில் எங்கட மோகன் அண்ணாவும் இளைஞனும் ( +வசியும்)அடக்கம்... :D:D:D

  • தொடங்கியவர்

ஆமாம்

நானும் கண்டேன்

மிகவும் அழகாக வடிவமைத்திருந்தார்கள்

மக்களையும் கவர்ந்திருந்தது

eu_20090317005.jpg

இந்த வண்டியையா சொல்கிறீர்கள்...????

இது யாரோ பாக்கிஸ்தான் காறரிடம் அவங்களின் கல்யாணங்களுக்கு பாவிக்கும் வண்டியை கொண்டு வந்து ஊர்வலம் விட்டு இருக்கிறார்கள்..

Edited by தயா

இந்த வண்டியையா சொல்கிறீர்கள்...????

நான் அதை சொல்லவில்லை.. அதில் சின்ன நோட்டீசில் கிளிநொச்சி ஈ.போ.ச என்று எழுதி எல்லா பக்கமும் ஒட்டி இருந்தார்கள்.

வரும் வீடியோவில் பறை அடித்து உரிமை கேட்டு கோசம் எழுப்பினார்கள்... அங்கே கூடவே நடனம் ஆடுகிறார்களே... அந்த குழுவை இரசித்தவாறுதான் அருகில் வந்தேன்..

அதில் ஆடுபவர்களில் எங்கட மோகன் அண்ணாவும் இளைஞனும் ( +வசியும்)அடக்கம்... :D :D :D

அடிச்ச அடியில மற்றாக்கள் போட்ட கோசங்கள் ஒண்டுமே ஒருவருக்கும் கேக்கவில்லை. அடியா அது.. இடிமாதிரி இருந்திச்சு.

நீங்களும் அதில ஒராளா?

:D :D

  • தொடங்கியவர்

நான் அதை சொல்லவில்லை.. அதில் சின்ன நோட்டீசில் கிளிநொச்சி ஈ.போ.ச என்று எழுதி எல்லா பக்கமும் ஒட்டி இருந்தார்கள்.

:D :D

நான் வந்த வண்டி அல்ல எண்றாலும் எங்களோடு வந்த வண்டி ஒண்றில்தான் ஒட்டி இருந்தார்கள்... அது East ham மில் இருந்து கிழம்பியது...

அடிச்ச அடியில மற்றாக்கள் போட்ட கோசங்கள் ஒண்டுமே ஒருவருக்கும் கேக்கவில்லை. அடியா அது.. இடிமாதிரி இருந்திச்சு.

நீங்களும் அதில ஒராளா?

:D :D

எங்கட மோகன் அண்ணாவையே ஆட வைத்தது எண்டால் பாருங்கோவன்.... அப்படி ஒரு குத்து...!!!

வசியும் வந்தீங்களா?

வசியும் வந்தீங்களா?

நேற்று விடிய 3 மணிக்கு வெளிக்கிட்டது. ஆனால் சிலரின் தாமதத்தால் பஸ் 6.30க்குத்தான் கிளம்பியது. சரியா ஊர்வலம் ஆரம்பித்து வெளிக்கிடும்போது போய் சேர்ந்தோம். பிறகு வீட்டுக்கு வந்ததது இன்று காலை 3 மணிக்குத்தான் ... :D

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

யாழ். கள உறவுகள் ஒரு சந்திப்பை ஏற்படுத்தியிருக்கலாமே????????

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வரலாற்றுக் கடமையை நானும் நிறைவேற்றிய திருப்தியில் இருக்கிறேன்.வீதிமறியல் செய்த இளையோரின் செய்கை குறித்து இருவேறுபட்ட கருத்துக்கள் நிலவின. நான் இளையோர் பக்கம்.கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.இநதச் செய்கைக்கு ஐரோப்பிய ஒன்றியமே பதில் சொல்ல வேண்டும்.ஐரோப்பிய ஒன்றியம் தன் கடமையைச் சரிவரச் செய்திருந்தால் அமைதியை விரும்பும் தமிழ் மக்கள் ஏன் ஆத்திரப்படப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வரலாற்றுக் கடமையை நானும் நிறைவேற்றிய திருப்தியில் இருக்கிறேன்.வீதிமறியல் செய்த இளையோரின் செய்கை குறித்து இருவேறுபட்ட கருத்துக்கள் நிலவின. நான் இளையோர் பக்கம்.கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.இநதச் செய்கைக்கு ஐரோப்பிய ஒன்றியமே பதில் சொல்ல வேண்டும்.ஐரோப்பிய ஒன்றியம் தன் கடமையைச் சரிவரச் செய்திருந்தால் அமைதியை விரும்பும் தமிழ் மக்கள் ஏன் ஆத்திரப்படப் போகிறார்கள்.

சில தவறுகள் இருந்தனதான்

ஆனால் இவ்வளவு கூட்டத்தை கட்டுப்படுத்தி

ஒழுங்கமைத்து

இவ்வளவு நீர்த்தியாக எவருமே

எந்த இனமுமே செய்யமுடியாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள்

அதிலும் ஐரோப்பிய தலைவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என நினைக்கின்றேன்

அதே நேரம் அவர்களுக்கு எம்மால் ஈமெயில்கள் மூலமோ கடிதங்கள் மூலமோ

இதனை விளங்கப்படுத்தமுடியுமாயின் இன்னும் நன்று

ஆம் நானும் கலந்து கொன்டிருந்தென். வன்முறைய் அல்ல என்கள் நொக்கம் அதய் ஜரோப்பி நாடுகல்தான் எமக்கு தினித்தன

கலகம் செய்தல்தன் நீயாயம் கிடைக்கும் என்றல் எமக்கு எது விதி

அந்த வரலாற்றுக் கடமையை நானும் நிறைவேற்றிய திருப்தியில் இருக்கிறேன்.வீதிமறியல் செய்த இளையோரின் செய்கை குறித்து இருவேறுபட்ட கருத்துக்கள் நிலவின. நான் இளையோர் பக்கம்.கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.இநதச் செய்கைக்கு ஐரோப்பிய ஒன்றியமே பதில் சொல்ல வேண்டும்.ஐரோப்பிய ஒன்றியம் தன் கடமையைச் சரிவரச் செய்திருந்தால் அமைதியை விரும்பும் தமிழ் மக்கள் ஏன் ஆத்திரப்படப் போகிறார்கள்.

:D "எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா, இவன் ரொம்ப நல்லவன்டா" என்ற எண்ணப்போக்கில் இன்னும் எத்தனை காலத்துக்கு நாங்கள் இருக்கப்போகிறோமோ தெரியவில்லை. புதிய தலைமுறையினர் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள். அவர்கள் அரசியல் வழியிலும் போராடுவார்கள். இதுபோன்ற ஆர்ப்பாட்ட வழிகளிலும் போராடுவார்கள்.

இளைஞர்கள் நாம் எந்தவித வன்முறையும் இன்றி, பிரதான வீதி ஒன்றை மறித்து போராட்டம் நடத்தினோம். 1 மணித்தியாலத்துக்கும் மேலாக அந்த வீதியை மறித்து கொட்டொலிகளை எழுப்பினோம். "எங்கள் தலைவர் பிரபாகரன்", "எங்களுக்கு தமிழீழம் வேண்டும்", "சிறிலங்காவே போரை நிறுத்து", "தமிழ் மக்களைக் கொல்லாதே" போன்ற கொட்டொலிகளை எழுப்பி பதாகைகளை உயர்த்திப் பிடித்தோம். தமிழீழத் தேசியக் கொடியை அசைத்து அசைத்து நாம் "எங்களுக்கு தமிழீழம் வேண்டும்" என்பதை உரக்கச் சொல்லி வைத்தோம். இத்தனைக்கும் பலர் மேலே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாம் வீதியில் அமர்ந்து கத்தத் தொடங்கினோம். ஒருபக்க வீதியை மட்டுமே மறித்து நின்றோம். மற்றைய பக்க வீதியையும் மறிக்க சிலர் முற்பட்டபோது காவல் துறையினர் அவர்களை தடுத்து பின்தள்ளிவிட்டார்கள். மேலதிக காவல்துறையினரையும் அங்கு வரவழைத்தார்கள். அவர்கள் சாலையிலிருந்து எம்மை அப்புறப்படுத்த முயன்றார்கள். நாம் விடவேயில்லை. எம்மவர்களும் வீதியிலிருந்து கலையுமாறு எம்மை வற்புறுத்தினார்கள். நாம் கலையவில்லை. எம்மை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாத நிலையில் அங்கு நீண்ட வரிசையாக நின்றிருந்த வாகனங்களை வேறு வழியாகத் திருப்பி அனுப்பினார்கள். அப்படியிருந்தும் நாம் அங்கிருந்து எழும்பவில்லை. இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் "பிடித்து" கொண்டு போனார்கள். அவர்களை விடுமாறு நாம் கோரிக்கை வைத்தோம். அவர்களை விடுதலை செய்தால் தான் நாம் அங்கிருந்து கலைவோம் என்றோம். நாம் கலைந்தால் தான் தாம் விடுவோம் என்றார்கள். நாம் மறுத்துவிட்டோம். ஐரோப்பிய ஆணையகத்திலிருந்து ஒருவரை வந்து "எமது பிரச்சனைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்" என்று உறுதி தருமாறு கோரிக்கை வைத்தோம். கடைசியாக அவர்கள் இதுபற்றி பேசுவதாக ஒப்புக்கொண்டதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் எம்மை 50 மீட்டர்கள் பின்நகர்ந்தால் "பிடித்து" சென்ற இரு இளைஞர்களையும் விடுதலை செய்வதாகச் சொன்னார்கள். நாம் பின்நகர்ந்தோம். ஆனால் காவல்துறையினரும் எம்மை நோக்கி முன்நகர்ந்தார்கள். நாம் எம்மை அவர்கள் ஏமாற்றுவதாகக் கத்தினோம். ஒருபுறம் காவல்துறையினர் எம்மைக் கலைந்துசெல்லுமாறு அழுத்தம் தந்தார்கள். மறுபுறம் எம்மவர்கள் சிலர் எம்மை கலைந்துசெல்லுமாறு அழுத்தம் தந்தார்கள். நாம் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருசிலர் பின்நகராமல் நின்றபோது, காவல்துறையினர் அவர்களைத் தள்ள முனைந்தார்கள். யார்மீதும் கைபடக்கூடாது என்று குரலெழுப்பினோம். எமது கோரிக்கையில் உறுதியாக இருந்தோம். ஒரு சிலர் பதாகைளின் தடியை கழற்றி காவல்துறையினரை தாக்க முனைந்தார்கள். நாம் அவர்களைத் தடுத்து நிறுத்தினோம். இறுதியாக அவர்கள் பிடித்து சென்ற இருவரையும் விடுவித்தார்கள். எம்மிடம் கையளித்தார்கள். நாம் ஐரோப்பிய ஆணையகத்திலிருந்து ஒருவரை வந்து எமக்கு உறுதி வழங்குமாறு கோரிக்கை வைத்து கலையாதிருந்தோம். ஆனாலும் எம்மவர்கள் (பொறுப்பிலிருந்தவர்கள் சிலர்) நாம் இங்கு இப்படியிருப்பதால் பேரணியில் குழப்பம் ஏற்பட்டுவிடும் என்று கருதியதால், நாம் கலைந்துசெல்ல முடிவெடுத்தோம். அப்படி ஐரோப்பிய ஆணையகம் எமது பிரச்சனை தொடர்பாக கதைக்காவிட்டால் பேரணியின் முடிவிடத்தில் மீண்டும் இதேபோன்று சாலை மறியல் செய்வோம் என்று சொல்லி கலைந்துசென்றோம்.

இறுதியில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் அளித்த விடயம் என்னவென்றால், எமது கோரிக்கை மனுவை ஐரோப்பிய ஆணையகம் வாங்க மறுத்தது என்றும், 20ம் திகதி இளையோர் அமைப்பு உறுப்பினர்கள் 5 பேர் அங்கு சென்று கையளிக்கும் போது வாங்குவார்கள் என்றும் மேடையில் சொல்லப்பட்டது. இத்தனையாயிரம் மக்கள் தமது வேலையை விட்டு, படிப்பை விட்டு, எவ்வளவோ தூரங்களிலிருந்து, மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அங்கு வந்து கோரிக்கை மனு கொடுத்தால் வாங்க மாட்டார்களாம். அப்படியென்றால் எதற்காக இத்தனை பேர் கூடினோம். வெறுமனே ஐந்துபேர் போய் மனுவைக் கொடுத்துவிட்டு வந்திருக்கலாமே? இந்த மக்கள்சக்திக்கு மதிப்பில்லயா? அவர்கள் சொன்னார்கள் என்று நாமும் ஏன் வாய் மூடி மெளனித்திருந்தோம். இதனைக் காரணமாக வைத்து மிகப்பெரும் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. ஏனென்றால் எம்மவர்கள் "பிரச்சனை பண்ணக்கூடாது" என்கிற மனநிலையில் தான் இருக்கிறார்கள். "போனம், வந்தம், கடமை முடிஞ்சுது" என்ற மனநிலையில் தான் இருக்கிறார்கள். புரட்சிகரமாக சிந்திக்கவும் செயலாற்றவும் இவர்கள் தயாராக இல்லை. கலகம் செய்யத் தயாராக இல்லை. ஆனால், எம்மைப்போன்ற தலைமுறை இனியும் இனியும் பொறுத்திருக்காது. இந்தத் தலைமுறையின் கோபம் தனது பல்வேறு பரிமாணங்களைக் காட்டத் தொடங்கும். அதை இந்த ஐரோப்பிய அதிகார வர்க்கம் நிச்சயமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும். :D

இறுதியில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் அளித்த விடயம் என்னவென்றால், எமது கோரிக்கை மனுவை ஐரோப்பிய ஆணையகம் வாங்க மறுத்தது என்றும், 20ம் திகதி இளையோர் அமைப்பு உறுப்பினர்கள் 5 பேர் அங்கு சென்று கையளிக்கும் போது வாங்குவார்கள் என்றும் மேடையில் சொல்லப்பட்டது.

அதுதான் எனக்கும் ஆத்திரம்.. மனுவை வாங்க வைத்திருக்க வேண்டும்...

மேடையில் அறிவித்திருந்தால் மக்கள் அங்கேயே இடத்தைவிட்டு அசையாமல் அமர்ந்திருப்பார்கள்.

ஏன் அவ்வாறு செய்யவில்லை என்று எனக்கு புரியவில்லை... அங்கு செய்த வீதி மறிப்பு போராட்டத்தை

இளையோர்கள் இங்கும் செய்திருக்கலாம்...

சும்மா கூட்டம் போட்டு பாட்டுப்பாடி ஆடவா போனோம்?

இளையேர்கள் அறிவித்திருந்தால் மக்கள் அப்படியே இருந்திருப்பார்கள். ஏன் அப்படி செய்யவில்லை???

Edited by வசி_சுதா

ஓம். செய்திருக்கலாம். ஆனால், எங்களால் தான் எல்லாம் குழம்பியது என்று எம்மவரே எம்மைக் கைவிட்டு போயிருப்பார்கள். வேடிக்கை பார்க்க மட்டுமே அவர்களால் முடியும். எம்மோடு இணைந்து கலகம் செய்ய அவர்களால் முடியாது. எம்மைப் பிரச்சனைக்குரியவர்களாக மாற்றிவிட்டு அவர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள். அதுதான் உண்மை. :D

கூட்டம் முடிந்தவுடன் எல்லா மக்களும் இதையேதான் பேசினார்கள். இளையோர்கள் 5 பேரை மனு கொண்டுவரச் சொன்னவுடன் அவர்கள் அதையே பெருமிதமாக கருதி மக்கள் சக்தியை மறந்துவிட்டார்கள் போலும்.

ஓம் மறுபடி கிடைத்த, மிகப் பொருத்தமான சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டுவிட்டோம் என்பது உண்மையே.

Edited by இளைஞன்

ஓம். செய்திருக்கலாம். ஆனால், எங்களால் தான் எல்லாம் குழம்பியது என்று எம்மவரே எம்மைக் கைவிட்டு போயிருப்பார்கள். வேடிக்கை பார்க்க மட்டுமே அவர்களால் முடியும். எம்மோடு இணைந்து கலகம் செய்ய அவர்களால் முடியாது. எம்மைப் பிரச்சனைக்குரியவர்களாக மாற்றிவிட்டு அவர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள். அதுதான் உண்மை.

இல்லை இளைஞன் மக்கள் பலரும் பேசியதை நான் கேட்டேன். 'அதிலேயே இருந்திருக்க வேண்டும்.. இந்த இளையோர்கள் ஏன் இதை மக்களிடம் சொல்லவில்லை. கூட்டம் முடியப் போகிற வேளையில் சொன்னார்கள்' என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மக்கள்சக்திக்கு மதிப்பில்லயா? அவர்கள் சொன்னார்கள் என்று நாமும் ஏன் வாய் மூடி மெளனித்திருந்தோம். இதனைக் காரணமாக வைத்து மிகப்பெரும் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. ஏனென்றால் எம்மவர்கள் "பிரச்சனை பண்ணக்கூடாது" என்கிற மனநிலையில் தான் இருக்கிறார்கள். "போனம், வந்தம், கடமை முடிஞ்சுது" என்ற மனநிலையில் தான் இருக்கிறார்கள். புரட்சிகரமாக சிந்திக்கவும் செயலாற்றவும் இவர்கள் தயாராக இல்லை. கலகம் செய்யத் தயாராக இல்லை. ஆனால், எம்மைப்போன்ற தலைமுறை இனியும் இனியும் பொறுத்திருக்காது. இந்தத் தலைமுறையின் கோபம் தனது பல்வேறு பரிமாணங்களைக் காட்டத் தொடங்கும். அதை இந்த ஐரோப்பிய அதிகார வர்க்கம் நிச்சயமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

எல்லாரும் நல்ல உணர்ச்சி ததும்பப் பேசுறீங்கள். ஆனால் வன்னி நிலவரம் என்பது இந்தப் பேச்சுக்குளால் மாற்றம் கண்டதாகத் தெரியவில்லை. சிறீலங்கா அரசு பணிந்ததாகவும் தெரியவில்லை...!

ஐரோப்பிய அமெரிக்க சார்பு அதிகார வர்க்கத்தை அசைக்கின்ற அந்த நாளை எதிர்பார்க்கின்றார்கள் மக்கள். ஈராக் மீது போர் வேண்டாம் என்று பல்கலைக்கழகங்களில் உலக மாணவ சமூகம் ஆர்ப்பாட்டம் செய்ததை கண்டுகொள்ளாத அதிகார வர்க்கங்களை.. ம்ம்.. தமிழ் இளசுகள் மாற்றப் போகினமாம் பார்ப்போம்.

இவர்கள் அதிகார வர்க்கங்களில் மாற்றங்களை உண்டு பண்ண முதல்.. வன்னியில் கதை முடிஞ்சிடும் போல இருக்கு. எதுக்கும் இளைஞர்கள் யுவதிகள் சுறுசுறுப்பா இயங்கி மாற்றத்தை விரைவுபடுத்துங்கோ..! :D :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் இளைஞன். எனக்கு என்ன கவலையென்றால், மற்றவர்களை விட, நம்மவர்கள் தான் அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று தடுப்பதில் முதலிடத்தில் நிற்கின்றார்கள். சமீபத்தில் ஒரு பெரியார், "கனடாவில் இளையோர்கள் வீதியின் குறுக்கே படுத்திருந்ததைக் கண்டித்தார்."கௌவரைமான ஆர்ப்பாட்டம் செய்கின்றோம் என்று எல்லோரும் புகழ்கின்றார்களே, ஏன் இப்படி மக்களுக்கு இடையூறு செய்கின்றீர்கள் என்று.

எனக்குப் புரியவில்லை. மற்றவர்களிடம் நற்சான்றிதழ் வாங்குவதற்காகவா இந்த ஆர்ப்பாட்டங்கள், தொண்டை கிழியக் கத்தல்கள்??

அங்கே மக்கள் மரணிக்கின்றபோது தடுக்க முடியாத ஏமாற்றங்கள், தவிப்புக்கள், இயலாமைகள் தான் இப்படியான செய்கைகளைத் தூண்டுகின்றது.

நாங்கள் செய்கின்ற எந்தப் போராட்டங்களும் நல்ல விளைவினைத் தரவேண்டும். எம் வலிகளை உணரச் சொல்லித் தான் கேட்கின்றோம். அது தான் எம் உணர்வவு

Edited by தூயவன்

எல்லாரும் நல்ல உணர்ச்சி ததும்பப் பேசுறீங்கள். ஆனால் வன்னி நிலவரம் என்பது இந்தப் பேச்சுக்குளால் மாற்றம் கண்டதாகத் தெரியவில்லை. சிறீலங்கா அரசு பணிந்ததாகவும் தெரியவில்லை...!

ஐரோப்பிய அமெரிக்க சார்பு அதிகார வர்க்கத்தை அசைக்கின்ற அந்த நாளை எதிர்பார்க்கின்றார்கள் மக்கள். ஈராக் மீது போர் வேண்டாம் என்று பல்கலைக்கழகங்களில் உலக மாணவ சமூகம் ஆர்ப்பாட்டம் செய்ததை கண்டுகொள்ளாத அதிகார வர்க்கங்களை.. ம்ம்.. தமிழ் இளசுகள் மாற்றப் போகினமாம் பார்ப்போம்.

இவர்கள் அதிகார வர்க்கங்களில் மாற்றங்களை உண்டு பண்ண முதல்.. வன்னியில் கதை முடிஞ்சிடும் போல இருக்கு. எதுக்கும் இளைஞர்கள் யுவதிகள் சுறுசுறுப்பா இயங்கி மாற்றத்தை விரைவுபடுத்துங்கோ..! :D :D

ஓமோம். மற்றாக்களுக்கு அதை செய்யுங்கோ இதை செய்யுங்கோ என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களும் நேரடியாக களத்தில் இறங்கினால் விரைவுபடுத்தலாம் பாருங்கோ. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம். மற்றாக்களுக்கு அதை செய்யுங்கோ இதை செய்யுங்கோ என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களும் நேரடியாக களத்தில் இறங்கினால் விரைவுபடுத்தலாம் பாருங்கோ. :D

களத்தில தானுங்கோ நிக்கிறம். நாங்களும் எங்களால இயன்றதுகளை செய்து கொண்டுதான் இருக்கிறம்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால்.. ஐரோப்பிய அதிகாரமட்டங்களுக்கு செய்யுறம் வேலையை பார் என்று சவால் விட்டதோட நின்றிடாம விடுற சவாலால மக்களுக்கு நன்மையை உண்டு பண்ணிக்காட்டினீங்க என்றால் மக்கள் இன்னும் உங்களின் பின்னால் அணிதிரள்வினம். மக்கள் திரளமாட்டம் என்றா சொல்லினம். இல்லையே.

அளவுக்கு அதிகமா உணர்ச்சி வசப்பட்டால்.. இப்ப ஊர்வலம் நடத்த கிடைக்கிற அனுமதியும் இல்லாமல் போகலாம். பறக்கிற புலிக்கொடியை சுத்தி வைச்சு காருக்குள்ள ஒளிச்சுக் கொண்டு திரிய வேண்டிய நிலையும் வரலாம்.

ஆனால் இது பேசிக்கொண்டிருப்பதற்குரிய நேரமாகவோ.. ஆலோசனை செய்து கொண்டிருப்பதற்குரிய நேரமாகவோ தெரியல்ல. துரித செயற்பாட்டுக்கான நேரமாகவே தெரியுது. :D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.