Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பிரச்சினை தொடர்பாக பிரித்தானியாவின் Press tv இல் ஒளிபரப்பாகிய கருத்து மன்றம்

Featured Replies

http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

http://217.218.67.244/presstv/program/Forum/0310_FORUM.wmv

  • Replies 66
  • Views 4.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு சந்தர்ப்பம் நம்மவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை போல் தெரிகிறது.

சிங்கள அரசியல் அமைப்பு சட்டைத்தை அம்பலபடுத்த தவறிவிட்டார்கள். பெளத்த சிங்களவன் ஒருவன்தான் ஜனாதிபதியாக வரமுடியுமென்ற சட்டத்தையெல்லாம் எடுத்து காட்டியிருக்கலாம்.

இணைப்புக்கு நன்றி.

நடா சொல்வது போல பல விடங்கள் இருந்தும் விடுபட்டுப் போயுள்ளன.

1. சிங்கள பெளத்தர்களை தவிர்த்து வேறெவரும் ஜனாதிபதியோ பிரதமரோ ஆக முடியாதென்பதை சுட்டிக் காட்டியிருக்கலாம்.

2. தமிழ் மொழி அரச கரும மொழியாக இருந்தாலும் அவை முறையாக பயன்படுத்தப்படுவதில்லை.

அவை அச்சில் மட்டுமே உள்ளது. அது நடைமுறையில் சரியாக இல்லை.

3. தமிழ் அரச ஊழியர்கள் சிங்கள மொழியில் சிந்தியடைந்தால் மட்டுமே சம்பள அதிகரிப்பு மற்றும் உயர்வுகளை பெறமுடியும்.

இதே நடைமுறை சிங்கள மக்களுக்கு இல்லை. சரியென்றால் சிங்கள மக்களும் தமிழில் சித்தியடைய வேண்டும் எனும் சட்டம் இருத்தல் வேண்டும்.

4. தமிழ் பேசும் மாணவர்கள் மற்றும் சிங்கள மாணவர்களது தரப்படுத்தல் முறை.

5. தமிழ் பேசும் மக்கள் தென் இலங்கையில் பரந்து வாழ்வது உண்மையெனில்

அங்கிருந்து தமிழர்கள் 1983ல் வெளியேற்றமை போன்று

அண்மையிலும் வவுனியாவுக்கு பலவந்தமாக பிடித்து வெளியேற்றப்பட்டமை.

6. தமிழ் பிரதேசங்கள் மற்றும் சிங்கள பிரதேசங்களின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு முறை.

7. மலையக பகுதியில் வாழும் மலையக மக்களது வாழ்வு நிலை.

8. பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் உள்ள இன அடையாளங்கள். (பொதுவாக இலங்கையர் என்று இல்லாமல்)

விடுபட்ட பகுதிகளை தெரிந்தவர்கள் இணைத்தால் இதுபோன்ற கருத்துகள் பேசுவோருக்கு பயன் தரும்.

முஸ்லீம்கள் புலிகளால் கொல்ல பட்டமை பற்றிய கேள்விக்கு இண்று இலங்கை அரசில் அமைச்சராக இருந்த கருணாவினால் நிகழ்த்த பட்டமைக்கு கேள்வி கேட்க்க பட வேண்டியவர் கருணா...

Edited by தயா

இது தொடர்பான கருத்து பதிவுக்கு இணைப்பு இருந்தால் இணைக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

சில ஆதாரங்களைக் கொண்டு சென்று அம்பலப்படுத்தியிருக்கலாம். ஐநா அறிக்கை. மனிதஉரிமைகள் அமைப்பின் அறிக்கையைகள்.

சிங்கள அரசுக்குப் பேசுகின்றவர் தொடக்கத்திலேயே புலிகள் தமிழ் தலைவர்களைக் கொன்றார்கள் எனப் பொய்ப் பிரச்சாரத்தை எடுத்துவிடுகின்றார். அதற்குக் கதிர்காமரையும் தமிழர் என எடுத்து விடுகின்றார். இது இன்றல்ல, பல தடவைகள் இப்படியான பிரச்சாரங்களையே சிங்கள அரசு செய்கின்றது. இதை முறியடிக்கும் வண்ணம், நாங்களும் பதில்களைத் தயாராக வைத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும்.

கதிர்காமர் கொல்லப்பட்டதற்கு இன்னுமொரு காரணம் இருக்கலாம் என்பதை மறந்து விடுகின்றோம். மகிந்த ராஜபக்ச பிரதமருக்குப் போட்டி போடத் தெரிவு செய்யப்பட்டபோது, மறுபக்கம் தெரிவு செய்யப்பட்டவர் கதிர்காமர். என்ன தான் நாங்கள் தமிழ் தெரியாத ஒருவன் தமிழன் இல்லை என்றாலும், சிங்கள அரசை அண்டிப்பிழைத்த கதிர்காமரைச் சிங்கள அரசு தமிழன் என்றே நினைக்கின்றது. அமிர்தலிங்கம் ஒரு தடவை எதிர்க்கட்சித் தலைவராக வந்ததற்காக அரசியலமைப்பையே மாற்றியது நிங்கள அரசு. கதிர்காமர் பிரதமர் ஆகும் தகுதி உண்டெனில் விட்டா வைக்கப் போகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனைப்புக்கு நன்றி

நல்தொரு சந்தர்பம் இருந்தாலும் எங்களுக்காக வாதாடியவர்கள் இன்னும் பல விடயங்களை கூறியிருக்கலாம் இருந்தாலும் நன்றாக வாதாடினார்கள்

இங்கே பலரும் மறந்து போன அல்லது பாராளுமன்ற கதிரைகளுக்காக மூடி மறைக்கின்ற வரலாற்றுப் பிpழை ஒன்று தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.அதாவது இலங்கை என்ற பதம் சிறீலங்கா தமிழீழம் என்ற இருண்டு நாடுகளை உள்ளடக்கிய ஒரு நிலப்பரப்பை குறிக்கின்ற பதமாகும்.

சிறீலங்கா அரசுக்கு தமிழர் நிலப்பரப்பை அதாவது தமிழீழ நாட்டை சட்டரீதியாக உரிமை கொண்டாடும் தாற்பரியம் இல்லை.

யாழ்ப்பாணம்(வன்னி உட்பட) கண்டி கோட்டை என்று முன்று இறைமையுள்ள அரசுகளாக இருந்த இலங்கைத் தீவு 1833 ம் ஆண்டு பிரித்தானிய காலனிய ஆட்சியர்களின் நிர்வாக வசதி கருதி கோல் புறுக் மற்றும் கமருன் ஆணைக் குழுக்களின் சிபார்சின் பாற்பட்ட அரசியல் சட்டத்தின் கீழ் சிலோன் என்ற ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. பிரித்தானி முடியாட்சின் மேற்பார்வையில் இருந்த இந்த ஒற்றையாட்சி ஆட்சிமுறை டொனமூர் மற்றும் சோல்பரி அரசிலமைப்புகளின் கீழ் உறுதி செய்யப்பட்டு 1972 ம் ஆண்டு வரை தொடர்ந்தது.

1972 ம் ஆண்டு மே மாதம்; 22 ம் திகதி இந்த பிரித்தானிய அரசியல் அமைப்பையும் அதன் கீழான ஆட்சிமுறையையும் அகற்றி குடியரசு ஆட்சி முறை அதாவது சிறீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசு ஆட்சி முறை கொண்டுவரப்பட்டது.

இந்த ஆட்சி அமைப்பை உருவாக்குவதற்காக அரசிலமைப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.இந்த குழுவை தமிழ் மக்கள் புறக்கணித்தார்கள்.அது போல் அரசியல் மாற்றத்துக்காக நடந்த சர்வசன வாக்கெடுப்பையும் தமிழ் மக்கள் புறக்கணித்;தார்கள்.

அதாவது தமிழ் மக்களின் சம்மதம் இன்றியே சிறீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசு உருவாகியது.இந்த குடியரசு உருவாகத்தின் மூலம் பிரித்தானிய ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் சம்மதம் இன்றி இணைக்கப்பட்ட யாழ்ப்பாண இராட்சியத்தின் அதாவது தமிழீழத்தின் இறைமை விடுதலை பெறுகிறது.1948ல் டொனமூர் அரசில் அமைப்பின் கீழ் தங்களுக்கு கிடைத்த ஆட்சியதிகாரத்தை வைத்து தமிழர் தாயகத்தை அதிகாரம் செய்வதற்கு சிங்கள ஆட்சியாளர்களுக்கு இருந்த உரிமை இந்த குடியரசு ஆட்சிமைப்பின் கீழ் சட்ட ரீதியாக இல்லாமல் போய் விடுகிறது.

ஆனால் இந்த குடியரசு அரசியல் அமைப்பை உருவாக்கிய சிறீமாவே பண்டாரநாயக்கா அரசாங்கம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசு அரசியல் அமைப்பையும் அதன் கீழான பாராளுமன்ற அமைப்பையும் ஏற்றுக் கொள்வதாக 6 மாத காலத்துக்குள் சத்தியப் பிரமாணம் செய்யாது விட்டால் அவர்களுது பாராhளுமன்றப் பதவிகள் பறி போய்விடும் என்று அறிவித்ததை அடுத்து இன்றைய மாற்றுக் கருத்தாளர்களின் அரசியல் குரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான குழுவினர் ஓடோடிச் சென்று சத்தியப் பிரமாணம் செய்ததை வைத்துக் கொண்டு தமிழர் தாயத்தை ஆளுமை செய்யும் உரிமை தங்களுக்கு இருக்கிறது என்று சிங்கள அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது.உண்மையில் இது எந்தளவுக்கு சட்டரீதியாக செல்லுபடியாகும் என்பதை சட்ட வல்லுனர்கள் ஆராயந்து பிரித்தானிய நீதி மன்றத்தில் அந்த அரசிடம் அவர்கள் பறித்த எமது இறைமையை மீட்டுத் தரும்;படி வழக்குத் தொடுக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

Riots என்ற வார்த்தை இரு இனமும் ஒருவரோடு ஒருவர் அடிபடும் போது தான் பாவிக்கப்பட வேண்டும். தமிழர் 1958 இல் இருந்தே (அல்லது அதற்கு முன்பிருந்தோ) சிங்களவர்களால் அடித்து வெட்டி கற்பளிக்கப்பட்டுக்கொண்டிரு

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பல கேள்விகள்

ஏன் இப்படியும் கேட்டிருக்கலாம்

60 வீதமான தமிழர்கள் வடக்குகிழக்குக்கு வெளியில் இருப்பதாக கூறுவதை ஏற்பது என்றால் தங்களது இராணுவத்தில் எத்தனைவீதம் தமிழர்

என்றும் கேட்டிருக்கலாம்

இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Robert Evans Contact information

http://www.robertevansmep.net/touch/index.shtml

Constituency Office

101 High Street

Feltham

Middlesex TW13 4HG

Tel: 020 8890 1818

Fax: 020 8890 1628

e-mail: robertevansmep@btclick.com

Brussels Office

ASP 13G 342

European Parliament

Rue Wiertz 60

B-1047 Brussels

Tel: 00 322 284 5298

Fax: 00 322 284 9298

email: robert.evans@europarl.europa.eu

இணைப்புக்கு நன்றி.

நடா சொல்வது போல பல விடங்கள் இருந்தும் விடுபட்டுப் போயுள்ளன.

1. சிங்கள பெளத்தர்களை தவிர்த்து வேறெவரும் ஜனாதிபதியோ பிரதமரோ ஆக முடியாதென்பதை சுட்டிக் காட்டியிருக்கலாம்.

நடா சொன்னதும், நீங்கள் சொல்வதும் தவறான உதாரணங்கள். காரணம் இலங்கையில் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவரெவரும் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வர முடியாதென்று எந்தச் சட்டமும் இல்லை. அதனால் 1977 இல் யுஎன்பிக் கட்சி அறுதிப் பெருண்பான்மை பெற்றதால், அதற்கடுத்த நிலையில் மற்றைய சிங்களக் கட்சிகளை விட கூட்டணி அதிக இடங்கள் பெற்று ஒரு தமிழர் எதிர்க்கட்சித் தலைவராக வர முடிந்தது. ஆனால் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வர முடியாமல் இருப்பதற்கு உண்மையான காரணங்களாக வேண்டுமானால் இரண்டு விடயங்களைக் குறிப்பிடலாம்.

1) பெருண்பான்மை இனமாக சிங்கள இனம் ( 74 வீதம்) இருப்பது.

2) இலங்கையில் இந்தியாவைப் போல் எல்லா இன மக்களைளயும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியக் கட்சிகள் கிடையாது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின் எல்லா இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியக் கட்சிகள் உருவாகியிருந்தால், தற்போதைய பல பிரைச்சினைகள் இல்லாமல் போயிருக்கும்.

யாழ்க்களம் பலர் பார்க்கும் களம். எனவே தயவுசெய்து விவாதிக்கும் விடயங்களை முடிந்தவரை சரியாகத் தெரிந்து கொண்டு விவாதியுங்கள். இல்லையேல் உங்கள் அறியாமைகள் தான் வெளிப்பட்டுவிடும்.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

1977 இல் யுஎன்பிக் கட்சி அறுதிப் பெருண்பான்மை பெற்றதால், அதற்கடுத்த நிலையில் மற்றைய சிங்களக் கட்சிகளை விட கூட்டணி அதிக இடங்கள் பெற்று ஒரு தமிழர் எதிர்க்கட்சித் தலைவராக வர முடிந்தது

1977ல் தேர்தல் வரை ஒவ்வொரு தொகுதியில் அதிக வாக்குகள் பெறும் ஒருவர் பாராளுமன்றத்துக்கு செல்ல முடியும்.1977 தேர்தலில் ஐ.தே.க 3,179,221 வாக்குகள் பெற்றது. 140 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக்கூட்டணி 421,488 வாக்குகள் பெற்றது. 18 இடங்களில் வெற்றி பெற்றது. சிறிலங்கா சுதந்திரக்கட்சி பெற்ற வாக்குகள் 1,855,331 ஆனால் வெற்றி பெற்ற தொகுதிகள் 8. இதனால் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவர் ஆனார். அதாவது 6.4 வீதம் வாக்குகள் பெற்ற கூட்டணி, 29.7 வீதம் வாக்குகள் பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட அதிக இடங்கள் பெற்றதினால் வெற்றி பெற்றது. இதனால் குள்ள நரி ஜே. ஆர் இனிமேல் தமிழர் எதிர்க்கட்சித்தலைவராக வர முடியாமல் இருப்பதற்கு விகிதசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தலில் மாற்றம் கொண்டு வந்தார்.

இங்கே பலரும் மறந்து போன அல்லது பாராளுமன்ற கதிரைகளுக்காக மூடி மறைக்கின்ற வரலாற்றுப் பிpழை ஒன்று தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.அதாவது இலங்கை என்ற பதம் சிறீலங்கா தமிழீழம் என்ற இருண்டு நாடுகளை உள்ளடக்கிய ஒரு நிலப்பரப்பை குறிக்கின்ற பதமாகும்.

சிறீலங்கா அரசுக்கு தமிழர் நிலப்பரப்பை அதாவது தமிழீழ நாட்டை சட்டரீதியாக உரிமை கொண்டாடும் தாற்பரியம் இல்லை.

யாழ்ப்பாணம்(வன்னி உட்பட) கண்டி கோட்டை என்று முன்று இறைமையுள்ள அரசுகளாக இருந்த இலங்கைத் தீவு 1833 ம் ஆண்டு பிரித்தானிய காலனிய ஆட்சியர்களின் நிர்வாக வசதி கருதி கோல் புறுக் மற்றும் கமருன் ஆணைக் குழுக்களின் சிபார்சின் பாற்பட்ட அரசியல் சட்டத்தின் கீழ் சிலோன் என்ற ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. பிரித்தானி முடியாட்சின் மேற்பார்வையில் இருந்த இந்த ஒற்றையாட்சி ஆட்சிமுறை டொனமூர் மற்றும் சோல்பரி அரசிலமைப்புகளின் கீழ் உறுதி செய்யப்பட்டு 1972 ம் ஆண்டு வரை தொடர்ந்தது.

1972 ம் ஆண்டு மே மாதம்; 22 ம் திகதி இந்த பிரித்தானிய அரசியல் அமைப்பையும் அதன் கீழான ஆட்சிமுறையையும் அகற்றி குடியரசு ஆட்சி முறை அதாவது சிறீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசு ஆட்சி முறை கொண்டுவரப்பட்டது.

இந்த ஆட்சி அமைப்பை உருவாக்குவதற்காக அரசிலமைப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.இந்த குழுவை தமிழ் மக்கள் புறக்கணித்தார்கள்.அது போல் அரசியல் மாற்றத்துக்காக நடந்த சர்வசன வாக்கெடுப்பையும் தமிழ் மக்கள் புறக்கணித்;தார்கள்.

அதாவது தமிழ் மக்களின் சம்மதம் இன்றியே சிறீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசு உருவாகியது.இந்த குடியரசு உருவாகத்தின் மூலம் பிரித்தானிய ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் சம்மதம் இன்றி இணைக்கப்பட்ட யாழ்ப்பாண இராட்சியத்தின் அதாவது தமிழீழத்தின் இறைமை விடுதலை பெறுகிறது.1948ல் டொனமூர் அரசில் அமைப்பின் கீழ் தங்களுக்கு கிடைத்த ஆட்சியதிகாரத்தை வைத்து தமிழர் தாயகத்தை அதிகாரம் செய்வதற்கு சிங்கள ஆட்சியாளர்களுக்கு இருந்த உரிமை இந்த குடியரசு ஆட்சிமைப்பின் கீழ் சட்ட ரீதியாக இல்லாமல் போய் விடுகிறது.

ஆனால் இந்த குடியரசு அரசியல் அமைப்பை உருவாக்கிய சிறீமாவே பண்டாரநாயக்கா அரசாங்கம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசு அரசியல் அமைப்பையும் அதன் கீழான பாராளுமன்ற அமைப்பையும் ஏற்றுக் கொள்வதாக 6 மாத காலத்துக்குள் சத்தியப் பிரமாணம் செய்யாது விட்டால் அவர்களுது பாராhளுமன்றப் பதவிகள் பறி போய்விடும் என்று அறிவித்ததை அடுத்து இன்றைய மாற்றுக் கருத்தாளர்களின் அரசியல் குரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான குழுவினர் ஓடோடிச் சென்று சத்தியப் பிரமாணம் செய்ததை வைத்துக் கொண்டு தமிழர் தாயத்தை ஆளுமை செய்யும் உரிமை தங்களுக்கு இருக்கிறது என்று சிங்கள அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது.உண்மையில் இது எந்தளவுக்கு சட்டரீதியாக செல்லுபடியாகும் என்பதை சட்ட வல்லுனர்கள் ஆராயந்து பிரித்தானிய நீதி மன்றத்தில் அந்த அரசிடம் அவர்கள் பறித்த எமது இறைமையை மீட்டுத் தரும்;படி வழக்குத் தொடுக்க வேண்டும்

நீங்கள் குறிப்பிடுவது போல் தமிழீழம் என்ற சொற்பிரயோகம் முன்பு இருக்கவில்லை. பின்பு தான் வந்தது. ஆனால் ஈழம் என்ற சொற்பிரயோகம் இலங்கையின் மறு பெயராகவே முன்பு இருந்தது. அது போல் வன்னியிலும் முன்பு தனி அரசு இருந்தது. அத்துடன் சிறிமாவின் காலத்தில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுத்தலைவராக இருந்தவர் நீங்கள் குறிப்பிடுவது போல் அமிர்தலிங்கம் அல்ல தந்தை செல்வநாயகம் அவர்களே.

1977ல் தேர்தல் வரை ஒவ்வொரு தொகுதியில் அதிக வாக்குகள் பெறும் ஒருவர் பாராளுமன்றத்துக்கு செல்ல முடியும்.1977 தேர்தலில் ஐ.தே.க 3,179,221 வாக்குகள் பெற்றது. 140 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக்கூட்டணி 421,488 வாக்குகள் பெற்றது. 18 இடங்களில் வெற்றி பெற்றது. சிறிலங்கா சுதந்திரக்கட்சி பெற்ற வாக்குகள் 1,855,331 ஆனால் வெற்றி பெற்ற தொகுதிகள் 8. இதனால் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவர் ஆனார். அதாவது 6.4 வீதம் வாக்குகள் பெற்ற கூட்டணி, 29.7 வீதம் வாக்குகள் பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட அதிக இடங்கள் பெற்றதினால் வெற்றி பெற்றது. இதனால் குள்ள நரி ஜே. ஆர் இனிமேல் தமிழர் எதிர்க்கட்சித்தலைவராக வர முடியாமல் இருப்பதற்கு விகிதசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தலில் மாற்றம் கொண்டு வந்தார்.

நீங்கள் குறிப்பிடுவது போல் ஜே. ஆர் கொண்டு வந்த தேர்தல் திருத்தம் மூலம் விருப்ப வாக்கெடுப்பு மற்றும் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நியமன எம்பிக்கள் என 1977 இற்குப் பின்வந்த தேர்தலில் உருவாக்கப்பட்டனதான். ஆனால் இலங்கையில் சிறுபான்மையினர் எவரும் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வரமுடியாதென்று எந்தச் சட்டமும் இல்லை. அப்படி சிறுபான்மையினர் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வருவதற்கு (ஜே. ஆர் கொண்டு வந்த தேர்தல் திருத்தம் இல்லாவிட்டாலும்) சந்தர்ப்பமுமில்லை. அதற்குரிய விளக்கத்தை நான் ஏற்கனவே கொடுத்துமுள்ளேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடா சொன்னதும், நீங்கள் சொல்வதும் தவறான உதாரணங்கள். காரணம் இலங்கையில் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவரெவரும் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வர முடியாதென்று எந்தச் சட்டமும் இல்லை. அதனால் 1977 இல் யுஎன்பிக் கட்சி அறுதிப் பெருண்பான்மை பெற்றதால், அதற்கடுத்த நிலையில் மற்றைய சிங்களக் கட்சிகளை விட கூட்டணி அதிக இடங்கள் பெற்று ஒரு தமிழர் எதிர்க்கட்சித் தலைவராக வர முடிந்தது. ஆனால் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வர முடியாமல் இருப்பதற்கு உண்மையான காரணங்களாக வேண்டுமானால் இரண்டு விடயங்களைக் குறிப்பிடலாம்.

1) பெருண்பான்மை இனமாக சிங்கள இனம் ( 74 வீதம்) இருப்பது.

2) இலங்கையில் இந்தியாவைப் போல் எல்லா இன மக்களைளயும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியக் கட்சிகள் கிடையாது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின் எல்லா இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியக் கட்சிகள் உருவாகியிருந்தால், தற்போதைய பல பிரைச்சினைகள் இல்லாமல் போயிருக்கும்.

யாழ்க்களம் பலர் பார்க்கும் களம். எனவே தயவுசெய்து விவாதிக்கும் விடயங்களை முடிந்தவரை சரியாகத் தெரிந்து கொண்டு விவாதியுங்கள். இல்லையேல் உங்கள் அறியாமைகள் தான் வெளிப்பட்டுவிடும்.

) இலங்கையில் இந்தியாவைப் போல் எல்லா இன மக்களைளயும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியக் கட்சிகள் கிடையாது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின் எல்லா இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியக் கட்சிகள் உருவாகியிருந்தால், தற்போதைய பல பிரைச்சினைகள் இல்லாமல் போயிருக்கும்.

இலங்கை இந்தியாவுடன் சேர்த்து ஒப்பிடப்பட அதுவும் இந்தியாவைப்போல் 108 இனங்கள் கொண்ட நாடு, பெரும்பான்மையாக உள்ள ஒரு இனம் மற்ற ஒரு இனத்தை இம்சை செய்யும் போது, ஒரு வேளை அது ஏனய இனங்களால் வெறுக்கப்பட்டதாக இருந்தாலும், இன்நிலை நாளை தமக்கும் வரலாம் என்று உசாரடைந்து ஒட்டுமொத்த ஆதரவு பெறத்தக்க சக்தியை உள்வாங்கக் கூடிய அரசியல் அமைப்பு இலங்கையிலும் உருவாக்கப் படக்கூடியது ,என்பது எத்துணை அறிவுபூர்வமான சிந்தனை.

தமிழனை ஒழித்துக் கட்டுவேன் என்ற வாக்குறிதியே இலங்கை அரியணையில் ஏற்றுவிக்க செபிக்கும் மந்திரம்,

இதை அறியா பண்டமாய் இருக்கும் இந்த வசம்பு,

கடந்த தேர்தலில் தமிழ்கூட்டணியின் வெற்றி மிகப்பெரிய மோசடி என்று திருவாய் மலர்ந்த போதே,

இது ஒரு எட்டப்பனின் காவுதடி என்று நான் கண்டு கொண்டேன்.

தமிழ்நாட்டுரோக்கிலும் வந்து இதே பல்லவி,

இது திருந்தக்கூடிய துரோக நோயே அல்ல.

திரு எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்கள் சிறீலங்கா ஜனநாயகக் குடியரசின் பாராளுமன்றத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கூறிய போது அதை எதிர்த்த அமிர்தலிங்கம் பாராளுமன்றத்திற்கு போய் சந்தியப் பிரமாணம் செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.தமிழரசுக் கட்சிக்குள் தனது செல்வாக்கை அவர் வளர்த்திருந்தபடியால் செல்வநாயகம் அவரது முடிவுக்கு கட்டுப்பட வேண்டி வந்தது.

அமிர்தலிங்கம் தலைமையிலான குழுவினரே முதலில் போய் சத்தியப் பிரமாணம் செய்தனர்.பின்னர் ஒரு மாதம் கழித்தே செல்வநாயகம் சத்தியப் பிரமாணம் செய்தார்.இந்த விடயத்தை எதிர்த்து தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறி தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்தவர் வி நவரத்தினமாகும்.இதற்காக அமிர்தலிங்கத்தை பகைத்துக் கொண்ட சிலர் இன்னமும் இருக்கிறார்கள்.அடுத்து இலங்கைத் தீவு நவீன வரலாற்றுக்காலம் தொட்டு அதாவது 2000 ஆயிரம் வருடங்களாக தமிழர் நாடு சிங்களவர்கள் நாடு என்று பிளவு பட்டே இருந்தது. ஈழம் என்ற பதம் தமிழீழம் என்பதன் ஆரம்பக் குறியீடுதான்.தமிழீழக் கோhரிக்கை என்பது பிற்காலத்தில் உருவானதாக இருக்கலாம் ஆனால் தமிழுpழம் என்ற நாடு சிங்கள பௌத்த பேரினவாதிகள் செல்வது எப்போதுமே இருந்திராத ஒன்றல்ல

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் பேசும் நேரமல்ல

ஆனாலு; வசம்பு சில இடங்களில் வில்லங்கமானவர்

அதேநேரம் எமக்குள் அடித்துக்கொள்ளும் நேரமுமல்ல

எனவே...................???

என் கண்ணிற்கு தெரிந்த அளவு... இவ் நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் தமிழர் தரப்பில் இருத்து வரும் கருத்துக்களை முழுமையாக சொல்வதற்கு அனுமதிக்க வில்லை... சிங்களரை அனுமதித்துள்ளார்...

குறிப்பாக கடைசியாக கொடுக்கப் பட்ட 20 வினாடிகளில் சுறேந்திரன் அவர்கள் தனது கருத்தனை சொல்லிக்கொண்டு இருக்கும் போது இடைறே நிறுத்துp விடுகிறார். அதே 20 வினாடிகள் சிங்கள தரப்பு வெள்ளையனுக்கு கொடுக்கும் போது அவரின் கருத்து 20 வினாடிகளையும் தான்டி செல்லும் போது அனுமதிக்கிறார்!

;இருந்தாலும் ஒட்டு மொத்தமாக தமிழதரப்பு தனது கடமையை சிறப்பாக செய்துள்ளது!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை

புலிகள்மீதான குற்றச்சாட்டுக்கு சுறேந்திரன் அவர்கள்

பதிலளிக்க மிகவும் சிரமப்பட்டார்

அந்தக்கேள்வி வரும் என்பதால் அதற்கு தயாராக சென்றிருக்கவேண்டும்

என்பது எனது தாழ்மையான கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

முசுலீம்களின் வெளியேற்றத்திற்கு தமிழீழம் மன்னிப்பும் கேட்டு

மீண்டும் வந்து குடியேறும் படியும் கேட்டு பத்துவருடங்களுக்கு மேலாகிறது

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது பிழையெனில் திருத்துங்கள். சிறிலங்காவின் சட்டமூலத்தில் சிங்கள பௌத்தர் தான் ஜனாதிபதியாக வரலாம் என நினக்கிறேன் சரியா? ஏனெனில் ஜே.ஆர் மதத்தால் ஒரு கிறிஸ்தவர். பதவி ஏற்கும்போது பௌத்தராக மாறிய பின்னர் தான் ஜனாதிபதியாகும் சாத்தியம் ஏற்பட்டது. :)

ஜோன் கொத்தலாவலையும் இதே போல் பௌத்தராக மாற்றப்பட்டார். :o

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை

புலிகள்மீதான குற்றச்சாட்டுக்கு சுறேந்திரன் அவர்கள்

பதிலளிக்க மிகவும் சிரமப்பட்டார்

அந்தக்கேள்வி வரும் என்பதால் அதற்கு தயாராக சென்றிருக்கவேண்டும்

என்பது எனது தாழ்மையான கருத்து

நீங்கள் சொல்வது உண்மை :)

யாராவது பிழையெனில் திருத்துங்கள். சிறிலங்காவின் சட்டமூலத்தில் சிங்கள பௌத்தர் தான் ஜனாதிபதியாக வரலாம் என நினக்கிறேன் சரியா? ஏனெனில் ஜே.ஆர் மதத்தால் ஒரு கிறிஸ்தவர். பதவி ஏற்கும்போது பௌத்தராக மாறிய பின்னர் தான் ஜனாதிபதியாகும் சாத்தியம் ஏற்பட்டது. :)

நேரடியாக அவ்வாறான சரத்து எதுவும் இல்லை.ஆனால் சிறீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரச மதம் பௌத்தம் என்றும் நாட்டின் அரசத்தலைவர் அந்த மதத்தின் பாதுகாவலராகவும் அந்த மத விழுமியங்களை கட்டிக்காப்பவராகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொலைக்காட்சி விவாதத்தில் நம்மவர்கள் குறிப்பிட மறந்த இன்னொரு விடயம் மலையகத் தமிழர் பற்றியது.ஐரோப்பாவில் 5 முதல் 10 வருடங்கள் நிரந்ததரமாக வாழ்பவர்களுக்கு அந்த நாட்டு குடியுரிமை வழங்கப்படுகிறது.ஆனால் நான்கு ஐந்து தலைமுறைக்கு மேலாக அதாவது 100 முதல் 150 வருடங்களுக்கு மேலாக இலங்கைத்திவின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்காக உழைத்த உழைத்துவரும் மலையக மக்களுக்கு அவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படாமல் நாடற்றவர்கள் என்று நிலையில் வைக்கப்பட்டிக்கும் விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கவ

Edited by navam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.