Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெஞ்சம் மறக்குமா

Featured Replies

கேட்ட பாடல்கள் எழுத்து மூலம் பார்ப்பதில் சந்தோசம்

வாழ்த்துக்கள் தொடர்த்து எழுதுங்கள்

  • 1 month later...
  • Replies 112
  • Views 29.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தூயா தொடர்ந்து எழுதுவதினை நிறுத்திவிட்டீர்கள். தொடர்ந்து ஈழப்படல்களினை எழுதுங்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள் (2)

பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு

போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும் (2)

ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்

பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்

போன பின்னர் நாமழுவோம் யாரறிவீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

தாயகத்து மண்ணைத்தானே காதலித்தீர்கள் - சாவை

எதிர் பாரர்த்து பார்த்துக் காத்திருந்தீர்கள்

பாயும் கரும்புலிகளாகிப் பகை முடித்தீர்கள்

பாதகரின் நெஞ்சினிலே போய் வெடித்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுண்டு

கரும்புலிகளின் விழிகளில் நீர் வழிவதுமுண்டு

அல்லும் பகலும் அண்ணன் பெயரை உச்சரித்தீர்கள்

அந்தப் பெயர் சொல்லி மேனி பிச்செறிந்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு

போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

நன்றி சினேகிதி

  • 2 months later...

பாடியவர்:-வர்ண.இராமேஸ்வரன்

இசைத்தட்டு:-கரும்புலிகள்

தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா -நான்

சாகும்நேரம் கடலே நீயும் மூசம்மா

போரிற் குதித்த தாயகமண்ணே நீயும் பேசம்மா -கரும்

புலியிவன் பாடும் பாடலை எங்கும் பாடம்மா

நாளையிந்த நாட்டையாளும் சின்னப் பூக்களே -நீங்கள்

நம்பவேண்டும் நாளை தமிழ்ஈழமென்றுமே

நீங்கள் வாழ வேண்டுமென்றே நான் வெடிக்கிறேன் -மாமன்

நெஞ்சிலுள்ள கனவுகளைத் தான் படிக்கிறேன்

சின்ன சின்ன பூக்களெல்லாம் வாருங்கள் -தமிழ்

தேசம் வெல்ல வேண்டுமென்று சேருங்கள்

நேற்று வரை அடுப்படியில் நீ உறங்கினாய் -உந்தன்

நீளவிழி மை கரைய நீ கலங்கினாய்

ஆற்றலுள்ள தலைவன் வழி காட்டி நிற்கிறான் -எந்தன்

அன்புத் தங்கை அச்சமில்லை என்றெழும்புவாய்

உங்களுக்காய் இன்று போரைத் தொடுக்கிறேன் -இந்த

ஊருலகம் அறியாமல் வெடிக்கிறேன்.

அகதியாகி உலகமெங்கும் அலையும் தோழனே -எங்கும்

அச்சத்தோடு ஒதுங்கி வாழும் எந்தன் நண்பனே

பிச்சையேற்று அடிமையாகி வாழும் வாழ்வினை -தூக்கிப்

போட்டெரித்து விட்டெழும்பு புலிகள் சேனையில்

மானமதே வாழ்வு தரும் என்றறிந்திடு -வெடி

மருந்துடனே நான் புகுந்தேன் கண் திறந்திடு!

நிதர்சன் தம்பியின் இணையத்தளத்திலும் ஈழத்துப்பாடல்கள் கேட்கலாம், கீழ் உள்ள இணைப்பில் ஒளிப்பட பாடல்களை பார்க்கலாம்!

http://www.vannithendral.net/index.php?opt...id=34&Itemid=52

நன்றி ஹரி அண்ணா இணைப்புக்கு

  • தொடங்கியவர்

இணைப்பிற்கு நன்றி அண்ணா....

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

செவ்வானம் சிவந்தது ஏன்?

அது செங்கொடியை நினைப்பதற்கே

செங்கொடியின் மத்தியிலே

ஒரு சிறுத்தை நின்று சிரிப்பது ஏன்?

[இமயமலை உச்சியிலே

முன்னர் ஏற்றி வைத்த கொடியது போல்] *2

அமைந்தது எங்கள் புலிகொடியே

அதன் போல்அணிவகுத்து நாம் நடப்போம்

(செவ்வானம் சிவந்தது ஏன்?)

[அந்நியரை நம்பி நின்றால்

நாம் அன்னல் உற வேண்டுமென்றார்] *2

சொன்ன மொழி தவறியதோ

பட்ட துன்பம் எங்கும் மாறியதே

(செவ்வானம் சிவந்தது ஏன்?)

[அண்ணன் பிரபாகரன் போல்

இங்கு ஆற்றல் மிகு தலைவன் உண்டோ] *2

எண்ணெம் எல்லாம் இனியும் உண்டோ

புலியுடன் இளைஞர்கள் நான் அணி திரள்வோம்

(செவ்வானம் சிவந்தது ஏன்?)

வேங்கை வழி சென்றிடுவோம்

இனி வேறு வழி மறந்திடுவோம்

தூங்குவதில் பயனில்லையே

அண்ணன் துயர் துடைக்கும் தலைவனென்போம்

(செவ்வானம் சிவந்தது ஏன்?

அது செங்கொடியை நினைப்பதற்கே

செங்கொடியின் மத்தியிலே

ஒரு சிறுத்தை நின்று சிரிப்பது ஏன்?)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணை விழியாய் மழலை மொழியாய்

தாயின் பரிவாய் தமிழீழ மகராசன் வந்தானே வந்தானே

உறுதி உளமாய் உணர்வுக்களமாய்

தமிழர் பலமாய் தமிழீழ மாமன்னன் வந்தானே ஹேய் வந்தானே

வந்தானே.. வந்தானே... வந்தானே....

கோடி பூக்களுடன் உயிருக்குள்ளே திருவிழா

சந்தோசமே அடடா சந்தோசமே

கூடி ஆடுகின்றோம் தலைவனுக்கு பெருவிழா

உற்சாகமே ஊரெல்லாம் உற்சாகமே

ஈழ மண்ணினை தாங்கும் கருவறை

இவன்தான் எங்கள் வாழ்வின் கலங்கரை

இதயந்துடிக்கும் ஒவ்வொரு நொடியும்

உச்சரிக்குது தலைவன் பெயரையே

--கோடி பூக்களுடன் உயிருக்குள்ளே திருவிழா

சந்தோசமே அடடா சந்தோசமே

கூடி ஆடுகின்றோம் தலைவனுக்கு பெருவிழா

உற்சாகமே ஊரெல்லாம் உற்சாகமே-

[பெண்ணுக்குள் புது வேகம் தந்தான்

எங்கள் கண்ணிற்குள் ஒளியேற்றி வைத்தான்](2)

பெண்ணுக்குள் புது வேகம் தந்தான்

எங்கள் கண்ணிற்குள் ஒளியேற்றி வைத்தான்

பெண்ணினம் சந்திக்கும் துன்பங்கள் எல்லாம்

வென்றிடும் வீரத்தைத் தந்தான்

அண்ணனின் செயல் சிந்தனை கொண்டு

[செல்லுவோம் எங்கும் வெல்லுவோம்](2)

அன்பு மழையினில் நனைந்திடும் தமிழருக்கு

ஆசத் தமிழ்க் குழந்தை

அடிமை செய்திட நினைத்திடும் எவருக்குமே

பாயும் புலி வேங்கை

வீரம் கொண்டு விடுதலை எழுதும்

ஆயுதப் புதுக் கவிஞன்

ஏழை இனத்தின் வாழ்வில் கிடைத்த

இலட்சியப் பெருமனிதன்

இருளாய் இருந்த தமிழர் வாழ்வில்

பிரபாகரன் வெளிச்சம்

அட அவனின் காலம் ஈழம் மலரும்

அடிமைத் தனம் தெறிக்கும்

இடையினில் என்ன எதிரியே யோசனை

தமிழினம் விழித்திருக்கும்

பார் இன்னும் இருக்குது தலைவனின் சாதனை

காலம் காத்திருக்கும்

தமிழர்கள் முழக்கம் தடைகளைப் பிளக்கும்

இதயந்துடிக்கும் ஒவ்வொரு நொடியும்

உச்சரிக்குது தலைவன் பெயரையே

-கோடி பூக்களுடன் உயிருக்குள்ளே திருவிழா

சந்தோசமே அடடா சந்தோசமே

கூடி ஆடுகின்றோம் தலைவனுக்கு பெருவிழா

உற்சாகமே ஊரெல்லாம் உற்சாகமே-

தமிழர் இனத்தின் இறைமை எல்லாம்

தொலைந்த காலத்தில்

அதை தாங்கி வந்து வீரம் கொண்டான்

தலைவன் ஈழத்தில

எளிமை வாழ்வும் எதிலும் துணிவும்

இவனின் வசமிருக்கும்

எம் புலிகள் படையால் சரிதம் எழுத

இனமே நிமிர்ந்திருக்கும்

விடுதலை கிடைக்கும் சாதனை படைக்கும்

இதயந்துடிக்கும் ஒவ்வொரு நொடியும்

உச்சரிக்குது தலைவன் பெயரையே

கோடி பூக்களுடன் உயிருக்குள்ளே திருவிழா

சந்தோசமே அடடா சந்தோசமே

கூடி ஆடுகின்றோம் தலைவனுக்கு பெருவிழா

உற்சாகமே ஊரெல்லாம் உற்சாகமே

ஈழ மண்ணினை தாங்கும் கருவறை

இவன்தான் எங்கள் வாழ்வின் கலங்கரை

ஈழ மண்ணினை தாங்கும் கருவறை

இவன்தான் எங்கள் வாழ்வின் கலங்கரை

தமிழர்கள் முழக்கம் தடைகளைப் பிளக்கும்

இதயந்துடிக்கும் ஒவ்வொரு நொடியும்

உச்சரிக்குது தலைவன் பெயரையே

கோடி பூக்களுடன் உயிருக்குள்ளே திருவிழா

சந்தோசமே அடடா சந்தோசமே

கூடி ஆடுகின்றோம் தலைவனுக்கு பெருவிழா

உற்சாகமே ஊரெல்லாம் உற்சாகமே

பாடல் ஒலிவடிவில் கேட்பதற்கு -----> http://worldtamilpress.com/premfiles/Eelasongs.smil

நன்றி உலகத்தமிழர் ஊடகம்

  • தொடங்கியவர்

அழகான பாடல்...எங்களுடம் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி :)

இணைப்புக்கு நன்றி -பிறேம்! 8)

நன்றி பிறேம் அண்ணா மிகவும் இனிமையானவொரு பாடல்

நண்பர்களே! எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா? கீழ் உள்ள இசைத்தட்டுகளில் இருந்தும் முடிந்தளவு பாடல் வரிகளை தரமுடியுமா? இவைகள் என்னிடம் உள்ள சில பாடல்கள் இவற்றை பாடல் வரிகளுடன் இணையத்தில் தரவேற்றம் செய்ய இருக்கின்றேன்! இந்த முயற்சிக்கு உங்கள் உதவி தேவை செய்வீர்களா?

tamil6kl.jpg

கீழ் உள்ள இணைப்பை பாருங்கள் இதில் அழகாக செய்யலாம் என்று நினைத்தேன்! ஆனால் அவர்களின் இணையப்பக்கம் எனக்கு பிடிக்கவில்லை! உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்! வேற ஏதாவது நல்ல இணையம் இருந்தால் சொல்லுங்கள் , முயற்சி செய்து பார்ப்போம்

http://www.esnips.com/web/maveerar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறும்

கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்

[புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்

எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

வேங்கைகளாகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே

தமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகளாக எரியும் சுடருகளே

இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே

தமிழனத்துக்காக இரந்து தீயில் எரிந்த தீரர்களே

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

எதிரிகள் பாடி வீடுகள் ஏறி நடந்த வேங்கைகளே

உயிர் இழந்த போதும் உணர்வுகளோடு மடிந்த வீரர்களே

காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பெயர்சொல்லும்

இனி காலம் யாவும் நீளும் போது எங்கள் பெயர் வெல்லும்

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

உங்கள் கனவே எங்கள் நினைவாய் எழுந்து நிற்கின்றோம்

உயிர் ஓடும் குருதி யாவும் சொரியும் நிலத்தில் நிற்கின்றோம்

தலைவன் வழியில் புலிகள் அணியாய் நடந்து செல்கின்றோம்

வரும் தடைகள் யாவும் உடையும் உடையும் நிமிர்ந்த கொள்கின்றோம்

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

ஒலிவடிவில் பாடலினைக் கேட்பதற்கு --->>>

http://worldtamilpress.com/premfiles/vinva...arumegankal.smi

நன்றி உலகத்தமிழ் ஊடகம்

  • தொடங்கியவர்

நல்ல பாடல்....நன்றி பிறேம்

நன்றி அன்பர்களே...எல்லா பாடல்களும் கருத்தும் விடுதலை வேட்கையும் உள்ளவை...

என்னை மிகவும் பாதித்தது கீழ்க்கண்ட பாடல்....

அடைக்கலம் தந்த வீடுகளே போய்வருகின்றோம் நன்றி...

என்ற பாடல்.

நன்றி.

  • தொடங்கியவர்

வரிகளை முழுமையாக போடுங்கள் யூகே. பெடியன்

வெண்ணிலாவுக்கு பிடித்த பாடகன் குட்டிக்கண்ணனின் பாடல் ஒன்று :P :P :P :P :P :P

scan00121wt.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யூலை 05 கரும்புலிகள் நாளினை முன்னிட்டு கரும்புலிகள் நினைவு தாங்கிவரும் பாடல்......

பாடல் இசைத்தட்டு: கரும்புலிகள்

இங்கு வந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்

நாளை சென்றுவீழும் சேதிசொல்ல இங்கெவரால் முடியும்

வாழ்க்கை என்னும் பயணம் இதை மாற்றிடவா முடியும்

இங்கு வந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்

பூமியிலே சாகும் தேதி யாரிற்கிங்கு தெரியும்

கரும்புலிகளிற்கு மட்டும் தானே போகும் தேதி புரியும்

சாமிகளும் வாழ்த்திவிழும் சரித்திரங்கள் இவர்கள்

தமிழ் சந்ததியில் அழியாத சத்தியத்தின் சுவர்கள்

சத்தியத்தின் சுவர்கள்

இங்கு வந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்

வாழ்வினிலே வசந்த காலம் துறந்தவர்கள் சிலரே

இளம் வாசலிலே இளமைராகம் மறந்தவர்கள் சிலரே

கரும்புலிகள் விரும்பி இங்கு இருப்பிழந்து போவார்

எங்கள் கண்ணெதிரே நின்றபின்னர் உருக்குலைந்து போவார்

உருக்குலைந்து போவார்

இங்கு வந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்

தோளில் ஏற்றிப் போவதற்கு நாலு பேர்கள் வேண்டும்

இந்த தோள்கள் இன்றி கரும்புலியின் தீயின் வாய்கள் தீண்டும்

வாழும் காலம் நீள்வதிலே வந்திடுமா பெருமை

இல்லை வாய்கள் நூறு போற்றிப்பாட சாவதுதான் பெருமை

சாவதுதான் பெருமை

இங்கு வந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்

அச்சமின்றி குண்டழைத்து ஆடிப்பாடிப் போவார்

எங்கள் அண்ணன் பெயர் சொல்லிச் சொல்லி கரும்புலிகள் சாவார்

சக்கை வண்டி தன்னில் ஏறி சரித்திரங்கள் போவார்

வரும் சந்ததியின் வாழ்வுக்காக தங்கள் உயிர் ஈவார்

தங்கள் உயிர் ஈவார்

இங்கு வந்து பிறந்த பின்பே இருந்து இடம் தெரியும்

நாளை சென்றுவீழும் சேதி சொல்ல இங்கெவரால் முடியும்

வாழ்க்கை என்னும் பயணம் இதை மாற்றிடவா முடியும்

வாழ்க்கை என்னும் பயணம் இதை மாற்றிடவா முடியும்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு

நன்றி தமிழர்இணைப்பகம்

  • தொடங்கியவர்

பிறேம், பாடலையும் பாடல் வரிகளையும் தந்தமைக்கு மிக்க நன்றி..

கரும்புலிகள் நினைவாக நீங்கல் செய்யும் இந்த விடயம் பாராட்டபட வேண்டியது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலி மறவர் நினைவுகளுடன் மீண்டும் ஓர் பாடல்

பாடல் இடம்பெற்ற இசைத்தட்டு 'சத்திய வேள்வி'

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

கண்ணில் நீர்க்கோலம் ஆகின்ற நெஞ்சங்களே

நெருப்பாகி வாருங்களே நெருப்பாகி வாருங்களே

கருவேங்கை வெடியாகிப் போகின்ற நேரம்

காற்றிற்கும் விழியோரம் கசிகின்ற ஈரம்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

இமைமூடும் நேரத்தில் வெடியாகினார்

இதழோரம் சிரிப்போடு விழி மூடினார்

அமைகின்ற தமிழீழ உயிராகினார்

அமைகின்ற தமிழீழ உயிராகினார்

அழியாத வரலாறு உருவாகினார்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

தெரியாத முகமாக நடமாடினார்

தெளிவான உணர்வோடு படமாகினார்

வரிவேங்கை கருவேங்கை எனவாகினார்

வரிவேங்கை கருவேங்கை எனவாகினார்

வெடியாகி தமிழீழ விடிவாகினார்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

நடமாடும் தெய்வங்கள் இவராகினார்

நமதீழத் திருநாட்டின் கருவாகினார்

பகைவீழும் படியாக புயலாகினார்

பகைவீழும் படியாக புயலாகினார்

பலகோடி ஜென்மங்கள் குடியேறினார்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

பாடலினை ஒலி வடிவில் கேட்பதற்கு

நன்றி தமிழர் இணைப்பகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலிகள் இசைத்தட்டு

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

வரும் வார்த்தைகளால் உம்மை தொழ முடியாது

தாயிற்கும் தன் பிள்ளையின் முகம் தெரியாது

எங்கள் தலைமுறை உங்கள் பெயர் அறியாது

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

[நேற்று வரை இங்கு பூத்திருந்தீர்

பெரும் நெருப்பெனப் போகவாக் காத்திருந்தீர்] (2)

போற்றியே பாடிட மொழிகளில்லை

கரும்புலிகளின் நினைவுகள் அழிவதில்லை

வாய்விட்டுப் பெயர் சொல்லி அழமுடியாது

[காற்றுடன் காற்றெனப் போனீர்கள்

அந்தக் கடலிலும் அலையென ஆனீர்கள்] (2)

வேற்றுடலோடு இங்கு வாருங்கள்

உங்கள் வேரினில் நீர் தெளித்தாடுங்கள்

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

[எதிரிக்கு நீங்களோ வெடிகுண்டு உம்மை இழந்த பின் இருக்கிறோம் இடியுண்டு] (2)

விதியினை மாற்றிய புலியென்று

இங்கு வீசிடும் காற்றிலும் பெயருண்டு

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

[இந்த மண் யாரிற்கும் பணியாது தமிழீழமண் எதிரிமுன் குனியாது] (2)

பொங்கிடும் உணர்வுகள் உறையாது கரும்புலிகளின் வேகங்கள் குறையாது

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

வரும் வார்த்தைகளால் உமைத் தொழமுடியாது

தாயிற்கும் தன் பிள்ளையின் முகம் தெரியாது

எங்கள் தலைமுறை உங்கள் பெயர் அறியாது

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

பாடல் ஒலிவடிவில்

நன்றி தமிழர் இணைப்பகம்

பிறேம் பாடலையும் பாடல் வரிகளையும் இணைத்தமைக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.