Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் செய்தி என்ன?

Featured Replies

அடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் செய்தி என்ன?

- சி.இதயச்சந்திரன்

இருளை விலக்கும் ஒளித்துளியைச் சுமந்து "வணங்கா மண்' என்கிற நிவாரணப் பொருட்களைத் தாங்கிய கப்பல் லண்டனிலிருந்து புறப்படப் போகிறது.ஐரோப்பாவிலிருந்து பாலஸ்தீனம் நோக்கிப் புறப்பட்ட "இடப்பெயர்வு "1947' (Exodos 1947) என்று பெயரிடப்பட்ட கப்பலே, "வணங்காமண்' நினைவூட்டுகிறது.

வன்னி நோக்கிப் பயணிக்கும் இந்த "வணங்கா மண்' கப்பலின் நோக்கம், அவசர மனிதாபிமானத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது.

"இடப்பெயர்வு 1947' கப்பல் பயணம், இஸ்ரேல் என்ற யூத தேசத்தை நோக்கிய நகர்வினைக் கொண்டிருந்தாலும் வணங்காமண்ணின் தாயகப் பயணம், பல நாடுகளின் கரைகளை தொட்டுச் செல்லும் நிகழ்ச்சி நிரலை உள்ளடக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அரசின் இராணுவ நடவடிக்கை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கண்டனம் தெரிவித்தால் பொதுச் செயலாளர் பான் கீ மூன் போரை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுப்பார். கண்டனங்கள், கவலையோடு தான் ஐ.நா.வின் காலம் கழிகிறது.

பட்டினிச் சாவென்கிற சுவடு பதியாத தமிழர்களின் வரலாற்றினை இப்பெருமக்கள் தெரிந்து கொள்ளவில்லை.

ஆகவே உலகமே உதவி செய்ய முன்வராத போது, புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் உறவுகள், நிவாரணக் கப்பலேறி முல்லைக்கடல் நோக்கிப் பயணிப்பது தவிர்க்க முடியாத மனிதாபிமான வரலாற்றுக் கடமையாக மாறுகிறது.

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்வோமென வரிந்து கட்டிக் கொண்டு செயற்படும், பிராந்திய நலனில் அக்கறை கொண்ட மகா சக்திகள், வணங்கா மண்ணின் தாயகப் பயணத்தை தடுத்து நிறுத்த சகல சித்து விளையாடல்களையும் பிரயோகிக்கக்கூடும்.

குறிப்பாக நடைபெறும் போருக்குப் பக்க பலமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் புகழாரம் சூடப்பட்ட காந்தி தேசத்திற்கு இக்கப்பல் விவகாரம் நிச்சயம் கசப்பானதொன்றாக இருக்கும்.

வல்லரசுகள் நிகழ்த்தும் ஆதிக்கப் போட்டியில், தான் வெற்றி பெறும் முக்தி நிலைக்கு வந்தடைந்திருப்பதாகக் கற்பனை கொள்ளும் இந்தியா, திருநெல்வேலி இராட்சத ராடர் நிலையத்திலிருந்து வணங்கா மண்ணின் பயணப் பாதையை உன்னிப்பாக அவதானிக்கும். கொச்சின் துறைமுகம் வழியாக அனுப்பப்படும் காலாவதி நாட்களை எட்டும் எறிகணைகளின் கையிருப்பு குறைவடைவதாலும் வன்னி மண் விழுங்கும் ஆட்பலத்தை ஈடு செய்ய ஊர்காவல் படை அனுப்பப்படுவதாலும் இந்தியாவிற்கு"வணங்கா மண்ணின்' விஜயம் புதிய அதிர்வுகளை உருவாக்குகிறது.

"நிவாரண உதவி' என்கிற வட்டத்திற்கு வெளியே, இப் பயணத்தின் வேறு பரிமாணங்கள், புதிய செய்திகளை சொல்லத்தான் போகின்றன.

1934 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக யூதர்களை ஏற்றிச் சென்ற பல கப்பல்கள் ஏற்படுத்திய தாக்கத்தை விட இரண்டாம் உலக யுத்த காலத்தில் அதாவது 1947 ஜூலையில் "இடப்பெயர்வு 1947' என்று நாமம் சூட்டப்பட்டு பிரான்சிலிருந்து புறப்பட்ட கப்பல் உருவாக்கிய தாக்கமே புதிய நாடொன்றின் உருவாக்கத்திற்கு வழி சமைத்தது.

நாசிகள் ஏறி மிதித்த யூதர்களை நடுக் கடலில் பிரித்தானியர்கள் நசித்தார்கள், யூதர்களை ஏற்றிச் சென்ற சில கப்பல்கள் மொறீசியசிற்கும், சைப்பிரஸிற்கும் திசை திருப்பி விடப்பட்டன.

ஆனாலும் "இடப்பெயர்வு 1947' கப்பல் ஏற்படுத்திய அதிர்வலைகள், ஐ.நா. சபையில் முட்டி மோதி இஸ்ரேல் என்ற யூத நாட்டின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டது.

உணவை போராயுதமாகக் கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தில் அதே உணவைக் கொண்டு சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்தலாமென்கிற விடயத்தை இக்கப்பல் பயணம் உணர்த்தும்.

இதனைத் தடுத்து நிறுத்த முற்படுவோர், அதற்கான தகுந்த அரசியல் காரணிகளையும் வியாக்கியானங்களையும் முன்வைக்க முடியாமல் சீனா கூறுவது போன்று உள்நாட்டு விவகாரம் என்று பூசி மெழுக முற்படுவார்கள்.

அதேவேளை "இடப்பெயர்வு 1947' கப்பல் இஸ்ரேலின் உருவாக்கத்திற்கான திருப்பு முனை நிகழ்வாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டாலும் "வணங்கா மண்' ணின் தாயகப் பயணமானது ஏற்கனவே பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வரும் ஓர் இனத்தின் தாயகத்தை, அங்கீகரிக்க வேண்டிய தேவையை சர்வதேசத்திற்கு உணர்த்தும்.

ஆனாலும் சில தென்னாசியப் பிராந்திய மற்றும் மேற்குலக வல்லரசாளர்களின் அழுத்தங்களை மீறி, வன்னி மக்களின் உடனடி வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத கையறு நிலையில் ஐ.நா. சபை இருப்பதாகவே தோன் றுகிறது.

இந்த இறுக்கமான முரண் நிலையை

"வணங்காமண்' உடை த்தெறியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இலங்கையின் இறையாண்மையை மறுதலித்து "பூமாலை'' நடவடிக்கை மூலம் உணவுப் பொட்டலங்க ளைப் போட்டு மனிதாபிமானம் பேசியவர்களும் வன்னியில் மக்கள் கொல்லப்படுவதை உள்நாட்டு விவகாரமென்று ஐ.நா. பாதுகாப்புச் சபையில், பேரினவாத இறைமைக்கு முண்டு கொடுத்தவர்களும் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளென்கிற பொதுவான வரையறைக்குள் வைத்துப் பார்க்க முடியாதெனக் கூறிய அமெரிக்க இராஜாங்க அமைச்சரும் இந்த வணங்கா

மண்ணின், வேரிற்கு நீர் ஊற்றச் செல்லும் மனிதாபிமானப் பயணத்தை எவ்வாறு கையாளப் போகிறார்கள்?

ஏற்கனவே இப்பயணத்திற்கு ஆதரவளிக்க பல மனித உரிமை ஆர்வலர்களும் இன்படுகொலைக்கு எதிரான மனிதாபிமானிகளும் முன் வந்துள்ளார்கள்.

இராணுவ முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட வன்னி மக்கள் எதிர்கொள்ளும் பட்டினிச் சாவு மற்றும் எறிகணைகள் நிகழ்த்தும் படுகொலைகளை தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை என்கிற கவலையோடு மட்டும் வாழ்வதால் பயனில்லை என்பதை உணர்ந்து கொண்டதால் தன் கையே தனக்கு உதவியென "வணங்காமண்' புறப்படுகிறது.

உலகத் தமிழினத்தின் உணர்வுக் கொந்தளிப்பு, சுவிஸிலும் பெல்ஜியத்திலும் கனடாவிலும் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டினை உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்துள்ளது.

தலைமைக்கும் தன்னாட்சிக்குமான அங்கீகாரம் கோரி புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் போராட்ட வடிவம் மாறுதலடைந்து மிகவும் உணர்வு மயப்பட்ட கொதி நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

சர்வதேச அங்கீகாரத்தை தடுக்கும் அரணாக தற்போதைய இந்திய ஆட்சியாளர்கள் தொழிற்படுவதாகவே புலம்பெயர் தமிழர்களும் தமிழக உறவுகளும் திடமாக நம்புகிறார்கள்.

சீன வியூகத்தை உடைத்தெறிய ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பலிக்கடாவாக்கலாமென்கிற இந்திய ஆட்சியாளர்களின் உள்நோக்கத்தை எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள்.

ஒரு இனம் அழிந்தாலும் பரவாயில்லை, தனது நலன் காக்கப்பட வேண்டுöமன ஒருவர் நினைப்பாராயின் அந்த அழிக்கப்படும் இனம், தன்னை தற்காத்துக் கொள்ள, அழிப்பவரை எதிர்ப்பதே நியாயமானதாகும்.உயிரினங்களின

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி வணங்காமண் எப்போது புறப்படப்போகின்றது? பெயர் வேறு ட்றாமற்றிக்காக இருக்கின்றது.

நாங்கள் பெரிதாக ஒரு வெடியைச் செய்து மிகவும் எச்சரிக்கையாக எல்லோரும் நின்று திரியைக் கொழுத்தும்போது அது புஸ்வாணமாகப் போவதைக் கண்டிருக்கிறோம்.

இறைமையுள்ளவோர் நாட்டின் கடற்பிரதேசத்தினுள் அத்துமீறி நுழைவதென்பது சாத்தியமானதா?

சரி? சர்வதேசக் கடல் எல்லையுள் நின்றுகொண்டு பொருட்களை இறக்கி வன்னியில் பரிதவிக்கும் மக்களிடம் சேர்ப்பிப்பதற்குச் சில சட்டத்திற்குப் புறம்பான விதிமுறைகளைத்தானே பாவிக்கவேண்டியிருக்கும்.

யூதர்கள் செய்ததைக் காப்பியடித்து "சக்கடத்தாருமேறிச் சறுக்கி விழுந்தாராம்" என்பதுபோன்று நிகழாதிருந்தால் நல்லதே

பொருட்களை எந்தவித ஆர்ப்பாட்டமுமில்லாமல் கண்ணும் கண்ணும் வைத்தாற்போன்று அல்லாமல் காதும் காதும் வைத்தாற்போன்று ஒரு கப்பலில் ஏற்றி அனுப்புவதற்கும்இ "வணங்காமண்" என்று வைத்துக்கொண்டு பெரிதாய் விளம்பரம் செய்வதற்குமிடையில் வேறுபாடுகள் நிறையவுள்ன போல்த் தெரிகின்றது.

இந்தக் கப்பலை அனுப்பும் ஸ்றற்றஜயில் கூடுதலான இடம் உணர்ச்சிக்கும் அதுசார்ந்த பைம்பலான நடவடிக்கைகளுக்குமே கொடுக்கப்படுவதுபோலத் தெரிவதால் இந்த நடவடிக்கையில் முழு நம்பிக்கை ஏற்படுவதாக இல்லை.

தேசியத்திற்கெதிரான எட்டப்பத்தனத்தோடு இதை எழுதவில்லை. உண்மையிலேயே மனத்தில்பட்டதை எழுதுகிறேன். யாhராவது இந்த நடவடிக்கையும் கப்பலுக்கு வைக்கப்பட்டுள்ள குறியீட்டுப் பெயரும் எந்த அளவுக்கு றியலிஸ்ற்ரிக்கானது அதாவது யதார்த்தமானது என்று தெரிவித்தால் மிகவும் உற்சாகத்தையூட்டும். (சில வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே போடவேண்டியுள்ளமைக்கு மன்னிக்கவும். மனதில் தோன்றும் கருத்துக்களை தமிழில் உரிய முறையில் போடமுடியவில்லை)

Edited by karu

அது சரி வணங்காமண் எப்போது புறப்படப்போகின்றது? பெயர் வேறு ட்றாமற்றிக்காக இருக்கின்றது.

நாங்கள் பெரிதாக ஒரு வெடியைச் செய்து மிகவும் எச்சரிக்கையாக எல்லோரும் நின்று திரியைக் கொழுத்தும்போது அது புஸ்வாணமாகப் போவதைக் கண்டிருக்கிறோம்.

இறைமையுள்ளவோர் நாட்டின் கடற்பிரதேசத்தினுள் அத்துமீறி நுழைவதென்பது சாத்தியமானதா?

சரி? சர்வதேசக் கடல் எல்லையுள் நின்றுகொண்டு பொருட்களை இறக்கி வன்னியில் பரிதவிக்கும் மக்களிடம் சேர்ப்பிப்பதற்குச் சில சட்டத்திற்குப் புறம்பான விதிமுறைகளைத்தானே பாவிக்கவேண்டியிருக்கும்.

யூதர்கள் செய்ததைக் காப்பியடித்து "உடையாருமேறிச் சறுக்கி விழுந்தாராம்" என்பதுபோன்று நிகழாதிருந்தால் நல்லதே

பொருட்களை எந்தவித ஆர்ப்பாட்டமுமில்லாமல் கண்ணும் கண்ணும் வைத்தாற்போன்று ஒரு கப்பலில் ஏற்றி அனுப்புவதற்கும், "வணங்காமண்" என்று வைத்துக்கொண்டு பெரிதாய் விளம்பரம் செய்வதற்குமிடையில் வேறுபாடுகள் நிறையவுள்ன போல்த் தெரிகின்றது.

இந்தக் கப்பலை அனுப்பும் ஸ்றற்றஜயில் கூடுதலான இடம் உணர்ச்சிக்கும் அதுசார்ந்த பைம்பலான நடவடிக்கைகளுக்குமே கொடுக்கப்படுவதுபோலத் தெரிவதால் இந்த நடவடிக்கையில் முழு நம்பிக்கை ஏற்படுவதாக இல்லை.

தேசியத்திற்கெதிரான எட்டப்பத்தனத்தோடு இதை எழுதவில்லை. உண்மையிலேயே மனத்தில்பட்டதை எழுதுகிறேன். யாhராவது இந்த நடவடிக்கையும் கப்பலுக்கு வைக்கப்பட்டுள்ள குறியீட்டுப் பெயரும் எந்த அளவுக்கு றியலிஸ்ற்ரிக்கானது அதாவது யதார்த்தமானது என்று தெரிவித்தால் மிகவும் உற்சாகத்தையூட்டும். (சில வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே போடவேண்டியுள்ளமைக்கு மன்னிக்கவும். மனதில் தோன்றும் கருத்துக்களை தமிழில் உரிய முறையில் போடமுடியவில்லை)

இந்நடவடிக்கையானது எடுக்கப்பட்டது பல உயர்மட்ட கலந்துரையாடல்கள், பல கேள்விகளுக்கான பதில்கள், சட்டச்சிக்கல்கள், ........ எல்லாவற்றிக்கும் மேலாக பிரித்தானிய அரசின் அங்கீகாரத்துடன் என நினைக்கிறேன்!!

நாம் கனக்க யோசித்து குழப்ப/குழம்ப வேண்டாம்!!....... வன்னிமண் வரலாறு எழுதும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

பல உயர்மட்டத்தவர்களால் இடப்பட்ட கவிதைத்தனமான வணங்காமண் பெயரே சிக்கலையுருவாக்க ஏற்கனவே குழப்பப்பட்டது போலத்தான் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனத்தில் தோன்றும் சஞ்சலங்களை உதறி எறியுங்கள். இது எங்களின் உறவுகளின் சர்வதேச அங்கீகாரமான தாய்த்தமிழ் ஈழம் பிறப்பதற்கான ஒரு இறுதி அல்லாத உறுதியான செயற்பாடு. நாங்கள் எல்லோரும் சேர்ந்து கரம் கோர்ப்போம்.

ஈற்றில் வெல்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

மனத்தில் தோன்றும் சஞ்சலங்களை உதறி எறியுங்கள். இது எங்களின் உறவுகளின் சர்வதேச அங்கீகாரமான தாய்த்தமிழ் ஈழம் பிறப்பதற்கான ஒரு இறுதி அல்லாத உறுதியான செயற்பாடு. நாங்கள் எல்லோரும் சேர்ந்து கரம் கோர்ப்போம்.

ஈற்றில் வெல்வோம்.

டியர் சாந்தன் தமிழன்

“மாங்குளம் எங்களது தலைநகராம்

வன்னிப் பெருநிலமே அதற்கரணாம்

ஓங்கிய முல்லை கடற்படைத் தளமாம்

உயர்திருகோணமலை துறைமுகமாம்

மன்னார் மடுப்பகுதி கிறிஸ்தவரின்

மறையொலிக்கும் புனித நகர்ப்புறமாம்

பன்னாட்டு வான்கலங்கள் வந்துதரிக்க

பலாலி விமான தளம் பயன்படுமாம்”

இப்படியொரு கவிதைக் கற்பனையில் வாழ்ந்தேன். எல்லாமே சுக்குநூறாகி மனம் சோர்ந்து போனது. தற்போது உங்கள் செய்தி ஆர்வமளிக்கின்றது. நம்பிக்கை மீண்டும் துளிர்விடுகின்றது.

வெல்வோம்! வணங்காமண்ணின் வெற்றிக்கு அனைவரும் கரங்கொடுப்போம். நன்றி.

திரு கறு!

நான் உங்கள் பாஷையிலேயே பேசுகிறேன். தமிழர்களாகிய நமக்கு ஒரு விடயத்தில் மட்டும் நல்ல கெட்டித்தனம். அதாவது குறை கூறுவதும், குற்றஞ்சொல்வதும். அது மட்டுமில்லாது ஆங்கிலத்தில் ஒரு விடயம் நெகற்றிவிற்றி! எதை சொன்னாலும் அது சரிவராது, அது பிழை என்று எதிர்மறையாக பேசுவது. நாம் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து அந்த ஒரு விடயம் நம் விடயத்தில் தொடரந்து வந்து கொண்டே இருக்கிறது. 1984இல் கொக்குவில் பகுதியில் எனது நண்பர் இயக்கத்திற்காக பணம் சேர்க்க சென்றிருக்கிறார். புலிகள் என்றால் அது பத்தோடு பதினொரு இயக்கம் என்று கூறப்பட்ட காலம். அவர் சென்ற வீடுகளில் 99வீதமான வீடுகள் அவருக்கு கூறிய பதில் தம்பி உதுகளை விட்டுப்போட்டு சிங்களவனோடு சேர்ந்து சீவிக்கிற வழியை பாருங்கோ என்ற புத்திமதி! இன்று அந்த பிரதேசத்தை சேர்ந்த அனைவரும் புலம் பெயர் நாட்டில் குப்பை கொட்டிக்கொண்டிருக்க அந்த நண்பர் இன்னமும் தேசிய விடுதலைக்கு தன்னை அர்பணித்த ஒரு நபராக செயற்பட்டுக்கொண்டிருக்கிறர

தேசியத்திற்கெதிரான எட்டப்பத்தனத்தோடு இதை எழுதவில்லை.

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

வணங்கா மண் என்ற நடவடிக்கை சர்வதேசத்தைச் சிக்கலுக்குள் தள்ளி விடப்போகிறது.நிச்சயம் சிங்களதேசம் இதை அனுமதிக்காது.ஆனால் எத்தனையோ பெறுமதியான ஆயுதக்கப்பலை இழந்திருக்கிறோம் கோடிக் கணக்கான சொத்துக்களை இழந்திருக்கிறோம். கப்பல் இங்கிருந்து புறப்படும் போது அது சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும்.இனி சர்வதேசக் கடலில் சிறிலங்கா அரசோடு ஒரு இழுபறி நிலை ஏற்படும். ஈற்றில் சறிலங்கா அரசானது கப்பலை அழித்தாலும்.மனிதபபிமான உதவிகளைச் சுமந்து செல்லும் கப்பலை அழிப்பது சிறிலங்காவின் அப்பட்டமான இன ஒதுக்கலை தோலுரித்துக் காட்டும்.அதையும் தாண்டி கப்பல் கரை தட்டினால் அதவும் வெற்றியே.அதை விட வன்னியில் இராணுவத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எப்படி புலம் பெயர் மக்களுக்கு உளவியல் ரீதியான உற்சாகத்தைக் கொடுக்குதோ அதே போல் எங்கள் பிள்ளைகள் எங்கள் இரத்தங்கள் எங்களுக்காக தொலை தூரத்தில் இருந்து கை கொடுக்கிறார்கள்.நாங்கள் யாருமற்ற அநாதைகள் அல்ல. என்ற உணர்வை உளவியல் ரீதியான உற்சாகத்தைக் கொடுக்கும்.ஆக கப்பல் அடைந்தாலும் வெற்றி அழிந்தாலும் வெற்றி!!!!!!!!ஆகவே கலக்கம் வேண்டாம்.

பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் அதன் பயணம் தொடரட்டும் தொலைந்திடும் சோகம்!!!!!!!;

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் எமது மண்ணின் தாகத்திற்குத் தண்ணீர் ஊற்றுவோம். இதைவிடப் புதிய செய்தி வேறெதுவுமில்லை.

Edited by Punithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.