Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்

[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2009, 11:14.02 AM GMT +05:30 ]

தமிழ் தேசியக்கூட்டமைப்பை பேச்சுவார்த்தை ஒன்றுக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பு 22 தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்கான திகதி எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 6.30க்கு இடம்பெறும் என தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கான அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த சந்திப்பில் பங்கேற்பது தொடர்பாக தாம் எதிர்வரும் 25 ஆம் திகதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது

நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் இது தொடர்பில் கூறுகையில் நடைமுறை விடயங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்ட பின்னரே ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி - தமிழ்வின்

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியா? யாருக்கு யார் ஜனாதிபதி?

:unsure:

விளங்குது நொச்சி, நீங்கள் தமிழ்வின் இல இருந்ததை அப்படியே போட்டிருக்கிறீங்கள்..! அப்படியே போடுவது பொதுவில் ஒரு நல்ல முறைதான். ஆனால் நாங்கள் ஈழத்தவராகத் தனியொரு அரசின் குடிமக்களாக உணர வேண்டிய காலம் இது. எமக்கான ஒரு கருத்தியலை உருவாக்கவேண்டிய காலச் சூழல் இது.

உதாரணமாக சிங்களவன் தமிழனைப் பயங்கரவாதி, குழந்தைப் போராளி தற்கொலைப் படை எண்டு யாரை எடுத்தாலும் பிரச்சாரத்தில் முழுமூச்சாக இருக்கிறான்..! இதைச் செய்வது அரசாங்கம் மட்டுமல்ல. சாதாரண சிங்களவனும்கூடத்தான். இந்த நிலையில் சிறீலங்காவின் ஜனாதிபதியை நாங்கள் எமது ஜனாதிபதி போல அழைப்பது எனக்கு சரியாகப் படவில்லை.

சிறீலங்காவின் ராணுவத்தளத்தில் தமிழர் தரப்பு செய்திகளை உள்வாங்கி அதை தங்கள் பார்வையிலிருந்து தலைப்பை மாற்றிக் கொடுக்கிறார்கள். அதுதான் சாதாரண சிங்களவனைச் சென்றடைகிறது. அப்படி இருக்கிறபோது நாங்கள் மகிந்தவை ஜனாதிபதி என்று பொதுவில் எழுதுவது எனக்க்கு சரியாகத் தோன்றவில்லை. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இப்படியான ஆக்கங்களைப் பதியும்போது எமக்கேற்ற கருத்தியலாக மாற்றிவிட்டு பதிவது நல்லது என்று நினைக்கிறேன். கீழே மூலம் எங்கேயிருந்து வந்தது என்பதை மட்டும் குறிப்பிடலாம்தானே. :rolleyes:

ஜனாதிபதியா? யாருக்கு யார் ஜனாதிபதி?

:rolleyes:

விளங்குது நொச்சி, நீங்கள் தமிழ்வின் இல இருந்ததை அப்படியே போட்டிருக்கிறீங்கள்..! அப்படியே போடுவது பொதுவில் ஒரு நல்ல முறைதான். ஆனால் நாங்கள் ஈழத்தவராகத் தனியொரு அரசின் குடிமக்களாக உணர வேண்டிய காலம் இது. எமக்கான ஒரு கருத்தியலை உருவாக்கவேண்டிய காலச் சூழல் இது.

உதாரணமாக சிங்களவன் தமிழனைப் பயங்கரவாதி, குழந்தைப் போராளி தற்கொலைப் படை எண்டு யாரை எடுத்தாலும் பிரச்சாரத்தில் முழுமூச்சாக இருக்கிறான்..! இதைச் செய்வது அரசாங்கம் மட்டுமல்ல. சாதாரண சிங்களவனும்கூடத்தான். இந்த நிலையில் சிறீலங்காவின் ஜனாதிபதியை நாங்கள் எமது ஜனாதிபதி போல அழைப்பது எனக்கு சரியாகப் படவில்லை.

உண்மை!

சிங்கள இனவெறியன் மகிந்தன் ஒரு நாளும் தமிழர்களுக்கு ஜனாதிபதி ஆக முடியாது

Edited by vettri-vel

புலிகளின் குரலும், அவர்களின் ஊடகங்களும் எப்பவுமே 'சிறீ லங்கா சனாதிபதி' என்று குறிப்பிட்டே வருகின்றன. எனவே நாமும் வெறுமனே ''சனாதிபதி' என்று குறிப்பிடாமல், 'சிறி லங்கா சனாதிபதி' என்று குறிப்பிடலாம்

190 கோடியை பெறுவதற்காகத்தான் தமிழர் கூட்டணியுடன் பேச்சு புரிகிறதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

190 கோடியை பெறுவதற்காகத்தான் தமிழர் கூட்டணியுடன் பேச்சு புரிகிறதா?

கடந்த மாதம் சிரி லங்காவின் சுகாதார அமைச்சரானவர் ஜெனீவாவில் நடந்த கூட்டத்தில்

My own country, Sri Lanka, has been seriously affected by the present global financial

crisis. Our main export commodities, tea, rubber, coconut and cinnamon, now fetch

very low prices in the world market but also are less in demand. The demand for finished

goods such as garments is declining and that will have serious repercussions in this

sector. Despite these economic setbacks

We deliver free health care to the whole nation, with no user fees

at all.

http://www.who.int/topics/financial_crisis...port_200902.pdf

Edited by Mullaimainthan

  • கருத்துக்கள உறவுகள்

இது ச.நா.நிதிய உதவி குறித்த நடவடிக்கை மட்டுமன்றி த.தே.கூ வை உடைக்கிற ஒரு நடவடிக்கையாகவும் இருக்கும். முன்னர் ஒரு பிரதான சிங்களக் கட்சியுடன் இணைந்திருந்த தற்கால த.தே.கூ உறுப்பினர் ஒருவர் இலக்கு வைக்கப் படுகிறார். பயமுறுத்தல் மூலமா அல்லது பதவி ஆசை காட்டியா என்பது தெளிவாக இல்லை. அவரது நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கையில் பதவி ஆசை காரணமாயிருக்கலாம் என நம்புகிறேன். இது எந்த செய்தி மூலங்கள் மூலமும் அறிந்ததல்ல, ஆனால் உள்ளூரில் அவருக்கு நெருக்கமாக இருக்கும் ஆட்கள் மூலம் கசிந்த தகவல் (நிர்வாகம் வெட்டாது என நம்புகிறேன்!). கூட்டமைப்புத் தலைமையினர் கெட்டிக் காரர்கள். இது மாதிரியான விஷயங்களுக்கு நீண்ட நாட்கள் அவகாசம் கொடுக்காமல் 25 ஆம் திகதி கூட்டம் போட்டுத் தீர்மானிக்கப் போகிறார்கள். அனேகமாக நிபந்தனைகள் விதித்து விட்டு அவற்றை நிறைவேற்றிய பிறகு சந்திப்போம் என்று சொல்லக் கூடும். சந்திக்காமல் விடுவதே இப்போதைய நிலையில் நல்ல முடிவு. பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவை .சேனாதிராஜா அவர்களின் செவ்வி கீழுள்ள இணைப்பில்.

TNAக்கு ஜனாதிபதி அழைப்பு ஆராய நாளை அவசர கூட்டம்: GTNற்கு மாவைசேனாதிராஜா வழங்கிய விசேட செவ்வி:

ரீ.என்.ஏ உறுப்பினர்களைச் சந்திக்க வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து தனித்தனியாக அழைப்பிதல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இது குறித்து ஆராய கட்சி நாளை கூடுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா GTN ற்கு தெரிவித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கத்தின் உரை குறித்த சர்ச்சை சர்வதேசத்தின் நிலைப்பாடுகள் குறித்து மனம்திறந்து பேசுகிறார்.

http://globaltamilnews.net/tamil_news.php?...7503&cat=15

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.